Shopify-இல் சணல் விற்பனைக்கான பேமெண்ட் விருப்பங்கள்
சணல், கன்னாபிடியோல் (CBD) மற்றும் டெட்ராஹைட்ரோகன்னாபினோல் (THC) தயாரிப்புகளின் விற்பனையை Shopify Payments ஆதரிக்காது. உங்கள் Shopify ஸ்டோர் மூலம் சணல் அல்லது சணல் சார்ந்த தயாரிப்புகளின் விற்பனையைச் செயலாக்க, Shopify-உடன் இணக்கமாக இருக்கும் மற்றும் இந்தத் தயாரிப்புகளின் விற்பனையை ஆதரிக்கும் மூன்றாம் தரப்பு கட்டண வழங்குநர்களை நீங்கள் பயன்படுத்தலாம்.
இந்தப் பக்கத்தில்
சணல் பரிவர்த்தனைகள்
தங்கள் சேவைகள் மூலம் சணலை விற்க விண்ணப்பிக்கும் ஸ்டோர்களுக்கு மூன்றாம் தரப்பு கட்டண வழங்குநர்கள் முழுமையான சரிபார்ப்புச் செயல்முறையைக் கொண்டுள்ளனர். சணல் தயாரிப்புகளை விற்கும் ஸ்டோர்களுக்கான பேமெண்ட்கள் மற்றும் கட்டணங்களுக்கு ஒப்புதலளிக்கும்போது, ஒவ்வொரு கட்டண வழங்குநரும் தயாரிப்பு வகை, வணிகம் தொடங்கப்பட்ட தேதி, பரிவர்த்தனை வரலாறு, அளவு மற்றும் தயாரிப்பு கலவை போன்ற பல்வேறு காரணிகளைக் கருத்தில் கொள்வார்கள். ஒப்புதல் முடிவுகள் என்பது ஒவ்வொரு மூன்றாம் தரப்பு கட்டண வழங்குநரின் தனிப்பட்ட விருப்புரிமைக்கு உட்பட்டது, உங்கள் ஸ்டோருக்கு ஒப்புதல் கிடைக்கும் என்பதற்கு Shopify உத்தரவாதம் அளிக்காது.
Shopify Payments மற்றும் மூன்றாம் தரப்பு கட்டண வழங்குநர்கள்
தற்போது, சணல் மற்றும் சணல் சார்ந்த CBD மற்றும் THC தயாரிப்புகளின் விற்பனையை Shopify Payments ஆதரிப்பதில்லை. இருப்பினும், இந்தத் தயாரிப்புகளின் விற்பனையை ஆதரிக்கின்ற ஒருங்கிணைக்கப்பட்ட மூன்றாம் தரப்பு கட்டண வழங்குநர்களுடன் Shopify கூட்டு சேர்ந்துள்ளது. Shopify-உடன் இணக்கமாக இருக்கும் மற்றும் சணல் தயாரிப்புகளின் விற்பனையை ஆதரிக்கக்கூடிய ஒருங்கிணைக்கப்பட்ட எந்தவொரு மூன்றாம் தரப்பு கட்டண வழங்குநரையும் நீங்கள் பயன்படுத்தலாம். பயன்படுத்துவதற்கு நீங்கள் விண்ணப்பிக்கக்கூடிய மூன்றாம் தரப்பு வழங்குநர்களுக்கான எடுத்துக்காட்டுகள் DigiPay மற்றும் Bankful ஆகும்.
மூன்றாம் தரப்பு கட்டண வழங்குநர்கள் தாங்கள் ஆதரிக்கும் தயாரிப்புகள் குறித்துத் தங்களுக்கெனச் சொந்தக் கொள்கைகளைக் கொண்டுள்ளனர். Shopify-உடன் கூட்டு சேர்ந்துள்ள அனைத்து மூன்றாம் தரப்பு கட்டண வழங்குநர்களும் சணல் விற்பனைக்கு ஏற்றவர்கள் அல்ல என்பதால், குறிப்பிட்ட கட்டண வழங்குநர் சணல் தயாரிப்புகளின் விற்பனையை ஆதரிக்கிறாரா என்பதை அவர்களுடன் உறுதிசெய்ய வேண்டியது உங்கள் பொறுப்பாகும். Shopify-உடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ள கிடைக்கக்கூடிய கட்டண வழங்குநர்கள் பற்றிய கூடுதல் தகவலுக்கு, நாடு அல்லது பிராந்தியத்தின் அடிப்படையிலான கட்டணத் தகவலைப் பார்க்கவும்.
தற்போதுள்ள Shopify Payments பயனர்கள்
நீங்கள் ஏற்கனவே Shopify Payments-ஐப் பயன்படுத்தி இருந்தால் மற்றும் சணல் தயாரிப்புகளை உங்கள் ஸ்டோரில் சேர்க்க விரும்பினால், பின்வரும் விருப்பங்களைக் கருத்தில் கொள்ளவும்:
- மூன்றாம் தரப்பு கட்டண வழங்குநரைப் பயன்படுத்த, உங்கள் ஸ்டோரின் பேமெண்ட் அமைப்புகளை மாற்றவும்.
- மூன்றாம் தரப்பு கட்டண வழங்குநரைப் பயன்படுத்திச் சணல் தயாரிப்புகளை பிரத்தியேகமாக விற்பனை செய்ய இரண்டாவது ஸ்டோரைத் திறக்கவும்.
Shopify Payments-இல் இருந்து நீக்கப்பட்ட பிறகு Shopify-ஐப் பயன்படுத்துதல்
சணல் தயாரிப்புகளின் விற்பனை காரணமாக உங்கள் ஸ்டோரில் இருந்து Shopify Payments நீக்கப்பட்டிருந்தால், மாற்று மூன்றாம் தரப்பு கட்டண வழங்குநரின் மூலம் பேமெண்ட்களைச் செயலாக்க உங்களால் இன்னமும் Shopify-ஐப் பயன்படுத்தி உங்கள் ஸ்டோரைத் தொடர்ந்து நடத்த முடியலாம். இருப்பினும், Shopify-இல் சணல் தயாரிப்புகளை விற்கும்போது உங்கள் வணிகத்திற்குப் பொருந்தக்கூடிய சட்டங்கள் மற்றும் விதிமுறைகளுக்கு நீங்கள் இணங்க வேண்டும். நீங்கள் Shopify Payments-ஐத் தொடர்ந்து பயன்படுத்த விரும்பினால், தற்போதுள்ள உங்கள் ஸ்டோரில் இருந்து சணல் தயாரிப்புகளை நீக்கலாம்.
பிற தயாரிப்புகளை விற்கும் அதே ஸ்டோரில் சணல் தயாரிப்புகளையும் விற்பனை செய்தல்
நீங்கள் தேர்ந்தெடுத்த கட்டண வழங்குநர் சணல் தயாரிப்புகளை விற்க அனுமதித்தால், அதே ஸ்டோரில் மற்ற தயாரிப்புகளுடன் சணல் தயாரிப்புகளையும் நீங்கள் விற்கலாம்.