ஆர்டர்களுக்கான பிரத்தியேகத் தள்ளுபடிகள்

பின்வரும் வழிகளில் பயன்படுத்த வேண்டிய தள்ளுபடித் தொகையைத் தீர்மானிக்க, பிரத்தியேக ஆர்டர் தள்ளுபடிகளை நீங்கள் அமைக்கலாம்:

  • சதவீதத் தள்ளுபடி: குறிப்பிடப்பட்ட சதவீதத்திற்கு ஏற்ப ஆர்டரின் மொத்தத் தொகையைக் குறைக்கும்.
  • நிலையான தொகைத் தள்ளுபடி: குறிப்பிடப்பட்ட தொகைக்கு ஏற்ப ஆர்டரின் மொத்தத் தொகையைக் குறைக்கும். குறிப்பிடப்பட்ட தொகையானது கார்ட்டின் மொத்தத் தொகையை விட அதிகமாக இருந்தால், அந்த ஆர்டர் இலவசமாக வழங்கப்படும்.

உங்களிடம் பல செயலில் உள்ள ஆர்டர் தள்ளுபடிகள் இருந்தால், நிபந்தனைகளைப் பூர்த்தி செய்யும் மிகச் சமீபத்தில் உருவாக்கப்பட்ட ஆர்டர் தள்ளுபடியே பயன்படுத்தப்படும்.

ஆர்டர் தள்ளுபடிகளுக்கு ஆதரிக்கப்படும் விதிகள்

ஒரு குறிப்பிட்ட ஆர்டர் தள்ளுபடி எப்போது பயன்படுத்தப்பட வேண்டும் என்பதற்கான நிபந்தனைகளைக் குறிப்பிட, பிரத்தியேக விதிகள் தொகுப்பை நீங்கள் உருவாக்கலாம். தள்ளுபடியைப் பயன்படுத்துவதற்கு எல்லா விதிகளும் பூர்த்தியாக வேண்டும் என்றோ அல்லது ஏதேனும் ஒரு விதி பூர்த்தியாக வேண்டும் என்றோ நீங்கள் அமைக்கலாம். தள்ளுபடியை உருவாக்கும்போது நீங்கள் உள்ளமைக்கும் குறைந்தபட்சக் கொள்முதல் தேவைகள் அல்லது வாடிக்கையாளர் தகுதித் தேவைகள் போன்ற பிற தள்ளுபடி அமைப்புகளைப் பொருட்படுத்தாமல், இந்தப் பிரத்தியேக விதிகள் பூர்த்தியாகியிருக்க வேண்டும்.

பிரத்தியேக ஆர்டர் தள்ளுபடிகளுக்குப் பின்வரும் விதி வகைகள் ஆதரிக்கப்படுகின்றன:

  • Shopify சந்தை
  • கார்ட்டில் விற்பனைத் திட்டம் உள்ளது
  • நிறுவனம்
  • வாடிக்கையாளர் B2B
  • வாடிக்கையாளரின் ஆர்டர் எண்ணிக்கை
  • வாடிக்கையாளர் டேக்

பிரத்தியேக ஆர்டர் தள்ளுபடியை உருவாக்கு

Checkout Blocks செயலியில் இருந்தோ Shopify நிர்வாகியில் உள்ள உங்கள் தள்ளுபடிகள் பக்கத்தில் இருந்தோ ஒரு பிரத்தியேக ஆர்டர் தள்ளுபடியை நீங்கள் உருவாக்கலாம்.

எந்த விதிகள் உள்ளன என்பதை உறுதிப்படுத்த, ஆதரிக்கப்படும் விதிகளின் பட்டியலைப் பார்க்கவும்.

படிகள்:

  1. உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, செயலிகள் > Checkout Blocks என்பதற்குச் செல்லவும்.

  2. தள்ளுபடிகள் என்பதைக் கிளிக் செய்யவும்.

  3. தள்ளுபடியைச் சேர் என்பதைக் கிளிக் செய்யவும்.

  4. தள்ளுபடி வகையைத் தேர்ந்தெடு உரையாடல் பெட்டியில், ஆர்டரில் தள்ளுபடியாகும் தொகை என்பதைக் கிளிக் செய்யவும்.

  5. ஆர்டரில் தள்ளுபடியாகும் தொகை பிரிவில், பின்வரும் விருப்பங்களில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும்:

    • தள்ளுபடிக் குறியீடு என்பதைத் தேர்ந்தெடுத்து, பிறகு உங்கள் தள்ளுபடிக் குறியீட்டைச் சேர்க்கவும்.
    • தானியங்கு தள்ளுபடி என்பதைத் தேர்ந்தெடுத்து, பிறகு உங்கள் தள்ளுபடிச் செய்தியைச் சேர்க்கவும்.
  6. தள்ளுபடி உள்ளமைவு பிரிவில், உங்களின் பிரத்தியேகத் தள்ளுபடி விதித் தொகுப்பை உருவாக்கவும்:

    1. தள்ளுபடி மதிப்பு கீழ்தோன்றும் மெனுவில், தள்ளுபடியாகும் நிலையான தொகை அல்லது சதவீதம் என்பதைத் தேர்ந்தெடுத்து, டாலர் மதிப்பு அல்லது சதவீதத்தைச் சேர்க்கவும்.
    2. ​ தள்ளுபடி விதிகள் பிரிவில், உங்கள் விதித் தொகுப்பை உள்ளமைக்கவும்:
      1. ⊕ விதியைச் சேர் என்பதைக் கிளிக் செய்யவும்.
      2. பிரத்தியேகத் தள்ளுபடியைப் பயன்படுத்துவதற்கான உங்கள் விதியை உள்ளமைக்கவும்.
      3. விருப்பத்திற்குரியது: தேவைக்கேற்ப மேலும் விதிகளைச் சேர்க்கவும்.
  7. விருப்பத்திற்குரியது: நீங்கள் பின்வரும் விருப்பங்களை உள்ளமைக்கலாம்:

    • குறைந்தபட்சக் கொள்முதல் தேவைகள், தள்ளுபடிக்குத் தகுதிபெற வாடிக்கையாளர்கள் குறைந்தபட்சக் கொள்முதல் தொகையைச் செலவிட வேண்டும் என்பதற்காக. இந்தத் தொகையானது ஷிப்பிங், வரிகள் மற்றும் சுங்க வரிகள் பயன்படுத்தப்படுவதற்கு முந்தையதாகும்.
    • இணைப்புகள், ஆர்டர், தயாரிப்பு அல்லது ஷிப்பிங் தள்ளுபடிகளுடன் தள்ளுபடிக் குறியீட்டை வாடிக்கையாளர்கள் இணைக்க அனுமதிக்க.
  8. விருப்பத்திற்குரியது: நீங்கள் ஒரு தள்ளுபடிக் குறியீடு உருவாக்குகிறீர்கள் எனில், பின்வரும் கூடுதல் விருப்பங்களையும் உள்ளமைக்கலாம்:

    • வாடிக்கையாளர் தகுதி, இந்தத் தள்ளுபடி அனைவருக்கும் பொருந்துமா, குறிப்பிட்ட வாடிக்கையாளர் பிரிவுகள் அல்லது குறிப்பிட்ட வாடிக்கையாளர்களுக்கு மட்டும் பொருந்துமா என்பதைத் தேர்ந்தெடுக்க.
    • அதிகபட்சத் தள்ளுபடிப் பயன்பாடுகள், தள்ளுபடியைப் பயன்படுத்தக்கூடிய முறைகளின் எண்ணிக்கையை வரம்பிட.
  9. செயலில் உள்ள தேதிகள் பிரிவில், தள்ளுபடிக்கான தொடக்கத் தேதியை அமைத்து, பின்வருவனவற்றில் ஏதேனும் ஒன்றைச் செய்யவும்:

    • தள்ளுபடிக்கான முடிவுத் தேதியை அமைக்க விரும்பினால், முடிவுத் தேதியை அமை என்பதைக் கிளிக் செய்து, தள்ளுபடி முடிவடையும் தேதியை அமைக்கவும்.
      • தள்ளுபடியானது ஒரு நாள் மட்டுமே செல்லுபடியாக வேண்டும் என நீங்கள் விரும்பினால், தொடக்கத் தேதி மற்றும் முடிவுத் தேதி ஆகிய இரண்டிற்கும் ஒரே நாள்காட்டி நாளைத் தேர்ந்தெடுக்கவும்.
    • தள்ளுபடிக் குறியீடு காலாவதியாகக் கூடாது என நீங்கள் விரும்பினால், உங்கள் தள்ளுபடிக்கான முடிவுத் தேதியை அமைக்க வேண்டாம்.
  10. அது சரியாக அமைக்கப்பட்டிருப்பதை உறுதிப்படுத்த, சுருக்கம் பிரிவில் உங்கள் தள்ளுபடி விவரங்களை மதிப்பாய்வு செய்யவும்.

  11. சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.