செக்அவுட் படிவ விருப்பத்தேர்வுகளைத் திருத்துதல்
உங்கள் செக்அவுட் பக்கங்களில் உள்ள சில புலங்களை நீங்கள் கட்டாயமாக்கவோ விருப்பத்தேர்வாக்கவோ சேர்க்காமல் விடவோ முடியும். செக்அவுட் படிவத்தின் எல்லாப் புலங்களையும் திருத்த முடியாது.
இந்தப் பக்கத்தில் உள்ளது
செக்அவுட்டில் வாடிக்கையாளர் தொடர்பு முறையை அமைத்தல்
செக்அவுட்டில் உங்கள் வாடிக்கையாளர்களுக்கு எந்தத் தொடர்பு விருப்பத்தேர்வுகள் காட்டப்பட வேண்டும் என்பதை நீங்கள் அமைக்கலாம். நீங்கள் பின்வரும் விருப்பத்தேர்வுகளை உள்ளமைக்க முடியும்:
- செக்அவுட் செய்ய வாடிக்கையாளர்கள் எந்தத் தொடர்பு முறையைப் பயன்படுத்தலாம் என்பதைத் தேர்ந்தெடுக்கவும். நீங்கள் பின்வரும் விருப்பத்தேர்வுகளிலிருந்து தேர்வுசெய்யலாம்:
- ஃபோன் எண் அல்லது மின்னஞ்சல்
- மின்னஞ்சல்
- வாடிக்கையாளர்கள் Shop செயலியைப் பதிவிறக்குமாறு தூண்டும் இணைப்பைக் காட்ட வேண்டுமா என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
- வாடிக்கையாளர்கள் செக்அவுட் செய்வதற்கு முன்பு அவர்களின் வாடிக்கையாளர் கணக்கில் உள்நுழைவதைக் கட்டாயமாக்க வேண்டுமா என்பதைத் தேர்ந்தெடுக்கவும். உள்நுழைவது கட்டாயமாக்கப்படும்போது வாடிக்கையாளர்கள் மின்னஞ்சல் முகவரியைப் பயன்படுத்தி மட்டுமே செக்அவுட் செய்ய முடியும்.
புதிய ஸ்டோர்களில் மின்னஞ்சல் என்பது இயல்புநிலையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும். அதற்குப் பதிலாக ஃபோன் எண் அல்லது மின்னஞ்சல் என்பது தேர்ந்தெடுக்கப்படும்போது, பயன்படுத்த வேண்டிய தொடர்பு முறையை வாடிக்கையாளர்களே தேர்வுசெய்வார்கள். மின்னஞ்சல் முகவரி, ஃபோன் எண் ஆகிய இரண்டையுமே தொடர்பு முறையாகக் கட்டாயமாக்கும் விருப்பத்தேர்வு எதுவும் இல்லை. ஃபோன் எண்ணையும் கட்டாயமாக்க, ஷிப்பிங் முகவரி ஃபோன் எண் என்பதை கட்டாயம் என அமைக்கவும்.
படிகள்:
உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, அமைப்புகள் > செக்அவுட் என்பதற்குச் செல்லவும்.
வாடிக்கையாளர் தொடர்பு முறை பிரிவில், பின்வரும் அமைப்புகளில் எதையாவது செயல்படுத்தவும்:
- வாடிக்கையாளர்கள் தங்களுடைய தொடர்பு முறையாக ஃபோன் எண் அல்லது மின்னஞ்சலைத் தேர்ந்தெடுக்க அனுமதிக்க, ஃபோன் எண் அல்லது மின்னஞ்சல் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
- செக்அவுட் செய்ய வாடிக்கையாளர்கள் மின்னஞ்சலைப் பயன்படுத்துவதைக் கட்டாயமாக்க, மின்னஞ்சல் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
- விருப்பத்தேர்வு: ஆர்டர் நிலை பக்கத்தில் Shop செயலியைப் பதிவிறக்குமாறு தூண்டும் செய்தியைக் காட்ட, Shop மூலம் வாடிக்கையாளர்கள் தங்கள் ஆர்டரைத் தடமறிவதற்கான இணைப்பைக் காட்டு எனும் அமைப்பைச் செயல்படுத்தவும்.
- விருப்பத்தேர்வு: செக்அவுட் செய்வதற்கு முன்பு வாடிக்கையாளர் கணக்கில் உள்நுழைவதைக் கட்டாயமாக்க, செக்அவுட்டுக்கு முன்பு வாடிக்கையாளர்கள் தங்களுடைய கணக்கில் உள்நுழைவதைக் கட்டாயமாக்கு எனும் அமைப்பைச் செயல்படுத்தவும்.
சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.
செக்அவுட்டில் வாடிக்கையாளர் தகவலை அமைத்தல்
செக்அவுட் செயல்முறையின் ஒரு பகுதியாக வாடிக்கையாளர்கள் எந்தத் தகவலை உள்ளிடுவது கட்டாயம் என்பதை வாடிக்கையாளர் தகவல் பிரிவு தீர்மானிக்கிறது. வாடிக்கையாளர் தகவல் தொடர்பான இந்தக் கட்டுப்பாடுகள் ஆர்டருக்கான வாடிக்கையாளர் சுயவிவரம் மற்றும் ஷிப்பிங் முகவரிக்கு மட்டுமே பொருந்தும், பில்லிங் முகவரி அல்லது பில்லிங் தொடர்புத் தகவலுக்குப் பொருந்தாது.
படிவ விருப்பத்தேர்வுகள் குறித்து மேலும் அறிய, பின்வரும் அட்டவணையைச் சரிபார்க்கவும்:
| வாடிக்கையாளர் தகவல் | விளக்கம் | படிவ விருப்பத்தேர்வுகள் |
|---|---|---|
| முழுப் பெயர் | முதல் மற்றும் கடைசிப் பெயர் என்பவை இரண்டு தனித்தனிப் படிவப் புலங்களாகும். புதிய ஸ்டோர்களில் முதல் மற்றும் கடைசிப் பெயர் தேவை என்பது இயல்புநிலையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும். கடைசிப் பெயர் மட்டும் தேவை என்பதைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் ஒற்றைப் படிவப் புலமாக மாற்றிக்கொள்ளலாம். |
|
| நிறுவனத்தின் பெயர் | வாடிக்கையாளர் ஒருவர் நிறுவனத்தின் பெயர் புலத்தில் ஏதேனும் ஒன்றை உள்ளிட்டால், வணிக முகவரிகளுக்கு மட்டுமே கிடைக்கும் ஷிப்பிங் விருப்பங்களை அவர் அணுக முடியும். நீங்கள் வணிகங்களுக்குப் பொருட்களை விற்கவில்லை எனில், செக்அவுட் படிவ விருப்பங்களில் சேர்க்க வேண்டாம் என்பதைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் அந்தப் புலத்தை அகற்றலாம். செக்அவுட்டின் போது நிறுவனத்தின் பெயர் என்பதை கட்டாயம் என அமைத்தால், Apple Pay அல்லது Google Pay ஐப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களின் வாலட்டில் நிறுவனத்தின் பெயர் இல்லாதபோது, அவர்கள் உங்கள் செக்அவுட்டில் அதை உள்ளிட வேண்டும். Shop Pay-க்கு நிறுவனத்தின் பெயர் தேவையில்லை என்பதால், வாடிக்கையாளர்கள் Shop Pay மூலம் செய்யும் ஆர்டர்களில் நிறுவனத்தின் பெயர் இடம்பெறாமல் போகலாம். |
|
| நிறுவனத்தின் VAT எண் | தகுதியான EU அல்லது UK எல்லை தாண்டிய ஆர்டருக்கான செக்அவுட்டில் வாடிக்கையாளர் செல்லுபடியாகும் மதிப்புக்கூட்டு வரி (VAT) எண்ணை உள்ளிட்டால், அந்த ஆர்டருக்கு ரிவர்ஸ் சார்ஜ் பயன்படுத்தப்படும். ஆர்டரிலிருந்து VAT அகற்றப்படும், அத்துடன் அதைப் புகாரளித்துச் செலுத்துவது வாடிக்கையாளரின் பொறுப்பாகும். ஐரோப்பிய ஒன்றியம் அல்லது யுனைடெட் கிங்டமில் உள்ள வணிகங்களுக்கு நீங்கள் விற்பனை செய்யவில்லை எனில், செக்அவுட் படிவ விருப்பத்தேர்வுகளில் சேர்க்க வேண்டாம் என்பதைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் இந்தப் புலத்தை அகற்றலாம். இந்தப் புலத்தை நீங்கள் செயல்படுத்தினால், உங்கள் வாடிக்கையாளர்களுக்கான VAT விலைப்பட்டியல்கள் என்பதையும் செயல்படுத்துவதை உறுதிசெய்யவும். |
|
| முகவரி வரி 2 (அடுக்குமாடிக் குடியிருப்பு, வீடு போன்ற வை.) | அடுக்குமாடிக் குடியிருப்பு, தளம், வீடு அல்லது துறை எண் போன்ற இரண்டாம் நிலை முகவரியை உள்ளிட வாடிக்கையாளர்களை இந்த வரி அனுமதிக்கிறது. இந்தப் படிவப் புலம் இந்த நோக்கத்திற்காக மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். இந்த அமைப்பை தேவை அல்லது சேர்க்க வேண்டாம் என அமைத்தால், வாடிக்கையாளர்களின் இருப்பிட வகையைப் பொறுத்துச் சிலரால் தங்களின் கொள்முதலைத் தொடர முடியாமல் போகலாம். |
|
| ஷிப்பிங் முகவரித் தொலைபேசி எண் | ஷிப்பிங் முகவரிப் படிவத்தில் உள்ள தொலைபேசி எண் புலத்தை இந்த அமைப்பு கட்டுப்படுத்துகிறது. புதிய ஸ்டோர்களில் விருப்பத்தேர்வு என்பது இயல்புநிலையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் என்பதால், இந்தப் புலம் காட்டப்படும் ஆனால் செக்அவுட்டைத் தடுக்காது. உங்கள் கட்டண வழங்குநர் அல்லது ஷிப்பிங் கேரியருக்கு வாடிக்கையாளரின் தொலைபேசி எண் தேவைப்பட்டால், இதை தேவை என அமைக்கவும். அமலாக்கச் சிக்கல்களுக்கு, தொலைபேசி எண் சேகரிப்பில் உள்ள சிக்கலைத் தீர்த்தல் என்பதைப் பார்க்கவும். |
|
இந்தப் பிராந்திய முகவரிக் கூறுகளைத் தவிர, நீங்கள் விற்பனை செய்யும் ஒவ்வொரு நாட்டிற்கும் சந்தைக்கும் வாடிக்கையாளர் தகவல் அமைப்புகள் பொருந்தும்.
செக்அவுட் படிவத்தில் உள்ள அடுத்த முறைக்கு இந்தத் தகவலைச் சேமிக்கவும் விருப்பத்தேர்வு உட்பட மற்ற அனைத்துப் படிவ விருப்பத்தேர்வுகளும் எப்போதும் தேவைப்படும்.
செக்அவுட்டின் போது வாடிக்கையாளர் அடுத்த முறைக்கு இந்தத் தகவலைச் சேமிக்கவும் என்பதைத் தேர்ந்தெடுத்தால், உங்கள் ஸ்டோருக்காக அவர்கள் உள்ளிட்ட தொடர்பு மற்றும் ஷிப்பிங் முகவரித் தகவலை அவர்களின் உலாவி சேமித்துக்கொள்ளும். அடுத்த முறை அந்த வாடிக்கையாளர் செக்அவுட்டைப் பயன்படுத்தும்போது, அவர்களின் தொடர்பு மற்றும் ஷிப்பிங் முகவரித் தகவலை உலாவி தானாகவே நிரப்பும். வாடிக்கையாளர் சேமித்த தகவல்களை Shopify சேமிப்பதில்லை. இந்தத் தகவல் வாடிக்கையாளரின் உலாவியால் கேச் செய்யப்படுகிறது. ஓராண்டுக்குப் பிறகு, வாடிக்கையாளர் தனது கேச்சை அதற்குமுன்பே அழிக்காத பட்சத்தில், வாடிக்கையாளரின் கேச் செய்யப்பட்ட தகவல்களை அழிக்க உலாவியை Shopify தூண்டுகிறது.
படிகள்:
டெஸ்க்டாப்
உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, அமைப்புகள் > செக்அவுட் என்பதற்குச் செல்லவும்.
வாடிக்கையாளர் தகவல் பிரிவில், தகுந்த மாற்றங்களைச் செய்யவும்.
சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.
மொபைல்
Shopify செயலியிலிருந்து,
என்பதைத் தட்டி, பின்னர்
அமைப்புகள் என்பதைத் தட்டவும்.
ஸ்டோர் அமைப்புகள் பிரிவில், செக்அவுட் என்பதைத் தட்டவும்.
வாடிக்கையாளர் தகவல் பிரிவில், தகுந்த மாற்றங்களைச் செய்யவும்.
சேமி அல்லது ✓ என்பதைத் தட்டவும்.
மார்க்கெட்டிங் விருப்பத்தேர்வு
செக்அவுட் மற்றும் உள்நுழைவின் போது வாடிக்கையாளர்களுக்கு மார்க்கெட்டிங் ஒப்புதல் எவ்வாறு காட்டப்பட வேண்டும் என்பதை மார்க்கெட்டிங் விருப்பத்தேர்வு பிரிவு தீர்மானிக்கிறது. பின்வரும் விருப்பத்தேர்வுகளை நீங்கள் செயல்படுத்தலாம்:
- மின்னஞ்சல்: மார்க்கெட்டிங் ஒப்புதல் தேர்வுப்பெட்டி, செக்அவுட்டிலோ உள்நுழைவிலோ அல்லது இவை இரண்டிலுமோ காட்டப்பட வேண்டுமா என்பதை நீங்கள் தேர்வுசெய்யலாம். செக்அவுட் மற்றும் உள்நுழைவின் போது எந்தெந்த வாடிக்கையாளர் பிராந்தியங்களில் மின்னஞ்சல் மார்க்கெட்டிங் ஒப்புதல் தேர்வுப்பெட்டி முன்பே தேர்ந்தெடுக்கப்பட்டிருக்க வேண்டும் என்பதையும் நீங்கள் தேர்வுசெய்யலாம். முன்பே தேர்ந்தெடுக்கப்பட்ட மின்னஞ்சல் மார்க்கெட்டிங் ஒப்புதலைச் செயல்படுத்துவது என்பது, செக்அவுட் மற்றும் உள்நுழைவின் போது ஒப்புதல் தேர்வுப்பெட்டியைத் தேர்வுநீக்குவதன் மூலம் வாடிக்கையாளர் மின்னஞ்சல் மார்க்கெட்டிங்கிலிருந்து கைமுறையாக விலக வேண்டும் என்பதாகும்.
- Shopify பரிந்துரைக்கும் பிராந்தியங்கள்: Shopify வழங்கும் சமீபத்திய பரிந்துரைகளின் அடிப்படையில், மின்னஞ்சல் மார்க்கெட்டிங் ஒப்புதல் தேர்வுப்பெட்டி முன்பே தேர்ந்தெடுக்கப்பட்ட வாடிக்கையாளர் பிராந்தியங்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றன. இந்தத் தானியங்கிப் பரிந்துரைகள் சட்ட ஆலோசனையாகக் கருதப்படாது, மேலும் உங்கள் உள்ளூர்ச் சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகளுக்கு இணங்குவது உங்கள் பொறுப்பாகும்.
- நீங்கள் தேர்வுசெய்யும் பிராந்தியங்கள்: மின்னஞ்சல் மார்க்கெட்டிங் ஒப்புதல் தேர்வுப்பெட்டி முன்பே தேர்ந்தெடுக்கப்பட்டிருக்க வேண்டிய வாடிக்கையாளர் பிராந்தியங்களை நீங்கள் கைமுறையாகத் தேர்வுசெய்யலாம். பிராந்தியங்கள் எதையும் தேர்ந்தெடுக்காமல் விட்டுவிடுவதன் மூலம், அனைத்துப் பிராந்தியங்களில் உள்ள வாடிக்கையாளர்களும் மின்னஞ்சல் மார்க்கெட்டிங்கிற்குக் கைமுறையாக விருப்பம் தெரிவிக்க வேண்டியிருக்கும்.
- SMS: வாடிக்கையாளர் தனது தொலைபேசி எண்ணுடன் SMS மார்க்கெட்டிங்கில் விருப்பம் தெரிவிக்க நீங்கள் அனுமதிக்கலாம். உங்கள் வாடிக்கையாளர்கள் SMS மார்க்கெட்டிங்கிற்குத் தெளிவான ஒப்புதலை வழங்குவதை உறுதிசெய்ய, செக்அவுட்டில் SMS மார்க்கெட்டிங் விருப்பத்தேர்வுப் பெட்டியை முன்பே தேர்ந்தெடுக்க முடியாது. இந்த மார்க்கெட்டிங் விருப்பத்தேர்வு என்பது, ஆர்டர் உறுதிப்படுத்தல் SMS அறிவிப்புகளில் இருந்து வேறுபட்ட ஓர் அமைப்பாகும்.
- WhatsApp: வாடிக்கையாளர்கள் தங்களின் தொலைபேசி எண்ணுடன் WhatsApp மார்க்கெட்டிங்கில் விருப்பம் தெரிவிக்க நீங்கள் அனுமதிக்கலாம். சில பிராந்தியங்களில், SMS-க்குப் பதிலாக WhatsApp மார்க்கெட்டிங் விருப்பத்தேர்வை நீங்கள் காட்டலாம்.
வாடிக்கையாளர் தொடர்புத் தகவலைச் சேகரிப்பது குறித்து மேலும் அறிக.
செக்அவுட்டில் கூடுதல் வரிப் புலங்கள்
நீங்கள் குறிப்பிட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்தால், செக்அவுட்டில் கூடுதல் வரிப் புலங்கள் காட்டப்படும். ஆன்லைன் ஸ்டோரின் செக்அவுட் பக்கத்தில் கட்டண விவரங்கள் பிரிவுக்குப் பிறகு இந்தப் புலங்கள் காட்டப்படும்.
இந்த நாடுகள் மற்றும் பிராந்தியங்களைச் சேர்ந்த வாடிக்கையாளர்கள் இந்தப் புலங்களில் கூடுதல் தகவல்களை உள்ளிடுவார்கள். உங்கள் வாடிக்கையாளர் ஒரு குறிப்பிட்ட நாடு அல்லது பிராந்தியத்தில் வசிப்பவர் குறித்த தகவல்கள் இல்லாத வெளிநாட்டவராக இருந்தால், பெரும்பாலான சந்தர்ப்பங்களில் அவர் தனது பாஸ்போர்ட் எண்ணை இந்தப் புலங்களில் உள்ளிடலாம்.
வாடிக்கையாளர் ஆர்டரை அளித்த பிறகு, அவர்களின் கூடுதல் தகவல்களை அவரின் ஆர்டர் விவரங்கள் பக்கத்தில் நீங்கள் பார்க்கலாம்.
செக்அவுட்டில் உள்ள கூடுதல் வரிப் புலங்கள் பற்றி மேலும் அறிக.
செக்அவுட் படிவச் சிக்கல்களைத் தீர்த்தல்
நீங்கள் எதிர்பார்க்கும் வாடிக்கையாளர் தகவலை உங்களின் செக்அவுட் சேகரிக்கவில்லை எனில், செக்அவுட்டில் எந்தெந்தப் படிகள் சேர்க்கப்பட்டுள்ளன என்பதைப் பாதிக்கும் ஓர் அமைப்போ தயாரிப்பின் உள்ளமைவோ பெரும்பாலும் காரணமாக இருக்கும். ஒரு புலம் அல்லது படி ஏன் விடுபட்டிருக்கலாம் மற்றும் அதை எவ்வாறு திருத்துவது என்பதைக் கண்டறிய பின்வரும் சிக்கல்களை மதிப்பாய்வு செய்யவும்.
செக்அவுட்டில் ஷிப்பிங் முகவரி அல்லது ஷிப்பிங் கட்டணங்கள் விடுபட்டுள்ளன
கார்ட்டில் உள்ள குறைந்தபட்சம் ஒரு உருப்படிக்கு ஷிப்பிங் தேவைப்படும்போது மட்டுமே செக்அவுட்டில் ஷிப்பிங் முகவரிப் படி சேர்க்கப்படும். எந்த உருப்படிக்கும் ஷிப்பிங் தேவைப்படவில்லை எனில், செக்அவுட் ஷிப்பிங் முகவரிப் படியைத் தவிர்க்கும், ஷிப்பிங் கட்டணங்கள் பொருந்தாது மற்றும் பில்லிங் தகவல் மட்டுமே சேகரிக்கப்படும்.
எந்தவொரு உருப்படிக்கும் ஷிப்பிங் தேவைப்படாத பட்சத்தில், செக்அவுட்டில் ஷிப்பிங் படியைச் சேர்க்க முகவரிச் சேகரிப்பு விருப்பத்தேர்வுகள் வற்புறுத்தாது.
செக்அவுட் வாடிக்கையாளர்களிடம் ஷிப்பிங் முகவரியைக் கேட்கவில்லை என்றாலோ அல்லது ஷிப்பிங் கட்டணங்கள் பொருந்தவில்லை என்றாலோ, ஷிப்பிங் தேவைப்படும் தயாரிப்புகளுக்கு பருப்பொருள் தயாரிப்பு அமைப்பு செயல்படுத்தப்பட்டுள்ளதா என்பதைச் சரிபார்க்கவும். தயாரிப்பு இறக்குமதிகள், செயலிகள் அல்லது மொத்தத் திருத்தங்கள் இந்த அமைப்பை மாற்றக்கூடும்.
படிகள்:
உங்களின் Shopify நிர்வாகியில், தயாரிப்புகள் என்பதற்குச் செல்லவும்.
செக்அவுட்டில் ஷிப்பிங் முகவரி தேவைப்படும் தயாரிப்பைக் கிளிக் செய்யவும்.
ஷிப்பிங் பிரிவில், பருப்பொருள் தயாரிப்பு செயல்படுத்தப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளவும்.
சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.
மாறுபாடுகளைக் கொண்ட தயாரிப்புகளுக்கு, பருப்பொருள் தயாரிப்பு அமைப்பு மாறுபாடு அளவில் பொருந்தும். ஒரே நேரத்தில் பல மாறுபாடுகள் அல்லது தயாரிப்புகளைப் புதுப்பிக்க, மொத்தத் திருத்தியைப் பயன்படுத்தி ஷிப்பிங் தேவை நெடுவரிசையைச் சேர்த்து, அனைத்து மாறுபாடுகளிலும் அமைப்பைச் செயல்படுத்தவும்.
உங்கள் ஸ்டோர் டிஜிட்டல் அல்லது ஷிப்பிங் செய்ய முடியாத தயாரிப்புகளை மட்டுமே விற்றால், செக்அவுட்டில் ஷிப்பிங் முகவரிப் படி இருக்காது.
செக்அவுட்டில் தொலைபேசி எண்ணின் தேவை தவிர்க்கப்பட்டது
கட்டாயம் தேவை என அமைக்கப்பட்டுள்ள ஷிப்பிங் முகவரி தொலைபேசி எண் ஷிப்பிங் முகவரிப் படிவத்திற்குப் பொருந்தும் மற்றும் செக்அவுட்டில் ஷிப்பிங் முகவரிப் படி இருந்தால் மட்டுமே இது வற்புறுத்தப்படும். செக்அவுட் ஷிப்பிங் முகவரிப் படியைத் தவிர்த்தால், தொலைபேசி எண்ணின் தேவை பொருந்தாது.
ஷிப்பிங் முகவரி இல்லாத ஆர்டர்களுக்கு ஷிப்பிங் முகவரி தொலைபேசி எண்ணைக் கேட்பது ஆதரிக்கப்படாது. செக்அவுட்டில் ஷிப்பிங் முகவரிப் படி ஏன் விடுபட்டிருக்கலாம் எனச் சிக்கல் தீர்க்க, செக்அவுட்டில் விடுபட்ட ஷிப்பிங் முகவரிக்கான சிக்கல் தீர்த்தலைப் பார்க்கவும்.