Sidekick நினைவகம் மற்றும் தனிப்பயனாக்கம்

தனிப்பயனாக்கப்பட்ட ஆதரவை வழங்க, உங்கள் உரையாடல்களிலிருந்து பெறப்பட்ட தகவல்களை Sidekick நினைவில் கொள்கிறது. நீங்கள் Sidekick உடன் ஊடாடும்போது, அதன் பதில்கள் உங்கள் ஸ்டோருக்கு மிகவும் பொருத்தமானதாகவும் தனிப்பயனாக்கப்பட்டதாகவும் மாறும், எனவே சூழலை மீண்டும் மீண்டும் விவரிப்பதற்கான நேரம் குறையும். காலப்போக்கில் பின்வரும் வகையான தகவல்களை Sidekick அறிந்துகொள்கிறது:

  • வெளிப்படையான விருப்பத்தேர்வுகள்: உங்களைப் பற்றிய அல்லது உங்கள் விருப்பத்தேர்வுகள் பற்றிய குறிப்பிட்ட தகவலை Sidekick-இடம் நீங்கள் கூறும்போது, எதிர்கால உரையாடல்களுக்காக Sidekick அதை நினைவில் வைத்துக்கொள்கிறது.
  • கடந்தகால உரையாடல்கள்: Sidekick முந்தைய ஊடாடல்களை நினைவுபடுத்தும், எனவே நீங்கள் விட்ட இடத்திலிருந்தே தொடங்கலாம். கடந்த வாரம் நீங்கள் ஒரு தலைப்பைப் பற்றி விவாதித்திருந்தால், முழுச் சூழலையும் மீண்டும் விளக்காமல் அதை நீங்கள் இயல்பாகக் குறிப்பிடலாம்.
  • உட்பொதிந்த தனிப்பட்ட விருப்பத்தேர்வுகள்: நீங்கள் Sidekick-ஐப் பயன்படுத்தும்போது, தகவலை நீங்கள் எப்படிப் பெற விரும்புகிறீர்கள் என்பதை அது அறிந்துகொண்டு, உங்கள் பாணிக்குப் பொருந்தும் வகையில் அதன் பதில்களை மாற்றிக்கொள்ளும். காலப்போக்கில் நடைபெறும் உங்கள் ஊடாடல்களின் அடிப்படையில் இது தானாகவே நடக்கும்.
  • சமீபத்திய செயல்பாடு: உங்கள் Shopify நிர்வாகியில் நீங்கள் சமீபத்தில் என்ன செய்து கொண்டிருந்தீர்கள் என்பதை Sidekick-ஆல் குறிப்பிட முடியும். எடுத்துக்காட்டாக, நீங்கள் ஒரு தயாரிப்பைத் திருத்துகிறீர்கள், பின்னர் Sidekick-ஐத் திறக்கிறீர்கள். நீங்கள் ஒரு தயாரிப்பில் வேலை செய்துகொண்டிருந்ததை Sidekick குறிப்பிடலாம், எனவே நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள் என்பதை விளக்க வேண்டிய அவசியமில்லை.

Sidekick நினைவகத்திற்கான கருத்தில்கொள்ள வேண்டியவை

Sidekick நினைவகத்தைப் பயன்படுத்துவதற்கு முன்பு, கருத்தில்கொள்ள வேண்டிய பின்வரும் விஷயங்களை மதிப்பாய்வு செய்யவும்:

  • உங்கள் Shopify நிர்வாகியில் உள்ள Sidekick அரட்டையின் உரையாடல்களை Sidekick நினைவில் வைத்துக்கொள்ளும். தீம் எடிட்டரில் உள்ள Sidekick உடனான உரையாடல்கள் Sidekick-இன் நினைவகத்தில் சேர்க்கப்படாது.
  • தீம் எடிட்டரிலுள்ள வேலையை Sidekick அரட்டையில் தொடர, உங்கள் புதிய கேள்வியில் விவரங்களைச் சேர்க்கவும்.
  • உங்கள் கடந்தகால உரையாடல்களைச் சுமார் 3 மாதங்களுக்கு Sidekick நினைவில் வைத்திருக்கும்.
  • கடந்த 12 மணிநேரங்களில் உங்கள் Shopify நிர்வாகியில் நீங்கள் செய்த சமீபத்திய செயல்பாட்டை Sidekick-ஆல் குறிப்பிட முடியும். பழைய செயல்பாடுகள் Sidekick-க்குக் கிடைக்காது.
  • ஒரு உரையாடலுக்கான நினைவகத்தை நீங்கள் முடக்கினால், அந்த உரையாடலில் நீங்கள் சேமித்த தகவலையோ உங்கள் சமீபத்திய செயல்பாட்டையோ Sidekick பயன்படுத்தாது.

Sidekick அரட்டை வரலாற்றை அணுகுதல்

உலாவி அமர்வுகள் முழுவதிலும் உங்கள் அரட்டை வரலாற்றை Sidekick சேமிக்கிறது. முந்தைய உரையாடல்களின் பட்டியலை நீங்கள் பின்வரும் வழிகளில் அணுகலாம்:

  • Sidekick இல், உரையாடல் தலைப்பைக் கிளிக் செய்யவும்.
  • உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, Sidekick உரையாடல்கள் பகுதிக்குச் செல்லவும்.
  • Shopify முகப்பு பக்கத்திலிருந்து, Sidekick புலத்தில் சமீபத்தியவை என்பதைக் கிளிக் செய்யவும்.

குறிப்பிட்ட உரையாடல்களைக் கண்டறிய, உரையாடல் பட்டியலிலிருந்து முக்கியச் சொல்லைக் கொண்டு தேடலாம்.

Sidekick உரையாடலுக்கான நினைவகத்தை முடக்கு

உங்களின் சேமிக்கப்பட்ட தகவலை Sidekick அணுகுவதையோ உரையாடலிலிருந்து புதிய விவரங்களைச் சேமிப்பதையோ நீங்கள் விரும்பவில்லை எனில், நினைவகத்தை முடக்கலாம். நினைவகம் முடக்கப்பட்டிருக்கும்போதும் Sidekick உங்கள் கேள்விகளுக்குப் பதிலளிக்கும், ஆனால் கடந்தகால விருப்பத்தேர்வுகளை நினைவுகூரவோ சமீபத்திய செயல்பாட்டைக் குறிப்பிடவோ தற்போதைய உரையாடலிலிருந்து புதிதாக எதையும் சேமிக்கவோ செய்யாது.

ஒரு உரையாடலில் முதல் மெசேஜை அனுப்புவதற்கு முன்பு மட்டுமே உங்களால் நினைவகத்தை முடக்க முடியும். நீங்கள் ஏற்கனவே ஒரு மெசேஜை அனுப்பியிருந்தால், புதிய உரையாடலைத் தொடங்கவும். நினைவகத்தை முடக்கிய பிறகு, அந்த உரையாடலுக்கு அதை மீண்டும் இயக்க முடியாது. நினைவகத்தை மீண்டும் பயன்படுத்த, புதிய உரையாடலைத் தொடங்கவும்.

படிகள்:

டெஸ்க்டாப்
  1. உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, Sidekick பகுதிக்குச் செல்லவும்.
  2. ஏற்கனவே ஒரு உரையாடல் திறந்திருந்தால், புதிய உரையாடலைத் தொடங்க New chat ஐகானைக் கிளிக் செய்யவும்.
  3. மெசேஜை அனுப்புவதற்கு முன், Memory settings ஐகானைக் கிளிக் செய்யவும்.
  4. நினைவக அம்சங்களை முடக்க, நினைவகம் என்பதற்குப் பக்கத்தில் உள்ள Toggle-On ஐகானைக் கிளிக் செய்யவும்.
மொபைல்
  1. Shopify செயலியிலிருந்து, உங்கள் ஸ்டோரின் ஏதேனும் ஒரு பக்கத்திற்குச் சென்று, Sidekick ஐகானைத் தட்டவும்.

  2. அரட்டைச் சாளரத்தில், Plus ஐகானைத் தட்டவும்.

  3. நினைவக அம்சங்களை முடக்க, நினைவகம் என்பதற்குப் பக்கத்தில் உள்ள Toggle-On ஐகானைத் தட்டவும்.

சேமிக்கப்பட்ட தகவல்களை நிர்வகி

Sidekick சேமித்து வைத்துள்ள தகவலை நீங்கள் எப்போது வேண்டுமானாலும் புதுப்பிக்கலாம் அல்லது அகற்றலாம். Sidekick என்ன நினைவில் வைத்துள்ளது என்பதை மதிப்பாய்வு செய்ய, எந்தவொரு உரையாடலிலும் அதைப் பற்றிய சுருக்கத்தைக் கேட்கவும். குறிப்பிட்ட விவரங்களை Sidekick மறக்க வேண்டுமென நீங்கள் விரும்பினால், அதை நேரடியாகக் கேளுங்கள், பிறகு Sidekick மாற்றங்களை உறுதிப்படுத்தும்.

இது உங்களின் சேமிக்கப்பட்ட விருப்பத்தேர்வுகளுக்கும் உரையாடல்களுக்கும் பொருந்தும். உங்களின் சமீபத்திய நிர்வாகிச் செயல்பாடு Sidekick இன் சேமிக்கப்பட்ட நினைவகத்தின் ஒரு பகுதியல்ல, எனவே அது சுருக்கத்தில் சேர்க்கப்படாது.

Sidekick உரையாடலின் பெயரை மாற்று

உங்கள் அரட்டை வரலாற்றில் பின்பு எளிதாகக் கண்டறிய, Sidekick உரையாடலின் பெயரை நீங்கள் மாற்றலாம்.

படிகள்:

  1. உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, Sidekick உரையாடல்கள் என்பதைக் கிளிக் செய்யவும் அல்லது Sidekick என்பதற்குச் சென்று முந்தைய உரையாடலைத் தேர்ந்தெடுக்கவும்.

  2. நீங்கள் மறுபெயரிட விரும்பும் உரையாடலுக்கான Horizontal menu ஐகானைக் கிளிக் செய்யவும்.

  3. பெயர் மாற்று என்பதைக் கிளிக் செய்து, உரையாடலுக்குப் புதிய தலைப்பை உள்ளிடவும்.

Sidekick உரையாடலை நீக்கு

Sidekick உரையாடலை நீங்கள் எப்போது வேண்டுமானாலும் நீக்கலாம். உரையாடலை நீக்குவது, உங்கள் அரட்டை வரலாற்றிலிருந்தும், முந்தைய ஊடாடல்கள் குறித்த Sidekick இன் நினைவகத்திலிருந்தும் அதை அகற்றிவிடும். உங்கள் சேமிக்கப்பட்ட விருப்பத்தேர்வுகள் மாற்றப்படாது.

படிகள்:

  1. உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, Sidekick உரையாடல்கள் என்பதைக் கிளிக் செய்யவும் அல்லது Sidekick என்பதற்குச் சென்று முந்தைய உரையாடலைத் தேர்ந்தெடுக்கவும்.

  2. நீங்கள் நீக்க விரும்பும் உரையாடலுக்கான Horizontal menu ஐகானைக் கிளிக் செய்யவும்.

  3. நீக்கு என்பதைக் கிளிக் செய்யவும்.