B2B-இல் செக்அவுட் அமைப்புகளை நிர்வகித்தல்
செக்அவுட்டில் ஆர்டர்கள் எவ்வாறு சமர்ப்பிக்கப்படுகின்றன என்பதையும், ஒரு ஆர்டருக்கான ஷிப்பிங் முகவரியைச் செக்அவுட்டில் வாடிக்கையாளர்கள் திருத்த முடியுமா என்பதையும் கட்டுப்படுத்த, நிறுவனங்கள் மற்றும் நிறுவன இருப்பிடங்களில் உள்ள செக்அவுட் அமைப்புகளை நீங்கள் பயன்படுத்தலாம். செக்அவுட்டில் தானாகவே ஆர்டர்களைச் செயல்படுத்துவதா அல்லது உங்கள் மதிப்பாய்வுக்காக வரைவாக ஆர்டர்களைச் சேமிப்பதா என்பதை நீங்கள் தேர்வுசெய்யலாம். ஆர்டர்களை இறுதி செய்வதற்கு முன்பு அவற்றை மதிப்பாய்வு செய்ய விரும்பினால், அவற்றை வரைவுகளாகச் சமர்ப்பிக்கும்படி அமைக்கலாம்.
இயல்பாக, நிறுவன இருப்பிடத்தின் முகவரி நிலையானதாக இருக்கும், அதனால் வாடிக்கையாளர்கள் செக்அவுட்டில் அந்த முகவரியை மட்டுமே பயன்படுத்த முடியும். உங்கள் வாடிக்கையாளர்களுக்கு மேலும் நெகிழ்வுத்தன்மையை வழங்க, எந்தவொரு முகவரிக்கும் அனுப்புவதற்கான விருப்பத்தேர்வை நீங்கள் செயல்படுத்தலாம்.
இந்தப் பக்கத்தில்
செக்அவுட்டில் மதிப்பாய்வு செய்ய ஆர்டர்களை வரைவுகளாகச் சமர்ப்பித்தல்
மதிப்பாய்வு செய்ய, ஆர்டர்களை வரைவுகளாகச் சமர்ப்பிக்கும்படி அமைப்பு அமைக்கப்பட்டிருக்கும்போது, அந்த நிறுவன இருப்பிடத்தின் மூலம் செய்யப்படும் ஒவ்வொரு ஆர்டரும் வரைவு ஆர்டராகச் சமர்ப்பிக்கப்படும். ஒவ்வொரு நிறுவன இருப்பிடத்திலிருந்தும், நிறுவன விவரப் பக்கத்திலிருக்கும் நிறுவனத்தின் அனைத்து இருப்பிடங்களுக்கும் மொத்தமாக அல்லது நிறுவனங்கள் என்பதிலிருந்து பல நிறுவனங்களுக்கும் இந்த அமைப்பை நிர்வகிக்கலாம்.
ஆர்டர்களை வரைவுகளாகச் சமர்ப்பிப்பதற்கான வாடிக்கையாளர் அனுபவம்
மதிப்பாய்வு செய்ய ஆர்டர்களை வரைவுகளாகச் சமர்ப்பிக்கும்படி அமைப்பு அமைக்கப்பட்டிருக்கும்போது, அந்த நிறுவன இருப்பிடத்தின் வாடிக்கையாளர்களுக்குச் செக்அவுட்டில் ஒரு பேனர் காட்டப்பட்டு, ஆர்டர் உறுதிசெய்யப்படும்போது பேமெண்ட் செலுத்த வேண்டியிருக்கும் என்று தெரிவிக்கப்படும். செக்அவுட்டில் பேமெண்ட் எதுவும் வசூலிக்கப்படாது.
சேமிக்கப்பட்ட கிரெடிட் கார்டை உள்ளிடுவதற்கோ பின்னர் ஒரு கட்டண முறையைத் தேர்வுசெய்வதற்கோ வாடிக்கையாளர்களுக்கு விருப்பத்தேர்வு உள்ளது. உங்கள் வாடிக்கையாளர்கள் சேமிக்கப்பட்ட கிரெடிட் கார்டை உள்ளிட்டால், நீங்கள் ஆர்டரை உறுதிசெய்த பிறகு, Shopify நிர்வாகியிலிருந்து கார்டுக்குக் கட்டணம் வசூலிக்கலாம். மாற்றாக, ஆர்டரை உறுதிசெய்த பிறகு, பேமெண்டை வசூலிக்க வாடிக்கையாளருக்கு நீங்கள் விலைப்பட்டியலை அனுப்பலாம் அல்லது வாடிக்கையாளர் கணக்குகளிலுள்ள ஆர்டருக்குச் சென்று இப்போதே செலுத்து என்பதைக் கிளிக் செய்வதன் மூலம் வாடிக்கையாளர் பேமெண்டைச் செலுத்தலாம்.
ஒரு நிறுவன இருப்பிடத்திற்கான ஆர்டர் சமர்ப்பிப்பு அமைப்பை உள்ளமைத்தல்
ஒரு நிறுவன இருப்பிடத்திற்கு மதிப்பாய்வு செய்ய, எல்லா ஆர்டர்களையும் வரைவுகளாகச் சமர்ப்பிக்கும்படி நீங்கள் அமைக்கலாம்.
படிகள்:
டெஸ்க்டாப்
உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, வாடிக்கையாளர்கள் > நிறுவனங்கள் என்பதற்குச் செல்லவும்.
ஆர்டர்களை வரைவுகளாகச் சமர்ப்பிக்கக் கோர விரும்பும் நிறுவனத்தைக் கிளிக் செய்யவும்.
இருப்பிடங்கள் பிரிவில், ஆர்டர்களை வரைவுகளாகச் சமர்ப்பிக்கக் கோர விரும்பும் நிறுவனத்தின் இருப்பிடத்தைக் கிளிக் செய்யவும்.
செக்அவுட் பிரிவில்,
ஐகானைக் கிளிக் செய்யவும்.
ஆர்டர் சமர்ப்பிப்பு பிரிவில், மதிப்பாய்வு செய்ய அனைத்து ஆர்டர்களையும் வரைவுகளாகச் சமர்ப்பி என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.
மொபைல்
Shopify செயலியிலிருந்து,
ஐகானைத் தட்டவும்.
வாடிக்கையாளர்கள் மெனுவில்,
ஐகானைத் தட்டி, நிறுவனங்கள் என்பதைத் தட்டவும்.
இருப்பிடங்கள் பிரிவில், செக்அவுட்டின்போது ஆர்டர்களை வரைவு ஆர்டர்களாக வழங்கக் கோர விரும்பும் நிறுவனத்தின் இருப்பிடத்தைத் தட்டவும்.
செக்அவுட் பிரிவில்,
ஐகானைத் தட்டவும்.
ஆர்டர் சமர்ப்பிப்பு பிரிவில், மதிப்பாய்வு செய்ய அனைத்து ஆர்டர்களையும் வரைவுகளாகச் சமர்ப்பி என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
சேமி அல்லது ✓ என்பதைத் தட்டவும்.
ஒரு நிறுவனத்திற்கான ஆர்டர் சமர்ப்பிப்பு அமைப்பை உள்ளமைத்தல்
ஒரு நிறுவனம் மற்றும் அதன் அனைத்து இருப்பிடங்களுக்கும் மதிப்பாய்வு செய்ய, எல்லா ஆர்டர்களையும் வரைவாகச் சமர்ப்பிக்கும்படி நீங்கள் அமைக்கலாம்.
படிகள்:
டெஸ்க்டாப்
உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, வாடிக்கையாளர்கள் > நிறுவனங்கள் என்பதற்குச் செல்லவும்.
ஆர்டர்களை வரைவுகளாகச் சமர்ப்பிக்கக் கோர விரும்பும் நிறுவனத்தைக் கிளிக் செய்யவும்.
செக்அவுட் பிரிவில்,
ஐகானைக் கிளிக் செய்யவும்.
ஆர்டர் சமர்ப்பிப்பு பிரிவில், மதிப்பாய்வு செய்ய அனைத்து ஆர்டர்களையும் வரைவுகளாகச் சமர்ப்பி என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.
மொபைல்
Shopify செயலியிலிருந்து,
ஐகானைத் தட்டவும்.
வாடிக்கையாளர்கள் மெனுவில்,
ஐகானைத் தட்டி, நிறுவனங்கள் என்பதைத் தட்டவும்.
ஆர்டர்களை வரைவுகளாகச் சமர்ப்பிக்கக் கோர விரும்பும் நிறுவனத்தைத் தட்டவும்.
செக்அவுட் பிரிவில்,
ஐகானைத் தட்டவும்.
ஆர்டர் சமர்ப்பிப்பு பிரிவில், மதிப்பாய்வு செய்ய அனைத்து ஆர்டர்களையும் வரைவுகளாகச் சமர்ப்பி என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
சேமி அல்லது ✓ என்பதைத் தட்டவும்.
நிறுவனங்களுக்கான ஆர்டர் சமர்ப்பிப்பு அமைப்பை மொத்தமாக உள்ளமைத்தல்
மொத்தமாகப் பல நிறுவனங்களுக்கும் அவற்றின் அனைத்து இருப்பிடங்களுக்கும் மதிப்பாய்வு செய்ய, எல்லா ஆர்டர்களையும் வரைவாகச் சமர்ப்பிக்கும்படி நீங்கள் அமைக்கலாம்.
படிகள்:
உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, வாடிக்கையாளர்கள் > நிறுவனங்கள் என்பதற்குச் செல்லவும்.
ஆர்டர்களை வரைவுகளாகச் சமர்ப்பிக்கக் கோர விரும்பும் நிறுவனங்களைத் தேர்ந்தெடுக்கவும்.
… என்பதைக் கிளிக் செய்து, செக்அவுட் அமைப்புகளைத் திருத்து என்பதைக் கிளிக் செய்யவும்.
ஆர்டர் சமர்ப்பிப்பு பிரிவில், மதிப்பாய்வு செய்ய அனைத்து ஆர்டர்களையும் வரைவுகளாகச் சமர்ப்பி என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.
ஒருமுறை பயன்படுத்தும் முகவரிக்கு அனுப்ப வாடிக்கையாளர்களை அனுமதித்தல்
நிறுவன இருப்பிடத்தின் முகவரி இயல்பாகவே நிலையானதாக இருக்கும், அதனால் வாடிக்கையாளர்கள் செக்அவுட்டில் அந்த முகவரியை மட்டுமே பயன்படுத்த முடியும். உங்கள் வாடிக்கையாளர்களுக்கு மேலும் நெகிழ்வுத்தன்மையை வழங்க, எந்தவொரு முகவரிக்கும் அனுப்புவதற்கான விருப்பத்தேர்வை நீங்கள் செயல்படுத்தலாம். ஒவ்வொரு நிறுவன இருப்பிடத்திலிருந்தும், நிறுவன விவரப் பக்கத்திலிருக்கும் நிறுவனத்தின் அனைத்து இருப்பிடங்களுக்கும் மொத்தமாக அல்லது நிறுவனங்கள் பக்கத்திலிருந்து பல நிறுவனங்களுக்கும் இந்த அமைப்பை நிர்வகிக்கலாம்.
இந்த அமைப்பை நீங்கள் செயல்படுத்தும்போது, நிறுவனத்தின் இருப்பிட ஷிப்பிங் முகவரியிலிருந்து வேறுபட்ட ஒருமுறை பயன்படுத்தும் ஷிப்பிங் முகவரியைச் செக்அவுட்டின்போது வாடிக்கையாளர்கள் உள்ளிடலாம். வாடிக்கையாளர் சேர்க்கும் குறிப்பிட்ட ஆர்டருக்கு மட்டுமே ஒருமுறை பயன்படுத்தும் முகவரி பயன்படுத்தப்படும், மேலும் எதிர்காலப் பயன்பாட்டிற்காக அது சேமிக்கப்படாது. ஒரு நிறுவனத்தின் இருப்பிடத்திற்கு ஒரு ஷிப்பிங் முகவரியை மட்டுமே சேமிக்க முடியும். ஆர்டர் செய்யப்பட்ட பிறகு, உங்கள் வாடிக்கையாளர்களால் அதில் ஷிப்பிங் முகவரியைத் திருத்த முடியாது.
ஒரு நிறுவன இருப்பிடத்திற்கு ஒருமுறை பயன்படுத்தும் ஷிப்பிங் முகவரிகளை அனுமதித்தல்
ஒரு நிறுவன இருப்பிடத்திற்கு ஒருமுறை பயன்படுத்தும் ஷிப்பிங் முகவரிகளை அனுமதிக்கும்படி நீங்கள் அமைக்கலாம்.
படிகள்:
டெஸ்க்டாப்
உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, வாடிக்கையாளர்கள் > நிறுவனங்கள் என்பதற்குச் செல்லவும்.
வாடிக்கையாளர்கள் ஏதேனும் ஒருமுறை பயன்படுத்தும் முகவரிக்கு அனுப்ப அனுமதிக்க விரும்பும் நிறுவனத்தைக் கிளிக் செய்யவும்
இருப்பிடங்கள் பிரிவில், செக்அவுட்டில் ஷிப்பிங் முகவரியை உள்ளிட B2B வாடிக்கையாளர்களை அனுமதிக்க விரும்பும் நிறுவனத்தின் இருப்பிடத்தைக் கிளிக் செய்யவும்.
செக்அவுட் பிரிவில்,
ஐகானைக் கிளிக் செய்யவும்.
அனுப்ப வேண்டிய முகவரி பிரிவில், ஏதேனும் ஒருமுறை பயன்படுத்தும் முகவரிக்கு அனுப்ப வாடிக்கையாளர்களை அனுமதி என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.
மொபைல்
Shopify செயலியிலிருந்து,
ஐகானைத் தட்டவும்.
வாடிக்கையாளர்கள் மெனுவில்,
ஐகானைத் தட்டி, நிறுவனங்கள் என்பதைத் தட்டவும்.
இருப்பிடங்கள் பிரிவில், செக்அவுட்டில் ஷிப்பிங் முகவரியை உள்ளிட B2B வாடிக்கையாளர்களை அனுமதிக்க விரும்பும் நிறுவனத்தின் இருப்பிடத்தைத் தட்டவும்.
செக்அவுட் பிரிவில்,
ஐகானைத் தட்டவும்.
அனுப்ப வேண்டிய முகவரி பிரிவில், ஏதேனும் ஒருமுறை பயன்படுத்தும் முகவரிக்கு அனுப்ப வாடிக்கையாளர்களை அனுமதி என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
சேமி அல்லது ✓ என்பதைத் தட்டவும்.
ஒரு நிறுவனத்திற்கு ஒருமுறை பயன்படுத்தும் ஷிப்பிங் முகவரிகளை அனுமதித்தல்
ஒரு நிறுவனத்திற்கும் அதன் அனைத்து இருப்பிடங்களுக்கும் ஒருமுறை பயன்படுத்தும் ஷிப்பிங் முகவரிகளை அனுமதிக்கும்படி நீங்கள் அமைக்கலாம்.
படிகள்:
டெஸ்க்டாப்
உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, வாடிக்கையாளர்கள் > நிறுவனங்கள் என்பதற்குச் செல்லவும்.
வாடிக்கையாளர்கள் ஏதேனும் ஒருமுறை பயன்படுத்தும் முகவரிக்கு அனுப்ப அனுமதிக்க விரும்பும் நிறுவனத்தைக் கிளிக் செய்யவும்.
செக்அவுட் பிரிவில்,
ஐகானைக் கிளிக் செய்யவும்.
அனுப்ப வேண்டிய முகவரி பிரிவில், ஏதேனும் ஒருமுறை பயன்படுத்தும் முகவரிக்கு அனுப்ப வாடிக்கையாளர்களை அனுமதி என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.
மொபைல்
Shopify செயலியிலிருந்து,
ஐகானைத் தட்டவும்.
வாடிக்கையாளர்கள் மெனுவில்,
ஐகானைத் தட்டி, நிறுவனங்கள் என்பதைத் தட்டவும்.
வாடிக்கையாளர்கள் ஏதேனும் ஒருமுறை பயன்படுத்தும் முகவரிக்கு அனுப்ப அனுமதிக்க விரும்பும் நிறுவனத்தைத் தட்டவும்.
செக்அவுட் பிரிவில்,
ஐகானைத் தட்டவும்.
அனுப்ப வேண்டிய முகவரி பிரிவில், ஏதேனும் ஒருமுறை பயன்படுத்தும் முகவரிக்கு அனுப்ப வாடிக்கையாளர்களை அனுமதி என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
சேமி அல்லது ✓ என்பதைத் தட்டவும்.
பல நிறுவனங்களுக்கு ஒருமுறை பயன்படுத்தும் ஷிப்பிங் முகவரிகளை அனுமதித்தல்
மொத்தமாகப் பல நிறுவனங்களுக்கும் அவற்றின் அனைத்து இருப்பிடங்களுக்கும் ஒருமுறை பயன்படுத்தும் ஷிப்பிங் முகவரிகளை அனுமதிக்கும்படி நீங்கள் அமைக்கலாம்.
உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, வாடிக்கையாளர்கள் > நிறுவனங்கள் என்பதற்குச் செல்லவும்.
வாடிக்கையாளர்கள் ஏதேனும் ஒருமுறை பயன்படுத்தும் முகவரிக்கு அனுப்ப அனுமதிக்க விரும்பும் நிறுவனங்களைத் தேர்ந்தெடுக்கவும்.
> செக்அவுட் அமைப்புகளைத் திருத்து என்பதைக் கிளிக் செய்யவும்.
அனுப்ப வேண்டிய முகவரி பிரிவில், ஏதேனும் ஒருமுறை பயன்படுத்தும் முகவரிக்கு அனுப்ப வாடிக்கையாளர்களை அனுமதி என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.