வரைவு ஆர்டர்களைப் பயன்படுத்தி B2B ஆர்டர்களை உருவாக்குதல்
உங்கள் வாடிக்கையாளர்கள் உங்களின் ஆன்லைன் ஸ்டோர் மூலமாக இல்லாமல், தொலைபேசி அல்லது மின்னஞ்சல் மூலம் நேரடியாக உங்களுக்கு அனுப்பும் ஆர்டர்களுக்கு வரைவு ஆர்டர்களை நீங்கள் உருவாக்கலாம்.
ஒரு வரைவு ஆர்டரில் ஒரு B2B வாடிக்கையாளரும் நிறுவனத்தின் இருப்பிடமும் ஒதுக்கப்பட்டிருந்தால், அதற்கான விலைகள், கட்டண விதிமுறைகள் மற்றும் செக்அவுட் விருப்பங்கள் ஆகியவை அந்த நிறுவனத்திற்கான அமைப்புகளைத் தானாகவே பிரதிபலிக்கும்.
இந்தக் கட்டுரையில், B2B-இல் வரைவு ஆர்டர்களை எப்படி உருவாக்குவது, B2B வரைவு ஆர்டரில் விலை நிர்ணயத்தை எப்படிப் பூட்டுவது மற்றும் திறப்பது, B2B வரைவு ஆர்டர்களுக்கு உள்ளூர் டெலிவரி அல்லது ஸ்டோரில் பிக்அப் ஆகியவற்றை எப்படிச் சேர்ப்பது என்பதை நீங்கள் அறிந்துகொள்ளலாம்.
இந்தப் பக்கத்தில்
ஒரு நிறுவனத்திற்கான வரைவு ஆர்டரை உருவாக்குதல்
ஒரு நிறுவனம் உங்கள் Shopify ஸ்டோருக்கு வெளியே, மின்னஞ்சல் அல்லது தொலைபேசி மூலமாக உங்களுக்கு ஆர்டரைச் சமர்ப்பித்தால், அவர்களின் கொள்முதலுக்கான வரைவு ஆர்டரை நீங்கள் உருவாக்கலாம்.
வரைவு ஆர்டரை உருவாக்கி, உடனடியாகப் பேமெண்ட்டை வசூலிக்கவும்
உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, ஆர்டர்கள் > வரைவுகள் என்பதற்குச் செல்லவும்.
ஆர்டரை உருவாக்கு என்பதைக் கிளிக் செய்யவும்.
வாடிக்கையாளர் பிரிவில், ஒரு B2B வாடிக்கையாளரைத் தேர்ந்தெடுக்கவும்.
ஆர்டருக்கான நிறுவனத்தின் இருப்பிடத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
தயாரிப்புகளைச் சேர்க்க, தயாரிப்பைத் தேடி, சேர் என்பதைக் கிளிக் செய்யவும்.
விருப்பத்திற்குரியது: உங்கள் வரைவு ஆர்டரில் கொள்முதல் ஆர்டர் எண்ணைச் சேர்க்க, பின்வரும் படிகளை நிறைவுசெய்யவும்:
- PO எண் பிரிவில்,
ஐகானைக் கிளிக் செய்யவும்.
- கொள்முதல் ஆர்டர் எண்ணை உள்ளிட்டு, முடிந்தது என்பதைக் கிளிக் செய்யவும்.
- PO எண் பிரிவில்,
பேமெண்ட்டை வசூலி என்பதைக் கிளிக் செய்யவும்.
பின்வரும் கட்டண முறைகளில் ஒன்றைப் பயன்படுத்தி உங்கள் வரைவு ஆர்டருக்கான பேமெண்ட்டை வசூலிக்கவும்:
- வாடிக்கையாளர் தமது கட்டண முறையாக கிரெடிட் கார்டைப் பயன்படுத்தினால், கிரெடிட் கார்டை உள்ளிடு என்பதைக் கிளிக் செய்து, கிரெடிட் கார்டு தகவலை உள்ளிட்டு, பேமெண்ட்டைச் செயல்படுத்தவும்.
- காசோலை, ரொக்கம் அல்லது மணி ஆர்டர் போன்ற வேறு கட்டண முறையை வாடிக்கையாளர் பயன்படுத்தினால், செலுத்தப்பட்டது எனக் குறி என்பதைக் கிளிக் செய்யவும்.
- வாடிக்கையாளரிடம் பாதுகாப்பாகச் சேமிக்கப்பட்ட கிரெடிட் கார்டு இருந்தால், கட்டணம் விதிக்க வேண்டிய கிரெடிட் கார்டைக் கிளிக் செய்து, அதன்பிறகு தேர்ந்தெடுக்கப்பட்ட கார்டில், காட்டப்படும் தொகையை வசூலிக்க கட்டணம் வசூலி என்பதைக் கிளிக் செய்யவும்.
ஆர்டரை உருவாக்கு என்பதைக் கிளிக் செய்யவும்.
வரைவு ஆர்டரை உருவாக்கி, பேமெண்ட் செலுத்த உங்கள் வாடிக்கையாளருக்கு ஒரு விலைப்பட்டியலை அனுப்பவும்
உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, ஆர்டர்கள் > வரைவுகள் என்பதற்குச் செல்லவும்.
ஆர்டரை உருவாக்கு என்பதைக் கிளிக் செய்யவும்.
வாடிக்கையாளர் பிரிவில், ஒரு B2B வாடிக்கையாளரைத் தேர்ந்தெடுக்கவும்.
ஆர்டருக்கான நிறுவனத்தின் இருப்பிடத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
தயாரிப்புகளைச் சேர்க்க, தயாரிப்பைத் தேடி, சேர் என்பதைக் கிளிக் செய்யவும்.
விருப்பத்திற்குரியது: உங்கள் வரைவு ஆர்டரில் கொள்முதல் ஆர்டர் எண்ணைச் சேர்க்க, பின்வரும் படிகளை நிறைவுசெய்யவும்:
- PO எண் பிரிவில்,
ஐகானைக் கிளிக் செய்யவும்.
- கொள்முதல் ஆர்டர் எண்ணை உள்ளிட்டு, முடிந்தது என்பதைக் கிளிக் செய்யவும்.
- PO எண் பிரிவில்,
விலைப்பட்டியலை அனுப்ப, பின்வரும் படிகளை நிறைவுசெய்யவும்:
- பேமெண்ட் பிரிவில், விலைப்பட்டியலை அனுப்பு என்பதைக் கிளிக் செய்யவும்.
- விருப்பத்திற்குரியது: விலைப்பட்டியலில் ஒரு தனிப்பயன் செய்தியைச் சேர்க்கவும்.
- விருப்பத்திற்குரியது: இந்த விலைப்பட்டியலுக்குப் பேமெண்ட் செலுத்தும் போது தள்ளுபடிகளைப் பயன்படுத்த வாடிக்கையாளரை அனுமதிக்க, இந்த விலைப்பட்டியலுக்குப் பேமெண்ட் செலுத்தும் போது தள்ளுபடிக் குறியீடுகளைப் பயன்படுத்த வாடிக்கையாளர்களை அனுமதி என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
- விலைப்பட்டியலை மதிப்பாய்வு செய் என்பதைக் கிளிக் செய்து, அதன்பிறகு விலைப்பட்டியலை அனுப்பு என்பதைக் கிளிக் செய்யவும்.
ஆர்டரை உருவாக்கு என்பதைக் கிளிக் செய்யவும்.
கட்டண விதிமுறைகளுடன் வரைவு ஆர்டரை உருவாக்கவும்
நீங்கள் கட்டண விதிமுறைகளுடன் ஒரு வரைவு ஆர்டரை உருவாக்கலாம். ஓர் ஆர்டருக்கான பேமெண்ட்டைச் செலுத்த வேண்டிய தேதியை அமைக்கக் கட்டண விதிமுறைகள் உங்களை அனுமதிக்கின்றன. உங்கள் கட்டண விதிமுறைகளுக்கான சதவீத அடிப்படையிலான டெபாசிட் தேவையையும் நீங்கள் அமைக்கலாம். உங்கள் கட்டண விதிமுறைகளில் ஒரு டெபாசிட் தேவையை நீங்கள் சேர்த்தால், நீங்கள் ஒரு விலைப்பட்டியலை அனுப்பிய உடனேயே உங்கள் B2B வாடிக்கையாளர் டெபாசிட் தொகையைச் செலுத்த வேண்டும். வரைவு ஆர்டர்களுக்கான டெபாசிட் தேவைகள் Shopify Plus திட்டத்தில் மட்டுமே கிடைக்கின்றன.
படிகள்:
உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, ஆர்டர்கள் > வரைவுகள் என்பதற்குச் செல்லவும்.
ஆர்டரை உருவாக்கு என்பதைக் கிளிக் செய்யவும்.
வாடிக்கையாளர் பிரிவில், ஒரு B2B வாடிக்கையாளரைத் தேர்ந்தெடுக்கவும்.
ஆர்டருக்கான நிறுவனத்தின் இருப்பிடத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
தயாரிப்புகளைச் சேர்க்க, தயாரிப்பைத் தேடி, சேர் என்பதைக் கிளிக் செய்யவும்.
விருப்பத்திற்குரியது: உங்கள் வரைவு ஆர்டரில் கொள்முதல் ஆர்டர் எண்ணைச் சேர்க்க, பின்வரும் படிகளை நிறைவுசெய்யவும்:
- PO எண் பிரிவில்,
ஐகானைக் கிளிக் செய்யவும்.
- கொள்முதல் ஆர்டர் எண்ணை உள்ளிட்டு, முடிந்தது என்பதைக் கிளிக் செய்யவும்.
- PO எண் பிரிவில்,
உங்கள் வரைவு ஆர்டரில் கட்டண விதிமுறைகளைச் சேர்க்கவும்:
- பேமெண்ட் பிரிவில், பிறகு செலுத்தப்பட வேண்டிய பேமெண்ட் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
- கட்டண விதிமுறைகள் கீழ்தோன்றும் மெனுவிலிருந்து, ஒரு கட்டண விதியைத் தேர்ந்தெடுக்கவும். நிறுவனத்தின் இருப்பிடத்திற்கு ஏற்கனவே கட்டண விதிமுறைகள் அமைக்கப்பட்டிருந்தால், நிறுவனத்தின் இருப்பிடத்திற்கு ஏற்பக் கட்டண விதி தானாகவே அமைக்கப்படும்.
விருப்பத்திற்குரியது: + டெபாசிட் தேவை என்பதைக் கிளிக் செய்து, அதன்பிறகு 20% போன்ற சதவீதத் தொகை டெபாசிட் தேவையை உள்ளிடவும்.
சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.
நீங்கள் கட்டண விதிமுறைகளை அமைத்த பிறகு, ஆர்டருக்கு விலைப்பட்டியலை அனுப்பலாம் அல்லது பேமெண்ட்டை ஏற்கலாம்.
ஆர்டர்களை வரைவு ஆர்டர்களாக அளிப்பதைக் கட்டாயமாக்குதல்
ஆர்டர்களை ஏற்கும் முன் அவற்றை மதிப்பாய்வு செய்ய விரும்பினால், நீங்கள் அவற்றை ஏற்கும் முன் வாடிக்கையாளர்கள் தங்கள் ஆர்டர்களை வரைவுகளாகச் சமர்ப்பிக்க வேண்டுமெனக் கட்டாயமாக்கலாம். மதிப்பாய்வு செய்ய அனைத்து ஆர்டர்களையும் வரைவுகளாகச் சமர்ப்பி விருப்பத்தை நீங்கள் தேர்ந்தெடுக்கும்போது, அந்த நிறுவனத்தின் இருப்பிடத்திற்கான வாடிக்கையாளர்களுக்குச் செக்அவுட்டில் ஒப்புதலுக்குச் சமர்ப்பி பொத்தான் காட்டப்படும்.
ஆர்டர்களை வரைவு ஆர்டர்களாகச் சமர்ப்பிக்கும் நிறுவன இருப்பிடங்களில் இருந்து வரும் ஆர்டர்களை உங்கள் Shopify நிர்வாகியின் வரைவுகள் பக்கத்தில் காணலாம். இந்த ஆர்டர்களில் அவற்றின் விலைகள் இயல்பாகவே பூட்டப்பட்டிருக்கும், அத்துடன் நீங்கள் ஆர்டரை உருவாக்கு என்பதைக் கிளிக் செய்யும் வரை அல்லது அவர்களுக்கு நீங்கள் விலைப்பட்டியலை அனுப்பிய பிறகு வாடிக்கையாளர் பேமெண்ட்டைச் சமர்ப்பிக்கும் வரை அவை நிறைவடையாது.
B2B வரைவு ஆர்டரில் தயாரிப்பின் விலை நிர்ணயத்தைப் பூட்டுதல் மற்றும் திறத்தல்
எந்தவொரு வரைவு ஆர்டரிலும் நீங்கள் விலைகளைப் பூட்டலாம். Shopify நிர்வாகியில் நீங்கள் தயாரிப்பின் விலையைப் பின்னர் புதுப்பித்தாலும், ஆர்டரில் உள்ள தயாரிப்புகளின் விலைகள் மாறாமல் இருப்பதை விலைப் பூட்டு உறுதிசெய்கிறது. தயாரிப்பின் விலையில் ஏதேனும் மாற்றங்கள் ஏற்பட்டாலும், ஒரு வாடிக்கையாளருக்குக் குறிப்பிட்ட விலையைப் பராமரிக்க வேண்டிய தேவை இருக்கும்போது நீங்கள் விலைகளைப் பூட்டலாம். வரைவு ஆர்டரின் விலைகளை நீங்கள் கைமுறையாகப் பூட்டும் வரை, இயல்பாகவே வரைவு ஆர்டரின் விலைகள் திறக்கப்பட்டிருக்கும்.
நீங்கள் எந்த நேரத்திலும் தயாரிப்பு விலை நிர்ணயத்தைத் திறக்கலாம்.
B2B வரைவு ஆர்டரில் தயாரிப்பின் விலை நிர்ணயத்தைப் பூட்டுதல்
விலைப் பூட்டானது ஒரு வரைவு ஆர்டரில் ஏற்கனவே உள்ள அனைத்துத் தயாரிப்புகளுக்கும், விலைப் பூட்டு பயன்படுத்தப்பட்ட பிறகு வரைவு ஆர்டரில் நீங்கள் சேர்க்கும் எந்தவொரு தயாரிப்புகளுக்கும் பொருந்தும். விலைகள் பூட்டப்பட்டுள்ள தயாரிப்புகளின் விலைக்கு அருகில், வரைவு ஆர்டரில் ஒரு பூட்டுச் சின்னம் காட்டப்படும்.
படிகள்:
டெஸ்க்டாப்
உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, ஆர்டர்கள் > வரைவுகள் என்பதற்குச் செல்லவும்.
ஏற்கனவே உள்ள ஒரு வரைவு ஆர்டரைக் கிளிக் செய்யவும் அல்லது புதிய வரைவு ஆர்டரை உருவாக்க ஆர்டரை உருவாக்கு என்பதைக் கிளிக் செய்யவும்.
வரைவு ஆர்டரில் தயாரிப்புகளைச் சேர்த்த பிறகு, தயாரிப்புகள் பிரிவில்,
> தயாரிப்பு விலையை லாக் செய் என்பதைக் கிளிக் செய்யவும்.
சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.
மொபைல்
Shopify செயலியில்,
ஐகானைத் தட்டவும்.
ஆர்டர்கள் மெனுவில்,
ஐகானைத் தட்டிவிட்டு, வரைவு ஆர்டர்கள் என்பதைத் தட்டவும்.
ஏற்கனவே உள்ள ஒரு வரைவு ஆர்டரைத் தட்டவும் அல்லது புதிய வரைவு ஆர்டரை உருவாக்க + என்பதைத் தட்டவும்.
வரைவு ஆர்டரில் உங்கள் தயாரிப்புகளைச் சேர்த்த பிறகு, தயாரிப்புகள் பிரிவில்,
> தயாரிப்பு விலையை லாக் செய் என்பதைத் தட்டவும்.
சேமி அல்லது ✓ என்பதைத் தட்டவும்.
B2B வரைவு ஆர்டரில் தயாரிப்பு விலையை அன்லாக் செய்தல்
நீங்கள் எந்த நேரத்திலும் தயாரிப்பு விலையை அன்லாக் செய்யலாம். தயாரிப்பு விலையை அன்லாக் செய்யும்போது, அசல் தயாரிப்புகளில் செய்யப்பட்ட ஏதேனும் விலை மாற்றங்களுடனோ, அல்லது தயாரிப்புப் பட்டியலின் சமீபத்தில் உள்ளமைக்கப்பட்ட விலை நிர்ணயத்தின் அடிப்படையிலோ வரைவு ஆர்டர் புதுப்பிக்கப்படும்.
நீங்கள் விலைப்பட்டியல் அல்லது செக்அவுட் இணைப்பை அனுப்பும்போது தயாரிப்பு விலைகளையும் அன்லாக் செய்யலாம். விலைப்பட்டியலை அனுப்பும்போதோ செக்அவுட் இணைப்பைப் பகிரும்போதோ, மேனுவலாக அன்லாக் செய்யும்படி நீங்கள் அமைக்காதவரை, விலை நிர்ணயம் இயல்புநிலையாகவே லாக் செய்யப்படும்.
படிகள்:
டெஸ்க்டாப்
உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, ஆர்டர்கள் > வரைவுகள் என்பதற்குச் செல்லவும்.
எந்த வரைவு ஆர்டருக்கான தயாரிப்பு விலையை அன்லாக் செய்ய விரும்புகிறீர்களோ அதைக் கிளிக் செய்யவும்.
தயாரிப்புகள் பிரிவில்,
என்பதைக் கிளிக் செய்துவிட்டு, தயாரிப்பு விலையை அன்லாக் செய் என்பதைத் தட்டவும்.
சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.
மொபைல்
Shopify செயலியில்,
ஐகானைத் தட்டவும்.
ஆர்டர்கள் மெனுவில்,
ஐகானைத் தட்டிவிட்டு, வரைவு ஆர்டர்கள் என்பதைத் தட்டவும்.
எந்த வரைவு ஆர்டருக்கான தயாரிப்பு விலையை அன்லாக் செய்ய விரும்புகிறீர்களோ அதைத் தட்டவும்.
தயாரிப்புகள் பிரிவில்,
என்பதைத் தட்டிவிட்டு, தயாரிப்பு விலையை அன்லாக் செய் என்பதைத் தட்டவும்.
சேமி அல்லது ✓ என்பதைத் தட்டவும்.
B2B வரைவு ஆர்டர்களைப் பயன்படுத்தி உள்ளூர் டெலிவரி மற்றும் ஸ்டோரில் பிக்அப் செய்தல்
ஒரு வரைவு ஆர்டருக்கு ஷிப்பிங் தேவைப்பட்டால், நீங்கள் பின்வரும் செயல்களில் ஒன்றைச் செய்யலாம்:
- முன்பே அமைக்கப்பட்ட ஷிப்பிங் கட்டணத்தைத் தேர்ந்தெடுத்தல்
- தனிப்பயன் கட்டணத்தை உருவாக்குதல்
- உள்ளூர் டெலிவரி அல்லது ஸ்டோரில் பிக்அப் என்பதைத் தேர்ந்தெடுத்தல்
வரைவு ஆர்டரை உருவாக்கும்போதே ஒரு ஷிப்பிங் முறையைத் தேர்ந்தெடுத்திருந்தால், செக்அவுட்டின்போது வாடிக்கையாளரால் அந்த ஷிப்பிங் முறையை மாற்ற முடியாது. இது B2B மற்றும் D2C வாடிக்கையாளர்கள் இருவருக்கும் பொருந்தும்.
வரைவு ஆர்டரை உருவாக்கும்போது ஷிப்பிங் முறை முன்கூட்டியே தேர்ந்தெடுக்கப்படாவிட்டால், செக்அவுட்டின்போது கிடைக்கும் ஷிப்பிங் கட்டணங்களிலிருந்து வாடிக்கையாளர் தேர்ந்தெடுக்கலாம், ஆனால் உள்ளூர் டெலிவரி அல்லது ஸ்டோரில் பிக்அப் என்பதைத் தேர்ந்தெடுக்க முடியாது. உங்கள் இருப்பிடங்களில் ஒன்றிலிருந்து வாடிக்கையாளர் தமது ஆர்டரை நேரில் பெற வேண்டும் என நீங்கள் விரும்பினால், வரைவு ஆர்டரை உருவாக்கும்போது ஸ்டோரில் பிக்அப் இருப்பிடத்தை நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.