உங்கள் செக்அவுட்டை மொழிபெயர்த்தல்

உங்களின் Shopify நிர்வாகியில் பல மொழிகளை நீங்கள் செயல்படுத்தலாம், இதனால் உலகம் முழுவதுமுள்ள வாடிக்கையாளர்கள் உள்ளடக்கத்தைத் தங்களின் தாய்மொழியில் பார்க்க முடியும்.

புதிய செக்அவுட் மொழியைச் சேர்

பல மொழிகளில் விற்பதற்கு ஏற்ற தீம்களுக்கு, வாடிக்கையாளர்கள் தங்களுக்கு விருப்பமான மொழியைத் தேர்ந்தெடுக்கும் வகையில், உங்கள் ஆன்லைன் ஸ்டோரின் இயல்புநிலை மொழியை நீங்கள் மாற்றலாம் மேலும் பிற மொழிகளைச் சேர்க்கலாம். நீங்கள் விரும்பும் மொழி இல்லை என்றாலோ அல்லது இயல்புநிலை மொழிபெயர்ப்புகளை நீங்கள் திருத்த விரும்பினாலோ, மொழிபெயர்ப்புகளை நீங்களே உருவாக்கலாம்.

உங்கள் செக்அவுட்டில் சொற்றொடர்களை மாற்றுதல்

உங்கள் Shopify நிர்வாகியில் இருந்து செக்அவுட்டின் இயல்புநிலை உரையினை மாற்றுவதன் மூலம் உங்கள் ஆன்லைன் ஸ்டோரைத் தனிப்பயனாக்கலாம். உங்கள் செக்அவுட் பக்கத்தில் உள்ள ஒவ்வொரு புலத்திற்குமான உரையினை நீங்கள் திருத்தலாம். உங்கள் பிராண்டுக்கு ஏற்றவாறு செக்அவுட் அனுபவத்தைத் தனிப்பயனாக்க இது உதவுகிறது. எடுத்துக்காட்டாக, வெற்றுப் புலமாக விட முடியாது என்ற இயல்புநிலைப் பிழைச் செய்தியை உங்கள் பிராண்டைச் சிறப்பாகப் பிரதிபலிக்கும் செய்திக்கு நீங்கள் மாற்றலாம்.

நீங்கள் சந்தா தயாரிப்புகளை விற்றால், சந்தா செக்அவுட் உள்ளடக்கத்தைத் திருத்தும் முன்பு சந்தா வெளிப்படுத்தல் சொற்றொடர்களை மதிப்பாய்வு செய்யவும்.

படிகள்:

டெஸ்க்டாப்
  1. உங்களின் Shopify நிர்வாகியில், அமைப்புகள் > செக்அவுட் என்பதற்குச் செல்லவும்.

  2. செக்அவுட் மொழி பிரிவில், செக்அவுட் உள்ளடக்கத்தைத் திருத்து என்பதைக் கிளிக் செய்யவும்.

  3. செக்அவுட் புலங்களில் தேவையான மாற்றங்களைச் செய்யவும்.

  4. சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.

மொபைல்
  1. Shopify செயலியில், Menu என்பதைத் தட்டி, பிறகு Settings அமைப்புகள் என்பதைத் தட்டவும்.

  2. ஸ்டோர் அமைப்புகள் பிரிவில், செக்அவுட் என்பதைத் தட்டவும்.

  3. செக்அவுட் மொழி பிரிவில், செக்அவுட் உள்ளடக்கத்தைத் திருத்து என்பதைத் தட்டவும்.

  4. செக்அவுட் புலங்களில் தேவையான மாற்றங்களைச் செய்யவும்.

  5. சேமி அல்லது ✓ என்பதைத் தட்டவும்.