Checkout Blocks மூலம் பிரத்தியேகத் தள்ளுபடிகளை நிர்வகித்தல்

Checkout Blocks-ஐப் பயன்படுத்திப் பிரத்தியேகத் தள்ளுபடிகளை நீங்கள் திருத்தலாம், ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்யலாம், முடக்கலாம், நீக்கலாம்.

Checkout Blocks சார்ந்த பிரத்தியேகத் தள்ளுபடிகளைத் தேடுதல்

Checkout Blocks செயலி மூலம் உருவாக்கப்பட்டு நிர்வகிக்கப்படும் பிரத்தியேகத் தள்ளுபடிகள், உங்கள் வழக்கமான தள்ளுபடிகளுடன் சேர்த்து உங்கள் Shopify நிர்வாகியில் உள்ள அதே தள்ளுபடிகள் பக்கத்திலேயே காட்டப்படும். பட்டியலிலுள்ள தள்ளுபடிகளில் எவை Checkout Blocks செயலியைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டன என்பதைப் பின்வரும் வழிகளில் நீங்கள் அடையாளம் காணலாம்:

  • ஒரு தள்ளுபடி Checkout Blocks-ஐச் சார்ந்ததாக இருக்கும்போது, தள்ளுபடியின் தலைப்புக்குக் கீழே தள்ளுபடி தொடர்பான விவரங்கள் காட்டப்படாது. Shopify-க்குள்ளேயே உருவாக்கப்பட்ட தள்ளுபடிகளின் தலைப்புக்குக் கீழே அதன் விவரங்கள் காட்டப்படும், எடுத்துக்காட்டாக: "அனைத்துத் தயாரிப்புகளுக்கும் இலவச ஷிப்பிங் · அனைத்து நாடுகளுக்கும்" அல்லது "முழு ஆர்டருக்கும் $10.00 தள்ளுபடி · ஒரு வாடிக்கையாளருக்கு ஒரு பயன்பாடு".
  • வகை (Type) நெடுவரிசையிலுள்ள தள்ளுபடி வகைகளின் மீது கர்சரைக் கொண்டு செல்லும்போது, Checkout Blocks சார்ந்த தள்ளுபடிகளில் Checkout Blocks லோகோ ஐகான் காட்டப்படும்.

பிரத்தியேகத் தள்ளுபடியைத் திருத்து

ஏற்கனவே உள்ள பிரத்தியேகத் தள்ளுபடியின் உள்ளடக்கங்களை நீங்கள் எப்போது வேண்டுமானாலும் திருத்தலாம், அதில் புதிய தலைப்பை வழங்குவது அல்லது தள்ளுபடி விதிகளை மாற்றுவது ஆகியவையும் அடங்கும்.

படிகள்:

  1. உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, தள்ளுபடிகள் பகுதிக்குச் செல்லவும்.
  2. நீங்கள் திருத்த விரும்பும் பிரத்தியேகத் தள்ளுபடியின் தலைப்பைக் கிளிக் செய்யவும்.
  3. தள்ளுபடி உள்ளமைவையும் அமைப்புகளையும் திருத்தவும்.
  4. சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.

பிரத்தியேகத் தள்ளுபடியை ஏற்றுமதி செய்

ஒரு பிரத்தியேகத் தள்ளுபடியை JSON கோப்பாக ஏற்றுமதி செய்யலாம். அதன்பிறகு அந்த JSON கோப்பை மாற்றி, புதிய பிரத்தியேகத் தள்ளுபடியைச் சேர்க்க அக்கோப்பை இறக்குமதி செய்யலாம்.

படிகள்:

  1. உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, தள்ளுபடிகள் பகுதிக்குச் செல்லவும்.
  2. நீங்கள் ஏற்றுமதி செய்ய விரும்பும் பிரத்தியேகத் தள்ளுபடியின் தலைப்பைக் கிளிக் செய்யவும்.
  3. செயல்கள் (Actions) > ↥ ஏற்றுமதி செய் (Export) என்பதைக் கிளிக் செய்யவும்.

பிரத்தியேகத் தள்ளுபடி உங்களின் உள்ளூர்ச் சாதனத்தில் .json கோப்பாகப் பதிவிறக்கப்படும்.

பிரத்தியேகத் தள்ளுபடியை இறக்குமதி செய்

ஏற்றுமதி செய்யப்பட்ட JSON கோப்பிலிருந்து உங்களால் ஒரு பிரத்தியேகத் தள்ளுபடியை உருவாக்க முடியும். JSON கோப்பின் வகையானது நீங்கள் உருவாக்க முயலும் தள்ளுபடியின் வகையுடன் பொருந்த வேண்டும். எடுத்துக்காட்டாக, ஓர் ஆர்டர் தள்ளுபடியை உருவாக்கும்போது, ஆர்டர் தள்ளுபடிக்கான JSON கோப்பை மட்டுமே உங்களால் வெற்றிகரமாகப் பதிவேற்ற முடியும். ஷிப்பிங் தள்ளுபடிக்கான JSON கோப்பைப் பதிவேற்ற முயன்றால் பிழை ஏற்படும்.

படிகள்:

  1. உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, செயலிகள் > Checkout Blocks பகுதிக்குச் செல்லவும்.

  2. தள்ளுபடிகள் என்பதைக் கிளிக் செய்யவும்.

  3. தள்ளுபடியைச் சேர் என்பதைக் கிளிக் செய்யவும்.

  4. தள்ளுபடி வகையைத் தேர்ந்தெடு உரையாடல் பெட்டியில், ஆர்டருக்கான தள்ளுபடித் தொகை அல்லது ஷிப்பிங்கிற்கான தள்ளுபடித் தொகை என்பதைக் கிளிக் செய்யவும்.

  5. தள்ளுபடியை இறக்குமதி செய் என்பதைக் கிளிக் செய்யவும்.

  6. தள்ளுபடியை இறக்குமதி செய் உரையாடல் பெட்டியில், உங்கள் தள்ளுபடிக்கான JSON கோப்பைப் பதிவேற்றவும்:

    1. கோப்பைச் சேர் என்பதைக் கிளிக் செய்யவும்.
    2. பொருத்தமான JSON கோப்பைத் தேர்ந்தெடுக்கவும்.
    3. இறக்குமதி செய்து தொடரு என்பதைக் கிளிக் செய்யவும்.
  7. முன்பே ஏற்றப்பட்டுள்ள பிரத்தியேகத் தள்ளுபடி உள்ளமைவை மதிப்பாய்வு செய்யவும். தேவைக்கேற்ப அதை மாற்றியமைக்கவும்.

  8. சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.

பிரத்தியேகத் தள்ளுபடியை முடக்கு

ஒரு பிரத்தியேகத் தள்ளுபடியைக் கைமுறையாகக் காலாவதியாக்க விரும்பினால், அதாவது அது பயன்படுத்தப்படுவதைத் தற்காலிகமாக நிறுத்த விரும்பினால், அதை நீங்கள் முடக்கலாம். முடக்கப்பட்ட தள்ளுபடியை எப்போது வேண்டுமானாலும் மீண்டும் செயலாக்கலாம்.

படிகள்:

  1. உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, தள்ளுபடிகள் பகுதிக்குச் செல்லவும்.
  2. நீங்கள் முடக்க விரும்பும் பிரத்தியேகத் தள்ளுபடியைக் கிளிக் செய்யவும்.
  3. முடக்கு என்பதைக் கிளிக் செய்யவும்.
  4. முடக்கவா? உரையாடல் பெட்டியில், முடக்கு என்பதைக் கிளிக் செய்யவும்.

பிரத்தியேகத் தள்ளுபடி விவரங்கள் பக்கத்திற்குச் சென்று, செயலாக்கு என்பதைக் கிளிக் செய்வதன் மூலம் எப்போது வேண்டுமானாலும் தள்ளுபடியை மீண்டும் செயலாக்கலாம்.

பிரத்தியேகத் தள்ளுபடியை நீக்கு

உங்களுக்கு இனி தேவைப்படாத பிரத்தியேகத் தள்ளுபடியை நீங்கள் நீக்கலாம். பிரத்தியேகத் தள்ளுபடியை நீக்கிய பிறகு மீட்டெடுக்க முடியாது.

படிகள்:

  1. உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, தள்ளுபடிகள் பகுதிக்குச் செல்லவும்.
  2. நீங்கள் நீக்க விரும்பும் பிரத்தியேகத் தள்ளுபடியைக் கிளிக் செய்யவும்.
  3. செயல்கள் > நீக்கு என்பதைக் கிளிக் செய்யவும்.
  4. நீக்கவா? உரையாடல் பெட்டியில், தள்ளுபடியை நீக்கு என்பதைக் கிளிக் செய்யவும்.