Shopify Magic

Shopify Magic என்பது உங்கள் வணிகத்தைத் தொடங்க, நடத்த மற்றும் வளர்க்க எளிதாக்குவதற்காக, Shopify தயாரிப்புகள் மற்றும் பணிப்பாய்வுகள் முழுவதும் ஒருங்கிணைக்கப்பட்ட இலவச AI-ஆல் இயக்கப்படும் அம்சங்களின் தொகுப்பாகும். ஸ்டோர் உருவாக்கம், சந்தைப்படுத்தல், வாடிக்கையாளர் ஆதரவு மற்றும் பின் அலுவலக மேலாண்மை ஆகிய பணிகளுக்காகத் தனிப்பயனாக்கப்பட்ட மற்றும் சூழ்நிலைக்குப் பொருத்தமான ஆதரவை வழங்குவதற்காக, AI தொழில்நுட்பத்தின் சமீபத்திய முன்னேற்றங்களுடன் Shopify-இன் அனைத்து ஆற்றலையும் Shopify Magic ஒருங்கிணைக்கிறது.

கிடைக்கும் தன்மை

  • உங்கள் சந்தாத் திட்டம் எதுவாக இருந்தாலும், Shopify Magic கருவிகளும் அனுபவங்களும் இலவசமாகக் கிடைக்கும். இருப்பினும், குறிப்பிட்ட அம்சங்களுக்கான அணுகலும் கிடைக்கும் தன்மையும் மாறுபடலாம்.
  • Shopify Magic மூலம் இயக்கப்படும் சில அம்சங்கள் மொபைல் சாதனங்களுக்கு உகந்ததாக இல்லை என்றாலும், டெஸ்க்டாப் மற்றும் மொபைல் சாதனங்கள் என இரண்டிலும் Shopify Magic செயல்படும்.
  • பொதுவாகக் கிடைக்கும் அனைத்து அம்சங்களும் அனைத்துத் திட்டங்களுக்கும் எல்லா மொழிகளிலும் கிடைக்கும். முன்கூட்டிய அணுகலில் உள்ளவை போன்ற சில அம்சங்களுக்கான Shopify Magic-இன் மொழி ஆதரவு மாறுபடலாம்.

உரை உருவாக்கம்

உங்கள் எழுதும் செயல்முறையை வேகப்படுத்த, Shopify Magic-இன் தானியங்கு உரை உருவாக்கத்தைப் பயன்படுத்தலாம். செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, தயாரிப்பு விளக்கங்கள், மின்னஞ்சல் தலைப்புகள் மற்றும் உங்கள் ஆன்லைன் ஸ்டோரில் உள்ள தலைப்புகள் போன்ற உள்ளடக்கங்களுக்கான பரிந்துரைகளை உருவாக்க நீங்கள் வழங்கும் தகவல்களை Shopify Magic பயன்படுத்துகிறது.

தானியங்கு உரை உருவாக்கம் பெரிய மொழி மாதிரிகளைச் (LLM) சார்ந்திருக்கிறது, அவை மனித மொழியைச் செயலாக்கவும் புரிந்துகொள்ளவும் வடிவமைக்கப்பட்ட கணினி நிரல்களாகும். புத்தகங்கள், கட்டுரைகள் மற்றும் வலைப் பக்கங்கள் போன்ற பெரிய அளவிலான உரைத் தரவைப் பகுப்பாய்வு செய்வதன் மூலமும், சொற்கள் மற்றும் சொற்றொடர்களுக்கு இடையிலான வடிவங்கள் மற்றும் உறவுகளைக் கற்றுக்கொள்ளப் புள்ளியியல் வழிமுறைகளைப் பயன்படுத்துவதன் மூலமும் LLM-கள் செயல்படுகின்றன. கேள்விகளுக்குப் பதிலளிப்பது, மொழிகளை மொழிபெயர்ப்பது, உரையைச் சுருக்கி வழங்குவது மற்றும் அசல் உள்ளடக்கத்தை உருவாக்குவது போன்ற பல பணிகளை LLM-களால் செய்ய முடியும். AI-ஆல் இயக்கப்படும் கருவிகளுக்கான சிறந்த நடைமுறைகளை பயன்படுத்துவது குறித்து அறிந்துகொள்ளுங்கள்.

உங்கள் ஸ்டோரின் பின்வரும் பகுதிகளில் உரை தொடர்பான பரிந்துரைகளை உருவாக்கலாம்:

பரிந்துரைகள் குறித்த கருத்தை வழங்குதல்

பொருத்தமற்ற அல்லது தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கங்களைக் கொடியிடுவதற்கு, உருவாக்கப்பட்ட பரிந்துரைகள் பற்றி நீங்கள் Shopify-க்குக் கருத்தை வழங்கலாம். உங்கள் கருத்து, Shopify Magic உருவாக்கும் பரிந்துரைகளின் தரத்தை மேம்படுத்த உதவுகிறது.

படிகள்:

  1. தானியங்கு உரையை நீங்கள் உருவாக்கும்போது, பரிந்துரைக்கப்பட்ட உள்ளடக்கத்தின் மீது கர்சரை நகர்த்தி, பின்வருவனவற்றில் ஏதேனும் ஒன்றைச் செய்யவும்:
    • நேர்மறையான கருத்தை வழங்க, Thumbs up பொத்தானைக் கிளிக் செய்யவும்.
    • எதிர்மறையான கருத்தை வழங்க, Thumbs down பொத்தானைக் கிளிக் செய்யவும்.
  2. முன்பே வரையறுக்கப்பட்ட கருத்து வகைகளிலிருந்து தேர்ந்தெடுக்கவும், பின்னர் நீங்கள் சேர்க்க விரும்பும் கூடுதல் விவரங்களை வழங்கவும்.
  3. அனுப்பு என்பதைக் கிளிக் செய்யவும்.

Sidekick

Sidekick என்பது Shopify-இன் அனைத்து அம்சங்களையும் அறிந்துகொள்ளும் வகையில் பயிற்சியளிக்கப்பட்ட AI-ஆல் இயக்கப்படும் வணிக உதவியாளர் ஆகும். இது சூழ்நிலை, தரவு மற்றும் அறிவை உடனுக்குடன் அணுகி பல்வேறு பணிகளுக்கு மிகவும் தனிப்பயனாக்கப்பட்ட மற்றும் பொருத்தமான ஆதரவை உருவாக்குகிறது. Sidekick மூலம், ஆக்கப்பூர்வமான செயல்முறையைத் தொடங்கவும், அதிக நேரமெடுக்கும் பணிகளைக் கையாளவும் மற்றும் உங்கள் வணிக முடிவுகளை எடுக்கவும் அன்றாடப் பேச்சு வழக்கில் உள்ள மொழியைப் பயன்படுத்தலாம்.

Sidekick பற்றி மேலும் அறிக.

மீடியா உருவாக்கம்

Shopify Magic ஆனது Shopify நிர்வாகியின் மீடியா எடிட்டருடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது, இதனால் கூடுதல் மென்பொருள் அல்லது வடிவமைப்பு நிபுணத்துவம் தேவையில்லாமல் தொழில்முறைப் படச் சரிசெய்தல் அல்லது அசெட் உருவாக்கத்திற்கு உதவ AI-ஐ நீங்கள் பயன்படுத்திக்கொள்ளலாம்.

Shopify Magic மூலம், தயாரிப்புப் படத்திலிருந்து பின்புலத்தை அகற்றலாம், புதிய லோகோவை உருவாக்கலாம் அல்லது வரவிருக்கும் விற்பனைக்கான புதிய ஹீரோ பேனர்கள் மூலம் உங்கள் ஆன்லைன் ஸ்டோரை மேம்படுத்தலாம். Sidekick, கோப்பு எடிட்டர் மற்றும் நிர்வாகி முழுவதும் உள்ள கோப்புத் தேர்வி ஆகியவற்றில் மீடியா உருவாக்கம் கிடைக்கிறது.

Shopify Magic மீடியா உருவாக்கம் பற்றி மேலும் அறிக.

தீம் உருவாக்கம்

Shopify Magic உங்கள் Shopify நிர்வாகியில் உள்ள தீம்கள் பக்கத்துடன் ஒருங்கிணைக்கிறது, இதனால் உங்கள் வணிகத்திற்கான பிரத்தியேகமான இலவசத் தீமை உருவாக்க AI-ஐ நீங்கள் பயன்படுத்திக்கொள்ளலாம்.

Shopify Magic தீம் உருவாக்கம் பற்றி மேலும் அறிக

தீம் பிளாக் உருவாக்கம்

Shopify Magic தீம் எடிட்டருடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளதால், குறியீட்டு அறிவு ஏதுமில்லாமலேயே பிரத்தியேகத் தீம் பிளாக்குகளுக்கான குறியீட்டை உருவாக்க AI-ஐ நீங்கள் பயன்படுத்திக்கொள்ளலாம். உங்கள் குறிப்பிட்ட தேவைகளுக்கு ஏற்ப புதிய பிளாக்குகளை உருவாக்கி, உங்கள் ஆன்லைன் ஸ்டோருக்கான உங்கள் கனவை நனவாக்கலாம். நீங்கள் கற்பனை செய்யும் பிளாக்கை உரைப் பிராம்ட்டுகள் மூலம் விவரியுங்கள், அதற்கேற்ப உங்கள் தீம் பிரிவுகளில் சேர்ப்பதற்கான தேவையான Liquid குறியீட்டை Shopify Magic உருவாக்கும்.

Shopify Magic தீம் பிளாக் உருவாக்கம் பற்றி மேலும் அறிக.

செயலி மதிப்பாய்வுச் சுருக்கங்கள்

உங்கள் வணிகத்திற்கு எந்தெந்தச் செயலிகள் சரியானவை என்பதை மதிப்பிட மற்ற வணிகர்களின் செயலி மதிப்பாய்வுகள் உதவும். செயலிகளை மிக விரைவாகத் தேர்வுசெய்ய உங்களுக்கு உதவ, Shopify Magic மூலம் இயங்கும் செயலி மதிப்பாய்வுச் சுருக்கங்கள் Shopify App Store இல் உள்ள குறிப்பிட்ட செயலிகளுக்குக் கிடைக்கின்றன.

ஒரு வாடிக்கையாளருக்குச் செலவிடும் தொகைக்கான கணிப்புகள்

குழு அளவில் ஒவ்வொரு வாடிக்கையாளரும் எதிர்காலத்தில் செலவிட வாய்ப்புள்ள தொகை குறித்த கணிப்புகளைக் காட்ட, உங்கள் வாடிக்கையாளர் குழுப் பகுப்பாய்வு அறிக்கையில் உள்ள கணிப்புகளைக் காட்டு நிலைமாற்றியைச் செயல்படுத்தலாம்.

இந்தக் கணிப்புகள் உங்கள் ஸ்டோரின் முந்தைய 24 மாதத் தரவின் அடிப்படையிலானவை, மேலும் எதிர்கால விற்பனைத் தொகைகளுக்கு இவை உத்தரவாதம் அளிக்காது. இந்தத் தரவு வேறு எந்த ஸ்டோர்களிலிருந்தும் பெறப்பட்ட தகவல்களையோ அல்லது உங்கள் துறைக்கான சராசரிகளையோ அடிப்படையாகக் கொண்டதல்ல, அத்துடன் உங்கள் தரவு வேறு எந்த ஸ்டோர்களுடனும் பகிரப்படாது.

வாடிக்கையாளர் பிரிவுகள்

நீங்கள் வாடிக்கையாளர் பிரிவை உருவாக்கும்போது, உங்கள் மதிப்பாய்வுக்காக Shopify Magic தானாகவே உங்கள் வாடிக்கையாளர் பிரிவின் விளக்கத்தை எளிய மொழியில் உருவாக்கும்.

Shopify Magic மூலம் தரவு கையாளுதல் மற்றும் தனியுரிமை

Shopify Magic இன் AI மாதிரிகள், Shopify இன் தனியுரிமத் தரவு மற்றும் உலகின் முன்னணி பெரிய மொழி மாதிரிகள் (LLM) ஆகியவற்றின் கலவையில் கட்டமைக்கப்பட்டுள்ளன. ஒரு குறிப்பிட்ட மாதிரி அல்லது வழங்குநரோடு எங்களைச் சுருக்கிக்கொள்ளாமல் இருப்பதால், புதிய மற்றும் சிறப்பான தீர்வுகள் வெளிவரும்போது, அவற்றை எளிதாக ஏற்றுச் செயல்படுத்துவதற்கான நெகிழ்வுத்தன்மையை நாங்கள் தக்கவைக்கிறோம்.

மற்ற வணிகர்களுக்காக Shopify Magic-ஐ இயக்குவதற்கு எந்தவொரு வணிகரின் ஸ்டோர் அளவிலான தரவையும் Shopify பயன்படுத்துவதில்லை. சில சந்தர்ப்பங்களில், அந்த வணிகருக்குச் சிறந்த முடிவுகளை வழங்குவதற்காக, ஒரு வணிகரின் சொந்த ஸ்டோர் அளவிலான தரவை Shopify Magic பயன்படுத்துகிறது; இருப்பினும், அந்தச் சந்தர்ப்பங்களில், அந்தத் தரவு மற்ற வணிகர்களுடன் பகிரப்படாது.

Shopify Magic ஆனது உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான நிறுவனங்களால் நம்பப்படும் Shopify இன் வலுவான பாதுகாப்பு கட்டமைப்பு மற்றும் தனியுரிமைக் கொள்கையின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டுள்ளது.

தனியுரிமை பற்றி மேலும் அறிக.

இந்தப் பிரிவில்