B2B-இல் அளவு விதிகள் மற்றும் அளவு அடிப்படையிலான விலை நிர்ணயத்தை அமைத்தல்

B2B ஆர்டர்களுக்கான சில அளவுத் தேவைகள் அல்லது விலைக் குறைப்புகளை அமைக்க, அளவு விதிகள் மற்றும் அளவு அடிப்படையிலான விலை நிர்ணயத்தை நீங்கள் பயன்படுத்தலாம்:

  • ஒரு தயாரிப்பைக் குறிப்பிட்ட அதிகரிப்புகளில் விற்க அல்லது ஒரே நேரத்தில் அந்தத் தயாரிப்பு வாங்கக்கூடிய குறைந்தபட்ச அல்லது அதிகபட்ச வரம்பை அமைக்க, அளவு விதிகளைப் பயன்படுத்தலாம்
  • அதிக அளவில் தயாரிப்புகளை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு விலைக் குறைப்புகளை வழங்க, அளவு அடிப்படையிலான விலை நிர்ணயத்தைப் பயன்படுத்தலாம்.

அளவு அடிப்படையிலான விலை நிர்ணயம் மற்றும் அளவு விதிகளைச் சேர்த்தோ தனியாகவோ பயன்படுத்தலாம்.

அளவு விதிகளைப் புரிந்துகொள்ளுதல்

உங்கள் தயாரிப்புகளுக்கு அதிகரிப்பு அளவு விதிகளை அல்லது குறைந்தபட்ச அல்லது அதிகபட்ச அளவு விதிகளை நீங்கள் அமைக்கலாம்.

அதிகரிப்பு அளவு விதிகள்

நீங்கள் ஒரு தயாரிப்பைக் குறிப்பிட்ட அதிகரிப்புகளில் விற்க விரும்பினால், அதிகரிப்பு அளவு விதிகளைப் பயன்படுத்தலாம். எடுத்துக்காட்டாக, உங்கள் தயாரிப்புகள் 10-இன் மடங்குகளில் பெட்டிகளில் அடைக்கப்பட்டால், உங்கள் அதிகரிப்பு விதியை 10 என அமைக்கலாம். இதனால் வாடிக்கையாளர்கள் ஒரே நேரத்தில் 10, 20, 30 தயாரிப்புகளை வாங்க வேண்டும்.

ஒரு தயாரிப்பை வாங்கக்கூடிய இயல்புநிலை அதிகரிப்பு 1 ஆகும். அதிகரிப்பு அளவு விதிகள் 1 அல்லது அதற்கு மேற்பட்ட நேர்மறை முழு எண்ணாக இருக்க வேண்டும். வெவ்வேறு தயாரிப்புகளுக்கு வெவ்வேறு அதிகரிப்பு விதிகளை நீங்கள் அமைக்கலாம்.

எண்ணிக்கை அதிகரிப்பு விதிகள் தயாரிப்பு மாறுபாடுகளுக்குப் பொருந்தும். எடுத்துக்காட்டாக, நீலம் மற்றும் சாம்பல் நிற மாறுபாடுகளில் தொப்பியை விற்பனை செய்தால், சாம்பல் நிற மாறுபாட்டையும் நீல நிற மாறுபாட்டையும் தலா 10 இன் மடங்குகளில் வாடிக்கையாளர்கள் வாங்க வேண்டும் என நிர்ணயிக்கலாம். 10 தொப்பிகள் என்ற எண்ணிக்கை அதிகரிப்பைப் பூர்த்தி செய்ய, வாடிக்கையாளர்கள் 5 சாம்பல் நிறத் தொப்பிகளையும் 5 நீல நிறத் தொப்பிகளையும் சேர்த்து வாங்க முடியாது.

குறைந்தபட்ச அல்லது அதிகபட்ச அளவு விதிகள்

ஒரே நேரத்தில் வாங்கக்கூடிய உருப்படியின் குறைந்தபட்ச எண்ணிக்கையை வரையறுக்க, குறைந்தபட்ச அளவு விதிகள் உங்களை அனுமதிக்கின்றன. ஒரே நேரத்தில் வாங்கக்கூடிய தயாரிப்பின் அதிகபட்ச எண்ணிக்கையை வரையறுக்க, அதிகபட்ச அளவு விதிகள் உங்களை அனுமதிக்கின்றன. குறைந்தபட்ச அளவு விதி, அதிகபட்ச அளவு விதி அல்லது இரண்டையுமே நீங்கள் அமைக்கலாம்.

குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச அளவு விதிகள் தயாரிப்பு மாறுபாடுகளுக்குப் பொருந்தும். எடுத்துக்காட்டாக, நீலம் மற்றும் சாம்பல் நிற மாறுபாடுகளில் தொப்பியை விற்பனை செய்தால், நீல நிற மாறுபாட்டில் குறைந்தது 10 தொப்பிகளையும் சாம்பல் நிற மாறுபாட்டில் குறைந்தது 10 தொப்பிகளையும் வாடிக்கையாளர் வாங்க வேண்டும் என நிர்ணயிக்கலாம். குறைந்தபட்ச அளவான 10 தொப்பிகளை எட்டுவதற்கு, வாடிக்கையாளர்கள் 5 சாம்பல் நிறத் தொப்பிகளையும் 5 நீல நிறத் தொப்பிகளையும் சேர்த்து வாங்க முடியாது.

ஒரு தயாரிப்புக்கான குறைந்தபட்ச ஆர்டர் அளவை நீங்கள் அமைத்தால், வாடிக்கையாளர்கள் தங்கள் கார்ட்டில் எத்தனை உருப்படிகளைச் சேர்க்க வேண்டும் என்பதைத் தெரிந்துகொள்ளும் வகையில், உங்கள் தீம் தயாரிப்புப் பக்கத்தில் அந்தக் குறைந்தபட்ச அளவைக் காட்டுகிறதா என்பதை உறுதிசெய்யவும்.

கேட்டலாக்குகள் மூலம் தயாரிப்புகளுக்கான அளவு விதிகளை அமைத்தல்

உங்கள் Shopify நிர்வாகியில் உள்ள கேட்டலாக்குகள் பிரிவிலோ CSV-ஐ இறக்குமதி செய்வதன் மூலமாகவோ நீங்கள் அளவு விதிகளை அமைக்கலாம்.

படிகள்:

  1. உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, சந்தைகள் > கேட்டலாக்குகள் என்பதற்குச் செல்லவும்.

  2. நீங்கள் திருத்த விரும்பும் கேட்டலாக்கைக் கிளிக் செய்யவும்.

  3. தயாரிப்புகள் மற்றும் விலை நிர்ணயம் பிரிவில், நிர்வகி > தயாரிப்புகள் மற்றும் விலை நிர்ணயத்தை நிர்வகி என்பதைக் கிளிக் செய்யவும்.

  4. ஒரு தயாரிப்புக்கு அல்லது ஒரு குறிப்பிட்ட தயாரிப்பு மாறுபாட்டிற்கு அளவு விதிகளை அமைக்கத் தேர்வுசெய்யவும்:

    1. ஒரு தயாரிப்பின் அனைத்து மாறுபாடுகளுக்கும் அளவு விதிகளை அமைக்க, நீங்கள் திருத்த விரும்பும் தயாரிப்பின் மீது கர்சரை வைக்கவும்.
    2. குறிப்பிட்ட தயாரிப்பு மாறுபாட்டிற்கு அளவு விதிகளை அமைக்க, தயாரிப்புப் பெயரின் கீழேயுள்ள மாறுபாடுகளுக்கான இணைப்பைக் கிளிக் செய்து, நீங்கள் திருத்த விரும்பும் தயாரிப்பு மாறுபாட்டின் மீது கர்சரை வைக்கவும்.
  5. அளவு விதிகள் நெடுவரிசையில், + சேர் என்பதைக் கிளிக் செய்யவும்.

  6. அளவு விதிகள் மற்றும் அளவு அடிப்படையிலான விலை நிர்ணயத்தைத் திருத்து எனும் டயலாக்கில், பின்வருவனவற்றைச் செய்யவும்:

    1. அதிகரிப்பு புலத்தில், ஒரு தயாரிப்புக்கான அதிகரிப்பு அளவை உள்ளிடவும்.
    2. குறைந்தபட்சம் புலத்தில், வாடிக்கையாளர் வாங்க வேண்டிய ஒரு தயாரிப்பின் குறைந்தபட்ச அளவை உள்ளிடவும்.
    3. ஒரு ஆர்டரில் வாடிக்கையாளர் வாங்கக்கூடிய மாறுபாட்டின் அளவைக் கட்டுப்படுத்த, அதிகபட்சம் புலத்தில் ஒரு தயாரிப்புக்கான அதிகபட்ச அளவை உள்ளிடவும்.
    4. உங்கள் அளவு விதிகளை மதிப்பாய்வு செய்துவிட்டு, முடிந்தது என்பதைக் கிளிக் செய்யவும்.
  7. சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.

அளவு அடிப்படையிலான விலை நிர்ணயத்தைப் புரிந்துகொள்ளுதல்

ஒரே ஆர்டரில் வாடிக்கையாளர்கள் அதிக அளவிலான தயாரிப்பை வாங்கும்போது அவர்களுக்குக் கூடுதல் விலைக் குறைப்புகளை வழங்க, அளவு அடிப்படையிலான விலை நிர்ணயம் உங்களை அனுமதிக்கிறது. ஒவ்வொரு மாறுபாட்டிற்கும் பயன்படுத்தப்படும் வகையில், ஒரு தயாரிப்புக்கு நீங்கள் 10 விலைக் குறைப்புகள் வரை சேர்க்கலாம்.

விலை குறைப்பைப் பெற, வாடிக்கையாளர்கள் ஒவ்வொரு மாறுபாட்டிற்கும் தேவையான எண்ணிக்கையை எட்ட வேண்டும். எடுத்துக்காட்டாக, ஒரு தொப்பி நீலம் மற்றும் சாம்பல் நிற மாறுபாடுகளில் விற்கப்பட்டால், அளவு அடிப்படையிலான விலை நிர்ணயத்தைப் பெற வாடிக்கையாளர் குறைந்தது 20 நீல நிறத் தொப்பிகளை ஆர்டர் செய்ய வேண்டும். அளவு அடிப்படையிலான விலை நிர்ணயத்திற்கான பின்வரும் எடுத்துக்காட்டைப் பார்க்கவும்.

அளவு அடிப்படையிலான விலை நிர்ணயத்திற்கான எடுத்துக்காட்டு
அமைப்புஅளவுயூனிட் விலை
குறைந்தபட்சம்1$20 USD
விலைக் குறைப்பு 120$18.50 USD
விலைக் குறைப்பு 250$17.75 USD
விலைக் குறைப்பு 3100$16 USD

கேட்டலாக்குகள் மூலம் தயாரிப்புகளுக்கான அளவு அடிப்படையிலான விலை நிர்ணயத்தை அமைத்தல்

உங்கள் Shopify நிர்வாகியில் உள்ள கேட்டலாக்குகள் பிரிவிலோ CSV-ஐ இறக்குமதி செய்வதன் மூலமாகவோ நீங்கள் அளவு அடிப்படையிலான விலை நிர்ணயத்தை அமைக்கலாம்.

படிகள்:

  1. உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, சந்தைகள் > கேட்டலாக்குகள் என்பதற்குச் செல்லவும்.

  2. நீங்கள் திருத்த விரும்பும் கேட்டலாக்கைக் கிளிக் செய்யவும்.

  3. தயாரிப்புகள் மற்றும் விலை நிர்ணயம் பிரிவில், நிர்வகி > தயாரிப்புகள் மற்றும் விலை நிர்ணயத்தை நிர்வகி என்பதைக் கிளிக் செய்யவும்.

  4. ஒரு தயாரிப்புக்கு அல்லது ஒரு குறிப்பிட்ட தயாரிப்பு மாறுபாட்டிற்கு அளவு அடிப்படையிலான விலை நிர்ணயத்தை அமைக்கத் தேர்வுசெய்யவும்:

    1. ஒரு தயாரிப்பின் அனைத்து மாறுபாடுகளுக்கும் அளவு அடிப்படையிலான விலை நிர்ணயத்தை அமைக்க, நீங்கள் திருத்த விரும்பும் தயாரிப்பின் மீது கர்சரை வைக்கவும்.
    2. குறிப்பிட்ட தயாரிப்பு மாறுபாட்டிற்கு அளவு அடிப்படையிலான விலை நிர்ணயத்தை அமைக்க, தயாரிப்புப் பெயரின் கீழேயுள்ள மாறுபாடுகளுக்கான இணைப்பைக் கிளிக் செய்து, நீங்கள் திருத்த விரும்பும் தயாரிப்பு மாறுபாட்டின் மீது கர்சரை வைக்கவும்.
  5. அளவு அடிப்படையிலான விலை நிர்ணயம் நெடுவரிசையில், + சேர் என்பதைக் கிளிக் செய்யவும்.

  6. அளவு விதிகள் மற்றும் அளவு அடிப்படையிலான விலை நிர்ணயத்தைத் திருத்து எனும் டயலாக்கில், பின்வருவனவற்றைச் செய்யவும்:

    1. அளவு அடிப்படையிலான விலை நிர்ணயம் பிரிவில், + அளவு விலைக் குறைப்புகளைச் சேர் என்பதைக் கிளிக் செய்யவும்.
    2. அளவு பிரிவில், முதல் விலைக் குறைப்பிற்கான விலையை உள்ளிடவும். விலைக் குறைப்பு அளவுகள், குறைந்தபட்ச ஆர்டர் அளவை விட அதிகமாகவும் அதேநேரம் நீங்கள் அளவு விதிகளில் அமைத்த அதிகரிப்பு அளவின் மடங்காகவும் இருக்க வேண்டும்.
    3. விருப்பத்திற்குரியது: ஒரே தயாரிப்புக்குப் பல விலைக் குறைப்புகளைச் சேர்க்க, குறைப்பைச் சேர் என்பதைக் கிளிக் செய்து, கூடுதல் விலைக் குறைப்புகளுக்கான ஒரு விலையை உள்ளிடவும்.
    4. உங்கள் அளவு அடிப்படையிலான விலை நிர்ணயத்தை மதிப்பாய்வு செய்துவிட்டு, முடிந்தது என்பதைக் கிளிக் செய்யவும்.
  7. சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.