கூடுதல் வாடிக்கையாளர் தகவல்களைச் சேகரித்தல்

இயல்புநிலையாக, வாடிக்கையாளர் கணக்குகள் உள்நுழைவில் வாடிக்கையாளர்களின் மின்னஞ்சல் முகவரி மட்டுமே கேட்கப்படும். வாடிக்கையாளர்களின் பெயர், பிறந்தநாள், ஆர்வங்கள் அல்லது வணிக விவரங்கள் போன்ற பிற தகவல்களைச் சேகரிக்க, அவர்கள் முதல்முறையாக உள்நுழையும்போது விருப்பத்தேர்வான படிவத்திற்கு அவர்களை நீங்கள் திசைதிருப்பலாம். நீங்கள் பழைய வாடிக்கையாளர் கணக்குகளிலிருந்து மேம்படுத்தியிருந்தால், உங்களின் பழைய பதிவுப் பக்கம் கேட்ட அதே விவரங்களைத் தொடர்ந்து சேகரிக்க நீங்கள் ஒரு படிவத்தைப் பயன்படுத்தலாம்.

பெரும்பாலான நேரங்களில், வாடிக்கையாளர் முதல்முறை உள்நுழையும்போது, நீங்கள் தேர்ந்தெடுக்கும் படிவத்திற்கு அவர்கள் அனுப்பப்படுவார்கள். படிவம் ஆதரித்தால், அவர்கள் படிவத்தைச் சமர்ப்பித்த பிறகு, உள்நுழைவதற்கு முன் அவர்கள் சென்று கொண்டிருந்த இடத்திற்கே திருப்பியனுப்பப்படுவார்கள். வாடிக்கையாளர்கள் ஒரேயொரு முறை மட்டுமே படிவத்திற்கு அனுப்பப்படுவார்கள், மேலும் படிவம் ஒருபோதும் உள்நுழைவதைத் தடுக்காது.

படிவ விருப்பத்தேர்வுகள்

பின்வரும் ஏதேனும் ஒரு வகையான பக்கங்களில் உள்ள படிவத்திற்கு நீங்கள் வாடிக்கையாளர்களை அனுப்பலாம்:

  • Shopify Forms இன்லைன் படிவம் அல்லது மூன்றாம் தரப்புச் செயலியின் படிவம் உள்ள ஆன்லைன் ஸ்டோர் பக்கம்
  • செயலியால் சேர்க்கப்பட்ட வாடிக்கையாளர் கணக்குப் பக்கம்
  • https:// என்று தொடங்கும் URL ஐக் கொண்டுள்ள, வெளிப்புற இணையதளப் பக்கம்

கூடுதல் வாடிக்கையாளர் தகவல்களைச் சேகரிப்பதற்கான கவனத்தில் கொள்ள வேண்டியவை

படிவத்தை அமைப்பதற்கு முன், பின்வருபவற்றைக் கவனத்தில் கொள்ளுங்கள்:

  • உங்கள் ஸ்டோர் வாடிக்கையாளர் கணக்குகளைப் பயன்படுத்த வேண்டும், பழைய வாடிக்கையாளர் கணக்குகளை அல்ல.
  • படிவம் விருப்பத்தேர்வானது. வாடிக்கையாளர்கள் உள்நுழைவதற்கு முன்பு படிவத்தை நிரப்ப வேண்டும் என நீங்கள் கட்டாயப்படுத்த முடியாது. ஒவ்வொரு வாடிக்கையாளரிடமிருந்தும் உங்களுக்குத் தகவல் தேவைப்பட்டால், அதற்குப் பதிலாகச் செக்அவுட்டில் அதைச் சேகரிக்கவும்.
  • செக்அவுட்டுக்கு முன்பாக வாடிக்கையாளர்கள் தங்கள் கணக்கில் உள்நுழைய வேண்டியதை கட்டாயமாக்குவதற்கான அமைப்பை நீங்கள் செயல்படுத்தினால் ஒழிய, செக்அவுட்டின் போது உள்நுழையும் வாடிக்கையாளர்கள் படிவத்திற்கு அனுப்பப்பட மாட்டார்கள். நீங்கள் அந்த அமைப்பைச் செயல்படுத்தினால், வாடிக்கையாளர்கள் தொடர்ந்து செக்அவுட் செய்ய வசதியாக, உங்கள் படிவம் அவர்களை அவர்கள் சென்றுகொண்டிருந்த இடத்திற்கே திரும்ப அனுப்புவதை உறுதிசெய்யவும்.
  • மல்டிபாஸ் மூலம் உள்நுழையும் வாடிக்கையாளர்கள் படிவத்திற்கு அனுப்பப்பட மாட்டார்கள்.
  • உங்கள் படிவம் ஆன்லைன் ஸ்டோர் பக்கத்தில் இருந்தால், வாடிக்கையாளர்கள் உள்நுழைந்த டொமைன் அல்லது துணைக்கோப்புறையில் உள்ள அந்தப் பக்கத்திற்கு அனுப்பப்படுவார்கள். உதாரணமாக, example.com/fr-ca இல் உள்நுழையும் வாடிக்கையாளர் example.com/fr-ca/pages/my-form என்பதற்கு அனுப்பப்படுவார். ஒவ்வொரு சந்தையிலும் வேறுபட்ட படிவத்தைக் காட்ட, சந்தைகளுக்காக உங்கள் ஆன்லைன் ஸ்டோரைத் தனிப்பயனாக்குங்கள். ஒவ்வொரு சந்தையிலும் மொழியிலும் உள்ள பக்கத்தில் ஒரு படிவம் இருப்பதை உறுதிசெய்யவும்.
  • நீங்கள் Shopify Forms இன்லைன் படிவத்தைப் பயன்படுத்தினால், படிவத்தில் உள்ள மின்னஞ்சல், முதல் பெயர், கடைசிப் பெயர் போன்ற புலங்கள் வாடிக்கையாளரின் சுயவிவரத்தில் உள்ள விவரங்களைக் கொண்டு நிரப்பப்படும். நிரப்பப்பட்டுள்ள மின்னஞ்சலை வாடிக்கையாளர்களால் மாற்ற முடியாது. அவர்கள் படிவத்தைச் சமர்ப்பித்த பிறகு, தாங்கள் சென்றுகொண்டிருந்த இடத்திற்கே திருப்பியனுப்பப்படுவார்கள், அத்துடன் படிவத்தின் Success அமைப்புகள் பொருந்தாது.
  • மூன்றாம் தரப்புச் செயலி அல்லது வெளிப்புற இணையதளத்தின் படிவத்தை நீங்கள் பயன்படுத்தினால், வாடிக்கையாளர்கள் படிவத்தைச் சமர்ப்பித்த பிறகு return_to அளருவில் உள்ள URL-க்கு அவர்களைப் படிவம் மீண்டும் அனுப்புகிறதா என்பதை டெவலப்பரிடம் சரிபார்க்கவும்.

கூடுதல் வாடிக்கையாளர் தகவல்களைச் சேகரிப்பதை ஆன் செய்தல்

அமைப்பை ஆன் செய்து, வாடிக்கையாளர்கள் முதல்முறை உள்நுழைந்த பிறகு அனுப்பப்பட வேண்டிய பக்கத்தைத் தேர்ந்தெடுக்கவும். தொடங்குவதற்கு முன், உங்கள் படிவப் பக்கம் வெளியிடப்பட்டுள்ளதா என்பதை உறுதிசெய்யவும்.

படிகள்:

  1. உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, அமைப்புகள் > வாடிக்கையாளர் கணக்குகள் என்பதற்குச் செல்லவும்.

  2. அங்கீகரிப்பு (Authentication) பிரிவில், நிர்வகி என்பதைக் கிளிக் செய்யவும்.

  3. உள்நுழைவு அனுபவம் பிரிவில், கூடுதல் வாடிக்கையாளர் தகவல்களைச் சேகரி (Collect additional customer information) என்பதை ஆன் செய்யவும்.

  4. படிவ இணைப்பைத் தேடவும் அல்லது ஒட்டவும் (Search or paste a form link) புலத்தில், உங்கள் படிவம் உள்ள பக்கத்தைத் தேர்ந்தெடுக்கவும் அல்லது அதற்கான இணைப்பை ஒட்டவும்.

  5. சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.

அமைப்பை ஆன் செய்த பிறகு, இதற்கு முன் உள்நுழையப் பயன்படுத்தப்படாத ஒரு மின்னஞ்சல் முகவரியைக் கொண்டு உங்கள் ஸ்டோரில் உள்நுழைவதன் மூலம் இந்த அனுபவத்தைச் சோதித்துப் பார்க்கவும்.