மெட்டாஆப்ஜெக்ட்டை உருவாக்கி இணைத்தல்

தயாரிப்பு சிறப்பம்சங்களுக்கான தனிப்பயன் மெட்டாஆப்ஜெக்ட்டை உருவாக்கி, அவற்றை உங்கள் ஆன்லைன் ஸ்டோரில் எப்படி காண்பிப்பது என்பதை இந்த டுடோரியலில் நீங்கள் அறிவீர்கள். தயாரிப்பின் சிறப்பம்சங்களுக்கான மெட்டாஆப்ஜெக்ட் படம் ஒன்றையும், தயாரிப்பின் பெயரையும், ஓர் அடிக்குறிப்பு மற்றும் விளக்கத்தையும் காண்பிக்கும்.

இந்த டுடோரியலானது, மெட்டா ஆப்ஜெக்ட் வரையறைகள், உள்ளீடுகளை உருவாக்குதல், மெட்டாஃபீல்டு குறிப்பை அமைத்தல், தயாரிப்புகளை உள்ளீடுகளுடன் இணைத்தல், இறுதியாக உங்கள் ஆன்லைன் ஸ்டோரில் மெட்டாஆப்ஜெக்ட்டை வெளியிடுதல் ஆகியவற்றை அறிமுகப்படுத்துகிறது.

இந்தப் பக்கத்தில்

நீங்கள் அறியவிருப்பவை

இந்த டுடோரியலை முடித்த பிறகு, நீங்கள் பின்வரும் பணிகளைச் செய்து முடித்திருப்பீர்கள்:

  • தயாரிப்பின் சிறப்பம்சங்களுக்கான மெட்டாஆப்ஜெக்ட் உருவாக்கப்பட்டிருக்கும்
  • நீங்கள் உருவாக்கிய மெட்டாஆப்ஜெக்ட்டைப் பயன்படுத்தி தயாரிப்பின் சிறப்பம்சங்களுக்கான பல உள்ளீடுகள் உருவாக்கப்பட்டிருக்கும்
  • மெட்டாஆப்ஜெக்ட்டைக் குறிப்பிடுகின்ற மெட்டாஃபீல்டு வரையறை உருவாக்கப்பட்டிருக்கும்
  • உங்கள் உள்ளீடுகள் குறிப்பிட்ட தயாரிப்புகளுடன் இணைக்கப்பட்டிருக்கும்
  • உங்கள் மெட்டாஆப்ஜெக்ட் உள்ளீடுகள் வெளியிடப்பட்டிருக்கும்

படி 1: மெட்டாஆப்ஜெக்ட்டை உருவாக்குதல்

  1. உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, அமைப்புகள் > மெட்டாஃபீல்டுகளும் மெட்டாஆப்ஜெக்ட்களும் என்பதற்குச் செல்லவும்.

  2. மெட்டா ஆப்ஜெக்ட் வரையறைகள் என்பதில், வரையறையைச் சேர் என்பதைக் கிளிக் செய்யவும்.

  3. உங்கள் மெட்டா ஆப்ஜெக்ட் வரையறைக்கு தயாரிப்பின் சிறப்பம்சங்கள் எனப் பெயரிடவும்.

  4. ஃபீல்டைச் சேர் என்பதைக் கிளிக் செய்து, இந்த மெட்டாஆப்ஜெக்ட்டில் நீங்கள் காண்பிக்க விரும்பும் உள்ளடக்க வகையைத் தேர்ந்தெடுக்கவும். ஃபீல்டுகள் உங்கள் மெட்டாஆப்ஜெக்ட்டில் காண்பிக்கப்படும் உள்ளடக்கத்தை வரையறுக்கின்றன, மேலும் ஒவ்வொரு ஃபீல்டுக்கும் தனக்கெனச் சில விருப்பத்தேர்வுகளும் சரிபார்ப்புகளும் உள்ளன. முதல் ஃபீல்டைச் சேர்க்க, கோப்பு என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

  5. வகை மற்றும் சரிபார்ப்புகளை உள்ளமைக்கவும். ஃபீல்டிற்கு படம் எனப் பெயரிட்டு, ஒரு சுருக்கமான விளக்கத்தை உள்ளிடவும்.

  6. அணுகல் என்பதன் கீழ், ஸ்டோர்ஃபிரண்ட் என்பது தானாகவே தேர்ந்தெடுக்கப்படும். இந்த விருப்பத்தேர்வானது உள்ளடக்கத்தை அணுகவும் உங்கள் ஸ்டோரில் காண்பிக்கவும் அனுமதிப்பதால் இது தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதை உறுதிசெய்யவும்.

  7. உங்கள் மெட்டாஆப்ஜெக்ட்டில் பட ஃபீல்டைச் சேர்க்கவும். ஃபீல்டைச் சேர் > கோப்பு என்பதைத் தேர்வுசெய்யவும்.

  • இந்த ஃபீல்டிற்கு படம் எனப் பெயரிடவும்.
  • படங்களை மட்டுமே காண்பிக்குமாறு இந்த மெட்டாஆப்ஜெக்ட்டைக் கட்டுப்படுத்த, வீடியோக்கள் என்பதன் தேர்வை நீக்கவும்.
  • விளக்கத்தை உள்ளிடவும்.
  • முடித்ததும் சேர் என்பதைக் கிளிக் செய்யவும்.
  1. உங்கள் மெட்டாஆப்ஜெக்ட்டில் தலைப்பு ஃபீல்டைச் சேர்க்கவும். இந்த முறை, ஃபீல்டு வகையாக ஃபீல்டைச் சேர் > ஒற்றை வரி உரை என்பதைத் தேர்வுசெய்யவும். பின்வருவனவற்றைச் செய்யவும்:
  • இந்த ஃபீல்டிற்கு தலைப்பு எனப் பெயரிடவும்.
  • குறியீட்டில் உள்ளீட்டுப் பெயராக இந்த ஃபீல்டைப் பயன்படுத்த, இந்த ஃபீல்டைக் காட்சிப் பெயராகப் பயன்படுத்து என்பதைத் தேர்வுசெய்யவும்.
  • விளக்கத்தை உள்ளிடவும்.
  • முடித்ததும் சேர் என்பதைக் கிளிக் செய்யவும்.
  1. உங்கள் மெட்டாஆப்ஜெக்ட்டில் அடிக்குறிப்பு ஃபீல்டைச் சேர்க்கவும். ஃபீல்டைச் சேர் > ஒற்றை வரி உரை என்பதைக் கிளிக் செய்யவும். பின்வருவனவற்றைச் செய்யவும்:
  • இந்த ஃபீல்டிற்கு அடிக்குறிப்பு எனப் பெயரிடவும்.
  • விளக்கத்தை உள்ளிடவும்.
  • முடித்ததும் சேர் என்பதைக் கிளிக் செய்யவும்.
  1. உங்கள் மெட்டாஆப்ஜெக்ட்டில் விளக்க ஃபீல்டைச் சேர்க்கவும். ஃபீல்டைச் சேர் > பல வரி உரை என்பதைக் கிளிக் செய்யவும். பின்வருவனவற்றைச் செய்யவும்:
  • இந்த ஃபீல்டிற்கு விளக்கம் எனப் பெயரிடவும்.
  • விளக்கத்தை உள்ளிடவும்.
  • முடித்ததும் சேர் என்பதைக் கிளிக் செய்யவும்.
  1. உங்களின் புதிய மெட்டா ஆப்ஜெக்ட் வரையறையைச் சேமிக்கவும்.

உங்கள் மெட்டா ஆப்ஜெக்ட் வரையறை சேமிக்கப்பட்ட பிறகு, நீங்கள் உள்ளீடுகளை உருவாக்கத் தொடங்கலாம்.

படி 2: உள்ளீடுகளை உருவாக்குதல்

  1. உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, உள்ளடக்கம் என்பதைக் கிளிக் செய்யவும்.
  2. புதிய உள்ளீட்டை அடிப்படையாகக் கொள்ள தயாரிப்பின் சிறப்பம்சங்கள் மெட்டா ஆப்ஜெக்ட் வரையறையைக் கிளிக் செய்து, அதன்பிறகு உள்ளீட்டைச் சேர் என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. உங்கள் உள்ளீட்டிற்கான ஃபீல்டுகளை நிரப்பவும்:
    • படத்தைத் தேர்ந்தெடு என்பதைக் கிளிக் செய்து, இந்தத் தயாரிப்பின் சிறப்பம்சத்திற்கு ஒரு படத்தைத் தேர்வுசெய்யவும் அல்லது பதிவேற்றவும்.
    • தலைப்பு மற்றும் ஒரு விளக்கத்தைச் சேர்க்கவும்.
  4. நிலையானது தானாகவே செயலில் உள்ளது என அமைக்கப்படும். நீங்கள் உள்ளீடுகளைப் பயன்படுத்தத் தயாராக இல்லை எனில், நிலையை வரைவு என மாற்றலாம்.
  5. சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.

உங்கள் உள்ளீட்டில் உருவாக்கப்பட்ட ஒரு ஹேண்டில் இருக்கும், இது ஒரு குறிப்பிட்ட உள்ளடக்க உள்ளீட்டிற்கான பிரத்தியேக அடையாளங்காட்டி ஆகும். உங்கள் உள்ளீடுகளை ஸ்டோரின் பிரிவுகளுடன் இணைக்கத் தொடங்கிய பிறகு, ஹேண்டிலைத் திருத்துவது பரிந்துரைக்கப்படுவதில்லை. உங்கள் ஸ்டோரில் உள்ளீட்டு ஹேண்டிலைப் பயன்படுத்திய பிறகு அதை மாற்றுவதால் ஏற்படும் தாக்கம் குறித்து மேலும் அறிக.

தயாரிப்பின் சிறப்பம்சங்களுக்கான மெட்டா ஆப்ஜெக்ட் வரையறையின் அடிப்படையில் மேலும் மூன்று உள்ளீடுகளை உருவாக்க, மேலே உள்ள படிகளை மீண்டும் செய்யவும்.

உங்கள் மெட்டா ஆப்ஜெக்ட் வரையறை மற்றும் உள்ளீடுகளைச் சேமித்த பிறகு, மெட்டாஆப்ஜெக்ட்டைக் குறிப்பிடும் மெட்டாஃபீல்டு வரையறையை உங்களால் உருவாக்க முடியும்.

படி 3: மெட்டாஆப்ஜெக்ட்டைக் குறிப்பிடும் மெட்டாஃபீல்டு வரையறையை உருவாக்குதல்

  1. உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, அமைப்புகள் > மெட்டாஃபீல்டுகளும் மெட்டாஆப்ஜெக்ட்களும் என்பதற்குச் செல்லவும்.

  2. மெட்டாஃபீல்டுகள் பிரிவில், தயாரிப்புகள் என்பதைக் கிளிக் செய்யவும்.

  3. வரையறையைச் சேர் என்பதைக் கிளிக் செய்யவும். தனித்துவமான பெயரையும் விளக்கத்தையும் உள்ளிட்டு, பின்னர் உள்ளடக்க வகையைத் தேர்ந்தெடு என்பதைக் கிளிக் செய்யவும்.

  4. வகையைத் தேர்ந்தெடு என்பதைக் கிளிக் செய்து, பின்னர் மெட்டாஆப்ஜெக்ட் என்பதைக் கிளிக் செய்யவும்.

  5. குறிப்பு பிரிவில், நீங்கள் குறிப்பிட விரும்பும் மெட்டா ஆப்ஜெக்ட் வரையறையைத் தேர்ந்தெடுக்கவும். Product highlights என்பதைத் தேர்வுசெய்யவும். இது தயாரிப்பு சிறப்பம்சங்கள் மெட்டாஆப்ஜெக்ட் தொடர்பான உள்ளீடுகளை மட்டுமே காட்டுமாறு மெட்டாஃபீல்டு தயாரிப்பு வரையறையை வரம்புக்குட்படுத்துகிறது.

  6. இந்த வரையறை ஒரு உள்ளீட்டைக் காட்ட முடியுமா அல்லது அவற்றின் பட்டியலைக் காட்ட முடியுமா என்பதை வரையறுக்கவும். இந்த உதாரணத்திற்கு, உள்ளீடுகளின் பட்டியல் விருப்பத்தைத் தேர்வுசெய்யவும்.

  7. அணுகல் பிரிவில், ஸ்டோர்ஃபிரண்டுகள் விருப்பம் இயல்பாகவே தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும்.

  8. சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.

படி நான்கு: உங்கள் தயாரிப்புகளை உள்ளீடுகளுடன் இணைத்தல்

  1. உங்கள் Shopify நிர்வாகி-ல் இருந்து, தயாரிப்புகள் என்பதற்குச் செல்லவும்.

  2. தயாரிப்பு சிறப்பம்சங்களைக் காட்ட விரும்பும் தயாரிப்பைத் தேர்ந்தெடுக்கவும்.

  3. இந்த உதாரணத்தில், நாங்கள் உருவாக்கிய தயாரிப்பு சிறப்பம்சங்கள் உள்ளீடுகள் அனைத்தையும் அல்லாமல் சிலவற்றை மட்டும் காட்ட விரும்புகிறோம். தயாரிப்பு மெட்டாஃபீல்டுகள் பிரிவில், உங்களின் Product highlights மெட்டாஃபீல்டுக்கு அடுத்துள்ள உள்ளீட்டுப் புலத்தைக் கிளிக் செய்யவும். மெட்டாஃபீல்டுகள் பட்டியலில் தயாரிப்பு சிறப்பம்சங்கள் இல்லை எனில், அனைத்தையும் காட்டு என்பதைக் கிளிக் செய்யவும்.

  4. உள்ளீடுகளைத் தேர்ந்தெடு என்பதைக் கிளிக் செய்யவும். இந்தப் படியில், குறிப்பிட்ட இந்தத் தயாரிப்பில் நீங்கள் காட்ட விரும்பும் உள்ளீடுகளைத் தேர்ந்தெடுக்கிறீர்கள். உங்களின் தயாரிப்பு சிறப்பம்சங்களில் இரண்டைத் தேர்வுசெய்யவும்.

  5. உங்கள் தயாரிப்புகள் பக்கத்திற்குத் திரும்பவும். வேறு தயாரிப்பைத் தேர்ந்தெடுத்து, அந்தத் தயாரிப்பிற்கு இரண்டு வேறுபட்ட தயாரிப்பு சிறப்பம்சங்கள் உள்ளீடுகளை ஒதுக்க முந்தைய படியைப் பின்பற்றவும்.

அடுத்து, உங்கள் ஆன்லைன் ஸ்டோரில் மெட்டாஆப்ஜெக்ட்டுகளை வெளியிடுவீர்கள்.

படி ஐந்து: உங்கள் ஆன்லைன் ஸ்டோரில் உள்ளீடுகளை வெளியிடுதல்

இப்போது உங்கள் தயாரிப்புகளுடன் உள்ளீடுகளை இணைத்துவிட்டதால், உங்கள் ஸ்டோரில் உள்ளீடுகளைக் காட்ட வேண்டிய நேரம் இது. உங்கள் மெட்டாஆப்ஜெக்ட் உள்ளீடுகள் எங்கு இணைக்கப்படும் என்பதற்கான பிளாக்குகள் மற்றும் பிரிவுகளைத் தேர்ந்தெடுக்க இந்தப் படி தீம் எடிட்டரைப் பயன்படுத்துகிறது.

பிரிவு அல்லது பிளாக்கைச் சேர்த்த பிறகு, இயங்குநிலை மூலத்தை இணை பொத்தானைக் கிளிக் செய்வதன் மூலம் மெட்டாஃபீல்டைத் தேர்ந்தெடுக்கலாம்.

படிகள்:

  1. உங்கள் Shopify நிர்வாகி-ல் இருந்து, ஆன்லைன் ஸ்டோர் என்பதற்குச் செல்லவும்.

  2. நீங்கள் திருத்த விரும்பும் தீமைக் கண்டறிந்து, பின்னர் தீமைத் திருத்து என்பதைக் கிளிக் செய்யவும்.

  3. தயாரிப்புகள் > இயல்புநிலைத் தயாரிப்பு என்பதைத் தேர்ந்தெடுக்க, உங்கள் திரையின் மேற்புறத்தில் உள்ள கீழ்தோன்றும் மெனுவைப் பயன்படுத்தவும். இது தீம் எடிட்டரில் இயல்புநிலைத் தயாரிப்பு வார்ப்புருவை ஏற்றுகிறது.

  4. பக்கப்பட்டியில் உள்ள பிரிவைச் சேர் என்பதைக் கிளிக் செய்து, புதிய பிரிவு வகையாக பல்வேறு வரிசைகள் என்பதைத் தேர்வுசெய்யவும்.

  5. பல்வேறு வரிசைகள் பிரிவின் முதல் வரிசையைக் கிளிக் செய்யவும்.

    • முதல் பிளாக்கிற்கான அமைப்புகள் வலது பக்கப்பட்டியில் காட்டப்படும். உங்கள் நெடுவரிசை பிளாக்கில், நீங்களாகவே ஒரு படத்தைத் தேர்ந்தெடுக்கலாம், தலைப்பைச் செருகலாம், தலைப்புரையைச் சேர்க்கலாம், மேலும் விளக்கத்தைச் சேர்க்கலாம். ஒவ்வொரு தனிப்பட்ட தரவு மூல ஐகானையும் கிளிக் செய்து, பிளாக் அமைப்பை நீங்கள் விரும்பும் உள்ளீட்டுடன் இணைக்கவும் முடியும்.
  6. Product highlights என்பதைத் தேர்ந்தெடுக்க, பிளாக் பெயருக்கு அடுத்துள்ள இயங்குநிலை மூலத்தை இணை என்பதைக் கிளிக் செய்யவும். உங்கள் தீம் எடிட்டர் புதிய பல்வேறு வரிசைகள் கொண்ட பிளாக்கில் உங்களின் தயாரிப்பு சிறப்பம்சங்கள் உள்ளீடுகளைத் தானாக நிரப்புகிறது.

  7. பல்வேறு வரிசைகள் பிரிவில் மீதமுள்ள பிளாக்குகளை உள்ளமைக்கவும் அல்லது பயன்படுத்தப்படாத பிளாக்குகளை அகற்றவும்.

  8. உங்கள் தயாரிப்பு சிறப்பம்சங்கள் உள்ளீடுகளை வெளியிட, சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.

உங்கள் உள்ளீடுகள் இணைக்கப்பட்டுள்ள தயாரிப்புகளில் மட்டுமே காட்டப்படும். ஒரு தயாரிப்பிற்கு ஒதுக்கப்பட்ட உள்ளீடு இல்லை என்றால், இந்தப் பிரிவு முழுவதுமாக அகற்றப்படுவதற்குப் பதிலாக, வெற்றிடத்துடன் காலியாக விடப்படும். நீங்கள் பயன்படுத்தும் தீம் மற்றும் பிரிவைப் பொறுத்து துல்லியமான நடத்தை மாறுபடலாம், எனவே உங்கள் தேவைகளைப் பூர்த்திசெய்கிறதா என்பதை உறுதிசெய்ய வார்ப்புருவைச் சோதித்துப் பார்க்கவும்.

தயாரிப்பிற்கான உள்ளீடு இல்லாதபோது, நீங்கள் விரும்பியபடி பிரிவு காட்டப்படவில்லை எனில், புதிய தயாரிப்பு வார்ப்புருவை உருவாக்கி, உள்ளீடுகள் உள்ள தயாரிப்புகளுக்கு அந்த வார்ப்புருவை ஒதுக்குவதைக் கருத்தில் கொள்ளவும்.