ஒப்புதலின்றிப் பகிரப்படும் அந்தரங்கப் படங்கள் குறித்துப் புகாரளித்தல் அல்லது அகற்றுதல் தொடர்பான அறிவிப்புக்குப் பதிலளித்தல்
ஒப்புதலின்றிப் பகிரப்படும் அந்தரங்கப் படங்கள் (NCII) தொடர்பான Shopify இன் கொள்கை, அகற்றுவதற்கான கோரிக்கையைச் சமர்ப்பிக்கும் முறை மற்றும் உங்கள் ஸ்டோரிலிருந்து உள்ளடக்கம் அகற்றப்பட்டால் பதிலளிக்கும் முறை பற்றிய தகவல்களை இந்தப் பக்கத்தில் நீங்கள் கண்டறியலாம்.
இப்பக்கத்தில்
NCII மீது Shopify நடவடிக்கை எடுக்கும் விதம்
பொருந்தக்கூடிய சட்டத்திற்கு இணங்க, ஸ்டோர்கள் மற்றும் Shop உள்ளிட்ட தனது பிளாட்ஃபார்மில் ஒப்புதலின்றிப் பகிரப்படும் அந்தரங்கப் படங்களை (NCII) Shopify அனுமதிக்காது. NCII என்பது அதில் இடம்பெற்றுள்ள நபரின் ஒப்புதல் இல்லாமல் பகிரப்படும் நிர்வாண அல்லது பாலியல் சார்ந்த படங்களாகும். இதில் பின்வருவன அடங்கும்:
- உண்மையான புகைப்படங்கள் அல்லது வீடியோக்கள்
- ஓர் உண்மையான அந்தரங்கப் படம் இல்லை என்றாலும், அடையாளம் காணக்கூடிய ஒருவரைக் சித்தரிக்கும் டீப்ஃபேக்குகள் போன்ற AI மூலம் உருவாக்கப்பட்ட அல்லது டிஜிட்டல் முறையில் மாற்றப்பட்ட உள்ளடக்கம்
அந்த உள்ளடக்கம் NCII என Shopify தீர்மானித்தால், அது அகற்றப்படும்.
NCII குறித்துப் புகாரளித்தல்
ஸ்டோரிலோ Shop இலோ NCII ஐ நீங்கள் கண்டால், அதனை அகற்றுவதற்கான கோரிக்கையை நீங்கள் Shopify இடம் சமர்ப்பிக்கலாம்.
யாரெல்லாம் புகாரளிக்கலாம்
கீழ்க்காணும் சூழ்நிலைகளில் NCII அகற்றுதல் கோரிக்கையை நீங்கள் சமர்ப்பிக்கலாம்:
- உள்ளடக்கத்தில் இடம்பெற்றுள்ள நபர் நீங்கள், அல்லது
- உள்ளடக்கத்தில் இடம்பெற்றுள்ள நபர் சார்பாகச் செயல்பட உங்களுக்கு அதிகாரம் உள்ளது
புகாரைச் சமர்ப்பிக்கும் முறை
உங்கள் புகாரைச் சமர்ப்பிக்கும் முன், அந்த உள்ளடக்கம் காட்டப்படும் ஸ்டோர் பக்கம் அல்லது Shop பட்டியலின் URL உங்களுக்குத் தேவை. புகாரைச் சமர்ப்பிக்க, ஆன்லைனில் உள்ள ஒப்புதலின்றிப் பகிரப்படும் அந்தரங்கப் படங்கள் குறித்த புகார் படிவத்தைப் பயன்படுத்தவும்.
நீங்கள் புகாரைச் சமர்ப்பித்த பிறகு என்ன நடக்கும்
NCII புகார்களுக்கு Shopify முன்னுரிமை அளித்து அவற்றை மதிப்பாய்வு செய்யும். கூடுதல் தகவல்களைக் கோருவதற்காக Shopify உங்களைத் தொடர்புகொள்ளக்கூடும். அந்த உள்ளடக்கம் NCII எனத் தீர்மானிக்கப்பட்டால், அது அகற்றப்படும்.
NCII அகற்றுதல் அறிவிப்புக்குப் பதிலளித்தல்
NCII புகார் காரணமாக உங்கள் ஸ்டோரிலிருந்து Shopify உள்ளடக்கத்தை அகற்றினால், நீங்கள் அந்த அறிவிப்பை மதிப்பாய்வு செய்யலாம் அல்லது அந்த முடிவை எதிர்த்து மேல்முறையீடு செய்யலாம்.
எனது ஸ்டோரிலிருந்து உள்ளடக்கம் அகற்றப்பட்டதாக எனக்கு ஓர் அறிவிப்பு வந்துள்ளது. இனி என்ன செய்வது?
NCII புகாருக்குப் பதிலளிக்கும் விதமாக உங்கள் ஸ்டோரிலிருந்து Shopify உள்ளடக்கத்தை அகற்றினால், எது அகற்றப்பட்டது, அதற்கான காரணம் என்ன என்பதை விளக்கி உங்கள் Shopify நிர்வாகியிலும் மின்னஞ்சலிலும் ஓர் அறிவிப்பு வரும். அதன் பிறகு உங்களிடம் இரண்டு விருப்பங்கள் உள்ளன:
- அறிவிப்பை மதிப்பாய்வு செய்து, அந்த உள்ளடக்கம் உங்கள் ஸ்டோரில் இருந்திருக்கக் கூடாது என்பதை நீங்கள் ஏற்றுக்கொண்டால், வேறு எந்தச் செயலும் தேவையில்லை.
- உள்ளடக்கம் தவறுதலாக அகற்றப்பட்டுவிட்டதாக நீங்கள் கருதினால், அந்த முடிவை எதிர்த்து நீங்கள் மேல்முறையீடு செய்யலாம்.
அகற்றும் முடிவை எதிர்த்து நான் எவ்வாறு மேல்முறையீடு செய்வது?
மேல்முறையீடு செய்ய, உங்கள் Shopify நிர்வாகியிலோ மின்னஞ்சலிலோ நீங்கள் பெற்ற அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள வழிமுறைகளைப் பின்பற்றவும். விதிமுறை மீறல்களுக்குத் தீர்வு காண்பது குறித்து மேலும் அறிக.