உங்கள் தயாரிப்புப் பக்கங்களில் பாப்-அப் அளவு விளக்கப்படத்தைச் சேர்த்தல்
வழக்கமாக Shopify நிர்வாகியில் சேகரிக்கப்படாத சிறப்புத் தகவல்களைச் சேமிக்க அனுமதிப்பதன் மூலம், உங்கள் Shopify ஸ்டோரின் செயல்பாடு மற்றும் தோற்றத்தைத் தனிப்பயனாக்க மெட்டாஃபீல்டுகள் உதவுகின்றன. உங்கள் Shopify நிர்வாகியில் மெட்டாஃபீல்டுகளை நீங்கள் உள்ளகப் பயன்பாட்டிற்காகப் பயன்படுத்தலாம், மேலும் அவற்றை உங்கள் ஆன்லைன் ஸ்டோரில் காட்டவும் தேர்ந்தெடுக்கலாம்.
மெட்டாஃபீல்டுகளைக் கொண்டு, உங்கள் தயாரிப்புப் பக்கங்களில் ஒரு இணைப்பைக் காட்டும் பாப்-அப் பிளாக்கிற்கு நீங்கள் ஒரு பக்கக் குறிப்பைச் சேர்க்கலாம். அதைக் கிளிக் செய்யும்போது, உங்கள் பக்கத்தின் உள்ளடக்கத்தைக் காட்டும் பாப்-அப்பை அந்த இணைப்பு திறக்கும். உங்கள் பக்கங்களுக்கான ரிச் டெக்ஸ்ட் எடிட்டரைப் பயன்படுத்திப் படங்கள் மற்றும் பிற மீடியாவை நீங்கள் சேர்க்கலாம்.
உங்கள் தயாரிப்புப் பக்கங்களில் நீங்கள் சேர்க்கக்கூடிய பாப்-அப் தகவல்களின் சில எடுத்துக்காட்டுகள் பின்வருமாறு:
- அளவு விளக்கப்படங்கள்
- பராமரிப்பு வழிமுறைகள்
- அசெம்பிளி வழிமுறைகள்
- தயாரிப்பு விவரக்குறிப்புகள்
- அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
பக்கக் குறிப்பு மெட்டாஃபீல்டுகளை அறிமுகப்படுத்துதல், பக்கக் குறிப்புக்கான தயாரிப்பு மெட்டாஃபீல்டை உருவாக்குதல், உங்கள் ஆன்லைன் ஸ்டோருக்கான தயாரிப்புப் பக்க வார்ப்புருவை உருவாக்குதல், புதிய பக்கத்தைச் சேர்த்தல், குறிப்பிட்ட தயாரிப்புகளில் அந்தப் பக்கத்தைக் குறிப்பிடுதல் மற்றும் குறிப்பிட்ட தயாரிப்புகளுக்குத் தயாரிப்புப் பக்க வார்ப்புருவைப் பயன்படுத்துதல் போன்றவற்றை உள்ளடக்கிய 4 படிகளைக் கொண்ட டுடோரியல் இது. பாப்-அப்பில் நீங்கள் விரும்பும் எந்தவொரு உள்ளடக்கத்தையும் உருவாக்க இந்த டுடோரியலைப் பயன்படுத்தலாம். இந்த டுடோரியல் முழுவதும் அளவு விளக்கப்படத்தின் எடுத்துக்காட்டு பயன்படுத்தப்பட்டுள்ளது.
இந்த டுடோரியலுக்கு இயங்குநிலை மூலங்களை ஆதரிக்கும் தீம் தேவை. நீங்கள் விண்டேஜ் தீமைப் பயன்படுத்தினால் அல்லது உங்கள் தீம் ஆதரிக்காத மெட்டாஃபீல்டு வகைகளைச் சேர்க்க விரும்பினால், நீங்கள் உங்கள் தீம் குறியீட்டைத் திருத்தலாம் அல்லது Shopify பார்ட்னரைப் பணியமர்த்தலாம்.
இந்தப் பக்கத்தில்
படி 1: ஒரு பக்கத்திற்கு தயாரிப்பு மெட்டாஃபீல்டை உருவாக்கவும்
தொடங்குவதற்கு, உங்கள் தயாரிப்புப் பக்கங்களுக்குப் பக்கக் குறிப்பு மெட்டாஃபீல்டு வரையறையை உருவாக்க வேண்டும். தயாரிப்பு மெட்டாஃபீல்டு ஒரு குறிப்பிட்ட பக்கத்துடன் இணைக்கிறது மற்றும் ஒவ்வொரு தயாரிப்பிற்கும் தனிப்பயனாக்கலாம். அதே வார்ப்புருவைப் பயன்படுத்தும் தயாரிப்புக்கு நீங்கள் பக்கக் குறிப்பைச் சேர்க்கவில்லை என்றால், உள்ளடக்கம் இருப்பதைப் போலவே உங்கள் பாப்-அப் இணைப்பு உரை தொடர்ந்து காண்பிக்கப்படும். குறிப்பிட்ட தயாரிப்புகளில் மட்டுமே பாப்-அப் இணைப்பைக் காண்பிக்க, நீங்கள் ஒரு தயாரிப்பு வார்ப்புருவை உருவாக்கி, அதனைப் பொருத்தமான தயாரிப்புகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம்.
பக்கக் குறிப்பு மெட்டாஃபீல்டுகள் மூலம், பல்வேறு வகையான தயாரிப்புகளுக்குப் வெவ்வேறு பக்கங்களை உருவாக்கி பல்வேறு தயாரிப்புத் தகவல்களை நீங்கள் காண்பிக்கலாம். எடுத்துக்காட்டாக, நடைபயிலும் குழந்தைகளுக்கான அளவுப் பட்டியல், கைக்குழந்தைகளுக்கான அளவுப் பட்டியல் என இரண்டு வெவ்வேறு வயதுக் குழுக்களுக்கு இரண்டு வெவ்வேறு அளவுப் பட்டியல் பக்கங்களை நீங்கள் உருவாக்கலாம், அதன் பிறகு நடைபயிலும் குழந்தைகளுக்கான தயாரிப்புகளுக்கு மட்டுமே நடைபயிலும் குழந்தைகளுக்கான அளவுகளின் பக்கக் குறிப்பைச் சேர்க்கலாம்.
உங்கள் தீம் எடிட்டரில் உள்ள பாப்-அப் பிளாக்குடன் பக்கக் குறிப்பை இணைக்க, அதற்கு ஒரு மெட்டாஃபீல்டு வரையறையை உருவாக்க வேண்டும். உங்கள் மெட்டாஃபீல்டு வரையறையை உருவாக்கும்போது ஸ்டோர்ஃபிரண்ட் அணுகல் இயல்புநிலையாகத் தேர்ந்தெடுக்கப்படும்.
படிகள்:
டெஸ்க்டாப்
உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, அமைப்புகள் > மெட்டாஃபீல்டுகள் மற்றும் மெட்டாஆப்ஜெக்ட்கள் என்பதற்குச் செல்லவும்.
மெட்டாஃபீல்டு வரையறைகள் பிரிவில், தயாரிப்புகள் என்பதைக் கிளிக் செய்யவும்.
வரையறையைச் சேர் என்பதைக் கிளிக் செய்யவும்.
பெயர் புலத்தில், அளவுப் பட்டியல் என உள்ளிடவும்.
⊕ வகையைத் தேர்ந்தெடு என்பதைக் கிளிக் செய்யவும்.
கீழ்தோன்றும் மெனுவிலிருந்து பக்கம் என்பதைத் தேர்ந்தெடுக்கவும். ஒரு பக்கம் என்பது இயல்புநிலையாகத் தேர்ந்தெடுக்கப்படும்.
சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.
மொபைல்
Shopify செயலியிலிருந்து,
என்பதைத் தட்டி, அதன் பிறகு
அமைப்புகள் என்பதைத் தட்டவும்.
ஸ்டோர் அமைப்புகள் பிரிவில், மெட்டாஃபீல்டுகள் மற்றும் மெட்டாஆப்ஜெக்ட்கள் என்பதைத் தட்டவும்.
மெட்டாஃபீல்டு வரையறைகள் பிரிவில், தயாரிப்புகள் என்பதைத் தட்டவும்.
+ என்பதைத் தட்டவும்.
பெயர் புலத்தில், அளவுப் பட்டியல் என உள்ளிடவும்.
+ வகையைத் தேர்ந்தெடு என்பதைத் தட்டவும்.
கீழ்தோன்றும் மெனுவிலிருந்து பக்கம் என்பதைத் தேர்ந்தெடுக்கத் தட்டவும். ஒரு பக்கம் என்பது இயல்புநிலையாகத் தேர்ந்தெடுக்கப்படும்.
சேமி அல்லது ✓ என்பதைத் தட்டவும்.
படி 2: உங்கள் தயாரிப்புப் பக்க வார்ப்புருவை உருவாக்கவும்
இந்த டுடோரியலுக்கு இயங்குநிலை மூலங்களை ஆதரிக்கும் தீம் தேவை. நீங்கள் விண்டேஜ் தீமைப் பயன்படுத்தினால் அல்லது உங்கள் தீம் ஆதரிக்காத மெட்டாஃபீல்டு வகைகளைச் சேர்க்க விரும்பினால், நீங்கள் உங்கள் தீம் குறியீட்டைத் திருத்தலாம் அல்லது Shopify பார்ட்னரைப் பணியமர்த்தலாம்.
ஒரு பிரிவு அல்லது பிளாக்கைச் சேர்த்த பிறகு, இயங்குநிலை மூல ஐகானைக் கிளிக் செய்வதன் மூலம் மெட்டாஃபீல்டை நீங்கள் தேர்ந்தெடுக்கலாம்:

உங்கள் அனைத்துத் தயாரிப்புகளுக்கும் அளவுப் பட்டியலுக்கான பாப்-அப் இணைப்பை நீங்கள் சேர்க்க விரும்பவில்லை என்றால், நீங்கள் புதிய தயாரிப்புப் பக்க வார்ப்புருவை உருவாக்க வேண்டும். இந்தப் படிகளில் நீங்கள் ஒரு புதிய தயாரிப்புப் பக்க வார்ப்புருவை உருவாக்குவீர்கள், ஆனால் அதற்குப் பதிலாக இருக்கும் தயாரிப்புப் பக்க வார்ப்புருவையும் தனிப்பயனாக்கத் தேர்ந்தெடுக்கலாம்.
படிகள்:
டெஸ்க்டாப்
- உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, ஆன்லைன் ஸ்டோர் என்பதற்குச் செல்லவும்.
- நீங்கள் தனிப்பயனாக்க விரும்பும் தீமிற்கு அடுத்துள்ள தீமைத் திருத்து என்பதைக் கிளிக் செய்யவும்.
- எடிட்டரின் மேற்புறத்தில் உள்ள முகப்புப் பக்கக் கீழ்தோன்றும் மெனுவிலிருந்து, தயாரிப்புகள் என்பதைக் கிளிக் செய்து, புதிய வார்ப்புருவை உருவாக்கித் தனிப்பயனாக்க ⊕ வார்ப்புருவை உருவாக்கு என்பதைக் கிளிக் செய்யவும்.
- பிரிவுகள் வழிசெலுத்தல் பக்கப்பட்டியில், வார்ப்புரு > தயாரிப்புத் தகவல் பிளாக்குகளுக்குச் சென்று, பின்னர் ⊕ பிளாக்கைச் சேர் என்பதைக் கிளிக் செய்யவும்.
- பாப்-அப் என்பதைக் கிளிக் செய்யவும்.
- இணைப்பு லேபிள் புலத்தில், அளவுப் பட்டியல் என உள்ளிடவும். பாப்-அப் பக்க உள்ளடக்கத்திற்காக வாடிக்கையாளர் கிளிக் செய்வதை இந்த உரை காண்பிக்கும்.
- பக்கம் என்பதற்கு அடுத்துள்ள, இயங்குநிலை மூல ஐகானைக் கிளிக் செய்து, நீங்கள் உருவாக்கிய பக்கக் குறிப்பு மெட்டாஃபீல்டைத் தேர்ந்தெடுக்கக் கிளிக் செய்யவும்.
- சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.
மொபைல்
Shopify செயலியிலிருந்து,
ஐகானைத் தட்டவும்.
விற்பனைச் சேனல்கள் பிரிவில், ஆன்லைன் ஸ்டோர் > அனைத்துத் தீம்களையும் நிர்வகி என்பதைத் தட்டவும்.
நீங்கள் தனிப்பயனாக்க விரும்பும் தீமிற்கான தீமைத் திருத்து என்பதைத் தட்டவும்.
எடிட்டரின் மேற்புறத்தில் உள்ள முகப்புப் பக்கக் கீழ்தோன்றும் மெனுவிலிருந்து, தயாரிப்புகள் என்பதைத் தட்டி, புதிய வார்ப்புருவை உருவாக்கித் தனிப்பயனாக்க ⊕ வார்ப்புருவை உருவாக்கு என்பதைத் தட்டவும்.
பிரிவுகள் வழிசெலுத்தல் பக்கப்பட்டியில், வார்ப்புரு > தயாரிப்புத் தகவல் பிளாக்குகளுக்குச் சென்று, பின்னர் ⊕ பிளாக்கைச் சேர் என்பதைத் தட்டவும்.
பாப்-அப் என்பதைத் தட்டவும்.
இணைப்பு லேபிள் புலத்தில், அளவுப் பட்டியல் என உள்ளிடவும். பாப்-அப் பக்க உள்ளடக்கத்திற்காக வாடிக்கையாளர் கிளிக் செய்வதை இந்த உரை காண்பிக்கும்.
பக்கம் என்பதற்கு அடுத்துள்ள, இயங்குநிலை மூல ஐகானைத் தட்டி, நீங்கள் உருவாக்கிய பக்கக் குறிப்பு மெட்டாஃபீல்டைத் தேர்ந்தெடுக்கத் தட்டவும்.
சேமி அல்லது ✓ என்பதைத் தட்டவும்.
படி 3: உங்கள் அளவுப் பட்டியலுடன் ஒரு பக்கத்தைச் சேர்க்கவும்
மெட்டாஃபீல்டு குறிப்பிடும் அளவுப் பட்டியல் உள்ளடக்கத்தைக் கொண்டு ஒரு பக்கத்தை நீங்கள் உருவாக்க வேண்டும். நீங்கள் ஏற்கனவே ஒரு பக்கத்தை உருவாக்கியிருந்தால், படி 4-க்குத் தாவலாம்.
படிகள்:
டெஸ்க்டாப்
- உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, ஆன்லைன் ஸ்டோர் > பக்கங்கள் என்பதற்குச் செல்லவும்.
- பக்கத்தைச் சேர் என்பதைக் கிளிக் செய்யவும்.
- தலைப்பு புலத்தில், அளவுப் பட்டியல் என உள்ளிட்டு, பின்னர் உள்ளடக்கம் என்பதில் அளவுப் பட்டியல் தகவலைச் சேர்க்கவும்.
- தெரிவுநிலை பிரிவில், பக்கத்தை தெரியும் என அமைக்கவும்.
- சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.
மொபைல்
Shopify செயலியிலிருந்து,
ஐகானைத் தட்டவும்.
விற்பனைச் சேனல்கள் பிரிவில், ஆன்லைன் ஸ்டோர் > பக்கங்கள் என்பதைத் தட்டவும்.
பக்கத்தைச் சேர் என்பதைத் தட்டவும்.
தலைப்பு புலத்தில், அளவுப் பட்டியல் என உள்ளிட்டு, பின்னர் உள்ளடக்கம் என்பதில் அளவுப் பட்டியல் தகவலைச் சேர்க்கவும்.
தெரிவுநிலை பிரிவில், பக்கத்தை தெரியும் என அமைக்கவும்.
சேமி அல்லது ✓ என்பதைத் தட்டவும்.
மெட்டாஃபீல்டில் குறிப்பிடுவதற்காக உங்களுக்குத் தேவையான அளவு அளவு விளக்கப்படப் பக்கங்களை நீங்கள் உருவாக்கிக் கொள்ளலாம். இருப்பினும், தயாரிப்பு மெட்டாஃபீல்டில் ஒரு பக்கத்தை மட்டுமே இணைக்க முடியும்.
படி 4: குறிப்பிட்ட தயாரிப்புகளுக்குப் பக்கத்தைக் குறிப்பிட்டு தயாரிப்பு வார்ப்புருவைப் பயன்படுத்துங்கள்
ஒரு குறிப்பிட்ட தயாரிப்புக்கு நீங்கள் பக்கக் குறிப்பைச் சேர்க்கும்போது, அந்தப் பக்கத்தில் உள்ள தகவல்கள் அந்தத் தயாரிப்புடன் மட்டுமே காட்டப்படும். அந்தத் தயாரிப்பு வார்ப்புருவைப் பயன்படுத்தும் தயாரிப்புக்கு நீங்கள் பக்கக் குறிப்பைக் காலியாக விட்டால், இணைப்பு உரை இன்னமும் இணைப்பாகக் காட்டப்படும். இருப்பினும், எந்தப் பக்கக் குறிப்பும் இல்லாமல் பாப்-அப் காலியாக இருக்கும், மேலும் இது உங்கள் வாடிக்கையாளர்களுக்குக் குழப்பத்தை ஏற்படுத்தக்கூடும். ஆடைகள் அல்லது காலணிகள் போன்ற அளவு விளக்கப்படங்களைக் கொண்ட குறிப்பிட்ட தயாரிப்பு வகைகளுக்கு ஒரு தயாரிப்புப் பக்க வார்ப்புருவையும், குழந்தைகளின் பொம்மைகள் அல்லது நகைகள் மற்றும் பிற அணிகலன்கள் போன்ற பிற தயாரிப்பு வகைகளுக்கு வேறொரு தயாரிப்பு வார்ப்புருவையும் நீங்கள் பயன்படுத்தலாம்.
வார்ப்புருக்கள் குறித்து மேலும் அறிக.
படிகள்:
டெஸ்க்டாப்
- உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, தயாரிப்புகள் என்பதற்குச் செல்லவும்.
- பக்கக் குறிப்பைச் சேர்க்க வேண்டிய தயாரிப்பைக் கிளிக் செய்யவும்.
- தயாரிப்பு மெட்டாஃபீல்டுகள் பிரிவில், அளவு விளக்கப்படம் பக்கக் குறிப்பைக் கிளிக் செய்து, பக்கங்களைத் தேர்ந்தெடு என்பதைக் கிளிக் செய்து, அளவு விளக்கப்படப் பக்கத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
- தீம் வார்ப்புரு பிரிவில், 2-வது படியில் நீங்கள் உருவாக்கிய அளவு விளக்கப்படம் தயாரிப்புப் பக்க வார்ப்புருவைத் தேர்ந்தெடுக்கவும்.
- சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.
மொபைல்
- Shopify செயலியில்,
ஐகானைத் தட்டவும் .
- பக்கக் குறிப்பைச் சேர்க்க வேண்டிய தயாரிப்பைத் தட்டவும்.
- தயாரிப்பு மெட்டாஃபீல்டுகள் பிரிவில், அளவு விளக்கப்படம் பக்கக் குறிப்பைத் தட்டி, பக்கங்களைத் தேர்ந்தெடு என்பதைத் தட்டி, அளவு விளக்கப்படப் பக்கத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
- தீம் வார்ப்புரு பிரிவில், 2-வது படியில் நீங்கள் உருவாக்கிய அளவு விளக்கப்படம் தயாரிப்புப் பக்க வார்ப்புருவைத் தேர்ந்தெடுக்கவும்.
- சேமி அல்லது ✓ என்பதைத் தட்டவும்.
உங்களுக்குத் தேவையான பல தயாரிப்புகளுக்கு இந்தப் படிகளைத் திரும்பத் திரும்பச் செய்யலாம்.