செயலிகள் மூலம் உங்கள் செக்அவுட் மற்றும் வாடிக்கையாளர் கணக்குகளைத் தனிப்பயனாக்குதல்

செக்அவுட் உள்ளமைவு, நன்றி மற்றும் ஆர்டர் நிலைப் பக்கங்கள், வாடிக்கையாளர் ஆர்டர் மற்றும் சுயவிவரப் பக்கங்கள் உள்ளிட்ட உங்கள் செக்அவுட் மற்றும் வாடிக்கையாளர் கணக்குப் பக்கங்களை பிளாக்குகள் மூலம் நீங்கள் தனிப்பயனாக்கலாம். செயலியை உருவாக்குபவர்கள் மற்றும் Shopify பார்ட்னர்கள் செயலிகளை உருவாக்கி அவற்றை Shopify App Store இல் வெளியிடுகிறார்கள். செக்அவுட் அல்லது வாடிக்கையாளர் கணக்குகளுடன் வேலை செய்யும், பொதுவில் கிடைக்கும் செயலிகளை நீங்கள் நிறுவலாம், உங்கள் டெவெலப்பரைக் கொண்டு ஒரு தனிப்பயன் செயலியை உருவாக்கலாம் அல்லது ஒரு Shopify பார்ட்னரைப் பணியமர்த்தலாம்.

உங்கள் Shopify நிர்வாகியில் ஒரு செயலியை நிறுவிய பிறகு, செக்அவுட் மற்றும் கணக்குகள் எடிட்டரைப் பயன்படுத்தி ஆதரிக்கப்படும் பக்கங்களில் அதைச் சேர்க்கலாம். சில பிளாக்குகளை உங்கள் பக்கங்களில் உள்ள குறிப்பிட்ட பகுதிகளில் மட்டுமே சேர்க்க முடியும்.

செயலி கிடைக்கும் தன்மை

நன்றி மற்றும் ஆர்டர் நிலை பக்கங்கள் உட்பட செக்அவுட் மற்றும் வாடிக்கையாளர் கணக்குகளைத் தனிப்பயனாக்கும் சில செயலிகள், Basic Shopify திட்டம் அல்லது அதற்கும் அதிகமான திட்டத்தில் உள்ள பிசினஸ்களுக்குக் கிடைக்கும். வரைவு ஆர்டர்களில் உள்ள செக்அவுட்கள் உட்பட, செக்அவுட்டின் தகவல், ஷிப்பிங் மற்றும் பேமெண்ட் பக்கங்களைத் தனிப்பயனாக்கும் செயலிகள் Shopify Plus-க்கு மட்டுமே கிடைக்கும்.

Shopify திட்டங்களின்படி செக்அவுட் செயலி கிடைக்கும் தன்மையின் மேலோட்டம்.
செயலி வகைBasic Shopify திட்டம் அல்லது அதற்கும் அதிகமானதுShopify Plus
வெப் பிக்சல் செயலி நீட்டிப்புகளைக் கொண்டு உருவாக்கப்பட்ட செயலிகள்✔✔
வாங்குதலுக்குப் பிந்தைய செயலி நீட்டிப்புகளைக் கொண்டு உருவாக்கப்பட்ட செயலிகள்✔✔
Shopify Functions மூலம் உருவாக்கப்பட்ட பொதுச் செயலிகள்✔✔
Shopify Functions மூலம் உருவாக்கப்பட்ட தனிப்பயன் செயலிகள்✘✔
நன்றி மற்றும் ஆர்டர் நிலை பக்கங்களுக்கான UI நீட்டிப்புகளுடன் உருவாக்கப்பட்ட செயலிகள்✔✔
அனைத்து வாடிக்கையாளர் கணக்குகள் பக்கங்களுக்கான UI நீட்டிப்புகளுடன் உருவாக்கப்பட்ட செயலிகள்✔✔
தகவல், ஷிப்பிங் மற்றும் பேமெண்ட் பக்கங்களுக்கான UI நீட்டிப்புகளுடன் உருவாக்கப்பட்ட செயலிகள்✘✔
Checkout Blocks என்பது UI நீட்டிப்புகள் மற்றும் Shopify Functions மூலம் உங்கள் செக்அவுட்டைத் தனிப்பயனாக்குவதற்கான இலவசச் செயலியாகும்✔
(சில அம்சக் கட்டுப்பாடுகளுடன்)
✔

ஒரு செயலியை நிறுவு

உங்கள் செக்அவுட், வாடிக்கையாளர் கணக்குகள், நன்றி மற்றும் ஆர்டர் நிலைப் பக்கங்களில் நீங்கள் சேர்க்க விரும்பும் கூடுதல் அம்சங்கள் இருந்தால், இந்த அம்சங்களை உங்களுக்கு வழங்கக்கூடிய செயலிகளை ஆராயுங்கள். செயலியை உருவாக்குபவர்கள் மற்றும் Shopify பார்ட்னர்கள் உங்களுக்காகத் தனிப்பயன் செயலிகளை உருவாக்க முடியும் அல்லது செக்அவுட் அல்லது வாடிக்கையாளர் கணக்குகள் தனிப்பயனாக்கத்திற்காக மூன்றாம் தரப்புச் செயலிகளை Shopify App Store இல் இருந்து நிறுவிக் கொள்ளலாம்.

படிகள்:

  1. Shopify App Store-க்குச் சென்று, உங்கள் பிசினஸுக்கு ஏற்ற செக்அவுட் செயலியைத் தேடுங்கள்.
  2. செயலியைச் சேர் என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. செயலியை நிறுவு என்பதைக் கிளிக் செய்யவும்.

உங்கள் செயலியை நிறுவிய பிறகு, செக்அவுட் மற்றும் கணக்குகள் எடிட்டரைப் பயன்படுத்தி அதை உங்கள் பக்கங்களில் சேர்க்க வேண்டும்.

செக்அவுட் மற்றும் கணக்குகள் எடிட்டரில் செயலிகள் பக்கப்பட்டியைப் பயன்படுத்துதல்

செக்அவுட் மற்றும் கணக்குகள் எடிட்டரில் கிடைக்கும் செயலிகள் பக்கப்பட்டியில்தான் உங்களிடம் இருக்கும் மற்றும் நிறுவப்பட்டுள்ள பிளாக்குகளின் மேலோட்டத்தை நீங்கள் அணுக முடியும். பக்கப்பட்டி அனைத்தும் மற்றும் சேர்க்கப்பட்டது ஆகிய தாவல்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. செக்அவுட் மற்றும் கணக்குகள் பக்கங்களில் சேர்க்கக்கூடிய பிளாக்குகளை அனைத்தும் தாவல் பட்டியலிடுகிறது, மேலும் உங்கள் செக்அவுட் மற்றும் கணக்குகள் பக்கங்களில் நீங்கள் ஏற்கனவே சேர்த்துள்ள பிளாக்குகளை சேர்க்கப்பட்டது தாவல் பட்டியலிடுகிறது.

அனைத்துப் பக்கங்களிலும் கிடைக்கும் உங்களின் பிளாக்குகள் மற்றும் பிளாக் சேகரிப்புகள் அனைத்திலும் தேட பிளாக்குகளைத் தேடு எனும் தேடல் பட்டியைப் பயன்படுத்தவும்.

'அனைத்தும்' தாவல்

நிறுவப்பட்டுள்ள உங்கள் செயலிகளில் உள்ள கிடைக்கும் அனைத்து பிளாக்குகளின் பட்டியலும் அனைத்தும் தாவலில் இருக்கும். அனைத்தும் தாவலில் இருந்து, தொடர்புடைய செக்அவுட் மற்றும் கணக்குகள் பக்கங்களில் நேரடியாக பிளாக்குகளை நீங்கள் சேர்க்கலாம்.

அந்த பிளாக்குகள் எந்தச் செயலிகளைச் சேர்ந்தவையோ அந்தச் செயலிகளின் பெயர்களுக்குக் கீழே கிடைக்கும் அனைத்து பிளாக்குகளும் காட்டப்படும். ஒரு செயலியே பல வகையான பிளாக்குகளை வழங்கினால், "லாயல்டி பாயிண்ட்கள்" அல்லது "விருப்பப் பட்டியல் நிர்வாகம்" போன்று தொடர்புடைய பிளாக்குகளை ஒன்றாகக் குழுவாக்கும் சேகரிப்புகளில் அந்த பிளாக்குகள் காட்டப்படலாம். ஒரே செயலியில் இருந்து குழுவாக்கப்பட்ட பிளாக்குகள் பெரும்பாலும் ஒன்றாகச் செயல்படும் வகையிலேயே அமைக்கப்பட்டிருக்கும், எனவே உங்கள் வாடிக்கையாளர்களுக்கு முழுமையான அனுபவத்தை வழங்க ஒரு பிளாக் சேகரிப்பில் உள்ள அனைத்து பிளாக்குகளையும் சேர்ப்பதைக் கருத்தில் கொள்ளுங்கள். ஒவ்வொரு பிளாக்கையும் தேவைக்கேற்ப நீங்கள் உள்ளமைக்க, ஒரு சேகரிப்பில் இருந்து ஒவ்வொரு பிளாக்கையும் தனித்தனியாகச் சேர்க்க வேண்டும்.

ஒரு பக்கத்தில் பிளாக்கைச் சேர்க்கும்போது, அந்த பிளாக்கின் பெயருக்குப் பக்கத்தில் ✓ குறி காட்டப்படும். உங்கள் செக்அவுட் உள்ளமைவில் பிளாக் பலமுறை சேர்க்கப்பட்டிருந்தால், செக்அவுட் உள்ளமைவில் எத்தனை முறை பிளாக் சேர்க்கப்பட்டுள்ளது என்பதைக் குறிக்கும் ஒரு எண் காட்டப்படும். ஒரு பிளாக்கை ஒருமுறை மட்டுமே சேர்க்க முடியும் என்றால், பிளாக்கை வைத்த பிறகு அதைச் சேர்ப்பதற்கான விருப்பம் முடக்கப்படும்.

'சேர்க்கப்பட்டது' தாவல்

உங்கள் செக்அவுட் மற்றும் கணக்குகள் உள்ளமைவில் குறைந்தபட்சம் 1 இடத்திலாவது இருக்கும், நிறுவப்பட்ட அனைத்து பிளாக்குகளின் பட்டியலும் சேர்க்கப்பட்டது தாவலில் இருக்கும். அந்த பிளாக்குகள் எந்தச் செயலிகளைச் சேர்ந்தவையோ அந்தச் செயலிகளின் பெயர்களுக்குக் கீழே சேர்க்கப்பட்ட அனைத்து பிளாக்குகளும் காட்டப்படும். பட்டியலிடப்பட்ட பிளாக்குகள், அந்த பிளாக் சேர்க்கப்பட்டுள்ள ஏதேனும் பக்கங்களையும் காட்டும்.

பிளாக் அமைப்புகளை அணுக, பிளாக்கைக் கிளிக் செய்யவும்.

நிறுவப்பட்ட செயலிகளில் இருந்து பிளாக்குகளைச் சேர்

உங்கள் செயலியை நிறுவிய பிறகு, செக்அவுட் மற்றும் கணக்குகள் எடிட்டரைப் பயன்படுத்தி உங்கள் பக்கங்களில் அதை பிளாக்காகச் சேர்க்கலாம். சில செயலிகளை உங்கள் உள்ளமைவின் குறிப்பிட்ட பகுதிகளில் மட்டுமே சேர்க்க முடியும். சிறப்பம்சமாகக் காட்டப்பட்டுள்ள ஒவ்வொரு பகுதியிலும் அதிகபட்சம் 3 செயலிகளை மட்டுமே சேர்க்க முடியும்.

பிரிவுகள் பக்கப்பட்டி அல்லது செயலிகள் பக்கப்பட்டியைப் பயன்படுத்தி பக்கங்களில் உள்ள பிரிவுகளில் நேரடியாக இருக்கும் பிளாக்குகளை நீங்கள் சேர்க்கலாம்.

பிரிவுகள் பக்கப்பட்டியைப் பயன்படுத்தி பிளாக்குகளைச் சேர்

நீங்கள் தற்போது பார்க்கும் பக்கத்தில் நீங்கள் நிறுவியுள்ள செயலிகளில் உள்ள பிளாக்குகளை பிரிவுகள் பக்கப்பட்டியைப் பயன்படுத்திச் சேர்க்கலாம். ஒரு பக்கம் அல்லது பிரிவில் நிறுவுவதற்குக் கிடைக்கும் பிளாக்குகள் மட்டுமே தேர்ந்தெடுக்கக்கூடிய விருப்பங்களாகக் காட்டப்படும்.

படிகள்:

டெஸ்க்டாப்
  1. உங்கள் Shopify நிர்வாகியில், அமைப்புகள் > செக்அவுட் என்பதற்குச் செல்லவும்.

  2. உள்ளமைவுகள் பிரிவில், நீங்கள் தனிப்பயனாக்க விரும்பும் உள்ளமைவுக்கு அடுத்துள்ள திருத்து என்பதைக் கிளிக் செய்யவும்.

  3. செக்அவுட் மற்றும் கணக்குகள் எடிட்டரில், நீங்கள் ஒரு செயலியைச் சேர்க்க விரும்பும் பக்கத்தைத் தேர்ந்தெடுத்துவிட்டு, பிரிவுகள் பக்கப்பட்டியை அணுக பிரிவுகள் என்பதைக் கிளிக் செய்யவும்.

  4. நீங்கள் செயலியைச் சேர்க்க விரும்பும் பிரிவில் ⊕ பிளாக்கைச் சேர் என்பதைக் கிளிக் செய்யவும்.

  5. நீங்கள் சேர்க்க விரும்பும் பிளாக்கைக் கிளிக் செய்யவும்.

  6. தேவைக்கேற்ப பிளாக்கைத் தனிப்பயனாக்கவும்:

    • பிளாக்கின் இடத்தை மறுசீரமைக்க, பிரிவுகள் பட்டியலில் பிளாக்கை மேலோ அல்லது கீழோ இழுத்து விடவும் அல்லது மாதிரிக்காட்சி சாளரத்தில் உள்ள நகர்த்து பொத்தான்களைப் பயன்படுத்தவும்.
    • ஏதேனும் பிளாக் அமைப்புகளை உள்ளமைக்க பிளாக்கைக் கிளிக் செய்யவும்.
  7. சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.

மொபைல்
  1. Shopify செயலியிலிருந்து, Menu என்பதைத் தட்டிவிட்டு, பிறகு Settings அமைப்புகள் என்பதைத் தட்டவும்.

  2. ஸ்டோர் அமைப்புகள் பிரிவில், செக்அவுட் என்பதைத் தட்டவும்.

  3. உள்ளமைவுகள் பிரிவில், நீங்கள் தனிப்பயனாக்க விரும்பும் செக்அவுட் உள்ளமைவில் உள்ள தனிப்பயனாக்கு என்பதைத் தட்டவும்.

  4. செக்அவுட் மற்றும் கணக்குகள் எடிட்டரில், நீங்கள் செயலியைச் சேர்க்க விரும்பும் பக்கத்தைத் தேர்ந்தெடுத்து, பிரிவுகள் என்பதைத் தட்டவும்.

  5. நீங்கள் ஒரு செயலியைச் சேர்க்க விரும்பும் பிரிவில் உள்ள ⊕ பிளாக்கைச் சேர் என்பதைத் தட்டவும்.

  6. நீங்கள் சேர்க்க விரும்பும் பிளாக்கைத் தட்டவும்.

  7. தேவைக்கேற்ப பிளாக்கைத் தனிப்பயனாக்கவும்:

    • பிளாக்கின் இடத்தை மறுசீரமைக்க, பிரிவுகள் பட்டியலில் பிளாக்கை மேலோ அல்லது கீழோ இழுத்து விடவும் அல்லது மாதிரிக்காட்சி சாளரத்தில் உள்ள நகர்த்து பொத்தான்களைப் பயன்படுத்தவும்.
    • ஏதேனும் பிளாக் அமைப்புகளை உள்ளமைக்க, அந்தப் பிளாக்கைத் தட்டவும்.
  8. சேமி அல்லது ✓ என்பதைத் தட்டவும்.

செயலிகள் பக்கப்பட்டியைப் பயன்படுத்தி பிளாக்குகளைச் சேர்

நீங்கள் தற்போது பார்க்கும் பக்கத்தில் செயலிகள் பக்கப்பட்டியைப் பயன்படுத்தி, நீங்கள் நிறுவிய செயலிகளிலிருந்து பிளாக்குகளைச் சேர்க்கலாம். ஒரு பிளாக்கைச் சேர்க்கும்போது, குறிப்பிட்ட பிளாக்குகளை நிறுவ அனுமதிக்கப்படும் பக்கங்கள் மட்டுமே விருப்பங்களாகக் காட்டப்படும்.

செக்அவுட் மற்றும் கணக்குகள் எடிட்டரில் செயலிகள் பக்கப்பட்டியைப் பயன்படுத்துவது குறித்து மேலும் அறிக.

படிகள்:

டெஸ்க்டாப்
  1. உங்கள் Shopify நிர்வாகியில், அமைப்புகள் > செக்அவுட் என்பதற்குச் செல்லவும்.

  2. உள்ளமைவுகள் பிரிவில், நீங்கள் தனிப்பயனாக்க விரும்பும் உள்ளமைவுக்கு அடுத்துள்ள திருத்து என்பதைக் கிளிக் செய்யவும்.

  3. செக்அவுட் மற்றும் கணக்குகள் எடிட்டரில், செயலிகள் பக்கப்பட்டியை அணுக, Apps என்பதைக் கிளிக் செய்யவும்.

  4. நீங்கள் சேர்க்க விரும்பும் பிளாக்கிற்கு அடுத்துள்ள ⊕ என்பதைக் கிளிக் செய்யவும்.

  5. இதில் சேர் பாப்-அவுட்டில், நீங்கள் பிளாக்கைச் சேர்க்க விரும்பும் பக்கத்தைக் கிளிக் செய்யவும்.

  6. தேவைக்கேற்ப பிளாக்கைத் தனிப்பயனாக்கவும்:

  7. சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.

மொபைல்
  1. Shopify செயலியிலிருந்து, Menu என்பதைத் தட்டிவிட்டு, பிறகு Settings அமைப்புகள் என்பதைத் தட்டவும்.

  2. ஸ்டோர் அமைப்புகள் பிரிவில், செக்அவுட் என்பதைத் தட்டவும்.

  3. உள்ளமைவுகள் பிரிவில், நீங்கள் தனிப்பயனாக்க விரும்பும் செக்அவுட் உள்ளமைவில் உள்ள தனிப்பயனாக்கு என்பதைத் தட்டவும்.

  4. செக்அவுட் மற்றும் கணக்குகள் எடிட்டரில், செயலிகள் என்பதைத் தட்டவும்.

  5. நீங்கள் சேர்க்க விரும்பும் பிளாக்கிற்கு அடுத்துள்ள ⊕ என்பதைத் தட்டவும்.

  6. இதில் சேர் பாப்-அவுட்டில், நீங்கள் பிளாக்கைச் சேர்க்க விரும்பும் பக்கத்தைத் தட்டவும்.

  7. தேவைக்கேற்ப பிளாக்கைத் தனிப்பயனாக்கவும்:

  8. சேமி அல்லது ✓ என்பதைத் தட்டவும்.

ஒரு செயலியை நகர்த்தி வைத்தல்

ஒரு குறிப்பிட்ட பக்கத்தின் பிளாக்குகளுக்குள் ஒரு செயலியை நீங்கள் நகர்த்தி வைக்கலாம். சில செயலிகளைப் பக்கத்தின் குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே வைக்க முடியும். நீங்கள் செயலியை இழுத்து விட முயலும்போது, அனுமதிக்கப்படாத இடங்கள் சாம்பல் நிறத்தில் காட்டப்படும்.

படிகள்:

  1. உங்கள் Shopify நிர்வாகியில், அமைப்புகள் > செக்அவுட் என்பதற்குச் செல்லவும்.

  2. உள்ளமைவுகள் பிரிவில், நீங்கள் தனிப்பயனாக்க விரும்பும் உள்ளமைவுக்கு அடுத்துள்ள திருத்து என்பதைக் கிளிக் செய்யவும்.

  3. நீங்கள் நகர்த்த விரும்பும் செயலியைக் கண்டறியவும்.

  4. ஒரு செயலிக்கு அடுத்துள்ள ⠿ ஐகானைக் கிளிக் செய்து இழுத்து, செயலியை மற்றொரு இடத்திற்கு நகர்த்தவும்.

  5. சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.

பிளாக்குகளைப் பயன்படுத்தி வாடிக்கையாளர் கணக்குகளில் ஒரு பக்கத்தைச் சேர்

உங்கள் வாடிக்கையாளர் கணக்குகள் ஹெடரில் புதிய பக்கத்தைச் சேர்க்க உதவும் பிளாக்குகளைச் சில செயலிகள் வழங்குகின்றன. உதாரணமாக, விருப்பப் பட்டியல் செயலியானது வாடிக்கையாளர் கணக்குகளில் புதிய விருப்பப் பட்டியல் பக்கத்தைச் சேர்ப்பதற்கான ஒரு பிளாக்கை வழங்கக்கூடும்.

செக்அவுட் மற்றும் கணக்குகள் எடிட்டரில் உள்ள செயலிகள் பக்கப்பட்டியிலிருந்து செயலிப் பக்கங்களை நீங்கள் உருவாக்கலாம். சில செயலிப் பக்கங்கள் நேரடி இணைப்பை ஆதரிக்கின்றன, இதன் மூலம் செக்அவுட் மற்றும் கணக்குகள் எடிட்டரிலிருந்து அல்லது உங்கள் Shopify நிர்வாகியிலுள்ள மெனுக்கள் பக்கத்திலிருந்து அந்தப் பக்கத்தை உங்கள் வாடிக்கையாளர் கணக்குகள் மெனுவுடன் இணைக்க முடியும்.

புதிய பக்கத்தைச் சேர்த்த பிறகு, செயலிகள் பக்கப்பட்டியின் சேர்க்கப்பட்டது தாவலிலிருந்து அல்லது செக்அவுட் மற்றும் கணக்குகள் எடிட்டரில் உள்ள பக்கத் தேர்வுக் கருவி மெனுவிலிருந்து அதை நீங்கள் அணுகலாம்.

படிகள்:

  1. உங்கள் Shopify நிர்வாகியில், அமைப்புகள் > செக்அவுட் என்பதற்குச் செல்லவும்.

  2. உள்ளமைவுகள் பிரிவில், நீங்கள் தனிப்பயனாக்க விரும்பும் செக்அவுட் உள்ளமைவிற்கு அடுத்துள்ள தனிப்பயனாக்கு என்பதைக் கிளிக் செய்யவும்.

  3. செயலிகள் Apps பிரிவில், நீங்கள் எந்தச் செயலிக்காக ஒரு பக்கத்தை உருவாக்க விரும்புகிறீர்களோ அதைக் கண்டறியவும்.

  4. + ஐகானைக் கிளிக் செய்து, பக்கத்தை இதில் சேர் பிரிவில் கணக்குகள் என்பதைக் கிளிக் செய்யவும்.

  5. பிளாக் அமைப்புகளில், உங்கள் செயலிக்கான அமைப்புகளை உள்ளமைக்கவும்.

  6. சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.

  7. விருப்பத்தேர்வு: உங்கள் வாடிக்கையாளர்களுக்குச் செயலிப் பக்கத்தை வாடிக்கையாளர் கணக்குகள் மெனுவில் காட்ட, மெனுவில் சேர் என்பதைக் கிளிக் செய்யவும். வாடிக்கையாளர் கணக்கு முதன்மை மெனு உரையாடலில், பின்வருபவற்றைச் செய்யவும்:

    1. செக்அவுட் மற்றும் கணக்குகள் எடிட்டரிலிருந்து தானாகவே நிரப்பப்படும் லேபிள் மற்றும் இணைப்பு ஆகியவற்றை மதிப்பாய்வு செய்யவும். இணைப்பின் பெயரை மாற்ற விரும்பினால், லேபிள் புலத்தைப் புதுப்பிக்கவும்**.
    2. விருப்பத்தேர்வு: நீங்கள் வாடிக்கையாளர் கணக்கு முதன்மை மெனுவில் சேர்க்க விரும்பும் பிற மெனு உருப்படிகளைச் சேர்க்கவும்.
    3. சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.

ஒரு செயலியை உள்ளமை

ஒரு செயலியின் அமைப்புகளை நீங்கள் தனிப்பயனாக்கலாம். ஒவ்வொரு செயலியும் நீங்கள் தனிப்பயனாக்கக்கூடிய தனித்துவமான அமைப்புகளைக் கொண்டிருக்கும். இந்தச் செயலி அமைப்புகளைச் செயலியை உருவாக்கும் உருவாக்குநர் அல்லது கூட்டாளர் தீர்மானிக்கிறார். உங்களுக்குச் சொந்தமாக டெவலப்மெண்ட் குழு இருந்தால், எந்த அமைப்புகளை நீங்களே தனிப்பயனாக்க வேண்டும் என்பதைக் குறிப்பிடலாம்.

உதாரணமாக, தனிப்பயன் பேனரை உருவாக்க அனுமதிக்கும் செயலியை நீங்கள் பயன்படுத்தினால், பேனர் தலைப்பு, விளக்கம் மற்றும் நிலையை நீங்கள் தனிப்பயனாக்கலாம்.

படிகள்:

  1. உங்கள் Shopify நிர்வாகியில், அமைப்புகள் > செக்அவுட் என்பதற்குச் செல்லவும்.

  2. உள்ளமைவுகள் பிரிவில், நீங்கள் தனிப்பயனாக்க விரும்பும் உள்ளமைவுக்கு அடுத்துள்ள திருத்து என்பதைக் கிளிக் செய்யவும்.

  3. நீங்கள் உள்ளமைக்க விரும்பும் செயலியைக் கிளிக் செய்யவும்.

  4. உங்கள் செயலியின் அமைப்புகளைத் தனிப்பயனாக்கவும்.

  5. சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.

செயலியின் செயல்பாட்டுக் கட்டுப்பாடுகளை நிர்வகித்தல்

உங்கள் செயலியை உள்ளமைக்கும்போது, அதனுடைய செயல்பாட்டுக் கட்டுப்பாடுகளையும் நீங்கள் நிர்வகிக்கலாம். இந்தக் கட்டுப்பாடுகள் பின்வரும் செயல்பாடுகளை நிர்வகிக்க உங்களை அனுமதிக்கின்றன:

  • செயலியைச் செக்அவுட்டைத் தடுக்க அனுமதி
  • Shop Pay விரைவான செக்அவுட்டில் செயலியைச் சேர்.
  • Shop Pay விரைவான செக்அவுட்டில் செயலியைக் காட்ட, பிரிவுகளைத் தானாகவே விரிவாக்கு.
  • கணக்கைக் கொண்ட வாடிக்கையாளர் உள்நுழைந்திருக்கும்போது போன்ற, வால்ட் (vaulted) நிலைகள் காட்டப்படும் இடங்களில் செயலியைக் காட்ட பிரிவுகளைத் தானாகவே விரிவாக்கு.

நீங்கள் உள்ளமைக்கும் செயலி மற்றும் செக்அவுட்டில் செயலி வைக்கப்பட்டுள்ள பிரிவைப் பொறுத்து, சில கட்டுப்பாடுகள் கிடைக்காமல் போகலாம்.

ஒரு செயலியை உங்கள் செக்அவுட்டைத் தடுக்க அனுமதி

செயலியில் வாடிக்கையாளர் முழுமையற்ற அல்லது தவறான தகவலை வழங்கினால், செக்அவுட்டைத் தடுத்து ஆர்டரை நிராகரிக்க வேண்டுமா என்பதை நீங்கள் தேர்ந்தெடுக்கலாம்.

உதாரணமாக, வாடிக்கையாளர் தேர்ந்தெடுக்க வேண்டிய ஒரு தேர்வுப்பெட்டியை உங்கள் செக்அவுட்டில் சேர்க்கும் ஒரு செயலி உங்களிடம் உள்ளது. இந்தச் செயலியை உங்கள் செக்அவுட்டைத் தடுக்க அனுமதித்திருந்து, உங்கள் வாடிக்கையாளர் இந்தத் தேர்வுப்பெட்டியைத் தேர்ந்தெடுக்கவில்லை எனில், அவர்களது ஆர்டர் தானாகவே நிராகரிக்கப்படும்.

படிகள்:

  1. உங்கள் Shopify நிர்வாகியில், அமைப்புகள் > செக்அவுட் என்பதற்குச் செல்லவும்.

  2. உள்ளமைவுகள் பிரிவில், நீங்கள் தனிப்பயனாக்க விரும்பும் உள்ளமைவுக்கு அடுத்துள்ள திருத்து என்பதைக் கிளிக் செய்யவும்.

  3. நீங்கள் உள்ளமைக்க விரும்பும் செயலியைக் கிளிக் செய்யவும்.

  4. வலது பக்கப்பட்டியில் உள்ள செக்அவுட் செயல்பாடு பிரிவில், செக்அவுட்டைத் தடுக்க செயலியை அனுமதி என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

  5. செக்அவுட்டைத் தடுக்க செயலியை அனுமதி என்பதைக் கிளிக் செய்யவும்.

  6. சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.

Shop Pay விரைவான செக்அவுட்டில் ஒரு செயலியைச் சேர்

Shop Pay விரைவான செக்அவுட்டில் ஒரு செயலியைச் சேர்க்க வேண்டுமா என்பதை நீங்கள் தேர்ந்தெடுக்கலாம். இந்த அமைப்பு மற்ற விரைவான செக்அவுட் விருப்பங்களுக்குப் பொருந்தாது. Shop Pay விரைவான செக்அவுட்டில், சுருக்கப்பட்ட பிரிவுகளைத் தானாகவே விரிவாக்குமாறு செயலியை நீங்கள் அனுமதிக்கவும் முடியும்.

உங்கள் செக்அவுட்டில் ஒரு செயலியைச் சேர்க்கும்போது, இயல்பாகவே அந்தச் செயலியானது Shop Pay விரைவான செக்அவுட்டில் சேர்க்கப்பட்டிருக்கும். Shop Pay விரைவான செக்அவுட்டில் ஒரு செயலி காட்டப்படக் கூடாது என நீங்கள் விரும்பினால், அந்தச் செயலிக்கான Shop Pay-யில் பிளாக்கைச் சேர் என்பதை முடக்கவும்.

வாடிக்கையாளர் தனியுரிமை ஒப்புதலைச் சேகரிக்கும் செயலிகள் Shop Pay விரைவான செக்அவுட்டில் ஆதரிக்கப்படுவதில்லை, எனவே அவற்றை உங்களால் சேர்க்க முடியாது.

படிகள்:

  1. உங்கள் Shopify நிர்வாகியில், அமைப்புகள் > செக்அவுட் என்பதற்குச் செல்லவும்.

  2. உள்ளமைவுகள் பிரிவில், நீங்கள் தனிப்பயனாக்க விரும்பும் உள்ளமைவுக்கு அடுத்துள்ள திருத்து என்பதைக் கிளிக் செய்யவும்.

  3. நீங்கள் உள்ளமைக்க விரும்பும் செயலியைக் கிளிக் செய்யவும்.

  4. செக்அவுட் நடத்தை பிரிவில், Shop Pay-இல் பிளாக்கைச் சேர் என்பதை ஆன் செய்யவும்.

  5. விருப்பத்தேர்வு: மூடப்பட்ட பிரிவுகளை விரிவாக்க, செயலியைக் காட்ட, பிரிவுகளைத் தானாகவே விரிவாக்கு என்பதை ஆன் செய்யவும்.

  6. சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.

  7. விருப்பத்திற்குரியது: Shop Pay விரைவான செக்அவுட் உங்கள் ஸ்டோரில் எப்படிக் காட்டப்படுகிறது என்பதை முன்னோட்டம் பார்க்க, செக்அவுட் எடிட்டரில் உள்ள கார்ட் என்பதைக் கிளிக் செய்யவும்.

செக்அவுட்டில் வாங்குதலுக்குப் பிந்தைய பக்கத்தில் அம்சங்களைச் சேர்ப்பது எப்படி

வாங்குதலுக்குப் பிந்தைய செயலிகளைப் பயன்படுத்தி, வாடிக்கையாளர் கருத்துக் கணிப்புகள் அல்லது அப்செல் சலுகைகள் போன்ற அம்சங்களை வாடிக்கையாளர் செக்அவுட் அனுபவத்தில் சேர்க்கலாம். வாடிக்கையாளர் பேமெண்ட்டை முடித்த பிறகு, ஆர்டர் உறுதிப்படுத்தல் பக்கம் காட்டப்படுவதற்கு முன்பு இந்தச் செயலிகள் உள்ளடக்கத்தைச் சேர்க்கும்.

உங்கள் வாங்குதலுக்குப் பிந்தைய பக்கத்தில் அம்சங்களைச் சேர்க்க, முதலில் ஒரு செக்அவுட் செயலியை நிறுவி உள்ளமைக்க வேண்டும். பின்னர், செக்அவுட் அமைப்புகளில் உள்ள வாங்குதலுக்குப் பிந்தைய பக்கத்தில் பயன்படுத்த அந்தச் செயலியைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

வாங்குதலுக்குப் பிந்தைய அம்சங்களைச் சேர்க்க, ஒரே நேரத்தில் ஒரு செக்அவுட் செயலியை மட்டுமே பயன்படுத்த முடியும். வாங்குதலுக்குப் பிந்தைய செயல்பாட்டைக் கொண்ட ஒன்றுக்கும் மேற்பட்ட செயலிகள் நிறுவப்பட்டிருந்தால், உங்கள் செக்அவுட் அமைப்புகளில் பயன்படுத்த விரும்பும் செயலியைத் தேர்ந்தெடுக்கலாம்.

வாங்குதலுக்குப் பிந்தைய அம்சங்களைச் சேர்க்க ஒரு செக்அவுட் செயலியை நிறுவுதல்

உங்கள் வாங்குதலுக்குப் பிந்தைய பக்கத்தில் அம்சங்களைச் சேர்க்க, செக்அவுட்டில் வாங்குதலுக்குப் பிந்தைய அம்சங்களை ஆதரிக்கும் மூன்றாம் தரப்புச் செயலியைப் பயன்படுத்த வேண்டும்.

மூன்றாம் தரப்புச் செயலி தொடர்பாக உங்களுக்கு உதவி தேவைப்பட்டால், செயலியை உருவாக்குபவரைத் தொடர்புகொள்ள வேண்டும்.

படிகள்:

  1. Shopify App Store சென்று, உங்கள் பிசினஸுக்கு ஏற்ற வாங்குதலுக்குப் பிந்தைய செயலியைத் தேடவும்.
  2. செயலியைச் சேர் என்பதைக் கிளிக் செய்யவும். உங்கள் Shopify கணக்கில் நீங்கள் உள்நுழையவில்லை எனில், உள்நுழையுமாறு கேட்கப்படுவீர்கள்.
  3. செயலியை நிறுவு என்பதைக் கிளிக் செய்யவும்.
  4. உங்கள் Shopify நிர்வாகியில் உள்ள செயலிகள் பிரிவுக்குச் சென்று, உங்களின் செக்அவுட் செயலியின் பெயரைத் தட்டவும்.
  5. தேவையான உள்ளமைவு அமைப்புகளை உள்ளிடவும்.

வாங்குதலுக்குப் பிந்தைய பக்கத்தில் பயன்படுத்த ஒரு செயலியைத் தேர்ந்தெடுத்தல்

ஒரு செக்அவுட் செயலியை நிறுவி உள்ளமைத்த பிறகு, செக்அவுட் அமைப்புகளில் உள்ள வாங்குதலுக்குப் பிந்தைய பக்கத்தில் பயன்படுத்த அந்தச் செயலியைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

செக்அவுட் அமைப்புகளில் பயன்படுத்த விரும்பும் செயலியை மாற்றவும் முடியும்.

படிகள்:

  1. உங்கள் Shopify நிர்வாகியில், அமைப்புகள் > செக்அவுட் என்பதற்குச் செல்லவும்.

  2. வாங்குதலுக்குப் பிந்தைய பக்கம் பிரிவில், பயன்படுத்த விரும்பும் செக்அவுட் செயலியைத் தேர்ந்தெடுக்கவும்.

செயலியை அகற்றுதல்

உங்கள் செக்அவுட்டிலிருந்து ஒரு செயலியை அகற்றலாம். உங்களின் Shopify நிர்வாகியிலிருந்து ஒரு செயலியை முழுமையாக அகற்ற விரும்பினால், செயலியை நிறுவல் நீக்க வேண்டும்.

படிகள்:

  1. உங்கள் Shopify நிர்வாகியில், அமைப்புகள் > செக்அவுட் என்பதற்குச் செல்லவும்.

  2. உள்ளமைவுகள் பிரிவில், நீங்கள் தனிப்பயனாக்க விரும்பும் உள்ளமைவுக்கு அடுத்துள்ள திருத்து என்பதைக் கிளிக் செய்யவும்.

  3. உங்கள் செக்அவுட்டிலிருந்து அகற்ற விரும்பும் செயலியைக் கிளிக் செய்யவும்.

  4. பிளாக்கை அகற்று என்பதைக் கிளிக் செய்யவும்.

  5. சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.