B2B விற்பனைப் பணியாளர்களுக்கான ஆர்டர்கள், தரவு மற்றும் நிர்வாகி அணுகல்
நீங்கள் விற்பனைப் பணியாளர்களைப் பணியமர்த்தினால், பணியாளர் அனுமதிகளைப் பயன்படுத்தி உங்கள் Shopify நிர்வாகிக்கான வரையறுக்கப்பட்ட அணுகலை அவர்களுக்கு வழங்கலாம். இது உங்கள் விற்பனைப் பணியாளர்களை ஆர்டர்களைச் செய்ய அனுமதிக்கிறது மற்றும் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட வாடிக்கையாளர்களின் கணக்குத் தகவலைப் பார்க்க அனுமதிக்கிறது. உங்கள் விற்பனைப் பணியாளர்கள், புதுப்பித்த நிலையிலுள்ள ஆர்டர், வாடிக்கையாளர், தயாரிப்பு, விலை நிர்ணயம் மற்றும் சரக்கு இருப்புத் தரவு ஆகியவற்றை ஒரே இடத்தில் அணுக முடியும்.
உங்கள் விற்பனைப் பணியாளர்களின் பங்கு மற்றும் அவர்கள் அணுக வேண்டிய தகவல் ஆகியவற்றின் அடிப்படையில், அவர்களுக்குரிய அனுமதிகளை நீங்கள் தனிப்பயனாக்கலாம்.
இந்தப் பக்கத்தில்
விற்பனைப் பணியாளர்களை அமைத்தல்
பணியாளர் அனுமதிகள், எந்தவகை விற்பனைப் பணியாளர்களுக்கும் ஆதரவளிக்கும்.
B2B வணிகங்களுக்கான மிகவும் பொதுவான இரண்டு வகை விற்பனைப் பணியாளர்கள் விற்பனை மேலாளர்கள் மற்றும் விற்பனைப் பிரதிநிதிகள் ஆவர்:
- விற்பனை மேலாளர்கள்: குறிப்பிட்ட நிறுவனத்தின் இருப்பிடங்களுடன் எந்தெந்த விற்பனைப் பிரதிநிதிகள் பணியாற்ற வேண்டும் என்பதைக் கட்டுப்படுத்தும் பணியாளர்கள். அவர்கள் ஸ்டோர் நிர்வாகிகளாகவும் இருக்கலாம்.
- விற்பனைப் பிரதிநிதிகள்: தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிறுவனத்தின் இருப்பிடங்கள் மற்றும் பதிவுகளை மட்டுமே அணுகக்கூடிய பணியாளர்கள். நிறுவனங்கள் மற்றும் நிறுவன இருப்பிடங்களைத் திருத்துவதற்கான அல்லது உருவாக்குவதற்கான அனுமதியையும் நீங்கள் அவர்களுக்கு வழங்கலாம்.
நிறுவனங்களின் அனுமதிகள் உட்பட, எந்தவொரு அனுமதிகளின் கலவையுடனும் பயனர் பங்குகளை உருவாக்கி ஒதுக்குவதன் மூலம் உங்கள் விற்பனைப் பணியாளர்கள் ஒவ்வொருவருக்கும் உள்ள அனுமதிகளின் நிலையை நீங்கள் கட்டுப்படுத்தலாம். உங்கள் Shopify நிர்வாகியில் அமைப்புகள் > பயனர்கள் > பங்குகள் என்பதற்குச் சென்று இந்த அனுமதிகளை நீங்கள் நிர்வகிக்கலாம். உங்களுக்குக் கிடைக்கும் பங்கு வகைகள் உங்கள் திட்டம் மற்றும் வணிக அமைவைப் பொறுத்தவை. பங்கு வகைகள் குறித்து மேலும் அறிக.
விற்பனை மேலாளர் மற்றும் விற்பனைப் பிரதிநிதி பங்குகளை உருவாக்குவதற்கான வழிமுறைகள் பின்வருமாறு. விற்பனைப் பணியாளர்கள் என்ன செய்ய வேண்டும் என நீங்கள் விரும்புகிறீர்கள் என்பதன் அடிப்படையில், அனுமதிகளைச் சேர்க்கலாம் அல்லது அகற்றலாம். உங்கள் நிறுவனத்தில் பயனர்களைச் சேர்ப்பதற்கான முழுமையான செயல்முறைக்கு, பயனர்களை அழைப்பது என்பதைப் பார்க்கவும்.
நிறுவனம் அல்லது நிறுவன இருப்பிடத்தின் சார்பாக வாங்குபவர்களுக்கான தகவலை நிர்வகிக்கவும், ஆர்டர்களைப் பார்க்கவும் மற்றும் எடுக்கவும் விற்பனைப் பணியாளர்களை அனுமதிக்க, அவர்களுக்காக உருவாக்கப்பட்ட பங்குகளுக்கு வாடிக்கையாளர்கள், ஆர்டர்கள் மற்றும் வரைவு ஆர்டர்கள் ஆகிய அனுமதிகளை நீங்கள் ஒதுக்க விரும்பலாம்.
ஒதுக்கப்பட்ட நிறுவன இருப்பிடங்களுக்கு அனுமதிகளைக் கட்டுப்படுத்து என்பது செயலில் இருந்தாலும், விற்பனைப் பணியாளர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிறுவன இருப்பிடங்களுக்காக வடிகட்டப்படாத விற்பனைத் தரவு அந்தப் பக்கங்களில் உள்ளதால், பகுப்பாய்வு, சந்தைப்படுத்தல் மற்றும் முகப்பு அனுமதிகளை ஒதுக்குவதை நீங்கள் தவிர்க்கலாம்.
விற்பனை மேலாளர் அனுமதிகளை அமைத்தல்
ஒரு நிறுவன இருப்பிடத்திற்கு எந்த விற்பனைப் பணியாளர்கள் ஒதுக்கப்பட்டுள்ளனர் என்பதை நிர்வகிக்கும் பணியாளர்கள் விற்பனை மேலாளர்கள் ஆவர். ஒரு நிறுவன இருப்பிடத்திற்குள், விற்பனை மேலாளர்கள் எந்தவொரு நிறுவன இருப்பிடத்திற்குமான 'ஒதுக்கப்பட்ட பணியாளர்கள்' பகுதியைப் பார்க்கவும் நிர்வகிக்கவும் முடியும்.
படிகள்:
- உங்கள் நிறுவனத்திலுள்ள ஏதேனும் ஸ்டோரில் உள்நுழையவும்.
- அமைப்புகள் > பயனர்கள்> பங்குகள் என்பதற்குச் செல்லவும்.
- பங்கைச் சேர் என்பதைக் கிளிக் செய்யவும்.
- பங்கிற்கான பெயரைச் சேர்க்கவும்.
- அனுமதிகள் பிரிவில், நிறுவனப் பங்கு அல்லது ஸ்டோர் பங்கு ஆகியவற்றைத் தேர்ந்தெடுக்க, கீழ்தோன்றும் மெனுவைப் பயன்படுத்தவும். நிறுவனப் பங்கு கொண்ட பயனர்கள் உங்கள் நிறுவனத்தின் அனைத்து ஸ்டோர்களிலும் ஒரே மாதிரியான அனுமதிகளைப் பெற்றிருப்பார்கள். ஸ்டோர் பங்கு கொண்ட பயனர்கள், நீங்கள் தேர்ந்தெடுக்கும் குறிப்பிட்ட ஸ்டோர்களில் மட்டும் அனுமதிகளைப் பெற்றிருப்பார்கள்.
- அனுமதிகள் பிரிவில், நிறுவனங்கள்என்பதைக் கிளிக் செய்து, பின்வரும் அனுமதிகளையாவது இந்தப் பங்குக்கு ஒதுக்கவும்:
- நிறுவனங்களைப் பார்.
- நிறுவனத்தின் இருப்பிடங்களுக்குப் பணியாளரை ஒதுக்கு.
- ஒதுக்கப்பட்டுள்ள நிறுவனத்தின் இருப்பிடங்களுக்கு மட்டும் அனுமதிகளைக் கட்டுப்படுத்து, விற்பனை மேலாளர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிறுவனத்தின் இருப்பிடங்களை மட்டுமே அணுகும் வகையில் அவர்களைக் கட்டுப்படுத்த இதைத் தேர்ந்தெடுக்கலாம்.
- விருப்பத்தேர்வு: வாடிக்கையாளர்கள், ஆர்டர்கள், வரைவு ஆர்டர்கள் போன்ற கூடுதல் அனுமதிகள் அல்லது விற்பனை மேலாளருக்கு நீங்கள் வழங்க விரும்பும் பிற பணியாளர் அனுமதிகள் எதையும் நீங்கள் ஒதுக்கலாம்.
- சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.
விற்பனைப் பிரதிநிதி அனுமதிகளை அமை
விற்பனைப் பிரதிநிதிகள் பெரும்பாலும் குறிப்பிட்ட சில நிறுவனங்கள் மற்றும் நிறுவனத்தின் இருப்பிடங்களுக்குப் பொறுப்பாவார்கள். தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிறுவனத்தின் இருப்பிடங்கள் தொடர்பான தகவல்களை மட்டுமே அவர்களுக்குக் காண்பிக்கும் வகையில் உங்கள் Shopify நிர்வாகியில் அவர்களின் பார்வையை நீங்கள் வரம்பிடலாம்.
படிகள்:
- உங்கள் நிறுவனத்திலுள்ள ஏதேனும் ஸ்டோரில் உள்நுழையவும்.
- அமைப்புகள் > பயனர்கள்> பங்குகள் என்பதற்குச் செல்லவும்.
- பங்கைச் சேர் என்பதைக் கிளிக் செய்யவும்.
- பங்கிற்கான பெயரைச் சேர்க்கவும்.
- அனுமதிகள் பிரிவில், நிறுவனப் பங்கு அல்லது ஸ்டோர் பங்கு ஆகியவற்றைத் தேர்ந்தெடுக்க, கீழ்தோன்றும் மெனுவைப் பயன்படுத்தவும். நிறுவனப் பங்கு கொண்ட பயனர்கள் உங்கள் நிறுவனத்தின் அனைத்து ஸ்டோர்களிலும் ஒரே மாதிரியான அனுமதிகளைப் பெற்றிருப்பார்கள். ஸ்டோர் பங்கு கொண்ட பயனர்கள், நீங்கள் தேர்ந்தெடுக்கும் குறிப்பிட்ட ஸ்டோர்களில் மட்டும் அனுமதிகளைப் பெற்றிருப்பார்கள்.
- அனுமதிகள் பிரிவில், நிறுவனங்கள் பின்னர், பின்வரும் அனுமதிகளையாவது இந்தப் பங்குக்கு ஒதுக்கவும்:
- நிறுவனங்களைப் பார்.
- நிறுவனத்தின் இருப்பிடங்களுக்குப் பணியாளரை ஒதுக்கு.
- ஒதுக்கப்பட்டுள்ள நிறுவனத்தின் இருப்பிடங்களுக்கு மட்டும் அனுமதிகளைக் கட்டுப்படுத்து, விற்பனைப் பிரதிநிதிகள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிறுவனத்தின் இருப்பிடங்களை மட்டுமே அணுகும் வகையில் அவர்களைக் கட்டுப்படுத்த இதைத் தேர்ந்தெடுக்கலாம்.
- விருப்பத்தேர்வு: வாடிக்கையாளர்கள், ஆர்டர்கள் மற்றும் வரைவு ஆர்டர்கள் போன்ற கூடுதல் அனுமதிகள் அல்லது விற்பனைப் பிரதிநிதிகளுக்கு நீங்கள் வழங்க விரும்பும் பிற பணியாளர் அனுமதிகள் எதையும் நீங்கள் ஒதுக்கலாம்.
- சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.
விற்பனைப் பணியாளர்கள் பங்கில் பயனர்களைச் சேர்க்கவும்
விற்பனை மேலாளர் மற்றும் விற்பனைப் பிரதிநிதி பங்குகளை உருவாக்கிய பிறகு, ஒவ்வொரு பங்கும் தேவைப்படும் பணியாளர்களைச் சேர்க்கவும். பயனரைச் சேர்க்கும்போது அதற்கான பங்கை நீங்கள் ஒதுக்கலாம்.
படிகள்:
உங்கள் Shopify நிர்வாகியில், அமைப்புகள் > பயனர்கள் என்பதைக் கிளிக் செய்யவும்.
பயனர்களைச் சேர் என்பதைக் கிளிக் செய்து, நீங்கள் சேர்க்க விரும்பும் பயனர்களின் மின்னஞ்சல் முகவரிகளை உள்ளிடவும்.
பங்குகள் மற்றும் குழுக்கள் பிரிவில், ஒதுக்கு என்பதைக் கிளிக் செய்து, நீங்கள் உருவாக்கிய விற்பனை மேலாளர் அல்லது விற்பனைப் பிரதிநிதி பங்கைக் கிளிக் செய்யவும்.
விருப்பத்தேர்வு: அந்தப் பங்கு ஸ்டோருக்கான பங்கு எனில், அந்தப் பங்கும் அதன் அனுமதிகளும் பொருந்த வேண்டுமென நீங்கள் விரும்பும் குறிப்பிட்ட ஸ்டோர்களை ஒதுக்கி, முடிந்தது என்பதைக் கிளிக் செய்யவும்.
விருப்பத்தேர்வு: விற்பனைப் பிரதிநிதி பங்கிற்கு, எந்தெந்த ஸ்டோர்களுக்கான விற்பனைப் பிரதிநிதி அனுமதிகள் பணியாளர்களுக்குக் கிடைக்க வேண்டுமென நீங்கள் விரும்புகிறீர்களோ அந்த ஒவ்வொரு ஸ்டோருக்கும் ஸ்டோர்கள் பிரிவில் இந்தப் படிகளை மீண்டும் செய்யவும்.
நிறுவனத்தின் இருப்பிடத்திற்கு விற்பனைப் பணியாளர்களை ஒதுக்கு
விற்பனை மேலாளர்கள் அல்லது நிறுவனத்தின் இருப்பிடங்களுக்குப் பணியாளரை ஒதுக்கு அனுமதியைக் கொண்ட எந்தவொரு பணியாளரும் மற்றுமொரு பணியாளரை நிறுவனத்தின் இருப்பிடங்களுக்கு ஒதுக்க முடியும்.
நீங்கள் ஒதுக்கப்பட்டுள்ள நிறுவனத்தின் இருப்பிடங்களுக்கு மட்டும் அனுமதிகளைக் கட்டுப்படுத்து என்பதைத் தேர்ந்தெடுத்து, நிறுவனத்தின் இருப்பிடத்திற்குப் பணியாளர் ஒருவரை ஒதுக்கும்போது, பின்வரும் பக்கங்களில் விற்பனைப் பணியாளர்களுக்கு ஒதுக்கப்பட்ட நிறுவனத்தின் இருப்பிடங்கள் தொடர்பான தகவல்களை மட்டுமே அவர்களால் அணுக முடியும்:
- வாடிக்கையாளர்கள்
- ஆர்டர்கள்
- வரைவு ஆர்டர்கள்
- நிறுவனங்கள்
உங்கள் Shopify நிர்வாகியில் உள்ள வேறு எந்தப் பக்கங்களும் நிறுவனம் அல்லது நிறுவனத்தின் இருப்பிடத்திற்கு ஏற்பத் தகவல்களைக் கட்டுப்படுத்தாது. அதே விற்பனைப் பணியாளரைப் பல நிறுவனத்தின் இருப்பிடங்களுக்கு ஒதுக்கலாம். ஒவ்வொரு நிறுவனத்தின் இருப்பிடத்திற்கும் 10 விற்பனைப் பணியாளர்கள் வரை உங்களால் ஒதுக்க முடியும்.
படிகள்:
- உங்கள் நிறுவனத்தில் உள்நுழைந்து பொருத்தமான ஸ்டோருக்குச் செல்லவும்.
- உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, வாடிக்கையாளர்கள் > நிறுவனங்கள் என்பதற்குச் செல்லவும்.
- விற்பனைப் பணியாளர்களை ஒதுக்க வேண்டிய நிறுவனத்தைக் கிளிக் செய்யவும்.
- இருப்பிடங்கள் பிரிவில், விற்பனைப் பணியாளர்களை ஒதுக்க வேண்டிய நிறுவனத்தின் இருப்பிடத்தைக் கிளிக் செய்யவும்.
- ஒதுக்கப்பட்டுள்ள பணியாளர்கள் பிரிவில்,
ஐகானைக் கிளிக் செய்யவும்.
- நிறுவனத்தின் இருப்பிடத்திற்கு நீங்கள் ஒதுக்க விரும்பும் பணியாளர்களைத் தேர்ந்தெடுக்கவும். நீங்கள் பல பணியாளர்களைத் தேர்ந்தெடுக்கலாம்.
- சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.
அனைத்து நிறுவனத்தின் இருப்பிடங்களுக்கும் மொத்தமாக விற்பனைப் பணியாளர்களை ஒதுக்கு
நிறுவனத்தின் இருப்பிடங்களுக்குப் பணியாளர்களை நீங்கள் மொத்தமாக ஒதுக்கலாம்.
படிகள்:
- உங்கள் நிறுவனத்தில் உள்நுழைந்து பொருத்தமான ஸ்டோருக்குச் செல்லவும்.
- உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, வாடிக்கையாளர்கள் > நிறுவனங்கள் என்பதற்குச் செல்லவும்.
- ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட விற்பனைப் பணியாளர்களை ஒதுக்க வேண்டிய நிறுவனத்தைக் கிளிக் செய்யவும்.
- ஒதுக்கப்பட்டுள்ள பணியாளரைத் திருத்து என்பதைக் கிளிக் செய்யவும்.
- அனைத்து நிறுவனத்தின் இருப்பிடங்களுக்கும் நீங்கள் ஒதுக்க விரும்பும் பணியாளர்களைத் தேர்ந்தெடுக்கவும். நீங்கள் பல பணியாளர்களைத் தேர்ந்தெடுக்கலாம்.
- சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.
விற்பனைப் பணியாளர்கள் மூலம் ஆர்டர் மற்றும் வரைவு ஆர்டர் உருவாக்கம்
நீங்கள் பணியாளர் அனுமதிகளை அமைத்ததும், விற்பனைப் பணியாளர்கள் உள்நுழைந்து உங்கள் Shopify நிர்வாகியை அணுகலாம். தொலைபேசி, மின்னஞ்சல் மற்றும் நேரில் பெறப்படும் ஆர்டர்களை வரைவு ஆர்டர்களைப் பயன்படுத்தி அவர்களால் Shopify-க்குள் கொண்டுவர முடியும்.
உங்கள் Shopify நிர்வாகியில் வரைவு ஆர்டர்களை உருவாக்கும்போது, உங்கள் தயாரிப்பு, விலை நிர்ணயம், வாடிக்கையாளர் மற்றும் சரக்கு இருப்பு ஆகிய எல்லாத் தரவுகளையும் விற்பனைப் பணியாளர்கள் அணுக முடியும். ஆர்டர்களுக்குப் பொருந்தக்கூடிய ஏதேனும் வணிக விதிகளை நீங்கள் அமைத்துள்ளீர்களா என்பதையும் அவர்கள் பார்க்க முடியும். எடுத்துக்காட்டாக, குறிப்பிட்ட வாடிக்கையாளர்களுக்குக் கிடைக்கும் ஷிப்பிங் விருப்பங்களைத் தனிப்பயனாக்க நீங்கள் ஒரு செயலியைப் பயன்படுத்தினால், வரைவு ஆர்டர்களுக்கும் இந்தத் தனிப்பயனாக்கங்கள் பயன்படுத்தப்படும்.
ஆர்டர் முடிவடைந்து, வாடிக்கையாளருக்கு அனுப்பத் தயாராக இருக்கும்போது, இன்வாய்ஸை அனுப்பு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம் விற்பனைப் பணியாளர்கள் வாடிக்கையாளருக்கு இன்வாய்ஸ் குறித்து அறிவிக்கலாம், அத்துடன் வாடிக்கையாளர் அதை மதிப்பாய்வு செய்து செக்அவுட்டில் தங்களின் ஆர்டரைச் செய்ய இது அனுமதிக்கும்.
B2B ஆர்டர்களைக் கொண்டுவர வரைவு ஆர்டர்களைப் பயன்படுத்துவது பற்றி மேலும் அறிக.