ஐரோப்பிய விலைக் குறிப்பீட்டு வழிகாட்டுதல்
ஐரோப்பியப் பொருளாதாரப் பகுதி (EEA)யில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு Shopify மூலம் நீங்கள் விற்கும் தயாரிப்புகளுக்கான விலைக்குறைப்பை அறிவிக்கும்போது, நீங்கள் பின்பற்ற வேண்டிய சில சட்டங்களும் விதிமுறைகளும் இருக்கலாம்.
EEA-இல் உள்ள வாடிக்கையாளர்களுக்கு விற்கும்போது உங்கள் வணிகத்திற்குப் பொருந்தக்கூடிய சில சட்டங்களைப் பற்றி அறிந்துகொள்ள இந்தப் பக்கத்தைப் பார்க்கவும்.
இந்தப் பக்கத்தில்
- விலைக் குறிப்பீட்டு வழிகாட்டுதலின் (PID) மேலோட்டம்
- ஒப்பீட்டு விலை அம்சத்தைப் பயன்படுத்துதல்
- ஒப்பீட்டு விலைகளைக் கட்டுப்படுத்த சர்வதேச விற்பனைக் கருவிகளைப் பயன்படுத்துதல்
- விலை ஒப்பீடுகளைக் காட்ட மெட்டாஃபீல்டுகளைப் பயன்படுத்துதல்
- அடிக்கடி விலைக்குறைப்புகளைத் தெரியப்படுத்துதல்
- MSRP அல்லது போட்டியாளர் விலைகள்
- லாயல்டி திட்டங்கள் மற்றும் பிரத்தியேகமாக்கப்பட்ட சலுகைகள்
- வளங்கள்
விலைக் குறிப்பீட்டு வழிகாட்டுதலின் (PID) மேலோட்டம்
EEA-இல் உள்ள வாடிக்கையாளர்களுக்கு நீங்கள் விற்று, விலைக்குறைப்பை அறிவித்தால், கடந்த 30 அல்லது அதற்கும் மேற்பட்ட நாட்களில் ஒரு தயாரிப்புக்கு நீங்கள் வசூலித்த மிகக் குறைந்த விலையைக் காட்ட வேண்டும். ஒரு சில்லறை விற்பனை இருப்பிடத்தில் உள்ள விலைக் குறிச்சொல்லிலோ உங்கள் ஆன்லைன் ஸ்டோரின் தயாரிப்புப் பட்டியல் பக்கத்திலோ விலை மாற்றத்தைக் காட்டலாம். கடந்த 30 அல்லது அதற்கும் மேற்பட்ட நாட்களுக்குள் ஒரு விளம்பரமாக அறிவிக்கப்பட்ட முந்தைய விலைக்குறைப்பும் இந்த மிகக் குறைந்த விலையில் அடங்கும்.
விலைக் குறிப்பீட்டு வழிகாட்டுதல் (PID) பின்வருவனவற்றைச் செய்வதிலிருந்து உங்களைத் தடுக்கும்:
- போலியான விலைக்குறைப்புகளை விளம்பரப்படுத்துதல்.
- தள்ளுபடியை வழங்குவதற்கு முன்பு, செயற்கையாகக் குறிப்பு விலையை உயர்த்துதல்.
- தள்ளுபடியின் தொகையைப் பற்றி வாடிக்கையாளர்களைத் தவறாக வழிநடத்துதல்.
ஒரு தயாரிப்பின் விலையைக் குறைப்பது குறித்து நீங்கள் தெரிவிக்கும் எந்தவொரு விளம்பர அறிக்கைக்கும் PID பொருந்தக்கூடும். விலைக்குறைப்பு அறிவிப்புகளுக்கான எடுத்துக்காட்டுகள் பின்வருமாறு:
- முந்தைய விலையிலிருந்து ஒரு சதவீதத் தள்ளுபடி, எடுத்துக்காட்டாக 20% தள்ளுபடி.
- ஒரு நிலையான தொகைத் தள்ளுபடி, எடுத்துக்காட்டாக 20 EUR தள்ளுபடி.
- முந்தைய அதிக விலையுடன் சேர்த்துக் காட்டப்படும் புதிய குறைந்த விலை. எடுத்துக்காட்டாக, “தற்போதைய விலை 50 EUR, முந்தைய விலை 100 EUR”.
- எதிர்காலத்தில் வசூலிக்கப்படும் புதிய அதிக விலையுடன் சேர்த்துக் காட்டப்படும் குறைந்த தொடக்க விலை. எடுத்துக்காட்டாக, “தற்போதைய விலை 50 EUR, எதிர்கால விலை 100 EUR”.
- விலைக்குறைப்பு செய்யப்பட்டதைப் போன்ற எண்ணத்தை ஏற்படுத்தும் ஏதேனும் விளம்பர உத்தி. எடுத்துக்காட்டாக, ஒரு ஃப்ளாஷ் விற்பனை, விற்பனை விலை, சிறப்புச் சலுகை, பிளாக் ஃப்ரைடே டீல், சைபர் மண்டே சிறப்புச் சலுகை அல்லது மதிப்புக்கூட்டு வரியைச் (VAT) செலுத்தாமல் இன்றே வாங்குங்கள் போன்றவற்றை விளம்பரப்படுத்துதல்.
- உங்கள் முழு ஸ்டோருக்கும் வழங்கப்படும் பொதுவான விலைக்குறைப்பு, எடுத்துக்காட்டாக “அனைத்திற்கும் 20% தள்ளுபடி”.
விளம்பரம் அல்லாத விலைக்குறைப்புகள்
எந்தவொரு அறிவிப்பும் இல்லாமல் நீங்கள் ஒரு விலைக்குறைப்பைச் செய்தால், அதற்குக் PID பொருந்தாமல் போகலாம். PID பொருந்தாத விலைக்குறைப்புகளுக்கான எடுத்துக்காட்டுகள் பின்வருமாறு:
- விலை குறைக்கப்பட்டுள்ளது என்ற விளம்பர அறிக்கை இல்லாத விலை ஏற்ற இறக்கங்கள் அல்லது குறைவுகள். எடுத்துக்காட்டாக, செலவுகளின் காரணமாக ஏற்படும் விலை மாற்றம்.
- பிரத்தியேகமாக்கப்பட்ட விலைக்குறைப்புகள். எடுத்துக்காட்டாக, ஒரு லாயல்டி திட்டம் அல்லது தனிப்பட்ட தள்ளுபடிக் குறியீடு மூலமான தள்ளுபடிகள்.
- பிற விலைகளுடனான ஒப்பீடுகள். எடுத்துக்காட்டாக, உற்பத்தியாளர் பரிந்துரைத்த சில்லறை விலை (MSRP) அல்லது போட்டியாளரின் விலை.
- விலைக்குறைப்பு செய்யப்பட்டதைப் போன்ற எண்ணத்தை ஏற்படுத்தாத விலை ஒப்பீடுகள் அல்லது அனுகூலங்கள் தொடர்பான பொதுவான சந்தைப்படுத்தல் உரிமைக்கோரல்கள். எடுத்துக்காட்டாக, “சிறந்த விலை” அல்லது “மிகக் குறைந்த விலை”.
- இணைக்கப்பட்ட அல்லது நிபந்தனைக்குட்பட்ட சலுகைகள். எடுத்துக்காட்டாக, “ஒன்றை வாங்கினால், இரண்டை இலவசமாகப் பெறுங்கள்” அல்லது “மூன்றை வாங்கும்போது 30% தள்ளுபடி”.
- தயாரிப்புகளை விற்காத ஆனால் வாடிக்கையாளர்கள் செலுத்திய விலையில் ஒரு பகுதியைத் திரும்பப்பெறச் செய்வதாக உறுதியளிக்கும் மூன்றாம் தரப்பு உற்பத்தியாளர்கள் அல்லது விநியோகஸ்தர்களின் கேஷ்பேக் அறிவிப்புகள்.
நீங்கள் வணிகம் செய்யும் ஒவ்வொரு EEA நாடும் PID-ஐச் செயல்படுத்துவதற்கான தேசிய விதிகளையும் சரிபார்க்கவும். தேசிய விதிகள் தயாரிப்புகளுக்கு அல்லது விலைக்குறைப்புகளுக்கு வெவ்வேறு விதிகள் அல்லது விதிவிலக்குகளை வழங்கலாம். அத்தகைய விதிகள் அல்லது விதிவிலக்குகளுக்கான சில எடுத்துக்காட்டுகள் பின்வருமாறு:
- விரைவில் கெட்டுப்போகும் அல்லது காலாவதியாகும் தயாரிப்புகள்.
- சந்தையில் 30 நாட்களுக்கும் குறைவாகவே இருந்த தயாரிப்புகள்.
- ஒரே விற்பனைப் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, தடையின்றி அதிகரிக்கப்படும் விலைக்குறைப்புகள். எடுத்துக்காட்டாக, கிறிஸ்துமஸ் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, டிசம்பர் தொடக்கத்தில் 10% தள்ளுபடியை வழங்கித் தொடங்குகிறீர்கள். டிசம்பர் மத்தியில் அந்தத் தள்ளுபடியை 20% ஆக அதிகரிக்கிறீர்கள், அதன்பிறகு அதே பிரச்சாரத்தின் ஒரு பகுதியாகக் கிறிஸ்துமஸ் பண்டிகைக்குச் சற்று முன்பு அந்தத் தள்ளுபடியை 30% ஆக அதிகரிக்கிறீர்கள்.
முந்தைய மிகக் குறைந்த விலையை நிர்ணயிப்பதற்குத் தேசியச் சட்டத்திற்கு 30 நாட்களை விட நீண்ட காலம் தேவைப்படலாம். மேலும் தகவலுக்கு, நுகர்வோர் சட்டத் தரவுத்தளத்தைப் பார்க்கவும்.
ஒப்பீட்டு விலை அம்சத்தைப் பயன்படுத்துதல்
உங்கள் முதன்மைச் சந்தை EEA-இல் இல்லை, ஆனால் EEA-இல் உள்ள வாடிக்கையாளர்களுக்குத் தயாரிப்புகளை விற்க நீங்கள் சர்வதேச விற்பனைக் கருவிகளைப் (Markets அல்லது Global‑e போன்ற) பயன்படுத்தினால், இந்த வாடிக்கையாளர்களுக்கான ஒப்பீட்டு விலைகள் இயல்புநிலையாகக் காட்டப்படும்.
உங்கள் Shopify நிர்வாகியில் உள்ள சந்தைகள் பிரிவில் இருந்து EEA வாடிக்கையாளர்களுக்கான ஒப்பீட்டு விலைகளை மறைக்க நீங்கள் தேர்வுசெய்யலாம்
உங்கள் முதன்மைச் சந்தை EEA-இல் இருந்தால், ஒப்பீட்டு விலை அம்சம் எப்போதும் காட்டப்படும். குறைந்த விலைக்கு ஒரு தயாரிப்பை விற்பனைக்கு வைக்கும்போது, PID-க்கு இணங்க, நீங்கள் ஒப்பீட்டு விலை அம்சத்தைப் பயன்படுத்தலாம். புதிய குறைக்கப்பட்ட விலையுடன் ஒப்பிட்டு, கடந்த 30 அல்லது அதற்கும் மேற்பட்ட நாட்களில் இருந்த தயாரிப்பின் மிகக் குறைந்த விலையை நீங்கள் காட்டலாம்.
படிகள்:
- உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, தயாரிப்புகள் என்பதற்குச் செல்லவும்.
- ஒரு தயாரிப்பின் பெயரைக் கிளிக் செய்யவும்.
- விலை பிரிவில், ஒப்பீட்டு விலை என்பதைக் கிளிக் செய்யவும்.
- ஒப்பீட்டு விலை புலத்தில், கடந்த 30 அல்லது அதற்கும் மேற்பட்ட நாட்களில் இருந்த தயாரிப்பின் மிகக் குறைந்த விலையை உள்ளிடவும்.
- விலை புலத்தில், உங்கள் தயாரிப்பின் புதிய விற்பனை விலையை உள்ளிடவும்.
- சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.
ஒப்பீட்டு விலைகளைக் கட்டுப்படுத்த சர்வதேச விற்பனைக் கருவிகளைப் பயன்படுத்துதல்
உங்கள் முதன்மைச் சந்தை EEA-இல் இல்லை, ஆனால் EEA-இல் உள்ள வாடிக்கையாளர்களுக்குத் தயாரிப்புகளை விற்க நீங்கள் சர்வதேச விற்பனைக் கருவிகளைப் பயன்படுத்தினால், இந்த வாடிக்கையாளர்களுக்கான ஒப்பீட்டு விலைகள் இயல்புநிலையாக மறைக்கப்பட்டிருக்கும். உங்கள் Shopify நிர்வாகியில் உள்ள சந்தைகள் பிரிவில் இருந்து ஒப்பீட்டு விலைகளைக் காட்ட நீங்கள் தேர்வுசெய்யலாம்.
EEA-இல் உள்ள நாடுகள் அல்லது பிராந்தியங்களைக் கொண்ட பல சந்தைகளை நீங்கள் அமைத்திருந்தால், ஒவ்வொரு சந்தைகளுக்குமான ஒப்பீட்டு விலைகளைக் காட்ட இந்தப் படிகளை நீங்கள் பின்பற்ற வேண்டும்.
படிகள்:
உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, சந்தைகள் என்பதற்குச் செல்லவும்.
EEA-இல் உள்ள ஒரு நாடு அல்லது பிராந்தியத்தைக் கொண்ட ஒரு சந்தையைக் கிளிக் செய்யவும்.
மேலும் அமைப்புகள் பிரிவில், ஒப்பீட்டு விலை என்பதைக் கிளிக் செய்யவும்.
ஒப்பீட்டு விலையை மறை என்பதைத் தேர்வுநீக்கவும்.
சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.
மாற்றாக, நீங்கள் ஒரு csv கோப்பைப் பயன்படுத்தி குறிப்பிட்ட தயாரிப்புகளுக்கும் நாடுகள் அல்லது பிராந்தியங்களுக்கும் ஒப்பீட்டு விலைகளைப் பதிவேற்றலாம்.
விலை ஒப்பீடுகளைக் காட்ட மெட்டாஃபீல்டுகளைப் பயன்படுத்துதல்
விலைக்குறைப்பை அறிவிப்பதற்கு முந்தைய குறைந்தது 30 நாட்களில் ஒரு தயாரிப்புக்கு நீங்கள் வசூலித்த மிகக் குறைந்த விலையைக் காட்ட, உங்கள் ஆன்லைன் ஸ்டோரின் சில பகுதிகளில் மெட்டாஃபீல்டுகளைச் சேர்க்கலாம். மாற்றாக, முந்தைய மிகக் குறைந்த விலையுடன், MSRP அல்லது அடிப்படை விலை போன்ற பிற விலை நிர்ணயத் தகவலையும் தெரியப்படுத்த நீங்கள் மெட்டாஃபீல்டுகளைப் பயன்படுத்தலாம். தனிப்பயன் மெட்டாஃபீல்டு வரையறைகளை உருவாக்குவது குறித்து மேலும் அறிக.
அடிக்கடி விலைக்குறைப்புகளைத் தெரியப்படுத்துதல்
விலைக்குறைப்பை நீங்கள் அறிவிப்பதற்கு முன், கடந்த 30 அல்லது அதற்கும் மேற்பட்ட நாட்களில் ஒரு தயாரிப்புக்கு நீங்கள் வசூலித்த மிகக் குறைந்த விலையைக் காட்ட வேண்டும். முந்தைய தள்ளுபடிகள் அல்லது விளம்பரங்களின் ஒரு பகுதியாக வழங்கப்பட்ட மிகக் குறைந்த விலையும் இந்த விலையில் அடங்கும்.
ஒவ்வொரு 30 நாட்களுக்கும் ஒருமுறைக்கு மேல் நீங்கள் விலைக் குறைப்புகளை வழங்கினால், முந்தைய குறைந்த விலையையும் வழக்கமான விற்பனை விலையையும் எவ்வாறு தெரியப்படுத்த வேண்டும் என்பதைக் கருத்தில் கொள்ளவும். முந்தைய 30 நாள் காலவரையறைக்குள் இருந்த தயாரிப்பின் மிகக் குறைந்த விலைக்கு நீங்கள் விலைக்குறைப்பைப் பயன்படுத்த வேண்டும், அல்லது வழக்கமான விற்பனை விலைக்குத் தள்ளுபடியைப் பயன்படுத்தி முந்தைய குறைந்த விலையை வெளிப்படுத்த வேண்டும். முந்தைய 30 நாள் காலவரையறைக்குள் இருந்த மிகக் குறைந்த விலையை வெளிப்படுத்தாமல் வழக்கமான விற்பனை விலைக்கு நீங்கள் தள்ளுபடியைப் பயன்படுத்த முடியாது.
விலைக்குறைப்புகளைத் தெரியப்படுத்துவதற்கான எடுத்துக்காட்டு
எடுத்துக்காட்டாக, நீங்கள் ஒரு தயாரிப்பை 150 EUR-க்கு விற்கிறீர்கள். கடந்த 30 நாட்களில், ஒரு விளம்பரத்தின் ஒரு பகுதியாகத் தயாரிப்பு விலையை 100 EUR ஆகக் குறைத்தீர்கள். தயாரிப்பு விலையில் 50% தள்ளுபடியில் அந்தத் தயாரிப்பை வழங்க நீங்கள் விரும்புகிறீர்கள். PID-ஐப் பின்பற்ற, நீங்கள் தள்ளுபடியைப் பயன்படுத்தி விலைக்குறைப்பைத் தெரியப்படுத்தலாம்.
முந்தைய மிகக் குறைந்த விலையை நீங்கள் வெளிப்படுத்த விரும்பவில்லை எனில், தற்போதைய விற்பனை விலைக்குப் பதிலாக மிகக் குறைந்த விலையை வெளிப்படுத்தாமல் 50% தள்ளுபடியைப் பயன்படுத்தலாம். 50 EUR என்ற குறைக்கப்பட்ட விலையைப் பெற, 100 EUR விலையிலிருந்து 50% தள்ளுபடியைப் பயன்படுத்தவும்.
தற்போதைய விற்பனை விலைக்கு நீங்கள் விலைக்குறைப்பைப் பயன்படுத்த விரும்பினால், பின்வரும் தகவல்களை நீங்கள் தெளிவாகத் தெரியப்படுத்த வேண்டும்:
- வழக்கமான விற்பனை விலையிலிருந்து தள்ளுபடி செய்யப்படும் தொகை (50%)
- வழக்கமான விற்பனை விலை (150 EUR)
- முந்தைய குறைந்த விலை (100 EUR)
- தள்ளுபடி விலை (75 EUR)
உங்கள் ஆன்லைன் ஸ்டோரின் தயாரிப்புப் பக்கத்தில் அல்லது உங்கள் சில்லறை விற்பனை இருப்பிடத்தில் விளக்கத் தகவலைச் சேர்க்கலாம். எடுத்துக்காட்டாக, “எங்கள் வழக்கமான விற்பனை விலையான 150 EUR-க்குப் பதிலாக 75 EUR-இல் 50% தள்ளுபடியைப் பெறுங்கள். கடந்த 30 நாட்களில் எங்களின் மிகக் குறைந்த விளம்பர விலை 100 EUR ஆகும்”.
உங்கள் Shopify நிர்வாகியில் உள்ள தயாரிப்பு விவரங்களில் தயாரிப்பு விலைக்கு இரண்டு புலங்கள் மட்டுமே உள்ளன: விலை மற்றும் ஒப்பீட்டு விலை. ஒவ்வொரு 30 நாட்களுக்கும் ஒருமுறைக்கு மேல் நீங்கள் விலைக் குறைப்புகளை வழங்கினால், நீங்கள் தள்ளுபடியை வழங்கும் ஒவ்வொரு தயாரிப்புப் பக்கத்திலும் வழக்கமான விற்பனை விலை மற்றும் முந்தைய குறைந்த விலை ஆகிய இரண்டையும் காண்பிக்கும் அறிக்கையைச் சேர்க்கும் வகையில் உங்கள் தீமைத் திருத்துவதைக் கருத்தில் கொள்ளவும். உங்கள் ஸ்டோரின் தீமைத் திருத்துவது குறித்து மேலும் அறிக.
MSRP அல்லது போட்டியாளர் விலைகள்
நீங்கள் வழங்கும் விலையை PID-க்கு உட்படாமல் MSRP அல்லது போட்டியாளரின் விலை போன்ற பிற வெளிப்புற விலைகளுடன் ஒப்பிடலாம். இருப்பினும், வெளிப்புற விலைகளுடனான ஒப்பீடுகள் முறையற்ற வணிக நடைமுறைகள் உத்தரவு (UCPD) எனும் உத்தரவு 2005/29/ECக்கு உட்பட்டவை. விலை, விலை கணக்கிடப்படும் விதம் அல்லது குறிப்பிட்ட விலை அனுகூலம் இருப்பது குறித்து வாடிக்கையாளர்களைத் தவறாக வழிநடத்துவதை UCPD தடை செய்கிறது.
நீங்கள் வழங்கும் விலையை ஒரு வெளிப்புற விலையுடன் ஒப்பிட நீங்கள் முடிவு செய்தால், அந்த ஒப்பீடு வாடிக்கையாளர்களுக்கு அது ஒரு விலைக்குறைப்பு என்று தோன்றும் வகையில் காட்டப்படவில்லை என்பதை உறுதிசெய்யவும். ஒரு விலை ஒப்பீடானது அதன் தவறாக வழிநடத்தும் தோற்றத்தின் காரணமாக விலைக் குறைப்பு எனச் சாதாரண வாடிக்கையாளரால் கருதப்பட்டால், அந்த விலை ஒப்பீடானது UCPD மற்றும் PID ஆகிய இரண்டையும் மீறுவதாக அமையலாம்.
மேலும், விலைக் குறைப்புக்குப் பதிலாக ஒரு வெளிப்புற விலையைக் குறிக்க ஒப்பீட்டு விலை அம்சத்தை நீங்கள் பயன்படுத்தினால், குழப்பத்தைத் தவிர்க்க வாடிக்கையாளர்களுக்கு அந்த ஒப்பீட்டைத் தெளிவாகத் தெரிவிக்க வேண்டும்.
லாயல்டி திட்டங்கள் மற்றும் பிரத்தியேகமாக்கப்பட்ட சலுகைகள்
PID ஆனது விலைக் குறைப்பு அறிவிப்புகளைக் கையாள்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. வாடிக்கையாளர் லாயல்டி திட்டத்தின் ஒரு பகுதியாக வழங்கப்படும் தனிப்பயனாக்கப்பட்ட விலைக் குறைப்புகளுக்கு PID பொருந்தாது. மேலும் பிரத்தியேகமாக்கப்பட்ட அல்லது இலக்கிடப்பட்ட விளம்பரங்களுக்கும் PID பொருந்தாது. எடுத்துக்காட்டாக, பின்வரும் பிரத்தியேகமாக்கப்பட்ட விளம்பரங்களுக்கு PID பொருந்தாது:
- கொள்முதல் செய்த பிறகு, எதிர்காலப் பயன்பாட்டிற்கான தனிப்பயனாக்கப்பட்ட தள்ளுபடிக் குறியீடு
- பிறந்தநாள் அல்லது பிற நிகழ்விற்கான தனிப்பயனாக்கப்பட்ட தள்ளுபடி
- முன்கூட்டியே அறிவிக்கப்படாமல் கொள்முதல் செய்யும் நேரத்தில் வழங்கப்படும் தனிப்பயனாக்கப்பட்ட விலைக் குறைப்பு
உங்கள் வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் வழங்கப்படும் அல்லது அறிவிக்கப்படும் விலைக் குறைப்புகள் பிரத்தியேகமாக்கப்பட்டவை அல்லது இலக்கிடப்பட்டவையாகக் கருதப்படமாட்டாது. தனிப்பட்ட சலுகையாக வழங்கப்படும் விலைக் குறைப்புகளும் இதில் அடங்கும். எடுத்துக்காட்டாக, எந்தவொரு வாடிக்கையாளரும் பயன்படுத்தக்கூடிய “உங்களுக்கு மட்டுமான ஒரு சிறப்புத் தள்ளுபடி” என்று குறிப்பிடும் செய்தியுடன் தள்ளுபடிக் குறியீட்டை நீங்கள் வழங்கினால், அங்கு PID பொருந்தக்கூடும்.
ஆதாரங்கள்
PID மற்றும் UCPD குறித்த குறிப்பிட்ட தகவல்களை ஆன்லைனில் கண்டறிய பின்வரும் ஆதாரங்களை மதிப்பாய்வு செய்யவும்:
- நுகர்வோர் சட்டத் தரவுத்தளம்
- யூனியன் நுகர்வோர் பாதுகாப்பு விதிகளின் சிறந்த அமலாக்கம் மற்றும் நவீனமயமாக்கல் குறித்த உத்தரவு 2019/2161/EU
- நுகர்வோருக்கு வழங்கப்படும் தயாரிப்புகளின் விலைகளைக் குறிப்பிடுவதில் நுகர்வோர் பாதுகாப்பு குறித்த உத்தரவு 98/6/EC
- நுகர்வோருக்கு வழங்கப்படும் தயாரிப்புகளின் விலைகளைக் குறிப்பிடுவதில் நுகர்வோர் பாதுகாப்பு குறித்த உத்தரவு 98/6/EC இன் சட்டக்கூறு 6a-இன் விளக்கம் மற்றும் பயன்பாடு குறித்த வழிகாட்டுதல்