கலப்பு B2B ஸ்டோர்களுக்கான அமைவு சரிபார்ப்புப் பட்டியல்

இந்தச் சரிபார்ப்புப் பட்டியல் கலப்பு ஸ்டோரை அமைக்க விரும்பும் வணிகங்களுக்கானது. கலப்பு ஸ்டோர் என்பது B2B மற்றும் D2C வாடிக்கையாளர்கள், ஆர்டர்கள் ஆகிய இரண்டுக்கும் பயன்படுத்தப்படும் ஒரே Shopify ஸ்டோர் ஆகும்.

ஸ்டோர் வகையைத் தேர்ந்தெடுப்பது Shopify B2B-ஐப் பயன்படுத்துவதில் ஒரு முக்கிய முடிவாகும். கலப்பு ஸ்டோர்களுக்கும் பிரத்யேக ஸ்டோர்களுக்கும் உள்ள வேறுபாடுகளை மதிப்பாய்வு செய்வதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

இந்தப் பக்கத்தில்

நீங்கள் தொடங்குவதற்கு முன்

படி 1: நிறுவனங்கள், நிறுவன இருப்பிடங்களை உருவாக்குதல்

நிறுவனங்கள் மற்றும் நிறுவனத்தின் இருப்பிடங்களைப் பயன்படுத்தி Shopify இல் உங்கள் B2B வாடிக்கையாளர்களை நீங்கள் அமைக்கலாம். நிறுவனம் என்பது ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நிறுவனத்தின் இருப்பிடங்களுக்கான பெற்றோர் அமைப்பாகும். நிறுவனத்தின் இருப்பிடம் என்பது நீங்கள் ஒரு B2B பரிவர்த்தனையில் விற்பனை செய்யும் வணிகமாகும். ஒவ்வொரு நிறுவனத்தின் இருப்பிடமும் அதற்கெனச் சொந்தமான வரி ID, வரி விலக்குகள், ஷிப்பிங் மற்றும் பில்லிங் முகவரி, விலை நிர்ணயம் மற்றும் கட்டண விதிமுறைகளைக் கொண்டிருக்கலாம். உங்கள் Shopify நிர்வாகியில் நிறுவனங்கள் மற்றும் இருப்பிடங்களை நீங்கள் உருவாக்கலாம் அல்லது மூன்றாம் தரப்புச் செயலியான Matrixify-ஐப் பயன்படுத்தி அவற்றை மொத்தமாக இறக்குமதி செய்யலாம். உங்களிடம் தற்போதுள்ள சந்தைகள் மற்றும் கேட்லாக் உள்ளமைவை விளக்குமாறு Sidekick-இடம் நீங்கள் கேட்கவும் முடியும்.

விருப்பம் 1: உங்கள் Shopify நிர்வாகியில் இருந்து நிறுவனங்களை அமைத்தல்

விருப்பம் 2: Matrixify-ஐப் பயன்படுத்தி நிறுவனங்களை இறக்குமதி செய்தல்

விருப்பம் 3: Shopify API-ஐப் பயன்படுத்தி நிறுவனங்களை இறக்குமதி செய்தல்

படி 2: கேட்டலாக்குகளை உருவாக்குதல்

உங்கள் நிறுவனத்தின் இருப்பிடங்களை அமைத்த பிறகு, உங்கள் ஆன்லைன் ஸ்டோரில் அவர்களுக்கு வழங்க விரும்பும் தயாரிப்புகள் மற்றும் விலைகளுக்கான கேட்லாக்குகளை உருவாக்குங்கள். Basic, Grow மற்றும் Advanced திட்டங்களில், ஒரு B2B சந்தையை உருவாக்கி அதில் உங்கள் கேட்லாக்கை ஒதுக்கவும். செயலில் உள்ள B2B சந்தைகளில் அதிகபட்சம் 3 செயலில் உள்ள கேட்லாக் ஒதுக்கீடுகள் மட்டுமே அனுமதிக்கப்படும். Shopify Plus திட்டத்தில், வாடிக்கையாளர் சார்ந்த விலை நிர்ணயத்திற்காகக் கேட்லாக்குகளை நேரடியாக நிறுவனத்தின் இருப்பிடங்களுக்கும் நீங்கள் ஒதுக்கலாம்.

B2B சந்தைக்கு ஒரு கேட்லாக்கை ஒதுக்குவதற்கு, கேட்லாக் B2B வாடிக்கையாளர்களுக்குப் பொருந்துமாறு நிறுவனத்தின் இருப்பிடங்கள் நிபந்தனையைப் பயன்படுத்தவும். பிராந்தியம் மட்டுமான சந்தைக்குக் கேட்லாக்கை ஒதுக்குவது D2C விலை நிர்ணயத்தையும் மாற்றக்கூடும். எந்த வாடிக்கையாளர்கள் கேட்லாக் விலைகளைப் பெறுகிறார்கள் என்பது பற்றி மேலும் அறிக.

படி 3: B2B வாடிக்கையாளர்களுக்கான உள்நுழைவு மற்றும் கணக்குகளைச் செயல்படுத்தவும்

B2B வாடிக்கையாளர்கள் தங்களுக்குரிய விலை நிர்ணயம், தயாரிப்புகள் மற்றும் கணக்குத் தகவல்களை அணுகுவதற்கு முன்பு தங்களை அங்கீகரித்துக்கொள்ளவும் உள்நுழைந்த பிறகு ஆன்லைனில் தங்கள் கணக்கை நிர்வகிக்கவும் வாடிக்கையாளர் கணக்குகள் அனுமதிக்கின்றன. Shopify B2B-ஐப் பயன்படுத்த, நீங்கள் வாடிக்கையாளர் கணக்குகளைச் செயல்படுத்த வேண்டும். சந்தைகள் மூலமான சூழல்சார் செக்அவுட்டிற்கு, Advanced திட்டம் அல்லது அதற்கு மேம்பட்ட திட்டம் தேவை.

உங்கள் ஸ்டோரில் பழைய வாடிக்கையாளர் கணக்குகளைப் பயன்படுத்துகிறீர்கள் எனில், D2C வாடிக்கையாளர்களுக்கு அவற்றைத் தொடர்ந்து பயன்படுத்தலாம்; அத்துடன் B2B வாடிக்கையாளர்களுக்கு மட்டும் பிரத்தியேகமாக வாடிக்கையாளர் கணக்குகளைச் செயல்படுத்தலாம். பழைய வாடிக்கையாளர் கணக்குகளை இயக்கப்பட்ட நிலையிலேயே வைத்திருக்கலாம்; அதன்பிறகு வாடிக்கையாளர் கணக்குகளைச் செயல்படுத்தவும் B2B வாடிக்கையாளர்களை உள்நுழைய அனுமதிக்கவும் உங்கள் ஆன்லைன் ஸ்டோரில் எங்கு வேண்டுமானாலும் வாடிக்கையாளர் கணக்குகளுக்கான உள்நுழைவு URL-ஐச் சேர்க்கலாம்.

படி 4: கட்டண மற்றும் ஷிப்பிங் முறைகளை அமைக்கவும்

செக்அவுட்டின்போது உங்கள் வாடிக்கையாளர்களுக்குக் கிடைக்கக்கூடிய கட்டண மற்றும் ஷிப்பிங் முறைகளை அமைக்கவும். இயல்பாகவே இந்த அமைப்புகள் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் பொருந்தும்.

இலவசமான Checkout Blocks செயலி மூலமாகவோ பேமெண்ட் அல்லது டெலிவரி Functions-ஐப் பயன்படுத்தும் பிரத்தியேக அல்லது மூன்றாம் தரப்புச் செயலி மூலமாகவோ B2B மற்றும் D2C வாடிக்கையாளர்களுக்கான குறிப்பிட்ட கட்டண மற்றும் ஷிப்பிங் முறைகள் கிடைப்பதைத் தனிப்பயனாக்கலாம். உதாரணத்திற்கு, உள்நுழைந்த B2B வாடிக்கையாளர்களுக்கு மட்டும் PayPal கிடைக்குமாறு செய்துவிட்டு, D2C வாடிக்கையாளர்களுக்குக் கிடைக்காதபடி செய்யலாம்.

படி 5: (விருப்பத்தேர்வு) உங்கள் ஆன்லைன் ஸ்டோரைத் தனிப்பயனாக்கவும்

உங்களின் ஸ்டோர் தீம் B2B மற்றும் D2C வாடிக்கையாளர்களுக்கு ஒரே மாதிரியாகவே இருக்கும்; ஆனால் வெவ்வேறு தயாரிப்புத் தகவல்கள், விளம்பரங்கள், பேனர்கள் மற்றும் மெசேஜ்களைப் பகிர, B2B மற்றும் D2C வாடிக்கையாளர்களுக்கேற்ப ஸ்டோர் உள்ளடக்கத்தைத் தனிப்பயனாக்கிக் கொள்ளலாம்.

இலவசமான Shopify தீமை (பதிப்பு 11.0+) நீங்கள் பயன்படுத்துகிறீர்கள் எனில், சந்தைகளை அமைப்பதன் மூலமும் தீம் எடிட்டரைப் பயன்படுத்தி ஒவ்வொரு சந்தைக்கும் ஏற்ப தீமை மாற்றுவதன் மூலமும் ஆன்லைன் ஸ்டோரைத் தனிப்பயனாக்கலாம். சந்தை வாரியான தீம் எடிட்டர் தனிப்பயனாக்கங்கள், Advanced மற்றும் அதற்கும் மேம்பட்ட திட்டங்களில் கிடைக்கின்றன. வாடிக்கையாளர் வகை (B2B மற்றும் D2C) வாரியான தீம் எடிட்டர் தனிப்பயனாக்கங்கள் Shopify Plus திட்டத்தில் மட்டுமே கிடைக்கின்றன. இந்தத் தீம்களில் அளவு விதிகள் மற்றும் அளவு அடிப்படையிலான விலை நிர்ணயம் போன்ற சில அம்சங்கள் தானாகவே காட்டப்படும். நீங்கள் பிரத்தியேகத் தீமைப் பயன்படுத்தினால், இதே அம்சங்களையும் தனிப்பயனாக்கங்களையும் அணுக Liquid குறியீட்டைப் பயன்படுத்த வேண்டும்.

இலவசமான Shopify தீம்களுக்கு (பதிப்பு 11.0 அல்லது அதற்குப் பிந்தையது):

பிரத்தியேகத் தீம்களுக்கு:

படி 6: (விருப்பத்தேர்வு) உங்கள் Shopify நிர்வாகியில் விற்பனைப் பணியாளர்களின் ஆர்டரிங்கைச் செயல்படுத்தவும்

நீங்கள் விற்பனைப் பணியாளர்களைப் பணியமர்த்தினால், உங்கள் Shopify நிர்வாகிக்கான வரம்பிடப்பட்ட அணுகலை அவர்களுக்கு வழங்கலாம். உங்கள் பணியாளர்கள் தாங்கள் நிர்வகிக்கும் நிறுவனத்தின் இருப்பிடங்களுக்கான ஆர்டர்களை எடுக்கவும் கணக்குகளை நிர்வகிக்கவும் முடியும்; அத்துடன் வாடிக்கையாளர், தயாரிப்பு, விலை நிர்ணயம் மற்றும் சரக்கு இருப்புத் தரவின் மையப்படுத்தப்பட்ட ஆதாரத்தையும் அணுகலாம். பணியாளர் அனுமதிகளைப் பயன்படுத்தி, உங்கள் Shopify நிர்வாகிக்கான பணியாளர்களின் அணுகலை நீங்களே கட்டுப்படுத்தலாம்.

படி 7: (விருப்பத்திற்குரியது) உங்கள் B2B ஸ்டோரில் கூடுதல் அம்சங்களையும் செயல்பாடுகளையும் சேர்த்தல்

உங்கள் ஆன்லைன் ஸ்டோரில் கூடுதல் பணிப்பாய்வுகளை ஆதரிக்கவும், ஆர்டர் செயலாக்கத்தை முறைப்படுத்தவும் Shopify App Store-இல் இருந்து செயலிகளை நீங்கள் நிறுவலாம். B2B-க்குத் தள்ளுபடிகள் இயல்பாகவே கிடைக்கும். குறிப்பிட்ட B2B வாடிக்கையாளர்களுக்கு மட்டும் கேட்டலாக் விலைகளுடன் சேர்த்துத் தள்ளுபடிகளையும் நீங்கள் வழங்க விரும்பினால், நீங்கள் ஒரு B2B சந்தையை உருவாக்கி, பின்னர் தள்ளுபடியின் தகுதி அமைப்புகளுக்கு அந்தச் சந்தையை ஒதுக்கலாம்.

படி 8: உங்கள் ஸ்டோர் அமைவைச் சோதித்து இறுதி செய்தல்

உங்கள் ஆன்லைன் ஸ்டோரை அறிமுகப்படுத்துவதற்கு முன், B2B மற்றும் D2C ஆகிய இரு அனுபவங்களிலும் கேட்லாக் விலைகளைச் சோதிக்கவும். ஒரு B2B வாடிக்கையாளர் அவரது நிறுவனத்தின் இருப்பிடத்திற்காக உத்தேசிக்கப்பட்ட விலைகளைப் பெறுகிறாரா என்பதையும், அதே நாட்டைச் சேர்ந்த ஒரு D2C வாடிக்கையாளர் எதிர்பார்த்த D2C விலைகளைப் பெறுகிறாரா என்பதையும் உறுதிப்படுத்தவும்.