பதிப்புரிமை மீறல் குறித்துப் புகாரளித்தல் அல்லது பதிப்புரிமை அறிவிப்புக்குப் பதிலளித்தல்

Shopify-இன் பதிப்புரிமைக் கொள்கை, பதிப்புரிமை மீறல் குறித்து எவ்வாறு புகாரளிப்பது மற்றும் பதிப்புரிமை அறிவிப்புக்கு எவ்வாறு பதிலளிப்பது என்பது குறித்த தகவல்களை இந்தப் பக்கத்தில் நீங்கள் காணலாம்.

Shopify, டிஜிட்டல் மில்லினியம் பதிப்புரிமைச் சட்டத்திற்கு (DMCA) இணங்குகிறது. மேலும், கோரப்பட்ட பதிப்புரிமை மீறலுக்கான அறிவிப்பு மற்றும் எதிர் அறிவிப்பின் சட்டச் செயல்முறைகள் உட்பட, DMCA நடைமுறைகளைப் பயன்படுத்திப் பதிப்புரிமை மீறலின் உரிமைகோரல்களுக்குப் பதிலளிக்கிறது:

  • ஒரு ஸ்டோரின் உள்ளடக்கம் தொடர்பாகக் கூறப்படும் பதிப்புரிமை மீறலின் முழுமையான மற்றும் செல்லுபடியாகும் அறிவிப்பைப் பெறுவதாக Shopify நம்பினால், அது பொதுவாகத் தனது தளத்தில் புகாரளிக்கப்பட்ட உள்ளடக்கத்தை அகற்றும். மேலும், பாதிக்கப்பட்ட வணிகருக்கு அவர்களின் Shopify நிர்வாகி வழியாகத் தெரிவிக்கும்.
  • உள்ளடக்கம் தவறுதலாக அகற்றப்பட்டதாக அவர்கள் ஏன் நினைக்கிறார்கள் என்பதை விளக்கி, எதிர் அறிவிப்பை அனுப்ப வணிகருக்கு Shopify ஒரு வாய்ப்பை வழங்கும். எதிர் அறிவிப்பு செல்லுபடியாகும் பட்சத்தில், 10 முதல் 14 வணிக நாட்களுக்குள் அந்த உள்ளடக்கத்தை மீண்டும் இடுகையிட வணிகர் பொதுவாக அனுமதிக்கப்படுவார்.
  • சில சந்தர்ப்பங்களில், புகாரளிக்கப்பட்ட உள்ளடக்கத்தை அகற்றுவதற்கு Shopify மறுக்கலாம். அல்லது அது அகற்றப்பட்டிருந்தால், அந்த உள்ளடக்கத்தை உடனடியாக மீண்டும் இடுகையிட வணிகரை அனுமதிக்கலாம்.
  • ஸ்டோரால் எதிர்கொள்ளப்படாத குற்றச்சாட்டப்பட்ட மீறல் குறித்த பல அறிவிப்புகளைப் பெற்றிருப்பது போன்ற தகுந்த சூழ்நிலைகளில், மீறல் தொடர்ந்து நடப்பதற்காக ஸ்டோர்களை முடிவுறுத்துவதற்கான கொள்கையை Shopify கொண்டுள்ளது. தொடர்ந்து மீறுவதற்காக ஒரு ஸ்டோர் முடிவுறுத்தப்படும்போது, தொடர்ந்து மீறும் அதே நபருக்குச் சொந்தமான அல்லது அவரால் இயக்கப்படும் அனைத்துக் கடைகளும் முடிவுறுத்தலுக்கு உட்படும்.
  • வேண்டுமென்றே அல்லது மோசமாக மீறும் ஒரே ஒரு நிகழ்வுக்காகவும் ஸ்டோர்களை முடக்கும் விருப்புரிமையை Shopify கொண்டுள்ளது.
  • உரிமைகோரப்பட்ட மீறல் அல்லது எதிர் அறிவிப்புகள் குறித்துத் தவறான அல்லது தீய நோக்கத்துடன் கூடிய அறிவிப்புகளைச் சமர்ப்பிப்பது சட்டப்படி தண்டனைக்குரியது. Shopify உட்பட இது போன்ற அறிவிப்புகளால் பாதிக்கப்படுபவர்கள், சேதங்கள் மற்றும் வழக்கறிஞர்களின் கட்டணங்களுக்காக வழக்குத் தொடரலாம்.

Shopify-இன் ஆன்லைன் படிவம், பதிப்புரிமை மீறல் குறித்த அறிவிப்பைச் சமர்ப்பிப்பதற்கான மிகவும் திறமையான வழியாகும். Shopify நடவடிக்கை எடுக்க, அனைத்து அறிவிப்புகளிலும் பின்வரும் தகவல்கள் இருக்க வேண்டும்:

  • உங்களின் சட்டப்பூர்வப் பெயர் மற்றும் தொடர்புத் தகவல்.
  • மீறப்பட்டதாகக் கூறப்படும் அசல் பதிப்புரிமை பெற்ற பணிக்கான நேரடி இணைப்புகள். உங்களிடம் நேரடி இணைப்பு இல்லை என்றால், உங்கள் பணியின் விளக்கத்தை வழங்கலாம்.
  • உங்கள் பதிப்புரிமையை மீறுவதாக நீங்கள் நம்பும் Shopify-இல் உள்ள குறிப்பிட்ட உள்ளடக்கத்திற்கான நேரடி இணைப்புகள். உள்ளடக்கம் இருக்கும் ஒவ்வொரு தனிப்பட்ட பக்கத்தின் பட்டியலும் தேவை. பொதுவான கடை இணைப்பு ஏற்றுக்கொள்ளப்படாது.
  • உங்கள் பதிப்புரிமையை மீறுவதாக நீங்கள் நம்பும் உள்ளடக்கத்தின் விளக்கம், அத்துடன் எந்தெந்தப் படங்கள், வீடியோக்கள், gifகள் மற்றும் உரை போன்று இணைப்பில் அது எங்குத் தோன்றுகிறது என்பது பற்றிய விளக்கம்.
  • கீழ்க்கண்டவற்றின் உறுதிப்படுத்தல்:
    • புகாரளிக்கப்பட்ட முறையில் உள்ளடக்கத்தைப் பயன்படுத்துவது பதிப்புரிமை உரிமையாளர், அவரின் முகவர் அல்லது சட்டத்தால் அங்கீகரிக்கப்படவில்லை என்று நீங்கள் நன்னம்பிக்கை கொண்டிருக்கிறீர்கள்.
    • அறிவிப்பில் உள்ள தகவல்கள் அனைத்தும் துல்லியமானவை.
  • நீங்கள் பதிப்புரிமை உரிமையாளர் அல்லது உரிமையாளரின் சார்பாகச் செயல்பட அங்கீகாரம் பெற்றிருக்கிறீர்கள் என்று பொய்ச் சாட்சியத்தின் அபராதத்தின் கீழான அறிக்கை.
  • உங்கள் நேரடி அல்லது மின்னணு கையொப்பம்.

உங்களால் ஆன்லைன் படிவத்தைப் பயன்படுத்த முடியாவிட்டால், தேவையான தகவல்களுடன் கூடிய அறிவிப்பை Shopify-இன் நியமிக்கப்பட்ட முகவருக்கு இதில் அனுப்பலாம்:

Shopify Trust & Safety
Shopify Inc.
151 O'Connor Street
Ground floor
Ottawa, Ontario
K2P 2L8
Canada
மின்னஞ்சல்: legal@shopify.com

எனது ஸ்டோர்ஃபிரண்டில் உள்ள உள்ளடக்கத்திற்கான பதிப்புரிமை அறிவிப்பைப் பெற்றுள்ளேன். இப்போது என்ன செய்வது?

உங்கள் ஸ்டோரில் உள்ள உள்ளடக்கம் தொடர்பாக, பதிப்புரிமை மீறல் என்று நம்பத்தகுந்த, முழுமையான மற்றும் செல்லுபடியாகும் அறிவிப்பை Shopify பெற்றால், புகாரளிக்கப்பட்ட குறிப்பிட்ட உள்ளடக்கம் எது மற்றும் அது எப்போது அகற்றப்படும் என்பதைத் தெரிவிக்கும் அறிவிப்பை உங்கள் Shopify நிர்வாகியில் பெறுவீர்கள். அதற்கு உங்களுக்கு இரண்டு விருப்பங்கள் உள்ளன:

  • நீங்கள் அறிவிப்பைச் சரிபார்த்துவிட்டு, உள்ளடக்கத்தைப் பயன்படுத்துவதற்கான உரிமை உங்களுக்கில்லை என்பதை ஒப்புக்கொண்டால், மேற்கொண்டு எந்த நடவடிக்கையும் தேவையில்லை. Shopify அந்த உள்ளடக்கத்தை அகற்றும், மேலும் பதிப்புரிமைதாரரிடமிருந்து நீங்கள் ஒப்புதல் பெறும் வரை அது ஆஃப்லைனிலேயே இருக்கும்.
  • நீங்கள் அறிவிப்பைச் சரிபார்த்துவிட்டு, தவறுதலாக அல்லது தவறான அடையாளத்தின் விளைவாக உள்ளடக்கம் அகற்றப்பட்டது என்று நம்பினால், நீங்கள் DMCA எதிர் அறிவிப்பைத் தாக்கல் செய்யலாம்.

DMCA எதிர் அறிவிப்பை எவ்வாறு தாக்கல் செய்வது?

உங்கள் Shopify நிர்வாகியில் உள்ள படிவத்தின் மூலம் எங்களுக்கு நீங்கள் எதிர் அறிவிப்பை அனுப்பலாம். உங்கள் எதிர் அறிவிப்பு பரிசீலிக்கப்பட, பின்வரும் தகவல்கள் அனைத்தையும் கொண்டிருக்க வேண்டும்:

  • எதிர் அறிவிப்பைச் சமர்ப்பிக்கும் நபரின் சட்டப்பூர்வப் பெயர் மற்றும் போதுமான தொடர்புத் தகவல்.
  • அகற்றப்பட்ட உள்ளடக்கத்தின் அடையாளம் மற்றும் உள்ளடக்கம் அகற்றப்படுவதற்கு முன்பு இருந்த அசல் இடம்.
  • உங்கள் முகவரி அமைந்துள்ள நீதித்துறை வட்டாரத்திற்கான ஃபெடரல் மாவட்ட நீதிமன்றத்தின் அதிகார வரம்பிற்கு நீங்கள் சம்மதிக்கிறீர்கள் என்பதற்கான அறிக்கை அல்லது உங்கள் முகவரி அமெரிக்காவிற்கு வெளியே அமைந்திருந்தால், டெலவேர் மாவட்டத்திற்கான ஃபெடரல் மாவட்ட நீதிமன்றத்தின் அதிகார வரம்பிற்கு நீங்கள் சம்மதிக்கிறீர்கள் என்பதற்கான அறிக்கை.
  • பதிப்புரிமை அறிவிப்பைச் சமர்ப்பித்த தரப்பினர் அல்லது அதன் முகவரிடமிருந்து செயல்முறைச் சேவையை நீங்கள் ஏற்பீர்கள் என்பதற்கான அறிக்கை.
  • தவறு அல்லது தவறான அடையாளம் காரணமாக உள்ளடக்கம் அகற்றப்பட்டது என்று நீங்கள் நல்லெண்ணத்தில் நம்புகிறீர்கள் என்பதற்கான பொய்ச்சத்திய தண்டனைக்குட்பட்ட ஓர் அறிக்கை.
  • உங்கள் நேரடி அல்லது மின்னணு கையொப்பம்.

உங்களால் ஆன்லைன் படிவத்தைப் பயன்படுத்த முடியாவிட்டால், தேவையான தகவல்களுடன் கூடிய எதிர் அறிவிப்பை Shopify இன் நியமிக்கப்பட்ட முகவருக்கு இந்த முகவரியில் அனுப்பலாம்:

Shopify Trust & Safety
Shopify Inc.
151 O'Connor Street
Ground floor
Ottawa, Ontario
K2P 2L8
Canada
மின்னஞ்சல்: legal@shopify.com

DMCA எதிர் அறிவிப்பைத் தாக்கல் செய்த பிறகு என்ன நடக்கும்?

செல்லுபடியாகும் எதிர் அறிவிப்பை நீங்கள் சமர்ப்பிக்கும்போது, உங்கள் Shopify கணக்குப் பதிவிலிருந்து புகாரை அகற்றிவிட்டு, பதிப்புரிமை அறிவிப்பைச் சமர்ப்பித்த தரப்பினருக்கு உங்கள் எதிர் அறிவிப்பின் நகலை அனுப்புவோம். அவர்கள் உங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து, 10-14 வணிக நாட்களுக்குள் அந்த நடவடிக்கை குறித்த அறிவிப்பை எங்களுக்கு அனுப்பினால், உள்ளடக்கம் அகற்றப்பட்ட நிலையிலேயே இருக்கலாம். அந்த காலக்கட்டத்திற்குள் சட்ட நடவடிக்கை குறித்த அறிவிப்பை நாங்கள் பெறவில்லையெனில், நாங்கள் உங்களுக்குத் தெரிவிப்போம்; அதன் பிறகு சிக்கலுக்குரிய உள்ளடக்கம் மீண்டும் இடுகையிடப்படலாம்.