வாடிக்கையாளர் கணக்குகள் மற்றும் பழைய வாடிக்கையாளர் கணக்குகள்

வாடிக்கையாளர்கள் தங்கள் ஆர்டர்கள், சுயவிவரத் தகவல்கள் மற்றும் சேமிக்கப்பட்ட முகவரிகளைப் பார்க்கவும் நிர்வகிக்கவும், உள்நுழைய வாடிக்கையாளர் கணக்குகள் அனுமதிக்கின்றன. வாடிக்கையாளர் உள்நுழையும்போது, செக்அவுட்டை விரைவாகச் செய்யும் அனுபவத்திற்காக, செக்அவுட்டின் போது அவர்களது கணக்கில் சேமிக்கப்பட்ட விவரங்கள் தானாகவே நிரப்பப்படும்.

வாடிக்கையாளர் கணக்குகளில் இரண்டு பதிப்புகள் உள்ளன:

  • வாடிக்கையாளர் கணக்குகள் என்பது வாடிக்கையாளர் கணக்குகளின் புதிய பதிப்பாகும், மின்னஞ்சலில் அனுப்பப்படும் 6 இலக்க ஒருமுறை பயன்படுத்தும் சரிபார்ப்புக் குறியீட்டைக் கொண்டு வாடிக்கையாளர்களை உள்நுழைய இது அனுமதிக்கிறது. உள்நுழைய கடவுச்சொல் தேவையில்லை.
  • பழைய வாடிக்கையாளர் கணக்குகள் மின்னஞ்சல் மற்றும் கடவுச்சொல்லைப் பயன்படுத்தி வாடிக்கையாளர்களை உள்நுழைய அனுமதிக்கிறது.

உங்கள் ஸ்டோர் பழைய வாடிக்கையாளர் கணக்குகளைப் பயன்படுத்தினால், புதிய அம்சங்களை அணுகுவதற்கும், சிறந்த உள்நுழைவு மற்றும் கணக்கு அனுபவத்தை உங்கள் வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதற்கும் நீங்கள் வாடிக்கையாளர் கணக்குகளுக்கு மேம்படுத்த வேண்டும்.

வாடிக்கையாளர் கணக்குகள் மற்றும் பழைய வாடிக்கையாளர் கணக்குகளுக்கு இடையே கிடைக்கும் அம்சங்களை ஒப்பிட்டுப் பார்க்க, பின்வரும் அட்டவணையைப் பார்க்கவும்.

பழைய வாடிக்கையாளர் கணக்குகள் மற்றும் வாடிக்கையாளர் கணக்குகளில் கிடைக்கும் வெவ்வேறு செயல்பாடுகள் மற்றும் ஆதாரங்களின் ஒப்பீடு.
அம்சம்வாடிக்கையாளர் கணக்குகள்பழைய வாடிக்கையாளர் கணக்குகள்
உள்நுழைவு அனுபவம்வாடிக்கையாளர்கள் பின்வரும் விருப்பங்களைப் பயன்படுத்தி உள்நுழையலாம்:
  • அவர்களின் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும் ஒருமுறை பயன்படுத்தும் ஆறு இலக்கச் சரிபார்ப்புக் குறியீடு
  • Shop Pay பயன்படுத்தும் ஸ்டோர்களுக்காக அல்லது Shopify, Advanced அல்லது Retail திட்டங்களில் உள்ள ஸ்டோர்களுக்காகத் தானாகவே இயக்கப்படும் Shop மூலம் உள்நுழைதல் விருப்பம்.
  • Google அல்லது Facebook கணக்குகள் வழியாக சமூக வலைத்தள உள்நுழைவு
வாடிக்கையாளர்கள் பின்வரும் விருப்பங்களில் ஏதேனும் ஒன்றைப் பயன்படுத்தி உள்நுழையலாம்:
  • மின்னஞ்சல் மற்றும் கடவுச்சொல்
  • உங்கள் அமைப்புகளில் கைமுறையாக இயக்கக்கூடிய Shop மூலம் உள்நுழைதல் விருப்பம்.
வெளிப்புற அடையாள வழங்குநர்ஏதேனும் ஒரு OAuth2.0 + OIDC இணக்கமான அடையாள வழங்குநருடன் இணைத்து, எல்லாத் தளங்களிலும் SSO-ஐ ஆதரியுங்கள். நீங்கள் ஏற்கனவே மல்டிபாஸ் பயன்படுத்தி, Shopify Plus திட்டத்தில் இருந்தால், நீங்கள் மேம்படுத்திய பிறகும் அந்த ஒருங்கிணைப்பு தொடர்ந்து செயல்படும்.SSO-ஐ ஆதரிக்காத மல்டிபாஸ்-ஐப் பயன்படுத்தவும்.
கணக்கு உருவாக்கம்கணக்கை உருவாக்குவதற்கு எனத் தனியான ஒரு படிமுறை இல்லாமல் எவரும் உள்நுழையலாம். ஒரு புதிய மின்னஞ்சல் முகவரியில் உள்நுழைந்தால், உங்கள் Shopify நிர்வாகியில் புதிய வாடிக்கையாளர் உருவாக்கப்படுவார்.உள்நுழைவதற்கு முன், வாடிக்கையாளர்கள் தனிப் பதிவுப்பக்கத்தில் கணக்கை உருவாக்க வேண்டும் அல்லது கணக்கு அழைப்பை ஏற்க வேண்டும்.
ஒருங்கிணைந்த வாடிக்கையாளர் கணக்கு அனுபவம்ஒரேவொரு உள்நுழைவு மற்றும் மையப்படுத்தப்பட்ட கணக்கு போர்ட்டல் மூலம் அனைத்து அம்சங்களையும் பயன்படுத்தலாம்.செயலிக்கெனத் தனியான உள்நுழைவுகளும் கணக்கு போர்ட்டல்களும்.
பிராண்டிங்உங்கள் செக்அவுட் அமைப்புகளிலிருந்து பிராண்டிங்கைப் பயன்படுத்தலாம்.உங்கள் ஆன்லைன் ஸ்டோர் தீம் அமைப்புகளிலிருந்து பிராண்டிங்கைப் பயன்படுத்தலாம்.
தனிப்பயனாக்கங்கள்மிகவும் பாதுகாப்பான, மேம்படுத்தலுக்குப் பாதுகாப்பான மற்றும் விஷுவல் எடிட்டரில் திருத்துவதற்கு எளிதான செயலியை அடிப்படையாகக் கொண்ட தனிப்பயனாக்கங்கள்Liquid குறியீட்டைத் திருத்த வேண்டும், தீம் புதுப்பிப்புகளின் போது எளிதாகச் செயலிழக்கும், தரவுப் பாதுகாப்பு பலவீனமானது
வாடிக்கையாளர் தகவலைப் புதுப்பித்தல்வாடிக்கையாளர்கள் தங்கள் வாடிக்கையாளர் சுயவிவரங்களில் தங்கள் பெயரையும் மின்னஞ்சல் முகவரியையும் தாங்களே சுயமாகத் திருத்திக்கொள்ளலாம்.வாடிக்கையாளர்கள் தங்கள் வாடிக்கையாளர் சுயவிவரங்களில் தகவலைப் புதுப்பிக்க வியாபாரியின் ஆதரவுப் பணியாளர்களைத் தொடர்பு கொள்ள வேண்டும்.
ஆர்டர் வரலாறு மற்றும் நிலை✔✔
சேமிக்கப்பட்ட முகவரிகள்✔✔
சேமிக்கப்பட்ட கட்டண முறைகள்✔✘
சுய-சேவை திருப்பியளிப்புகள்✔✘
ஸ்டோர் கிரெடிட்✔✘
மீண்டும் வாங்கு பட்டன் மூலம் மீண்டும் ஆர்டர் செய்தல்✔✘
B2B உடன் வேலை செய்யும்✔✘
சந்தைகளுடன் வேலை செய்யும்✔✘
உள்நுழைந்த பிறகு முகப்புப்பக்கத் திசைதிருப்பல்✔✘