உங்கள் வாடிக்கையாளர் கணக்குப் பக்கங்களுக்குத் தனிப்பயன் துணை டொமைனை இணைத்தல்

பொதுவாக, உங்கள் வாடிக்கையாளர் கணக்குகளின் பக்கங்களான உள்நுழைவுப் பக்கம், ஆர்டர்கள் பக்கம் மற்றும் சுயவிவரப் பக்கம் ஆகியவை உங்கள் ஸ்டோருக்கான பிரத்தியேக ID எண்ணுடன் shopify.com/1234567890/account என்பதைப் போலவே அவற்றின் அடிப்படை டொமைனாக shopify.com URL வடிவமைப்பைப் பயன்படுத்துகின்றன. எடுத்துக்காட்டாக, உங்கள் ஸ்டோரின் மேற்புறத்தில் உள்ள உள்நுழைவு இணைப்பு shopify.com/authentication/1234567890/login என்பதைப் போன்றிருக்கும். முதன்மை ஆர்டர்கள் பக்கத்திற்கான URL, shopify.com/1234567890/account/orders என்பதைப் போன்றிருக்கலாம்.

இதில் ஆர்டர் நிலை பக்கமும் அடங்கும்.

உங்கள் ஸ்டோரின் பிராண்டிங்கைத் தக்கவைக்க, இயல்புநிலை shopify.com URL-க்குப் பதிலாக உங்கள் ஆன்லைன் ஸ்டோரின் முதன்மை டொமைனைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர் கணக்குகளுக்கு ஒரு துணை டொமைனை உருவாக்கலாம். நீங்கள் உருவாக்கும் டொமைன் பெயரானது, உங்கள் ஸ்டோருக்கு நீங்கள் பயன்படுத்தும் முதன்மை டொமைன் பெயரின் துணை டொமைனாகும். அந்தத் துணை டொமைனானது, அனைத்து வாடிக்கையாளர் கணக்குப் பக்கங்களுக்கும் முதன்மை டொமைன் பெயராக மாறி, உள்நுழைவது முதல் கணக்கு நிர்வாகம் வரை சீரான பிராண்டிங் அனுபவத்தை வழங்கி உங்கள் ஸ்டோர் மீதான வாடிக்கையாளர் நம்பிக்கையை மேம்படுத்துகிறது.

எடுத்துக்காட்டாக, உங்கள் முதன்மை டொமைன் your-store.com எனில், நீங்கள் account துணை டொமைனை உருவாக்கலாம்: account.your-store.com. வாடிக்கையாளர்கள் உள்நுழைவுப் பக்கத்தை account.your-store.com/authentication/login இல் அணுகலாம் மற்றும் அவர்களின் ஆர்டர் வரலாற்றை account.your-store.com/orders இல் பார்க்கலாம். உங்கள் முதன்மை டொமைனை நீங்கள் மாற்றினால், உங்கள் வாடிக்கையாளர் கணக்கு டொமைனும் அதற்கேற்பப் புதுப்பிக்கப்படும். உங்கள் முதன்மை டொமைனைப் பார்க்க அல்லது மாற்ற, உங்கள் Shopify நிர்வாகிப் பக்கத்தில் அமைப்புகள் > டொமைன்கள் என்பதற்குச் செல்லவும்.

தொடங்குவதற்கு முன்

உங்கள் வாடிக்கையாளர் கணக்குப் பக்கங்களுக்குத் துணை டொமைனைச் சேர்ப்பதற்கு முன், நீங்கள் உங்கள் ஆன்லைன் ஸ்டோருடன் ஒரு டொமைனை இணைக்க வேண்டும். டொமைன் Shopify ஆல் நிர்வகிக்கப்படலாம் அல்லது மூன்றாம் தரப்பு டொமைனை நீங்கள் Shopify உடன் இணைக்கலாம்.

உங்கள் டொமைன் Shopify ஆல் நிர்வகிக்கப்படவில்லை எனில், உங்களுக்குப் பின்வரும் தகவல்களும் தேவைப்படும்:

  • உங்கள் மூன்றாம் தரப்பு டொமைன் வழங்குநர் கணக்கிற்கான உங்கள் உள்நுழைவுத் தகவல்.
  • உங்கள் டொமைன் வழங்குநரின் தேவைகள்.

நீங்கள் இன்னும் பழைய வாடிக்கையாளர் கணக்குகளைப் பயன்படுத்துகிறீர்கள் எனில், நீங்கள் வாடிக்கையாளர் கணக்குகளின் சமீபத்திய பதிப்பிற்கு மேம்படுத்துவதற்கு முன் உங்கள் துணை டொமைனை அமைக்கலாம். முதலில் உங்கள் துணை டொமைனை அமைப்பது, நீங்கள் மேம்படுத்தியவுடன் shopify.com URL-க்கு பதிலாக உங்கள் வாடிக்கையாளர் கணக்குப் பக்கங்கள் உங்கள் சொந்த டொமைனைப் பயன்படுத்துவதை உறுதிசெய்யும்.

மேம்படுத்தலை முடிக்கும் வரை, உள்நுழைவுப் பக்கம் போன்ற உங்கள் பழைய வாடிக்கையாளர் கணக்குப் பக்கங்கள் அவற்றின் தற்போதைய URL-களையே வைத்திருக்கும். ஆர்டர் நிலை பக்கம் இதற்கு விதிவிலக்காகும். நீங்கள் இன்னும் உங்கள் வாடிக்கையாளர் கணக்குகளை மேம்படுத்தவில்லை என்றாலும், வாடிக்கையாளர் கணக்குகளுக்குத் துணை டொமைனை முதன்மை டொமைனாக அமைத்தவுடன் அது புதிய துணை டொமைனைப் பயன்படுத்தும்.

மூன்றாம் தரப்பு அடையாள வழங்குநர்கள் அல்லது சமூக ஊடக உள்நுழைவைக் கொண்ட கணக்குகளுக்குத் தேவையான படிகள்

உங்கள் வாடிக்கையாளர் கணக்குகளுக்கு மூன்றாம் தரப்பு அடையாள வழங்குநரை அல்லது சமூக ஊடக உள்நுழைவு விருப்பங்களை அமைத்திருந்தால், Shopify இல் மாற்றத்தைச் செய்வதற்கு முன், புதிய துணை டொமைனைச் சேர்க்க, உங்கள் வழங்குநர் அமைப்புகளைப் புதுப்பிக்க வேண்டும். உங்கள் வழங்குநர் அமைப்புகளைப் புதுப்பிக்கும் முன்பே Shopify இல் உங்கள் வாடிக்கையாளர் கணக்குகள் டொமைனை மாற்றினால், நீங்கள் புதுப்பிப்பை முடிக்கும் வரை வாடிக்கையாளர்களால் உள்நுழைய முடியாது.

வாடிக்கையாளர்களால் உள்நுழைய முடியாத நிலையைத் தவிர்க்க, இந்தச் செயல்பாடுகளின் வரிசையைப் பின்பற்றவும்:

  1. உங்கள் புதிய தனிப்பயன் துணை டொமைனை (எடுத்துக்காட்டாக: account.your-store.com) தீர்மானிக்கவும், ஆனால் அதை இன்னும் Shopify இல் மாற்ற வேண்டாம்.
  2. உங்கள் அடையாள வழங்குநர் அல்லது சமூக ஊடக உள்நுழைவு அமைப்புகளில் புதிய டொமைனைச் சேர்க்கவும். உங்களின் தற்போதைய டொமைன் தகவலை அகற்ற வேண்டாம்; அதனுடன் புதிய டொமைனையும் சேர்த்துக்கொள்ளவும்.
  3. Shopify-க்குத் திரும்பி, உங்கள் வாடிக்கையாளர் கணக்குகள் டொமைனைப் புதிய தனிப்பயன் URL-க்கு மாற்ற, இந்தப் பக்கத்தில் உள்ள படிகளைப் பின்பற்றவும்.
  4. விரும்பினால்: புதிய டொமைனில் உள்நுழைவுச் செயல்படுவதை உறுதிசெய்த பிறகு, உங்கள் வழங்குநர் அமைப்புகளிலிருந்து பழைய டொமைனை அகற்றலாம்.
உங்கள் கணக்குகள் டொமைனை மாற்றிய பிறகு புதுப்பிக்க வேண்டிய வழங்குநர் அமைப்புகள்
உங்களின் தற்போதைய உள்நுழைவு வழங்குநர்நீங்கள் புதுப்பிக்க வேண்டியவை:
மூன்றாம் தரப்பு அடையாள வழங்குநர் (Auth0 அல்லது Okta போன்றவை)திசைதிருப்பல் URI மற்றும் வெளியேறுதல் URL.

உங்கள் வாடிக்கையாளர் கணக்குகள் டொமைனை மாற்றும்போது உங்கள் அடையாள வழங்குநரைப் புதுப்பித்தல் என்பதைப் பார்க்கவும்.
சமூக ஊடக உள்நுழைவு: GoogleJavaScript மூலங்கள், திசைதிருப்பல் URL-கள் மற்றும் அங்கீகார நீக்கக் கால்பேக் URL.

உங்கள் வாடிக்கையாளர் கணக்குகள் டொமைனை மாற்றும்போது சமூக ஊடக உள்நுழைவுகளைப் புதுப்பித்தல் என்பதைப் பார்க்கவும்.
சமூக ஊடக உள்நுழைவு: Facebookடொமைன்கள், திசைதிருப்பல் URLகள் மற்றும் அங்கீகார நீக்கக் கால்பேக் URL.

உங்கள் வாடிக்கையாளர் கணக்குகளின் டொமைனை மாற்றும்போது சமூக வலைத்தள உள்நுழைவுகளைப் புதுப்பித்தல் என்பதைப் பார்க்கவும்.

உங்கள் Shopify டொமைனுக்கான வாடிக்கையாளர் கணக்குகளின் துணை டொமைனை உருவாக்கி இணையுங்கள்

Shopify-ஆல் நிர்வகிக்கப்படும் டொமைனில் வாடிக்கையாளர் கணக்குகளுக்கான துணை டொமைனை உருவாக்கும்போது, அதற்கான இலக்கு (Target) மதிப்பானது Customer Accounts என்பதாக இருக்கும்.

படிகள்:

  1. உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, அமைப்புகள் > வாடிக்கையாளர் கணக்குகள் என்பதற்குச் செல்லவும்.

  2. வாடிக்கையாளர் கணக்குகள் பிரிவில் உள்ள URL புலமானது தற்போதைய URL-இன் மாதிரிக்காட்சியைக் காட்டும். டொமைனை மாற்று என்பதைக் கிளிக் செய்யவும்.

  3. வாடிக்கையாளர் கணக்குகளின் டொமைனை மாற்று எனும் உரையாடல் பெட்டியில், வாடிக்கையாளர் கணக்குகளுக்கு நீங்கள் பயன்படுத்த விரும்பும் துணை டொமைனின் பெயரைக் குறிக்கும் விளக்கமான சரம் ஒன்றை புதிய டொமைன் புலத்தில் உள்ளிடவும். எடுத்துக்காட்டாக, account என்ற சரத்தை உள்ளிடுகிறீர்கள் எனில், உங்கள் வாடிக்கையாளர் கணக்குகளின் பக்கங்களுக்குப் பின்வரும் URL-ஐ உருவாக்குகிறீர்கள்: account.your-store.com.

  4. சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.

டொமைன்கள் அமைப்புகளில் உள்ள புதிய துணை டொமைனின் விவரங்களுக்கு நீங்கள் அழைத்துச் செல்லப்படுவீர்கள். உங்கள் துணை டொமைன் பரப்பப்பட்டு சரிபார்க்கப்படுவதற்கு 48 மணிநேரம் வரை ஆகலாம்.

உங்கள் வாடிக்கையாளர் கணக்குகளுக்கான துணை டொமைன் இணைக்கப்பட்ட பிறகு, அதை வாடிக்கையாளர்களுக்குக் காட்ட அதை வாடிக்கையாளர் கணக்குகளுக்கான முதன்மை டொமைனாக அமைக்க வேண்டும். பின்னர், உங்கள் வாடிக்கையாளர் கணக்குகளுக்கான புதிய URL-ஐப் பயன்படுத்தும் வகையில் குறியீட்டில் நேரடியாகச் சேர்க்கப்பட்டுள்ள வாடிக்கையாளர் கணக்குப் பக்க இணைப்புகளைப் புதுப்பிக்கலாம்.

உங்கள் மூன்றாம் தரப்பு டொமைனுக்கான வாடிக்கையாளர் கணக்குகளின் துணை டொமைனை உருவாக்கி இணையுங்கள்

மூன்றாம் தரப்பு டொமைனைப் பயன்படுத்தி உங்கள் வாடிக்கையாளர் கணக்குகளுக்குத் துணை டொமைனை உருவாக்க, Shopify-இல் துணை டொமைனை உருவாக்கி, உங்கள் டொமைன் வழங்குநரின் அமைப்புகளில் ஒரு CNAME பதிவைச் சேர்த்து, இணைப்பைச் சரிபார்க்க வேண்டும்.

படி 1: உங்கள் வாடிக்கையாளர் கணக்குப் பக்கங்களுக்கான துணை டொமைனை உருவாக்குதல்

  1. உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, அமைப்புகள் > வாடிக்கையாளர் கணக்குகள் என்பதற்குச் செல்லவும்.

  2. வாடிக்கையாளர் கணக்குகள் பிரிவில் உள்ள URL புலமானது தற்போதைய URL-இன் மாதிரிக்காட்சியைக் காட்டும். டொமைனை மாற்று என்பதைக் கிளிக் செய்யவும்.

  3. வாடிக்கையாளர் கணக்குகளின் டொமைனை மாற்று எனும் உரையாடல் பெட்டியில், வாடிக்கையாளர் கணக்குகளுக்கு நீங்கள் பயன்படுத்த விரும்பும் துணை டொமைனின் பெயரைக் குறிக்கும் விளக்கமான சரம் ஒன்றை புதிய டொமைன் புலத்தில் உள்ளிடவும். எடுத்துக்காட்டாக, account என்ற சரத்தை உள்ளிடுகிறீர்கள் எனில், உங்கள் வாடிக்கையாளர் கணக்குகளின் பக்கங்களுக்குப் பின்வரும் URL-ஐ உருவாக்குகிறீர்கள்: account.your-store.com.

  4. Continue (தொடர்) என்பதைக் கிளிக் செய்யவும். Domains (டொமைன்கள்) அமைப்புகளில் உங்கள் டொமைனுக்கான பக்கம் திறக்கும்.

  5. உங்கள் டொமைன் வழங்குநர் கணக்கு அமைப்புகளை மாற்ற, அமைப்பு வழிமுறைகளைப் பின்பற்று என்பதைக் கிளிக் செய்யவும். உங்கள் டொமைன் வழங்குநரின் இணையதளத்திற்கு நீங்கள் அழைத்துச் செல்லப்படுவீர்கள்.

படி 2: உங்கள் மூன்றாம் தரப்பு டொமைன் வழங்குநர் கணக்கு அமைப்புகளில் புதிய CNAME பதிவை உருவாக்குதல்

  1. உங்கள் டொமைன் வழங்குநரின் இணையதளத்தில், உங்கள் கணக்கில் உள்நுழையவும்.
  2. DNS அமைப்புகள் அல்லது டொமைன் நிர்வாகப் பகுதியைக் கண்டறியவும்.
  3. பின்வருபவனவற்றைச் செய்யவும்.
  4. புதிய CNAME பதிவை உருவாக்கவும்.
  5. Host பெயரை உங்கள் வாடிக்கையாளர் கணக்கின் துணை டொமைன் பெயருக்காக நீங்கள் உருவாக்கிய சரத்திற்கு மாற்றவும். எடுத்துக்காட்டாக, account.
  6. shops.myshopify.com என்பதற்கு CNAME பதிவைச் சுட்டிக்காட்டவும்.
  7. மாற்றங்களைச் சேமித்து, பின்னர் Shopify நிர்வாகியில் உங்கள் டொமைனுக்கான பக்கத்திற்குத் திரும்பவும்.

படி 3: வாடிக்கையாளர் கணக்கின் டொமைன் Shopify-உடன் இணைந்துள்ளதா என்பதைச் சரிபார்த்தல்

  1. Domains (டொமைன்கள்) அமைப்புகளில் உள்ள உங்கள் டொமைனுக்கான பக்கத்தில் DNS பதிவுகளின் அட்டவணை காட்டப்படவில்லை என்றால், அதை விரிவாக்க Manual setup (கைமுறை அமைவு) என்பதைக் கிளிக் செய்யவும். I updated DNS records (DNS பதிவுகளைப் புதுப்பித்துவிட்டேன்) என்பதைக் கிளிக் செய்யவும்.
  2. உங்கள் வாடிக்கையாளர் கணக்கின் டொமைன் பெயர் இணைக்கப்பட்டுச் சரிபார்க்கப்பட்டதும், வாடிக்கையாளர் கணக்குகளுக்குத் திரும்பு என்பதைக் கிளிக் செய்யவும். வாடிக்கையாளர் கணக்குகள் பக்கத்தில் உள்ள வாடிக்கையாளர் கணக்குகள் புலத்தில் Connected லேபிள் காண்பிக்கப்படும்.

உங்கள் துணை டொமைன் சரிபார்க்கப்படுவதற்கு 48 மணிநேரம் வரை ஆகலாம்.

உங்கள் வாடிக்கையாளர் கணக்குகளுக்கான துணை டொமைன் இணைக்கப்பட்ட பிறகு, அதை வாடிக்கையாளர்களுக்குக் காட்ட அதை வாடிக்கையாளர் கணக்குகளுக்கான முதன்மை டொமைனாக அமைக்க வேண்டும். பின்னர், உங்கள் வாடிக்கையாளர் கணக்குகளுக்கான புதிய URL-ஐப் பயன்படுத்தும் வகையில் குறியீட்டில் நேரடியாகச் சேர்க்கப்பட்டுள்ள வாடிக்கையாளர் கணக்குப் பக்க இணைப்புகளைப் புதுப்பிக்கலாம்.

உங்கள் வாடிக்கையாளர் கணக்குகளுக்கான துணை டொமைன் இணைக்கப்பட்டு சரிபார்க்கப்பட்ட பிறகு இந்தப் படிகளை முடிக்கவும். துணை டொமைனை முதன்மை டொமைனாக அமைப்பது கட்டாயம். குறியீட்டில் நேரடியாகச் சேர்க்கப்பட்ட இணைப்புகளைப் புதுப்பிப்பது கட்டாயமில்லை.

வாடிக்கையாளர் கணக்குகளுக்கான முதன்மை டொமைனாகத் துணை டொமைனை ஆக்குதல்

வாடிக்கையாளர் கணக்குகளின் துணை டொமைனை இணைத்த பிறகு, அதை வாடிக்கையாளர்களுக்கு நேலையாகக் காண்பிப்பதற்கு, வாடிக்கையாளர் கணக்குகளுக்கான முதன்மை டொமைனாக அமைக்க வேண்டும்.

படிகள்:

  1. உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, அமைப்புகள் > டொமைன்கள் என்பதற்குச் செல்லவும்.

  2. வாடிக்கையாளர் கணக்கு என்பதன் கீழ், உங்களின் தனிப்பயன் துணை டொமைனைக் கிளிக் செய்யவும் (எடுத்துக்காட்டாக: account.your-store.com).

  3. டொமைன் இலக்கு மற்றும் வகை பிரிவில், வகை என்பதற்கு அடுத்துள்ள மாற்று என்பதைக் கிளிக் செய்யவும்.

  4. உரையாடல் பெட்டியில், முதன்மை டொமைன் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

  5. டொமைன் வகையை மாற்று என்பதைக் கிளிக் செய்யவும்.

முந்தைய shopify.com முகவரியைப் பயன்படுத்தும் இணைப்புகள் வாடிக்கையாளர்களை உங்கள் துணை டொமைனுக்குத் தொடர்ந்து திருப்பிவிடும். உங்கள் தீம் அல்லது மின்னஞ்சல்களில் குறியீட்டில் நேரடியாகச் சேர்க்கப்பட்ட இணைப்புகளும் இதில் அடங்கும். இருப்பினும், மூன்றாம் தரப்பு பிராக்ஸி வழியாக வழிமாற்றப்படுவது போன்ற காரணங்களால் உங்கள் துணை டொமைன் நேரடியாக Shopify-ஐச் சுட்டிக்காட்டவில்லை என்றால், அந்த இணைப்புகளைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் திருப்பிவிடப்படுவதற்கு முன் வாடிக்கையாளர் கணக்குகளுக்கான பாதுகாப்பற்ற இணைப்பு குறித்த எச்சரிக்கையைப் பார்க்கக்கூடும். எச்சரிக்கை இல்லாமல் வாடிக்கையாளர்களை நேரடியாக உங்கள் கணக்குப் பக்கங்களுக்கு அனுப்ப, உங்கள் வாடிக்கையாளர் கணக்குகளுக்கான புதிய URL-ஐப் பயன்படுத்தும் வகையில் குறியீட்டில் நேரடியாகச் சேர்க்கப்பட்ட இணைப்புகளைப் புதுப்பிக்கவும்.

பின்வரும் இடங்களில் shopify.com முகவரியைப் பயன்படுத்தும் இணைப்புகள் உள்ளனவா எனச் சரிபார்க்கவும்:

  • உங்கள் ஆன்லைன் ஸ்டோரில் உள்ள மெனுக்கள் மற்றும் பொத்தான்கள்
  • உங்கள் தீமில் உள்ள பிரத்தியேகக் குறியீடு
  • மின்னஞ்சல்கள் மற்றும் மார்க்கெட்டிங் செய்திகள்
  • வாடிக்கையாளர் கணக்குகளுடன் இணைக்கப்பட்டுள்ள செயலிகள் மற்றும் பிரத்தியேக ஸ்டோர்ஃபிரண்டுகள்

படிகள்:

  1. உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, அமைப்புகள் > வாடிக்கையாளர் கணக்குகள் என்பதற்குச் செல்லவும்.

  2. URL பிரிவில், உங்கள் வாடிக்கையாளர் கணக்குகளின் URL-ஐ நகலெடுக்கவும்.

  3. shopify.com/, உங்கள் ஸ்டோர் ID மற்றும் /account ஆகியவற்றுடன் தொடங்கும் ஒவ்வொரு இணைப்பிலும், இணைப்பின் அந்தப் பகுதியை நீங்கள் நகலெடுத்த URL-ஆக மாற்றவும். இணைப்பின் மீதமுள்ள பகுதியை அப்படியே விட்டுவிடவும். எடுத்துக்காட்டாக, shopify.com/1234567890/account/orders என்பதை account.your-store.com/orders ஆக மாற்றவும்.