B2B-இல் கட்டண விதிமுறைகளை அமைத்தல்

ஒரு ஆர்டருக்காகப் பணம் செலுத்த, ஒரு நிறுவனத்திற்கு எவ்வளவு காலம் உள்ளது என்பதைக் கட்டண விதிமுறைகள் வரையறுக்கின்றன. ஒவ்வொரு நிறுவனத்தின் இருப்பிடத்திற்கும் நீங்கள் கட்டண விதிமுறைகளை அமைக்கலாம். நீங்கள் கட்டண விதிமுறைகளை அமைத்த பிறகு, B2B வாடிக்கையாளர்கள் உங்களின் ஆன்லைன் ஸ்டோர் மூலம் வழங்கும் எந்தவொரு ஆர்டரிலும் இந்த விதிமுறைகளைப் பார்க்க முடியும்.

B2B வாடிக்கையாளருக்கு வரைவு ஆர்டரை உருவாக்கும்போதும் நீங்கள் கட்டண விதிமுறைகளைப் பயன்படுத்தலாம்.

பேமெண்ட்டுகளில் உங்களுக்கு அதிக நெகிழ்வுத்தன்மையை வழங்க, உங்களின் கட்டண விதிமுறைகளின் ஒரு பகுதியாக வைப்புத்தொகைத் தேவையையும் நீங்கள் அமைக்கலாம். இதன் மூலம், ஒரு ஆர்டரை உருவாக்கும்போது அதற்குரிய பகுதி பேமெண்ட்டையும், மீதமுள்ள தொகையைப் பின்னரும் நீங்கள் வசூலிக்க முடியும். எந்தவொரு நிறுவனத்தின் இருப்பிடத்திலும் வரைவு ஆர்டர்களிலும் வைப்புத்தொகைத் தேவைகளை அமைக்கலாம்.

கட்டண விதிமுறை வகைகள்

நிறுவனத்தின் இருப்பிடங்களுக்கும் வரைவு ஆர்டர்களுக்கும் வெவ்வேறு கட்டண விதிமுறைகளை நீங்கள் அமைக்கலாம்.

நிறுவனத்தின் இருப்பிடங்களுக்கும் வரைவு ஆர்டர்களுக்கும் நீங்கள் அமைக்கக்கூடிய பல்வேறு கட்டண விதிமுறைகளைப் பற்றி அறிய, பின்வரும் அட்டவணையைப் பார்க்கவும்:

கட்டண விதிமுறை வகைகள்
கட்டண விதிமுறைவிளக்கம்எவற்றிற்கு அமைக்கலாம்
கட்டண விதிமுறைகள் இல்லைஉடனடியாகப் பணம் செலுத்த வேண்டும். இதுதான் இயல்புநிலை அமைப்பாகும்.நிறுவனத்தின் இருப்பிடம் மற்றும் தனிப்பட்ட வரைவு ஆர்டர்கள்.
நிகரம் (காலம்)
• நீங்கள் தேர்ந்தெடுக்கும் குறிப்பிட்ட காலக்கட்டத்திற்குள் பணம் செலுத்த வேண்டும். கிடைக்கக்கூடிய விதிமுறைகள் நெட் 7, நெட் 15, நெட் 30, நெட் 45, நெட் 60 மற்றும் நெட் 90 ஆகும். அனைத்து விதிமுறைகளும் ஆர்டர் செய்யப்பட்ட நாளிலிருந்து தொடங்கும்.
எடுத்துக்காட்டாக, நீங்கள் நெட் 30 விதிமுறைகளைத் தேர்ந்தெடுத்தால், வாடிக்கையாளர்கள் தங்களின் ஆர்டர்களுக்கு 30 நாட்களுக்குள் பணம் செலுத்த வேண்டும்.
• நிறுவனத்தின் இருப்பிடம் மற்றும் தனிப்பட்ட வரைவு ஆர்டர்கள்.
நிறைவேற்றும்போது செலுத்த வேண்டியவை
• ஆர்டரில் உள்ள அனைத்து உருப்படிகளும் நிறைவேற்றப்பட்ட பிறகு பணம் செலுத்த வேண்டும்.
• நிறுவனத்தின் இருப்பிடம் மற்றும் தனிப்பட்ட வரைவு ஆர்டர்கள்.
நிலையான தேதி
• கடந்த காலத்திலோ எதிர்காலத்திலோ உள்ள ஒரு குறிப்பிட்ட காலண்டர் தேதியில் பணம் செலுத்த வேண்டும்.
எடுத்துக்காட்டாக, பணம் செலுத்த வேண்டிய தேதி ஜனவரி 27, 2026.
• தனிப்பட்ட வரைவு ஆர்டர்கள்.

நிறுவனத்தின் இருப்பிடத்திற்குக் கட்டண விதிமுறைகளை அமை

குறிப்பிட்ட நிறுவனத்தின் இருப்பிடத்திற்குக் கட்டண விதிமுறைகளை நீங்கள் அமைக்கலாம்.

படிகள்:

1. உங்களின் Shopify நிர்வாகியில், வாடிக்கையாளர்கள் > நிறுவனங்கள் என்பதற்குச் செல்லவும்.

2. நீங்கள் கட்டண விதிமுறைகளை அமைக்க விரும்பும் நிறுவனத்தைக் கிளிக் செய்யவும்.

3. இருப்பிடங்கள் பிரிவில், நீங்கள் கட்டண விதிமுறைகளை அமைக்க விரும்பும் நிறுவனத்தின் இருப்பிடத்தைக் கிளிக் செய்யவும்.

4. கட்டண விதிமுறைகள் பிரிவில், திருத்து ஐகானைக் கிளிக் செய்யவும்.

5. கீழ்தோன்றும் மெனுவிலிருந்து, கட்டண விதிமுறை வகையைத் தேர்ந்தெடுக்கவும்.

6. விருப்பத்தேர்வு: உங்களின் கட்டண விதிமுறைகளுக்கு வைப்புத்தொகையை அமைக்கவும்:

1. செக்அவுட்டில் உருவாக்கப்பட்ட ஆர்டர்களுக்கு வைப்புத்தொகை தேவை என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
2. 20% என்பது போல, வைப்புத்தொகைத் தேவைக்கான சதவீத அளவை உள்ளிடவும்.
7. சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.

ஒரு நிறுவனத்திற்குக் கட்டண விதிமுறைகளை அமை

ஒரு நிறுவனத்தில் உள்ள அனைத்து இருப்பிடங்களுக்கும் நீங்கள் கட்டண விதிமுறைகளை அமைக்கலாம்.

படிகள்:

1. உங்களின் Shopify நிர்வாகியில், வாடிக்கையாளர்கள் > நிறுவனங்கள் என்பதற்குச் செல்லவும்.

2. நீங்கள் கட்டண விதிமுறைகளை அமைக்க விரும்பும் நிறுவனத்தைக் கிளிக் செய்யவும்.

3. கட்டண விதிமுறைகள் பிரிவில், திருத்து ஐகானைக் கிளிக் செய்யவும்.

4. கீழ்தோன்றும் மெனுவிலிருந்து, கட்டண விதிமுறை வகையைத் தேர்ந்தெடுக்கவும்.

5. விருப்பத்தேர்வு: உங்களின் கட்டண விதிமுறைகளுக்கு வைப்புத்தொகையை அமைக்கவும்:

1. செக்அவுட்டில் உருவாக்கப்பட்ட ஆர்டர்களுக்கு வைப்புத்தொகை தேவை என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
2. 20% என்பது போல, வைப்புத்தொகைத் தேவைக்கான சதவீத அளவை உள்ளிடவும்.
6. சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.

ஒட்டுமொத்தமாக நிறுவனங்களுக்குக் கட்டண விதிமுறைகளை அமை

நிறுவனங்கள் பக்கத்திலிருந்து, ஒரே நேரத்தில் பல நிறுவனங்களுக்கு நீங்கள் கட்டண விதிமுறைகளை அமைக்கலாம்.

படிகள்:

1. உங்களின் Shopify நிர்வாகியில், வாடிக்கையாளர்கள் > நிறுவனங்கள் என்பதற்குச் செல்லவும்.

2. நீங்கள் கட்டண விதிமுறைகளை அமைக்க விரும்பும் நிறுவனங்களைத் தேர்ந்தெடுக்கத் தேர்வுப்பெட்டிகளைப் பயன்படுத்தவும்.

3. கட்டண விதிமுறைகளைத் திருத்து என்பதைக் கிளிக் செய்யவும்.

4. கீழ்தோன்றும் மெனுவிலிருந்து, கட்டண விதிமுறை வகையைத் தேர்ந்தெடுக்கவும்.

5. விருப்பத்தேர்வு: உங்களின் கட்டண விதிமுறைகளுக்கு வைப்புத்தொகையை அமைக்கவும்:

1. செக்அவுட்டில் உருவாக்கப்பட்ட ஆர்டர்களுக்கு வைப்புத்தொகை தேவை என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
2. 20% என்பது போல, வைப்புத்தொகைத் தேவைக்கான சதவீத அளவை உள்ளிடவும்.
6. சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.

கட்டண விதிமுறைகளில் உள்ள ஆர்டர்களுக்குப் பேமெண்ட்டை வசூலித்தல்

ஆர்டருக்குப் பணம் செலுத்த, ஆர்டருக்கான கட்டண விதிமுறைகளின் காலம் முடியும் வரை வாடிக்கையாளர்கள் காத்திருக்கத் தேவையில்லை. கட்டண விதிமுறைக் காலத்தில், B2B வாடிக்கையாளர்கள் வாடிக்கையாளர் கணக்குகளில் உள்நுழைந்து, ஆர்டரைத் தேர்ந்தெடுத்து, இப்போதே செலுத்து என்பதைக் கிளிக் செய்வதன் மூலம் அதற்குரிய பணத்தைச் செலுத்தலாம். ஆர்டரை வழங்கிய பின் கட்டணம் செலுத்த வேண்டிய தேதி வரை எந்த நேரத்திலும் வாடிக்கையாளர்கள் இதைச் செய்யலாம். விதிமுறைகள் காலாவதியான பிறகும் வாடிக்கையாளர்கள் பேமெண்ட்டுகளைச் செலுத்தலாம், ஆனால் வாடிக்கையாளர் கணக்குகளில் அந்த ஆர்டர் கெடு முடிந்தது என்று காட்டப்படும்.

கட்டண விதிமுறைகளின் கால அவகாசம் முடிந்ததும் பேமெண்ட்டுகள் தானாகவே வசூலிக்கப்படாது. எடுத்துக்காட்டாக, ஒரு ஆர்டருக்காக B2B வாடிக்கையாளர் ஒரு கிரெடிட் கார்டைச் சேமித்தால், உங்களின் Shopify நிர்வாகியில் அந்த கிரெடிட் கார்டிலிருந்து கட்டணத்தை வசூலிப்பதன் மூலம் நீங்கள் மேனுவலாகப் பேமெண்ட்டைப் பெற வேண்டும்.

B2B-க்குரிய கட்டண விதிமுறைகளில் வைப்புத்தொகைகளைச் சேர்த்தல்

ஒரு ஆர்டருக்கான பகுதி பேமெண்ட்டை முன்கூட்டியும், மீதமுள்ள தொகையைப் பின்னரும் நீங்கள் வசூலிக்க விரும்பினால், கட்டண விதிமுறையின் ஒரு பகுதியாகச் குறிப்பிட்ட சதவீத வைப்புத்தொகையைத் தேவைப்படும்படி அமைக்கலாம். B2B வாடிக்கையாளர்கள் செக்அவுட்டில் ஆர்டரைச் செய்யும்போது வைப்புத்தொகையைச் செலுத்த வேண்டும். வைப்புத்தொகைகளைக் கிரெடிட் கார்டு மூலமாகவோ வங்கி வைப்புத்தொகை போன்ற மேனுவல் பேமெண்ட் முறை மூலமாகவோ செலுத்தலாம்.

அனைத்து ஆர்டர்களிலும் வைப்புத்தொகையைக் கோர, ஒரு நிறுவனத்தில் உள்ள அனைத்து இருப்பிடங்களுக்கும் அல்லது குறிப்பிட்ட ஒரு நிறுவனத்தின் இருப்பிடத்திற்கும் நீங்கள் வைப்புத்தொகைத் தேவையினை அமைக்கலாம். குறிப்பிட்ட ஆர்டர்களில் மட்டும் வைப்புத்தொகைகளை வசூலிக்க விரும்பினால், வரைவு ஆர்டர்களிலும் வைப்புத்தொகைத் தேவையை நீங்கள் அமைக்கலாம்.

வைப்புத்தொகை பெறப்பட்ட பிறகு, உங்களின் Shopify நிர்வாகியில் ஆர்டரின் பேமெண்ட் நிலை பகுதி செலுத்தப்பட்டது என்று மாறும். உங்கள் வாடிக்கையாளர் மேனுவல் பேமெண்ட் முறையில் வைப்புத்தொகையைச் செலுத்தினால், உங்களின் Shopify நிர்வாகியில் அந்த ஆர்டரில் மேனுவல் பேமெண்ட்டை நீங்கள் பதிவு செய்யும் வரை, ஆர்டர் நிலை பேமெண்ட் நிலுவையில் உள்ளது என்று மாறும்.

வரைவு ஆர்டர்களும் வைப்புத்தொகைகளும்

நீங்கள் அல்லது உங்கள் பணியாளர்கள் உருவாக்கும் வரைவு ஆர்டரில் வைப்புத்தொகைத் தேவையைச் சேர்த்து, அதன் பிறகு வைப்புத்தொகையைக் கோருவதற்கு வாடிக்கையாளருக்கு இன்வாய்ஸை அனுப்பலாம்.

மதிப்பாய்வுக்காக ஆர்டர்களைச் சமர்ப்பிக்க ஒரு நிறுவனத்தின் இருப்பிடம் அமைக்கப்பட்டு, அதில் வைப்புத்தொகைத் தேவை இருந்தால், செக்அவுட்டில் உங்கள் வாடிக்கையாளர்களுக்கு வைப்புத்தொகை காட்டப்படும், ஆனால் அது உடனடியாகப் பெறப்படாது. உங்கள் மதிப்பாய்வுக்காக ஆர்டர் ஒரு வரைவு ஆர்டராகச் சமர்ப்பிக்கப்படும். நீங்கள் ஆர்டரை உறுதிசெய்ததும், வைப்புத்தொகைக்குக் கிரெடிட்டை வசூலிக்கலாம், மேனுவல் பேமெண்ட் முறை மூலம் பெறப்பட்ட பேமெண்ட்டைப் பதிவுசெய்யலாம் அல்லது உங்கள் வாடிக்கையாளருக்குப் பேமெண்ட்டுக்காக ஒரு விலைப்பட்டியலை அனுப்பலாம். பேமெண்ட் பதிவுசெய்யப்பட்டதும், ஆர்டரின் பேமெண்ட் நிலை பகுதி செலுத்தப்பட்டது என மாறும்.

B2B வைப்புத்தொகைகளுக்கான வாடிக்கையாளர் அனுபவம்

செக்அவுட்டிலும், நன்றிப் பக்கத்திலும், வாடிக்கையாளர் கணக்குகளில் ஆர்டரைப் பார்க்கும்போதும், வாடிக்கையாளர்கள் வைப்புத்தொகையையும் நிலுவைத் தொகைக்கான நிலுவைத் தேதியையும் பார்க்க முடியும். நீங்களோ உங்கள் பணியாளர்களோ வைப்புத்தொகையுடன் ஒரு வரைவு ஆர்டரை உருவாக்கினால், நீங்கள் வாடிக்கையாளருக்கு அனுப்பும் விலைப்பட்டியலிலும் அந்த வைப்புத்தொகை காட்டப்படும்.

டைனமிக் கட்டண விதிமுறைகள் மற்றும் வைப்புத்தொகைகளை உள்ளமைத்தல்

ஒரு நிறுவனத்தின் இருப்பிடத்தில் நீங்கள் உள்ளமைக்கும் கட்டண விதிமுறைகளுடன் சேர்த்து, செக்அவுட்டில் உள்ள குறிப்பிட்ட நிபந்தனைகளின் அடிப்படையில் மாறும் டைனமிக் கட்டண விதிமுறைகளையும் வைப்புத்தொகைகளையும் அமைக்கலாம். எடுத்துக்காட்டாக, வாடிக்கையாளர் வகை, கார்ட்டில் உள்ள உருப்படிகள், கார்ட்டின் மொத்த மதிப்பு அல்லது குறிப்பிட்ட மெட்டாஃபீல்டுகளின் அடிப்படையில் கட்டண விதிமுறைகளை நீங்கள் உள்ளமைக்கலாம்.

பின்வரும் விருப்பங்களில் ஏதேனும் ஒன்றைப் பயன்படுத்தி, டைனமிக் கட்டண விதிமுறைகளை நீங்கள் அமைக்கலாம்:

• தனிப்பயன் செயலி: உங்களுக்கான சொந்தத் தீர்வை உருவாக்க, Payment Customization Function API-ஐப் பயன்படுத்தவும்.
• மூன்றாம் தரப்புச் செயலி: Shopify App Store இல் இருந்து ஒரு செயலியைப் பயன்படுத்தவும்.

வைப்புத்தொகைகளுக்கான 'வரைவு ஆர்டர் விலைப்பட்டியல்' மின்னஞ்சல் அறிவிப்பைப் புதுப்பிக்கவும்

உங்கள் ஸ்டோர் தனிப்பயனாக்கப்பட்ட அறிவிப்பு வார்ப்புருக்களைப் பயன்படுத்தினால், வரைவு ஆர்டர் விலைப்பட்டியல் அறிவிப்பில் வைப்புத்தொகைகள் காட்டப்படுவதை உறுதிசெய்ய, உங்கள் வரைவு ஆர்டர் விலைப்பட்டியல் அறிவிப்பை நீங்களே மேனுவலாகப் புதுப்பிக்க வேண்டியிருக்கலாம்.

இந்த மாற்றங்களைச் செய்ய, Shopify இன் அறிவிப்பு வார்ப்புருக்களில் பயன்படுத்தப்படும் குறியீடு குறித்த பரிச்சயம் தேவை. உங்கள் வார்ப்புருக்கள் அதிகளவில் தனிப்பயனாக்கப்பட்டிருந்து, தேவையான மாற்றங்களை எப்படிச் செய்வது என உங்களுக்குத் தெரியவில்லை என்றால், இந்த மாற்றங்களைச் செய்த டெவெலப்பரைத் தொடர்புகொள்ளவும் அல்லது உங்கள் வார்ப்புருவை அதன் அசல் நிலைக்கு மீட்டமைக்க, இயல்புநிலைக்கு மீட்டமை என்பதைக் கிளிக் செய்யவும். இயல்புநிலைக்கு மீட்டமைப்பதன் மூலம் நீங்கள் செய்த தனிப்பயனாக்கங்கள் அனைத்தும் அகற்றப்படும், ஆனால் உங்கள் வார்ப்புருக்கள் சமீபத்திய பதிப்பில் இருப்பதை அது உறுதிசெய்கிறது.

எந்தவொரு மாற்றத்தையும் செய்வதற்கு முன், உங்கள் வார்ப்புருவை Google Docs போன்ற வேறொரு ஆவணத்தில் நகலெடுத்து ஒட்டுவதன் மூலம் காப்புப் பிரதி எடுக்கவும். மாற்றங்களைச் செய்த பிறகு, சேமி என்பதைக் கிளிக் செய்வதற்கு முன், அவற்றை மதிப்பாய்வு செய்து எதிர்பார்த்தபடி செயல்படுகின்றனவா என்பதை உறுதிசெய்ய முன்னோட்டம் என்பதைக் கிளிக் செய்யவும்.

படிகள்:

1. உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, அமைப்புகள் > அறிவிப்புகள் என்பதற்குச் செல்லவும்.

2. வாடிக்கையாளர் அறிவிப்புகள் என்பதைக் கிளிக் செய்யவும்.

3. ஆர்டர் செயலாக்கம் பிரிவில், வரைவு ஆர்டர் விலைப்பட்டியல் என்பதைக் கிளிக் செய்யவும்.

4. குறியீட்டைத் திருத்து என்பதைக் கிளிக் செய்யவும்.

5. {% if payment_terms %} எனத் தொடங்கும் குறியீட்டுப் பகுதியைக் கண்டறிந்து, அதன் கீழே {% endif %} வரை உள்ள பகுதியை பின்வரும் குறியீட்டுத் துணுக்கைக் கொண்டு மாற்றவும்:

Total due today

{{ amount_due_now | money_with_currency }}

{% assign next_payment = payment_terms.next_payment %}
{% assign due_at_date = next_payment.due_at | date: format: 'date' %}
{% assign next_amount_due = total_price | minus: amount_due_now %}

{% if payment_terms.type == 'receipt' %}

Total due on receipt

{{ next_amount_due | money_with_currency }}

{% elsif payment_terms.type == 'fulfillment' %}

Total due on fulfillment

{{ next_amount_due | money_with_currency }}

{% else %}

Total due {{ due_at_date }}

{{ next_amount_due | money_with_currency }}

1. விருப்பத்தேர்வு: உங்கள் மாற்றங்களின் முன்னோட்டத்தைப் பார்க்க, முன்னோட்டம் என்பதைக் கிளிக் செய்யவும்.
2. சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.