டிராப்ஷிப்பிங்

Shopify மூலம் நீங்கள் தயாரிப்புகளை டிராப்ஷிப் செய்யும்போது, நீங்களே அந்தத் தயாரிப்புகளின் சில்லறை விற்பனையாளர் எனக்கருதி, தயாரிப்புகளின் விற்பனைக்குப் பொருந்தும் சட்டங்கள் மற்றும் விதிமுறைகளுக்கு நீங்கள் இணங்க வேண்டும். இந்தச் சட்டங்கள் மற்றும் விதிமுறைகள் உங்கள் ஸ்டோர் அமைந்துள்ள பிராந்தியம் மற்றும் நீங்கள் விற்பனை செய்யும் பிராந்தியங்களைப் பொறுத்து மாறுபடும். உங்கள் வணிகத்திற்குப் பொருந்தக்கூடிய கொள்கைகள், சட்டங்கள் மற்றும் விதிமுறைகளைப் பற்றித் தெரிந்துகொள்ள, இந்தப் பக்கத்தில் உள்ள தகவல்களைப் பயன்படுத்தவும்.

டிராப்ஷிப்பிங் என்றால் என்ன?

டிராப்ஷிப்பிங் என்பது ஒரு நிறைவேற்ற முறையாகும், இதில் நீங்கள் விற்கும் தயாரிப்புகளைக் கையில் இருப்பில் வைத்திருக்க மாட்டீர்கள். மாறாக, ஒரு மூன்றாம் தரப்பு சப்ளையரிடமிருந்து நீங்கள் உருப்படியை வாங்கி, அதை நேரடியாக வாடிக்கையாளருக்கு அனுப்புவீர்கள். இதன் விளைவாக, தனிப்பட்ட பரிவர்த்தனைகளின்போது நீங்கள் தயாரிப்பை நேரடியாகக் கையாள மாட்டீர்கள். டிராப்ஷிப்பிங் குறித்து மேலும் அறிக.

தயாரிப்பின் பாதுகாப்பு

நீங்கள் தயாரிப்புகளை டிராப்ஷிப்பிங் செய்கிறீர்கள் என்றால், பாதுகாப்பான தயாரிப்புகளை விற்பனைக்கு வழங்குவதை உறுதிசெய்வது உங்கள் பொறுப்பாகும். ஒரு தயாரிப்பை டிராப்ஷிப்பிங் செய்யும்முன், பின்வரும் பாதுகாப்புச் சரிபார்ப்புகளை நிறைவுசெய்யவும்:

  • அனைத்துத் தயாரிப்புப் பாதுகாப்புச் சட்டங்களையும் விதிமுறைகளையும் மதிப்பாய்வு செய்யவும்.
  • எந்தவொரு அதிகார வரம்பிலும் நீங்கள் அந்தத் தயாரிப்புகளை விற்க விரும்பினால், உங்கள் தயாரிப்புகளுக்கு உரிய உரிமங்கள், சான்றிதழ்கள், குறியீடுகள், பாதுகாப்பு எச்சரிக்கைகள் அல்லது வழிகாட்டுதல்கள் போன்ற பிற ஆவணங்கள் இருப்பதை உறுதிசெய்துகொள்ளவும்.
  • அனைத்துப் பாதுகாப்பு எச்சரிக்கைகளும் வழிகாட்டுதல்களும் தயாரிப்பு விற்கப்படும் அதிகார வரம்பின் அதிகாரப்பூர்வ மொழியில் எழுதப்பட்டுள்ளனவா என்பதை உறுதிப்படுத்தவும்.

ஒரு அதிகார வரம்பில் உங்களிடம் தகுந்த உரிமமோ சான்றிதழ்களோ இருந்தாலும், இந்த உரிமங்களோ அல்லது சான்றிதழ்களோ பிற அதிகார வரம்புகளுக்குப் பொருந்தாமல் போகலாம். தயாரிப்புப் பாதுகாப்புச் சட்டங்கள் அதிகார வரம்பைப் பொறுத்து மாறுபடும் என்பதால், புதிய சந்தையில் தயாரிப்புகளை விற்பனை செய்வதற்கு முன்பு நீங்கள் ஒரு வழக்கறிஞரை அணுக வேண்டும்.

நீங்கள் அமெரிக்காவில் தயாரிப்புகளை விற்கும் வணிகராக இருந்தால், உங்கள் தயாரிப்புகளுக்குப் பொருந்தக்கூடிய முக்கியமான பாதுகாப்புத் தேவைகளைக் கண்டறிய நுகர்வோர் தயாரிப்புப் பாதுகாப்பு ஆணையத்தின் சிறு வணிக ஆதாரங்கள் மற்றும் ஒழுங்குமுறை ரோபோட் (Regulatory Robot) ஆகியவற்றை மதிப்பாய்வு செய்ய வேண்டும்.

நீங்கள் ஐரோப்பியப் பொருளாதாரப் பகுதியில் (EEA) அமைந்திருந்தாலோ அல்லது EEA-இல் உள்ள வாடிக்கையாளர்களை இலக்காகக் கொண்டிருந்தாலோ, ஐரோப்பியச் சட்டங்கள் உங்களுக்குப் பொருந்தும். உங்கள் தயாரிப்புகளுக்குப் பொருந்தக்கூடிய முக்கியமான பாதுகாப்புத் தேவைகளைக் கண்டறிய உதவும் பின்வரும் ஆதாரங்களை நீங்கள் மதிப்பாய்வு செய்ய வேண்டும்:

நீங்கள் EEA-க்கு வெளியே அமைந்திருந்து, ஆனால் EEA-இல் உள்ள வாடிக்கையாளர்களை இலக்காகக் கொண்டால், இந்தச் சட்டங்கள் உங்களுக்குப் பொருந்தக்கூடும். உதாரணமாக, ஐரோப்பிய நாட்டில் உள்ளூர் மீடியாவைப் பயன்படுத்தி விளம்பரம் செய்தாலோ, ஆங்கிலம் தவிர பிற உள்ளூர் EEA மொழியைப் பயன்படுத்தினாலோ அல்லது EEA-ஐ அடிப்படையாகக் கொண்ட டொமைன் பெயருடன் ஒரு இணையதளத்தை உருவாக்கினாலோ இந்தச் சட்டங்கள் உங்களுக்குப் பொருந்தக்கூடும்.

ஐரோப்பியப் பொருளாதாரப் பகுதி (EEA) மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துடனான உறவுகள் குறித்து மேலும் அறிக.

தயாரிப்புப் பொறுப்பு

டிராப்ஷிப்பிங் நிறைவேற்ற முறையைப் பயன்படுத்தும்போது நீங்கள் ஒரு தயாரிப்பை நேரடியாகக் கையாளாவிட்டாலும், அந்தத் தயாரிப்புகள் அனுப்பப்படுகிற, நீங்கள் விற்பனை செய்யும் எந்தவொரு அதிகார வரம்பிலும் பாதுகாப்புத் தரங்களைப் பூர்த்தி செய்யாத தயாரிப்புகளுக்கு நீங்கள் பொறுப்பேற்கக்கூடும்.

டிராப்ஷிப்பிங் நிறைவேற்ற முறையைப் பயன்படுத்துவதற்கு முன்பு, புகழ்பெற்ற ஒரு சப்ளையரைத் தேர்வுசெய்துள்ளீர்களா என்பதை உறுதிசெய்யவும். புகழ்பெற்ற சப்ளையரைத் தேர்வுசெய்ய நீங்கள் பின்வருவனவற்றைச் செய்யலாம்:

  • சாத்தியமான சப்ளையரின் மதிப்புரைகளைப் படிப்பது
  • சப்ளையரின் கொள்கைகளைப் படிப்பது
  • சப்ளையரிடம் அவர்களின் வணிகத்தைப் பற்றிப் பேசுவது
  • தயாரிப்புகளின் தரத்தை மதிப்பிடுவதற்குச் சப்ளையரிடமிருந்து அவற்றைக் கொள்முதல் செய்வது

டிராப்ஷிப்பிங் நிறைவேற்ற முறையைப் பயன்படுத்தி ஒரு தயாரிப்பை விற்பதற்கு முன்பு, தயாரிப்புப் பாதுகாப்பு, இணக்கச் சட்டங்கள் ஆகியவற்றை மதிப்பாய்வு செய்து, அந்தத் தயாரிப்புகளை நீங்கள் விற்க விரும்பும் எந்தவொரு அதிகார வரம்பிலும் தயாரிப்புத் திரும்பப்பெறுதல்கள் உள்ளனவா என்பதைச் சரிபார்க்கவும். டிராப்ஷிப்பிங் நிறைவேற்ற முறையைப் பயன்படுத்தும்போது சப்ளையர்களைத் தேர்ந்தெடுப்பது மற்றும் விற்பனை செய்வதற்கான தயாரிப்புகளைத் தேர்ந்தெடுப்பது குறித்து மேலும் அறிக.

தயாரிப்புத் திரும்பப்பெறுதல்கள்

தயாரிப்பைத் திரும்பப்பெறுதல் என்பது குறைபாடுள்ள அல்லது பாதுகாப்பற்ற தயாரிப்புகளை வாடிக்கையாளர்களிடமிருந்து திரும்பப்பெறுவதாகும். உற்பத்திக் குறைபாட்டினால் ஏற்படும் பாதுகாப்புக் கவலைகளின் காரணமாகவே திரும்பப்பெறுதல் பெரும்பாலும் நிகழ்கிறது. ஒரு நிறுவனம் தங்கள் தயாரிப்பைப் பற்றி அரசாங்கத்திடம் புகாரளிக்கும்போதோ அல்லது வாடிக்கையாளர்கள் அல்லது பிற ஆதாரங்களில் இருந்து அரசாங்கத்திற்குப் புகார்கள் கிடைக்கும்போதோ, தயாரிப்பைத் திரும்பப்பெறுதல் நிகழலாம்.

நீங்கள் வணிகம் நடத்தும் எந்தவொரு அதிகார வரம்பிலும் திரும்பப்பெறுதல்கள் தொடர்பான சட்டப்பூர்வத் தேவைகளைக் கடைப்பிடிக்க வேண்டியது உங்களின் பொறுப்பாகும்.

நீங்கள் விற்பனை செய்த ஒரு தயாரிப்பு பின்னர் திரும்பப்பெறப்பட்டால், உங்கள் ஆன்லைன் ஸ்டோரில் இருந்து அந்தத் தயாரிப்பை அகற்றுவதற்கு நீங்களே பொறுப்பாவீர்கள். சட்டப்படி தேவைப்பட்டால், அந்தத் தயாரிப்பை வாங்கிய வாடிக்கையாளர்களுக்குத் தெரிவித்து, அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து அவர்களுக்கு நீங்கள் அறிவுறுத்த வேண்டியிருக்கலாம்.

நீங்கள் விற்கும் ஒரு தயாரிப்பில் ஆரோக்கியம் அல்லது பாதுகாப்பு தொடர்பான சாத்தியமான சிக்கல் இருப்பதை நீங்கள் அறிந்தால், அந்தத் தகவலை அரசாங்கத்திடம் தெரிவிக்கும் சட்டப்பூர்வமான கடமை உங்களுக்கு உள்ளதா என்பது குறித்து நீங்கள் ஒரு வழக்கறிஞரை அணுகி ஆலோசனை பெற வேண்டும். அப்படித் தெரிவித்தால், அரசாங்கம் உங்கள் அறிக்கையை மதிப்பீடு செய்து, தயாரிப்பைத் திரும்பப்பெறுவது சரியானதா என்பதைத் தீர்மானிக்கும்.

எதிர்காலத்தில் தயாரிப்புத் திரும்பப்பெறுதலை நீங்கள் மேற்கொள்ள வேண்டியிருக்கலாம் என நினைத்தால், திரும்பப்பெறுதல் திட்டத்தைக் கொண்டிருக்க வேண்டுமா என்பதை நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டும். நன்கு திட்டமிடப்பட்டுச் செயல்படுத்தப்படும் திரும்பப்பெறுதல் திட்டம் உங்கள் வாடிக்கையாளர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளைத் தடுத்து உங்கள் வணிகத்தின் மீதான எதிர்மறையான தாக்கத்தைக் குறைக்கலாம்.

ஷிப்பிங் மற்றும் செயலாக்கக் காலவரையறைகள்

Shopifyஇன் சேவை விதிமுறைகளின்படி, பொதுமக்களால் அணுகக்கூடிய செயலாக்க மற்றும் ஷிப்பிங் தகவலை உங்கள் ஆன்லைன் ஸ்டோரில் நீங்கள் சேர்க்க வேண்டும். வாடிக்கையாளர் கொள்முதலை நிறைவுசெய்யும்முன், ஷிப்பிங் நேரங்கள், கூடுதல் கட்டணங்கள் மற்றும் இறக்குமதி அல்லது சுங்கக் கட்டணங்கள் உள்ளிட்ட ஆர்டர் விவரங்களை நீங்கள் தெரிவிக்க வேண்டும். வாடிக்கையாளர் ஆர்டர் செய்த பிறகு, அவர்களின் ஆர்டரில் ஏதேனும் தாமதமோ மாற்றமோ ஏற்பட்டால், அவர்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும்.

டிராப்ஷிப்பிங் நிறைவேற்ற முறையை நீங்கள் பயன்படுத்தினால், தயாரிப்புகள் ஒரு மூன்றாம் தரப்பினரால் அனுப்பப்படும் என்பதையும் அதன் ஷிப்பிங் தோற்றத்தையும் வாடிக்கையாளர்களுக்குத் தெரிவிப்பது ஒரு நல்ல நடைமுறையாகும். நீங்கள் ஒரு டிராப்ஷிப்பிங் சப்ளையரைத் தேர்ந்தெடுக்கும்முன், ஒரு ஆர்டரைச் செயலாக்கவும் அனுப்பவும் அவர்களுக்கு எவ்வளவு நேரம் ஆகிறது என்பதையும், தயாரிப்புகள் வந்தடைய எவ்வளவு நேரம் ஆகிறது என்பதையும் தீர்மானிக்க, அந்தச் சப்ளையரிடமிருந்து தயாரிப்புகளை ஆர்டர் செய்வது ஒரு நல்ல நடைமுறையாகும்.

ஐரோப்பியப் பொருளாதாரப் பகுதியில் ஆர்டர் நிறைவேற்றம் மற்றும் டெலிவரித் தேவைகள்

ஐரோப்பியப் பொருளாதாரப் பகுதியில் (EEA) ஆர்டர் நிறைவேற்றம், ஷிப்பிங் தகவல் மற்றும் இறக்குமதி அல்லது சுங்கக் கட்டணங்களை வெளிப்படுத்துவது தொடர்பான சட்டங்கள் உள்ளன:

EEA-இல் ஆர்டர் நிறைவேற்றம் தொடர்பான சட்டங்களைப் பற்றி மேலும் அறியப் பின்வரும் ஆதாரங்களைச் சரிபார்க்கவும்:

நீங்கள் EEA-க்கு வெளியே அமைந்திருந்து, ஆனால் EEA-இல் உள்ள வாடிக்கையாளர்களை இலக்காகக் கொண்டால், இந்தச் சட்டங்கள் உங்களுக்குப் பொருந்தக்கூடும். உதாரணமாக, ஐரோப்பிய நாட்டில் உள்ளூர் மீடியாவைப் பயன்படுத்தி விளம்பரம் செய்தாலோ, ஆங்கிலம் தவிர பிற உள்ளூர் EEA மொழியைப் பயன்படுத்தினாலோ அல்லது EEA-ஐ அடிப்படையாகக் கொண்ட டொமைன் பெயருடன் ஒரு இணையதளத்தை உருவாக்கினாலோ இந்தச் சட்டங்கள் உங்களுக்குப் பொருந்தக்கூடும்.

பணத்தைத் திரும்பப்பெறுதல்களைச் செயலாக்குதல்

Shopifyஇன் சேவை விதிமுறைகளின்படி, உங்கள் ஆன்லைன் ஸ்டோருக்குப் பொதுமக்களால் அணுகக்கூடியதும், தற்போதையதும் மற்றும் துல்லியமானதுமான பணத்தைத் திரும்பப்பெறுதல் கொள்கையை நீங்கள் சேர்க்க வேண்டும். பின்வரும் தகவல்களைச் சேர்ப்பது ஒரு நல்ல நடைமுறையாகும்:

  • ஒரு தயாரிப்பைத் திருப்பியளிக்க வேண்டிய காலவரம்பு
  • ரிட்டர்னை அனுப்ப வேண்டிய முகவரி
  • ஒரு தயாரிப்பைத் திருப்பியளிப்பதற்கான செலவு மற்றும் ரிட்டர்னுக்கான கட்டணத்தை யார் செலுத்துவார்கள்
  • பணத்தைத் திரும்பப் பெறுவதற்கு ஆகும் நேரம், உங்கள் இருப்பிடத்தைப் பொறுத்து வாடிக்கையாளர் எங்கு வசிக்கிறார் என்பதைப் பொறுத்தது என்ற தகவல்
  • உரிய நேரத்தில் பணத்தைத் திரும்பப் பெறவில்லையெனில், உங்களைத் தொடர்புகொள்ள வாடிக்கையாளர் பயன்படுத்தக்கூடிய தொடர்புத் தகவல்.

நீங்கள் ஐரோப்பியப் பொருளாதாரப் பகுதியில் (EEA) அமைந்திருந்தால் அல்லது EEA இல் உள்ள வாடிக்கையாளர்களை இலக்காகக் கொண்டால், ஐரோப்பியச் சட்டங்கள் உங்களுக்குப் பொருந்தும். உங்கள் பணத்தைத் திரும்பப்பெறுதல் கொள்கையில், EEA-இல் உள்ள வாடிக்கையாளர்களுக்குத் திரும்பப் பெறுதல் மற்றும் பொருட்களின் இணக்கத்துக்கான உரிமை உள்ளிட்ட அவர்களின் அடிப்படை உரிமைகள் பற்றிய தகவலையும் நீங்கள் வழங்க வேண்டும். எடுத்துக்காட்டாக, EEA-இல் உள்ள வாடிக்கையாளர்களுக்கு வழக்கமாக, ஆன்லைன் தயாரிப்பு டெலிவரி செய்யப்பட்ட பிறகு 14 நாட்களுக்குள் அத்தயாரிப்பைத் திருப்பியளித்து, முழுப் பணத்தையும் திரும்பப்பெறுவதற்கான அவகாசம் உள்ளது.

EEA வாடிக்கையாளர் உரிமைகளைப் பற்றி மேலும் அறியப் பின்வரும் ஆதாரங்களைச் சரிபார்க்கவும்:

பணத்தைத் திரும்பப்பெறுதல் தொடர்பான சட்டப்பூர்வத் தேவைகளுக்கு, உங்கள் அதிகார வரம்பு மற்றும் வாடிக்கையாளர்களின் அதிகார வரம்பின் சட்டங்களை நீங்கள் மதிப்பாய்வு செய்ய வேண்டும். தற்போதைய மற்றும் துல்லியமான பணத்தைத் திரும்பப்பெறுதல் கொள்கையை நீங்கள் வழங்கத் தவறினால், உங்கள் கணக்கு முடிவுறுத்தப்படுவது வரை Shopify உங்கள் கணக்குக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக்கூடும்.

நீங்கள் ஐரோப்பியப் பொருளாதாரப் பகுதிக்கு (EEA) வெளியே அமைந்திருந்தாலும், EEA-இல் உள்ள வாடிக்கையாளர்களை இலக்காகக் கொண்டால், இந்தச் சட்டங்கள் உங்களுக்குப் பொருந்தும். எடுத்துக்காட்டாக, நீங்கள் EEA நாட்டில் உள்ளூர் மீடியாவைப் பயன்படுத்தி விளம்பரம் செய்தாலோ, ஆங்கிலம் தவிர பிற உள்ளூர் EEA மொழியைப் பயன்படுத்தினாலோ அல்லது EEA-அடிப்படையிலான டொமைன் பெயரைக் கொண்ட இணையதளத்தை உருவாக்கினாலோ, இந்தச் சட்டங்கள் உங்களுக்குப் பொருந்தும்.

செலவு உள்ளடக்கிய விலை நிர்ணயம்

வெளிநாட்டிலிருந்து மற்றொரு நாட்டுக்குத் தயாரிப்புகளை இறக்குமதி செய்ய, டிராப்ஷிப்பிங் நிறைவேற்ற முறையை நீங்கள் பயன்படுத்தினால், தயாரிப்புகள் இறக்குமதி செய்யப்பட்டவை என்பதையும் அவற்றுக்குச் சுங்கத்துறை கிளியரன்ஸ் தேவைப்படலாம் என்பதையும் துல்லியமாகக் குறிப்பிடுவது முக்கியமாகும்.

நீங்கள் ஐரோப்பியப் பொருளாதாரப் பகுதியில் (EEA) அமைந்திருந்தால் அல்லது EEA இல் உள்ள வாடிக்கையாளர்களை இலக்காகக் கொண்டால், ஐரோப்பியச் சட்டங்கள் உங்களுக்குப் பொருந்தும். பொருந்தினால், வரிகள், டெலிவரி செலவுகள் மற்றும் ஷிப்பிங் செலவுகள் உட்பட, பொருட்கள் மற்றும் சேவைகளின் மொத்த விலை பற்றிய தகவலையும் நீங்கள் EEA வாடிக்கையாளர்களுக்கு வழங்க வேண்டும்.

EEA வாடிக்கையாளர்களின் உரிமைகளைப் பற்றித் தெரிந்துகொள்ள, பின்வரும் ஆதாரங்களைச் சரிபார்க்கவும்:

நீங்கள் ஐரோப்பியப் பொருளாதாரப் பகுதிக்கு (EEA) வெளியே அமைந்திருந்தாலும், EEA-இல் உள்ள வாடிக்கையாளர்களை இலக்காகக் கொண்டால், இந்தச் சட்டங்கள் உங்களுக்குப் பொருந்தும். எடுத்துக்காட்டாக, நீங்கள் EEA நாட்டில் உள்ளூர் மீடியாவைப் பயன்படுத்தி விளம்பரம் செய்தாலோ, ஆங்கிலம் தவிர பிற உள்ளூர் EEA மொழியைப் பயன்படுத்தினாலோ அல்லது EEA-அடிப்படையிலான டொமைன் பெயரைக் கொண்ட இணையதளத்தை உருவாக்கினாலோ, இந்தச் சட்டங்கள் உங்களுக்குப் பொருந்தும்.

EU-க்குள் டிராப்ஷிப்பிங் செய்வதற்கான VAT கடமைகள்

ஐரோப்பிய ஒன்றியத்திலுள்ள வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்ய நீங்கள் டிராப்ஷிப்பிங் நிறைவேற்ற முறையைப் பயன்படுத்தினால், பாரம்பரியச் சில்லறை விற்பனையிலிருந்து மாறுபட்ட VAT கடமைகளை நீங்கள் கொண்டிருக்கலாம். EU அல்லாத சப்ளையரிடமிருந்து EU வாடிக்கையாளருக்குப் பொருட்கள் நேரடியாக அனுப்பப்படுவதால், உங்கள் வாடிக்கையாளர் செலுத்தும் சில்லறை விலையை விட இறக்குமதிச் சுங்க மதிப்பு (சப்ளையருக்கு நீங்கள் செலுத்தும் விலை) பொதுவாகக் குறைவாக இருக்கும். இந்த வேறுபாடு கூடுதல் VAT பொறுப்புகளை உருவாக்கலாம்.

ஃபிரான்ஸில் டிராப்ஷிப்பிங் செய்வதற்கான VAT விதிகள்

2024 நிதிக் சட்டத்தின்படி VAD-BI என்றும் அழைக்கப்படும் இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களின் தொலைதூர விற்பனைக்கு VAT எவ்வாறு பொருந்தும் என்பதைத் தெளிவுபடுத்தும் வழிகாட்டலை மார்ச் 2026-இல் பிரெஞ்சு வரி அதிகாரிகள் வெளியிட்டனர். இந்த வழிகாட்டல் EU-க்கு வெளியிலிருந்து பிரான்ஸில் உள்ள வாடிக்கையாளர்களுக்குத் தயாரிப்புகளை டிராப்ஷிப் செய்யும் வணிகர்களைப் பாதிக்கிறது.

டிராப்ஷிப்பிங் வணிகங்களுக்குப் பொருந்தக்கூடிய பின்வரும் சூழ்நிலைகளைச் சரிபார்க்கவும்:

  • பிரான்ஸில் நுழையும் ஆனால் மற்றொரு EU நாட்டுக்குச் செல்ல வேண்டிய €150 EUR-க்கும் குறைவான மதிப்பிலான பொருட்கள்: இலக்கு நாட்டில் சுங்கத்துறை கிளியரன்ஸ் நிகழ்கிறது. விற்பனையாளர் பிரெஞ்சு VAT-க்குப் பொறுப்பல்ல என்றாலும் பொருட்கள் வெளிப்புறப் போக்குவரத்தில் வைக்கப்பட்டுள்ளதை உறுதிசெய்ய வேண்டும்.
  • பிரான்ஸில் நுழையும் மற்றும் மற்றொரு EU நாட்டுக்குச் செல்ல வேண்டிய €150 EUR-க்கும் அதிக மதிப்பிலான பொருட்கள்: பொருட்கள் EU-க்குள் நுழையும்போது பிரான்ஸில் இறக்குமதி VAT-க்கு விற்பனையாளர் பொறுப்பாவார். அடுத்தடுத்த தொலைதூர விற்பனையானது மற்றொரு EU உறுப்பு நாட்டில் வரி விதிக்கப்படும்போது, செலுத்தப்பட்ட VAT கழிக்கப்படக்கூடியதாக இருக்கலாம்.
  • இறக்குமதி செய்யப்பட்டுப் பிரான்ஸுக்குள் டெலிவரி செய்யப்படும் பொருட்கள்: சில்லறை விற்பனை விலையிலிருந்து இறக்குமதிச் சுங்க மதிப்பு வேறுபட்டால் (கிட்டத்தட்ட அனைத்து டிராப்ஷிப்பிங் பரிவர்த்தனைகளிலும் இதுவே நிலை), விற்பனையாளர் பிரெஞ்சு VAT-க்குப் பதிவுசெய்து, விற்பனைக்கான இறக்குமதி VAT மற்றும் உள்நாட்டு பிரெஞ்சு VAT ஆகிய இரண்டையும் அறிவிக்க வேண்டும்.

பிரான்ஸில் €2 EUR சுங்கக் கையாளுதல் கட்டணம்

எளிமைப்படுத்தப்பட்ட சுங்க அறிவிப்பு நடைமுறையின்கீழ் அனுமதிக்கப்படும் குறைந்த மதிப்புள்ள இறக்குமதிகளுக்கு, ஒவ்வொரு உருப்படிக்கும் €2 EUR சுங்கக் கையாளுதல் கட்டணத்தை 1 மார்ச் 2026 முதல் பிரான்ஸ் அமல்படுத்தியுள்ளது. இந்தக் கட்டணம் ஒவ்வொரு உருப்படிக்கும் பொருந்தும், ஒவ்வொரு பார்சலுக்கும் அல்ல, மேலும் இது VAT கடப்பாடுகளிலிருந்து தனிப்பட்டதாகும்.

சுங்க வரி விலக்குகளில் EU முழுவதற்குமான மாற்றங்கள்

1 ஜூலை 2026 முதல், இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான €150 EUR சுங்க வரி விலக்கை ஐரோப்பிய ஒன்றியம் (EU) அகற்றத் தொடங்கும். EU அல்லாத நாடுகளிலிருந்து EUக்குள் நுழையும் சிறிய பார்சல்களுக்கு ஒரு இடைக்கால நடவடிக்கையாக, ஒவ்வொரு உருப்படிக்கும் €3 EUR என்ற ஒரே அளவிலான சுங்க வரி விதிக்கப்படும். இந்த விலக்கு முழுமையாக அகற்றப்படும்போது, இறக்குமதி செய்யப்படும் அனைத்துப் பொருட்களும் — அதன் மதிப்பைப் பொருட்படுத்தாமல் — EUக்குள் நுழையும்போது சுங்க வரிகளை எதிர்கொள்ளும்.

EU-க்கு வெளியிலிருந்து EU-இல் உள்ள வாடிக்கையாளர்களுக்கு நீங்கள் பொருட்களை டிராப்ஷிப் செய்தால், Import One-Stop Shop (IOSS) திட்டத்துக்குப் பதிவுசெய்வதைக் கருத்தில் கொள்ளவும். IOSS மூலம், €150 EUR அல்லது அதற்கும் குறைவான மதிப்புள்ள ஆர்டர்களுக்கு செக்அவுட்டில் VAT-ஐ நீங்கள் வசூலிக்கலாம், டெலிவரி செய்யப்படும்போது உங்கள் வாடிக்கையாளர்கள் எதிர்பாராத வரிகளைச் செலுத்த மாட்டார்கள், அத்துடன் நீங்கள் ஒற்றை மாதாந்திர VAT அறிக்கையைத் தாக்கல் செய்யலாம். IOSS இல்லையெனில், டெலிவரியின்போது உங்கள் வாடிக்கையாளர்களிடம் VAT மற்றும் சுங்கக் கட்டணங்கள் வசூலிக்கப்படலாம், அத்துடன் தனிப்பட்ட EU உறுப்பு நாடுகளில் கூடுதல் மதிப்புக்கூட்டு வரிப் பதிவுக் கடமைகளை நீங்கள் சந்திக்க நேரிடலாம்.

உங்கள் Shopify நிர்வாகியின் அமைப்புகள் > வரிகள் மற்றும் சுங்க வரிகள் > ஐரோப்பிய ஒன்றியம் என்பதில் நீங்கள் IOSS-ஐ அமைக்கலாம். EU வரிகளை அமைப்பது மற்றும் IOSS திட்டம் பற்றி மேலும் அறிக.

ஆதாரங்கள்

ஆன்லைன் தயாரிப்புப் பாதுகாப்பு பற்றிய குறிப்பிட்ட தகவலைக் கண்டறிய, பின்வரும் ஆதாரங்களைச் சரிபார்க்கவும்:

ஆன்லைன் தயாரிப்புத் திரும்பப்பெறுதல்கள் பற்றிய குறிப்பிட்ட தகவலைக் கண்டறிய, பின்வரும் ஆதாரங்களைச் சரிபார்க்கவும்:

ஆன்லைனில் பணத்தைத் திரும்பப்பெறுதல் குறித்த குறிப்பிட்ட தகவல்களைக் கண்டறிய பின்வரும் ஆதாரங்களை மதிப்பாய்வு செய்யவும்: