உங்கள் செக்அவுட்டின் ஸ்டைலைத் தனிப்பயனாக்குதல்
நீங்கள் ஆன்லைன் ஸ்டோர் மூலம் உங்கள் தயாரிப்புகளை விற்றால், செக்அவுட் மற்றும் கணக்குகள் எடிட்டரில் உங்கள் செக்அவுட் பக்கங்களின் ஸ்டைலைத் தனிப்பயனாக்கலாம். உங்கள் பிசினஸுக்கு ஏற்ப செக்அவுட்டை மாற்ற, நீங்கள் நிறுவனத்தின் லோகோவைச் சேர்க்கலாம், நிறங்களை மாற்றலாம் அல்லது புதிய எழுத்துருவைத் தேர்ந்தெடுக்கலாம்.
உங்கள் செக்அவுட் பக்கங்களுக்கு நீங்கள் தேர்வுசெய்யும் சில பிராண்டிங், உங்களின் புதிய வாடிக்கையாளர் கணக்குப் பக்கங்களுக்கும் பொருந்தும்.
இந்தப் பக்கத்தில்
- உங்கள் செக்அவுட் மற்றும் வாடிக்கையாளர் கணக்குகளின் ஸ்டைலைத் தனிப்பயனாக்கும்போது கருத்தில் கொள்ள வேண்டியவை
- செக்அவுட் மற்றும் கணக்குகள் எடிட்டரில் நிறத் தேர்வியைப் பயன்படுத்துதல்
- செக்அவுட் பக்கத்தில் லோகோவைச் சேர்த்தல்
- உங்கள் செக்அவுட் மற்றும் வாடிக்கையாளர் கணக்குகளுக்கு நிறத் தட்டுகளை உருவாக்குதல்
- முதன்மை உள்ளடக்கப் பகுதிக்குப் பின்னணி நிறத்தைச் சேர்த்தல்
- ஹெடருக்கான நிறங்களைத் தனிப்பயனாக்குதல்
- ஆர்டர் சுருக்கத்தில் பின்னணிப் படம் அல்லது நிறத்தைச் சேர்த்தல்
- செக்அவுட் பக்கத்தில் பொத்தான் மற்றும் ஆக்செண்ட் நிறங்களை மாற்றுதல்
- படிவப் புலங்கள் மற்றும் பிழைச் செய்திகளைத் தனிப்பயனாக்குதல்
- செக்அவுட் பக்கத்தில் எழுத்துருவை மாற்றுதல்
- உங்கள் செக்அவுட் தளவமைப்பை மாற்றுதல்
- முகவரி தானியங்குநிரப்புதலை நிர்வகித்தல்
- மீண்டும் வாங்கு பட்டனை நிர்வகித்தல்
- மொபைல் சாதனங்களில் தள்ளுபடிக் குறியீட்டுப் புலத்தை இயல்புநிலையாகக் காட்டுதல்
- உங்கள் செக்அவுட் பக்கங்களில் பிளாக்குகளைச் சேர்த்தல்
உங்கள் செக்அவுட் மற்றும் வாடிக்கையாளர் கணக்குகளின் ஸ்டைலைத் தனிப்பயனாக்கும்போது கருத்தில் கொள்ள வேண்டியவை
உங்கள் செக்அவுட்டின் ஸ்டைலைத் தனிப்பயனாக்கும் முன், கீழே உள்ளவற்றைக் கவனத்தில் கொள்ளவும்:
- செக்அவுட் மற்றும் கணக்குகள் எடிட்டரில் நீங்கள் செய்யும் மாற்றங்கள் நீங்கள் எடிட் செய்யும் குறிப்பிட்ட செக்அவுட் உள்ளமைவுக்கு மட்டுமே பொருந்தும். ஏதேனும் ஒரு செக்அவுட் உள்ளமைவில் குறிப்பிடத்தக்க ஸ்டைல் மாற்றங்களைச் செய்வதற்கு முன், அதன் காப்புநகல் வரைவு உள்ளமைவை உருவாக்க அந்த உள்ளமைவை நகலெடுக்கலாம். செயலில் உள்ள மற்றும் வரைவு செக்அவுட் உள்ளமைவுகளை நிர்வகிப்பது குறித்து மேலும் அறிக.
- நீங்கள் திட்டத்தைத் தேர்ந்தெடுத்து உங்களின் முதல் தயாரிப்பை உருவாக்கும் வரை, நிர்வாகியில் உள்ள செக்அவுட் அமைப்புகள் பிரிவின் உள்ளமைவுகள் பகுதி மறைக்கப்பட்டிருக்கும்.
- நீங்கள் Shopify Plus திட்டத்தில் இருந்தால், மேம்பட்ட செக்அவுட் பிராண்டிங் தனிப்பயனாக்கங்களுக்கு Checkout and Accounts Configuration API-ஐப் பயன்படுத்தலாம்.
- உங்களின் கார்ட் மற்றும் செக்அவுட்டின் ஸ்டைலைத் தனிப்பயனாக்க உங்களுக்கு உதவி தேவைப்பட்டால், நீங்கள் Shopify பார்ட்னர் ஒருவரைப் பணியமர்த்தலாம். Shopify பார்ட்னரைப் பணியமர்த்துவது பற்றி மேலும் அறிக.
- உங்கள் செக்அவுட் பக்கங்களில் பல நிறங்களையும் சுவாரஸ்யமான அம்சங்களையும் சேர்க்க நீங்கள் விரும்பினாலும், அதன் வடிவமைப்பை எளிமையாக வைத்திருப்பதே சிறந்தது. உங்களின் வாடிக்கையாளர்கள் தங்களின் ஆர்டர்களுக்கான ஷிப்பிங் மற்றும் கட்டணத் தகவலை உள்ளிடுவதற்கு இந்தப் பக்கங்களைப் பயன்படுத்துகிறார்கள்; எனவே அவர்களின் கவனச்சிதறலைத் தவிர்ப்பதும் தகவல் வாசிப்பதற்குக் கடினமாக இல்லாமல் பார்த்துக்கொள்வதும் முக்கியமாகும். அதிக கான்ட்ராஸ்ட் உள்ள நிறங்களையும், பக்கத்தில் உள்ள வார்த்தைகளிலிருந்து கவனத்தைத் திசைதிருப்பாத படங்களையும் தேர்ந்தெடுக்கவும்.
செக்அவுட் மற்றும் கணக்குகள் எடிட்டரில் நிறத் தேர்வியைப் பயன்படுத்துதல்
செக்அவுட் மற்றும் கணக்குகள் எடிட்டரில் நிறம் தேவைப்படும் புலத்தைத் தனிப்பயனாக்கும்போது, உங்களுக்கு வேண்டிய நிறத்தைத் தேர்ந்தெடுக்க நிறத் தேர்வியைப் பயன்படுத்தலாம். நிறத் தேர்வியில், பின்வரும் வழிகளில் ஏதேனும் ஒன்றைப் பயன்படுத்தி நிறத்தைத் தேர்ந்தெடுக்கலாம்:
- தேர்வி மாதிரிக்காட்சியில் கிடைக்கும் நிறங்களின் சாயலை மாற்ற, நிற ஸ்லைடரைப் பயன்படுத்தவும்.
- தரமான, தூய நீலத்திற்கு
#0000FFஎன்பது போல், ஒரு குறிப்பிட்ட நிறத்திற்கான குறியீட்டை உள்ளிட ஹெக்ஸாடெசிமல் புலத்தைப் பயன்படுத்தவும். - உங்கள் திரையில் எங்கிருந்தும் கர்சரைப் பயன்படுத்தி ஒரு குறிப்பிட்ட நிறத்தைத் தேர்ந்தெடுக்க
ஐப் பயன்படுத்தவும்.
- தேர்வி மாதிரிக்காட்சியில் கிடைக்கும் நிறங்களின் எண்ணிக்கையை 40 ஆகக் குறைக்க,
ஐப் பயன்படுத்தவும்.
செக்அவுட் மற்றும் கணக்குகள் எடிட்டரில் உள்ள நிறத் தட்டில் நீங்கள் சேர்த்துள்ள அனைத்து நிற ஸ்வாட்சுகளையும் நிறத் தட்டு பிரிவு காட்டுகிறது.
செக்அவுட் பக்கத்தில் லோகோவைச் சேர்த்தல்
உங்கள் ஸ்டோர் லோகோவை செக்அவுட் பக்கங்களில் சேர்க்கலாம். செக்அவுட் பக்கங்களில் உள்ள பேனர் பகுதியின் இடது, வலது அல்லது மையத்தில் உங்கள் லோகோவை சீரமைக்கலாம்.
படிகள்:
டெஸ்க்டாப்
உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, அமைப்புகள் > செக்அவுட் என்பதற்குச் செல்லவும்.
உள்ளமைவுகள் பிரிவில், நீங்கள் தனிப்பயனாக்க விரும்பும் உள்ளமைவுக்கு அடுத்துள்ள எடிட் செய் என்பதைக் கிளிக் செய்யவும்.
செக்அவுட் மற்றும் கணக்குகள் எடிட்டரில், அமைப்புகள் பக்கப்பட்டியை அணுக,
ஐக் கிளிக் செய்யவும்.
லோகோ பிரிவில், படம் புலத்தைக் கிளிக் செய்யவும்.
உங்கள் லைப்ரரியிலிருந்து ஏற்கனவே உள்ள படத்தைத் தேர்ந்தெடுக்க, லைப்ரரியிலிருந்து தேர்ந்தெடு என்பதைக் கிளிக் செய்யவும்.
விரும்பினால்: லோகோ பிரிவில், பின்வரும் அமைப்புகளுடன் உங்கள் லோகோவைச் சரிசெய்யவும்:
- லோகோவுக்கான அளவைப் பிக்சல்களில் தேர்ந்தெடுக்க Width என்பதைப் பயன்படுத்தவும்.
- உங்கள் லோகோ பேனரின் இடது, மையம் அல்லது வலதுபுறத்தில் காண்பிக்கப்பட வேண்டுமா என்பதைத் தேர்ந்தெடுக்க Alignment என்பதைப் பயன்படுத்தவும்.
Save என்பதைக் கிளிக் செய்யவும்.
மொபைல்
Shopify செயலியிலிருந்து,
என்பதைத் தட்டி, பின்னர்
Settings என்பதைத் தட்டவும்.
Store settings பிரிவில், Checkout என்பதைத் தட்டவும்.
Configurations பிரிவில், நீங்கள் தனிப்பயனாக்க விரும்பும் உள்ளமைவில் Edit என்பதைத் தட்டவும்.
செக்அவுட் மற்றும் கணக்குகள் எடிட்டரில், Settings என்பதைத் தட்டவும்.
Logo பிரிவில், Image புலத்தைத் தட்டவும்.
உங்கள் லைப்ரரியிலிருந்து ஏற்கனவே உள்ள படத்தைத் தேர்ந்தெடுக்க Select from library என்பதைத் தட்டவும்.
விரும்பினால்: லோகோ பிரிவில், பின்வரும் அமைப்புகளுடன் உங்கள் லோகோவைச் சரிசெய்யவும்:
- லோகோவுக்கான அளவைப் பிக்சல்களில் தேர்ந்தெடுக்க Width என்பதைப் பயன்படுத்தவும்.
- உங்கள் லோகோ பேனரின் இடது, மையம் அல்லது வலதுபுறத்தில் காண்பிக்கப்பட வேண்டுமா என்பதைத் தேர்ந்தெடுக்க Alignment என்பதைப் பயன்படுத்தவும்.
Save அல்லது ✓ என்பதைத் தட்டவும்.
உங்கள் செக்அவுட் மற்றும் வாடிக்கையாளர் கணக்குகளுக்கான நிறத்தட்டை உருவாக்கவும்
உங்கள் செக்அவுட் மற்றும் கணக்குகள் எடிட்டரில் உள்ள பல அமைப்புகளில் நிறங்களை மீண்டும் பயன்படுத்துவதற்கான விரைவான வழியாக நிறத்தட்டை நீங்கள் உருவாக்கலாம். நிறத்தட்டிலிருந்து ஒரு நிறத்தை மாற்றும்போது, அந்த நிறத்தைப் பயன்படுத்தும் அனைத்து அமைப்புகளும் புதிய நிறத்திற்கு மாறும். ஒரு நிறத்தை ஒன்றுக்கு மேற்பட்ட முறை பயன்படுத்த விரும்பும்போது ஹெக்ஸாடெசிமல் குறியீடுகளை நினைவில் வைத்திருக்க வேண்டியதில்லை என்பதையும் இது குறிக்கிறது.
படிகள்:
டெஸ்க்டாப்
உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, அமைப்புகள் > செக்அவுட் என்பதற்குச் செல்லவும்.
உள்ளமைவுகள் பிரிவில், நீங்கள் தனிப்பயனாக்க விரும்பும் உள்ளமைவுக்கு அடுத்துள்ள எடிட் செய் என்பதைக் கிளிக் செய்யவும்.
செக்அவுட் மற்றும் கணக்குகள் எடிட்டரில், அமைப்புகள் பக்கப்பட்டியை அணுக,
ஐக் கிளிக் செய்யவும்.
Color palette பிரிவில், தட்டில் சேர்ப்பதற்கான நிறத்தைத் தேர்ந்தெடுக்க
+என்பதைக் கிளிக் செய்யவும்.விருப்பத்தேர்வு: உங்கள் நிறத்தட்டில் இனி தேவையில்லாத நிறத்தை அகற்ற:
- அந்த நிறத்தைக் கிளிக் செய்து Delete என்பதைக் கிளிக் செய்யவும்.
- உங்கள் செக்அவுட்டில் நீக்கப்பட்ட நிறம் பயன்படுத்தப்பட்ட இடங்களில் அதற்குப் பதிலாக மாற்று நிறத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
- Replace என்பதைக் கிளிக் செய்யவும்.
Save என்பதைக் கிளிக் செய்யவும்.
மொபைல்
Shopify செயலியிலிருந்து,
என்பதைத் தட்டி, பின்னர்
Settings என்பதைத் தட்டவும்.
Store settings பிரிவில், Checkout என்பதைத் தட்டவும்.
Configurations பிரிவில், நீங்கள் தனிப்பயனாக்க விரும்பும் உள்ளமைவில் Edit என்பதைத் தட்டவும்.
செக்அவுட் மற்றும் கணக்குகள் எடிட்டரில், Settings என்பதைத் தட்டவும்.
Color palette பிரிவில், தட்டில் சேர்ப்பதற்கான நிறத்தைத் தேர்ந்தெடுக்க
+என்பதைத் தட்டவும்.விருப்பத்தேர்வு: உங்கள் நிறத்தட்டில் இனி தேவையில்லாத நிறத்தை அகற்ற:
- நிறத்தைத் தட்டி Delete என்பதைத் தட்டவும்.
- உங்கள் செக்அவுட்டில் நீக்கப்பட்ட நிறம் பயன்படுத்தப்பட்ட இடங்களில் அதற்குப் பதிலாக மாற்று நிறத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
- Replace என்பதைத் தட்டவும்.
Save அல்லது ✓ என்பதைத் தட்டவும்.
பிரதான உள்ளடக்கப் பகுதிக்குப் பின்னணி நிறத்தைச் சேர்க்கவும்
செக்அவுட் பக்கங்களின் பிரதான உள்ளடக்கப் பகுதிக்குப் பின்னணி நிறத்தைச் சேர்க்கலாம். இந்த இடத்தில்தான் உங்கள் வாடிக்கையாளர்கள் தங்களது ஷிப்பிங் மற்றும் கட்டணத் தகவலை உள்ளிடுவார்கள் என்பதால், பின்னணி நிறத்தில் இருக்கும் புலங்களைத் தெளிவாகப் படிக்க முடியும் என்பதை உறுதிசெய்யவும்.
படிகள்:
டெஸ்க்டாப்
உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, அமைப்புகள் > செக்அவுட் என்பதற்குச் செல்லவும்.
உள்ளமைவுகள் பிரிவில், நீங்கள் தனிப்பயனாக்க விரும்பும் உள்ளமைவுக்கு அடுத்துள்ள எடிட் செய் என்பதைக் கிளிக் செய்யவும்.
செக்அவுட் மற்றும் கணக்குகள் எடிட்டரில், அமைப்புகள் பக்கப்பட்டியை அணுக,
ஐக் கிளிக் செய்யவும்.
Main பிரிவில், நிறத் தேர்வியைத் திறக்க Background என்பதைக் கிளிக் செய்து, பின்பு ஒரு நிறத்தைத் தேர்ந்தெடுக்கவும் அல்லது ஹெக்ஸாடெசிமல் குறியீட்டை உள்ளிடவும்.
Save என்பதைக் கிளிக் செய்யவும்.
மொபைல்
Shopify செயலியிலிருந்து,
என்பதைத் தட்டி, பின்னர்
Settings என்பதைத் தட்டவும்.
Store settings பிரிவில், Checkout என்பதைத் தட்டவும்.
Configurations பிரிவில், நீங்கள் தனிப்பயனாக்க விரும்பும் உள்ளமைவில் Edit என்பதைத் தட்டவும்.
செக்அவுட் மற்றும் கணக்குகள் எடிட்டரில், Settings என்பதைத் தட்டவும்.
Main பிரிவில், நிறத் தேர்வியைத் திறக்க Background என்பதைத் தட்டி, பின்பு ஒரு நிறத்தைத் தேர்ந்தெடுக்கவும் அல்லது ஹெக்ஸாடெசிமல் குறியீட்டை உள்ளிடவும்.
Save அல்லது ✓ என்பதைத் தட்டவும்.
பிரதான உள்ளடக்கப் பகுதியிலிருந்து பின்னணிப் படத்தை அகற்றவும்
பிப்ரவரி 5, 2026 முதல், செக்அவுட்டின் Main உள்ளடக்கப் பகுதிக்குப் பின்னணிப் படத்தைச் சேர்க்க முடியாது. தற்போது பிரதான உள்ளடக்கப் பின்னணியாகப் படம் அமைக்கப்பட்டிருந்தால், உங்களால் படத்ததை மாற்ற முடியாது, அதை அகற்ற மட்டுமே முடியும். தற்போது படம் அமைக்கப்பட்டிருக்கும்போது மட்டுமே Background image அமைப்பு காட்டப்படும். மேலும் உங்கள் Store default அமைப்புகளிலிருந்து மட்டுமே படத்தை அகற்ற முடியும், மார்க்கெட் சார்ந்த உள்ளமைவிலிருந்து அகற்ற முடியாது.
படிகள்:
உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, அமைப்புகள் > செக்அவுட் என்பதற்குச் செல்லவும்.
உள்ளமைவுகள் பிரிவில், நீங்கள் தனிப்பயனாக்க விரும்பும் உள்ளமைவுக்கு அடுத்துள்ள எடிட் செய் என்பதைக் கிளிக் செய்யவும்.
செக்அவுட் மற்றும் கணக்குகள் எடிட்டரில், Sections பக்கப்பட்டியை அணுக,
என்பதைக் கிளிக் செய்யவும்.
Main என்பதைக் கிளிக் செய்யவும்.
Background பிரிவில், Remove image என்பதைக் கிளிக் செய்யவும்.
Save என்பதைக் கிளிக் செய்யவும்.
ஹெடருக்கான நிறங்களைத் தனிப்பயனாக்கவும்
ஒவ்வொரு செக்அவுட் மற்றும் வாடிக்கையாளர் கணக்குப் பக்கத்தின் மேற்புறத்திலும் உள்ள ஹெடர், உங்கள் ஸ்டோர் பெயரைக் காண்பிக்கும். அந்தப் பேனரின் பின்னணி நிறத்தை நீங்கள் மாற்றலாம். உங்கள் பிராண்டுக்குப் பொருத்தமான நிறத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
படிகள்:
டெஸ்க்டாப்
உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, அமைப்புகள் > செக்அவுட் என்பதற்குச் செல்லவும்.
உள்ளமைவுகள் பிரிவில், நீங்கள் தனிப்பயனாக்க விரும்பும் உள்ளமைவுக்கு அடுத்துள்ள எடிட் செய் என்பதைக் கிளிக் செய்யவும்.
செக்அவுட் மற்றும் கணக்குகள் எடிட்டரில், அமைப்புகள் பக்கப்பட்டியை அணுக,
ஐக் கிளிக் செய்யவும்.
Header பிரிவில், பின்வரும் ஏதேனும் நிறத் தனிப்பயனாக்கங்களைச் செய்யவும்:
- ஹெடரின் பின்னணிக்கு நிறத்தை அமைக்க Background என்பதைப் பயன்படுத்தவும்.
- கார்ட் ஐகான் மற்றும் ஹெடரில் உள்ள இணைப்புகளுக்கு நிறத்தை அமைக்க Accent என்பதைப் பயன்படுத்தவும்.
Save என்பதைக் கிளிக் செய்யவும்.
மொபைல்
Shopify செயலியிலிருந்து,
என்பதைத் தட்டி, பின்னர்
Settings என்பதைத் தட்டவும்.
Store settings பிரிவில், Checkout என்பதைத் தட்டவும்.
Configurations பிரிவில், நீங்கள் தனிப்பயனாக்க விரும்பும் உள்ளமைவில் Edit என்பதைத் தட்டவும்.
செக்அவுட் மற்றும் கணக்குகள் எடிட்டரில், Settings என்பதைத் தட்டவும்.
Header பிரிவில், பின்வரும் ஏதேனும் நிறத் தனிப்பயனாக்கங்களைச் செய்யவும்:
- ஹெடரின் பின்னணிக்கு நிறத்தை அமைக்க Background என்பதைப் பயன்படுத்தவும்.
- கார்ட் ஐகான் மற்றும் ஹெடரில் உள்ள இணைப்புகளுக்கு நிறத்தை அமைக்க Accent என்பதைப் பயன்படுத்தவும்.
Save அல்லது ✓ என்பதைத் தட்டவும்.
ஹெடரிலிருந்து பின்னணிப் படத்தை அகற்றவும்
பிப்ரவரி 5, 2026 முதல், செக்அவுட்டின் ஹெடருக்குப் பின்னணிப் படத்தைச் சேர்க்க முடியாது. தற்போது பேனர் பின்னணியாகப் படம் அமைக்கப்பட்டிருந்தால், உங்களால் அந்தப் படத்தை மாற்ற முடியாது, அகற்ற மட்டுமே முடியும். தற்போது படம் அமைக்கப்பட்டிருக்கும்போது மற்றும் ஹெடர் Position என்பது Full width என அமைக்கப்பட்டிருக்கும்போது மட்டுமே Background image அமைப்பு காட்டப்படும். உங்கள் Store default அமைப்புகளிலிருந்து மட்டுமே படத்தை அகற்ற முடியும், மார்க்கெட் சார்ந்த உள்ளமைவிலிருந்து அகற்ற முடியாது.
படிகள்:
உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, அமைப்புகள் > செக்அவுட் என்பதற்குச் செல்லவும்.
உள்ளமைவுகள் பிரிவில், நீங்கள் தனிப்பயனாக்க விரும்பும் உள்ளமைவுக்கு அடுத்துள்ள எடிட் செய் என்பதைக் கிளிக் செய்யவும்.
செக்அவுட் மற்றும் கணக்குகள் எடிட்டரில், Sections பக்கப்பட்டியை அணுக,
என்பதைக் கிளிக் செய்யவும்.
Header என்பதைக் கிளிக் செய்யவும்.
Background பிரிவில், Remove image என்பதைக் கிளிக் செய்யவும்.
Save என்பதைக் கிளிக் செய்யவும்.
ஆர்டர் சுருக்கத்திற்குப் பின்னணிப் படம் அல்லது நிறத்தைச் சேர்க்கவும்
வாடிக்கையாளர் செக்அவுட் பக்கத்தில் ஆர்டர் சுருக்கத்தைக் காட்டு என்பதைக் கிளிக் செய்யும்போது, அவர்கள் வாங்கும் தயாரிப்புகளின் பட்டியல் காட்டப்படும். ஆர்டர் சுருக்கத்தில் நீங்கள் பின்னணிப் படம் அல்லது நிறத்தைச் சேர்க்கலாம். ஆர்டர் சுருக்கம் காட்டப்படும் விதம் உங்களுக்குத் திருப்தியாக உள்ளதா என்பதை உறுதிப்படுத்த, செக்அவுட் மற்றும் கணக்குகள் எடிட்டரின் மாதிரிக்காட்சியில் உள்ள ஆர்டர் சுருக்கத்தைக் காட்டு என்பதைக் கிளிக் செய்யலாம்.
டைல்களைப் போலவே சிறிய படங்களும் பின்னணியில் செங்குத்தாகவும் கிடைமட்டமாகவும் திரும்பத் திரும்பத் தோன்றும்.
படிகள்:
டெஸ்க்டாப்
உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, அமைப்புகள் > செக்அவுட் என்பதற்குச் செல்லவும்.
உள்ளமைவுகள் பிரிவில், நீங்கள் தனிப்பயனாக்க விரும்பும் உள்ளமைவுக்கு அடுத்துள்ள எடிட் செய் என்பதைக் கிளிக் செய்யவும்.
செக்அவுட் மற்றும் கணக்குகள் எடிட்டரில், அமைப்புகள் பக்கப்பட்டியை அணுக,
ஐக் கிளிக் செய்யவும்.
Order summary பிரிவில், order summary என்பதைக் கிளிக் செய்யவும்.
பின்னணி நிறம் அல்லது படத்தைச் சேர்க்கவும்:
- நிறத்தைச் சேர்க்க, நிறத் தேர்வியைத் திறக்க Background என்பதைக் கிளிக் செய்து, பின்பு ஒரு நிறத்தைத் தேர்ந்தெடுக்கவும் அல்லது ஹெக்ஸாடெசிமல் குறியீட்டை உள்ளிடவும்.
- ஆக்செண்ட் நிறத்தை மாற்ற, நிறத் தேர்வியைத் திறக்க Accent என்பதைக் கிளிக் செய்து, பின்பு ஒரு நிறத்தைத் தேர்ந்தெடுக்கவும் அல்லது ஹெக்ஸாடெசிமல் குறியீட்டை உள்ளிடவும்.
- ஒரு படத்தைச் சேர்க்க, Image > Select என்பதைக் கிளிக் செய்யவும். உங்கள் லைப்ரரியிலிருந்து ஏற்கனவே உள்ள படத்தைத் தேர்ந்தெடுக்க Select from library என்பதைக் கிளிக் செய்யவும்.
Save என்பதைக் கிளிக் செய்யவும்.
மொபைல்
Shopify செயலியிலிருந்து,
என்பதைத் தட்டி, பின்னர்
Settings என்பதைத் தட்டவும்.
Store settings பிரிவில், Checkout என்பதைத் தட்டவும்.
Configurations பிரிவில், நீங்கள் தனிப்பயனாக்க விரும்பும் உள்ளமைவில் Edit என்பதைத் தட்டவும்.
செக்அவுட் மற்றும் கணக்குகள் எடிட்டரில், Settings என்பதைத் தட்டவும்.
Order summary பிரிவில், order summary என்பதைத் தட்டவும்.
பின்னணி நிறம் அல்லது படத்தைச் சேர்க்கவும்:
- நிறத்தைச் சேர்க்க, நிறத் தேர்வியைத் திறக்க Background என்பதைத் தட்டி, பின்பு ஒரு நிறத்தைத் தேர்ந்தெடுக்கவும் அல்லது ஹெக்ஸாடெசிமல் குறியீட்டை உள்ளிடவும்.
- ஆக்செண்ட் நிறத்தை மாற்ற, நிறத் தேர்வியைத் திறக்க Accent என்பதைத் தட்டி, பின்பு ஒரு நிறத்தைத் தேர்ந்தெடுக்கவும் அல்லது ஹெக்ஸாடெசிமல் குறியீட்டை உள்ளிடவும்.
- ஒரு படத்தைச் சேர்க்க, Image > Select என்பதைத் தட்டவும். உங்கள் லைப்ரரியிலிருந்து ஏற்கனவே உள்ள படத்தைத் தேர்ந்தெடுக்க Select from library என்பதைத் தட்டவும்.
Save அல்லது ✓ என்பதைத் தட்டவும்.
ஆர்டர் சுருக்கத்திலிருந்து படத்தை மாற்றவும் அல்லது அகற்றவும்
ஆர்டர் சுருக்கத்தில் நீங்கள் சேர்த்த படத்தை மாற்றலாம் அல்லது அகற்றலாம்.
படிகள்:
டெஸ்க்டாப்
உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, அமைப்புகள் > செக்அவுட் என்பதற்குச் செல்லவும்.
உள்ளமைவுகள் பிரிவில், நீங்கள் தனிப்பயனாக்க விரும்பும் உள்ளமைவுக்கு அடுத்துள்ள எடிட் செய் என்பதைக் கிளிக் செய்யவும்.
செக்அவுட் மற்றும் கணக்குகள் எடிட்டரில், அமைப்புகள் பக்கப்பட்டியை அணுக,
ஐக் கிளிக் செய்யவும்.
Order summary பிரிவில், order summary என்பதைக் கிளிக் செய்யவும்.
நீங்கள் மாற்ற விரும்பும் படத்தின் கீழ், உங்கள் லைப்ரரியிலிருந்து ஒன்றைத் தேர்ந்தெடுக்க அல்லது இலவசப் படங்களை ஆராய, மாற்று என்பதைக் கிளிக் செய்யவும்.
Save என்பதைக் கிளிக் செய்யவும்.
மொபைல்
Shopify செயலியிலிருந்து,
என்பதைத் தட்டி, பின்னர்
Settings என்பதைத் தட்டவும்.
Store settings பிரிவில், Checkout என்பதைத் தட்டவும்.
Configurations பிரிவில், நீங்கள் தனிப்பயனாக்க விரும்பும் உள்ளமைவில் Edit என்பதைத் தட்டவும்.
செக்அவுட் மற்றும் கணக்குகள் எடிட்டரில், Settings என்பதைத் தட்டவும்.
Order summary பிரிவில், order summary என்பதைத் தட்டவும்.
நீங்கள் மாற்ற விரும்பும் படத்தின் கீழ், உங்கள் லைப்ரரியிலிருந்து ஒன்றைத் தேர்ந்தெடுக்க அல்லது இலவசப் படங்களை ஆராய, மாற்று என்பதைத் தட்டவும்.
Save அல்லது ✓ என்பதைத் தட்டவும்.
படத்தை அகற்ற, மாற்று > படத்தை அகற்று என்பதைக் கிளிக் செய்யவும். இது Shopify-இலிருந்து படத்தை நீக்காது.
செக்அவுட் பக்கத்தில் பொத்தான் மற்றும் ஆக்சென்ட் நிறங்களை மாற்றவும்
செக்அவுட் பக்கங்களில் உள்ள பொத்தான்கள் மற்றும் இணைப்புகள் போன்ற ஆக்சென்ட்களின் நிறத்தை நீங்கள் மாற்றலாம். நிறங்களை மாற்றினால், முக்கிய உள்ளடக்கப் பகுதி மற்றும் ஆர்டர் சுருக்கத்தின் பின்னணியில் உள்ள உரையைத் தெளிவாகப் படிக்க முடிகிறதா என்பதை உறுதிசெய்யவும்.
படிகள்:
டெஸ்க்டாப்
உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, அமைப்புகள் > செக்அவுட் என்பதற்குச் செல்லவும்.
உள்ளமைவுகள் பிரிவில், நீங்கள் தனிப்பயனாக்க விரும்பும் உள்ளமைவுக்கு அடுத்துள்ள எடிட் செய் என்பதைக் கிளிக் செய்யவும்.
செக்அவுட் மற்றும் கணக்குகள் எடிட்டரில், அமைப்புகள் பக்கப்பட்டியை அணுக,
ஐக் கிளிக் செய்யவும்.
ஆக்சென்ட் மற்றும் பொத்தான்கள் பிரிவில், நிறத் தேர்வியைத் திறக்க, ஆக்சென்ட் அல்லது பொத்தான் என்பதற்குப் பக்கத்தில் உள்ள நிறப் பெட்டியைக் கிளிக் செய்து, பிறகு நிறத்தைத் தேர்ந்தெடுக்கவும் அல்லது ஹெக்ஸாடெசிமல் குறியீட்டை உள்ளிடவும்.
Save என்பதைக் கிளிக் செய்யவும்.
மொபைல்
Shopify செயலியிலிருந்து,
என்பதைத் தட்டி, பின்னர்
Settings என்பதைத் தட்டவும்.
Store settings பிரிவில், Checkout என்பதைத் தட்டவும்.
Configurations பிரிவில், நீங்கள் தனிப்பயனாக்க விரும்பும் உள்ளமைவில் Edit என்பதைத் தட்டவும்.
செக்அவுட் மற்றும் கணக்குகள் எடிட்டரில், Settings என்பதைத் தட்டவும்.
ஆக்சென்ட் மற்றும் பொத்தான்கள் பிரிவில், நிறத் தேர்வியைத் திறக்க, ஆக்சென்ட் அல்லது பொத்தான் என்பதற்குப் பக்கத்தில் உள்ள நிறப் பெட்டியைத் தட்டி, பிறகு நிறத்தைத் தேர்ந்தெடுக்கவும் அல்லது ஹெக்ஸாடெசிமல் குறியீட்டை உள்ளிடவும்.
Save அல்லது ✓ என்பதைத் தட்டவும்.
படிவப் புலங்கள் மற்றும் பிழைச் செய்திகளைத் தனிப்பயனாக்கவும்
உங்கள் செக்அவுட்டில் உள்ள படிவப் புலங்களை ஒளிபுகும் வகையில் அமைக்கலாம், மேலும் பிழைச் செய்திகளின் நிறத்தையும் மாற்றலாம். ஒளிபுகும் ஆஃப் செய்யப்பட்டிருக்கும்போது, படிவப் புலங்கள் திடமான பின்னணியைக் கொண்டிருக்கும். புலங்களில் உள்ள உரையை நீங்கள் தெளிவாகப் படிக்க முடிகிறதா என்பதை உறுதிசெய்யவும்.
படிகள்:
டெஸ்க்டாப்
உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, அமைப்புகள் > செக்அவுட் என்பதற்குச் செல்லவும்.
உள்ளமைவுகள் பிரிவில், நீங்கள் தனிப்பயனாக்க விரும்பும் உள்ளமைவுக்கு அடுத்துள்ள எடிட் செய் என்பதைக் கிளிக் செய்யவும்.
செக்அவுட் மற்றும் கணக்குகள் எடிட்டரில், அமைப்புகள் பக்கப்பட்டியை அணுக,
ஐக் கிளிக் செய்யவும்.
உள்ளீட்டுப் புலங்கள் பிரிவில், பின்வரும் தனிப்பயனாக்கங்களில் ஏதேனும் ஒன்றைச் செய்யவும்:
- உள்ளீட்டுப் புலங்களை ஒளிபுகும் வகையில் மாற்ற, ஒளிபுகும் என்பதை ஆன் செய்யவும்.
- பிழைச் செய்திகளின் நிறத்தை மாற்ற, பிழை புலத்தைக் கிளிக் செய்து, பின்னர் ஒரு நிறத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
Save என்பதைக் கிளிக் செய்யவும்.
மொபைல்
Shopify செயலியிலிருந்து,
என்பதைத் தட்டி, பின்னர்
Settings என்பதைத் தட்டவும்.
Store settings பிரிவில், Checkout என்பதைத் தட்டவும்.
Configurations பிரிவில், நீங்கள் தனிப்பயனாக்க விரும்பும் உள்ளமைவில் Edit என்பதைத் தட்டவும்.
செக்அவுட் மற்றும் கணக்குகள் எடிட்டரில், Settings என்பதைத் தட்டவும்.
உள்ளீட்டுப் புலங்கள் பிரிவில், பின்வரும் தனிப்பயனாக்கங்களில் ஏதேனும் ஒன்றைச் செய்யவும்:
- உள்ளீட்டுப் புலங்களை ஒளிபுகும் வகையில் மாற்ற, ஒளிபுகும் என்பதை ஆன் செய்யவும்.
- பிழைச் செய்திகளின் நிறத்தை மாற்ற, பிழை புலத்தைத் தட்டி, பின்னர் ஒரு நிறத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
Save அல்லது ✓ என்பதைத் தட்டவும்.
செக்அவுட் பக்கத்தில் எழுத்துருவை மாற்றவும்
உங்கள் செக்அவுட் பக்கங்களைத் தனிப்பயனாக்க, எழுத்துருக்களின் பட்டியலிலிருந்து தேர்ந்தெடுக்கலாம்.
படிகள்:
டெஸ்க்டாப்
உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, அமைப்புகள் > செக்அவுட் என்பதற்குச் செல்லவும்.
உள்ளமைவுகள் பிரிவில், நீங்கள் தனிப்பயனாக்க விரும்பும் உள்ளமைவுக்கு அடுத்துள்ள எடிட் செய் என்பதைக் கிளிக் செய்யவும்.
செக்அவுட் மற்றும் கணக்குகள் எடிட்டரில், அமைப்புகள் பக்கப்பட்டியை அணுக,
ஐக் கிளிக் செய்யவும்.
அச்சுக்கலை பிரிவில், தலைப்புகள் கீழ்தோன்றும் மெனு அல்லது பாடி கீழ்தோன்றும் மெனுவைக் கிளிக் செய்து, பிறகு ஒரு எழுத்துருவைத் தேர்ந்தெடுக்கவும்.
Save என்பதைக் கிளிக் செய்யவும்.
மொபைல்
Shopify செயலியிலிருந்து,
என்பதைத் தட்டி, பின்னர்
Settings என்பதைத் தட்டவும்.
Store settings பிரிவில், Checkout என்பதைத் தட்டவும்.
Configurations பிரிவில், நீங்கள் தனிப்பயனாக்க விரும்பும் உள்ளமைவில் Edit என்பதைத் தட்டவும்.
செக்அவுட் மற்றும் கணக்குகள் எடிட்டரில், Settings என்பதைத் தட்டவும்.
அச்சுக்கலை பிரிவில், தலைப்புகள் கீழ்தோன்றும் மெனு அல்லது பாடி கீழ்தோன்றும் மெனுவைத் தட்டி, பிறகு ஒரு எழுத்துருவைத் தேர்ந்தெடுக்கவும்.
Save அல்லது ✓ என்பதைத் தட்டவும்.
உங்கள் செக்அவுட் தளவமைப்பை மாற்றவும்
உங்கள் ஸ்டோரில் இயல்புநிலையாக ஒரு பக்க செக்அவுட் என செக்அவுட் தளவமைப்பு அமைக்கப்பட்டிருக்கும். உங்கள் Shopify நிர்வாகியில் ஒரு பக்க செக்அவுட் மற்றும் மூன்று பக்க செக்அவுட்டிற்கு இடையில் நீங்கள் மாறலாம். உங்கள் செக்அவுட் தளவமைப்பை மாற்றுவதற்கு முன் ஒரு பக்க மற்றும் மூன்று பக்க செக்அவுட்களுக்கு இடையிலான வேறுபாடுகளை மதிப்பாய்வு செய்யவும்.
உங்கள் செக்அவுட் தளவமைப்பை மாற்றும்போது, உங்கள் செக்அவுட் மற்றும் கணக்குகளின் எடிட்டரில் உள்ள மாதிரிக்காட்சி நிகழ்நேரத்தில் காட்டப்படாது. உங்கள் மாற்றங்களைச் சேமித்த பிறகு, உங்களின் புதிய செக்அவுட் தளவமைப்பைப் பார்க்க, உங்கள் ஸ்டோர்ஃபிரண்ட் செக்அவுட்டிற்குச் செல்லவும்.
படிகள்:
டெஸ்க்டாப்
உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, அமைப்புகள் > செக்அவுட் என்பதற்குச் செல்லவும்.
உள்ளமைவுகள் பிரிவில், நீங்கள் தனிப்பயனாக்க விரும்பும் உள்ளமைவுக்கு அடுத்துள்ள எடிட் செய் என்பதைக் கிளிக் செய்யவும்.
செக்அவுட் மற்றும் கணக்குகளின் எடிட்டரில், அமைப்புகள் பக்கப்பட்டியை அணுக கியர் ஐகானைக் கிளிக் செய்யவும்.
செக்அவுட் தளவமைப்பு பிரிவில், செக்அவுட் தளவமைப்பு விருப்பங்களைத் திறக்க தற்போதைய தளவமைப்பைக் கிளிக் செய்யவும்.
செக்அவுட் தளவமைப்பை அமைக்க, ஒரு பக்க செக்அவுட் அல்லது மூன்று பக்க செக்அவுட் என்பதைக் கிளிக் செய்யவும்.
Save என்பதைக் கிளிக் செய்யவும்.
மொபைல்
Shopify செயலியிலிருந்து,
என்பதைத் தட்டி, பின்னர்
Settings என்பதைத் தட்டவும்.
Store settings பிரிவில், Checkout என்பதைத் தட்டவும்.
உள்ளமைவுகள் பிரிவில், தனிப்பயனாக்கு என்பதைத் தட்டவும்.
செக்அவுட் மற்றும் கணக்குகளின் எடிட்டரில், அமைப்புகள் பக்கப்பட்டியை அணுக கியர் ஐகானைத் தட்டவும்.
செக்அவுட் தளவமைப்பை அமைக்க, செக்அவுட் தளவமைப்பு பிரிவில், ஒரு பக்க செக்அவுட் அல்லது மூன்று பக்க செக்அவுட் என்பதைத் தட்டவும்.
Save அல்லது ✓ என்பதைத் தட்டவும்.
முகவரி தானியங்கு நிரப்புதலை நிர்வகிக்கவும்
உங்கள் வாடிக்கையாளர்கள் தங்கள் ஷிப்பிங் அல்லது பில்லிங் முகவரிகளை உள்ளிடும்போது, அவர்களுக்கு முகவரிப் பரிந்துரைகள் வழங்கப்படலாம். இந்த அம்சம் உங்கள் வாடிக்கையாளர்களைத் தங்கள் முகவரித் தகவலை விரைவாகவும் துல்லியமாகவும் உள்ளிட அனுமதிக்கிறது. இந்த முகவரிப் பரிந்துரைகள் உங்கள் வாடிக்கையாளரின் உலாவியிலிருந்து அல்லாமல், Google Autocomplete போன்ற சேவைகளிலிருந்து வருகின்றன. இந்த அம்சம் செயலிழந்து இருந்தால் அல்லது இந்த அம்சம் இதுவரை ஆதரிக்கப்படாத நாட்டில் உங்கள் வாடிக்கையாளர்கள் வசித்தால், உங்கள் வாடிக்கையாளர்கள் தங்கள் முகவரிகளை வழக்கம்போல் மேனுவலாக உள்ளிட்டு செக்அவுட் செய்யலாம்.
பின்வரும் நாடுகளில் உள்ள உங்கள் வாடிக்கையாளர்களுக்கு இயல்புநிலை முகவரி தானியங்கு நிரப்புதல் அம்சம் கிடைக்கிறது:
- ஆஸ்திரேலியா
- ஆஸ்திரியா
- பெல்ஜியம்
- பிரேசில்
- கனடா
- டென்மார்க்
- பிரான்ஸ்
- ஜெர்மனி
- ஹாங்காங் எஸ்.ஏ.ஆர்
- இந்தியா
- இத்தாலி
- ஜப்பான்
- லக்சம்பர்க்
- நெதர்லாந்து
- நியூசிலாந்து
- நார்வே
- சவூதி அரேபியா
- சிங்கப்பூர்
- ஸ்பெயின்
- ஸ்வீடன்
- சுவிட்சர்லாந்து
- யுனைடெட் கிங்டம்
- யுனைடெட் ஸ்டேட்ஸ்
இந்த அம்சம் அனைத்து Shopify வணிகர்களுக்கும் கிடைக்கும், மேலும் இது இயல்புநிலையாகச் செயலில் இருக்கும். செக்அவுட் மற்றும் கணக்குகள் எடிட்டரைப் பயன்படுத்தி உங்கள் Shopify நிர்வாகியில் இந்த அம்சத்தை முடக்கலாம்.
படிகள்:
உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, அமைப்புகள் > செக்அவுட் என்பதற்குச் செல்லவும்.
உள்ளமைவுகள் பிரிவில், நீங்கள் தனிப்பயனாக்க விரும்பும் உள்ளமைவுக்கு அடுத்துள்ள எடிட் செய் என்பதைக் கிளிக் செய்யவும்.
செக்அவுட் மற்றும் கணக்குகள் எடிட்டரில், அமைப்புகள் பக்கப்பட்டியை அணுக,
ஐக் கிளிக் செய்யவும்.
முகவரி தானியங்கு நிரப்புதல் பிரிவில், உங்கள் முகவரி தானியங்கு நிரப்புதல் அமைப்பை நிர்வகிக்க, பின்வருவனவற்றில் ஏதேனும் ஒன்றைச் செய்யவும்:
- முகவரி தானியங்கு நிரப்புதலை முடக்க, முகவரி தானியங்கு நிரப்புதலைப் பயன்படுத்து என்பதைத் தேர்வுநீக்கவும்.
- முகவரி தானியங்கு நிரப்புதலை மீண்டும் செயல்படுத்த, முகவரி தானியங்கு நிரப்புதலைப் பயன்படுத்து என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
- விருப்பத்திற்குரியது: நீங்கள் மூன்றாம் தரப்பு முகவரி தானியங்கு நிரப்புதல் செயலியை நிறுவியிருந்தால், முகவரி தானியங்கு நிரப்புதலைப் பயன்படுத்து என்பதைச் செயல்படுத்தி, செக்அவுட்டில் முகவரி தானியங்கு நிரப்புதலுக்கு நீங்கள் பயன்படுத்த விரும்பும் செயலியைத் தேர்ந்தெடுக்கவும்.
Save என்பதைக் கிளிக் செய்யவும்.
மீண்டும் வாங்கு பட்டனை நிர்வகிக்கவும்
வாடிக்கையாளர்கள் தாங்கள் வாங்கிய உருப்படிகளை மீண்டும் ஆர்டர் செய்வதற்கு அனுமதிக்க, உங்கள் ஆர்டர் நிலை பக்கத்தில் மீண்டும் வாங்கு பட்டன் காண்பிக்கப்படும்.
படிகள்:
டெஸ்க்டாப்
உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, அமைப்புகள் > செக்அவுட் என்பதற்குச் செல்லவும்.
உள்ளமைவுகள் பிரிவில், நீங்கள் தனிப்பயனாக்க விரும்பும் உள்ளமைவுக்கு அடுத்துள்ள எடிட் செய் என்பதைக் கிளிக் செய்யவும்.
செக்அவுட் மற்றும் கணக்குகள் எடிட்டரில், அமைப்புகள் பக்கப்பட்டியை அணுக,
ஐக் கிளிக் செய்யவும்.
ஆர்டர் செயல்கள் பிரிவில், மீண்டும் வாங்கு என்பதை ஆன் அல்லது ஆஃப் செய்யவும்.
Save என்பதைக் கிளிக் செய்யவும்.
மொபைல்
Shopify செயலியிலிருந்து,
என்பதைத் தட்டி, பின்னர்
Settings என்பதைத் தட்டவும்.
Store settings பிரிவில், Checkout என்பதைத் தட்டவும்.
Configurations பிரிவில், நீங்கள் தனிப்பயனாக்க விரும்பும் உள்ளமைவில் Edit என்பதைத் தட்டவும்.
செக்அவுட் மற்றும் கணக்குகள் எடிட்டரில், Settings என்பதைத் தட்டவும்.
ஆர்டர் செயல்கள் பிரிவில், மீண்டும் வாங்கு என்பதை ஆன் அல்லது ஆஃப் செய்யவும்.
Save அல்லது ✓ என்பதைத் தட்டவும்.
மொபைல் சாதனங்களில் இயல்புநிலையாகத் தள்ளுபடிக் குறியீடு புலத்தைக் காண்பி
மொபைல் சாதனத்தில் வாடிக்கையாளர் செக்அவுட் செய்யும்போது, ஆர்டர் சுருக்கம் மற்றும் தள்ளுபடிக் குறியீடு புலம் ஆகிய இரண்டுமே சுருக்கப்பட்ட பிரிவில் இயல்பாகவே மறைக்கப்பட்டிருக்கும். தள்ளுபடிக் குறியீடு அல்லது கிஃப்ட் கார்டு குறியீட்டைச் சேர்க்க, வாடிக்கையாளர்கள் ஆர்டர் சுருக்கத்தைத் தட்டி முழுமையான ஆர்டர் விவரங்களை விரித்து, தள்ளுபடிக் குறியீடு புலத்தைக் காட்டலாம்.
மொபைல் சாதனத்தில் செக்அவுட் செய்யும்போது, சுருக்கப்பட்ட ஆர்டர் சுருக்கத்திற்கு மேல் தள்ளுபடிக் குறியீடு புலத்தை எப்போதும் காட்டுமாறு இந்த இயல்புநிலைச் செயல்பாட்டை உங்களால் மாற்ற முடியும். இந்த அமைப்பு ஒரு பக்க மற்றும் மூன்று பக்க செக்அவுட் தளவமைப்புகள் இரண்டிற்கும் கிடைக்கும்:
- ஒரு பக்க செக்அவுட்டில், மொபைல் சாதனங்களில் சுருக்கப்பட்ட ஆர்டர் சுருக்கத்திற்கு மேல் தள்ளுபடிப் புலம் காட்டப்படும்.
- மூன்று பக்க செக்அவுட்டில், ஆர்டர் சுருக்கம் மற்றும் தள்ளுபடிப் புலத்தைக் காட்ட, மேல்புறமுள்ள ஆர்டர் சுருக்கம் இயல்பாகவே விரிக்கப்படும்.
படிகள்:
டெஸ்க்டாப்
உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, அமைப்புகள் > செக்அவுட் என்பதற்குச் செல்லவும்.
உள்ளமைவுகள் பிரிவில், நீங்கள் தனிப்பயனாக்க விரும்பும் உள்ளமைவுக்கு அடுத்துள்ள எடிட் செய் என்பதைக் கிளிக் செய்யவும்.
செக்அவுட் மற்றும் கணக்குகள் எடிட்டரில், பிரிவுகள் பக்கப்பட்டியை அணுக, பிரிவுகள் ஐகானைக் கிளிக் செய்யவும்.
ஆர்டர் சுருக்கம் பிரிவைக் கிளிக் செய்யவும்.
தள்ளுபடிக் குறியீடு புலத்தை எப்போதும் காட்டு அமைப்பைச் செயல்படுத்தவும்.
Save என்பதைக் கிளிக் செய்யவும்.
மொபைல்
Shopify செயலியிலிருந்து,
என்பதைத் தட்டி, பின்னர்
Settings என்பதைத் தட்டவும்.
Store settings பிரிவில், Checkout என்பதைத் தட்டவும்.
Configurations பிரிவில், நீங்கள் தனிப்பயனாக்க விரும்பும் உள்ளமைவில் Edit என்பதைத் தட்டவும்.
செக்அவுட் மற்றும் கணக்குகள் எடிட்டரில், பிரிவுகள் என்பதைத் தட்டவும்.
ஆர்டர் சுருக்கம் பிரிவைத் தட்டவும்.
தள்ளுபடிக் குறியீடு புலத்தை எப்போதும் காட்டு அமைப்பைச் செயல்படுத்தவும்.
Save அல்லது ✓ என்பதைத் தட்டவும்.
உங்கள் செக்அவுட் பக்கங்களில் பிளாக்குகளைச் சேர்த்தல்
பிளாக்குகளைப் பயன்படுத்தித் தனிப்பயன் பேனர்கள் அல்லது லாயல்டி வெகுமதிகள் போன்ற அம்சங்களை வாடிக்கையாளர் செக்அவுட் அனுபவத்தில் உங்களால் சேர்க்க முடியும். செக்அவுட்டில் உள்ள தகவல், ஷிப்பிங் மற்றும் பேமெண்ட் பக்கங்களைத் தனிப்பயனாக்கும் செயலிகள் உட்பட, சில செக்அவுட் செயலிகள் Shopify Plus திட்டத்தில் உள்ள ஸ்டோர்களுக்கு மட்டுமே கிடைக்கும். உங்கள் செக்அவுட்டில் சேர்ப்பதற்கான செயலியைத் தேர்ந்தெடுக்கும்போது செக்அவுட் செயலியின் கிடைக்கும் தன்மையைப் பார்க்கவும்.
பிரிவுகள் பக்கப்பட்டி அல்லது செயலிகள் பக்கப்பட்டியைப் பயன்படுத்தி, பக்கங்களில் உள்ள பிரிவுகளில் நேரடியாக உங்களால் இருக்கும் பிளாக்குகளைச் சேர்க்க முடியும்.
செயலிகள் மூலம் உங்கள் செக்அவுட் உள்ளமைவுகளைத் தனிப்பயனாக்குவது குறித்து மேலும் அறியவும்.
பிரிவுகள் பக்கப்பட்டியைப் பயன்படுத்திப் பிளாக்குகளைச் சேர்த்தல்
பிரிவுகள் பக்கப்பட்டியைப் பயன்படுத்தி, தற்போது நீங்கள் பார்க்கும் பக்கத்தில் நீங்கள் நிறுவியுள்ள செயலிகளிலிருந்து பிளாக்குகளைச் சேர்க்கலாம். ஒரு பக்கம் அல்லது பிரிவில் நிறுவுவதற்குக் கிடைக்கும் பிளாக்குகள் மட்டுமே தேர்ந்தெடுக்கக்கூடிய விருப்பங்களாகக் காட்டப்படும்.
படிகள்:
டெஸ்க்டாப்
உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, அமைப்புகள் > செக்அவுட் என்பதற்குச் செல்லவும்.
உள்ளமைவுகள் பிரிவில், நீங்கள் தனிப்பயனாக்க விரும்பும் உள்ளமைவுக்கு அடுத்துள்ள எடிட் செய் என்பதைக் கிளிக் செய்யவும்.
செக்அவுட் மற்றும் கணக்குகள் எடிட்டரில், நீங்கள் செயலியைச் சேர்க்க விரும்பும் பக்கத்தைத் தேர்ந்தெடுத்து, பிரிவுகள் பக்கப்பட்டியை அணுக
என்பதைக் கிளிக் செய்யவும்.
செயலியைச் சேர்க்க விரும்பும் பிரிவில் ⊕ பிளாக்கைச் சேர் என்பதைக் கிளிக் செய்யவும்.
நீங்கள் சேர்க்க விரும்பும் பிளாக்கைக் கிளிக் செய்யவும்.
தேவைக்கேற்ப பிளாக்கைத் தனிப்பயனாக்கவும்:
- பிளாக்கின் இடத்தை மறுவரிசைப்படுத்த, பிரிவுகள் பட்டியலில் அந்த பிளாக்கை மேலோ அல்லது கீழோ இழுத்து விடவும் அல்லது மாதிரிக்காட்சிச் சாளரத்தில் நகர்த்துவதற்கான பொத்தான்களைப் பயன்படுத்தவும்.
- எந்தவொரு பிளாக் அமைப்புகளையும் உள்ளமைக்க, பிளாக்கைக் கிளிக் செய்யவும்.
Save என்பதைக் கிளிக் செய்யவும்.
மொபைல்
Shopify செயலியிலிருந்து,
என்பதைத் தட்டி, பின்னர்
Settings என்பதைத் தட்டவும்.
Store settings பிரிவில், Checkout என்பதைத் தட்டவும்.
உள்ளமைவுகள் பிரிவில், நீங்கள் தனிப்பயனாக்க விரும்பும் செக்அவுட் உள்ளமைவில் உள்ள தனிப்பயனாக்கு என்பதைத் தட்டவும்.
செக்அவுட் மற்றும் கணக்குகள் எடிட்டரில், நீங்கள் செயலியைச் சேர்க்க விரும்பும் பக்கத்தைத் தேர்ந்தெடுத்து, பிரிவுகள் என்பதைத் தட்டவும்.
செயலியைச் சேர்க்க விரும்பும் பிரிவில் ⊕ பிளாக்கைச் சேர் என்பதைத் தட்டவும்.
நீங்கள் சேர்க்க விரும்பும் பிளாக்கைத் தட்டவும்.
தேவைக்கேற்ப பிளாக்கைத் தனிப்பயனாக்கவும்:
- பிளாக்கின் இடத்தை மறுவரிசைப்படுத்த, பிரிவுகள் பட்டியலில் அந்த பிளாக்கை மேலோ அல்லது கீழோ இழுத்து விடவும் அல்லது மாதிரிக்காட்சிச் சாளரத்தில் நகர்த்துவதற்கான பொத்தான்களைப் பயன்படுத்தவும்.
- எந்தவொரு பிளாக் அமைப்புகளையும் உள்ளமைக்க, பிளாக்கைத் தட்டவும்.
Save அல்லது ✓ என்பதைத் தட்டவும்.
செயலிகள் பக்கப்பட்டியைப் பயன்படுத்திப் பிளாக்குகளைச் சேர்த்தல்
செயலிகள் பக்கப்பட்டியைப் பயன்படுத்தி, தற்போது நீங்கள் பார்க்கும் பக்கத்தில் நீங்கள் நிறுவியுள்ள செயலிகளிலிருந்து பிளாக்குகளைச் சேர்க்கலாம். ஒரு பிளாக்கைச் சேர்க்கும்போது, குறிப்பிட்ட பிளாக்குகளை நிறுவுவதற்குக் கிடைக்கும் பக்கங்கள் மட்டுமே விருப்பங்களாகக் காட்டப்படும்.
செக்அவுட் மற்றும் கணக்குகள் எடிட்டரில் செயலிகள் பக்கப்பட்டியைப் பயன்படுத்துவது குறித்து மேலும் அறியவும்.
படிகள்:
டெஸ்க்டாப்
உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, அமைப்புகள் > செக்அவுட் என்பதற்குச் செல்லவும்.
உள்ளமைவுகள் பிரிவில், நீங்கள் தனிப்பயனாக்க விரும்பும் உள்ளமைவுக்கு அடுத்துள்ள எடிட் செய் என்பதைக் கிளிக் செய்யவும்.
செக்அவுட் மற்றும் கணக்குகள் எடிட்டரில், செயலிகள் பக்கப்பட்டியை அணுக
என்பதைக் கிளிக் செய்யவும்.
நீங்கள் சேர்க்க விரும்பும் பிளாக்கிற்கு அடுத்துள்ள ⊕ என்பதைக் கிளிக் செய்யவும்.
இதில் சேர் பாப்-அவுட்டில், பிளாக்கைச் சேர்க்க வேண்டிய பக்கத்தைக் கிளிக் செய்யவும்.
தேவைக்கேற்ப பிளாக்கைத் தனிப்பயனாக்கவும்:
- பிளாக்கின் இடத்தை மறுவரிசைப்படுத்த, மாதிரிக்காட்சிச் சாளரத்தில் நகர்த்துவதற்கான பொத்தான்களைப் பயன்படுத்தவும்.
- எந்தவொரு பிளாக் அமைப்புகளையும் உள்ளமைக்கவும்.
Save என்பதைக் கிளிக் செய்யவும்.
மொபைல்
Shopify செயலியிலிருந்து,
என்பதைத் தட்டி, பின்னர்
Settings என்பதைத் தட்டவும்.
Store settings பிரிவில், Checkout என்பதைத் தட்டவும்.
உள்ளமைவுகள் பிரிவில், நீங்கள் தனிப்பயனாக்க விரும்பும் செக்அவுட் உள்ளமைவில் உள்ள தனிப்பயனாக்கு என்பதைத் தட்டவும்.
செக்அவுட் மற்றும் கணக்குகள் எடிட்டரில், செயலிகள் என்பதைத் தட்டவும்.
நீங்கள் சேர்க்க விரும்பும் பிளாக்கிற்கு அடுத்துள்ள ⊕ என்பதைத் தட்டவும்.
இதில் சேர் பாப்-அவுட்டில், பிளாக்கைச் சேர்க்க வேண்டிய பக்கத்தைத் தட்டவும்.