உங்கள் B2B பிசினஸிற்கான கட்டண முறைகளை அமைத்தல்
B2B ஆர்டர்கள் பொதுவாகப் பெரியவை என்பதால் அவை எப்போதும் செக்அவுட்டின்போதே செலுத்தப்படுவதில்லை; எனவே உங்கள் B2B வாடிக்கையாளர்களுக்கு வெவ்வேறு கட்டண முறைகளும் விதிமுறைகளும் தேவைப்படலாம். செக்அவுட்டின்போதே முன்கூட்டியே பேமெண்ட்களை வசூலிப்பதற்கான விருப்பமோ, அல்லது கட்டண விதிமுறைகளுடன்கூடிய B2B ஆர்டர்களுக்கான முழு அல்லது பகுதி பேமெண்ட்களைப் பிறகு வசூலிப்பதற்கான விருப்பமோ உங்களிடம் உள்ளது.
Shopify B2B-யில் உள்ள பல்வேறு பேமெண்ட் விருப்பங்கள் மற்றும் அவற்றை உங்கள் ஸ்டோரில் எப்படி அமைப்பது என்பது குறித்த மேலோட்டத்தை இந்தக் கட்டுரையில் நீங்கள் காணலாம்.
இந்தப் பக்கத்தில்
B2B கட்டண முறைகளை அமைப்பதற்கான பரிசீலனைகள்
உங்கள் B2B பிசினஸிற்கான கட்டண முறைகளை அமைக்கும் முன், பின்வரும் பரிசீலனைகளைச் சரிபார்க்கவும்:
- பின்வரும் கட்டண முறைகள் Shopify B2B உடன் இணக்கமானவை அல்ல:
- சில கட்டண முறைகளில் பிராந்தியம், பிசினஸ் வகை அல்லது தயாரிப்பு வழங்கல் ஆகியவற்றின் அடிப்படையில் தகுதித் தேவைகள் உள்ளன.
- நீங்கள் ஒரு கலப்புக் கடையை நிர்வகித்தால், நீங்கள் அமைக்கும் கட்டண முறைகள் தகுதியைப் பொறுத்து இயல்பாகவே எல்லா வாடிக்கையாளர்களுக்கும் கிடைக்கும். இருப்பினும், குறிப்பிட்ட வாடிக்கையாளர்கள் அல்லது வாடிக்கையாளர் வகைகளுக்கு இந்தக் கட்டண முறைகள் கிடைக்கும் தன்மையை நீங்கள் தனிப்பயனாக்கலாம்.
B2Bக்குக் கிடைக்கும் கட்டண முறைகள்
Shopify-இல் உள்ள உங்கள் B2B பிசினஸிற்கு நீங்கள் பல்வேறு வகையான கட்டண முறைகளைப் பயன்படுத்தலாம். Shopify B2B உடன் பயன்படுத்தக் கிடைக்கும் பின்வரும் கட்டண முறைகளைச் சரிபார்க்கவும்.
Shopify Payments
உங்கள் Shopify ஸ்டோரை அமைத்த உடனேயே அனைத்து முக்கியக் கட்டண முறைகளையும் ஏற்க Shopify Payments உங்களை அனுமதிக்கிறது. நீங்கள் மூன்றாம் தரப்பு கட்டண வழங்குநரையோ அல்லது பிசினஸ் கணக்கையோ அமைக்கத் தேவையில்லை.
நீங்கள் Shopify Payments ஐப் பயன்படுத்தும்போது, பின்வருவனவற்றைச் செய்யலாம்:
- கிரெடிட் கார்டுகள், டெபிட் கார்டுகள் மற்றும் தானியங்கு தீர்வகம் (ACH) நேரடி வங்கிப் பற்று பேமெண்ட்டுகள் உட்பட உள்ளூர் கட்டண முறைகளை ஏற்கலாம்.
- தங்கள் கிரெடிட் கார்டுகளை அல்லது வங்கிக் கணக்குகளைப் பாதுகாப்பாகச் சேமிக்க B2B வாடிக்கையாளர்களை அனுமதிக்கலாம்.
- உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து எதிர்கால B2B பேமெண்ட்டுகளைச் செயலாக்க பாதுகாக்கப்பட்ட கார்டுகள் அல்லது பாதுகாக்கப்பட்ட வங்கிக் கணக்குகளைப் பயன்படுத்தலாம்.
- உங்கள் ஸ்டோரைத் திறந்த உடனேயே பேமெண்ட்டுகளை ஏற்கத் தொடங்கலாம்.
Apple Pay
உங்கள் B2B பிசினஸிற்கான கட்டண விருப்பமாக Apple Pay ஐ நீங்கள் இயக்கலாம். உங்கள் B2B வாடிக்கையாளர்கள் தங்களது கிரெடிட் கார்டு விவரங்களை மேனுவலாக உள்ளிடாமலேயே ஆர்டர்கள் மற்றும் இன்வாய்ஸ்களுக்குப் பேமெண்ட் செய்யலாம். அத்துடன் உங்கள் Shopify நிர்வாகியில் நீங்கள் பேமெண்ட்டுகளைத் தானாகவே கணக்குச் சமரசம் செய்யலாம்.
ஏற்கனவே Apple Pay இயக்கப்பட்ட நிலையில் நீங்கள் ஒரு கலப்புக் கடையை அமைத்தால், கட்டண விதிமுறைகள் இல்லாத B2B ஆர்டர்களுக்கான கட்டண விருப்பமாக இது தானாகவே இயக்கப்படும்.
மூன்றாம் தரப்பு கட்டண வழங்குநர்கள்
நீங்கள் Shopify Payments-ஐப் பயன்படுத்தவில்லை, அத்துடன் உங்கள் ஸ்டோரில் கிரெடிட் கார்டுகள் மற்றும் டெபிட் கார்டுகளை ஏற்க விரும்புகிறீர்கள் என்றால், 100-க்கும் மேற்பட்ட மூன்றாம் தரப்பு கட்டண வழங்குநர்களில் இருந்து நீங்கள் தேர்ந்தெடுக்கலாம். தகுதி, விருப்பம் அல்லது உங்கள் புவியியல் இருப்பிடத்தில் கிடைக்கும் தன்மை ஆகியவற்றின் அடிப்படையில் இந்த விருப்பத்தை நீங்கள் தேர்வுசெய்யலாம்.
PayPal
நீங்கள் PayPal ஐக் கட்டண விருப்பமாக இயக்கலாம். இதனால், உங்கள் B2B வாடிக்கையாளர்கள் கிரெடிட் கார்டைப் பயன்படுத்தாமல் தங்களது ஆர்டர்கள் மற்றும் இன்வாய்ஸ்களுக்குப் பேமெண்ட் செய்யலாம். உங்கள் Shopify நிர்வாகியில் நீங்கள் பேமெண்ட்டுகளைத் தானாகவே கணக்குச் சமரசம் செய்யலாம்.
ஏற்கனவே PayPal இயக்கப்பட்ட நிலையில் நீங்கள் ஒரு கலப்புக் கடையை அமைத்தால், கட்டண விதிமுறைகள் இல்லாத B2B ஆர்டர்களுக்கான கட்டண விருப்பமாக இது தானாகவே இயக்கப்படும்.
மேனுவல் பேமெண்ட் முறைகள்
கிரெடிட் கார்டைப் பயன்படுத்திப் பேமெண்ட் செய்ய முடியாத ஆர்டர்களுக்கு, மணி ஆர்டர், வங்கிப் பரிமாற்றம் அல்லது வங்கி வைப்புத்தொகை போன்ற மேனுவல் பேமெண்ட் முறையை நீங்கள் அமைக்கலாம். உங்கள் வாடிக்கையாளர்கள் மேனுவல் பேமெண்ட் முறையைப் பயன்படுத்தும்போது, அவர்களுக்குச் சிறப்பான முறையில் செயல்படும் வகையில் அவர்களது பேமெண்ட்டைப் பெற நீங்கள் ஏற்பாடு செய்யலாம். பேமெண்ட்டைப் பெற்ற பிறகு, உங்கள் Shopify நிர்வாகியில் அந்த ஆர்டரில் நீங்கள் பேமெண்ட்டை மேனுவலாகப் பதிவுசெய்யலாம்.
உங்கள் திட்டம் B2B திறன்களை ஆதரித்து, அத்துடன் நீங்கள் Shopify Payments ஐப் பயன்படுத்துகிறீர்கள் என்றால், மேனுவல் பேமெண்ட்டுகளைப் பயன்படுத்திப் பல நாணயப் பேமெண்ட்டுகளை உங்களால் செயலாக்க முடியும். எந்த நாணயத்திற்கு மேனுவல் பேமெண்ட்டுகளைச் செயலாக்க விரும்புகிறீர்களோ அதற்காக நீங்கள் ஒரு சந்தையைச் சேர்க்க வேண்டும்.
வாடிக்கையாளர் பேமெண்ட் செய்ய வேண்டிய நேரத்தில் மட்டுமே மேனுவல் பேமெண்ட் முறைகள் காட்டப்படும். பின்வரும் சூழ்நிலைகளில் அவை காட்டப்படாது:
- வாடிக்கையாளர் பிற்காலத்தில் பேமெண்ட் செய்யும் கட்டண விதிமுறைகளைக் கொண்ட ஆர்டர்கள்.
- மதிப்பாய்வுக்காக அனைத்து ஆர்டர்களையும் வரைவுகளாகச் சமர்ப்பி என நிறுவனத்தின் இருப்பிட செக்அவுட் அமைப்பு அமைக்கப்பட்டுள்ள ஆர்டர்கள். நீங்கள் வரைவு ஆர்டரை மதிப்பாய்வு செய்து அவர்களுக்கு இன்வாய்ஸை அனுப்பிய பிறகு வாடிக்கையாளர்கள் மேனுவல் பேமெண்ட் முறைகளைப் பயன்படுத்திப் பேமெண்ட் செய்யலாம். தொடக்க செக்அவுட்டில் மேனுவல் பேமெண்ட் முறைகளைக் காட்ட, நிறுவனத்தின் இருப்பிட செக்அவுட் அமைப்பை ஆர்டர்களைத் தானாகவே சமர்ப்பி என்று நீங்கள் அமைக்கலாம்.
கிஃப்ட் கார்டுகள்
செக்அவுட்டில் உள்ள கிஃப்ட் கார்டுகள் Shopify B2Bக்கு இயல்பாகவே முடக்கப்பட்டிருக்கும், அத்துடன் Shopify Plus அல்லாத பிற திட்டங்களில் கிடைக்காது. நீங்கள் Shopify Plus திட்டத்தில் இருந்து, உங்கள் B2B ஸ்டோரில் செக்அவுட் செய்யும்போது கிஃப்ட் கார்டுகளை இயக்க விரும்பினால், கோரிக்கை விடுக்க ஸ்டோர் அல்லது நிறுவன உரிமையாளர் Plus ஆதரவைத் தொடர்புகொள்ள வேண்டும்.
ஸ்டோர் கிரெடிட்
செக்அவுட்டின்போது ஸ்டோர் கிரெடிட்டைக் கட்டண முறையாகக் காட்ட, Shopify-இல் உங்கள் B2B பிசினஸிற்கான ஸ்டோர் கிரெடிட்டை நீங்கள் அமைக்கலாம்.
நீங்கள் ஒரு கலப்புக் கடையை நிர்வகித்தால், D2C மற்றும் B2B வாடிக்கையாளர்கள் இருவருக்குமே ஸ்டோர் கிரெடிட் இயக்கப்படும். குறிப்பிட்ட வாடிக்கையாளர்கள் அல்லது வாடிக்கையாளர் வகைகளுக்கு உங்களால் ஸ்டோர் கிரெடிட்டை இயக்க முடியாது.
கூடுதல் கட்டண முறைகள்
உங்கள் B2B வாடிக்கையாளர்கள் கிரெடிட் கார்டு அல்லாமல் வேறு ஒன்றைப் பயன்படுத்தி ஆன்லைனில் தங்களது ஆர்டர்களுக்குப் பேமெண்ட் செய்ய அனுமதிக்க, கிரிப்டோகரன்சி போன்ற மாற்றுப் பேமெண்ட் முறைகளை நீங்கள் அமைக்கலாம். சில மாற்றுப் பேமெண்ட் முறைகளை உங்கள் Shopify நிர்வாகியிலிருந்தே நேரடியாக இயக்கலாம், மற்றவற்றிற்கு நீங்கள் ஒரு செயலியை நிறுவ வேண்டியிருக்கலாம்.
உங்கள் B2B பிசினஸிற்கான கட்டண முறைகளைத் தனிப்பயனாக்குதல்
உங்கள் B2B மற்றும் D2C வாடிக்கையாளர்கள் எந்தெந்தக் கட்டண முறைகளை அணுகலாம் என்பதை நீங்கள் கட்டுப்படுத்தலாம். உங்களின் கட்டண முறைகளை அமைத்த பிறகு, Checkout Blocks மூலம் கட்டண முறை கிடைக்கும் தன்மையை நீங்கள் தனிப்பயனாக்கலாம். நீங்கள் அமைக்கும் நிபந்தனைகளின் அடிப்படையில் கட்டண முறைகளை மறைக்கவோ மறுபெயரிடவோ மீண்டும் வரிசைப்படுத்தவோ இந்தச் செயலி உங்களை அனுமதிக்கிறது.
வாடிக்கையாளர்கள் எந்தெந்தக் கட்டண முறைகளைப் பயன்படுத்தலாம் என்பதைத் தனிப்பயனாக்க, பின்வரும் விருப்பங்களையும் நீங்கள் பயன்படுத்தலாம்:
- ஒரு மூன்றாம் தரப்புச் செயலி.
- Payment Customization Function API ஐப் பயன்படுத்தும் தனிப்பயன் செயலி. Shopify Functions அனைத்துத் திட்டங்களிலும் கிடைக்கிறது.