நுகர்வோர் பாதுகாப்புச் சட்டங்கள்
Shopify மூலம் நீங்கள் தயாரிப்புகளை விற்கும் போது, உங்கள் வணிகத்திற்குப் பொருந்தும் நுகர்வோர் பாதுகாப்புச் சட்டங்கள் மற்றும் கட்டுப்பாடுகளுக்கு இணங்கி நடக்க வேண்டும். இந்தச் சட்டங்கள் பொதுவாக, நீங்கள் எப்படி விளம்பரப்படுத்தலாம், குறைபாடுள்ள தயாரிப்புகளை வாடிக்கையாளர்கள் எப்படித் திருப்பியளிக்கலாம் மற்றும் தயாரிப்புப் பாதுகாப்பு மற்றும் திரும்பப் பெறுதல் தரநிலைகள் போன்ற சிக்கல்களை உள்ளடக்கியிருக்கும்.
உங்கள் தயாரிப்புகளைச் சர்வதேச அளவில் விற்பதன் மூலம், உங்கள் வணிகத்தை வளர்த்து புதிய வாடிக்கையாளர்களைச் சென்றடையலாம். நீங்கள் உலகளவில் விற்பனை செய்யும்போது, உங்கள் ஸ்டோர் அமைந்துள்ள இடத்தின் சட்டங்கள் மற்றும் நீங்கள் ஷிப்பிங் செய்யும் இடங்களின் சட்டங்கள் ஆகிய இரண்டிற்கும் இணங்கி நடக்க வேண்டும். உங்கள் வணிகத்திற்குப் பொருந்தக்கூடிய சில நுகர்வோர் பாதுகாப்புச் சட்டங்கள் பற்றி அறிந்துகொள்ள இந்தப் பக்கத்திலுள்ள தகவல்களைப் பயன்படுத்தவும்.
உங்களுக்கு எந்தெந்த சட்டங்கள் பொருந்தும் என்பது, உங்கள் ஸ்டோர் அமைந்துள்ள பிராந்தியம் மற்றும் நீங்கள் விற்பனை செய்யும் பிராந்தியங்களைப் பொறுத்தது.
உங்கள் Shopify ஸ்டோரைத் தடையின்றிப் பயன்படுத்துவதை உறுதிசெய்ய, நீங்கள் வணிகம் நடத்தும் எந்தவொரு அதிகார வரம்பிலும் நுகர்வோர் பாதுகாப்புச் சட்டங்களைப் பின்பற்றுகிறீர்கள் என்பதை உறுதிசெய்யவும்.
இந்தப் பக்கத்தில்
தொடர்புத் தகவல்
Shopify சேவை விதிமுறைகள் இன் கீழ், உங்கள் ஆன்லைன் ஸ்டோரில் தற்போதைய மற்றும் சரியான தொடர்புத் தகவலை நீங்கள் வழங்க வேண்டும். இந்தத் தகவலில் பின்வருபவை இடம்பெற்றிருக்க வேண்டும்:
- உங்கள் வணிகத்தின் பெயர்
- ஏதேனும் கேள்விகள், புகார்கள் அல்லது உரிமைகோரல்கள் தொடர்பாக உங்களைத் தொடர்புகொள்ள வாடிக்கையாளர்கள் பயன்படுத்தக்கூடிய ஒரு மின்னஞ்சல் முகவரி மற்றும் தொலைபேசி எண்
- உங்கள் வணிகத்தின் நிஜ முகவரி
உங்கள் தொடர்புத் தகவல் அனைவரும் பார்க்கும் வகையிலும் எளிதில் அணுகக்கூடிய வகையிலும் இருக்க வேண்டும்.
உங்கள் ஆன்லைன் ஸ்டோரில் ஸ்டோர் கொள்கைகளைச் சேர்க்கலாம் அல்லது எங்களைத் தொடர்புகொள்ளவும் பக்கத்தைச் சேர்க்கலாம்.
உங்கள் இணையதளத்திற்கான பின்வரும் கொள்கைகளை எளிதாக உருவாக்க, இந்த இலவச Shopify கொள்கை உருவாக்கிக் கருவிகளையும் ஆதாரங்களையும் நீங்கள் பயன்படுத்தலாம்:
ஐரோப்பியப் பொருளாதாரப் பகுதியின் தொடர்புத் தகவல் தேவைகள்
நீங்கள் ஐரோப்பியப் பொருளாதாரப் பகுதியில் உள்ள அல்லது அங்கு ஷிப்பிங் செய்யும் வணிகராக இருந்தால், அல்லது ஐரோப்பியப் பொருளாதாரப் பகுதியில் உள்ள நுகர்வோரை இலக்காகக் கொண்டுள்ள வணிகராக இருந்தால், உங்கள் ஆன்லைன் ஸ்டோரில் உங்கள் நிறுவன எண் மற்றும் மதிப்புக்கூட்டு வரி (VAT) எண்ணைச் சேர்க்க வேண்டியது அவசியமாகும்.
ஐரோப்பியப் பொருளாதாரப் பகுதியிலிருந்து அல்லது பகுதிக்குள் தயாரிப்புகளை விற்பனை செய்வது தொடர்பான பின்வரும் சட்டங்களை மதிப்பாய்வு செய்யவும்:
பணத்தைத் திரும்பப்பெறுதல் கொள்கை
Shopify சேவை விதிமுறைகளின்படி, உங்களது ஆன்லைன் ஸ்டோரில் உள்ள பணத்தைத் திரும்பப்பெறுதல் கொள்கை பற்றி, தற்போதைய, துல்லியமான, அனைவரும் பார்க்கக்கூடிய மற்றும் எளிதில் அணுகக்கூடிய தகவலை நீங்கள் வழங்க வேண்டும்.
உங்கள் பணத்தைத் திரும்பப்பெறுதல் கொள்கையில் பின்வரும் தகவல் இருக்க வேண்டும்:
- தயாரிப்பைத் திருப்பியளிக்க வேண்டிய கால அவகாசம்.
- ரிட்டர்ன் செய்யப்படும் தயாரிப்பை அனுப்ப வேண்டிய முகவரி.
- தயாரிப்பைத் திருப்பியளிப்பதற்கான செலவு மற்றும் அதற்கான தொகையை யார் செலுத்துவது என்ற தகவல்.
- உங்கள் இடத்துடன் ஒப்பிடும்போது வாடிக்கையாளர் வசிக்கும் இடத்தைப் பொறுத்து, பணத்தைத் திரும்பப்பெறுவதற்கான நேரம் எவ்வாறு மாறுபடலாம் என்பது குறித்த தகவல்.
- பணத்தைத் திரும்பப்பெறுவதில் தாமதம் ஏற்பட்டால், வாடிக்கையாளர் உங்களைத் தொடர்புகொள்ளப் பயன்படுத்தக்கூடிய தொடர்புத் தகவல்.
உங்கள் ஆன்லைன் ஸ்டோரில் பணத்தைத் திரும்பப்பெறுதல், தனியுரிமை, சேவை விதிமுறைகள், ஷிப்பிங் அல்லது சட்டப்பூர்வ ஸ்டோர் கொள்கை போன்ற ஸ்டோர் கொள்கைகளைச் சேர்ப்பது குறித்து மேலும் அறிக.
ஐரோப்பியப் பொருளாதாரப் பகுதியின் பணத்தைத் திரும்பப்பெறுதல் கொள்கைக்கான தேவைகள்
நீங்கள் ஐரோப்பியப் பொருளாதாரப் பகுதியில் உள்ள வணிகராக இருந்தால் அல்லது ஐரோப்பியப் பொருளாதாரப் பகுதியில் உள்ள நுகர்வோரை இலக்காகக் கொண்டுள்ள வணிகராக இருந்தால், திரும்பப் பெறுவதற்கான உரிமை மற்றும் பொருட்களின் இணக்கம் உள்ளிட்ட அவர்களின் அடிப்படை உரிமைகள் பற்றிய தகவலை ஐரோப்பியப் பொருளாதாரப் பகுதி நுகர்வோருக்கு உங்களது பணத்தைத் திரும்பப்பெறுதல் கொள்கை வழங்க வேண்டும்.
ஐரோப்பியப் பொருளாதாரப் பகுதியில் உள்ள நுகர்வோருக்குத் தயாரிப்புகளை விற்பனை செய்வது தொடர்பான பின்வரும் சட்டங்களை மதிப்பாய்வு செய்யவும்:
ஆர்டர் நிறைவேற்றம் மற்றும் டெலிவரி
Shopify சேவை விதிமுறைகளின்படி, உங்களது ஸ்டோரில் அனைவரும் பார்க்கக்கூடிய தொடர்புத் தகவல், பணத்தைத் திரும்பப்பெறுதல் கொள்கை மற்றும் ஆர்டர் நிறைவேற்றக் காலவரிசைகள் ஆகியவற்றை நீங்கள் சேர்க்க வேண்டும். உங்கள் வாடிக்கையாளர் கொள்முதலை நிறைவு செய்யும் முன், அவர்களின் ஆர்டர் வந்து சேர எவ்வளவு காலமாகும் என்பது அவர்களுக்குத் தெளிவாகத் தெரிய வேண்டும்.
உங்கள் வாடிக்கையாளர்களுக்குப் பின்வரும் தகவலை நீங்கள் தெரியப்படுத்த வேண்டும்:
- வாடிக்கையாளரின் ஆர்டரில் மாற்றம் அல்லது தாமதம் ஏதேனும் ஏற்பட்டால்.
- நீங்கள் வேறு நாட்டிலிருந்து அவர்களுக்கு ஷிப்பிங் செய்வதால், இறக்குமதி அல்லது சுங்கக் கட்டணங்கள் விதிக்கப்பட்டால்.
ஆர்டர்களை நிறைவேற்ற நீங்கள் டிராப்ஷிப்பிங் அல்லது மற்றொரு மூன்றாம் தரப்புச் சேவையைப் பயன்படுத்தினால், வேறு இடத்திலிருந்து மூன்றாம் தரப்பினரால் தயாரிப்புகள் ஷிப்பிங் செய்யப்படுகின்றன என்பதை உங்கள் வாடிக்கையாளர்களிடம் சொல்ல வேண்டும்.
ஐரோப்பியப் பொருளாதாரப் பகுதியின் ஆர்டர் நிறைவேற்றம் மற்றும் டெலிவரித் தேவைகள்
ஐரோப்பியப் பொருளாதாரப் பகுதியானது ஆர்டர் நிறைவேற்றம், ஷிப்பிங் தகவல் மற்றும் இறக்குமதி அல்லது சுங்கக் கட்டணங்கள் தொடர்பான வெளிப்படுத்துதல் உள்ளிட்டவற்றிற்கான சட்டங்களைக் கொண்டுள்ளது. அதற்கான எடுத்துக்காட்டுகள் பின்வருமாறு:
தயாரிப்புச் செயல்திறன், சந்தைப்படுத்தல் மற்றும் விலை நிர்ணய உரிமைகோரல்கள்
Shopify-இன் சேவை விதிமுறைகளுக்கு, உங்கள் ஸ்டோரில் நீங்கள் விற்கும் தயாரிப்புகள் மற்றும் சேவைகள் பற்றிய உங்கள் உரிமைகோரல்கள் உண்மையானதாக இருக்க வேண்டியது அவசியமாகும். சில அதிகார வரம்புகளில், உங்களது தயாரிப்புகள் பற்றி நீங்கள் செய்யும் சந்தைப்படுத்தல் அல்லது செயல்திறன் உரிமைகோரல்கள் குறித்து கடுமையான தேவைகளைச் சட்டம் விதிக்கக்கூடும்.
தயாரிப்புப் பிரபலம் மற்றும் கிடைக்கும் தன்மை பற்றிய உரிமைகோரல்கள் தெளிவாகவும் துல்லியமாகவும் இருக்க வேண்டும். ஏமாற்றக்கூடிய அல்லது தவறாக வழிநடத்தக்கூடிய சந்தைப்படுத்தலுக்கு, பின்வரும் எடுத்துக்காட்டுகள் பொருந்தும்:
- உண்மையில் அதிகமான உருப்படிகள் கிடைக்கும் நிலையில், "[x] உருப்படிகள் மட்டுமே மீதமுள்ளன" போன்ற குறைந்த சரக்கு இருப்பு குறித்த அறிவிப்புகளைக் காட்டுவது
- உரிமைகோரல் உண்மையாக இல்லாதபோது, "[x] மணிநேரம் மட்டுமே மீதமுள்ளது" என்பது போன்ற கவுண்ட்டவுன் டைமர்களைப் பயன்படுத்துவது
- உரிமைகோரல் உண்மையாக இல்லாதபோது, "இன்று [x] பேர் இந்தத் தயாரிப்பை வாங்கியுள்ளனர்" என்பது போன்ற, குறிப்பிட்ட தயாரிப்பை எத்தனை பேர் வாங்கியுள்ளார்கள் என்ற உரிமைகோரல்களைத் தெரிவிப்பது
ஐரோப்பியப் பொருளாதாரப் பகுதியின் தயாரிப்புச் செயல்திறன், சந்தைப்படுத்தல் மற்றும் விலை நிர்ணய உரிமைகோரல் தேவைகள்
நீங்கள் ஐரோப்பியப் பொருளாதாரப் பகுதியில் உள்ள வணிகராக இருந்தால் அல்லது ஐரோப்பியப் பொருளாதாரப் பகுதியில் உள்ள நுகர்வோரை இலக்காகக் கொண்டுள்ள வணிகராக இருந்தால், பின்வரும் விதிகளைக் கருத்தில் கொள்ளவும்:
- உங்கள் ஆன்லைன் ஸ்டோரின் மூலம் விற்கப்படும் தயாரிப்புகளுக்குக் காட்டப்படும் இறுதி விலைகளில் VAT மற்றும் இறக்குமதிச் சுங்க வரிகளை உங்களது தயாரிப்புச் செயல்திறன், சந்தைப்படுத்தல் மற்றும் விலை நிர்ணய உரிமைகோரல்களில் நீங்கள் சேர்க்க வேண்டும்.
- நீங்கள் தள்ளுபடி அல்லது விலைக் குறைப்பை வழங்கினால், தயாரிப்பின் முந்தைய விலையைத் தெளிவாகக் குறிப்பிட வேண்டும். தவறாக வழிநடத்தும் அல்லது வற்புறுத்தும் சந்தைப்படுத்தல் உரிமைகோரல்களையும் ஐரோப்பியச் சட்டம் தடைசெய்கிறது. European Pricing Indication Directive பற்றி மேலும் அறிக.
ஐரோப்பியப் பொருளாதாரப் பகுதியில் உள்ள நுகர்வோருக்குத் தயாரிப்புகளை விற்பனை செய்வது தொடர்பான பின்வரும் சட்டங்களை மதிப்பாய்வு செய்யவும்:
தயாரிப்பைத் திரும்பப் பெறுதல்
திரும்பப் பெறப்பட்ட தயாரிப்புகள் குறித்து பல நாடுகள் விதிகளைக் கொண்டுள்ளன. வாடிக்கையாளரின் உடல்நலம் மற்றும் பாதுகாப்பிற்கு ஆபத்தை ஏற்படுத்துவதாகக் கண்டறியப்படும்போது, தயாரிப்புகள் பொதுவாகத் திரும்பப் பெறப்படுகின்றன. நீங்கள் வணிகம் நடத்தும் எந்தவொரு அதிகார வரம்பிலும், தயாரிப்பைத் திரும்பப் பெறுதல் குறித்த சட்டப்பூர்வத் தேவைகளைப் பின்பற்றுவதற்கு நீங்களே பொறுப்பாவீர்கள். உங்களது ஸ்டோர் உள்ள இடம் மற்றும் வாடிக்கையாளர்கள் இருக்கும் இடங்களைப் பொறுத்து, நீங்கள் பின்வரும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டியிருக்கலாம்:
- நீங்கள் விற்கிற அல்லது கடந்த காலத்தில் விற்ற தயாரிப்பு திரும்பப் பெறப்பட்டால், திரும்பப் பெறப்பட்ட அந்தத் தயாரிப்புகளை உங்களது ஆன்லைன் ஸ்டோரிலிருந்து உடனடியாக அகற்றிவிட வேண்டும்.
- சட்டத்தின்படி தேவைப்பட்டால், திரும்பப் பெறப்பட்ட தயாரிப்பை வாங்கிய வாடிக்கையாளர்களுக்கு அந்தச் சட்டங்களின்படி நீங்கள் அறிவிக்க வேண்டும்.
தயாரிப்பைத் திரும்பப் பெறுவது குறித்த குறிப்பிட்ட தகவலை பின்வரும் அரசாங்க இணையதளங்கள் போன்றவற்றின் மூலமாக ஆன்லைனில் நீங்கள் கண்டறியலாம்:
- ஆசியா-பசிபிக்: The Association of Southeast Asian Nations (ASEAN) தயாரிப்பு குறித்த விழிப்பூட்டல்கள்
- ஐரோப்பிய ஒன்றியம்: அபாயகரமான தயாரிப்புகளுக்கான ஐரோப்பிய விரைவு எச்சரிக்கை அமைப்பு (RAPEX)
- OECD: தயாரிப்புத் திரும்பப் பெறுதல் குறித்த The Organisation for Economic Co-operation and Development (OECD)-இன் உலகளாவிய போர்ட்டல்
- அமெரிக்கா: Recalls.gov
நுகர்வோர் பாதுகாப்பு தொடர்பான ஆதாரங்கள்
அதிகார வரம்பில் உள்ள நுகர்வோர் விழிப்புணர்வு வழிகாட்டுதல்கள் பற்றிய குறிப்பிட்ட தகவல்களை ஆன்லைனில் கண்டறியலாம். அவற்றுக்கான எடுத்துக்காட்டுகள் பின்வருமாறு:
ஐரோப்பியப் பொருளாதாரப் பகுதி (EEA) சட்டம் எப்போது பொருந்தும்
நீங்கள் ஐரோப்பியப் பொருளாதாரப் பகுதிக்கு (EEA) வெளியே அமைந்திருந்து, ஆனால் EEA-இல் உள்ள வாடிக்கையாளர்களை இலக்காகக் கொண்டால், இந்தச் சட்டங்கள் உங்களுக்குப் பொருந்தக்கூடும். உதாரணமாக, EEA-இல் உள்ள ஒரு நாட்டில் உள்ளூர் மீடியாவைப் பயன்படுத்தி விளம்பரம் செய்தாலோ, ஆங்கிலம் தவிர பிற உள்ளூர் EEA மொழியைப் பயன்படுத்தினாலோ அல்லது EEA-ஐ அடிப்படையாகக் கொண்ட டொமைன் பெயருடன் ஒரு இணையதளத்தை உருவாக்கினாலோ இந்தச் சட்டங்கள் உங்களுக்குப் பொருந்தக்கூடும்.