ஆதரிக்கப்படாத நாடுகளும் பிராந்தியங்களும்
உள்ளூர் ஒழுங்குமுறைத் தேவைகள், வணிகக் கூட்டாண்மைகள் மற்றும்/அல்லது பிற தொடர்புடைய காரணங்களால், குறிப்பிட்ட சில பிராந்தியங்கள் தொடர்பான பிசினஸுக்கு Shopify-ஆல் ஆதரவளிக்க முடியாது.
Shopify-ஆல் ஆதரிக்கப்படாத நாடுகள் மற்றும் பிராந்தியங்கள் பின்வரும் பட்டியலில் இடம்பெற்றுள்ளன:
- கியூபா
- ஈரான்
- வட கொரியா
- சிரியா
- உக்ரைனின் கிரிமியா பிராந்தியம் மற்றும் உக்ரைனில் டொனெட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் மக்கள் குடியரசுகள் என அழைக்கப்படுபவை
பின்வரும் கட்டுப்பாடுகள் Shopifyஇன் அனைத்துப் பயனர்களுக்கும் பொருந்தும்:
- ஆதரிக்கப்படாத நாடுகள் மற்றும் பிராந்தியங்களுக்குள் இருக்கும் தனிநபர்கள் மற்றும் பிசினஸ்கள் Shopify கணக்கை உருவாக்குவதற்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
- ஆதரிக்கப்படாத நாடுகள் மற்றும் பிராந்தியங்களுக்குள் ஸ்டோர்ஃபிரண்டுகளையும் கணக்குகளையும் அணுகுவதற்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
- ஆதரிக்கப்படாத நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் இருந்து வரும் தயாரிப்புகளுக்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
- ஆதரிக்கப்படாத நாடுகளுக்கும் பிராந்தியங்களுக்கும் ஆர்டர்களை ஷிப்பிங் செய்வதற்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளது.