வாடிக்கையாளர் கணக்குகளுடன் Google-ஐ இணைத்தல்
வாடிக்கையாளர் கணக்குகளுடன் Google-ஐ இணைக்க, பின்வரும் பணிகளை நீங்கள் வரிசையாக நிறைவுசெய்ய வேண்டும். அமைவின்போது, உங்கள் Google Cloud Console மற்றும் Shopify நிர்வாகி ஆகியவற்றுக்கான உலாவித் தாவல்களுக்கு இடையில் நீங்கள் மாற வேண்டும். வாடிக்கையாளர் கணக்குகளுடன் Google-ஐ இணைக்க, நீங்கள் Google Cloud டெவெலப்பர் கணக்கை அமைத்திருக்க வேண்டும். Google Cloud பற்றி மேலும் அறிய, Google-இன் உதவி ஆவணங்களைப் பார்க்கவும்.
இப்பக்கத்தில்
- படி 1: உங்கள் Shopify நிர்வாகியில் Sign in with Google பக்கத்தைத் திறக்கவும்
- படி 2: உங்கள் Google Cloud Console-இல் ஒரு செயலியை உருவாக்கவும்
- படி 3: உங்கள் Google Cloud Console-இல் செயலியின் OAuth கிளைண்ட்டை உள்ளமைக்கவும்
- படி 4: உங்கள் Shopify நிர்வாகியில் சான்றுகளை உள்ளமைக்கவும்
- படி 5: உங்கள் செயலியை உங்கள் Google Cloud Console-இல் வெளியிடவும்
படி 1: உங்கள் Shopify நிர்வாகியில் Sign in with Google பக்கத்தைத் திறக்கவும்
உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, அமைப்புகள் > வாடிக்கையாளர் கணக்குகள் என்பதற்குச் செல்லவும்.
அங்கீகாரம் பிரிவில், நிர்வகி என்பதைக் கிளிக் செய்யவும்.
Sign in with Google பக்கத்தைத் திறக்க, Google என்பதற்கு அடுத்துள்ள இணை என்பதைக் கிளிக் செய்யவும்.
உங்கள் Google செயலியின் OAuth கிளையண்ட்டை உள்ளமைக்கும்போது நகலெடுத்து ஒட்ட வேண்டிய தகவல்கள் இந்தப் பக்கத்தில் இருக்கும் என்பதால், இந்தப் பக்கத்தை வேறு உலாவித் தாவலில் திறந்து வைத்திருக்கவும்.
படி 2: உங்கள் Google Cloud Console-இல் ஒரு செயலியை உருவாக்கவும்
- வேறு உலாவித் தாவலில், உங்கள் Google Cloud Console-இல் உள்நுழையவும்.
- ஏற்கனவே உள்ள திட்டப்பணியைத் தேர்ந்தெடுக்கவும் அல்லது புதிய ஒன்றை உருவாக்கவும். திட்டப்பணியின் டாஷ்போர்டிற்கு நீங்கள் திசைதிருப்பப்படுவீர்கள்.
என்பதைக் கிளிக் செய்து, பிறகு APIs & Services > Credentials என்பதைக் கிளிக் செய்யவும்.
- Configure consent screen > Get started என்பதைக் கிளிக் செய்யவும்.
- உங்கள் திட்டப்பணியின் OAuth உள்ளமைவு விவரங்களைப் பூர்த்தி செய்யவும்:
- உங்கள் ஆன்லைன் ஸ்டோரின் பெயர் போன்று, ஒரு வாடிக்கையாளர் அடையாளம் காணக்கூடிய பெயரை உங்கள் செயலிக்கு வழங்கவும். தொழில்நுட்ப ஆதரவுக்கான உங்கள் மின்னஞ்சலை வழங்கிவிட்டு, அடுத்து என்பதைக் கிளிக் செய்யவும்.
- Audience பிரிவில், External என்பதைத் தேர்ந்தெடுத்து, அடுத்து என்பதைக் கிளிக் செய்யவும்.
- திட்டப்பணி குறித்து Google வழங்கும் அறிவிப்புகளுக்குத் தொடர்புகொள்ள ஒரு மின்னஞ்சலை வழங்கிவிட்டு, அடுத்து என்பதைக் கிளிக் செய்யவும்.
- Google-இன் API Services User Data Policy-ஐ ஏற்றுக்கொண்டு, தொடரவும் என்பதைக் கிளிக் செய்யவும்.
- உருவாக்கு என்பதைக் கிளிக் செய்யவும்.
- ஒப்புதல் திரையில் வாடிக்கையாளர்களுக்குக் காட்டப்படும் உங்கள் செயலியின் கொள்கைத் தகவலை உள்ளமைக்கவும்:
- Branding என்பதைக் கிளிக் செய்யவும்.
- App domain பிரிவில், உங்கள் முகப்புப் பக்கத்திற்கான ஓர் இணைப்பு, பொதுத் தனியுரிமைக் கொள்கைக்கான ஓர் இணைப்பு மற்றும் உங்கள் சேவை விதிமுறைகளுக்கான ஓர் இணைப்பு ஆகியவற்றைச் சேர்க்கவும். ஸ்டோர் கொள்கைகளை உருவாக்குவது பற்றி மேலும் அறிக.
படி 3: உங்கள் Google Cloud Console-இல் உங்கள் செயலியின் OAuth கிளையண்ட்டை உள்ளமைக்கவும்
உங்கள் Shopify நிர்வாகியில் உள்ள Sign in with Google பக்கத்தின் அமைவு வழிமுறைகள் (Setup instructions) பிரிவிலிருந்து விவரங்களை நகலெடுத்து, அவற்றை உங்கள் Google Cloud Console தாவலில் உள்ள உரிய புலங்களில் ஒட்ட வேண்டும்.
- Google Cloud Console-இல் உங்கள் திட்டப்பணியின் செயலியில், Overview என்பதைக் கிளிக் செய்யவும்.
- Metrics பிரிவில், Create OAuth client என்பதைக் கிளிக் செய்யவும்.
- OAuth கிளையண்ட் விவரங்களை உள்ளமைக்கவும்:
- Application type கீழ்தோன்றும் மெனுவிலிருந்து, Web application என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
- Name புலத்தில், ஒரு பெயரை உள்ளிடவும்.
- உங்கள் செயலிக்கான Authorized Javascript origins என்பதை உள்ளமைக்கவும்:
- Authorized Javascript origins பிரிவில், + Add URI என்பதைக் கிளிக் செய்யவும்.
- உங்கள் Shopify நிர்வாகியில் உள்ள Sign in with Google பக்கத்தில், Authorized Javascript origins மதிப்பை நகலெடுக்கவும்.
- உங்கள் Google Cloud Console-இல் உள்ள URIs 1 புலத்தில் அந்த மதிப்பை ஒட்டவும்.
- உங்கள் Shopify நிர்வாகியின் Authorized Javascript பிரிவில் ஒன்றுக்கும் மேற்பட்ட URIகள் இருந்தால், கூடுதல் URI புலங்களுக்கு இந்தப் படிகளை மீண்டும் செய்யவும்.
- உங்கள் செயலிக்கான Authorized redirect URIs என்பதை உள்ளமைக்கவும்:
- உங்கள் Google Cloud Console-இல் உள்ள Authorized redirect URIs பிரிவில், + Add URI என்பதைக் கிளிக் செய்யவும்.
- உங்கள் Shopify நிர்வாகியில் உள்ள Sign in with Google பக்கத்தில், அங்கீகரிக்கப்பட்ட திசைதிருப்பல் URI (Authorized redirect URI) மதிப்பை நகலெடுக்கவும்.
- உங்கள் Google Cloud Console-இல் உள்ள URIs 1 புலத்தில் அந்த மதிப்பை ஒட்டவும்.
- உங்கள் Shopify நிர்வாகியின் அங்கீகரிக்கப்பட்ட திசைதிருப்பல் URI பிரிவில் ஒன்றுக்கும் மேற்பட்ட URIகள் இருந்தால், கூடுதல் URI புலங்களுக்கு இந்தப் படிகளை மீண்டும் செய்யவும்.
- உங்கள் Google Cloud Console-இல், Create என்பதைக் கிளிக் செய்யவும்.
Google Cloud Console-இலிருந்து தகவல்களை நகலெடுத்து உங்கள் Shopify நிர்வாகியில் ஒட்ட வேண்டும் என்பதால், காண்பிக்கப்படும் OAuth client created உரையாடல் பெட்டியை படி 4: உங்கள் Shopify நிர்வாகியில் சான்றுகளை உள்ளமைக்கவும் என்பதற்காகத் திறந்தே வைத்திருக்கவும்.
படி 4: உங்கள் Shopify நிர்வாகியில் சான்றுகளை உள்ளமைக்கவும்
- உங்கள் Google Cloud Console-இல் உள்ள OAuth client created உரையாடல் பெட்டியிலிருந்து, Client ID என்பதை நகலெடுக்கவும்.
- உங்கள் Shopify நிர்வாகியின் Sign in with Google பக்கத்தில் உள்ள சான்றுகள் (Credentials) பிரிவில், Client ID என்பதை ஒட்டவும்.
- உங்கள் Google Cloud Console-இல் உள்ள OAuth client created உரையாடல் பெட்டியிலிருந்து, கிளையண்ட் ரகசியம் (Client secret) என்பதை நகலெடுக்கவும்.
- உங்கள் Shopify நிர்வாகியின் Sign in with Google பக்கத்தில் உள்ள சான்றுகள் (Credentials) பிரிவில், கிளையண்ட் ரகசியம் என்பதை ஒட்டவும்.
- உங்கள் Shopify நிர்வாகியின் Sign in with Google பக்கத்தில், சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.
படி 5: உங்கள் செயலியை உங்கள் Google Cloud Console-இல் வெளியிடவும்
- Google Cloud Console-இல் உங்கள் திட்டப்பணியின் செயலியில், Audience என்பதைக் கிளிக் செய்யவும்.
- Publish app என்பதைக் கிளிக் செய்யவும்.