AI கருவியிலிருந்து டிஜிட்டல் தயாரிப்புகளை விற்பனை செய்தல்

இணைக்கப்பட்ட AI கருவியுடனான அரட்டையிலிருந்து, ஒரு கோப்பு அல்லது இணைப்பை வாடிக்கையாளர்கள் உங்கள் ஸ்டோரில் வாங்கக்கூடிய தயாரிப்பாக மாற்றலாம். AI கருவிக்கு ஒரு தலைப்பு மற்றும் விலையை வழங்கவும், பின்பு அது கேட்கும்போது உங்கள் கோப்பைத் தேர்ந்தெடுக்கவும். AI கருவி உங்கள் ஸ்டோரில் தயாரிப்பை உருவாக்கி, கோப்பை இணைத்து, தானியங்கி டெலிவரியை இயக்குகிறது, எனவே தயாரிப்பை வாங்கும் வாடிக்கையாளர்களுக்குப் பதிவிறக்க இணைப்பு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்.

தயாரிப்பை உருவாக்கவும் அதன் கோப்பு அல்லது இணைப்பைச் சேர்க்கவும் AI கருவி Digital Products செயலியைப் பயன்படுத்துகிறது. விலை, அணுகல் வரம்பு மற்றும் வாடிக்கையாளர்கள் பெறும் மின்னஞ்சல் உட்பட, உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து தயாரிப்பு விவரங்களை நீங்கள் மதிப்பாய்வு செய்யலாம் மற்றும் திருத்தலாம்.

AI கருவியிலிருந்து டிஜிட்டல் தயாரிப்புகளை விற்பனை செய்வதற்கான பரிசீலனைகள்

AI கருவியிலிருந்து டிஜிட்டல் தயாரிப்பை விற்பனை செய்வதற்கு முன், பின்வரும் பரிசீலனைகளை மதிப்பாய்வு செய்யவும்:

  • ChatGPT, Claude, Gemini, Grok, Muse, Perplexity மற்றும் Microsoft Copilot உட்பட நீங்கள் Shopify-உடன் இணைக்கக்கூடிய எந்தவொரு AI கருவியைக் கொண்டும் உங்களால் ஒரு டிஜிட்டல் தயாரிப்பை உருவாக்க முடியும்.
  • ChatGPT, Claude, Gemini, Grok மற்றும் Grok Bot ஆகியவற்றில், அரட்டையிலேயே AI கருவியானது நிறுவு பொத்தானையும் கோப்புத் தேர்வியையும் காட்டும். ஆனால் Muse, Perplexity மற்றும் Microsoft Copilot ஆகியவற்றில், Digital Products செயலியை நிறுவுவதற்கான இணைப்பு மற்றும் Digital Products செயலியில் உங்கள் கோப்பைப் பதிவேற்றுவதற்கான இணைப்பு என இரண்டு இணைப்புகளை அது வழங்கும். நீங்கள் பொத்தானை அல்லது இணைப்பைக் கிளிக் செய்யும் வரை AI கருவி அந்தச் செயலியை நிறுவச் செய்யாது. கோப்புப் பதிவேற்றத்தைத் தவிர்க்க, கோப்பிற்குப் பதிலாக இணைப்பை விற்கலாம்.
  • உங்கள் ஸ்டோரில் தயாரிப்பைச் சேர்க்க AI கருவியைப் பயன்படுத்துவதற்கு முன்பு, உங்களுக்கு ஒரு Shopify ஸ்டோர் தேவை. AI கருவி மூலம் உருவாக்கப்பட்ட ஸ்டோரை முதலில் உங்கள் Shopify கணக்கில் சேமிக்க, AI கருவி அல்லது vibe code கூட்டாளர் மூலம் உருவாக்கப்பட்ட ஸ்டோரை அமைத்தல் என்பதைப் பார்க்கவும்.
  • உங்கள் ஆன்லைன் ஸ்டோரில் உங்களின் தயாரிப்பு கிடைப்பதை AI கருவியால் உறுதிப்படுத்த முடியாது. தயாரிப்பை வெளியிட்டதும், வாடிக்கையாளர்களிடம் அதைப் பகிர்வதற்கு முன்பு Shopify நிர்வாகியில் உங்கள் டிஜிட்டல் தயாரிப்பை மதிப்பாய்வு செய்யவும்.
  • உங்கள் அரட்டையிலிருந்து அல்லாமல், Digital Products செயலியில் தான் அணுகல் வரம்புகள், டெலிவரி மின்னஞ்சல்கள் மற்றும் செக்அவுட்டில் டிஜிட்டல் தயாரிப்புகள் போன்றவை உள்ளமைக்கப்படுகின்றன.

அரட்டையிலிருந்து டிஜிட்டல் தயாரிப்பை உருவாக்குதல்

தொடங்குவதற்கு முன், நீங்கள் விற்கும் கோப்பைத் தயார்நிலையில் வைத்திருக்கவும், அத்துடன் தயாரிப்புத் தலைப்பையும் உங்கள் ஸ்டோரின் நாணயத்தில் வசூலிக்க வேண்டிய விலையையும் முடிவு செய்யவும். தயாரிப்பை உருவாக்க AI கருவிக்கு ஒரு தலைப்பு மற்றும் விலை தேவை, அது உங்களுக்காக அவற்றைத் தேர்ந்தெடுப்பதற்குப் பதிலாக உங்களிடமே கேட்கும். தயாரிப்பை இலவசமாக வழங்க, அது இலவசம் என்று AI கருவியிடம் கூறவும். கோப்பிற்குப் பதிலாக ஒரு இணைப்பை விற்பனை செய்ய, கோப்பிற்குப் பதிலாக இணைப்பை விற்பனை செய்தல் என்பதைப் பார்க்கவும்.

உங்கள் கோப்பு இணைக்கப்பட்டதும், தயாரிப்பிற்கான தானியங்கி டெலிவரி இயக்கப்படும், எனவே அதை வாங்கும் வாடிக்கையாளருக்குப் பதிவிறக்க இணைப்பு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்பட்டு, ஆர்டர் நிறைவேற்றப்பட்டதாகக் குறிக்கப்படும். தானியங்கி டெலிவரியை இயக்க முடியவில்லை எனில், AI கருவி உங்களுக்குத் தெரிவிக்கும். உங்கள் டிஜிட்டல் தயாரிப்புகளுக்கான நிறைவேற்ற அமைப்புகளில் அதை நீங்கள் இயக்கலாம்.

படிகள்:

  1. இணைக்கப்பட்ட AI கருவியுடனான அரட்டையில், உங்களின் கோப்பை விற்குமாறு அதற்குக் கட்டளையிடவும். எடுத்துக்காட்டிற்கு, Sell my knitting pattern PDF on my Shopify store for $12 USD என்று உள்ளிடவும். அரட்டையில் கோப்பை இணைப்பதற்குப் பதிலாக அதனை விவரிக்கவும். பிறகு ஒரு தேர்வியில் நீங்கள் கோப்பைத் தேர்ந்தெடுக்கலாம்.
  2. உங்கள் ஸ்டோரில் Digital Products செயலி நிறுவப்படவில்லை எனில், உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து செயலியை நிறுவ, நிறுவு அல்லது அரட்டையில் உள்ள நிறுவுவதற்கான இணைப்பைக் கிளிக் செய்யவும். தனியாக எந்த அனுமதித் திரையும் இல்லை. நிறுவல் முடிந்ததும், அரட்டைக்குத் திரும்பிச் சென்று தொடருமாறு AI கருவியிடம் சொல்லவும்.
  3. AI கருவி ஒரு தலைப்பு அல்லது விலையைக் கேட்டால், அதை உள்ளிடவும். AI கருவி தயாரிப்பை ஒரு வரைவாக உருவாக்குகிறது.
  4. அரட்டையில் கோப்புத் தேர்வி திறக்கும்போது, ​​உங்கள் கோப்பைத் தேர்ந்தெடுக்கவும். கோப்பு உங்கள் உலாவியிலிருந்து நேரடியாக Shopify-க்குச் செல்வதால், அதிலுள்ள உள்ளடக்கம் உரையாடல் வழியாகச் செல்லாது. அதிகபட்ச கோப்பின் அளவு 5 GB ஆகும். AI கருவியானது கோப்புத் தேர்விக்குப் பதிலாக உங்களுக்கு ஒரு இணைப்பை வழங்கினால், அந்த இணைப்பைக் கிளிக் செய்து, உங்கள் கோப்பைப் பதிவேற்ற Digital Products செயலியில் உள்ள அசெட்டைச் சேர் என்பதைக் கிளிக் செய்து, பிறகு அரட்டைக்குத் திரும்பி, தொடருமாறு AI கருவியிடம் சொல்லவும்.
  5. விருப்பத்திற்குரியது: ஒரு சிறப்புப் படத்தைச் சேர்க்கும்படி AI கருவியிடம் கேட்டு, கோப்புத் தேர்வியில் படத்தைத் தேர்ந்தெடுக்கவும். JPEG, PNG, GIF மற்றும் WebP படங்கள் ஆதரிக்கப்படும். AI கருவியானது கோப்புத் தேர்விக்குப் பதிலாக ஒரு இணைப்பை வழங்கினால், உங்கள் Shopify நிர்வாகியிலுள்ள தயாரிப்புப் பக்கத்தின் மீடியா பிரிவில் படத்தைச் சேர்க்கவும்.
  6. தயாரிப்பை வெளியிடவும். பொதுவாக AI கருவியானது அதை வெளியிடுவதற்கான விருப்பத்தை வழங்கும், அத்துடன் அது இன்னும் வரைவாகவே இருப்பதை உங்களுக்கு நினைவூட்டும். அவ்வாறு செய்யவில்லை எனில், தயாரிப்பை வெளியிடுமாறு அதற்குக் கட்டளையிடவும்.

ஏற்கனவே இணையத்தில் உள்ள ஒன்றிற்கான அணுகலை விற்க, இணைப்பை விற்குமாறு AI கருவியிடம் கேட்டு அதற்கான URL-ஐ வழங்கவும். எடுத்துக்காட்டாக, நீங்கள் ஒரு Notion பக்கம், முன்பதிவுப் பக்கம் அல்லது ஆன்லைன் படிப்பை விற்கலாம். தயாரிப்பு உருவாக்கப்படும்போது இணைப்பு சேர்க்கப்படுகிறது, எனவே பதிவேற்ற எந்தக் கோப்பும் இல்லை. தயாரிப்பை வாங்கும் வாடிக்கையாளருக்கு உள்ளடக்கத்தைத் திறப்பதற்கான இணைப்பு மின்னஞ்சலில் அனுப்பப்படும். கோப்பைப் பதிவேற்றுவதைத் தவிர்த்து, தயாரிப்பை வெளியிடுவது உட்பட மற்ற படிகள் அனைத்தும் ஒன்றுதான்.

Digital Products செயலி ஆதரிக்கும் வழங்குநர்களிடமிருந்து மட்டுமே இணைப்புகள் செயல்படும். உங்கள் இணைப்பு ஆதரிக்கப்படும் வழங்குநரிடமிருந்து வரவில்லை எனில், AI கருவி ஆதரிக்கப்படும் வழங்குநர்களின் பெயர்களைக் குறிப்பிடும். முழுமையான பட்டியலுக்கு, Digital Products செயலிக்கான பரிசீலனைகள் என்பதைப் பார்க்கவும்.

Shopify நிர்வாகியில் உங்கள் டிஜிட்டல் தயாரிப்பை மதிப்பாய்வு செய்தல்

அரட்டையிலிருந்து ஒரு தயாரிப்பை நீங்கள் வெளியிடும்போது, AI கருவி தயாரிப்பு நிலையை செயலில் உள்ளது என அமைத்து, உங்களின் ஆன்லைன் ஸ்டோரில் தயாரிப்பைக் கிடைக்கச் செய்ய முயற்சிக்கிறது. உங்களின் ஆன்லைன் ஸ்டோரில் தயாரிப்பு கிடைப்பதா என்பதை AI கருவியால் உறுதிப்படுத்த முடியாது. வாடிக்கையாளர்களிடம் தயாரிப்பைப் பகிர்வதற்கு முன்பு நீங்களே தயாரிப்பு விவரங்களை மதிப்பாய்வு செய்யவும்.

படிகள்:

  1. உங்கள் Shopify நிர்வாகியில் இருந்து, தயாரிப்புகள் என்பதற்குச் செல்லவும்.

  2. AI கருவி உருவாக்கிய தயாரிப்பைக் கிளிக் செய்யவும்.

  3. தயாரிப்பு நிலை செயலில் உள்ளது என்பதையும், ஆன்லைன் ஸ்டோர் விற்பனைச் சேனல் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதையும் உறுதிப்படுத்தவும். நிலை செயலில் உள்ளது என இல்லை எனில், நிலை பிரிவில் உள்ள கீழ்தோன்றும் மெனுவிலிருந்து செயலில் உள்ளது என்பதைத் தேர்ந்தெடுக்கவும். உங்கள் ஆன்லைன் ஸ்டோரில் தயாரிப்பு கிடைக்கவில்லை எனில், அதன் தயாரிப்புக் கிடைக்கும் தன்மையை அமைக்கவும்.

  4. விலை மற்றும் விளக்கத்தை உறுதிப்படுத்தவும், மேலும் உங்களுக்காக AI கருவி எழுதிய எதையும் மாற்றலாம். மாற்றங்களைச் செய்தால், சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.

  5. சொத்துகள் பிரிவில், உங்களின் கோப்பு அல்லது இணைப்பு இணைக்கப்பட்டுள்ளதை உறுதிப்படுத்தவும். இணைப்பிற்கு, இணைப்புப் பெயர், பொத்தான் CTA மற்றும் வழிமுறைகள் ஆகிய புலங்களும் வாடிக்கையாளர்களுக்குக் காட்டப்படும் என்பதால் அவற்றையும் சரிபார்க்கவும்.

  6. தயாரிப்பு தானாகவே டெலிவரி செய்யப்படுகிறதா என்பதை உறுதிப்படுத்தவும். டெலிவரி அமைப்புகள் சுருக்கப்பட்டிருக்கும் போது, நிறைவேற்றப்பட்டது என்பது தானாகவே என்று இருக்கும். அவை விரிக்கப்பட்டிருக்கும் போது, விநியோக முறை பிரிவில் தானாகவே அனுப்பு என்பது தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும். தயாரிப்பு தானாகவே டெலிவரி செய்யப்படவில்லை எனில், நிறைவேற்ற அமைப்புகளைச் சரிசெய்யவும்.

  7. வாடிக்கையாளர் உங்களின் கோப்பைப் பதிவிறக்க அல்லது இணைக்கப்பட்ட உள்ளடக்கத்தைத் திறக்க ஒரு இணைப்பைப் பெறுகிறாரா என்பதை உறுதிசெய்ய, சோதனை ஆர்டர் ஒன்றைச் செய்து பார்க்கவும்.

அடுத்தப் படி: Digital Products செயலியில் உங்கள் டிஜிட்டல் தயாரிப்பை நிர்வகித்தல்

உங்கள் தயாரிப்பு நேரலையில் வந்ததும், Digital Products செயலியில் அதை நீங்கள் நிர்வகிக்கலாம். செயலியில், உங்களால் அணுகல் வரம்பை அமைக்க முடியும், வாடிக்கையாளருக்குப் பதிவிறக்க இணைப்பை மீண்டும் அனுப்ப முடியும் மற்றும் வாடிக்கையாளர்கள் பெறும் மின்னஞ்சல்களைத் தனிப்பயனாக்க முடியும்.