உங்கள் ஸ்டோருக்கான அணுகலைக் கோர, புதிய B2B வாடிக்கையாளர்களை அனுமதித்தல்
நிறுவனக் கணக்குக் கோரிக்கைகளைப் பயன்படுத்தி உங்கள் ஆன்லைன் ஸ்டோருக்கான அணுகலைக் கோர, புதிய B2B வாடிக்கையாளர்களை நீங்கள் அனுமதிக்கலாம். நீங்கள் Shopify Forms செயலியை நிறுவி, மொத்த விற்பனை வாடிக்கையாளர்கள் நிரப்புவதற்கான ஒரு படிவத்தை உருவாக்கித் தனிப்பயனாக்க வேண்டும். பின்னர் உங்கள் ஆன்லைன் ஸ்டோரில் ஒரு பாப்-அப் அல்லது இன்லைன் படிவத்தைச் சேர்க்க வேண்டும்.
வாடிக்கையாளர் ஒருவர் படிவத்தைச் சமர்ப்பிக்கும்போது, உங்கள் Shopify நிர்வாகியில் ஒரு நிறுவனம், நிறுவனத்தின் இருப்பிடம் மற்றும் வாடிக்கையாளர் ஆகியவை தானாகவே உருவாக்கப்படும். ஏற்கனவே உள்ள ஒரு நிறுவனத்தில் வாடிக்கையாளர்களைச் சேர்க்க இந்த அம்சம் அனுமதிக்காது. அவர்களின் தகவலை நீங்கள் மதிப்பாய்வு செய்து, உங்கள் ஆன்லைன் ஸ்டோரை அணுகுவதற்கும் உங்கள் வணிகத்திலிருந்து பொருட்களை வாங்குவதற்குமான அவர்களின் கோரிக்கையை அங்கீகரிக்கவோ நிராகரிக்கவோ முடியும்.
இந்தப் பக்கத்தில்
நிறுவனக் கணக்குக் கோரிக்கைப் படிவத்தை அமைத்தல்
நிறுவனக் கணக்குக் கோரிக்கைப் படிவத்தை அமைக்கும் முன், Shopify Forms செயலியை நிறுவ வேண்டும்.
உங்கள் ஆன்லைன் ஸ்டோரில் ஒரு பாப்-அப் அல்லது இன்லைன் படிவத்தை அமைக்கலாம். பொதுவாக, சிறிய படிவங்களுக்குப் பாப்-அப்கள் பயன்படுத்தப்படும். பெரிய படிவங்களுக்கு அல்லது உங்கள் ஆன்லைன் ஸ்டோரில் பிரத்யேகமான ஒரு பதிவுப் பக்கம் இருக்க வேண்டும் என நீங்கள் விரும்பும்போது இன்லைன் படிவங்கள் மிகவும் பொருத்தமானவை.
படிகள்:
உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, செயலிகள் > Forms பகுதிக்குச் செல்லவும்.
படிவத்தை உருவாக்கு என்பதைக் கிளிக் செய்யவும்.
நீங்கள் பாப்-அப் படிவத்தை உருவாக்க விரும்புகிறீர்களா அல்லது இன்லைன் படிவத்தை உருவாக்க விரும்புகிறீர்களா என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
படிவத்திற்கான பெயரை உள்ளிடவும்.
உருவாக்கு என்பதைக் கிளிக் செய்யவும்.
புலங்கள் பிரிவில், நிறுவனம் மற்றும் வாடிக்கையாளர் என்பதைக் கிளிக் செய்யவும். ஒரு நிறுவனப் பதிவைத் தானாக உருவாக்க, நிறுவனத்தின் பெயரும் மின்னஞ்சல் முகவரியும் அவசியம்.
விருப்பத்தேர்வு: கூடுதல் புலங்களைச் சேர்க்க, பின்வருவனவற்றைச் செய்யவும்:
- புதிய புலத்தைச் சேர் என்பதைக் கிளிக் செய்யவும்.
- ஏற்கனவே இருக்கும் புலத்தைத் தேர்ந்தெடுக்கவும் அல்லது பிரத்தியேக உள்ளீட்டை உருவாக்க, புதிய புலம் என்பதைக் கிளிக் செய்யவும். ஏற்கனவே இருக்கும் புலங்கள் சமர்ப்பிக்கப்படும் போது, அந்தப் புலத்திற்கான பதிவை உங்கள் Shopify நிர்வாகியில் தானாகவே உருவாக்கும். இயல்பாக, எல்லாப் புலச் சமர்ப்பிப்புகளும் ஒரு மெட்டாஆப்ஜெக்ட்டாக சேமிக்கப்படும். நீங்கள் அந்தப் புலத்தை நிறுவன மெட்டாஃபீல்டு அல்லது வாடிக்கையாளர் மெட்டாஃபீல்டாகவும் சேமிக்கலாம்.
படிவத்தின் மீதமுள்ளவற்றை உங்கள் விருப்பங்களுக்கு ஏற்ப உள்ளமைக்கவும்.
சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.
நீங்கள் தேர்ந்தெடுத்த படிவத்தின் வகையைப் பொறுத்து:
- உங்கள் ஆன்லைன் ஸ்டோரில் பாப்-அப் படிவத்தைச் சேர்க்கவும்
- உங்கள் ஆன்லைன் ஸ்டோரில் இன்லைன் படிவத்தைச் சேர்க்கவும்
உங்கள் படிவத்தில் பிரத்தியேக உள்ளீட்டுப் புலங்களைச் சேர்த்தல்
உங்கள் படிவத்தில் பிரத்தியேகப் புலங்களைச் சேர்க்கலாம், அவற்றை உள்ளூர் புலங்களாக, வாடிக்கையாளர் மெட்டாஃபீல்டுகளாக அல்லது நிறுவன மெட்டாஃபீல்டுகளாக (வாடிக்கையாளர் அல்லது நிறுவனம்) சேமிக்கலாம். பிரத்தியேகப் புலத்தை உருவாக்கும்போது, அதற்குப் பெயரிடவும், புலத்தின் வகையைத் தேர்ந்தெடுக்கவும், படிவச் சமர்ப்பிப்புக்கு இது அவசியமானதா என்பதையும் தேர்ந்தெடுக்க வேண்டும். படிவப் புலங்களை நிர்வகிப்பது குறித்து மேலும் அறிக.
உள்ளூர் புலங்கள்
உள்ளூர் புலங்கள் அவை உருவாக்கப்படும் படிவத்தில் மட்டுமே சேமிக்கப்படும். பிற படிவங்களில் எதிர்காலப் பயன்பாட்டிற்காக அவை சேமிக்கப்படாது. புதிய படிவத்தில் உள்ளூர் புலத்தை மீண்டும் பயன்படுத்த, அந்தப் புலத்தைப் பயன்படுத்தும் ஏற்கனவே இருக்கும் படிவத்தை நகலெடுக்க வேண்டும்.
உள்ளூர் புலங்களுக்காகச் சமர்ப்பிக்கப்படும் தகவல்களை மெட்டாஆப்ஜெக்ட்டுகளுக்குள் மட்டுமே பார்க்க முடியும். வாடிக்கையாளர் படிவத்தைச் சமர்ப்பித்த பிறகு உருவாக்கப்படும் நிறுவன அல்லது வாடிக்கையாளர் சுயவிவரத்தில் இது கிடைக்காது. நிறுவன அல்லது வாடிக்கையாளர் சுயவிவரத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அனைத்துத் தகவல்களையும் பார்க்க விரும்பினால், அந்தத் தகவலை வாடிக்கையாளர் அல்லது நிறுவன மெட்டாஃபீல்டாகச் சேமிக்கவும்.
வாடிக்கையாளர் மெட்டாஃபீல்டாகவும் சேமி என்பதைத் தேர்ந்தெடுப்பதன் மூலம், எந்த நேரத்திலும் உள்ளூரில் சேமிக்கப்பட்ட புலத்தை வாடிக்கையாளர் அல்லது நிறுவன மெட்டாஃபீல்டாக மாற்றலாம். உள்ளூர் புலத்தை மெட்டாஃபீல்டாக மாற்றும்போது, புதிய படிவச் சமர்ப்பிப்புகள் மட்டுமே மெட்டாஃபீல்டில் சேமிக்கப்படும். முந்தைய சமர்ப்பிப்புகள் உள்ளூர் புலத் தரவாகவே இருக்கும்.
வாடிக்கையாளர் அல்லது நிறுவன மெட்டாஃபீல்டுகள்
வாடிக்கையாளர் அல்லது நிறுவன மெட்டாஃபீல்டுகள் பிற படிவங்களில் மீண்டும் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் படிவப் புலத் தேர்வியில் சேமிக்கப்படும். உங்களிடம் 20 மெட்டாஃபீல்டுகள் வரை இருந்தால், அவை அனைத்தும் மீண்டும் பயன்படுத்துவதற்குக் கிடைக்கும். உங்களிடம் 20-க்கும் மேற்பட்ட மெட்டாஃபீல்டுகள் இருந்தால், பின் செய்யப்பட்ட மெட்டாஃபீல்டுகள் மட்டுமே காட்டப்படும். உங்கள் பின் செய்யப்பட்ட மெட்டாஃபீல்டுகளை நிர்வகிப்பது குறித்து மேலும் அறிக.
பிரத்தியேக உள்ளீட்டுப் புலத்தை மெட்டாஃபீல்டாகச் சேமித்த பிறகு, அதை மீண்டும் உள்ளூர் புலமாக மாற்ற முடியாது. அத்துடன் மெட்டாஃபீல்டுகளில் ஏதேனும் மாற்றங்கள் செய்யப்பட்டால், அந்தப் புலத்தைப் பயன்படுத்தும் அனைத்துப் படிவங்களும் புதுப்பிக்கப்படும்.
நீங்கள் பிரத்தியேக உள்ளீட்டுப் புலத்தை மெட்டாஃபீல்டாகச் சேமித்த பிறகு, அது உங்கள் Shopify நிர்வாகியின் பிரத்தியேகத் தரவு > வாடிக்கையாளர்கள் அல்லது நிறுவனங்கள் பிரிவில் சேமிக்கப்படும். B2B வாடிக்கையாளர்களுக்கான நிறுவனக் கணக்குக் கோரிக்கைகளை மதிப்பிட அல்லது வாடிக்கையாளர் பிரிவுகளை உருவாக்க, இந்த மெட்டாஃபீல்டுத் தரவைப் பயன்படுத்தலாம்.
வாடிக்கையாளர் சுயவிவரத்துடன் ஏற்கனவே இணைக்கப்பட்டுள்ள புலத்திற்கு வாடிக்கையாளர் ஒன்றுக்கு மேற்பட்ட முறை தகவல்களைச் சமர்ப்பித்தால், அவரது வாடிக்கையாளர் சுயவிவரம் மிகச் சமீபத்திய படிவச் சமர்ப்பிப்பின் மெட்டாஃபீல்டுத் தரவை மட்டுமே காட்டும்.
பிரத்தியேக உள்ளீட்டுப் புலத் தரவு வகைகள்
பிரத்தியேகப் புலம் பின்வரும் தரவு வகைகளில் ஒன்றாக இருக்கலாம்:
| புலத் தரவு வகை | விளக்கம் |
|---|---|
| ஒரே வரி உரை | ஒற்றை வாக்கியத்திற்கு ஏற்ற சிறிய உரைப் புலம். |
| கீழ்தோன்றும் பட்டியல் | பயனர் ஒரு விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கும் வகையில் கீழ்தோன்றும் மெனுவாக வழங்கப்படும் விருப்பங்களின் பட்டியல். |
| ரேடியோ பொத்தான்கள் | பயனர் ஒரு விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கும் வகையில் பொத்தான்களின் தொடர்ச்சியாக வழங்கப்படும் விருப்பங்களின் பட்டியல். |
| பல வரி உரை | ஒரு பத்திக்கு ஏற்ற நீண்ட உரைப் புலம். |
| பல்வேறு தேர்வுகள் | தேர்வுப்பெட்டிகளின் தொடர்ச்சியாக வழங்கப்படும் விருப்பங்களின் பட்டியல். கீழ்தோன்றும் பட்டியல் மற்றும் ரேடியோ பொத்தான்கள் போலின்றி, பயனர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட பதில்களைத் தேர்ந்தெடுக்கலாம். |
| தேதி | ஒரு குறிப்பிட்ட தேதி. |
| எண் | ஒரே ஒரு எண். |
| கோப்புப் பதிவேற்றம் | 20 MB அல்லது அதற்கும் குறைவான அளவைக் கொண்ட ஒரு கோப்பு இணைப்பு. கோப்பானது பின்வரும் ஏற்றுக்கொள்ளப்பட்ட கோப்பு வகைகளில் ஒன்றாக இருக்க வேண்டும்:
|
எடுத்துக்காட்டாக, ஒரு நிறுவனத்தை B2B வாடிக்கையாளராக அங்கீகரிப்பதற்கு முன், அவர்களிடம் எத்தனை ஷிப்பிங் இடங்கள் உள்ளன என்பதை நீங்கள் அறிய விரும்பினால், பிரத்தியேக எண் புலத்துடன் படிவத்தை உருவாக்கலாம். புதிய B2B வாடிக்கையாளர்கள் படிவத்தைப் பூர்த்தி செய்யும்போது, அதைச் சமர்ப்பிப்பதற்கு முன்பு தங்களிடம் உள்ள இடங்களின் எண்ணிக்கையை அவர்கள் உள்ளிட வேண்டும். எதிர்காலக் குறிப்புக்காக, இந்தத் தகவலை அவர்களின் நிறுவனச் சுயவிவரத்தில் ஒரு மெட்டாஃபீல்டாக நீங்கள் சேமிக்கலாம்.
நிறுவனக் கணக்குக் கோரிக்கைகளை மதிப்பாய்வு செய்தல்
உங்கள் ஆன்லைன் ஸ்டோரில் படிவத்தைச் சேர்த்த பிறகு, உங்கள் வணிகத்தில் இருந்து வாங்குவதற்கான அணுகலைக் கோர, புதிய மொத்த விற்பனை வாடிக்கையாளர்கள் படிவத்தைச் சமர்ப்பிக்கலாம். ஒரு வாடிக்கையாளர் படிவத்தைச் சமர்ப்பிக்கும்போது, தொடர்புடைய வாடிக்கையாளர் மற்றும் இடத்தைக் கொண்ட நிறுவனம் மதிப்பாய்வு செய்வதற்காக உங்கள் Shopify நிர்வாகியில் உருவாக்கப்படும். நீங்கள் ஏற்கனவே இருக்கும் புலங்களைச் சேர்த்திருந்தால், அவையும் நிறுவனத்திற்கும் வாடிக்கையாளருக்கும் தானாகவே புதுப்பிக்கப்படும்.
நீங்கள் அங்கீகரிக்கும் வரை, இயல்பாகப் படிவத்தின் மூலம் உருவாக்கப்பட்ட நிறுவனங்களால் உங்கள் ஆன்லைன் ஸ்டோரில் ஆர்டர்களைச் செய்யவோ B2B விலை நிர்ணயத்தை அணுகவோ முடியாது. Shopify Flow இல் உள்ள நிறுவனக் கணக்குக் கோரிக்கைகளால் உருவாக்கப்பட்ட நிறுவனங்களுக்கான ஆர்டரை அனுமதி வார்ப்புருவைப் பயன்படுத்தி, சமர்ப்பிக்கப்பட்ட அனைத்துப் புதிய நிறுவனக் கணக்குக் கோரிக்கைகளையும் நீங்கள் தானாகவே அங்கீகரிக்கலாம். Shopify Flow க்கான B2B வார்ப்புருக்கள் பற்றி மேலும் அறிக.
நீங்கள் ஆர்டர் செய்தல் நெடுவரிசையில் உள்ள நிறுவனக் கணக்குக் கோரிக்கைகளை மதிப்பாய்வு செய்து, Shopify நிர்வாகியில் உள்ள நிறுவனங்களை அங்கீகரிக்க வேண்டுமா என்பதைத் தேர்ந்தெடுக்கலாம். உங்கள் Shopify நிர்வாகியில் உள்ளடக்கம் > மெட்டாஆப்ஜெக்ட்டுகள் > சமீபத்திய உள்ளீடுகள் என்பதற்குச் சென்று, அனைத்துப் படிவச் சமர்ப்பிப்புகளின் பதிவையும் பார்க்கலாம்.
படிகள்:
- உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, வாடிக்கையாளர்கள் > நிறுவனங்கள் என்பதற்குச் செல்லவும்.
- ஆர்டர் செய்வது அங்கீகரிக்கப்படவில்லை தாவலைக் கிளிக் செய்யவும்.
- நீங்கள் மதிப்பாய்வு செய்ய விரும்பும் நிறுவனத்தைக் கிளிக் செய்யவும்.
- மெட்டாஃபீல்டுகள் பிரிவில், உங்கள் படிவத்தைப் பயன்படுத்தி நிறுவனத் தொடர்பு சமர்ப்பித்துள்ள தகவலை மதிப்பாய்வு செய்யவும்:
- விண்ணப்பத்தை நிராகரிக்க, நிறுவனத்தை நீக்கவும்.
- நிறுவனத்தை அங்கீகரிக்க, பின்வருவனவற்றைச் செய்யவும்:
- அனுமதிகளை நிர்வகி என்பதைக் கிளிக் செய்யவும்.
- இடங்களைத் தேர்ந்தெடுத்து, அனுமதிகளை ஒதுக்குங்கள்.
- அடுத்து என்பதைக் கிளிக் செய்யவும்.
- விருப்பத்திற்குரியது: நிறுவனத் தொடர்புக்கு மின்னஞ்சலை அனுப்ப, B2B ஆர்டர்களைச் செய்யத் தொடங்கலாம் என்பதை வாடிக்கையாளருக்குத் தெரிவி என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
- விருப்பத்தேர்வு: உங்கள் படிவத்தில் உள்ளூர் புலங்கள் இருந்தால், அந்தப் புலங்களுக்குச் சமர்ப்பிக்கப்பட்ட தகவல்களை மெட்டாஆப்ஜெக்ட்டுகளில் மதிப்பாய்வு செய்யலாம்:
- மெட்டாஃபீல்டுகள் பிரிவில், Shopify Forms சமர்ப்பிப்புகள் என்பதற்கு அடுத்துள்ள சாம்பல் நிற நேரம் மற்றும் தேதிக்கான பெட்டியைக் கிளிக் செய்யவும்.
- உள்ளூர் புலங்கள் மற்றும் முழுமையான படிவச் சமர்ப்பிப்பைப் பார்க்க, படிவம் சமர்ப்பிக்கப்பட்ட நேரத்தையும் தேதியையும் கிளிக் செய்யவும்.
வரையறுக்கப்பட்ட B2B ஸ்டோர்கள் மற்றும் நிறுவனக் கணக்குக் கோரிக்கைகள்
B2B வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே கிடைக்கும்படி வரையறுக்கப்பட்ட பிரத்யேகக் கடையை நீங்கள் வைத்திருக்கும்போது நிறுவனக் கணக்குக் கோரிக்கைகளை உங்களால் பயன்படுத்த முடியாது.
இருப்பினும், ஸ்டோர் வரையறையை அகற்றிவிட்டு, உள்நுழைந்த மொத்த விற்பனை வாடிக்கையாளர்கள் மட்டுமே அணுகும் வகையில் முக்கியமான தகவல்களை மறைக்கலாம். இதன்மூலம், நீங்கள் பொதுவில் பகிர விரும்பாத எந்தத் தகவலையும் வெளிப்படுத்தாமல் உங்கள் ஆன்லைன் ஸ்டோரின் பொதுப் பகுதியில் படிவத்தைச் சேர்க்க முடியும்.
நீங்கள் பயன்படுத்தும் தீமைப் பொறுத்து, Liquid குறியீடு அல்லது தீம் எடிட்டரைப் பயன்படுத்தி உள்நுழையாத வாடிக்கையாளர்களிடமிருந்து தயாரிப்புகள், விலைகள், வாங்குவதற்கான பொத்தான்கள் மற்றும் பிற தகவல்களை உங்களால் மறைக்க முடியும். உங்கள் தீமைத் தனிப்பயனாக்குவதற்கு முன், ஒரு காப்புநகலை உருவாக்க உங்கள் தீமை நகலெடுப்பதை உறுதிசெய்யவும்.
படிகள்:
உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, ஆன்லைன் ஸ்டோர் என்பதற்குச் செல்லவும்.
நீங்கள் திருத்த விரும்பும் தீமுக்கு அருகில் உள்ள தீமைத் திருத்து என்பதைக் கிளிக் செய்யவும்.
இயல்புநிலை சூழலில், முகப்பு, தயாரிப்புகள் அல்லது பக்கங்கள் போன்ற எந்தப் பக்கத்திலிருந்து தகவலை மறைக்க வேண்டுமோ அந்தப் பக்கத்தைத் தேர்ந்தெடுக்க கீழ்தோன்றும் மெனுவைப் பயன்படுத்தவும்.
நீங்கள் மறைக்க வேண்டிய தகவலைக் கண்டறிந்து, உள்ளடக்கத்தை மறைக்க கண் ஐகானைக் கிளிக் செய்யவும்.
விருப்பத்தேர்வு: நீங்கள் விற்கும் ஒரு தயாரிப்பை அறியப்படாத அல்லது புதிய வாடிக்கையாளர்களிடம் இருந்து மறைத்து, அதேநேரத்தில் உள்நுழைந்த உங்கள் B2B வாடிக்கையாளர்கள் அணுகும்படி செய்ய விரும்பினால், ஆன்லைன் ஸ்டோர் விற்பனைச் சேனலிலிருந்து அந்தத் தயாரிப்பை அகற்றவும். பல தயாரிப்புகளை மறைக்க விரும்பினால், மொத்தச் செயல்களைப் பயன்படுத்தலாம்.
உங்கள் பார்வையை B2B சூழலுக்கு மாற்றி, தொடர்புடைய அனைத்துத் தகவல்களும் உள்நுழைந்த B2B வாடிக்கையாளர்களுக்கு இன்னும் கிடைக்கிறதா என்பதை உறுதிசெய்யவும்.