சோதனை ஆர்டரைச் செயலாக்குதல்
உங்கள் செக்அவுட் செயல்முறை மற்றும் அமைப்புகள் சரியாக வேலை செய்கின்றனவா என்பதைச் சரிபார்க்க, Shopify-இல் சோதனை ஆர்டரைச் செயலாக்கலாம். ஆர்டர்களைச் சோதிக்க 2 முக்கிய வழிகள் உள்ளன:
- உண்மையான கட்டணங்கள் ஏதுமின்றி பரிவர்த்தனைகளைச் செயல்படுத்துவதைப் போன்றே காட்டும் சோதனைக் கட்டண நுழைவாயில் அல்லது Shopify Payments சோதனைப் பயன்முறை போன்ற சோதனைப் பயன்முறையில் உள்ள கட்டண நுழைவாயிலைப் பயன்படுத்துதல்.
- உங்கள் உண்மையான கட்டணத் தகவலைப் பயன்படுத்தி உண்மையான ஆர்டரைச் செய்து, உடனடியாகப் பணத்தைத் திரும்பப்பெற்று அதை ரத்துசெய்தல்.
உங்கள் வாடிக்கையாளர்களிடம் இருந்து உண்மையான ஆர்டர்களை ஏற்கும் முன்பு, கட்டணச் செயலாக்கம், சரக்கு இருப்பைத் தடமறிதல், ஷிப்பிங் கணக்கீடுகள், மின்னஞ்சல் அறிவிப்புகள் போன்ற முக்கியமான செயல்பாடுகள் சரியாக உள்ளமைக்கப்பட்டுள்ளதை உறுதிசெய்ய உங்கள் ஆர்டர்களைச் சோதிப்பது உதவுகிறது.
நீங்கள் சோதனையைத் தொடங்குவதற்கு முன், லைவில் இருக்கும் கட்டண வழங்குநர்களை முடக்கி, நீங்கள் பயன்படுத்த விரும்பும் கட்டண நுழைவாயிலுக்கான சோதனைப் பயன்முறையைச் செயல்படுத்துவதை உறுதிசெய்யவும். சோதனைப் பயன்முறையை அமைத்த பிறகு, பல்வேறு பரிவர்த்தனைக் காட்சிகளைச் செயல்படுத்துவதைப் போன்றே காட்ட, சோதனைக் கிரெடிட் கார்டு எண்களைப் பயன்படுத்தி நீங்கள் ஆர்டர்களைச் செய்யலாம்.
இந்தப் பக்கத்தில்
சோதனை ஆர்டரைச் செய்யும் முன்பு கவனிக்க வேண்டியவை
சோதனை ஆர்டரைச் செய்யும் முன்பு, கவனிக்க வேண்டிய பின்வரும் விஷயங்களை மதிப்பாய்வு செய்யவும்.
கட்டண நுழைவாயில்கள் மற்றும் பரிவர்த்தனைச் சோதனை
- உங்கள் கட்டண வழங்குநர்கள் சோதனைப் பயன்முறையில் இருக்கும்போது வாடிக்கையாளர்களால் லைவ் ஆர்டர்களைச் செய்ய முடியாது. சோதனைப் பயன்முறையில் உள்ள கட்டண நுழைவாயிலைக் கொண்டு சோதனை ஆர்டரைச் செய்கிறீர்கள் எனில், சோதனையை முடித்தவுடன் சோதனைப் பயன்முறையை முடக்குவதை உறுதிசெய்யவும், இதன்மூலம் உங்கள் வாடிக்கையாளர்கள் ஆர்டர்களைச் செய்யலாம்.
- கேஷ் ஆன் டெலிவரி அல்லது வங்கிப் பரிமாற்றங்கள் போன்ற மேனுவல் பேமெண்ட் முறைகள், சோதனைப் பயன்முறை அல்லது போலியான பரிவர்த்தனைகளை ஆதரிக்காது. மேனுவல் பேமெண்ட் முறை மூலம் பரிவர்த்தனைகளைச் சோதிக்க, உங்களின் சோதனையாக உண்மையான ஆர்டரை நீங்கள் செய்தாக வேண்டும்.
- நீங்கள் டெவ் ஸ்டோரைப் பயன்படுத்துகிறீர்கள் எனில், உண்மையான பரிவர்த்தனைகளைப் பயன்படுத்தி உங்களால் சோதிக்க முடியாது. மேலும் தகவலுக்கு, டெவ் ஸ்டோர் வரம்புகளைப் பார்க்கவும்.
சோதனை ஆர்டர் விவரங்கள் மற்றும் B2B அமைவு
- சோதனை ஆர்டர்களைச் செய்ய
@example.comஎன்பதில் முடிவடையும் மின்னஞ்சல் முகவரியைப் பயன்படுத்தவும். இந்த டொமைன் Shopify-இன் சிஸ்டங்களால் கண்டறியப்படுகிறது, சோதனை ஆர்டர்களுக்குப் பயன்படுத்துவது பாதுகாப்பானது, எந்த ஸ்பேம் கண்டறிதலையும் தூண்டாது மற்றும் உங்கள் இன்பாக்ஸ் நிரம்பாமல் வைத்திருக்கும். உங்கள் சோதனையின் ஒரு பகுதியாக உங்களின் சொந்த மின்னஞ்சல் முகவரிக்குச் சோதனை ஆர்டர்களை அனுப்ப வேண்டும் எனில், உங்கள் இன்பாக்ஸில் உள்ள டெலிவரிச் சிக்கல்களைத் தவிர்க்க, ஒரே நேரத்தில் 100-க்கும் குறைவான சோதனை ஆர்டர்களை அனுப்புவதை உறுதிசெய்யவும். நீங்கள் B2B சோதனை ஆர்டர்களைச் செய்கிறீர்கள் எனில், உங்கள் மின்னஞ்சலில் பெறப்படும் ஒருமுறைப் பயன்படுத்தும் ஆறு இலக்கக் குறியீட்டைப் பயன்படுத்தி உங்களின் சோதனை வாடிக்கையாளர் கணக்கில் உள்நுழைய, சரியான மின்னஞ்சல் முகவரியைப் பயன்படுத்த வேண்டும். - B2B சோதனை ஆர்டர்களைச் செய்ய, சோதனை ஆர்டரை வழங்குவதற்கு முன்பு நீங்கள் வாடிக்கையாளர் கணக்குகளைச் செயல்படுத்தி, குறைந்தபட்சம் ஒரு நிறுவனத்தின் இருப்பிடத்துடன் ஒரு சோதனை நிறுவனத்தை உருவாக்க வேண்டும். சோதனை நிறுவனத்தில், B2B வாடிக்கையாளராக உள்நுழைய நீங்கள் பயன்படுத்தக்கூடிய வாடிக்கையாளர் சுயவிவரத்தை உருவாக்கவும்.
கட்டணங்கள், வரிகள் மற்றும் கட்டணக் கேட்பு
- நீங்கள் பயன்படுத்தும் கட்டண வழங்குநரிடமிருந்து உங்களுக்குக் கட்டணங்கள் விதிக்கப்படலாம். நீங்கள் பணத்தைத் திரும்பப்பெறும்போது, சில கட்டண வழங்குநரின் கட்டணங்கள் மற்றும் கிரெடிட் கார்டு மூன்றாம் தரப்பு பரிவர்த்தனைக் கட்டணங்கள் உங்களுக்குத் திருப்பியளிக்கப்படாது.
- உங்கள் கட்டண வழங்குநர் ஆர்டர்களைக் கேட்கும்போது மட்டுமே செயலாக்கக் கட்டணங்களை வசூலித்தால், உங்களின் சோதனை ஆர்டரைச் செய்வதற்கு முன்பு மேனுவல் பேமெண்ட் கேட்பைச் செயல்படுத்துவதைக் கருத்தில் கொள்ளவும், அதன்பின்னர் செயலாக்கக் கட்டணங்களைத் தவிர்க்க உங்கள் ஆர்டரில் உள்ள கட்டணத்தைக் கேட்க வேண்டாம். கட்டணக் கேட்புக்கான அங்கீகாரத்தை ரத்துசெய்து, நிதியை வெளியிட, உங்கள் Shopify நிர்வாகியில் ஆர்டரை ரத்துசெய்ய வேண்டும். இல்லையெனில், கட்டண அங்கீகாரம் தானாகக் காலாவதியாகும் வரை நீங்கள் காத்திருக்க வேண்டும், உங்கள் கட்டண வழங்குநரைப் பொறுத்து இதற்குச் சில நாட்கள் ஆகலாம்.
- செக்அவுட்டின் போது சுங்க வரிகள் மற்றும் இறக்குமதி வரிகளைச் சேகரிக்கும் விருப்பத்தை நீங்கள் செயல்படுத்தியிருந்தால், சோதனை ஆர்டர்கள் (கூட்டாளர் கணக்குகளில் இருந்தாலும்) உட்பட அனைத்து செக்அவுட்களுக்கும் சுங்க வரிகள் மற்றும் இறக்குமதி வரிகளுக்கான பரிவர்த்தனைக் கட்டணங்கள் பொருந்தும். சோதனையின் போது இந்தக் கட்டணங்களைத் தவிர்க்க நீங்கள் விரும்பினால், இந்த அம்சத்தைத் தற்காலிகமாக முடக்குவதைக் கருத்தில் கொள்ளவும்.
நிறைவேற்றம், ஷிப்பிங் மற்றும் ஆர்டர் பதிவுகள்
- ஆர்டர்களைத் தானாகவே நிறைவேற்றும் நிறைவேற்றச் சேவை அல்லது செயலியை நீங்கள் பயன்படுத்தினால், சோதனை ஆர்டர்களை உருவாக்குவதற்கு முன்பு அதை முடக்கவும். நீங்கள் நிறைவேற்றத்தைச் சோதிக்க விரும்பினால், சேவையை மீண்டும் செயல்படுத்துவதற்கு முன்பு நிறைவேற்றம் அல்லது ஆர்டரை ரத்துசெய்யவும்.
- ஷிப்பிங் கூட்டாளர் லேபிளை ஸ்கேன் செய்யாத வரை, சில ஷிப்பிங் லேபிள்களை ரத்துசெய்து உங்களின் வரவிருக்கும் பில்லில் கிரெடிட் செய்துகொள்ளலாம். கிரெடிட் பெறத் தகுதியான ஷிப்பிங் லேபிள்கள் எவை, எப்போது லேபிள்களை ரத்துசெய்ய முடியும் என்பது உட்பட கூடுதல் விவரங்களுக்கு, ஷிப்பிங் லேபிள்களை ரத்துசெய்தல் என்பதைப் பார்க்கவும்.
- சோதனை ஆர்டர்கள் மற்றும் போலியான பரிவர்த்தனைகள் உங்களின் பேஅவுட்கள் அல்லது அறிக்கைகளில் காட்டப்படாது.
- அனைத்துச் சோதனை ஆர்டர்களையும் நீக்கிவிட முடியாது. எடுத்துக்காட்டாக, மூன்றாம் தரப்பு நுழைவாயில் சோதனைப் பயன்முறையில் இருந்தாலும்கூட Shopify Payments அல்லாத பிற கட்டண நுழைவாயில்கள் மூலம் செய்யப்படும் ஆர்டர்கள் சோதனை ஆர்டர்களாகக் கருதப்படாது, அவற்றை நீக்க முடியாது. சோதனைக் கட்டண நுழைவாயில் அல்லது சோதனைப் பயன்முறையில் உள்ள Shopify Payments மூலம் பணம் செலுத்திய சோதனை ஆர்டர்களை நீக்க முடியும். ஆர்டர்களை ரத்துசெய்தல், காப்பகப்படுத்துதல் மற்றும் நீக்குதல் பற்றி மேலும் அறிக.
சோதனைப் பயன்முறையில் உள்ள நுழைவாயில் மூலம் சோதனை ஆர்டரைச் செய்தல்
Shopify-இன் சோதனைக் கட்டண நுழைவாயில், Shopify Payments-இன் சோதனைப் பயன்முறை அல்லது சோதனைப் பயன்முறையில் உள்ள மூன்றாம் தரப்பு கட்டண வழங்குநர் ஆகியவற்றைப் பயன்படுத்தி சோதனை ஆர்டரை நீங்கள் செயலாக்கலாம். உங்கள் கட்டண வழங்குநர்களிடமிருந்து எந்தக் கட்டணமும் இல்லாமல், Shopify Checkout-ஐப் பயன்படுத்திப் பரிவர்த்தனைகளைப் போலியாகக் காட்ட இந்த விருப்பங்கள் உங்களை அனுமதிக்கின்றன. சோதனைப் பயன்முறையில் நுழைவாயிலைப் பயன்படுத்தும்போது, உங்களின் உண்மையான கிரெடிட் கார்டு தகவலுக்குப் பதிலாகச் சோதனைக் கட்டண விவரங்களைப் பயன்படுத்த வேண்டும். கட்டண நுழைவாயிலைச் சோதனைப் பயன்முறையில் செயல்படுத்துவது குறித்து மேலும் அறிக.
படிகள்:
- நீங்கள் சோதிக்க விரும்பும் கட்டண வழங்குநரின் சோதனைப் பயன்முறையை அமைத்துள்ளீர்கள் என்பதை உறுதிசெய்யவும்.
- ஒரு வாடிக்கையாளர் செய்வது போன்றே உங்கள் ஸ்டோரில் இருந்து ஒரு கார்ட்டை உருவாக்கி, அதன்பின்னர் செக்அவுட்டிற்குச் செல்லவும்.
- உங்கள் நுழைவாயிலுக்கான சோதனைக் கட்டண விவரங்களைப் பயன்படுத்தி செக்அவுட்டை நிறைவுசெய்யவும். உங்களிடம் பல கட்டண முறைகள் செயல்பாட்டில் இருந்தால், சோதனைப் பயன்முறையில் உள்ள கட்டணச் செயலியைத் தேர்ந்தெடுத்து, அந்தச் செயலியின் சோதனைக் கட்டண விவரங்களை உங்கள் கட்டணத் தகவலாகப் பயன்படுத்தவும்.
- எல்லாம் திட்டமிட்டபடி வேலை செய்கிறதா என்பதை உறுதிப்படுத்த, உங்கள் Shopify நிர்வாகியில் ஆர்டரைச் சரிபார்க்கவும்.
- உங்கள் சோதனை முடிந்ததும் சோதனைப் பயன்முறையை முடக்கவும்.
உண்மையான பரிவர்த்தனையுடன் ஒரு சோதனை ஆர்டரைச் செய்தல்
உண்மையான கட்டண வழங்குநரைப் பயன்படுத்தி நீங்கள் ஒரு சோதனை ஆர்டரைச் செய்யலாம், பிறகு உடனடியாக அந்த ஆர்டரை ரத்துசெய்து அதற்கான பணத்தைத் திரும்பப்பெறலாம். நீங்கள் பயன்படுத்தும் கட்டண வழங்குநர் உங்களிடம் கட்டணங்களை வசூலிக்கக்கூடும். நீங்கள் பணத்தைத் திரும்பப் பெறும்போது சில கட்டண வழங்குநர் கட்டணங்கள் மற்றும் கிரெடிட் கார்டு மூன்றாம் தரப்புப் பரிவர்த்தனைக் கட்டணங்கள் உங்களுக்குத் திருப்பியளிக்கப்படாது.
படிகள்:
- நீங்கள் சோதிக்க விரும்பும் கட்டண வழங்குநரை அமைத்துள்ளீர்கள் என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளவும்.
- ஒரு வாடிக்கையாளரைப் போல உங்கள் ஸ்டோரிலிருந்து ஒரு பொருளை வாங்கவும், பிறகு உண்மையான கிரெடிட் கார்டு விவரங்களைப் பயன்படுத்தி செக்அவுட்டை நிறைவுசெய்யவும்.
- நீங்கள் மூன்றாம் தரப்பு கட்டண வழங்குநரைப் பயன்படுத்தினால், உங்கள் கட்டண வழங்குநரில் உள்நுழைந்து, பணம் செயலாக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்தவும்.
- உங்களுக்கான பணத்தைத் திரும்பப்பெற, கூடிய விரைவில் ஆர்டரை ரத்துசெய்து பணத்தைத் திரும்பப்பெறுங்கள். உங்கள் ஸ்டோர் அமைந்துள்ள நாட்டில் Shopify Payments கிடைத்தால், வசூலிக்கப்பட்ட மூன்றாம் தரப்புப் பரிவர்த்தனைக் கட்டணங்கள் எதுவும் திரும்ப வழங்கப்படாது.
சோதனை ஆர்டரில் சரிபார்க்க வேண்டியவை
உங்கள் ஆர்டர் ஓட்டத்தைச் சோதிக்கும்போது, உங்கள் ஷிப்பிங் அமைப்புகள், அறிவிப்புகள் மற்றும் நிறைவேற்ற ஓட்டங்கள் எதிர்பார்த்தபடி வேலை செய்கின்றனவா என்பதை உறுதிப்படுத்த, சாத்தியமான அனைத்துக் காட்சிகளையும் நீங்கள் சோதிக்க வேண்டும்.
ஆர்டர்களைச் சோதிக்கும்போது, ஆர்டரை உருவாக்கும்போதும் சோதனை ஆர்டரைச் செய்த பிறகும் வெவ்வேறு பொதுவான ஆர்டர் காட்சிகள் எப்படிக் காண்பிக்கப்படுகின்றன என்பதைக் கவனிக்கவும். இதன்மூலம், உங்கள் ஆன்லைன் ஸ்டோரில் வாடிக்கையாளர்கள் பொருள்களை வாங்கும்போது அவர்களுக்கு எத்தகைய அனுபவம் கிடைக்கும் என்பதை நீங்கள் முழுமையாகப் புரிந்துகொள்ள முடியும், மேலும் வாடிக்கையாளர்களைப் பாதிக்கும் முன் ஏதேனும் சிக்கல்கள் இருந்தால் அவற்றைக் கண்டறியவும் இது உதவும்.
சோதனை ஆர்டரை உருவாக்குதல்
நீங்கள் சோதனை ஆர்டரை உருவாக்கும்போது, பின்வரும் காட்சிகளைக் கருத்தில் கொள்ளவும்:
- உங்கள் ஆர்டரில் ஒரு தள்ளுபடிக் குறியீட்டைச் சேர்க்கவும்.
- ஒரு வாடிக்கையாளர் கணக்கில் உள்நுழைந்திருக்கும்போதும் வெளியேறியிருக்கும்போதும் ஒரு ஆர்டரைச் செய்ய முயலவும்.
- வெவ்வேறு கட்டண முறைகளைச் சோதிக்கவும்.
- நீங்கள் வழங்கும் ஷிப்பிங் கட்டணங்கள் சரியாகக் காண்பிக்கப்படுகின்றனவா என்பதைச் சரிபார்க்கவும்.
- வரி எப்படிக் கணக்கிடப்படுகிறது என்பதில் சிறப்புக் கவனம் செலுத்தி, வெவ்வேறு ஷிப்பிங் முகவரிகளைச் சோதிக்கவும்.
- டெஸ்க்டாப் மற்றும் மொபைல் சாதனங்கள் போன்ற பல சாதனங்களில் சோதனை ஆர்டர்களைச் செய்யவும்.
- தோல்வியடைந்த பரிவர்த்தனையை உருவகப்படுத்தவும்.
உங்கள் சோதனை ஆர்டரைச் செய்த பிறகு
ஒரு ஆர்டரைச் செய்த பிறகு, ஆர்டரின் பின்வரும் பகுதிகளைச் சரிபார்க்கவும்:
- ஆர்டர் அறிவிப்பில் நீங்கள் திருப்தியடைகிறீர்களா என்பதைச் சரிபார்க்கவும். உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து மின்னஞ்சல் வார்ப்புருக்களைத் தனிப்பயனாக்குவது குறித்து மேலும் அறிக.
- அது மேனுவலானதாக இருந்தாலும் அல்லது ஒரு செயலி அல்லது நிறுவன வளத் திட்டமிடல் (ERP) மென்பொருள் மூலமானதாக இருந்தாலும் நிறைவேற்ற ஓட்டத்தைச் சோதிக்கவும்.
- ஆர்டரில் கண்காணிப்புத் தகவலைச் சேர்த்து, ஷிப்பிங் அறிவிப்பைச் சரிபார்க்கவும்.
- பகுதி நிறைவேற்றப்பட்ட ஆர்டரைச் சோதிக்கவும்.
- முழுமையாக அல்லது பகுதியளவாகப் பணத்தைத் திரும்பப்பெற முயலவும்.
- ஆர்டர்கள் > மேலும் செயல்கள் > காப்பகப்படுத்து என்பதிலிருந்து சோதனை ஆர்டர்களைக் காப்பகப்படுத்தவும்.