மெட்டாஆப்ஜெக்ட்டுகளை இணைத்தலும் காண்பித்தலும்
பின்வரும் வழிகளில் எதைப் பயன்படுத்தியும் உங்கள் தீமில் உள்ள மெட்டாஆப்ஜெக்ட்டுகளின் உள்ளடக்கத்தைக் காண்பிக்க, தீம் எடிட்டரைப் பயன்படுத்தலாம்:
- பிளாக்குகளுடன் மெட்டாஆப்ஜெக்ட்டுகளை இணைத்தல்
- இயங்குநிலை மூலங்களை ஆதரிக்கும் பிளாக் அமைப்புகளுடனும் தீம் அமைப்புகளுடனும் மெட்டாஆப்ஜெக்ட் ஃபீல்டுகளை இணைத்தல்
- மெட்டாஆப்ஜெக்ட்டுகளைச் சேர்க்க உங்கள் தீம் குறியீட்டைத் திருத்துதல்
படிப்படியான வழிமுறைகளுக்கு, Product highlight (தயாரிப்பு சிறப்பம்சம்) மெட்டா ஆப்ஜெக்ட் வரையறையை உருவாக்குவது எப்படி என அறிக.
இந்தப் பக்கத்தில்
- மெட்டாஆப்ஜெக்ட்டுகளை இணைப்பதற்கும் காண்பிப்பதற்குமான இணக்கத்தன்மை சார்ந்த பரிசீலனைகள்
- பிளாக்குகளுடன் மெட்டாஆப்ஜெக்ட்டுகள், மெட்டாஆப்ஜெக்ட் குறிப்புகளை இணைத்தல்
- இயங்குநிலை மூலங்களை ஆதரிக்கும் அமைப்புகளுடன் மெட்டாஆப்ஜெக்ட் ஃபீல்டுகளை இணைத்தல்
- மெட்டாஆப்ஜெக்ட்டுகளைச் சேர்க்க, உங்கள் தீம் குறியீட்டைத் திருத்துதல்
மெட்டாஆப்ஜெக்ட்டுகளை இணைப்பதற்கும் காண்பிப்பதற்குமான இணக்கத்தன்மை சார்ந்த பரிசீலனைகள்
உங்கள் ஆன்லைன் ஸ்டோரில் மெட்டாஆப்ஜெக்ட்டுகளை இணைப்பதற்கும் காண்பிப்பதற்கும் பின்வரும் பரிசீலனைகளை மதிப்பாய்வு செய்யவும்:
- தீம் எடிட்டரில் ஒரு மெட்டாஆப்ஜெக்ட்டை பிளாக் அல்லது அமைப்புடன் இணைக்க, மெட்டாஆப்ஜெக்ட்டில் உள்ள மெட்டாஆப்ஜெக்ட்டின் மெட்டாஃபீல்டு வகைகள், பிளாக்கில் உள்ள உள்ளடக்கத்தின் வகையுடன் பொருந்த வேண்டும். பொருந்தக்கூடிய எந்தவொரு வகையையும் உங்கள் தீம் அமைப்புகளில் உள்ள தொடர்புடைய பகுதியுடன் இணைக்கலாம்.
- ஒரு மெட்டாஆப்ஜெக்ட்டை இணைக்க, நெடுவரிசைப் பிளாக்கின் தலைப்பு அல்லது கேப்ஷன் பிளாக் அமைப்புகளுடன் இணைக்க வேண்டிய ஒற்றை வரி உரை மெட்டாஃபீல்டு போன்ற தொடர்புடைய மெட்டாஃபீல்டு வகையை மெட்டாஆப்ஜெக்ட் கொண்டிருக்க வேண்டும்.
- உங்கள் ஆன்லைன் ஸ்டோரில் மெட்டாஆப்ஜெக்ட்டைக் காண்பிக்க, அதற்கு ஸ்டோர்ஃபிரண்டுகளின் அணுகல் உள்ளதா என்பதை உறுதிசெய்ய வேண்டும். பிரத்தியேகத் தரவுக்கான விருப்பங்கள் பற்றி மேலும் அறிக.
- மெட்டாஆப்ஜெக்ட் ஃபீல்டு ஒரு பட்டியலாக இருந்தால், பட்டியலில் உள்ள ஒவ்வொரு உள்ளீட்டையும் தீம் எடிட்டர் தானாகவே பிளாக் அமைப்பில் சேர்க்கும்.
பிளாக்குகளுடன் மெட்டாஆப்ஜெக்ட்டுகள், மெட்டாஆப்ஜெக்ட் குறிப்புகளை இணைத்தல்
ஒரு தயாரிப்பின் வகை மெட்டாஃபீல்டுகளை தயாரிப்பு வார்ப்புருவுடன் இணைப்பது போன்ற, தொடர்புடைய வார்ப்புருக்கான மெட்டாஆப்ஜெக்ட் குறிப்பான மெட்டாஃபீல்டை அல்லது நீங்கள் உருவாக்கிய மெட்டாஆப்ஜெக்ட்டை மெட்டாஆப்ஜெக்ட் இணைப்புகளை ஆதரிக்கக்கூடிய எந்தவொரு பிளாக்குகளுடனும் நேரடியாக இணைக்கலாம். ஒரு மெட்டாஆப்ஜெக்ட்டை பிளாக்குடன் இணைப்பது, இணக்கமான ஃபீல்டுகளை பிளாக்கின் அமைப்புகளுடன் தானாகவே பொருத்தும்.
மெட்டாஆப்ஜெக்ட்டுகள் அல்லது மெட்டாஆப்ஜெக்ட் குறிப்புகளை மட்டுமே நீங்கள் பிளாக்குடன் இணைக்க முடியும். உதாரணமாக, நீங்கள் புத்தகங்களை விற்பனை செய்கிறீர்கள் என்றும் உங்கள் தயாரிப்புகளில் பின்வரும் தயாரிப்பு மெட்டாஃபீல்டுகளைச் சேர்த்துள்ளீர்கள் என்றும் வைத்துக்கொள்வோம்:
- ஒற்றை வரி உரை மெட்டாஃபீல்டு வகையைப் பயன்படுத்தும் shipping dimensions (ஷிப்பிங் பரிமாணங்கள்)
- முழு எண் மெட்டாஃபீல்டு வகையைப் பயன்படுத்தும் number of pages (பக்கங்களின் எண்ணிக்கை)
- வகை மெட்டாஃபீல்டைப் பயன்படுத்தும் book cover type (புத்தக அட்டை வகை)
- மெட்டாஆப்ஜெக்ட் குறிப்பு வகையைப் பயன்படுத்தும் author (ஆசிரியர்).
தீம் எடிட்டரில் உள்ள உங்கள் தயாரிப்பு வார்ப்புருவில், book cover type அல்லது author தயாரிப்பு மெட்டாஃபீல்டுகளை நீங்கள் இணைக்கலாம், ஆனால் shipping dimensions அல்லது number of pages மெட்டாஃபீல்டுகளை இணைக்க முடியாது.
உங்கள் நிர்வாகிப் பகுதிகளில் உள்ள மெட்டாஆப்ஜெக்ட் குறிப்பு வகைகளைக் கொண்ட மெட்டாஃபீல்டுகளை உங்கள் தீமில் பொருந்தும் வார்ப்புருக்களுடன் மட்டுமே உங்களால் இணைக்க முடியும். உதாரணமாக, உங்கள் முகப்புப் பக்கத்தைத் தனிப்பயனாக்குகிறீர்கள் எனில், உங்கள் Shopify நிர்வாகியின் உள்ளடக்கம் > மெட்டாஆப்ஜெக்ட்டுகள் பிரிவிலிருந்து எந்தவொரு பிரத்தியேக மெட்டாஆப்ஜெக்ட்டுகளையும் இணைக்கலாம், ஆனால் உங்கள் தயாரிப்பு மெட்டாஃபீல்டுகளிலிருந்து மெட்டாஆப்ஜெக்ட் குறிப்புகளைக் கொண்ட எந்த மெட்டாஃபீல்டுகளையும் உங்களால் இணைக்க முடியாது.
படிகள்:
உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, ஆன்லைன் ஸ்டோர் என்பதற்குச் செல்லவும்.
நீங்கள் திருத்த விரும்பும் தீமுக்கு அடுத்துள்ள தீமைத் திருத்து என்பதைக் கிளிக் செய்யவும்.
விருப்பத்தேர்வு: முகப்புப் பக்கத்தைத் தவிர்த்து வேறொரு வார்ப்புருவைத் தனிப்பயனாக்க நீங்கள் விரும்பினால், மெனு பட்டியில் உள்ள வார்ப்புரு மெனுவிலிருந்து நீங்கள் தனிப்பயனாக்க விரும்பும் வார்ப்புருவைத் தேர்ந்தெடுக்கவும்.
மெட்டாஆப்ஜெக்ட் அல்லது மெட்டாஆப்ஜெக்ட் குறிப்பை நீங்கள் இணைக்க விரும்பும் பிளாக்கைக் கிளிக் செய்யவும்.
பிளாக்குக்கு அடுத்துள்ள
பொத்தானைக் கிளிக் செய்யவும்.
கிடைக்கப்பெற்றால், பின்வரும் ஏதேனும் மூலங்களிலிருந்து ஒரு மெட்டாஆப்ஜெக்ட் அல்லது மெட்டாஆப்ஜெக்ட் குறிப்பைத் தேர்ந்தெடுக்கவும்:
- இந்த வார்ப்புருப் பிரிவிலிருந்து என்பதில், வார்ப்புரு > தயாரிப்பு என்பதைக் கிளிக் செய்து, வகை மெட்டாஃபீல்டு போன்ற இணக்கமான மெட்டாஆப்ஜெக்ட் குறிப்பு வகையைத் தேர்ந்தெடுக்கவும்.
- உங்கள் ஸ்டோரிலிருந்து பிரிவில், மெட்டாஆப்ஜெக்ட்டுகள், சந்தை அல்லது பிராண்ட் என்பதைக் கிளிக் செய்து, இணக்கமான மெட்டாஆப்ஜெக்ட் அல்லது மெட்டாஆப்ஜெக்ட் குறிப்பைத் தேர்ந்தெடுக்கவும்.
- சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.
இயங்குநிலை மூலங்களை ஆதரிக்கும் அமைப்புகளுடன் மெட்டாஆப்ஜெக்ட் ஃபீல்டுகளை இணைத்தல்
இணக்கமான பிளாக் அமைப்பு அல்லது தீம் அமைப்புடன் மெட்டாஆப்ஜெக்ட் ஃபீல்டை நேரடியாக இணைக்கலாம்.
படிகள்:
உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, ஆன்லைன் ஸ்டோர் என்பதற்குச் செல்லவும்.
நீங்கள் திருத்த விரும்பும் தீமுக்கு அடுத்துள்ள தீமைத் திருத்து என்பதைக் கிளிக் செய்யவும்.
விருப்பத்தேர்வு: முகப்புப் பக்கத்தைத் தவிர்த்து வேறொரு வார்ப்புருவைத் தனிப்பயனாக்க நீங்கள் விரும்பினால், மெனு பட்டியில் உள்ள வார்ப்புரு மெனுவிலிருந்து நீங்கள் தனிப்பயனாக்க விரும்பும் வார்ப்புருவைத் தேர்ந்தெடுக்கவும்.
விருப்பத்தேர்வு: தீம் அமைப்புடன் இயங்குநிலை மூலத்தை இணைக்க நீங்கள் விரும்பினால்,
பொத்தானைக் கிளிக் செய்யவும்.
ஒரு மெட்டாஆப்ஜெக்ட் அல்லது மெட்டாஆப்ஜெக்ட் குறிப்பை நீங்கள் இணைக்க விரும்பும் அமைப்பைக் கிளிக் செய்யவும்.
அமைப்புக்கு அடுத்துள்ள
பொத்தானைக் கிளிக் செய்யவும்.
கிடைக்கப்பெற்றால், பின்வரும் ஏதேனும் மூலங்களிலிருந்து ஒரு மெட்டாஆப்ஜெக்ட் அல்லது மெட்டாஆப்ஜெக்ட் குறிப்பைத் தேர்ந்தெடுக்கவும்:
- இந்த வார்ப்புருப் பிரிவிலிருந்து என்பதில், வார்ப்புரு > தயாரிப்பு என்பதைக் கிளிக் செய்து, வகை மெட்டாஃபீல்டு போன்ற இணக்கமான மெட்டாஆப்ஜெக்ட் குறிப்பு வகையைத் தேர்ந்தெடுக்கவும்.
- உங்கள் ஸ்டோரிலிருந்து பிரிவில், மெட்டாஆப்ஜெக்ட்டுகள், சந்தை அல்லது பிராண்ட் என்பதைக் கிளிக் செய்து, இணக்கமான மெட்டாஆப்ஜெக்ட் அல்லது மெட்டாஆப்ஜெக்ட் குறிப்பைத் தேர்ந்தெடுக்கவும்.
- நீங்கள் இணைக்க விரும்பும் மெட்டாஆப்ஜெக்ட் ஃபீல்டைத் தேர்ந்தெடுக்கவும்.
- சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.
மெட்டாஆப்ஜெக்ட்டுகளைச் சேர்க்க, உங்கள் தீம் குறியீட்டைத் திருத்துதல்
Shopify-இன் டெம்ப்ளேட்டிங் மொழியான Liquid என்பதைப் பயன்படுத்தி உங்கள் ஆன்லைன் ஸ்டோரில் எங்கு வேண்டுமானாலும் உங்கள் மெட்டாஆப்ஜெக்ட் உள்ளீடுகளைப் பயன்படுத்தலாம். பக்கங்கள், வலைப்பதிவுகள், முகப்புப்பக்கம் மற்றும் சேகரிப்பு வார்ப்புருக்களுடன் மெட்டாஆப்ஜெக்ட் உள்ளீடுகளை இணைக்கலாம்.
இந்த உள்ளீடுகள் மெட்டாஃபீல்டுகள் மூலம் குறிப்பிடப்படலாம் அல்லது நேரடியாக அணுகப்படலாம், அத்துடன் இவற்றை ஒரு மெட்டாஆப்ஜெக்ட் அல்லது மெட்டாஆப்ஜெக்ட் பட்டியல் அமைப்பின் மூலமும் செயல்படுத்தலாம்.
உங்கள் ஆன்லைன் ஸ்டோரில் மெட்டாஆப்ஜெக்ட்களைக் காண்பிப்பதற்கு உங்கள் தீம் குறியீட்டைத் திருத்த விரும்பினால், உங்கள் தீம் வார்ப்புருக்களில் உள்ள மெட்டாஃபீல்டுகளைக் குறிப்பிட Liquid என்பதைப் பயன்படுத்தலாம்.
Shopify பார்ட்னரைப் பணியமர்த்துவது மற்றும் டெவலப்பர்களுக்காகத் தனிப்பயன் தரவைப் பயன்படுத்துவது குறித்து மேலும் அறிக.