பிரத்தியேகப் புல பிளாக்குகள்

பிரத்தியேகப் புல பிளாக்கின் மூலம் கூடுதல் வாடிக்கையாளர் தகவல்களை நீங்கள் சேகரிக்கலாம். பிரத்தியேகப் புலங்கள் கட்டாயமானதாகவோ விருப்பத்திற்குரியதாகவோ இருக்கலாம், எனவே வாடிக்கையாளர் செக்அவுட்டைத் தொடர்வதைத் தடுக்கும் வகையில் பிரத்தியேகப் புலங்களை நீங்கள் உள்ளமைக்கலாம்.

எளிய உரை, கீழ்தோன்றும் மெனுக்கள், தேர்வுப்பெட்டிகள், தேதித் தேர்வி உட்பட பல உள்ளீட்டு வகைகளை Checkout Blocks ஆதரிக்கிறது. பிரத்தியேகப் புலத் தரவை ஒரு ஆர்டர் மெட்டாஃபீல்டு, ஆர்டர் பண்புக்கூறு அல்லது ஆர்டர் குறிப்பாகச் சேமிக்கலாம்.

சில பொதுவான பயன்பாட்டு நேர்வுகளின் அடிப்படையில் பிரத்தியேகப் புல பிளாக்கின் உள்ளடக்கம் மற்றும் அமைப்புகளை முன்நிரப்பும் பல வார்ப்புருக்கள் உள்ளன:

  • விதிமுறைகளை ஏற்குமாறு செய்தல்: செக்அவுட் செய்வதற்கு முன், வாடிக்கையாளர் உங்கள் சேவை விதிமுறைகளை ஏற்க வேண்டும் என இந்த வார்ப்புரு கட்டாயப்படுத்துகிறது. அந்த விதிமுறைகளைக் கிளிக் செய்வதன் மூலம் பாப்-அப்பில் பார்க்க முடியும். இயல்பாகவே, தேர்வுப்பெட்டி தேர்ந்தெடுக்கப்பட்டிருக்காது.
  • பிறந்தநாள்: மார்க்கெட்டிங் நோக்கங்களுக்காக வாடிக்கையாளர்கள் செக்அவுட் செய்யும்போது பிறந்த தேதியை வழங்குவதற்கான விருப்பத்தேர்வை இந்த வார்ப்புரு வழங்குகிறது.
  • பரிசுச் செய்தி: வாடிக்கையாளர்கள் வேறொருவருக்குப் பரிசளிப்பதற்காக ஆர்டரைச் செய்யும்போது, விருப்பத்திற்குரிய செய்தியை எழுதிச் சேர்ப்பதற்கான விருப்பத்தேர்வை இந்த வார்ப்புரு வழங்குகிறது.

ஆதரிக்கப்படும் தரவு வகைகள்

பிரத்தியேகப் புலங்கள் வாடிக்கையாளரின் ஆர்டரில் ஒரு ஆர்டர் மெட்டாஃபீல்டாக, ஆர்டர் குறிப்புப் பண்புக்கூறாக அல்லது ஆர்டர் குறிப்பாகவே சேமிக்கப்படும். Shopify-இல் உள்ள ஆர்டர்களில் பிரத்தியேகத் தரவைச் சேமிப்பதற்கும் பெறுவதற்கும் ஆர்டர் மெட்டாஃபீல்டுகள் மிகவும் நம்பகமான வழியாக இருப்பதால், முடிந்தவரை அவற்றைப் பயன்படுத்தப் பரிசீலிக்கவும்.

ஷிப்பிங் முகவரி அல்லது பில்லிங் முகவரி போன்ற தற்போதுள்ள செக்அவுட் படிவங்களில் புதிய புலங்களைச் சேர்ப்பதை Checkout Blocks ஆதரிக்காது. அதற்குப் பதிலாக, தற்போதுள்ள செக்அவுட் படிவத்திற்கு மேலே அல்லது கீழே பிரத்தியேகப் புல பிளாக்கைச் சேர்க்கவும்.

ஆர்டர் மெட்டாஃபீல்டுகள்

ஒரு பிரத்தியேகப் புலங்களை ஆர்டர் மெட்டாஃபீல்டில் சேமிக்கும்போது, அது பயன்படுத்தும் பெயர்வெளி checkoutblocks என்பதாகும். மேலும், பிளாக்கில் நீங்கள் பிரத்தியேகப் புலத்தைச் சேர்க்கும்போது விசை வரையறுக்கப்படும் (உதாரணமாக, agree_to_terms).

ஆர்டர் பண்புக்கூறுகள்

குறிப்புப் பண்புக்கூறுகள் அல்லது கார்ட் பண்புக்கூறுகள் எனவும் அழைக்கப்படும் ஆர்டர் பண்புக்கூறுகள், Shopify-இன் இயல்பான பேக்கிங் சீட்டுகள் மற்றும் வரைவு ஆர்டர்களுக்கு இணக்கமானதாக இல்லை.

நீங்கள் பேக்கிங் சீட்டுகள் அல்லது வரைவு ஆர்டர்களைப் பயன்படுத்த வேண்டும் எனில், உங்கள் தரவு வகையாக ஆர்டர் மெட்டாஃபீல்டுகளைப் பயன்படுத்தவும்.

ஆர்டர் குறிப்புகள்

ஆர்டர் குறிப்புகளில் பிரத்தியேகப் புலங்களைச் சேமிக்கும்போது, குறிப்புப் புலத்தில் வாடிக்கையாளர் சேர்க்கும் தற்போதுள்ள உள்ளடக்கம் உங்கள் பிரத்தியேகப் புலத்தால் மாற்றப்படும். உங்கள் பிரத்தியேகப் புலத் தரவை ஒரு ஆர்டர் குறிப்பாகச் சேமிக்க நீங்கள் தேர்வுசெய்தால், அந்த அமைப்பை நீங்கள் செயல்படுத்தியிருக்கும்பட்சத்தில் உங்கள் தீமிலுள்ள கார்ட்டில் ஆர்டர் குறிப்பைச் சேர்ப்பதற்கான விருப்பத்தேர்வை முடக்குவதைப் பரிசீலிக்கவும். இதன் மூலம், வாடிக்கையாளர்கள் தங்களது குறிப்பு உள்ளடக்கத்தை இருமுறை உள்ளிட வேண்டியிருக்காது.

ஆர்டர் குறிப்புகள் வகையைப் பயன்படுத்துவதன் பயனானது, கார்ட்டில் உள்ளிடப்பட்ட தற்போதுள்ள ஆர்டர் குறிப்புகளைச் செக்அவுட்டில் தானாகவே காட்டுவதாகும். ஆர்டர் குறிப்புகள் அல்லது டெலிவரிக் குறிப்புகள் போன்ற குறிப்பிட்ட பயன்பாட்டு நேர்வுகளுக்கான செக்அவுட் செயல்முறையிலுள்ள நிலைத்தன்மையை இது உறுதிசெய்கிறது.

ஆர்டர் குறிப்புகள் வரைவு ஆர்டர்களுக்கு இணக்கமானதாக இல்லை.

ஆதரிக்கப்படும் உள்ளீட்டு வகைகள்

பிரத்தியேகப் புல பிளாக்குகள் பின்வரும் வகையான புலங்களை ஆதரிக்கின்றன:

  • தேர்வுப்பெட்டி
  • தேதி மற்றும் நேரத் தேர்வி
  • பிறந்த தேதி
  • கீழ்தோன்றும் பட்டியல்
  • தொலைபேசிப் புலம்
  • ரேடியோ பொத்தான்கள்
  • உரை உள்ளீடு

பிரத்தியேகப் புல பிளாக்கை உருவாக்கு

Checkout Blocks செயலியில் ஒரு பிரத்தியேகப் புல பிளாக்கை நீங்கள் உருவாக்கி உள்ளமைக்கலாம். பிரத்தியேகப் புல பிளாக்கை உருவாக்கிய பிறகு, செக்அவுட்டில் பிளாக்கைச் சேர்க்க வேண்டும்.

படிகள்:

  1. உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, செயலிகள் > Checkout Blocks என்பதற்குச் செல்லவும்.

  2. பிளாக்குகள் என்பதைக் கிளிக் செய்து, பிளாக்கை உருவாக்கு என்பதைக் கிளிக் செய்யவும்.

  3. பிரத்தியேகப் புலம் என்பதைக் கிளிக் செய்யவும்.

  4. நீங்கள் பயன்படுத்த விரும்பும் புலத்திற்கான வார்ப்புருவைத் தேர்ந்தெடுக்கவும். எந்தவொரு புலங்களும் அல்லது அமைப்புகளும் முன்நிரப்பப்பட்டிருக்கக் கூடாது என நீங்கள் விரும்பினால், வெற்று வார்ப்புரு என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

  5. பிளாக் பெயர் பிரிவில், பிளாக்கிற்கான பெயரை உள்ளிடவும். இது உங்கள் வாடிக்கையாளர்களுக்குக் காட்டப்படாது.

  6. பிளாக் ID பிரிவில், ஒரு குறிப்பிட்ட ID எண்ணைப் பயன்படுத்த கீழ்தோன்றும் மெனுவைப் பயன்படுத்தவும். பிளாக் ID-கள் பற்றி மேலும் அறிக.

  7. காட்சி விதிகள் பிரிவில், உங்கள் பிளாக் காட்சி விதிகளை உள்ளமைக்கவும்:

    • எல்லா வாடிக்கையாளர்களுக்கும் பிளாக்கைக் காட்ட, காட்சி விதிகள் பிரிவை காலியாக விடவும்.
    • ஒரு காட்சி விதியை உருவாக்க, ⊕ காட்சி விதியைச் சேர் என்பதைக் கிளிக் செய்து, உங்கள் விதியை உள்ளமைக்கவும். தேவையான அளவு காட்சி விதிகளைச் சேர்க்கவும்.
  8. உள்ளடக்கம் பிரிவில், உங்கள் பிளாக்கின் உள்ளடக்கத்தைச் சேர்த்துத் தனிப்பயனாக்கவும்:

    1. எனச் சேமி மெனுவில், பிரத்தியேகப் புலத் தரவை எங்கு சேமிக்க வேண்டும் என்பதைத் தேர்ந்தெடுக்கவும். பிரத்தியேகப் புலத் தரவு வகைகள் குறித்து மேலும் அறிக.
    2. புலங்கள் பிரிவில், ⊕ பிரத்தியேகப் புலத்தைச் சேர் என்பதைக் கிளிக் செய்து, நீங்கள் பயன்படுத்த விரும்பும் பிரத்தியேகப் புலத்தின் வகையைத் தேர்ந்தெடுக்கவும்.
    3. புல லேபிள்கள், புல விசை, தேர்வு விருப்பத்தேர்வுகள் மற்றும் புலம் கட்டாயமானதா என்பது போன்ற உங்கள் பிரத்தியேகப் புல விவரங்களை உள்ளமைக்கவும். முடிந்தது என்பதைக் கிளிக் செய்யவும்.
    4. விருப்பத்தேர்வு: பிரிவு ஹெடர் பிரிவில், உங்கள் பிரத்தியேகப் புலத்தில் ஒரு தலைப்பையும் துணைத்தலைப்பையும் சேர்க்கவும்.
    5. விருப்பத்தேர்வு: அமைப்புகள் பிரிவில், உங்கள் புல லேபிளுடன் "(விருப்பத்திற்குரியது)" என்பதைச் சேர்க்க வேண்டுமா மற்றும் அனைத்துப் புலங்களையும் காட்ட வேண்டுமா என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  9. விருப்பத்தேர்வு: பாணிகள் பிரிவில், பிளாக்கின் ஓரங்கள், கொள்கலன் மற்றும் பிரிப்பான் பாணிகளைத் தனிப்பயனாக்க வடிவமைப்பைத் தனிப்பயனாக்கு என்பதைக் கிளிக் செய்யவும்.

  10. விருப்பத்தேர்வு: வெளியிடுதல் பிரிவில், பிளாக் காட்டப்பட வேண்டும் என நீங்கள் விரும்பும் சந்தைகள் மற்றும் செக்அவுட் பக்கங்களைத் தேர்ந்தெடுக்க பென்சில் ஐகானைக் கிளிக் செய்யவும்.

  11. சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.

உங்கள் பிளாக் இயல்பாகவே வரைவாகச் சேமிக்கப்படும். பிளாக்கை வெளியிட நீங்கள் தயாரானதும், நிலை பிரிவில் உள்ள கீழ்தோன்றும் மெனுவிலிருந்து செயலில் உள்ளது என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

செக்அவுட்டில் ஒரு பிரத்தியேகப் புல பிளாக்கைச் சேர்

செக்அவுட்டில் ஏற்கெனவே இருக்கும் பிரத்தியேகப் புல பிளாக்கை நீங்கள் சேர்க்கலாம். செக்அவுட்டில் காட்டப்படுவதற்கு பிளாக்குகள் செயலில் உள்ளது என அமைக்கப்பட்டிருக்க வேண்டும்.

படிகள்:

  1. உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, செயலிகள் > Checkout Blocks என்பதற்குச் செல்லவும்.

  2. பிளாக்குகள் என்பதைக் கிளிக் செய்யவும்.

  3. செக்அவுட்டில் நீங்கள் சேர்க்க விரும்பும் பிரத்தியேகப் புல பிளாக்கைக் கிளிக் செய்யவும்.

  4. மேலும் செயல்கள் ⌄ > செக்அவுட்டில் சேர் என்பதைக் கிளிக் செய்யவும்.

  5. விருப்பத்தேர்வு: Preview block id பிரிவில், பிளாக்கின் பிரத்தியேக முன்பார்வை ID-ஐ நகலெடுக்க கிளிப்போர்டு ஐகானைக் கிளிக் செய்யவும்.

  6. நீங்கள் விரும்பும் செக்அவுட் அமைவாக்கத்தைத் தேர்ந்தெடுத்து, எடிட்டரைத் திற என்பதைக் கிளிக் செய்யவும்.

  7. செக்அவுட் மற்றும் கணக்குகள் எடிட்டரில், உங்கள் செக்அவுட்டில் பிரத்தியேகப் புல பிளாக்கைச் சேர்க்கவும்:

    1. பிளாக்கைச் சேர்க்க விரும்பும் செக்அவுட் பக்கத்திற்குச் செல்லவும்.
    2. பிளாக்கைச் சேர்க்க விரும்பும் பிரிவில், ⊕ Add block (பிளாக்கைச் சேர்) என்பதைக் கிளிக் செய்யவும்.
    3. Checkout Blocks விருப்பமான பிரத்தியேகப் புலம் என்பதைக் கிளிக் செய்யவும்.
    4. செக்அவுட் பிளாக்கின் விவரங்களை உள்ளமைத்து, பிளாக்கின் தொடர்புடைய பிளாக் ID-ஐத் தேர்ந்தெடுக்கவும்.
    5. விருப்பத்தேர்வு: செக்அவுட்டில் பிளாக் எவ்வாறு காட்டப்படும் என்பதை முன்னோட்டமிட Preview block id (For testing purposes) புலத்தையும் பிளாக்கின் முன்னோட்ட ID-ஐயும் பயன்படுத்தவும்.
    6. விருப்பத்தேர்வு: செக்அவுட் பக்கத்தில் எந்த இடத்தில் பிளாக் காட்டப்பட வேண்டும் என்பதை மாற்ற, மாறும் பிளாக்கை இழுத்து விடவும்.
  8. சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.