உங்கள் செக்அவுட் மற்றும் கணக்குகள் பக்கங்களுக்கான சந்தைகள் மற்றும் மார்க்கெட் ஓவர்ரைடுகளைப் புரிந்துகொள்ளுதல்
உங்களிடம் பல சந்தைகள் இருந்தால், உங்கள் Shopify நிர்வாகியிலுள்ள செக்அவுட் மற்றும் கணக்குகள் எடிட்டரைப் பயன்படுத்தி, குறிப்பிட்ட சர்வதேச சந்தைகள் மற்றும் B2B நிறுவனத்தின் இருப்பிடச் சந்தைகளுக்கான பிரத்தியேக ஓவர்ரைடுகளை உருவாக்கலாம்.
உங்கள் செக்அவுட் மற்றும் கணக்குகள் உள்ளமைவில் ஸ்டோரின் இயல்புநிலை உள்ளது, இதுவே அனைத்து சந்தைகளுக்குமான அடிப்படை உள்ளமைவாகும். உங்கள் ஸ்டோரின் இயல்புநிலை உள்ளமைவில் நீங்கள் செய்யும் மாற்றங்கள் அனைத்து சந்தைகளுக்கும் பொருந்தும். ஸ்டோரின் இயல்புநிலை தவிர பிற சந்தையிலுள்ள பிளாக்குடன் கூடிய ஒரு பிரிவை நீங்கள் மாற்றினால், செக்அவுட் மற்றும் கணக்குகள் எடிட்டரானது அந்தப் பிரிவு, பிளாக் அல்லது பக்கத்திற்கு ஓவர்ரைடை உருவாக்கும்.
ஒரு சந்தையில் பிளாக் சேர்க்கப்பட்ட, அகற்றப்பட்ட அல்லது மறுவரிசைப்படுத்தப்பட்ட ஒரு பிரிவு இருந்தால், நீங்கள் ஸ்டோரின் இயல்புநிலையை அல்லது முதன்மைச் சந்தையைப் புதுப்பிக்கும்போது, சேர்க்கப்பட்ட அல்லது மறுவரிசைப்படுத்தப்பட்ட பிளாக்குகளை அந்தப் பிரிவு தானாகவே வழித்தோன்றலாகப் பெறாது. பிளாக் ஓவர்ரைடால் பாதிக்கப்படாத எந்தப் பிரிவும் தொடர்ந்து புதுப்பிப்புகளைப் பெறும். உரைப்புலங்கள், பிராண்டிங் அல்லது நீட்டிப்புகளுக்கான மாற்றங்கள் போன்ற ஓவர்ரைடு செய்யப்பட்ட அமைப்புகளும் ஸ்டோரின் இயல்புநிலை அல்லது முதன்மைச் சந்தைகளிலிருந்து மாற்றங்களைப் பெறுவதை நிறுத்திவிடும், ஆனால் அந்த அமைப்பிற்கு மட்டுமே அவ்வாறு நடக்கும்.
இந்தப் பக்கத்தில்
சந்தைக்கான கீழ்தோன்றும் மெனு விருப்பங்கள்
வெவ்வேறு வாடிக்கையாளர்களுக்கு ஏற்ப செக்அவுட் மற்றும் வாடிக்கையாளர் கணக்கு அனுபவத்தை மாற்றியமைக்கச் சந்தைகள் உதவுகின்றன. செக்அவுட் மற்றும் கணக்குகள் எடிட்டரில், சந்தை கீழ்தோன்றும் மெனுவிலிருந்து நீங்கள் திருத்த விரும்பும் சந்தையைத் தேர்ந்தெடுக்கலாம். ஸ்டோரின் இயல்புநிலை தவிர, உங்கள் நாடு அல்லது பிராந்தியச் சந்தைகள் மற்றும் B2B நிறுவனத்தின் இருப்பிடச் சந்தைகள் மட்டுமே இந்த மெனுவில் பட்டியலிடப்படும். சேனல் சந்தைகளும் துணைப் பிராந்தியச் சந்தைகளும் பட்டியலிடப்படாது. நேரடி விற்பனைச் சந்தைகளில் தனிப்பயனாக்குவதற்கு ஆன்லைன் செக்அவுட் அல்லது கணக்குப் பக்கங்கள் இல்லை என்பதால், சில்லறை விற்பனைச் சந்தைகளும் பட்டியலிடப்படாது.
| விருப்பம் | விளக்கம் |
|---|---|
| ஸ்டோர் இயல்புநிலை | சந்தைகள் மெனுவின் மேற்பகுதியில் காட்டப்படும் ஸ்டோர் இயல்புநிலையானது, பிற சந்தைகள் பெறக்கூடிய அல்லது ஓவர்ரைடு செய்யக்கூடிய இயல்புநிலை செக்அவுட் மற்றும் கணக்குகளின் அனுபவத்தை உருவாக்கப் பயன்படுகிறது. அந்தச் சந்தைக்கு எனத் தனிப்பயனாகச் செய்யப்படும் மாற்றங்களால் ஓவர்ரைடு செய்யப்படாவிட்டால், ஸ்டோர் இயல்புநிலையில் செய்யப்படும் மாற்றங்கள் எல்லாச் சந்தைகளுக்கும் பொருந்தும். |
| சந்தையின் பெயர் | ஒரு சந்தையைத் தேர்ந்தெடுத்து, அந்தச் சந்தைக்கு மட்டும் பொருந்தும் மாற்றங்களைச் செய்யலாம். குறைந்தது ஒரு சந்தையைத் தனிப்பயனாக்கிய பிறகு, ஸ்டோரின் இயல்புநிலையும் நீங்கள் தனிப்பயனாக்கிய சந்தைகளும் செக்அவுட் மற்றும் கணக்குகளின் தனிப்பயனாக்கங்கள் என்ற தலைப்பின் கீழ் பட்டியலிடப்படும். உங்கள் Shopify நிர்வாகியின் சந்தைகள் பக்கத்தில் சந்தைகள் ஒன்றுக்குள் ஒன்றாக அமைந்திருப்பதைப் போலவே, தனிப்பயனாக்கப்பட்ட ஒவ்வொரு சந்தையின் மரபுரிமை நிலையும் உள்ளடுக்கு பட்டியல் வடிவில் காட்டப்படும். |
| தனிப்பயனாக்கக்கூடிய சந்தைகள் | இன்னும் தனிப்பயனாக்கப்படாத சந்தைகளின் பட்டியல். குறைந்தது ஒரு சந்தையைத் தனிப்பயனாக்கிய பிறகு, இந்தத் தலைப்பு தனிப்பயனாக்கக்கூடிய கூடுதல் சந்தைகள் என மாறும். |
சந்தையின் இன்ஹெரிட்டன்ஸ் மற்றும் ஓவர்ரைடுகள்
ஒரு சந்தையில் பிளாக்குகள் சேர்க்கப்படும், அகற்றப்படும் அல்லது மறுவரிசைப்படுத்தப்படும் போதெல்லாம், அந்தப் பிரிவில் உள்ளவற்றின் வரிசையானது அவற்றின் முதன்மைச் சந்தையிலிருந்து இனி பெறப்படாது. இந்தத் தனிப்பயனாக்கம் ஓர் ஓவர்ரைடு எனக் கருதப்படுகிறது, மேலும் இது குறிப்பிட்ட சந்தைகளுக்குச் செக்அவுட் மற்றும் கணக்குத் தனிப்பயனாக்கங்களை உருவாக்க உங்களை அனுமதிக்கிறது. முதன்மைச் சந்தையில் உள்ள அந்த உருப்படியை நீங்கள் பின்னர் புதுப்பித்தால், ஓவர்ரைடைக் கொண்ட உருப்படியானது அந்தப் புதுப்பிப்பைப் பெறாது, மேலும் அது உங்களின் ஆரம்ப மாற்றத்தைத் தக்கவைத்துக் கொள்ளும்.
எடுத்துக்காட்டாக, உங்களின் ஸ்டோர் இயல்புநிலைக்குக் கூடுதலாக வட அமெரிக்கச் சந்தை மற்றும் ஐரோப்பியச் சந்தை ஒன்றை அமைத்துள்ளீர்கள். வட அமெரிக்கச் சந்தையின் செக்அவுட்டில் உள்ள பேமெண்ட் பிரிவில் தனிப்பயன் பிளாக்கைச் சேர்த்தால், அந்தப் பிரிவில் நீங்கள் ஓர் ஓவர்ரைடை உருவாக்கியுள்ளீர்கள் எனப் பொருளாகும். ஸ்டோர் இயல்புநிலையின் பேமெண்ட் பிரிவில் வேறு ஒரு பிளாக்கைச் சேர்க்க நீங்கள் பின்னர் முடிவு செய்தால், ஐரோப்பியச் சந்தை மற்றும் நீங்கள் எதிர்காலத்தில் உருவாக்கும் புதிய தனிப்பயனாக்கப்படாத சந்தைகள் ஆகியவற்றின் செக்அவுட்களில் உள்ள பேமெண்ட் பிரிவில் அந்தப் புதிய பிளாக் இருக்கும். ஆனால், வட அமெரிக்கச் சந்தையின் பேமெண்ட் பிரிவில் அந்தப் புதிய பிளாக் சேர்க்கப்படாது. ஏனெனில், அங்கு நீங்கள் முன்னரே ஓர் ஓவர்ரைடை உருவாக்கியுள்ளீர்கள்.
இருப்பினும், உங்கள் ஸ்டோர் இயல்புநிலையின் டெலிவரி பிரிவில் மூன்றாவது பிளாக்கைச் சேர்த்தால், வட அமெரிக்கச் சந்தை, ஐரோப்பியச் சந்தை மற்றும் எதிர்காலச் சந்தைகள் அனைத்தின் செக்அவுட்டிலும் அந்தப் பிளாக் இருக்கும். வட அமெரிக்கச் சந்தையின் டெலிவரி பிரிவில் நீங்கள் ஸ்டோர் இயல்புநிலையில் செய்த மாற்றத்தைப் பெறுவதைத் தடுக்கும் வகையிலான ஓவர்ரைடு ஏதும் இல்லாததால், அந்தப் பிளாக்கை அது பெற முடியும்.
உரைப்புலங்கள் அல்லது நிறங்கள் போன்ற அமைப்புகளையோ குறிப்பிட்ட புலங்களையோ ஓவர்ரைடு செய்ய முடியும். ஆனால், வழக்கம்போல அந்தப் பிரிவில் உள்ள பிற அமைப்புகளுக்கான இன்ஹெரிட்டன்ஸ் முதன்மைச் சந்தையுடன் தக்கவைக்கப்படும். அந்த அமைப்பு அல்லது புலம் மட்டுமே முதன்மைச் சந்தையிலிருந்து பெறப்படாது.
பின்வரும் வகையான மார்க்கெட் ஓவர்ரைடுகளில் எதையும் உருவாக்க, நீங்கள் செக்அவுட் மற்றும் கணக்குகள் எடிட்டரைப் பயன்படுத்தலாம்:
| மார்க்கெட் ஓவர்ரைடு வகை | விளக்கம் | ஸ்டோர் இயல்புநிலையிலிருந்து புதுப்பிப்புகளைப் பெறுவதால் ஏற்படும் விளைவு |
|---|---|---|
| அமைப்பு | செக்அவுட் அமைப்பை மாற்றுவது ஓர் அமைப்பு ஓவர்ரைடை உருவாக்குகிறது. எடுத்துக்காட்டாக, நீங்கள் ஸ்டோர் இயல்புநிலையில் ஒரு பக்க செக்அவுட்டைப் பயன்படுத்துகிறீர்கள், ஆனால் கனடா சந்தையில் மூன்று பக்க செக்அவுட்டைப் பயன்படுத்துகிறீர்கள். | ஸ்டோர் இயல்புநிலையில் ஓர் அமைப்பைப் புதுப்பித்தால், ஓவர்ரைடு உள்ள சந்தையில் அந்த அமைப்பு அந்தப் புதுப்பிப்பைப் பெறாது. பிரிவிற்கான பிற புதுப்பிப்புகள் அல்லது ஸ்டோர் இயல்புநிலையிலிருந்து பெறப்பட்ட பிற அமைப்புகள் (எடுத்துக்காட்டாக, ரிச் டெக்ஸ்ட் பிரிவில் ஒரு பிளாக்கைச் சேர்ப்பது போன்றவை), அமைப்பு ஓவர்ரைடு உள்ள சந்தையில் தொடர்ந்து பெறப்படும். |
| காணுநிலை | ஒரு பிரிவு அல்லது பிளாக்கின் காணுநிலையை மாற்றுவது, ஒரு காணுநிலை ஓவர்ரைடை உருவாக்குகிறது. எடுத்துக்காட்டாக, கனடா சந்தையில் உங்களின் அடிப்பகுதிக் கொள்கைகளை மறைக்கிறீர்கள். | ஸ்டோர் இயல்புநிலையில் காணுநிலையைப் புதுப்பித்தால், ஓவர்ரைடு உள்ள சந்தையில் காணுநிலையானது பெறப்படாது. பிரிவிற்கான ஸ்டோர் இயல்புநிலையிலிருந்து பெறப்படும் பிற புதுப்பிப்புகள் (எடுத்துக்காட்டாக, ரிச் டெக்ஸ்ட் பிரிவில் ஒரு பிளாக்கைச் சேர்ப்பது போன்றவை), காணுநிலை ஓவர்ரைடு உள்ள சந்தையில் தொடர்ந்து பெறப்படும். |
| ஒரு பிரிவில் உள்ள பிளாக்கின் வரிசையைத் தனிப்பயனாக்குதல் | ஒரு பிரிவில் பிளாக்குகளைச் சேர்ப்பதன், அகற்றுவதன் அல்லது மறுவரிசைப்படுத்துவதன் மூலம் பிளாக் வரிசையை மாற்றுவது ஒரு தனிப்பயன் பிளாக் வரிசை ஓவர்ரைடை உருவாக்குகிறது. எடுத்துக்காட்டாக, கனடா சந்தையில் Checkout Blocks செயலி மூலம் சேர்க்கப்பட்ட பிளாக்குகளின் வரிசை, ஸ்டோர் இயல்புநிலையில் உள்ள வரிசையிலிருந்து வேறுபடுகிறது. | ஒரு பிளாக்கைச் சேர்ப்பதன் மூலம் அல்லது மறுவரிசைப்படுத்துவதன் மூலம் ஸ்டோர் இயல்புநிலையில் உள்ள பிளாக் வரிசையைப் புதுப்பித்தால், ஓவர்ரைடு உள்ள சந்தையில் பிளாக் வரிசையானது பெறப்படாது.
ஸ்டோர் இயல்புநிலையிலிருந்து பெறப்படும் பின்வரும் புதுப்பிப்புகள் பெறப்படாது:
|
வாடிக்கையாளர் கணக்குப் பக்கங்களில் கிடைக்கும் கூடுதல் சந்தைத் தனிப்பயனாக்கங்கள்
பிராண்டிங், அமைப்புகள் மற்றும் பிளாக்குகளுக்கான சந்தை சார்ந்த ஓவர்ரைடுகள் மட்டுமின்றி, வாடிக்கையாளர் கணக்குப் பக்கங்களானவை பின்வரும் தனிப்பயனாக்க வகைகளுக்கான சந்தை சார்ந்த ஓவர்ரைடுகளையும் ஆதரிக்கின்றன:
- மூன்றாம் தரப்புச் செயலியால் வழங்கப்படும் சந்தாக்கள் மேலாண்மைப் பக்கம் போன்ற முழுப் பக்க நீட்டிப்புகளைச் சேர்த்தல் அல்லது அகற்றுதல்.
- வாடிக்கையாளர் கணக்குப் பக்கங்களின் ஹெடர் பிரிவில் பயன்படுத்தப்படும் இயல்புநிலை
customer-account-main-menu-விலிருந்து மாற்றுவது போன்ற வாடிக்கையாளர் கணக்கு மெனுக்களை மாற்றுதல். - ரிட்டர்ன்களைக் கோருவதற்கான பொத்தான் போன்ற ஆர்டர் செயல்களைச் சேர்த்தல் அல்லது அகற்றுதல்.
முழுப் பக்க நீட்டிப்பு ஓவர்ரைடானது சந்தைக்கான இன்ஹெரிட்டன்ஸைத் துண்டிக்காது. அதாவது ஸ்டோர் இயல்புநிலை அல்லது முதன்மைச் சந்தைகளில் சேர்க்கப்படும் புதிய முழுப் பக்க நீட்டிப்புகளைச் சந்தை தொடர்ந்து பெறும்.
மார்க்கெட் ஓவர்ரைடுகளைக் கண்டறிதல்
ஸ்டோரின் இயல்புநிலை அல்லாத ஒரு சந்தையில் முதல் மாற்றத்தைச் செய்யும்போது, செக்அவுட் மற்றும் கணக்குகள் எடிட்டர் மரபுரிமை பாதிக்கப்படுகிறது என்ற அறிவிப்பைக் காட்டும். அந்த அறிவிப்பில் வைர வடிவக் குறியீடுகளால் குறிக்கப்பட்ட பகுதிகள் இனி எல்லா மாற்றங்களையும் மரபுரிமையாகப் பெறாது என்ற செய்தி இருக்கும். டெஸ்க்டாப்பில் இந்த அறிவிப்பு பாப்ஓவராகவும் சிறிய திரைகளில் உரையாடல் பெட்டியாகவும் திறக்கும். பின்வரும் வழிகளில் ஏதேனும் ஒன்றைப் பயன்படுத்தி அறிவிப்பை மூடலாம்:
- புரிந்தது என்பதைக் கிளிக் செய்யவும்.
- இந்தப் பகுதியைப் புதிய உலாவித் தாவலில் திறக்க, மேலும் அறிக என்பதைக் கிளிக் செய்யவும்.
அறிவிப்பை மூடிய பிறகு, நீங்கள் பின்னர் வேறொரு சந்தையைத் தனிப்பயனாக்கினாலும், செக்அவுட் மற்றும் கணக்குகள் எடிட்டர் அதை மீண்டும் காட்டாது.
ஓர் ஓவர்ரைடு உருவாக்கப்படும்போது, செக்அவுட் அல்லது கணக்குகள் பக்கத்தின் எந்தெந்தப் பகுதிகள் எந்த அளவுக்கு ஓவர்ரைடு செய்யப்பட்டன என்பதைக் குறிக்க, பாதிப்படைந்த புலம், பக்கத் தலைப்பு, பிரிவு மற்றும் பிளாக்கில் ஓர் ஐகான் காட்டப்படும்.
எடுத்துக்காட்டாக, செக்அவுட் பக்கத்தில் உள்ள உங்கள் வட அமெரிக்கச் சந்தையின் ஆர்டர் சுருக்கத்தில் ஒரு பிளாக்கைச் சேர்த்தால், செக்அவுட் மற்றும் கணக்குகளின் பக்கப்பட்டியானது பின்வரும் ஐகான்களைக் காட்டும்:
- புதிய பிளாக்கனது
ஐகானுடன் காட்டப்படும். - ஆர்டர் சுருக்கம் பிரிவானது
ஐகானுடன் காட்டப்படும். பிளாக்குகளின் வரிசை மாறியிருப்பதால், அந்தப் பிரிவில் ஓவர்ரைடு செய்யப்பட்ட சில கூறுகள் இருப்பதனை இது குறிக்கும். - பக்கத்தில் உள்ள சில கூறுகள் ஓவர்ரைடு செய்யப்பட்டுள்ளதால், செக்அவுட் பக்கத்தின் தலைப்பானது
ஐகானுடன் காட்டப்படும்.
சந்தையின் செக்அவுட் மற்றும் கணக்குகளின் உள்ளமைவில் உள்ள எந்தக் கூறுகள் சந்தைக்குத் தனித்துவமானவை என்பதை விரைவாகக் கண்டறிய இந்த விஷுவல் இண்டிகேட்டர் உதவும்.
பின்வரும் லேபிள்கள் அல்லது ஐகான்களைச் சரிபார்ப்பதன் மூலம் செக்அவுட் மற்றும் கணக்குகள் எடிட்டரில் உள்ள மார்க்கெட் ஓவர்ரைடுகளை நீங்கள் கண்டறியலாம்:
| மார்க்கெட் ஓவர்ரைடு வகை | ஐகான் அல்லது லேபிள் |
|---|---|
| அமைப்பு | பாதிக்கப்பட்ட அமைப்பு, பிளாக் அல்லது பிரிவுக்கு அருகில் |
| காணுநிலை | பாதிக்கப்பட்ட அமைப்பு அல்லது பிளாக்கிற்கு அருகில் பிளாக்கின் பிரிவுக்கு அருகில் |
| சேர்க்கப்பட்ட பிளாக் | சேர்க்கப்பட்ட பிளாக்கிற்கு அருகில் பிளாக்கின் பிரிவுக்கு அருகில் |
| அகற்றப்பட்ட அல்லது வரிசை மாற்றப்பட்ட பிளாக் | பிளாக்கின் பிரிவுக்கு அருகில் |
செக்அவுட் மற்றும் கணக்குகள் எடிட்டரில் உள்ள சந்தை மொழி
உங்கள் ஸ்டோரின் முதன்மை மொழி ஒரு சந்தைக்குக் கிடைக்கவில்லை எனில், சந்தையின் மொழியில் உள்ளடக்கத்தைத் தனிப்பயனாக்க, மொழிபெயர்ப்புச் செயலியை நீங்கள் பயன்படுத்த வேண்டும். முதன்மை மொழி சந்தைக்குக் கிடைத்தாலொழிய, செக்அவுட் மற்றும் கணக்குகள் எடிட்டரில் உங்களால் பிரிவுகள் அல்லது பிளாக்குகளை மாற்றியமைக்க முடியாது. சந்தை மொழிகளை நிர்வகிப்பது குறித்து மேலும் அறிக.