உங்கள் வாடிக்கையாளர் தரவை Shopify B2B-க்கு இடமாற்றுதல்

தற்போதைய Shopify நேரடி நுகர்வோர் (D2C) வாடிக்கையாளர்களையும் அவர்களின் ஆர்டர் வரலாற்றையும் நிறுவனங்களுக்கு இடமாற்றலாம். உங்கள் Shopify நிர்வாகியில் நிறுவனங்களை இறக்குமதி செய்வது அல்லது உருவாக்குவது குறித்து மேலும் அறிக.

D2C வாடிக்கையாளர்களை B2B நிறுவனங்களுக்கு இடமாற்ற, பின்வரும் விருப்பங்களிலிருந்து ஒன்றை நீங்கள் தேர்வுசெய்யலாம்:

  • ஒரு D2C வாடிக்கையாளர் மற்றும் அவர்களின் ஆர்டர்களிலிருந்து ஒரு புதிய B2B நிறுவனத்தை அமைக்கவும். நீங்கள் தேர்ந்தெடுக்கும் ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் ஒரு நிறுவனத்தை உருவாக்க விரும்பும்போது இந்த விருப்பத்தைப் பயன்படுத்தவும். எடுத்துக்காட்டாக, நீங்கள் 3 வாடிக்கையாளர்களைத் தேர்ந்தெடுத்தால், 3 நிறுவனங்கள் உருவாக்கப்படும். வாடிக்கையாளர்கள் பக்கத்தில் இருந்து இதை நீங்கள் மொத்தமாகச் செய்யலாம்.
  • ஒரு D2C வாடிக்கையாளர் மற்றும் அவர்களின் ஆர்டர்களை, ஏற்கனவே உள்ள ஒரு B2B நிறுவனத்திற்கு இடமாற்றவும். பல வாடிக்கையாளர்களை ஒரு நிறுவனத்தில் சேர்க்க அல்லது ஏற்கனவே உள்ள வாடிக்கையாளரை ஏற்கனவே உள்ள நிறுவனத்தில் சேர்க்க விரும்பும்போது இந்த விருப்பத்தைப் பயன்படுத்தவும். எடுத்துக்காட்டாக, ஒரே நிறுவனத்தில் சேர்க்கப்பட வேண்டிய 3 வாடிக்கையாளர்கள் உங்களிடம் இருக்கும்போது. வாடிக்கையாளர் விவரங்கள் பக்கத்திலிருந்து இதை நீங்கள் தனித்தனியாகச் செய்யலாம்.

வாடிக்கையாளர்களையும் அவர்களின் ஆர்டர் வரலாற்றையும் ஒரு நிறுவனத்திற்கு இடமாற்றுவதற்கான கவனிக்க வேண்டியவை

வாடிக்கையாளர் மற்றும் அவர்களின் ஆர்டர் வரலாற்றை நிறுவனத்தின் இருப்பிடத்திற்கு இடமாற்றுவதற்கு முன், கவனிக்க வேண்டிய பின்வரும் விஷயங்களை மதிப்பாய்வு செய்யவும்:

  • உங்கள் Shopify நிர்வாகியில் ஏற்கனவே D2C வாடிக்கையாளர்கள் இருக்க வேண்டும்.
  • நீங்கள் D2C ஆர்டர்களை மட்டுமே நிறுவனத்திற்கு இடமாற்ற முடியும். B2B ஆர்டர்கள் அவை உருவாக்கப்பட்ட நிறுவனத்திலேயே இருக்கும், அவற்றை மற்றொரு நிறுவனத்திற்கு இடமாற்ற முடியாது.
  • ரத்துசெய்யப்பட்ட அல்லது நீக்கப்பட்ட ஆர்டர்களை உங்களால் இடமாற்ற முடியாது.
  • ஏற்கனவே உள்ள நிறுவனத்திற்கு இடமாற்றும்போது, நீங்கள் ஆர்டர்களை ஒரு நிறுவனத்தின் இருப்பிடத்திற்கு மட்டுமே இடமாற்ற வேண்டும். பல இருப்பிடங்களுக்கு ஆர்டர்களைப் பிரிக்க முடியாது.
  • வாடிக்கையாளரின் முழுமையான ஆர்டர் வரலாற்றை மட்டுமே நிறுவனத்தில் சேர்க்க முடியும், பகுதி ஆர்டர் வரலாற்றை இடமாற்றுவது ஆதரிக்கப்படாது. உங்கள் வாடிக்கையாளரின் ஆர்டர் வரலாற்றில் B2B மற்றும் D2C ஆகிய இரு ஆர்டர்களும் இருந்தால், D2C ஆர்டர்கள் மட்டுமே நிறுவனத்தில் சேர்க்கப்படும்.

விருப்பம் 1: வாடிக்கையாளர்களையும் அவர்களின் வரலாற்றையும் B2B-க்கு இடமாற்றுவதன் மூலம் புதிய நிறுவனத்தை அமைத்தல்

உங்கள் தற்போதைய B2B வாடிக்கையாளர்களில் இருந்து ஒரு இருப்பிடத்தைக் கொண்ட B2B நிறுவனங்களை அமைக்க, உங்கள் Shopify நிர்வாகியின் வாடிக்கையாளர்கள் பக்கத்தில் உள்ள மொத்த அமைவு அம்சத்தைப் பயன்படுத்தலாம். ஒரே நேரத்தில் 250 B2B வாடிக்கையாளர்களைத் தேர்ந்தெடுக்கலாம் அல்லது சிறிய பேட்ச்களாக செயல்முறையை முடிக்கலாம்.

நீங்கள் தேர்ந்தெடுக்கும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையைப் பொறுத்து, அமைவுச் செயல்முறையை முடிக்க மொத்த வாடிக்கையாளர் அமைவு அம்சம் பின்னணியில் இயங்க வேண்டியிருக்கலாம். அமைவு முடிந்ததும் மின்னஞ்சலைப் பெறுவீர்கள், அதோடு தீர்க்க வேண்டிய ஏதேனும் பிழைகள் இருப்பின் அதுவும் தெரிவிக்கப்படும்.

வாடிக்கையாளர் தகவலை இறக்குமதி செய்தல்

மொத்தமாக நிறுவனத்தை அமைக்கும்போது, உங்கள் வாடிக்கையாளர்களுக்கான பின்வரும் தகவல் மற்றும் அமைப்புகளை இறக்குமதி செய்ய வேண்டுமா என்பதை நீங்கள் தேர்வுசெய்யலாம்:

வாடிக்கையாளர் தகவல் மற்றும் நிறுவனத்தின் அமைப்புகள்
அமைப்புவிளக்கம்
கடந்தகால ஆர்டர்கள்வாடிக்கையாளரின் கடந்தகால ஆர்டர்கள் அனைத்தையும் நிறுவனத்தின் இருப்பிடத்திற்குச் சேர்க்க வேண்டுமா என்பதை நீங்கள் தேர்வுசெய்யலாம். இந்த விருப்பத்தை நீங்கள் தேர்ந்தெடுத்தால், வாடிக்கையாளர்கள் உள்நுழையும்போது அவர்களின் கடந்தகால B2B ஆர்டர்களைப் பார்க்க முடியும். நீங்கள் தேர்ந்தெடுத்த வாடிக்கையாளர்கள் ஏற்கனவே B2B உறவுகளைக் கொண்டிருந்தால், கடந்தகால ஆர்டர்களை இறக்குமதி செய்ய பரிந்துரைக்கப்படுகிறது.
வரி விலக்குகள்குறிப்பிட்ட வாடிக்கையாளர் வரி விலக்குகளை நிறுவனத்தின் இருப்பிடத்திற்கு இடமாற்ற வேண்டுமா என்பதை நீங்கள் தேர்வுசெய்யலாம். நியூயார்க் மறுவிற்பனையாளர் போன்ற குறிப்பிட்ட வரி விலக்குகளை நீங்கள் இடமாற்றலாம், ஆனால் வரியை வசூலி என்பதை முடக்குவதன் மூலம் அமைக்கப்படும் விலக்குகள் இடமாற்றப்படாது, அவற்றை நீங்கள் கைமுறையாகச் சரிசெய்ய வேண்டும். B2B வாடிக்கையாளருக்கான அதே விலக்குகள் B2B நிறுவனத்திற்கும் பொருந்தும் என்றால், நீங்கள் வரி விலக்குகளை இடமாற்ற வேண்டும்.
எந்தவொரு முகவரிக்கும் அனுப்ப வாடிக்கையாளர்களை அனுமதிஇயல்பாக, செக்அவுட்டின் போது நிறுவனத்தின் ஷிப்பிங் முகவரி தானாகவே நிரப்பப்பட்டிருக்கும், அதை மாற்றுவதில் இருந்து நிறுவனங்களுக்குக் கட்டுப்பாடு உள்ளது. இந்த அமைப்பை நீங்கள் தேர்வுசெய்தால், செக்அவுட்டின் போது நிறுவனங்களால் ஷிப்பிங் முகவரியை மாற்ற முடியும்.
அனைத்து ஆர்டர்களையும் மதிப்பாய்வுக்கான வரைவாகச் சமர்ப்பிஇயல்பாக, செக்அவுட்டின்போது ஆர்டர்கள் சமர்ப்பிக்கப்படும். நீங்கள் அனைத்து ஆர்டர்களையும் வரைவாகச் சமர்ப்பிக்கத் தேர்வுசெய்தால், வாடிக்கையாளரின் ஆர்டர்கள் வரைவு ஆர்டர்களாகச் சமர்ப்பிக்கப்படும்.
கட்டண விதிமுறைகள்உங்கள் வாடிக்கையாளர்களுக்கு வழங்க விரும்பும் கட்டண விதிமுறைகளை நீங்கள் தேர்வுசெய்யலாம். நிறுவனங்கள் செக்அவுட்டிலேயே ஆர்டர்களுக்கான கட்டணத்தைச் செலுத்த வேண்டுமென நீங்கள் விரும்பினால், கட்டண விதிமுறைகள் இல்லை என்பதைத் தேர்வுசெய்யவும்.

மொத்தமாக நிறுவனத்தை அமைக்கும்போது இந்த அமைப்புகளை நீங்கள் இறக்குமதி செய்யவில்லை எனில், பின்னர் தனிப்பட்ட நிறுவனங்களுக்கான அமைப்புகளைக் கைமுறையாகப் புதுப்பித்துக்கொள்ளலாம். B2B நிறுவனத்தின் அமைப்புகள் குறித்து மேலும் அறிக.

D2C வாடிக்கையாளரிடமிருந்து புதிய நிறுவனத்தை அமைப்பதில் நீங்கள் தவறு செய்துவிட்டால், அந்த நிறுவனத்தை நீக்கிக்கொள்ளலாம். வாடிக்கையாளர் மற்றும் அவர்களின் ஆர்டர்கள் மீண்டும் D2C-க்கு மாற்றப்படும்.

வாடிக்கையாளர்களையும் அவர்களின் வரலாற்றையும் B2B-க்கு இடமாற்றுவதன் மூலம் புதிய நிறுவனத்தை அமைத்தல்

  1. உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, வாடிக்கையாளர்கள் பகுதிக்குச் செல்லவும்.

  2. விருப்பத்திற்குரியது: இந்த வாடிக்கையாளர்களை அடையாளங்காண உங்களிடம் ஏற்கனவே டேக் இருந்தால், வடிகட்டியைச் சேர் என்பதைக் கிளிக் செய்து, டேக் மூலம் வாடிக்கையாளர்களை வடிகட்டவும்.

  3. நீங்கள் இடமாற்ற விரும்பும் வாடிக்கையாளர்களைத் தேர்ந்தெடுக்கவும். நீங்கள் அனைத்து வாடிக்கையாளர்களையும் தேர்ந்தெடுக்கலாம் அல்லது வாடிக்கையாளர்களின் ஒரு சிறிய குழுவைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் இந்தச் செயல்முறையைக் கட்டம் கட்டமாக முடிக்கலாம்.

  4. … மெனுவைக் கிளிக் செய்து, பின்னர் நிறுவனத்தில் சேர் என்பதைக் கிளிக் செய்யவும்.

  5. நீங்கள் பயன்படுத்த விரும்பும் நிறுவன அமைப்புகளையும் நீங்கள் சேர்க்க விரும்பும் வாடிக்கையாளர் தகவலையும் தேர்வுசெய்யவும்.

  6. நிறுவனங்களை அமை என்பதைக் கிளிக் செய்யவும்.

விருப்பம் 2: ஒரு வாடிக்கையாளரையும் அவரது ஆர்டர் வரலாற்றையும் ஏற்கனவே உள்ள நிறுவனத்திற்கு இடமாற்றுங்கள்

நீங்கள் ஏற்கனவே நிறுவனங்களை அமைத்திருந்தால், D2C வாடிக்கையாளர்களையும் ஆர்டர் வரலாற்றையும் தற்போதுள்ள ஒரு நிறுவனத்திற்கும் நிறுவனத்தின் இருப்பிடத்திற்கும் இடமாற்ற விரும்பலாம். நிறுவனத்திற்குப் பல இருப்பிடங்கள் இருந்தால், அந்த இருப்பிடங்களில் ஏதேனும் ஒன்றிற்கு மட்டுமே உங்களால் இடமாற்ற முடியும்.

ஏற்கனவே உள்ள நிறுவனத்திற்கு வாடிக்கையாளர்களை இடமாற்றுவதில் நீங்கள் தவறு செய்தால், நிறுவனத்திலிருந்து வாடிக்கையாளரை அகற்றலாம். வாடிக்கையாளருடன் நீங்கள் இடமாற்றிய அசல் ஆர்டர்களை அகற்றுவதற்கான விருப்பம் உங்களிடம் உள்ளது. வாடிக்கையாளரும் முதலில் இடமாற்றப்பட்ட ஆர்டர்களும் மட்டுமே மீண்டும் D2C-க்கு மாற்றப்படுவார்கள்.

ஒரு வாடிக்கையாளரையும் அவரது ஆர்டர் வரலாற்றையும் ஏற்கனவே உள்ள நிறுவனத்திற்கு இடமாற்றுங்கள்

டெஸ்க்டாப்
  1. உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, வாடிக்கையாளர்கள் > நிறுவனங்கள் பகுதிக்குச் செல்லவும்.
  2. நீங்கள் வாடிக்கையாளரைச் சேர்க்க விரும்பும் நிறுவனத்தைக் கிளிக் செய்யவும்.
  3. வாடிக்கையாளர்கள் பிரிவில், ⋮ என்பதைக் கிளிக் செய்யவும்.
  4. வாடிக்கையாளரைச் சேர் என்பதைக் கிளிக் செய்யவும்.
  5. தேடல் பட்டிக்கைக் கிளிக் செய்து, பின்னர் ஒரு வாடிக்கையாளரைத் தேர்ந்தெடுக்கவும்.
  6. நீங்கள் வாடிக்கையாளரைச் சேர்க்க விரும்பும் நிறுவனத்தின் இருப்பிடத்தைத் தேர்ந்தெடுத்து, பின்னர் நிறுவன இருப்பிடத்திற்கு அடுத்துள்ள நிறுவன அனுமதிகளைத் தேர்ந்தெடுக்கவும்.
  7. உங்கள் வாடிக்கையாளரின் ஆர்டர் வரலாற்றை நிறுவனத்தின் இருப்பிடத்தில் சேர்க்க, இந்த இருப்பிடத்தில் வாடிக்கையாளரின் ஆர்டர்களைச் சேர் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  8. விருப்பத்திற்குரியது: அவர்கள் B2B ஆர்டர்களை வழங்கத் தொடங்கலாம் என்பதை உங்கள் வாடிக்கையாளருக்குத் தெரிவிக்க, வாடிக்கையாளர் B2B ஆர்டர்களை வழங்கத் தொடங்கலாம் என அவர்களுக்குத் தெரிவி என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  9. சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.
மொபைல்
  1. Shopify செயலியிலிருந்து, மெனு ஐகானைத் தட்டவும்.

  2. வாடிக்கையாளர்கள் மெனுவில், கீழ்நோக்கிய அம்பு ஐகானைத் தட்டி, பின்னர் நிறுவனங்கள் என்பதைத் தட்டவும்.

  3. ஒரு நிறுவனத்தைத் தட்டவும்.

  4. வாடிக்கையாளர்கள் பிரிவில், … > வாடிக்கையாளரைச் சேர் என்பதைத் தட்டவும்.

  5. தேடல் பட்டியைத் தட்டி, பின்னர் ஒரு வாடிக்கையாளரைத் தேர்ந்தெடுக்கவும்.

  6. நீங்கள் வாடிக்கையாளரைச் சேர்க்க விரும்பும் நிறுவனத்தின் இருப்பிடங்களைத் தட்டி, ஒவ்வொரு நிறுவன இருப்பிடத்திற்கும் அடுத்துள்ள நிறுவன அனுமதிகளைத் தேர்ந்தெடுக்கவும்.

  7. உங்கள் வாடிக்கையாளரின் ஆர்டர் வரலாற்றை நிறுவனத்தின் இருப்பிடத்தில் சேர்க்க, இந்த இருப்பிடத்தில் வாடிக்கையாளரின் ஆர்டர்களைச் சேர் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

  8. விருப்பத்திற்குரியது: அவர்கள் B2B ஆர்டர்களை வழங்கத் தொடங்கலாம் என்பதை உங்கள் வாடிக்கையாளருக்குத் தெரிவிக்க, வாடிக்கையாளர் B2B ஆர்டர்களை வழங்கத் தொடங்கலாம் என அவர்களுக்குத் தெரிவி என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

  9. சேமி அல்லது ✓ என்பதைத் தட்டவும்.

வாடிக்கையாளர் சுயவிவரத்திலிருந்து ஒரு வாடிக்கையாளரையும் அவரது ஆர்டர் வரலாற்றையும் நிறுவனத்திற்கு இடமாற்றுங்கள்

  1. உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, வாடிக்கையாளர்கள் பகுதிக்குச் செல்லவும்.
  2. நீங்கள் நிறுவனத்தில் சேர்க்க விரும்பும் வாடிக்கையாளரைக் கிளிக் செய்யவும்.
  3. வாடிக்கையாளர் பிரிவில், ⋮ என்பதைக் கிளிக் செய்து, பின்னர் நிறுவனத்தில் சேர் என்பதைக் கிளிக் செய்யவும்.
  4. தேடல் பட்டியைத் கிளிக் செய்து, பின்னர் ஒரு நிறுவனத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
  5. நீங்கள் வாடிக்கையாளரைச் சேர்க்க விரும்பும் நிறுவனத்தின் இருப்பிடங்களைத் தேர்ந்தெடுத்து, ஒவ்வொரு நிறுவன இருப்பிடத்திற்கும் அடுத்துள்ள நிறுவன அனுமதிகளைத் தேர்ந்தெடுக்கவும்.
  6. விருப்பத்திற்குரியது: உங்கள் வாடிக்கையாளரின் ஆர்டர் வரலாற்றை நிறுவனத்தின் இருப்பிடத்தில் சேர்க்க, இந்த இருப்பிடத்தில் வாடிக்கையாளரின் ஆர்டர்களைச் சேர் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  7. விருப்பத்திற்குரியது: அவர்கள் B2B ஆர்டர்களை வழங்கத் தொடங்கலாம் என்பதை உங்கள் வாடிக்கையாளருக்குத் தெரிவிக்க, வாடிக்கையாளர் B2B ஆர்டர்களை வழங்கத் தொடங்கலாம் என அவர்களுக்குத் தெரிவி என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  8. சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.