வாடிக்கையாளர் பிரிவுகளை உருவாக்குதல்
ஒரே மாதிரியான பண்புகளைக் கொண்ட வாடிக்கையாளர்களை நீங்கள் ஒரு வாடிக்கையாளர் பிரிவாக ஒன்றிணைக்கலாம். வாடிக்கையாளர்கள் பக்கத்தில் உள்ள எடிட்டரில் வடிகட்டிப் பெயர்கள், ஆப்பரேட்டர்கள் மற்றும் மதிப்புகளை இணைப்பதன் மூலம் அல்லது பிரிவுகள் பக்கத்தில் பிரிவை உருவாக்கு என்பதைக் கிளிக் செய்து, பிரிவு விவரங்கள் பக்கத்தில் உள்ள எடிட்டரைப் பயன்படுத்துவதன் மூலம் உங்களுக்கான சொந்த வாடிக்கையாளர் பிரிவுகளை நீங்கள் உருவாக்கலாம். கூடுதலாக, உங்கள் Shopify நிர்வாகி உங்களின் தேவைக்கேற்ப மாற்றுவதற்கு அல்லது புதிய வாடிக்கையாளர் பிரிவை உருவாக்குவதற்கான தொடக்கப் புள்ளியாகப் பயன்படுத்துவதற்கு, சில இயல்புநிலை வாடிக்கையாளர் பிரிவுகளையும் வார்ப்புருக்களையும் கொண்டுள்ளது.
நீங்கள் வாடிக்கையாளர் பிரிவுகளை உருவாக்கத் தொடங்குவதற்கு முன், வாடிக்கையாளர் பிரிவின் பல்வேறு கூறுகள் மற்றும் வாடிக்கையாளர் பிரிவுகளை உருவாக்கப் பயன்படுத்தப்படும் வடிகட்டிகள் பற்றி அறிந்துகொள்ளுங்கள்.
இந்தப் பக்கத்தில் உள்ளவை
- வாடிக்கையாளர் பிரிவுகளை உருவாக்க வினவல் எடிட்டரைப் பயன்படுத்துதல்
- புதிய வாடிக்கையாளர் பிரிவை உருவாக்குதல்
- வார்ப்புருவைப் பயன்படுத்தி வாடிக்கையாளர் பிரிவை உருவாக்குதல்
- ஏற்கெனவே உள்ள வாடிக்கையாளர் பிரிவைப் பயன்படுத்தி வாடிக்கையாளர் பிரிவை உருவாக்குதல்
- ShopifyQL வினவலை மேனுவலாகத் திருத்துவதன் மூலம் வாடிக்கையாளர் பிரிவை உருவாக்குதல் அல்லது மாற்றுதல்
- நான் எதிர்பார்த்த மதிப்புகள் ஏன் காட்டப்படவில்லை?
வாடிக்கையாளர் பிரிவுகளை உருவாக்க வினவல் எடிட்டரைப் பயன்படுத்துதல்
ShopifyQL வினவல் எடிட்டரானது வாடிக்கையாளர் பிரிவை ShopifyQL ஐப் (Shopify வினவல் மொழி எனவும் அழைக்கப்படும்) பயன்படுத்தி வினவலாகக் குறிக்கிறது. ஒவ்வொரு பிரிவிலும் தேவையான FROM மற்றும் SHOW உட்பிரிவுகள் இயல்பாகவே சேர்க்கப்பட்டிருக்கும். அந்த உட்பிரிவுகளின் இயல்புநிலை மதிப்புகளைத் திருத்த முடியாது. இந்த உட்பிரிவுகள் தானாக அமைக்கப்பட்டு, இயல்புநிலை வினவலின் தொடக்கத்தில் காட்டப்படும். இவை பூட்டப்பட்டதுபோல் தெரிவது இயல்பானதே. உங்கள் வாடிக்கையாளர் பிரிவைத் தனிப்பயனாக்க, இங்குள்ள மதிப்புகளைப் புதுப்பிக்கவும்: WHERE பிரிவில் உள்ள மதிப்புகளைப் புதுப்பிக்கவும். இயல்புநிலை வினவலானது பின்வருமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது, மேலும் நீங்கள் தனிப்பயன் பிரிவின் உள்ளடக்கத்தைச் சேர்க்கும் இடத்தை [filters, operators, values] குறிக்கிறது:
FROM customers
SHOW customer_name, note, subscription_status, location, orders, amount_spent
WHERE [filters, operators, values]
ORDER BY updated_atவினவல் மொழிகள் குறித்த ஆழமான அறிவு இல்லாமலேயே உங்கள் வாடிக்கையாளர் பிரிவுகளை உருவாக்க எடிட்டர் உங்களுக்கு உதவுகிறது. உங்கள் வாடிக்கையாளர் பிரிவில் கூறுகளைச் சேர்க்கும்போது, நீங்கள் பயன்படுத்தக்கூடிய கிடைக்கப்பெறும் வடிகட்டிப் பெயர்கள், ஆப்பரேட்டர்கள் மற்றும் மதிப்புகள் ஆகியவற்றின் பட்டியல் உங்களுக்கு வழங்கப்படும்.
பிரிவின் வடிகட்டிகளில் நீங்கள் செய்யும் மாற்றங்கள் வினவல் எடிட்டரின் WHERE பிரிவில் நிகழ்நேரத்தில் பிரதிபலிக்கும். முன்-எழுதப்பட்ட வினவலில் நீங்கள் மாற்றம் செய்யும்போது, உங்கள் மாற்றங்களுடன் வாடிக்கையாளர் பிரிவைப் புதுப்பிக்க, வினவல் எடிட்டரில் ▹ இயக்கு என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
வினவல் எடிட்டரின் உள்ளடக்கத்தை மறைக்க, மேல்நோக்கிய அம்புக்குறி ⌃ என்பதைக் கிளிக் செய்யவும். வினவல் எடிட்டர் மறைக்கப்பட்டிருக்கும்போது, அதைக் காட்ட கீழ்நோக்கிய அம்புக்குறி ⌄ என்பதைக் கிளிக் செய்யவும்.
வினவல் எடிட்டரில் உலாவுதல்
பின்வரும் ஐகான்களில் ஏதேனும் ஒன்றைக் கிளிக் செய்வதன் மூலம் உங்கள் வாடிக்கையாளர் பிரிவு வினவலை உருவாக்குவதற்கான உதவியைப் பெறலாம்:
| ஐகான் | ஐகான் பெயர் | செயல்பாடு |
|---|---|---|
| வார்ப்புருக்கள் | உங்கள் சொந்த வாடிக்கையாளர் பிரிவை உருவாக்குவதற்கான அடிப்படையாக இயல்புநிலை வாடிக்கையாளர் பிரிவுகளின் பட்டியலைத் திறக்கும். | |
| மீளமை | சமீபத்தில் செயல்தவிர்த்த மாற்றத்தை வினவலுக்கு மீண்டும் பயன்படுத்தும். | |
| செயல்தவிர் | மிக சமீபத்திய செயலைத் தவிர்க்கும். | |
| இதன்படி வரிசைப்படுத்து | உங்கள் பிரிவில் உள்ள வாடிக்கையாளர்களை எப்படி வரிசைப்படுத்த வேண்டும் என்பதற்கான விருப்பங்களின் பட்டியலைத் திறக்கும், எடுத்துக்காட்டாக, கடைசி ஆர்டர் தேதி மற்றும் புதியதிலிருந்து பழையது. இது வினவலுக்கான ORDER BY நிபந்தனையையும் புதுப்பிக்கும். |
ShopifyQL வினவல் திருத்தியை விரைவாக வழிசெலுத்த, நீங்கள் பின்வரும் கீபோர்டு குறுக்குவழிகளைப் பயன்படுத்தலாம்:
| செயல் | Windows-இல் குறுக்குவழி | macOS-இல் குறுக்குவழி |
|---|---|---|
| செயல்தவிர் | CTRL + Z | ⌘ + Z |
| மீளமை | CTRL + Y | ⌘ + ⇧ + Z |
| அனைத்துக் குறுக்குவழிகளையும் காட்டு | CTRL + / | ⌘ + / |
| வார்ப்புரு நூலகம் | CTRL + \ | ⌃ + ⇧ + T |
| வடிப்பானைத் தேர்ந்தெடு | ENTER | ⏎ |
| வினவலைத் தேர்ந்தெடு | CTRL + A | ⌘ + A |
| வடிப்பான்களைப் பயன்படுத்து | CTRL + ENTER | ⌘ + ⏎ |
| திருத்தியை அழி | CTRL + ⭠ | ⌘ + ⌫ |
புதிய வாடிக்கையாளர் பிரிவை உருவாக்கு
வடிப்பான் பெயர்கள், ஆபரேட்டர்கள் மற்றும் மதிப்புகளை ஒன்றிணைப்பதன் மூலம் புதிய வாடிக்கையாளர் பிரிவை நீங்கள் உருவாக்கலாம். புதிய வாடிக்கையாளர் பிரிவை நீங்கள் உருவாக்கிய பிறகு, அது பிரிவுகள் பட்டியலில் காட்டப்படும்.
பின்வரும் விருப்பங்களில் ஏதேனும் ஒன்றைப் பயன்படுத்தி, புதிய வாடிக்கையாளர் பிரிவை நீங்கள் உருவாக்கலாம்:
வார்ப்புருவைப் பயன்படுத்தி வாடிக்கையாளர் பிரிவை உருவாக்குதல்
உங்கள் சொந்த வாடிக்கையாளர் பிரிவை உருவாக்குவதற்கு உதவும் தொடக்கப் புள்ளியாகப் பயன்படுத்த, உங்கள் Shopify நிர்வாகியில் வார்ப்புருக்கள் உள்ளன. உங்கள் வாடிக்கையாளர் பிரிவில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட வார்ப்புருக்களை நீங்கள் சேர்க்கலாம்.
படிகள்:
உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, வாடிக்கையாளர்கள் என்பதற்குச் செல்லவும்.
வார்ப்புருக்கள் ஐகானைக் கிளிக் செய்யவும்.
வார்ப்புருக்கள் என்பதில், வார்ப்புரு வகைகளைக் குறிப்பிட விருப்பப்படி வடிப்பான்களைப் பயன்படுத்தவும்.
நீங்கள் பயன்படுத்த விரும்பும் வார்ப்புரு கார்டைக் கிளிக் செய்யவும். அதற்கேற்ற வடிப்பான் பெயர்கள், ஆபரேட்டர்கள் மற்றும் மதிப்புகள் திருத்தியில் நிரப்பப்படும்.
விருப்பத்தேர்வு: திருத்தியில் மற்றொரு வார்ப்புருவைச் சேர்க்கவும்.
வினவல் திருத்தியில், பொருத்தமான மாற்றங்களைச் செய்யவும்.
உங்கள் பிரிவைச் சோதிக்க, வினவலை இயக்கு அல்லது ▹ இயக்கு என்பதைக் கிளிக் செய்யவும். அளவுகோல்களுடன் பொருந்தும் வாடிக்கையாளர்கள் திருத்திக்குக் கீழே பட்டியலிடப்படுவார்கள். அளவுகோல்களுடன் பொருந்தும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை திருத்திக்கு மேலே காட்டப்படும்.
நீங்கள் உருவாக்க விரும்பும் பிரிவோடு அந்த விளக்கம் பொருந்துகிறதா என்பதை உறுதிப்படுத்த AI மூலம் உருவாக்கப்பட்ட பிரிவு விளக்கத்தை மதிப்பாய்வு செய்து, தேவையான மாற்றங்களைச் செய்யவும்.
பிரிவைச் சேமி என்பதைக் கிளிக் செய்து, பின்னர் பிரிவிற்கான பெயரை உள்ளிடவும்.
சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.
ஏற்கனவே உள்ள வாடிக்கையாளர் பிரிவைப் பயன்படுத்தி ஒரு வாடிக்கையாளர் பிரிவை உருவாக்குதல்
ஆசிரியராக Shopify-ஐக் காட்டும் இயல்புநிலைப் பிரிவுகள் உங்கள் Shopify நிர்வாகியில் உள்ளன. புதிய வாடிக்கையாளர் பிரிவை உருவாக்குவதற்கு உதவும் தொடக்கப் புள்ளியாக இந்தப் பிரிவுகளை அல்லது நீங்கள் ஏற்கனவே உருவாக்கிய பிற பிரிவுகளைப் பயன்படுத்தலாம்.
படிகள்:
உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, வாடிக்கையாளர்கள் என்பதற்குச் செல்லவும்.
பிரிவுகள் என்பதைக் கிளிக் செய்யவும்.
பிரிவுகள் பட்டியலிலிருந்து, ஏற்கனவே உள்ள ஒரு வாடிக்கையாளர் பிரிவைக் கிளிக் செய்யவும்.
வினவல் திருத்தியில், பொருத்தமான மாற்றங்களைச் செய்யவும்.
உங்கள் பிரிவைச் சோதிக்க, வினவலை இயக்கு அல்லது ▹ இயக்கு என்பதைக் கிளிக் செய்யவும். அளவுகோல்களுடன் பொருந்தும் வாடிக்கையாளர்கள் திருத்திக்குக் கீழே பட்டியலிடப்படுவார்கள். அளவுகோல்களுடன் பொருந்தும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை திருத்திக்கு மேலே காட்டப்படும்.
நீங்கள் உருவாக்க விரும்பும் பிரிவோடு அந்த விளக்கம் பொருந்துகிறதா என்பதை உறுதிப்படுத்த AI மூலம் உருவாக்கப்பட்ட பிரிவு விளக்கத்தை மதிப்பாய்வு செய்து, தேவையான மாற்றங்களைச் செய்யவும்.
பிரிவைச் சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.
புதிய வாடிக்கையாளர் பிரிவை உருவாக்க, புதிய பிரிவாகச் சேமி என்பதைக் கிளிக் செய்து, புதிய பெயரை உள்ளிடவும்.
சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.
ShopifyQL வினவலை நேரடியாகத் திருத்துவதன் மூலம் வாடிக்கையாளர் பிரிவை உருவாக்கலாம் அல்லது மாற்றலாம்
பிரிவு வினவல் திருத்தியில் நேரடியாக ShopifyQL வினவலைத் திருத்துவதன் மூலம் உங்கள் வாடிக்கையாளர் பிரிவைத் தனிப்பயனாக்கலாம்.
உங்கள் வாடிக்கையாளர் பிரிவுகளை உருவாக்க உங்களுக்கு உதவவே வினவல் திருத்தி வடிவமைக்கப்பட்டுள்ளது. உங்கள் வாடிக்கையாளர் பிரிவில் கூறுகளைச் சேர்க்கும்போது, நீங்கள் பயன்படுத்தக்கூடிய வடிப்பான் பெயர்கள், ஆபரேட்டர்கள் மற்றும் மதிப்புகள் அடங்கியப் பட்டியல் வழங்கப்படும்.
வினவல் செல்லுபடியாகவில்லை எனில், எந்த வரியில் பிழை உள்ளது என்பதைக் குறிக்க வினவல் திருத்தியின் கீழே பிழைச் செய்தி காட்டப்படும். வினவலில் உள்ள பிழைகள் சிவப்பு நிறத்தில் அடிக்கோடிடப்பட்டிருக்கும், அந்தப் பிழையின் மேல் கர்சரைக் கொண்டு செல்வதன் மூலம் சிக்கலைத் தீர்ப்பதற்கான உதவிக்குறிப்புகளைப் பெறலாம்.
ShopifyQL-ஐப் பயன்படுத்துவது மற்றும் வினவல்களை உருவாக்குவது குறித்து மேலும் அறிக.
படிகள்:
உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, வாடிக்கையாளர்கள் என்பதற்குச் செல்லவும்.
பிரிவுகள் என்பதைக் கிளிக் செய்யவும்.
பிரிவுகளின் பட்டியலில் இருந்து, ஏற்கனவே உள்ள வாடிக்கையாளர் பிரிவைக் கிளிக் செய்யவும் அல்லது புதிய பிரிவை உருவாக்க பிரிவை உருவாக்கு என்பதைக் கிளிக் செய்யவும்.
இயல்புநிலை வினவலைக் காட்ட, வினவல் திருத்தியில் கிளிக் செய்யவும்.
இயல்புநிலை வினவலைப் பின்வரும் ஏதேனும் ஒரு வழியில் தனிப்பயனாக்கலாம்:
-
WHEREஉரையாடல் பெட்டியில், கிடைக்கும் வினவல் விருப்பங்களின் பட்டியலில் இருந்து தேர்ந்தெடுக்கவும்:customer_citiesபோன்றதொரு வடிப்பானைத் தேர்ந்தெடுக்கவும்.CONTAINSபோன்றதொரு ஆபரேட்டரைத் தேர்ந்தெடுக்கவும்CA-ON-Torontoபோன்ற ஒரு மதிப்பைத் தேர்வுசெய்யவும். பெரும்பாலும் மதிப்பு பரிந்துரைக்கப்படும். ஆனால் சில சமயங்களில் அதைக் கைமுறையாக உள்ளிட வேண்டியிருக்கலாம்.
- உங்கள் பிரிவுக்குப் பயன்படுத்த விரும்பும் வடிப்பான்கள், ஆபரேட்டர்கள் மற்றும் மதிப்புகளை நேரடியாகத் தட்டச்சு செய்யவும்.
-
விருப்பத்தேர்வு: உங்கள் வடிப்பானில் மேலும் பல நிபந்தனைகளைச் சேர்க்க,
ORஅல்லதுANDஎன்பதைக் கனெக்டராகச் சேர்த்து, தொடர்ந்து வடிப்பானை உருவாக்கவும்.உங்கள் பிரிவை நிறைவு செய்ய, வினவலை இயக்கு அல்லது ▹ இயக்கு என்பதைக் கிளிக் செய்யவும். அளவுகோல்களுடன் பொருந்தும் வாடிக்கையாளர்கள் திருத்திக்குக் கீழே பட்டியலிடப்படுவார்கள். அளவுகோல்களுடன் பொருந்தும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை திருத்திக்கு மேலே காட்டப்படும்.
நீங்கள் உருவாக்க விரும்பும் பிரிவோடு அந்த விளக்கம் பொருந்துகிறதா என்பதை உறுதிப்படுத்த AI மூலம் உருவாக்கப்பட்ட பிரிவு விளக்கத்தை மதிப்பாய்வு செய்து, தேவையான மாற்றங்களைச் செய்யவும்.
சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.
நான் எதிர்பார்த்த மதிப்புகள் ஏன் காட்டப்படவில்லை?
கிடைக்கும் மதிப்புகள் WHERE உட்பிரிவில் உங்கள் ஸ்டோரின் தரவை அடிப்படையாகக் கொண்டவை. உங்கள் ஸ்டோரில் ஒரு குறிப்பிட்ட வடிகட்டிக்கான தரவு இல்லையெனில், அந்த வடிகட்டி பரிந்துரைகளில் காட்டப்படாமல் போகலாம். அதைக் கைமுறையாக உள்ளிட்டால், முடிவுகள் எதுவுமில்லாமல் இருப்பதற்குப் பதிலாக Invalid expression பிழை ஏற்படலாம். நீங்கள் எதிர்பார்க்கும் வடிகட்டி காட்டப்படவில்லை என்றால், பொதுவாக அதற்குப் பொருந்தும் தரவு உங்கள் ஸ்டோரில் இன்னும் இல்லை என்று அர்த்தம்.