வாடிக்கையாளர் கணக்குகளைத் தனிப்பயனாக்குதல்

உங்கள் வாடிக்கையாளர்கள் தங்கள் ஆர்டர்களையும் தகவல்களையும் தாங்களே நிர்வகிப்பதற்கு உதவும் சில இயல்புநிலை விருப்பங்களை உங்கள் ஆன்லைன் ஸ்டோரில் உள்ள வாடிக்கையாளர் கணக்குகள் வழங்குகின்றன. செயலிகளைக் கொண்டு வாடிக்கையாளர் கணக்குப் பக்கங்களில் கூடுதல் செயல்பாடுகளைச் சேர்க்கலாம் மற்றும் செக்அவுட் மற்றும் கணக்குகள் எடிட்டரைப் பயன்படுத்தி வாடிக்கையாளர் கணக்குப் பக்கங்களை உங்கள் பிராண்டிங்கிற்கு ஏற்றவாறு பொருத்தலாம்.

வாடிக்கையாளர் கணக்குகளில் உங்கள் ஸ்டோரின் பிராண்டிங்கிற்குப் பொருந்தும் வகையில் நீங்கள் தனிப்பயனாக்கக்கூடிய பின்வரும் பக்கங்கள் உள்ளன:

  • உள்நுழைவு (Sign-in): உள்நுழைவுப் பக்கத்தில்தான் வாடிக்கையாளர்கள் தங்களது மின்னஞ்சல் முகவரி அல்லது நீங்கள் வழங்கியுள்ள ஏதேனும் சமூக வலைதள உள்நுழைவு விருப்பங்களைப் பயன்படுத்தித் தங்கள் வாடிக்கையாளர் கணக்கில் உள்நுழைவார்கள். உங்களுக்கு எனத் தனி உள்நுழைவுப் பக்கம் வேண்டாம் என நினைத்தால், கணக்குக் கூறினை ஆதரிக்கும் Shopify தீமை நீங்கள் நிறுவலாம், அது ஆன்லைன் ஸ்டோரில் உள்நுழைவு அனுபவத்தை ஒரு மாடலாக வழங்கும்.
  • ஆர்டர்கள் (Orders): நிலுவையில் உள்ள பேமெண்ட்டுகளை நிறைவுசெய்வதற்கான அல்லது உருப்படிகளை மீண்டும் வாங்குவதற்கான விருப்பங்கள் உட்பட, உங்கள் வாடிக்கையாளருடைய ஆர்டர்களின் கேலரி அல்லது பட்டியலை ஆர்டர்கள் பக்கம் காட்டுகிறது.
  • ஆர்டர் நிலை (Order status): ஆர்டர் நிலை பக்கமானது உங்கள் வாடிக்கையாளரின் ஒவ்வொரு ஆர்டருக்கும் கிடைக்கும் ஒரு பக்கமாகும். கண்காணிப்புத் தகவல் உட்பட, முழுமையான ஆர்டர் சுருக்கத்தை இந்தப் பக்கம் கொண்டுள்ளது.
  • சுயவிவரம் (Profile): தொடர்புத் தகவல், முகவரிகள் மற்றும் சேமிக்கப்பட்ட கட்டண முறைகள் போன்ற வாடிக்கையாளர்கள் தங்களின் சுயவிவரத் தகவலை நிர்வகிக்க, சுயவிவரப் பக்கம் அனுமதிக்கிறது.

வாடிக்கையாளரின் நம்பிக்கையை மேம்படுத்த, account.your-store.com போன்ற ஒரு துணை டொமைன் மூலம் உங்களின் வாடிக்கையாளர் கணக்குப் பக்க URLகளையும் நீங்கள் தனிப்பயனாக்கலாம்.

இந்தப் பிரிவில் இருப்பவை