கோப்பு எடிட்டரில் மீடியா உருவாக்கம்

கோப்பு எடிட்டரிலேயே மீடியா உருவாக்கம் மூலம் செயற்கை நுண்ணறிவின் (AI) ஆற்றலைப் பயன்படுத்தி உங்களால் படங்களை மாற்றியமைக்க முடியும். சிறப்பு வடிவமைப்புத் திறன்கள் ஏதுமில்லாமலேயே தொழில்முறைத் தயாரிப்புப் படங்களை விரைவாக உருவாக்க AI-ஆல் இயக்கப்படும் மீடியா உருவாக்கம் உங்களுக்கு உதவும்.

மீடியா உருவாக்கம் மூலம் நீங்கள் பின்வரும் செயல்களைச் செய்யலாம்:

  • நிறப் பின்புலம்: ஒரு படத்தின் பின்புலத்தை ஒற்றை நிறத்துடன் மாற்றலாம், இதில் தானியங்குப் பொருளைக் கண்டறிதல் மற்றும் தேவைப்பட்டால் கைமுறையாகத் திருத்துதல் ஆகியவையும் அடங்கும்
  • உருவாக்கு: பின்புலங்கள், வெளிச்சம் அல்லது படத்தின் பிற அம்சங்களை மாற்ற எளிய இயல்பு மொழிப் பிராம்ட்டுகளைப் பயன்படுத்திப் படத்தை மாற்றியமைக்கலாம்

விலை நிர்ணயம்

குறிப்பிட்ட காலத்திற்கு, கோப்பு எடிட்டரில் உள்ள மீடியா உருவாக்கம் அனைத்து Shopify திட்டங்களிலும் கூடுதல் கட்டணமின்றி கிடைக்கும்.

மீடியா உருவாக்கம் மூலம் படங்களைத் திருத்துவதற்கான கருத்தில் கொள்ள வேண்டியவை மற்றும் உதவிக்குறிப்புகள்

நீங்கள் மீடியா உருவாக்கத்தைப் பயன்படுத்தத் தொடங்குவதற்கு முன், கீழ்காணும் கருத்தில் கொள்ள வேண்டியவற்றைச் சரிபார்க்கவும்:

  • படப் பகுதிறன் மற்றும் வடிவம்:

    • உருவாக்கப்படும் படங்களின் இயல்புநிலைப் பகுதிறனானது உங்கள் படத்தின் விகிதத்தின் அடிப்படையில் 1 மெகாபிக்சலாக (MP) இருக்கும். 1 மெகாபிக்சல் பரிமாணத்திற்கு நெருக்கமாக உள்ள படங்களைப் பயன்படுத்துவதை இலக்காகக் கொள்ளவும்.
    • 1 MP ஐ விடப் பெரிய படங்கள் சிறிதாக்கப்படும், அதே சமயம் 1 MP க்கும் குறைவான படங்கள் பெரிதாக்கப்படும்.
    • மாற்றியமைக்கப்பட்ட படங்கள் அதன் அசல் வடிவத்தில் சேமிக்கப்படும். ஒளிபுகும் பின்புலங்களைக் கொண்ட படங்கள் அனைத்தும், அந்த ஒளிபுகும் பின்புலத்தைப் பராமரிக்க, PNG வடிவத்தில் புதிய கோப்பாகச் சேமிக்கப்பட வேண்டும். பிற பட வடிவங்களால் ஒளிபுகும் பின்புலத்தைச் சேமிக்க முடியாது.
    • ஒளிபுகும் பின்புலங்களுடன் படங்களை நீங்கள் உருவாக்கினால், அந்த ஒளிபுகும் பின்புலத்தைப் பராமரிக்க அவை PNG கோப்புகளாகச் சேமிக்கப்பட வேண்டும். பிற பட வடிவங்களால் ஒளிபுகும் பின்புலத்தைச் சேமிக்க முடியாது.
  • படத்தின் தரம்:

    • சிறந்த முடிவுகளுக்குத் தெளிவாகத் தெரியும் பொருள்கள் மற்றும் நல்ல நிறமாறுபாடு உள்ள படங்களைப் பயன்படுத்தவும்.
    • பின்புலத்தை அகற்றுவதற்குத் துல்லியமான விளிம்புகள் மற்றும் எளிய அமைப்புகளுடன் கூடிய படங்கள் சிறப்பாக வேலை செய்யும்.
  • திருத்துதல் மற்றும் சேமித்தல்:

  • பதிப்புரிமை மற்றும் பயன்பாடு:

    • உருவாக்கப்பட்ட அனைத்துப் படங்களுக்கும் கண்ணுக்குத் தெரியாத வாட்டர்மார்க் பயன்படுத்தப்படும். இது வணிகரீதியான பயன்பாட்டைக் கட்டுப்படுத்தாது, ஆனால் இதை அகற்ற முடியாது.

தயாரிப்புப் படங்களை எடுப்பது குறித்து மேலும் அறிக.

உரை பிராம்ட்கள் மூலம் உங்கள் மீடியா உருவாக்கத்தைத் தனிப்பயனாக்குதல்

உருவாக்கு அம்சத்தைப் பயன்படுத்தும்போது, சிறப்பான உரை பிராம்ட்கள் மூலம் உங்கள் படங்களை மாற்றியமைக்கலாம். உங்களுக்கு வேண்டியதை விவரிக்க, எளிமையான, இயல்பான மொழியைப் பயன்படுத்துங்கள்:

  • பின்னணி மாற்றங்கள்: "பின்னணியை ஸ்டுடியோவிற்கு மாற்று" அல்லது "மிதமான வெளிச்சத்துடன் கூடிய சமையலறை அமைப்பு"
  • காட்சி விளக்கங்கள்: "புற்கள், மரங்களுடன் வெயில் அடிக்கும் பூங்கா"
  • ஸ்டைல் விவரக்குறிப்புகள்: "தொழில்முறை விளம்பரப் புகைப்படம்" அல்லது "மிதமான சீரான வெளிச்சம்"
  • ஒருங்கிணைந்த கூறுகள்: "கான்கிரீட் பின்னணி, ஆம்பியன்ட் வெளிச்சத்துடன் கூடிய ஸ்டுடியோ அமைப்பு"

இந்தப் பிராம்ட் உதவிக்குறிப்புகளைக் கவனத்தில் கொள்ளுங்கள்:

அழகுணர்ச்சி, ஸ்டைல் சார்ந்த முக்கியச் சொற்களும் சொற்றொடர்களும் ரெண்டரிங்கின் இறுதி மெருகூட்டல்களை மேம்படுத்த உதவும். கருத்தில் கொள்ள வேண்டிய சில உதாரணங்களில் பின்வரும் வகையைச் சேர்ந்த விவரிப்பான்கள் அடங்கும்:

  • இடம்: உட்புறங்கள், வெளிப்புறங்கள், நீருக்கு அடியில், நகரத்தில்
  • வெளிச்சம்: மிதமான சீரான வெளிச்சம், ஆம்பியன்ட், மேகமூட்டம், நியான், ஸ்டுடியோ விளக்குகள், ஃபிளாஷ் புகைப்படம்
  • நிறம்: வைப்ரன்ட், மங்கலான, ஒளிமிக்க, மோனோக்ரோமேட்டிக், கறுப்பு மற்றும் வெள்ளை, பாஸ்டல்
  • அளவு (பொருளுக்குச் சார்பானது): மிக அருகாமைக் காட்சி, வைட் ஷாட், 6" x 4" x 2"
  • கேமரா கோணம்: முன்பக்கக் காட்சி, அருகாமைக் காட்சி, மேலிருந்து கீழாக

உங்கள் உரை பிராம்ட்டை உருவாக்கும்போது, பின்வரும் சிறந்த நடைமுறைகளைக் கவனத்தில் கொள்ளுங்கள்:

  • உரை பிராம்ட்கள் குறைந்தபட்சம் 3-7 சொற்களைக் கொண்டிருக்க வேண்டும். காற்புள்ளிகளால் பிரிக்கப்பட்ட சிறிய முக்கியச் சொற்கள் அல்லது சொற்றொடர்களைக் கொண்டு பிராம்ட்டை வடிவமைப்பது சிறப்பாக இருக்கும்.
  • கோரிக்கைகள், வழிமுறைகளின் நீண்ட பட்டியல்களைத் தவிர்க்கவும். பெரிய மொழி மாதிரி (LLM) அல்லது சாட்போட்டைப் போன்று இல்லாமல், மீடியா உருவாக்கத்திற்கான உரை பிராம்ட்-உருவாக்கி உரையாடல் வகையில் இயங்காது.
  • பின்னணிக் காட்சியின் சூழலோடு ஒப்பிடும்போது, உங்கள் தயாரிப்பு மிகவும் பெரிதாக அல்லது மிகவும் சிறியதாகத் தோன்றினால், உங்கள் தயாரிப்புக்கேற்பப் பின்னணியைச் சரியாக அளவிட ஜெனரேட்டருக்கு உதவ, அளவு குறித்த தகவல்களைச் சேர்க்கவும். எடுத்துக்காட்டாக, 8oz ஜாடி மெழுகுவர்த்தி அல்லது 26" x 18" சூட்கேஸ்.
  • பின்னணிக் காட்சியில் பொருட்கள் 'மிதப்பதைத்' தவிர்க்க, பின்னணிக்கு ஏற்றவாறு பொருள் எவ்வாறு தரையமைக்கப்பட வேண்டும் என்பதைக் குறிப்பிடவும். எடுத்துக்காட்டாக, மேசையின் மீதிருக்கும் தண்ணீர் பாட்டில் அல்லது சுவரோரமாகத் தரையில் இருக்கும் பூட்ஸ்.

நிறப் பின்னணி

படத்தின் பின்னணியை ஒற்றை நிறமாக மாற்றலாம் அல்லது அதனைப் பின்னணி அற்றதாக மாற்றலாம். இந்த அம்சம் பொருளைப் பின்னணியில் இருந்து தானாகவே கண்டறிந்து பிரிக்கும்; தேவையெனில், நீங்கள் அந்தத் தேர்வை மேனுவலாகத் திருத்திக் கொள்ளலாம்.

படிகள்:

டெஸ்க்டாப்
  1. உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, நீங்கள் திருத்த விரும்பும் மீடியா கோப்பிற்குச் செல்லவும்.

  2. கோப்பு எடிட்டரைத் திறக்க தம்ப்நெயிலைக் கிளிக் செய்யவும்.

  3. கோப்பு எடிட்டரில், நிறப் பின்னணி என்பதைக் கிளிக் செய்யவும்.

  4. உங்கள் படத்தில் உள்ள பொருளை இந்த அம்சம் தானாகவே கண்டறியும். தானியங்குத் தேர்வுக்குத் திருத்தம் தேவைப்பட்டால், பொருளைத் தேர்ந்தெடு என்பதைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் படத்தின் எந்தெந்தப் பகுதிகள் பொருளாகக் கருதப்பட வேண்டும் என்பதை நீங்கள் மேனுவலாகச் சரிசெய்யலாம்.

  5. பின்வரும் விருப்பங்களில் ஏதேனும் ஒன்றைப் பின்பற்றுவதன் மூலம் நீங்கள் விரும்பும் பின்னணி நிறத்தைத் தேர்ந்தெடுக்கவும்:

    • மோனோக்ரோம் அல்லது நிலையான நிறங்களில் உள்ள முன்கூட்டியே அமைக்கப்பட்ட நிற ஸ்வாட்சுகளில் ஒன்றைக் கிளிக் செய்யவும்.
    • தனிப்பயன் பிரிவில், நிறத் தேர்வியைப் பயன்படுத்த அல்லது குறிப்பிட்ட நிறக் குறியீட்டை உள்ளிட + என்பதைக் கிளிக் செய்யவும்.
  6. உங்கள் படத்தைச் சேமிக்க, சேமி அல்லது புதிதாகச் சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.

படத்தில் செய்த அனைத்து மாற்றங்களையும் நிராகரிக்க, அசலுக்கு மாற்று என்பதைக் கிளிக் செய்யவும்.

மொபைல்
  1. Shopify செயலியில் இருந்து, நீங்கள் திருத்த விரும்பும் மீடியா கோப்பிற்குச் செல்லவும்.

  2. நீங்கள் திருத்த விரும்பும் படத்தைத் தட்டவும்.

  3. பின்னணி என்பதைத் தட்டவும்.

  4. உங்கள் படத்தில் உள்ள பொருளை இந்த அம்சம் தானாகவே கண்டறியும்.

  5. நிற ஸ்வாட்சுகளில் ஒன்றைத் தட்டுவதன் மூலம் அல்லது தனிப்பயன் நிறத் தேர்வியைப் பயன்படுத்துவதன் மூலம் உங்களுக்கு வேண்டிய பின்னணி நிறத்தைத் தேர்ந்தெடுக்கவும்.

  6. உங்கள் படத்தைச் சேமிக்க, சேமி அல்லது புதிதாகச் சேமி என்பதைத் தட்டவும்.

படங்களை உருவாக்கு

எளிமையான இயல்பான மொழி பிராம்ட்களைப் பயன்படுத்தி உங்கள் படத்தை மாற்றியமைக்கலாம். உங்களுக்கு வேண்டியதை விவரிப்பதன் மூலம் பின்னணிகள், அமைப்புகள் அல்லது உங்கள் படத்தின் பிற அம்சங்களை மாற்ற இந்த அம்சம் உங்களை அனுமதிக்கிறது.

எடுத்துக்காட்டாக, நீங்கள் "புற்கள், மரத்தடியில் பெஞ்ச் ஆகியவற்றுடன் கூடிய வெயில் அடிக்கும் பூங்கா, தொழில்முறை விளம்பரப் புகைப்படம்" அல்லது "பின்னணியை ஸ்டுடியோவிற்கு மாற்று" என்று தட்டச்சு செய்யலாம்; அதற்கேற்ப AI உங்கள் படத்தை மாற்றியமைக்கும்.

படிகள்:

டெஸ்க்டாப்
  1. உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, நீங்கள் திருத்த விரும்பும் மீடியா கோப்பிற்குச் செல்லவும்.

  2. கோப்பு எடிட்டரைத் திறக்க தம்ப்நெயிலைக் கிளிக் செய்யவும்.

  3. கோப்பு எடிட்டரில், உருவாக்கு என்பதைக் கிளிக் செய்யவும்.

  4. உரை பிராம்ட் பெட்டியில், இயல்பான மொழியைப் பயன்படுத்தி உங்கள் படத்தை எவ்வாறு மாற்றியமைக்க விரும்புகிறீர்கள் என்பதை விவரிக்கவும். நீங்கள் செய்யக்கூடியவை:

    • பின்னணியை மாற்றுதல் ("பின்னணியை வரவேற்பறைக்கு மாற்று")
    • காட்சியமைத்தல் ("புற்கள், மரங்களுடன் வெயில் அடிக்கும் பூங்கா")
    • ஸ்டைலைக் குறிப்பிடுதல் ("தொழில்முறை விளம்பரப் புகைப்படம்")
    • பல கூறுகளை ஒருங்கிணைத்தல் ("மிதமான வெளிச்சத்துடன் கூடிய ஸ்டுடியோ அமைப்பு")
  5. சமர்ப்பி என்பதைக் கிளிக் செய்யவும்.

  6. உங்கள் படத்தைச் சேமிக்க, சேமி அல்லது புதிதாகச் சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.

படத்தில் செய்த அனைத்து மாற்றங்களையும் நிராகரிக்க, அசலுக்கு மாற்று என்பதைக் கிளிக் செய்யவும்.

மொபைல்
  1. Shopify செயலியில் இருந்து, நீங்கள் திருத்த விரும்பும் மீடியா கோப்பிற்குச் செல்லவும்.

  2. நீங்கள் திருத்த விரும்பும் படத்தைத் தட்டவும்.

  3. உருவாக்கு என்பதைத் தட்டவும்.

  4. உரை பிராம்ட் பெட்டியில், இயல்பான மொழியைப் பயன்படுத்தி உங்கள் படத்தை எவ்வாறு மாற்றியமைக்க விரும்புகிறீர்கள் என்பதை விவரிக்கவும்.

  5. Circle Up என்பதைத் தட்டவும்.

  6. உருவாக்கப்பட்ட விருப்பத்தின் முன்னோட்டத்தைப் பார்த்து, தேவைக்கேற்ப Undo icon அல்லது Redo icon என்பதைப் பயன்படுத்தவும்.

  7. உங்கள் படத்தைச் சேமிக்க, சேமி அல்லது புதிதாகச் சேமி என்பதைத் தட்டவும்.

படங்களை விரிவுபடுத்து

படங்களின் பின்னணியை அவற்றின் அசல் எல்லைகளுக்கு அப்பாலும் உங்களால் விரிவுபடுத்த முடியும். அவுட்பெயின்ட்டிங் (outpainting) எனப்படும் இந்தச் செயல்முறை, உங்கள் பொருளைச் சுற்றி இடைவெளியைச் சேர்க்க அல்லது ஃப்ரேமிங்கைச் சரிசெய்ய உங்களை அனுமதிக்கிறது. படங்களை அவுட்பெயின்ட்டிங் செய்வது Shopify மொபைல் செயலியில் கிடைக்காது.

படிகள்:

  1. உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, நீங்கள் திருத்த விரும்பும் மீடியா கோப்பிற்குச் செல்லவும்.

  2. கோப்பு எடிட்டரைத் திறக்க தம்ப்நெயிலைக் கிளிக் செய்யவும்.

  3. கோப்பு எடிட்டரில், கிராப் செய்து, மாற்று என்பதைக் கிளிக் செய்து, ஆஸ்பெக்ட் ரேஷியோவைத் தேர்ந்தெடுக்கவும்.

  4. ஸ்லைடரைப் பயன்படுத்தி, நீங்கள் விரிவாக்க விரும்பும் கேன்வாஸின் அளவைச் சரிசெய்யவும்.

  5. உங்கள் படத்தின் பின்னணியை நீட்டிக்க Image Magic ஐகானைக் கிளிக் செய்யவும்.

  6. உங்கள் படத்தைச் சேமிக்க, சேமி அல்லது புதிதாகச் சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.

படத்தில் செய்த மாற்றங்கள் அனைத்தையும் பழையபடி மாற்ற, நிராகரி என்பதைக் கிளிக் செய்யவும்.

உருவாக்கப்பட்ட படங்களை உங்கள் சாதனத்தில் சேமிக்கவும்

நீங்கள் உருவாக்கும் எந்தவொரு படத்தையும் உங்கள் சாதனத்தின் லோக்கல் ஸ்டோரேஜில் நேரடியாகச் சேமிக்கலாம் அல்லது மொபைல் சாதனத்தில் பகிரலாம். திருத்தும் அமர்வு முடியும் போது, சேமிக்கப்படாத உருவாக்கப்பட்ட படங்கள் இழக்கப்படும்.

படிகள்:

டெஸ்க்டாப்
  1. வண்ணப் பின்னணி அல்லது உருவாக்கு என்பதைப் பயன்படுத்த, படிகளைப் பின்பற்றி, உங்கள் படத்தைச் சேமிக்க சேமி அல்லது புதியதாகச் சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.
  2. நீங்கள் சேமிக்க விரும்பும் படத்திற்கான சிறுபடத்தைக் கிளிக் செய்யவும்.
  3. பட முன்னோட்டத்தில், உங்கள் சாதனத்தின் லோக்கல் ஸ்டோரேஜில் படத்தைப் பதிவிறக்க ↧ ஐகானைக் கிளிக் செய்யவும்.
மொபைல்
  1. வண்ணப் பின்னணி அல்லது உருவாக்கு என்பதைப் பயன்படுத்த, படிகளைப் பின்பற்றி, உங்கள் படத்தைச் சேமிக்க சேமி அல்லது புதியதாகச் சேமி என்பதைத் தட்டவும்.
  2. பட முன்னோட்டத்தில், படத்தைப் பதிவிறக்க அல்லது பகிர Horizontal menu > ↧ ஐகானைத் தட்டவும்.

உருவாக்கப்பட்ட படங்களிலுள்ள உள்ளடக்கம் குறித்துப் புகாரளிக்கவும்

மீடியா உருவாக்கம் என்பது, தீங்கு விளைவிக்கும் அல்லது புண்படுத்தும் உள்ளடக்கத்தை அங்கீகரித்துத் தடுக்க, வடிப்பான்கள் மற்றும் பாதுகாப்புகளைச் செயல்படுத்தும் பயிற்றுவிக்கப்பட்ட மாடல்களைப் பயன்படுத்துகிறது. இருப்பினும், பொருத்தமற்ற அல்லது தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கத்தைக் கொண்டிருக்கும் உருவாக்கப்பட்ட எந்தவொரு படங்கள் குறித்தும் நீங்கள் நேரடியாகப் புகாரளிக்கலாம். மீடியா உருவாக்கத்தால் உருவாக்கப்படும் காட்சிகளின் தரத்தை மேம்படுத்த உங்கள் கருத்து உதவுகிறது.

படிகள்:

உருவாக்கு என்பதைப் பயன்படுத்திப் படங்களை உருவாக்கி, பொருத்தமற்ற அல்லது தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கத்தை எதிர்கொண்ட பிறகு:

  1. படத்தின் கீழ் மூலையில் உள்ள புகாரளி ஐகானைக் கிளிக் செய்யவும்.
  2. புகாரளிப்பதற்கான காரணத்தைத் தேர்வுசெய்யவும்.
  3. சமர்ப்பி என்பதைக் கிளிக் செய்யவும்.
டெஸ்க்டாப்
  1. நீங்கள் புகாரளிக்க விரும்பும் படத்திற்கான சிறுபடத்தைக் கிளிக் செய்யவும்.
  2. பட முன்னோட்டத்தில், உள்ளடக்கம் குறித்துப் புகாரளிக்க ⚐ கொடி ஐகானைக் கிளிக் செய்யவும்.
  3. படம் குறித்துப் புகாரளி உரையாடல் பெட்டியில், படம் பற்றி எதைப் புகாரளிக்க வேண்டும் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  4. விருப்பத்தேர்வு: மேலும் விவரங்களைச் சேர் பிரிவில், நீங்கள் எதைப் புகாரளிக்க விரும்புகிறீர்கள் என்பது பற்றிய குறிப்பிட்ட தகவலை உள்ளிடவும்.
  5. சமர்ப்பி என்பதைக் கிளிக் செய்யவும்.
மொபைல்
  1. நீங்கள் புகாரளிக்க விரும்பும் படத்திற்கான சிறுபடத்தைத் தட்டவும்.
  2. பட முன்னோட்டத்தில், Horizontal menu > படம் குறித்துப் புகாரளி என்பதைத் தட்டவும்.
  3. படம் குறித்துப் புகாரளி உரையாடல் பெட்டியில், படம் பற்றி எதைப் புகாரளிக்க வேண்டும் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  4. விருப்பத்தேர்வு: மேலும் விவரங்களைச் சேர் பிரிவில், நீங்கள் எதைப் புகாரளிக்க விரும்புகிறீர்கள் என்பது பற்றிய குறிப்பிட்ட தகவலை உள்ளிடவும்.
  5. சமர்ப்பி என்பதைத் தட்டவும்.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

உருவாக்கப்பட்ட படங்களிலுள்ள சிக்கல்களை நான் எப்படிப் புகாரளிப்பது?

உள்ளடக்கம் குறித்துப் புகாரளி அம்சத்தைப் பயன்படுத்துவதன் மூலம் படத் திருத்தியில் இருந்து நேரடியாக எந்தவொரு படம் குறித்தும் நீங்கள் புகாரளிக்கலாம்.

உருவாக்கப்பட்ட படங்களின் ஆதாரம் என்ன மற்றும் பதிப்புரிமை எப்படிக் கையாளப்படுகிறது?

மீடியா உருவாக்கமானது, பல்வேறு உருவாக்க மீடியா மாடல்களை நம்பியுள்ளது மற்றும் Shopify-இன் தனியுரிமை மற்றும் தரவுப் பாதுகாப்புக் கொள்கைகளைப் பின்பற்றுகிறது.

உரிமையாளர்கள் பதிப்புரிமை மற்றும் வர்த்தக முத்திரைப் புகாரளிப்புப் படிவங்களைப் பயன்படுத்திச் சாத்தியமான மீறல்களைப் புகாரளிக்கலாம்.

AI-மூலம் திருத்தப்பட்ட படங்களுக்கான உரிமை மற்றும் பயன்பாட்டு உரிமைகள் யாவை?

மீடியா உருவாக்கத்தைப் பயன்படுத்தி வணிகர்கள் உருவாக்கும் படங்களின் மீது Shopify உரிமை கோரவோ, அந்தப் படங்களை எங்குப் பயன்படுத்தலாம் என்பதைக் கட்டுப்படுத்தவோ செய்யாது. உருவாக்கப்பட்ட படங்களை Shopify-க்கு உள்ளேயும் வெளியேயும் வணிகர்களின் வணிக நோக்கங்களுக்காகப் பயன்படுத்திக்கொள்ளலாம்.