Checkout Blocks செயலியைப் பயன்படுத்தி உங்கள் செக்அவுட்டைத் தனிப்பயனாக்குவதற்கான பிளாக்குகளின் சுருக்கம்
UI நீட்டிப்புகளால் உருவாக்கப்பட்ட Checkout Blocks செயலியில் உள்ள பிளாக்குகள், செக்அவுட் மற்றும் கணக்குகள் எடிட்டரில் நீங்கள் நேரடியாக இழுத்து விடக்கூடிய பிளாக்குகளை வழங்குவதன் மூலம் செக்அவுட்டைத் தனிப்பயனாக்க உதவுகின்றன. தகவல் மற்றும் எச்சரிக்கை பேனர்கள் அல்லது வரிசை உருப்படிச் செய்தியிடல் போன்ற சில பிளாக் வகைகள், உங்கள் செக்அவுட்டில் காட்சித் தனிப்பயனாக்கக் கூறுகளைச் சேர்க்கும். பிற பிளாக் வகைகள் உங்கள் செக்அவுட்டில் வரிசை உருப்படிகளுக்கான மாறுபாடு அல்லது அளவுத் தேர்வி போன்ற ஊடாடும் கூறுகளையோ வாடிக்கையாளர்கள் கூடுதல் தகவலைத் தேர்ந்தெடுக்க அல்லது உள்ளிடுவதற்கான தேர்வுப்பெட்டிகள் அல்லது உரைப்புலங்களையோ சேர்க்கும்.
Checkout Blocks ஒரு பிளாக் வகைக்கு 30 செயலில் உள்ள பிளாக்குகளை ஆதரிக்க முடியும். நீங்கள் ஒரே நேரத்தில் அதிகபட்சமாக 30 பிரத்தியேகப் புலங்கள், 30 டைனமிக் உள்ளடக்க பிளாக்குகள் அல்லது பிற வகையான பிளாக்குகளை வைத்திருக்கலாம். நீங்கள் 30-க்கும் மேற்பட்ட பிளாக்குகளை உருவாக்கலாம், ஆனால் முதல் 30 செயலில் உள்ள பிளாக்குகள் மட்டுமே செக்அவுட்டில் காட்டப்படும்.
செக்அவுட்டில் காட்டப்படும் பிளாக்குகள், நீங்கள் பிளாக்கிற்குப் பயன்படுத்திய காட்சி விதிகள், பிளாக்குகளுக்கு முன்னுரிமையளிக்கப்படும் வரிசைமுறை ஆகியவற்றோடு, ஒரு குறிப்பிட்ட இடத்தில் ஒரு குறிப்பிட்ட பிளாக்கை எப்போதுமே காட்ட பிளாக் ID பயன்படுத்தப்படுகிறதா இல்லையா என்பதையும் பொறுத்து அமையும்.
இந்தப் பக்கத்தில் இருப்பவை
Checkout Blocks செயலியில் கிடைக்கும் பிளாக்குகள்
Checkout Blocks பல வகையான பிளாக்குகளை ஆதரிக்கிறது. உங்கள் செக்அவுட்டில் நீங்கள் சேர்க்க விரும்பும் உள்ளடக்கத்தின் வகை, நீங்கள் நிபந்தனையுடன் கூடிய காட்சி விதிகளைச் சேர்க்க விரும்புகிறீர்களா என்பது மற்றும் எந்தெந்தப் பக்கங்களில் பிளாக்கைச் சேர்க்க விரும்புகிறீர்கள் என்பதைப் பொறுத்து பிளாக் வகை அமையும்.
பிளாக்கின் செயல்பாடு காரணமாக சில செக்அவுட் பக்கங்களில் சில பிளாக்குகளைச் சேர்க்க முடியாது. எடுத்துக்காட்டாக, பிரத்தியேகக் குறிப்பைச் சேர்ப்பது அல்லது பெட்டியைத் தேர்வுசெய்வது போன்ற கூடுதல் தகவல்களை வாடிக்கையாளர் உள்ளிடுவதையே பிரத்தியேகப் புல பிளாக் சார்ந்திருக்கும். ஆர்டர் நிறைவடையும் முன் இந்தத் தகவல் பெறப்பட வேண்டும் என்பதால், நன்றி தெரிவிக்கும் பக்கம் அல்லது ஆர்டர் நிலை பக்கம் போன்ற வாங்குதலுக்குப் பிந்தைய பக்கங்களில் பிரத்தியேகப் புலத்தைச் சேர்க்க முடியாது.
| பிளாக் | ஆதரிக்கப்படும் பக்கங்கள் | விளக்கம் |
|---|---|---|
| முகவரித் தடுப்பான் |
| முகவரி வடிவ விதிகளின் அடிப்படையில் செக்அவுட்டைத் தடுக்கும். |
| பிரத்தியேகப் புலம் |
| விதிமுறைகளுக்கான ஒப்புதல் தேர்வுப்பெட்டி அல்லது பரிசுச் செய்தியிடல் புலம் போன்ற பிரத்தியேகப் புலங்களை செக்அவுட்டில் சேர்க்கும். |
| டைனமிக் உள்ளடக்கம் |
| நீங்கள் அமைக்கும் நிபந்தனை விதிகளின் அடிப்படையில் உரை, பேனர்கள் மற்றும் பொத்தான்கள் போன்ற உள்ளடக்கத்தைக் காட்டும். இந்த பிளாக்கை Basic Shopify அல்லது அதற்கு மேற்பட்ட திட்டத்தில் உள்ள வணிகர்கள் பயன்படுத்தலாம், இதை நன்றி தெரிவிக்கும் மற்றும் ஆர்டர் நிலை பக்கங்களில் மட்டுமே வைக்க முடியும். செக்அவுட் பக்கங்களில் வைக்க Shopify Plus திட்டம் தேவை. |
| வரிசை உருப்படித் திருத்தம் |
| செக்அவுட் ஆர்டர் சுருக்கத்தில் மாறுபாடு அல்லது அளவுத் தேர்வியைச் சேர்ப்பது போன்று வரிசை உருப்படிகளைத் திருத்த வாடிக்கையாளர்களை அனுமதிக்கும். மேலும் இது வரிசை உருப்படி உள்ளடக்கத்திற்கான ஒரு கொள்கலனாகவும் செயல்படுகிறது. |
| வரிசை உருப்படி உள்ளடக்கம் |
| இறுதி விற்பனை போன்ற வரிசை உருப்படி சார்ந்த செய்தியைக் காட்டும். |
| ஷிப்பிங் & பேமெண்ட் ஐகான்கள் |
| ஆதரிக்கப்படும் ஷிப்பிங் மற்றும் கட்டண முறைகளுக்கான ஐகான்களைக் காட்டும். |
| நிலையான உள்ளடக்கம் |
| டைனமிக் உள்ளடக்க பிளாக்குகளைப் போலல்லாமல், இந்த உள்ளடக்கம் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் காட்டப்படும், மேலும் இது உரை மற்றும் பேனர்களை ஆதரிக்கும். இந்த பிளாக்கை Basic Shopify அல்லது அதற்கு மேற்பட்ட திட்டத்தில் உள்ள வணிகர்கள் பயன்படுத்தலாம், இதை நன்றி தெரிவிக்கும் மற்றும் ஆர்டர் நிலை பக்கங்களில் மட்டுமே வைக்க முடியும். செக்அவுட் பக்கங்களில் வைக்க Shopify Plus திட்டம் தேவை. |
பிளாக்குகளை உருவாக்குவது குறித்து மேலும் அறிக.
பிளாக் பகுப்பாய்வு
ஒவ்வொரு செயலில் உள்ள பிளாக்கிலும், Checkout Blocks செயலியில் பிளாக் விவரங்கள் பக்கத்தின் மேலே காட்டப்படும் Views பகுப்பாய்வுகள் இருக்கும். செக்அவுட்டில் இந்த பிளாக் எத்தனை முறை காட்டப்பட்டுள்ளது என்ற எண்ணிக்கையை இந்தப் பகுப்பாய்வுகள் தடமறியும்.
இயல்புநிலையாக, இன்றைய பகுப்பாய்வை பிளாக் காட்டும், ஆனால் குறிப்பிட்ட நாட்கள் அல்லது தேதி வரம்புகளுக்கான பகுப்பாய்வுகளைச் சரிபார்க்க, தேதி கீழ்தோன்றும் மெனுவைக் கிளிக் செய்து தேதித் தேர்வு செய்யும் கருவியைப் பயன்படுத்தலாம்.
பிளாக்கிற்கான பகுப்பாய்வுகளை மீட்டமைக்க, > Reset analytics என்பதைக் கிளிக் செய்யவும். இதைச் செய்த பின் செயல்தவிர்க்க முடியாது.
பிளாக்குகளுக்கான காட்சி விதிகள்
மாறும் உள்ளடக்கம், பிரத்தியேகப் புல பிளாக்குகள் போன்ற பல பிளாக் வகைகள், செக்அவுட்டில் உங்கள் செக்அவுட் பிளாக் காட்டப்படுவதற்கு எந்தெந்தச் சூழ்நிலைகளைப் பூர்த்தி செய்திருக்க வேண்டும் என்பதைத் தீர்மானிக்கும் நிபந்தனைகளை அமைக்க உங்களை அனுமதிக்கின்றன. ஒரு பிளாக்கிற்கு பல காட்சி விதிகளை நீங்கள் அமைக்கலாம், அத்துடன் பிளாக்கைக் காட்டுவதற்கு எல்லா விதிகளும் பூர்த்தி செய்யப்பட்டிருக்க வேண்டுமா அல்லது ஏதாவது ஒரு விதி பூர்த்தி செய்யப்பட்டால் போதுமா என்பதையும் நீங்கள் வரையறுக்கலாம்.
நீங்கள் உருவாக்கும் பிளாக்கின் வகையைப் பொறுத்துக் காட்சி விதியின் தொடரியல் மாறுபடும், ஆனால் பொதுவாக, பொருந்தக்கூடிய சூழ்நிலைகளில் பின்வரும் கூறுகளை வரிசையாகப் பயன்படுத்தி விதிகள் உருவாக்கப்படுகின்றன:
தயாரிப்பு வகைஅல்லதுகார்ட் மொத்தம்போன்ற விதியின் வகை.என்பதுஅல்லதுஎன்பது அல்ல, அல்லதுஎன்பதை விட அதிகம்,கொண்டுள்ளதுஅல்லதுஎன்பதில் முடிகிறதுபோன்ற லாஜிக்கல் ஆபரேட்டர்.Dressesஅல்லது50.00போன்ற நீங்கள் விரும்பும் குறிப்பிட்ட மதிப்பை வரையறுக்கும் அளவுரு.
உதாரணமாக, அதிக செலவு செய்யும் வாடிக்கையாளர்களைக் கணக்கை உருவாக்கத் தூண்டுவதற்கு அவர்களுக்கு பேனர் ஒன்றைக் காட்ட, பின்வரும் காட்சி விதிகளுடன் ஒரு பிளாக்கை நீங்கள் உருவாக்கலாம்:
இதன் போது மட்டும் காட்டு: எல்லா விதிகளும் பொருந்தும்போதுகார்ட் மொத்தம்>என்பதை விட அதிகம் அல்லது அதற்குச் சமம்>USD>100.00வாடிக்கையாளர் உள்நுழைந்துள்ளார்>தவறு
இந்தக் காட்சி விதிகளின் தொகுப்பின்படி, வாடிக்கையாளர் $100 USD அல்லது அதற்கு மேல் செலவழித்திருந்தால், அத்துடன் அவர்கள் ஏற்கனவே வாடிக்கையாளர் கணக்கில் உள்நுழையாமல் இருந்தால் மட்டுமே உங்கள் பேனர் காட்டப்படும். வாடிக்கையாளர்கள் உள்நுழைந்திருக்கும்போது பேனர் காட்டப்படாது, அத்துடன் வாடிக்கையாளர்கள் $100 வரம்பை எட்டும் வரை செலவழிக்காதபோதும் இது காட்டப்படாது.
பிளாக் IDகள்
பிரத்தியேகப் புலம் அல்லது மாறும் உள்ளடக்கம் போன்ற சில பிளாக் வகைகளில், பிளாக் ID-ஐக் குறிப்பிடும் விருப்பம் உள்ளது. 0 என்ற பிளாக் ID இயல்புநிலையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும்.
Checkout Blocks செயலியில் ஒரே வகையான பிளாக்குகளை வேறுபடுத்தி அறிய, ஒவ்வொரு பிளாக்கிற்கும் விளக்கமான பெயரைக் கொடுக்கவும். செக்அவுட் மற்றும் கணக்குகள் எடிட்டர், பிளாக் பெயர்களைக் காட்டாது. எடிட்டரில் ஒரே பிளாக் வகையை ஒன்றுக்கு மேற்பட்ட முறை நீங்கள் சேர்த்தால், ஒவ்வொரு பிளாக்கையும் கிளிக் செய்து, பிளாக் அமைப்புகளில் உள்ள அதன் பிளாக் ID-ஐ, Checkout Blocks செயலியில் உள்ள பிளாக் ID-உடன் ஒப்பிடவும்.
செக்அவுட்டின் வெவ்வேறு பிரிவுகளில் ஒரே வகையான வெவ்வேறு பிளாக்குகளைச் சேர்க்க ஒரு பிளாக் ID உங்களை அனுமதிக்கிறது. எடிட்டரில் உள்ள செக்அவுட் பிளாக்கை ஓர் இடநிரப்பியாக நீங்கள் கருதலாம், பிளாக்கிற்குள் நீங்கள் உள்ளமைக்கும் காட்சி விதிகளைப் பொறுத்து இதில் சாத்தியமான பல பிளாக்குகளை ஏற்றலாம். ஒவ்வொரு செக்அவுட் பக்கத்திலும் 10 வெவ்வேறு பிளாக் 'இடநிரப்பிகள்' வரை நீங்கள் சேர்க்கலாம்.
எடுத்துக்காட்டு 1: ஒரே வகையான வெவ்வேறு பிளாக்குகளுக்கு வெவ்வேறு இடங்களைக் குறிப்பிட, வெவ்வேறு பிளாக் IDகளைப் பயன்படுத்தலாம்.
முக்கிய உள்ளடக்கப் பகுதியில் கட்டாயத் தேர்வுப்பெட்டியைக் காட்ட விரும்புகிறீர்கள், ஆனால் பக்கப்பட்டியில் ஒரு விருப்பப் பரிசுக் குறிப்பைக் காட்ட விரும்புகிறீர்கள். அந்த இரண்டு பிளாக்குகளுமே பிரத்தியேகப் புலம் பிளாக் வகையைப் பயன்படுத்துகின்றன, எனவே செக்அவுட் மற்றும் கணக்கு எடிட்டரில் பிரத்தியேகப் புலம் பிளாக்கை இருமுறை சேர்க்கலாம், அத்துடன் ஒவ்வொரு பிளாக்கையும் நீங்கள் காட்ட விரும்பும் இடத்தில் வைக்கலாம். இருப்பினும், எந்தக் குறிப்பிட்ட பிளாக் எந்த இடத்திற்குச் செல்கிறது என்பதை உங்களால் அமைக்க முடிய வேண்டும்.
கட்டாயத் தேர்வுப்பெட்டியை 1 என்ற பிளாக் ID-ஐக் கொண்டிருக்கும்படியும், விருப்பப் பரிசுக் குறிப்பை 2 என்ற பிளாக் ID-ஐக் கொண்டிருக்கும்படியும் அமைக்கலாம். அதன் பிறகு, செக்அவுட் மற்றும் கணக்குகள் எடிட்டரில், கட்டாயத் தேர்வுப்பெட்டியைக் காட்ட பிளாக் ID 1-ஐப் பயன்படுத்த முக்கிய உள்ளடக்கப் பகுதியில் பிரத்தியேகப் புலம் பிளாக்கையும், விருப்பப் பரிசுக் குறிப்பைக் காட்ட பிளாக் ID 2-ஐப் பயன்படுத்தப் பக்கப்பட்டியில் பிரத்தியேகப் புலம் பிளாக்கையும் அமைக்கலாம்.
எடுத்துக்காட்டு 2: வெவ்வேறு காட்சி விதிகளுடன் ஒரே வகையான பிளாக்குகளுக்கு ஒரே இடத்தைக் குறிப்பிட, அதே பிளாக் ID-ஐப் பயன்படுத்தலாம்.
நீங்கள் 3 தானியங்கு ஷிப்பிங் தள்ளுபடிகளை வழங்குகிறீர்கள்:
- $25 USD-க்கு மேலான ஆர்டர்களுக்கு 10% தள்ளுபடி
- $50 USD-க்கு மேலான ஆர்டர்களுக்கு 25% தள்ளுபடி
- $100 USD-க்கு மேலான ஆர்டர்களுக்கு இலவச ஷிப்பிங்
வாடிக்கையாளர்கள் தங்கள் ஆர்டரை முடிப்பதற்கு முன் அவர்களது கார்ட்டில் மேலும் பொருட்களைச் சேர்க்க ஊக்குவிக்க, அவர்கள் எந்த ஷிப்பிங் தள்ளுபடியைப் பெறுவதற்கு அருகில் இருக்கிறார்கள் என்பதைப் பொறுத்து, கார்ட்டில் மேலும் பொருட்களைச் சேர்க்கத் தூண்டும் மாறும் பேனர் ஒன்றை செக்அவுட்டின் ஷிப்பிங் முறை பிரிவில் நீங்கள் சேர்க்க விரும்புகிறீர்கள்.
6 என்பது போன்று அனைத்திற்கும் ஒரே பிளாக் ID-ஐக் கொண்ட 3 மாறும் உள்ளடக்க பிளாக்குகளை நீங்கள் அமைக்கலாம்:
| பிளாக் பெயர் | காட்சி விதி | பேனர் உள்ளடக்கம் |
|---|---|---|
| ஷிப்பிங் அடுக்கு 1 | கார்ட் மொத்தம் > இதற்குக் குறைவு > $25.00 | "நீங்கள் $25 அல்லது அதற்கு மேல் செலவழித்தால், உங்கள் கார்ட் 10% ஷிப்பிங் தள்ளுபடிக்கான தகுதியைப் பெறும்." |
| ஷிப்பிங் அடுக்கு 2 | கார்ட் மொத்தம் > இதற்குக் குறைவு > $50.00 | "நீங்கள் $50 அல்லது அதற்கு மேல் செலவழித்தால், உங்கள் கார்ட் 25% ஷிப்பிங் தள்ளுபடிக்கான தகுதியைப் பெறும்." |
| ஷிப்பிங் அடுக்கு 3 | கார்ட் மொத்தம் > இதற்குக் குறைவு > $100.00 | "நீங்கள் $100 அல்லது அதற்கு மேல் செலவழித்தால், உங்கள் கார்ட் இலவச ஷிப்பிங்கிற்கான தகுதியைப் பெறும்." |
ஷிப்பிங் அடுக்கு 1 பிளாக்கானது அதிகபட்ச வரிசைப்படுத்தல் முன்னுரிமையையும், ஷிப்பிங் அடுக்கு 3 பிளாக்கானது குறைந்தபட்ச வரிசைப்படுத்தல் முன்னுரிமையையும் கொண்டிருப்பதை உறுதிசெய்யவும். இந்த நிலையில், வாடிக்கையாளர் $25 USD-க்கும் குறைவாகச் செலவழிக்கும்போது, 3 பிளாக்குகளுக்குமான காட்சி நிபந்தனைகள் தொழில்நுட்ப ரீதியாகப் பூர்த்தியடைந்திருந்தாலும், அடுக்கு 1 பிளாக்கானது மிகவும் பொருத்தமான செய்தியுடன் காட்டப்படும். ஒரு வாடிக்கையாளர் $25 USD-க்கு மேல், ஆனால் $50 USD-க்குக் குறைவாகச் செலவழிக்கும்போது, அடுக்கு 3 பிளாக்கிற்கான நிபந்தனைகள் தொழில்நுட்ப ரீதியாகப் பூர்த்தியடைந்திருந்தாலும், அடுக்கு 2 பிளாக் அதிக முன்னுரிமையில் காட்டப்படும்.
இறுதியாக, செக்அவுட் மற்றும் கணக்குகள் எடிட்டரில், ஷிப்பிங் கட்டணப் பிரிவில் 6 என்ற பிளாக் ID உடன் ஒற்றை மாறும் உள்ளடக்கப் பிளாக்கைச் சேர்க்கலாம், அதன்பிறகு செக்அவுட்டின் போது அந்தக் 'கண்டெய்னர்' இடத்தில் நீங்கள் உருவாக்கிய 3 சாத்தியமான மாறும் உள்ளடக்க பிளாக்குகளில் மிகவும் பொருத்தமானது காட்டப்படும். வாடிக்கையாளர் $100 USD அல்லது அதற்கு மேல் செலவழிக்கும்போது, செக்அவுட்டின் அந்தப் பகுதியில் எந்த மாறும் உள்ளடக்கமும் காட்டப்படாது, ஏனெனில் 6 என்ற பிளாக் ID-ஐக் கொண்ட மாறும் உள்ளடக்கப் பிளாக்குகளுக்கு எந்தக் காட்சி விதியும் பூர்த்தி செய்யப்படவில்லை.