பழைய வாடிக்கையாளர் கணக்குகளிலிருந்து வாடிக்கையாளர் கணக்குகளுக்கு மேம்படுத்துதல்
பின்வரும் அம்சங்களை அணுகி, Shopify இல் கிடைக்கும் சிறந்த கணக்கு அனுபவத்தை உங்கள் வாடிக்கையாளர்களுக்கு வழங்க, வாடிக்கையாளர் கணக்குகளின் சமீபத்திய பதிப்பிற்கு மேம்படுத்தவும்.
சிக்கலற்ற உள்நுழைவு
- ஒரு உள்நுழைவு மூலம் அனைத்தையும் செய்யலாம்: வாடிக்கையாளர்கள் ஒருமுறை உள்நுழைந்து வாடிக்கையாளர் கணக்குகளின் அனைத்து அம்சங்கள் மற்றும் செயலித் தனிப்பயனாக்கங்களுக்கான அணுகலைப் பெறுவார்கள்.
- கடவுச்சொல் இல்லாத அங்கீகாரம்: வாடிக்கையாளர்கள் மின்னஞ்சல் மற்றும் ஒருமுறை பயன்படுத்தும் கடவுக்குறியீடு மூலம் உள்நுழையலாம், இதன் அர்த்தம் கடவுச்சொல் மீட்டமைப்புகள் தேவையில்லை.
- சமூக வலைத்தள உள்நுழைவு: வாடிக்கையாளர்களுக்கு Google அல்லது Facebook மூலம் உள்நுழையும் விருப்பத்தை வழங்குங்கள்.
உள்ளமைக்கப்பட்ட அம்சங்கள்
- ரிட்டர்ன்கள்: வாடிக்கையாளர்கள் தங்களது கணக்கிலிருந்து ரிட்டர்னைத் தொடங்கலாம்.
- ஸ்டோர் கிரெடிட்: வாடிக்கையாளர்கள் தங்களது கணக்கில் ஸ்டோர் கிரெடிட் இருப்பைக் காண முடியும் மற்றும் அதைச் செக்அவுட்டில் செலவழிக்க முடியும்.
- சந்தாக்கள்: வாடிக்கையாளர்கள் தங்களது கணக்கிலேயே சந்தாக்களை மீண்டும் தொடங்கலாம், தவிர்க்கலாம் அல்லது ரத்துசெய்யலாம் மற்றும் தங்களது கட்டண முறைகளைப் புதுப்பிக்கலாம்.
- மேலும் பல சுய-சேவை அம்சங்கள்: வாடிக்கையாளர் கணக்குகளில் ஆர்டரைக் கண்காணித்தல், மறுஆர்டர் செய்தல் மற்றும் சுயவிவர மேலாண்மை ஆகியவற்றுக்கு ஆதரவளிக்கப்படுகிறது.
- பகுப்பாய்வுக்கான பிக்சல்கள்: Shopify வெப் பிக்சல்கள் மூலம் கணக்கு அனுபவங்களை மேம்படுத்த, வாடிக்கையாளர் நிகழ்வுகளைத் தடம்அறியலாம் மற்றும் வாங்கியதற்குப் பிந்தைய வாடிக்கையாளர்களின் நடத்தை குறித்த நுண்ணறிவுகளைப் பெறலாம்.
- உங்கள் தீமிலிருந்து தனித்து நிர்வகிக்கப்படும்: வாடிக்கையாளர் கணக்குகள் உங்கள் தீமிலிருந்து தனியாக நிர்வகிக்கப்படுவதால், தீம் புதுப்பிப்புகள் உங்கள் கணக்கு அனுபவத்தைப் பாதிக்காது. தீம் மாற்றங்கள் தேவையில்லாமல் புதிய வாடிக்கையாளர் கணக்கு அம்சங்களைத் தொடர்ந்து பெறுவீர்கள்.
நவீன, மொபைலுக்கு முன்னுரிமை அளிக்கும் வடிவமைப்பு
புதுப்பிக்கப்பட்ட இந்தத் தளவமைப்பானது உள்ளுணர்வுள்ள வழிசெலுத்தல், பிராண்டு உள்நுழைவு, முதன்முறையாக வாங்குபவர்களுக்கான தனிப்பயனாக்கப்பட்ட தயாரிப்புப் பரிந்துரைகள் மற்றும் கூடுதல் கவனத்தீர்ப்பான ஆர்டர் மேலாண்மை மற்றும் செயலி அம்சங்கள் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இவை அனைத்தும் மொபைலுக்கு முன்னுரிமை அளிக்கும் அனுபவத்திற்காக மேம்படுத்தப்பட்டவை.
தனிப்பயனாக்க விருப்பங்கள்
- பல்வேறு விதமான வாடிக்கையாளர் கணக்குச் செயலிகள்: செயலித் தொகுதிகளுடன் உங்கள் வாடிக்கையாளர் கணக்கு அனுபவத்தைத் தனிப்பயனாக்குங்கள். எடுத்துக்காட்டாக, எந்தவொரு குறியீடும் தேவையில்லாமல் லாயல்டி, சந்தாக்கள் மற்றும் விருப்பப் பட்டியல் அம்சங்களை வாடிக்கையாளர் கணக்குகளில் சேர்க்கலாம். செக்அவுட் மற்றும் கணக்குகள் எடிட்டரில் நீங்கள் அமைத்துள்ள நிறங்கள், எழுத்துருக்கள் மற்றும் ஸ்டைலிங் ஆகியவற்றைச் செயலித் தொகுதிகள் பயன்படுத்துகின்றன, எனவே நீங்கள் சேர்க்கும் ஒவ்வொரு அம்சமும் உங்கள் பிராண்டுடன் சீராக இருக்கும்.
- உங்கள் சொந்த அடையாள வழங்குநரை இணையுங்கள்: முற்றிலும் தனிப்பயன் அங்கீகார ஓட்டத்திற்காக, இயல்புநிலை உள்நுழைவு அனுபவத்தை உங்கள் சொந்த அடையாள வழங்குநரைக் கொண்டு மாற்றுங்கள்.
- Customer Account API: Hydrogen மற்றும் Storefront API ஆகியவற்றுடன் வேலை செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்ட Customer Account API மூலம் தனிப்பயனாக்கப்பட்ட வாடிக்கையாளர் கணக்குகள் அனுபவத்தை உருவாக்குங்கள்.
நீங்கள் இன்னும் பழைய வாடிக்கையாளர் கணக்குகளைப் பயன்படுத்துகிறீர்கள் என்றால், உங்கள் மேம்படுத்தலுக்குத் தயாராகவும், உங்கள் வாடிக்கையாளர் அனுபவத்தில் ஏற்படும் இடையூறுகளைத் தடுக்கவும் இந்த வழிகாட்டியைப் பின்பற்றவும்.
இந்தப் பக்கத்தில்
- வரம்புகள்
- Sidekick மூலம் உங்கள் மேம்படுத்தலைத் திட்டமிடுங்கள்
- படி 1: உங்களின் பழைய தனிப்பயனாக்கங்களை மதிப்பாய்வு செய்து எவற்றை வைத்திருக்க வேண்டும் என்பதை முடிவு செய்யுங்கள்
- படி 2: உங்களின் தற்போதைய உள்ளமைவை நகலெடுங்கள்
- படி 3: உங்கள் பழைய தனிப்பயனாக்கங்களை வாடிக்கையாளர் கணக்குகளுக்கான செயலிகளைக் கொண்டு மாற்றுங்கள்
- படி 4: உங்களின் பிராண்டு அமைப்புகள் புதுப்பித்த நிலையில் இருப்பதை உறுதிசெய்யுங்கள்
- படி 5: வாடிக்கையாளர் கணக்குகளுக்கான துணை டொமைனை இணையுங்கள்
- படி 6: உங்களின் அனுப்புநர் மின்னஞ்சல் புதுப்பித்த நிலையில் உள்ளதா என்பதைச் சரிபார்க்கவும்
- படி 7: உங்களின் உள்ளமைவை வெளியிடுங்கள்
- படி 8: உங்களின் புதிய வாடிக்கையாளர் கணக்குகள் உள்ளமைவை முன்னோட்டமிட்டுப் பரிசோதிக்கவும்
- படி 9: மேம்படுத்துங்கள்
- பழைய வாடிக்கையாளர் கணக்கு ஆதாரங்கள்
வரம்புகள்
பழைய வாடிக்கையாளர் கணக்குகளில் இருந்து வாடிக்கையாளர் கணக்குகளுக்கு மேம்படுத்துவதற்கு முன்பு, இந்த வரம்புகளை மதிப்பாய்வு செய்யவும்:
- தனிப்பயன் உள்நுழைவு அல்லது பதிவு அனுபவங்கள்: நீங்கள் மேம்படுத்திய பிறகு, பழைய வாடிக்கையாளர் கணக்கு URLகள் (எ.கா.
/account/login) அனைத்தையும் Shopify தானாகவே புதிய வாடிக்கையாளர் கணக்குகளுக்குத் திசைதிருப்பும். உங்களின் தீமில் உள்ள ஏதேனும் ஹார்டு-கோடட் இணைப்புகளும் இதில் அடங்கும். இருப்பினும், நீங்கள் மாடலில் அல்லது பழைய கணக்கு வார்ப்புருக்களில் இருந்து மாறுபட்ட வேறு பக்கத்தில் தனிப்பயன் உள்நுழைவு அல்லது பதிவு அனுபவத்தை உருவாக்கியிருந்தால், மேம்படுத்துவதற்கு முன்பு அந்தத் தனிப்பயனாக்கங்களை அகற்ற, உங்களின் தீமைத் திருத்த வேண்டியிருக்கலாம். - பணிப்பாய்வுத் தூண்டுதல்கள் மற்றும் தானியக்கமாக்கல்கள்: நீங்கள் மேம்படுத்திய பிறகு, வாடிக்கையாளர் முதன்முறையாக வாடிக்கையாளர் கணக்குகளில் உள்நுழையும்போது, Customer account enabled தூண்டுதலைப் பயன்படுத்தும் பணிப்பாய்வுகள் தொடங்கும். ஏற்கனவே பழைய வாடிக்கையாளர் கணக்கை வைத்திருந்த வாடிக்கையாளர்களுக்கு இந்தப் பணிப்பாய்வுகள் தொடங்காது. பழைய வாடிக்கையாளர் கணக்குகளை அடிப்படையாகக் கொண்ட பிற பணிப்பாய்வுத் தூண்டுதல்கள் மற்றும் தானியக்கமாக்கல்கள் (எடுத்துக்காட்டாக: Customer account disabled தூண்டுதல்), வாடிக்கையாளர் கணக்குகளில் ஆதரிக்கப்படாது.
- வாடிக்கையாளர் பிரிவுகள்: நீங்கள் மேம்படுத்திய பிறகு, வாடிக்கையாளர் முதன்முறையாக வாடிக்கையாளர் கணக்குகளில் உள்நுழையும்போது அவரது
customer_account_statusமதிப்புENABLEDஎன மாறும். பழைய வாடிக்கையாளர் கணக்கை உருவாக்கிய வாடிக்கையாளர்களுக்குENABLEDஎன்றே இருக்கும்.DISABLED,INVITEDஅல்லதுDECLINEDமதிப்புகளைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர் பிரிவுகளை மதிப்பாய்வு செய்யவும், ஏனெனில் இந்த வாடிக்கையாளர்கள் வாடிக்கையாளர் கணக்குகளில் உள்நுழையும்போதுENABLEDஎன மாறுவார்கள். - Sidekick மேம்படுத்தல் திட்டமிடல்: உங்களின் Shopify Flow பணிப்பாய்வுகள் அல்லது வாடிக்கையாளர் பிரிவுகளை Sidekick சரிபார்க்காது. Sidekick மூலம் உங்களின் மேம்படுத்தலைத் திட்டமிட்டால், உங்களின் Shopify Flow பணிப்பாய்வுகள் மற்றும் வாடிக்கையாளர் பிரிவுகளை நீங்களே மதிப்பாய்வு செய்ய வேண்டும்.
- சந்தை வாரியான தனிப்பயன் டொமைன்கள்: உங்களின் வாடிக்கையாளர் கணக்குப் பக்கங்களுக்குச் சந்தை வாரியாகத் தனிப்பயன் டொமைனை அமைக்க முடியாது. இதன் அர்த்தம் என்னவென்றால், உங்கள் ஸ்டோரில் பல சர்வதேச டொமைன்கள் அமைக்கப்பட்டிருந்தாலும், அனைத்துச் சந்தைகளுக்கும் சேர்த்து வாடிக்கையாளர் கணக்குகளுக்கு ஒரு டொமைனை மட்டுமே உங்களால் பயன்படுத்த முடியும்.
- மல்டிபாஸ்: நீங்கள் ஏற்கனவே மல்டிபாஸைப் பயன்படுத்துகிறீர்கள் மற்றும் Shopify Plus திட்டத்தில் உள்ளீர்கள் என்றால், நீங்கள் மேம்படுத்திய பிறகு உங்களின் தற்போதைய ஒருங்கிணைப்பு தொடர்ந்து வேலை செய்யும், இதற்கு எந்தவொரு நடவடிக்கையும் தேவையில்லை. நீங்கள் மேம்படுத்திய பிறகு உங்கள் Shopify நிர்வாகியில் மல்டிபாஸ் அமைப்பு காட்டப்படவில்லை என்றால், Shopify ஆதரவைத் தொடர்புகொள்ளவும். உங்கள் சொந்த சிஸ்டத்தில் இருந்து வாடிக்கையாளர்களை வாடிக்கையாளர் கணக்குகளில் உள்நுழையச் செய்வதற்குப் பதிலாக, உங்கள் சொந்த அடையாள வழங்குநரை இணைக்கலாம்.
- உள்நுழைவுப் பக்கத் தனிப்பயனாக்கம்: உள்நுழைவுப் பக்கத்தில் தனிப்பயனாக்கத் தொகுதிகளை உங்களால் சேர்க்க முடியாது. செக்அவுட் மற்றும் கணக்குகள் எடிட்டரில் உள்நுழைவுப் பக்கத்திற்கான லோகோ, நிறங்கள், எழுத்துருக்கள் மற்றும் பிராண்டுப் படத்தைத் தனிப்பயனாக்கலாம்.
Sidekick மூலம் உங்கள் மேம்படுத்தலைத் திட்டமிடுங்கள்
இந்தப் வழிகாட்டியில் உள்ள பெரும்பாலான படிகளை உள்ளடக்கிய உங்கள் Shopify நிர்வாகியிலுள்ள மேம்படுத்தல் செய்நிரல் பட்டியல் மூலம் உங்களின் மேம்படுத்தலின்போது Sidekick உங்களுக்கு வழிகாட்ட முடியும். Sidekick பின்வரும் வழிகளில் உதவுகிறது:
- உங்கள் பழைய தனிப்பயனாக்கங்களைக் கண்டறிதல்: பழைய வாடிக்கையாளர் கணக்குகளுக்கான தனிப்பயனாக்கங்களைக் கண்டறிய, உங்களின் வெளியிடப்பட்ட தீம் மற்றும் நிறுவப்பட்ட செயலிகளை Sidekick பகுப்பாய்வு செய்கிறது. படி 1-ஐ நிறைவு செய்ய இது உதவுகிறது.
- மாற்றுகளைப் பரிந்துரைத்தல்: ஒவ்வொரு தனிப்பயனாக்கத்திற்கும், வாடிக்கையாளர் கணக்குகளுக்கான செயலி அல்லது உள்ளமைக்கப்பட்ட Shopify அம்சத்தை Sidekick பரிந்துரைக்கும். Sidekick-ஆல் நேரடி மாற்றைக் கண்டறிய முடியாவிட்டால், அது உங்களுக்குத் தெரிவிக்கும். படி 3-ஐ நிறைவு செய்ய இது உதவுகிறது.
- ஒவ்வொரு படிநிலைக்கும் வழிகாட்டும்: உங்கள் செய்ய வேண்டியவை பட்டியலிலுள்ள ஒவ்வொரு உருப்படிக்கும் Sidekick உங்களுக்கு வழிமுறைகளையும் உங்கள் Shopify நிர்வாகியில் உள்ள சரியான பக்கத்திற்கான இணைப்பையும் வழங்கும். உங்கள் செய்ய வேண்டியவை பட்டியலில் பிராண்ட் அமைப்புகள், உங்கள் வாடிக்கையாளர் கணக்குகளுக்கான டொமைன், உங்கள் அனுப்புநர் மின்னஞ்சல், உங்கள் உள்ளமைவை வெளியிடுவது மற்றும் உங்கள் மேம்படுத்தலை நிறைவுசெய்வது ஆகியவற்றுக்கான உருப்படிகள் இருக்கும். செயலியை மாற்றியமைப்பதற்கு, ஏற்கெனவே தேடப்பட்ட செயலியுடன் செக்அவுட் மற்றும் கணக்குகளின் எடிட்டரைத் திறக்கும் ஒரு இணைப்பை Sidekick வழங்கலாம், இதனால் நீங்கள் அதன் செயலிப் பிளாக்குகளைச் சேர்க்கலாம்.
- உங்கள் முன்னேற்றத்தைச் சேமிக்கும்: Sidekick உங்கள் செய்ய வேண்டியவை பட்டியலைச் சேமிக்கும், எனவே நீங்களும் உங்கள் பணியாளர்களும் எந்த நேரத்திலும் வெளியேறி மீண்டும் தொடரலாம்.
கீழ்க்காணும் பணிகள் உட்பட, மாற்றங்களை நீங்களே மேற்கொள்ளலாம்:
- உங்கள் உள்ளமைவை நகலெடுங்கள். Sidekick ஒரு புதிய வரைவு உள்ளமைவைப் பரிந்துரைத்து, அதை உருவாக்குவதற்கான படிகளை உங்களுக்கு வழங்குகிறது.
- படி 1 இல் விவரிக்கப்பட்டுள்ளபடி, Sidekick ஆல் பகுப்பாய்வு செய்ய முடியாத தீம் கோப்புகளை மதிப்பாய்வு செய்யுங்கள். செய்ய வேண்டியவை பட்டியலில் Sidekick இந்தக் கோப்புகளைத் தனி உருப்படியாகச் சேர்க்கும்.
- உங்கள் பழைய தனிப்பயனாக்கங்களை மாற்றுவதற்கு செயலிகளை நிறுவி, செயலி பிளாக்குகளைச் சேர்க்கவும். Sidekickஆல் நேரடி மாற்றீட்டைக் கண்டறிய முடியவில்லை எனில், புதிய செயலியைக் கண்டறியவும் அல்லது டெவலப்பரிடம் ஆலோசனை பெறவும்.
- உங்கள் பிராண்ட் அமைப்புகளைப் புதுப்பிக்கவும், ஒரு துணை டொமைனை இணைக்கவும் மற்றும் உங்கள் அனுப்புநர் மின்னஞ்சலைச் சரிபார்க்கவும்.
- உங்கள் உள்ளமைவை வெளியிடவும்.
- நீங்கள் வழங்கும் ஒவ்வொரு உள்நுழைவு விருப்பமும் உட்பட, உங்கள் புதிய வாடிக்கையாளர் கணக்குகளை முன்னோட்டமிட்டுச் சோதிக்கவும்.
- உங்கள் மேம்படுத்தலை நிறைவுசெய்யவும்.
- வாடிக்கையாளர் கணக்குகளின் வரம்புகளுக்கு எதிராக உங்களின் Shopify Flow பணிப்பாய்வுகள் மற்றும் வாடிக்கையாளர் பிரிவுகளை மதிப்பாய்வு செய்யவும்.
நீங்கள் ஒரு உருப்படியை முடித்ததும், Sidekick இடம் தெரிவிக்கவும் அல்லது உங்கள் செய்ய வேண்டியவை பட்டியலில் உருப்படியை நிறைவடைந்ததாகக் குறிக்கவும். ஒவ்வொரு உருப்படியும் கட்டாயமற்றது, எனவே எப்போது வேண்டுமானாலும் உங்கள் மேம்படுத்தலை நிறைவுசெய்யத் தயாராகிவிட்டீர்கள் என நீங்கள் முடிவெடுக்கலாம். நீங்கள் மேம்படுத்துவதற்கு முன்பு உங்கள் ஸ்டோர் மேம்படுத்தல் சரிபார்ப்பில் தேர்ச்சி பெற வேண்டும்.
படிகள்:
உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, அமைப்புகள் > வாடிக்கையாளர் கணக்குகள் என்பதற்குச் செல்லவும்.
நீங்கள் பழைய வாடிக்கையாளர் கணக்குகளைப் பயன்படுத்துகிறீர்கள் என்ற பேனரில், மேம்படுத்த உதவு என்பதைக் கிளிக் செய்யவும். நீங்களோ உங்கள் பணியாளரோ ஏற்கனவே ஒரு மேம்படுத்தல் செய்ய வேண்டியவை பட்டியலைத் தொடங்கியிருந்தால், அதற்குப் பதிலாக மேம்படுத்தலை மீண்டும் தொடங்கு என்பதைக் கிளிக் செய்யவும்.
Sidekick இல், உங்கள் பழைய தனிப்பயனாக்கங்களை மதிப்பாய்வு செய்வதற்கும் உங்கள் மேம்படுத்தல் செய்ய வேண்டியவை பட்டியலில் உள்ள ஒவ்வொரு உருப்படியிலும் பணியாற்றுவதற்கும் பிராம்ட்களைப் பின்பற்றவும்.
படி 1: உங்களின் பழைய தனிப்பயனாக்கங்களை மதிப்பாய்வு செய்து எவற்றை வைத்திருக்க வேண்டும் என்பதை முடிவு செய்யுங்கள்
சந்தா மேலாண்மை அல்லது லாயல்டி திட்டங்களுக்கான இணைப்புகள் போன்ற பழைய வாடிக்கையாளர் கணக்குகளில் நீங்கள் செய்துள்ள ஏதேனும் தனிப்பயனாக்கங்களை மதிப்பாய்வு செய்து, எந்தெந்தத் தனிப்பயனாக்கங்கள் உங்களுக்கு முக்கியமானவை என்பதைக் குறித்துக்கொள்ளவும். எந்தவொரு தடங்கலுமின்றி மாற்றம் நடப்பதை உறுதிசெய்ய, மேம்படுத்துவதற்கு முன்பு இவற்றில் ஒவ்வொன்றையும் நீங்கள் மீண்டும் உருவாக்க வேண்டும். தீம் எடிட்டரில் வாடிக்கையாளர் கணக்கு வார்ப்புருக்களில் செய்யப்பட்ட மாற்றங்கள் அல்லது .liquid குறியீட்டில் செய்யப்பட்ட மாற்றங்கள் ஆகியவை தனிப்பயனாக்கங்களில் அடங்கும்.
இனிமேலும் உங்களுக்கு முக்கியமில்லாத பழைய தனிப்பயனாக்கங்களைக் கண்டறியலாம். மேம்படுத்தல் செயல்முறையின்போது அவை இடமாற்றப்படாது என்பதால், இவற்றைப் பாதுகாப்பாகப் புறக்கணிக்கலாம்.
தீம் எடிட்டரில் உள்ள தனிப்பயனாக்கங்களை மதிப்பாய்வு செய்யவும்:
உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, ஆன்லைன் ஸ்டோருக்குச் செல்லவும்.
உங்களின் தற்போதைய தீமிற்கு அருகில், தீமைத் திருத்து என்பதைக் கிளிக் செய்யவும்.
முகப்புப் பக்கக் கீழ்தோன்றும் மெனுவைக் கிளிக் செய்யவும்.
பழைய வாடிக்கையாளர் கணக்குகள் என்பதைக் கிளிக் செய்யவும்.
ஏதேனும் தனிப்பயனாக்கங்களைக் கண்டறிய, ஒவ்வொரு பழைய வாடிக்கையாளர் கணக்கு வார்ப்புருவையும் மதிப்பாய்வு செய்யவும்:
- வாடிக்கையாளர் கணக்கு
- வாடிக்கையாளர் கணக்கைச் செயல்படுத்து
- வாடிக்கையாளர் முகவரிகள்
- வாடிக்கையாளர் உள்நுழைவு
- வாடிக்கையாளர் ஆர்டர்
- வாடிக்கையாளர் பதிவு
- வாடிக்கையாளர் கடவுச்சொல் மீட்டமைப்பு
.liquid குறியீட்டில் உள்ள தனிப்பயனாக்கங்களை மதிப்பாய்வு செய்யவும்:
உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, ஆன்லைன் ஸ்டோருக்குச் செல்லவும்.
உங்கள் தற்போதைய தீமிற்கு அடுத்துள்ள,
> குறியீட்டைத் திருத்து என்பதைக் கிளிக் செய்யவும்.
இடது பக்கப்பட்டியில், templates > customers என்பதைக் கிளிக் செய்யவும். இவை பழைய வாடிக்கையாளர் கணக்குகளுக்கான வார்ப்புருக்களாகும். நீங்கள் கோப்பு அமைப்பில் மாற்றங்கள் செய்திருந்தால், அது மாறுபடலாம்.
ஏதேனும் தனிப்பயனாக்கங்கள் உள்ளனவா என்பதைக் கண்டறிய ஒவ்வொரு வாடிக்கையாளர் வார்ப்புருவிலும் உள்ள குறியீட்டை மதிப்பாய்வு செய்யவும்.
படி 2: உங்களின் தற்போதைய உள்ளமைவை நகலெடுத்தல்
புதிய தனிப்பயனாக்கங்களில் பணியாற்றுவதற்கான இடத்தை உருவாக்க, செயல்பாட்டில் உள்ள மாற்றங்களைச் சேமிக்க மற்றும் அவற்றை வாடிக்கையாளர்களுக்குக் காண்பிக்கத் தயாராகும் முன்பே முன்தோற்றத்தைப் பார்க்க, உங்கள் தற்போதைய உள்ளமைவை நகலெடுக்கவும்.
படிகள்:
உங்கள் Shopify நிர்வாகியில், அமைப்புகள் > செக்அவுட் என்பதற்குச் செல்லவும்.
உள்ளமைவுகள் பிரிவில், நீங்கள் நகலெடுக்க விரும்பும் உள்ளமைவின் அருகிலுள்ள நகலெடு என்பதைக் கிளிக் செய்யவும். இது உங்கள் உள்ளமைவின் நகலை உருவாக்குகிறது.
விருப்பத்தேர்வு: உள்ளமைவைப் பின்னர் எளிதாகக் கண்டறிய, அதன் பெயரை மாற்றிக் கொள்ளவும்.
படி 3: வாடிக்கையாளர் கணக்குகளுக்கான செயலிகளைக் கொண்டு பழைய தனிப்பயனாக்கங்களை மாற்றுதல்
படி 1-இல் நீங்கள் கண்டறிந்த ஒவ்வொரு பழைய தனிப்பயனாக்கத்தையும் மாற்றச் செயலிகளைக் கண்டறியவும். லாயல்டி திட்டங்கள், அப்செல்கள் மற்றும் குறுக்கு விற்பனைகள், ஆர்டர் திருத்தம், விருப்பப் பட்டியல்கள், மதிப்பாய்வுகள், ரிட்டர்ன்கள், சந்தாக்கள், படிவங்கள் மற்றும் கருத்துக்கணிப்புகள், டிஜிட்டல் பதிவிறக்கங்கள் போன்ற பல அம்சங்களைக் கொண்ட செயலிகள், வாடிக்கையாளர் கணக்குகளுக்குக் கிடைக்கின்றன.
வாடிக்கையாளர் கணக்குகளுடன் செயல்படும் அனைத்துச் செயலிகளையும் உலாவவும்:
- வாடிக்கையாளர் கணக்குகளுக்கான செயலிகள் குறித்த வழிகாட்டி.
- வாடிக்கையாளர் கணக்குகளுக்கான அனைத்துச் செயலிகள்.
நீங்கள் நிறுவியுள்ள செயலிகளிலிருந்து செயலித் தொகுதிகளைச் சேர்த்தல்
பழைய வாடிக்கையாளர் கணக்குகளைத் தனிப்பயனாக்க நீங்கள் ஒரு செயலியைப் பயன்படுத்தியிருந்தால், செயலியை உருவாக்குபவர், புதிய வாடிக்கையாளர் கணக்குகளுடன் செயல்படும் வகையில் அந்தச் செயலியைப் புதுப்பித்திருக்கக்கூடும். செக்அவுட் மற்றும் கணக்குகள் எடிட்டரிலிருந்து இந்தச் செயலிகளின் செயலித் தொகுதிகளை நீங்கள் சேர்க்கலாம்.
படிகள்:
உங்கள் Shopify நிர்வாகியில், அமைப்புகள் > செக்அவுட் என்பதற்குச் செல்லவும்.
செக்அவுட் மற்றும் கணக்குகள் எடிட்டரைத் திறக்க, நீங்கள் உருவாக்கிய உள்ளமைவின் நகலுக்கு அடுத்துள்ள தனிப்பயனாக்கு என்பதைக் கிளிக் செய்யவும்.
இடது பக்கப்பட்டியில் செயலிகள் என்பதைக் கிளிக் செய்யவும். செக்அவுட் அல்லது வாடிக்கையாளர் கணக்குகளுடன் செயல்படும் நீங்கள் நிறுவிய அனைத்துச் செயலிகளையும் நீங்கள் காண்பீர்கள்.
அனைத்து என்ற தாவலின் கீழ், பழைய வாடிக்கையாளர் கணக்குகளைத் தனிப்பயனாக்க நீங்கள் பயன்படுத்திய செயலியைக் கண்டறியவும். குறிப்பிட்ட செயலியின் பெயரைத் தேடுவதன் மூலம், இந்தப் பட்டியலை நீங்கள் சுருக்கலாம்.
அந்தச் செயலியின் கீழ் உள்ள செயலித் தொகுதிகளுக்கு அடுத்துள்ள + என்பதைக் கிளிக் செய்யவும். ஆர்டர்கள், ஆர்டர் நிலை, சுயவிவரம் அல்லது கணக்குகள் ஆகியவற்றில் செயலித் தொகுதியைச் சேர்ப்பதற்கான விருப்பம் இருந்தால், அந்தச் செயலி வாடிக்கையாளர் கணக்குகளுடன் செயல்படும் என்று அர்த்தம்.
உங்களுக்குத் தேவையான செயலித் தொகுதிகளைச் சேர்த்து, செயலித் தொகுதி அமைப்புகளை உள்ளமைக்கவும். செக்அவுட் மற்றும் கணக்குகள் எடிட்டரில் செயலிகளைப் பயன்படுத்துவது பற்றி மேலும் அறிக.
விருப்பத்தேர்வு: உங்கள் பக்கங்கள் வாடிக்கையாளர்களுக்கு எவ்வாறு காட்டப்படும் என்பதைப் பார்க்க, டெஸ்க்டாப்பிற்கு
பொத்தானை, மொபைலுக்கு
பொத்தானை அல்லது முழுத்திரைக்கு
பொத்தானைக் கிளிக் செய்வதன் மூலம் வெவ்வேறு திரை அளவுகளில் உங்கள் பக்கங்களில் செய்யப்பட்ட மாற்றங்களின் முன்தோற்றத்தைப் பார்க்கவும்.
சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.
புதிய செயலியைக் கண்டறிதல்
சில தனிப்பயனாக்கங்களுக்கு, பழைய வாடிக்கையாளர் கணக்குகளில் நீங்கள் பயன்படுத்திய அதே செயல்பாட்டை மீண்டும் உருவாக்க, புதிய செயலியைக் கண்டறிந்து நிறுவுவது அவசியமாகலாம்.
படிகள்:
- Shopify App Store-க்குச் செல்லவும்.
- உங்களுக்குத் தேவையான அம்சத்தைத் தேடவும்.
- செம்மைப்படுத்து என்பதைக் கிளிக் செய்யவும்.
- இதனுடன் செயல்படும் என்பதன் கீழ், வாடிக்கையாளர் கணக்குகள் என்பதைத் தேர்ந்தெடுக்கவும். வாடிக்கையாளர் கணக்குகளுடன் செயல்படும் செயலிகளுக்கு மட்டுமே இது உங்கள் தேடலைக் கட்டுப்படுத்தும்.
- நீங்கள் செயலியை நிறுவியதும், நீங்கள் நிறுவியுள்ள செயலிகளிலிருந்து செயலித் தொகுதிகளைச் சேர்க்க படிகளைப் பின்பற்றவும்.
வெளிப்புற இணைப்பைச் சேர்த்தல்
உங்களின் பழைய வாடிக்கையாளர் கணக்குகளில் வெளிப்புற இணைப்புகள் (உதாரணமாக, தனித்தனிச் சந்தாக்கள் அல்லது ரிட்டர்ன்கள் போர்ட்டலுக்கான இணைப்பு) இருந்தால், அதற்குப் பதிலாக அந்த அம்சத்தை வழங்குவதற்கு ஏதேனும் Shopify அம்சங்கள் அல்லது செயலிகள் உள்ளனவா என்பதைச் சரிபார்க்கவும்.
Shopify அம்சங்கள் மற்றும் செயலிகளைப் பயன்படுத்துவதன் நன்மை என்னவென்றால், வாடிக்கையாளர்கள் ஒரு முறை மட்டும் உள்நுழைவதன் மூலம் இந்த அம்சங்கள் அனைத்தையும் அணுக முடியும். ஆனால் வெளிப்புற போர்ட்டலின் இணைப்பைப் பயன்படுத்தும்போது, கூடுதல் சரிபார்ப்புப் படிகள் தேவைப்படலாம்.
அப்படியும் நீங்கள் ஒரு வெளிப்புற இணைப்பைச் சேர்க்க வேண்டும் என்றால், உங்கள் வாடிக்கையாளர் கணக்கின் பிரதான மெனுவில் இணைப்பைச் சேர்க்கலாம் அல்லது பக்கத்தின் பிரதானப் பகுதியில் இணைப்பைச் சேர்க்க ஒரு செயலியைப் பயன்படுத்தலாம். வாடிக்கையாளர் கணக்குகளில் உள்ள ஆர்டர் நிலை பக்கத்தில், இணைப்புகள் உட்பட உள்ளடக்கத் தொகுதிகளைச் சேர்க்க Shopify Checkout Blocks உங்களை அனுமதிக்கிறது. வாடிக்கையாளர் கணக்குகளில் உள்ள பிற பக்கங்களில் இணைப்புகளைச் சேர்க்க உங்களை அனுமதிக்கும் பல பொதுச் செயலிகளும் உள்ளன. உங்களுக்கேற்ற ஒரு செயலியைக் கண்டறிய, புதிய செயலியைக் கண்டறிதல் என்பதற்கான படிகளைப் பின்பற்றவும்.
படி 4: உங்களின் பிராண்ட் அமைப்புகள் புதுப்பித்த நிலையில் இருப்பதை உறுதிசெய்தல்
செக்அவுட் மற்றும் வாடிக்கையாளர் கணக்குகள் ஒரே பிராண்ட் அமைப்புகளைப் பகிர்கின்றன. உங்கள் பிராண்ட் மற்றும் லோகோ, எல்லாப் பக்கங்களிலும் எதிர்பார்த்தபடி காட்டப்படுவதை உறுதிசெய்து கொள்ளவும்.
படிகள்:
உங்கள் Shopify நிர்வாகியில், அமைப்புகள் > செக்அவுட் என்பதற்குச் செல்லவும்.
செக்அவுட் மற்றும் கணக்குகள் எடிட்டரைத் திறக்க, நீங்கள் உருவாக்கிய உள்ளமைவின் நகலுக்கு அடுத்துள்ள தனிப்பயனாக்கு என்பதைக் கிளிக் செய்யவும்.
இடது பக்கப்பட்டியில், அமைப்புகள் என்பதைக் கிளிக் செய்து, உங்கள் தற்போதைய பிராண்ட் அமைப்புகளை மதிப்பாய்வு செய்யவும்.
பக்கத் தேர்வி மெனுவைத் திறக்க, எடிட்டரின் மேல் பட்டியில் உள்ள செக்அவுட் என்பதைக் கிளிக் செய்யவும்.
உங்கள் பிராண்டும் லோகோவும் அனுபவம் முழுவதும் எதிர்பார்த்தபடி காட்டப்படுவதை உறுதிசெய்ய, வெவ்வேறு செக்அவுட் மற்றும் வாடிக்கையாளர் கணக்குப் பக்கங்களுக்குச் செல்லவும்.
தேவைக்கேற்ப அமைப்புகளைச் சரிசெய்யவும்.
சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.
படி 5: வாடிக்கையாளர் கணக்குகளுக்குத் துணை டொமைனை இணைத்தல்
இயல்பாக, உள்நுழைவுப் பக்கம், ஆர்டர்கள் பக்கம் மற்றும் சுயவிவரப் பக்கம் போன்ற உங்கள் வாடிக்கையாளர் கணக்குகளின் பக்கங்கள், உங்கள் ஸ்டோருக்கான பிரத்தியேக ID எண்ணுடன் shopify.com/1234567890/account என்பதைப் போலவே shopify.com URL வடிவத்தைத் தங்கள் அடிப்படை டொமைனாகப் பயன்படுத்துகின்றன. உங்கள் பிராண்டுடன் உங்கள் வாடிக்கையாளர் கணக்குகளைப் பொருத்துவதற்குப் பதிலாக, உங்கள் ஆன்லைன் ஸ்டோரின் முதன்மை டொமைன் பெயரின் அடிப்படையில் வாடிக்கையாளர் கணக்குகளுக்கான துணை டொமைனை நீங்கள் தேர்ந்தெடுத்து இணைக்கலாம். உதாரணமாக: account.your-store.com.
ஆர்டர் நிலை பக்கம் உட்பட, வாடிக்கையாளர்கள் தங்கள் கணக்கைப் பார்வையிடும்போது இந்தத் துணை டொமைன் அவர்களுக்குக் காட்டப்படும்.
படி 6: உங்களின் அனுப்புநர் மின்னஞ்சல் புதுப்பித்த நிலையில் உள்ளதா என்பதைச் சரிபார்த்தல்
உங்களின் அனுப்புநர் மின்னஞ்சல் முகவரியை மதிப்பாய்வு செய்து, அதற்கான அணுகல் உங்களிடம் இருப்பதை உறுதிசெய்யவும். வாடிக்கையாளர்கள் தங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்பப்படும் சரிபார்ப்புக் குறியீட்டைக் கொண்டு உள்நுழைகிறார்கள். அந்த மின்னஞ்சல்கள் உங்கள் அனுப்புநர் மின்னஞ்சல் முகவரியிலிருந்தே அனுப்பப்படும்.
படி 7: உங்கள் உள்ளமைவை வெளியிடுதல்
செயலிகள் மற்றும் பிராண்ட அமைப்புகளை அமைத்து முடித்தவுடன், உங்கள் உள்ளமைவை வெளியிடவும். இது உங்கள் மாற்றங்களைச் செக்அவுட் மற்றும் வாடிக்கையாளர் கணக்குகளில் நேரலையாக்கும்.
நீங்கள் படி 9-ஐ நிறைவு செய்யும் வரை உங்கள் ஆன்லைன் ஸ்டோர் மற்றும் செக்அவுட் ஆகியவை பழைய வாடிக்கையாளர் கணக்குகளுடனேயே இணைக்கப்பட்டிருக்கும்.
படிகள்:
உங்கள் Shopify நிர்வாகியில், அமைப்புகள் > செக்அவுட் என்பதற்குச் செல்லவும்.
நீங்கள் உருவாக்கிய அமைவாக்கத்தின் நகலுக்கு அடுத்து, பின்வரும் செயல்களைச் செய்யவும்:
- விருப்பத்திற்குரியது: உங்கள் மாற்றங்களை முன்னோட்டமிட, தனிப்பயனாக்கு என்பதைக் கிளிக் செய்யவும்.
- வெளியிடு என்பதைக் கிளிக் செய்யவும்.
படி 8: உங்கள் புதிய வாடிக்கையாளர் கணக்குகளின் அமைவாக்கத்தை முன்னோட்டமிட்டு சோதித்துப் பார்க்கவும்
உங்கள் புதிய அமைவாக்கம் இப்போது வெளியிடப்பட்டுள்ளது, ஆனால் நீங்கள் மேம்படுத்துதலை நிறைவு செய்யும் வரை உங்கள் ஆன்லைன் ஸ்டோர் மற்றும் செக்அவுட் ஆகியவை பழைய வாடிக்கையாளர் கணக்குகளுடனே இணைக்கப்பட்டிருக்கும்.
மேம்படுத்துதலை நிறைவு செய்வதற்கு முன்பு, புதிய வாடிக்கையாளர் கணக்குகளின் அனுபவத்தைச் சோதித்துப் பார்க்க, உங்கள் புதிய வாடிக்கையாளர் கணக்குகளின் URL ஐ நகலெடுத்து ஒரு புதிய உலாவித் தாவலில் திறக்கவும். நீங்கள் வாடிக்கையாளர் கணக்குகளின் துணை டொமைனை அமைத்தால், URL ஆனது account.{your-store-domain}.com என்பதைப் போன்று வடிவமைக்கப்பட்டிருக்கும். நீங்கள் ஒரு துணை டொமைனை அமைக்கவில்லை எனில், அதற்கான இயல்புநிலை வடிவமைப்பு https://shopify.com/{your-store-ID}/account ஆகும்.
படிகள்:
உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, அமைப்புகள் > வாடிக்கையாளர் கணக்குகள் என்பதற்குச் செல்லவும்.
வாடிக்கையாளர் கணக்குகள் பிரிவில், URL புலத்தில் உள்ள இணைய முகவரியை நகலெடுக்கவும்.
உங்கள் இணைய உலாவியில், ஒரு புதிய தாவலைத் திறந்து, URL ஐ முகவரிப் புலத்தில் ஒட்டவும், பின்னர் பக்கத்தை ஏற்ற Enter ஐ அழுத்தவும்.
வெளியிடப்பட்டுள்ள உங்கள் செக்அவுட் மற்றும் கணக்குகளின் அமைவாக்கத்தைப் பயன்படுத்தி, புதிய வாடிக்கையாளர் கணக்குகள் குறித்த அனுபவத்தை முன்னோட்டமிட உங்களின் சோதனை வாடிக்கையாளர் கணக்கில் உள்நுழையவும்.
நீங்கள் வழங்கும் ஒவ்வொரு உள்நுழைவு விருப்பத்தையும் சோதித்துப் பார்க்கவும், இதில் இயல்புநிலை சரிபார்ப்புக் குறியீட்டு மின்னஞ்சல் மற்றும் சமூக ஊடக உள்நுழைவு ஆகியவையும் அடங்கும். உங்களின் சொந்த அடையாள வழங்குநரை இணைப்பது இயல்புநிலை உள்நுழைவு அனுபவத்தை மாற்றிவிடும், எனவே அந்த ஸ்டோர்களில் சரிபார்ப்புக் குறியீட்டு மின்னஞ்சல்களும் சமூக ஊடக உள்நுழைவும் பயன்படுத்தப்படாது.
படி 9: மேம்படுத்து
ஆன்லைன் ஸ்டோர் மற்றும் செக்அவுட்டிலிருந்து வாடிக்கையாளர் கணக்குகளுக்கான அணுகலை வாடிக்கையாளர்களுக்கு வழங்க நீங்கள் தயாராக இருக்கும்போது, மேம்படுத்தவும்.
படிகள்:
உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, அமைப்புகள் > வாடிக்கையாளர் கணக்குகள் என்பதற்குச் செல்லவும்.
பக்கத்தின் மேற்புறத்தில் உள்ள பேனரில் மேம்படுத்து என்பதைக் கிளிக் செய்யவும்.