வாடிக்கையாளர்களை நிர்வகித்தல்

ஒரு வாடிக்கையாளர் பின்வரும் ஏதேனும் வழிகளில் உங்கள் வணிகத்துடன் தொடர்பு கொள்ளும்போது, உங்கள் Shopify நிர்வாகியில் ஒரு வாடிக்கையாளர் சுயவிவரம் உருவாக்கப்படும்:

  • உங்கள் அஞ்சல் பட்டியல் அல்லது வாடிக்கையாளர் கணக்கில் பதிவுசெய்தல்
  • ஒரு ஆர்டரை அளித்தல்
  • ஒரு ஆர்டரைத் தொடங்குதல், ஆனால் அவர்களின் செக்அவுட்டைப் பாதியில் கைவிடுதல்

மாற்றாக, நீங்கள் உங்கள் ஸ்டோரில் ஒரு வாடிக்கையாளரை மேனுவலாகச் சேர்க்கலாம்.

உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து தனிப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு மின்னஞ்சல் செய்திகளை அனுப்பலாம் அல்லது வாடிக்கையாளர் பிரிவுகளைப் பயன்படுத்தி வாடிக்கையாளர்களின் குழுக்களுக்குத் தள்ளுபடிகள் மற்றும் மின்னஞ்சல் செய்திகளை அனுப்பலாம்.

வாடிக்கையாளர் சுயவிவரங்களைச் சேர்

உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து வாடிக்கையாளர் சுயவிவரத்தைச் சேர்க்கலாம். ஒவ்வொரு சுயவிவரத்திலும் ஒரு மின்னஞ்சல் முகவரி மட்டுமே இருக்க முடியும், ஆனால் வாடிக்கையாளர் சுயவிவரத்தைத் திருத்துவதன் மூலம் அதை எப்போது வேண்டுமானாலும் மாற்றலாம்.

படிகள்:

டெஸ்க்டாப்
  1. உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, வாடிக்கையாளர்கள் பகுதிக்குச் செல்லவும்.

  2. வாடிக்கையாளரைச் சேர் என்பதைக் கிளிக் செய்யவும்.

  3. வாடிக்கையாளரின் தகவலை உள்ளிடவும்.

  4. விருப்பத்தேர்வு: வாடிக்கையாளர் சந்தைப்படுத்தல் மின்னஞ்சல்களைப் பெற ஒப்புக்கொண்டு, நீங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிட்டிருந்தால், வாடிக்கையாளர் மேலோட்டம் பிரிவில், வாடிக்கையாளர் சந்தைப்படுத்தல் மின்னஞ்சல்களைப் பெற ஒப்புக்கொண்டார் என்பதைத் தேர்வுசெய்யவும்.

  5. வரி அமைப்புகள் பிரிவில், வரியை வசூலிக்க வேண்டுமா என்பதைத் தேர்ந்தெடுக்கவும்:

    • வாடிக்கையாளரின் VAT எண்ணைச் சேர்க்க, VAT எண் புலத்தில் அந்த எண்ணை உள்ளிடவும். இந்த எண் தானாகவே சரிபார்க்கப்படும்.
    • வரியை வசூலிக்க, வரியை வசூலி என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
    • வரியை வசூலிக்கக் கூடாது எனில், வரி வசூலிக்க வேண்டாம் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
    • பொருந்தக்கூடிய விலக்குகளைத் தவிர்த்து வரியை வசூலிக்க, விலக்குகள் பொருந்தினால் தவிர வரியை வசூலி என்பதைத் தேர்ந்தெடுத்து, விலக்குகளைத் தேர்ந்தெடு கீழ்தோன்றும் மெனுவில் வரி விலக்குகளைத் தேர்ந்தெடுக்கவும்.
  6. சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.

மொபைல்
  1. Shopify செயலியிலிருந்து, Menu ஐகானைத் தட்டவும்.

  2. வாடிக்கையாளர்கள் என்பதைத் தட்டவும்.

  3. + பொத்தானைத் தட்டவும்.

  4. வாடிக்கையாளரின் தகவலை உள்ளிடவும்.

  5. வாடிக்கையாளரிடம் விற்பனை வரி வசூலித்தால், வரி வசூலிப்பதைச் செயல்படுத்தவும்.

  6. சேமி அல்லது ✓ என்பதைத் தட்டவும்.

  7. விருப்பத்தேர்வு: வாடிக்கையாளர் சந்தைப்படுத்தல் மின்னஞ்சல்களைப் பெற ஒப்புக்கொண்டு, நீங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிட்டிருந்தால், பின்வருவனவற்றைச் செய்யவும்:

    1. மின்னஞ்சல் சந்தைப்படுத்தல் பிரிவில், நிலையைத் திருத்து என்பதைத் தட்டவும்.
    2. மின்னஞ்சல் சந்தைப்படுத்தலைப் பெற வாடிக்கையாளர் ஒப்புக்கொண்டார் என்பதைத் தட்டவும்.
    3. சேமி அல்லது ✓ என்பதைத் தட்டவும்.
  8. வாடிக்கையாளர் கனடாவில் இருந்து, விற்பனை வரியிலிருந்து அவருக்கு விலக்கு அளிக்கப்பட்டிருந்தால், பென்சில் ஐகானைத் தட்டிப் பின்வருவனவற்றைச் செய்யவும்:

    1. வரி விலக்குகள் பிரிவில், நிர்வகி என்பதைத் தட்டவும்.
    2. இந்த வாடிக்கையாளருக்குப் பொருந்தக்கூடிய அனைத்து வரி விலக்குகளையும் தட்டவும்.
    3. சேமி அல்லது ✓ என்பதைத் தட்டவும்.

வாடிக்கையாளருக்கு மின்னஞ்சல் செய்தியை அனுப்பு

உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து அல்லது Shopify செயலியிலிருந்து நேரடியாக வாடிக்கையாளருக்கு மின்னஞ்சல் செய்தியை அனுப்பலாம்.

படிகள்:

டெஸ்க்டாப்
  1. உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, வாடிக்கையாளர்கள் பகுதிக்குச் செல்லவும்.

  2. வாடிக்கையாளர் பெயரைக் கிளிக் செய்யவும்.

  3. வாடிக்கையாளர் மேலோட்டம் பிரிவில், வாடிக்கையாளரின் மின்னஞ்சல் முகவரியைக் கிளிக் செய்யவும்.

  4. மின்னஞ்சலுக்கான பொருளைத் திருத்தவும் அல்லது இயல்புநிலையாகவே விட்டுவிடவும். shop.name என்ற குறியீடு மின்னஞ்சல் செய்தியின் பொருள் வரியில் உங்கள் கடையின் பெயரைத் தானாகவே உள்ளிடும்.

  5. தனிப்பயன் செய்தி புலத்தில், உங்கள் செய்தியை உள்ளிடவும்.

  6. உங்கள் பதிவுகளுக்காகச் செய்தியின் நகலைப் பெற, bcc-ஐ அனுப்பு என்பதில், தகுந்த மின்னஞ்சல் முகவரிகளைத் தேர்வுசெய்யவும்.

  7. முடித்ததும், மின்னஞ்சலை மதிப்பாய்வு செய் என்பதைக் கிளிக் செய்யவும்.

  8. அறிவிப்பை அனுப்பு என்பதைக் கிளிக் செய்யவும்.

மொபைல்
  1. Shopify செயலியிலிருந்து, Menu ஐகானைத் தட்டவும்.

  2. வாடிக்கையாளர்கள் என்பதைத் தட்டவும்.

  3. வாடிக்கையாளர் பெயரைத் தட்டவும்.

  4. வாடிக்கையாளர் மேலோட்டம் பிரிவில், மின்னஞ்சல் என்பதைத் தட்டவும்.

  5. உங்கள் பதிவுகளுக்காகச் செய்தியின் நகலைப் பெற, Cc புலத்தில் உங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும்.

  6. மின்னஞ்சலின் பொருள் மற்றும் உடல்பகுதியைத் திருத்தவும்.

  7. மின்னஞ்சல் செய்தியை மதிப்பாய்வு செய்து, பிறகு அனுப்பவும்.

அனுப்பிய மின்னஞ்சல்களை மதிப்பாய்வு செய்

வாடிக்கையாளருக்கு மின்னஞ்சல் அனுப்பப்பட்டதும், வாடிக்கையாளரின் காலவரிசையில் ஒரு அறிவிப்பு காட்டப்படும். மின்னஞ்சல் வெற்றிகரமாக அனுப்பப்படவில்லை எனில், அறிவிப்புக்கு அருகில் எச்சரிக்கை ஐகான் (ⓘ) காட்டப்படும்.

அனுப்பப்பட்ட மின்னஞ்சலை நீங்கள் மதிப்பாய்வு செய்யலாம் மற்றும் மின்னஞ்சலின் நகலை வாடிக்கையாளருக்கோ உங்களுக்கோ மீண்டும் அனுப்பலாம்.

படிகள்:

டெஸ்க்டாப்
  1. உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, வாடிக்கையாளர்கள் பகுதிக்குச் செல்லவும்.

  2. வாடிக்கையாளர் பெயரைக் கிளிக் செய்யவும்.

  3. காலவரிசை பிரிவில், மின்னஞ்சல் அனுப்பப்பட்டதற்கான அறிவிப்பைக் கண்டறியவும்.

  4. மின்னஞ்சலைப் பார் என்பதைக் கிளிக் செய்யவும்.

  5. விருப்பத்தேர்வு: மின்னஞ்சலை மீண்டும் அனுப்ப, பின்வருவனவற்றில் ஒன்றைச் செய்யவும்:

    • வாடிக்கையாளருக்கு மின்னஞ்சலை அனுப்ப, வாடிக்கையாளர் என்பதைத் தேர்ந்தெடுத்து, மீண்டும் அனுப்பு என்பதைக் கிளிக் செய்யவும்.
    • மின்னஞ்சலை உங்களுக்கே அனுப்ப, உங்களுக்கு என்பதைத் தேர்ந்தெடுத்து, மீண்டும் அனுப்பு என்பதைக் கிளிக் செய்யவும்.
மொபைல்
  1. Shopify செயலியிலிருந்து, Menu ஐகானைத் தட்டவும்.

  2. வாடிக்கையாளர்கள் என்பதைத் தட்டவும்.

  3. ஒரு வாடிக்கையாளரைத் தட்டவும்.

  4. காலவரிசை பிரிவில், மின்னஞ்சல் அனுப்பப்பட்டதற்கான அறிவிப்பைக் கண்டறியவும்.

  5. விருப்பத்தேர்வு: மின்னஞ்சலை மீண்டும் அனுப்ப, பின்வருவனவற்றில் ஒன்றைச் செய்யவும்:

    • வாடிக்கையாளருக்கு மின்னஞ்சல் அனுப்ப, வாடிக்கையாளர் என்பதைத் தேர்ந்தெடுத்து, மீண்டும் அனுப்பு என்பதைத் தட்டவும்.
    • உங்களுக்கு மின்னஞ்சல் அனுப்ப, உங்களுக்கு என்பதைத் தேர்ந்தெடுத்து, மீண்டும் அனுப்பு என்பதைத் தட்டவும்.

வாடிக்கையாளர் சுயவிவரங்களைத் திருத்து

Shopify-இல் ஏற்கனவே வாடிக்கையாளர் சுயவிவரம் இருந்தால், அதை வாடிக்கையாளர்கள் பக்கத்தில் இருந்து நீங்கள் திருத்தலாம்.

ஒரு வாடிக்கையாளர் சுயவிவரத்தைப் புதுப்பிக்கும் முன், அதே சுயவிவரத்தில் வேறு ஏதேனும் பணியாளர் மாற்றங்களைச் செய்கிறாரா என்பதைச் சரிபார்க்கவும், இதனால் உங்கள் மாற்றங்களில் முரண்பாடு ஏற்படாது.

வாடிக்கையாளரைப் பற்றிய சிறப்புத் தகவல்களைத் தடமறிய, வாடிக்கையாளர் சுயவிவரத்தில் வாடிக்கையாளர் குறிப்பைச் சேர்க்கலாம். உங்கள் ஸ்டோரின் பணியாளர்கள் மட்டுமே இந்தக் குறிப்புகளை அணுக முடியும். வாடிக்கையாளர்களுக்கு இந்தக் குறிப்புகள் காட்டப்படாது.

வாடிக்கையாளர் சுயவிவரப் பட்டியலை ஒழுங்கமைக்க டேக்குகள் உதவும். விளக்கமான சொற்களைப் பயன்படுத்தி வாடிக்கையாளர்களை வகைப்படுத்த அல்லது வகைகளாகப் பிரிக்க டேக்குகளைப் பயன்படுத்தலாம். எடுத்துக்காட்டாக, உங்களுக்கு முக்கியமான வாடிக்கையாளர்கள் இருந்தால், அந்த வாடிக்கையாளர்களை VIP என்று டேக் செய்யலாம். வாடிக்கையாளர் பிரிவுகளை உருவாக்கவும் டேக்குகள் பயன்படுத்தப்படலாம். டேக்குகள் பெரிய/சிறிய எழுத்து உணர்திறன் கொண்டவை அல்ல.

படிகள்:

டெஸ்க்டாப்
  1. உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, வாடிக்கையாளர்கள் பகுதிக்குச் செல்லவும்.

  2. வாடிக்கையாளர் பெயரைக் கிளிக் செய்யவும்.

  3. வாடிக்கையாளர் சுயவிவரத்தில் குறிப்பைச் சேர்க்க, வாடிக்கையாளர் குறிப்பு புலத்தில், வாடிக்கையாளரைப் பற்றிய பொருத்தமான தகவலை உள்ளிட்டு, சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.

  4. வாடிக்கையாளர் மேலோட்டம் பிரிவில், நிர்வகி > தொடர்புத் தகவலைத் திருத்து என்பதைக் கிளிக் செய்து, பின்வரும் தகவல்களில் பொருத்தமான மாற்றங்களைச் செய்யவும்:

    • முதல் பெயர்
    • கடைசி பெயர்
    • மொழி
    • மின்னஞ்சல் முகவரி
    • தொலைபேசி எண்
  5. முகவரியைத் திருத்த, வாடிக்கையாளர் மேலோட்டம் பிரிவில், நிர்வகி > முகவரிகளை நிர்வகி என்பதைக் கிளிக் செய்து பின்வருவனவற்றில் ஒன்றைச் செய்யவும்:

    • தற்போதைய முகவரியைத் திருத்த, பொருத்தமான முகவரிக்கு அடுத்துள்ள திருத்து என்பதைக் கிளிக் செய்யவும்.
    • எந்த முகவரி இயல்புநிலை முகவரி என்பதை மாற்ற, பொருத்தமான முகவரிக்கு அடுத்துள்ள இயல்புநிலையாக அமை என்பதைக் கிளிக் செய்யவும்.
    • சுயவிவரத்தில் புதிய முகவரியைச் சேர்க்க, புதிய முகவரியைச் சேர் என்பதைக் கிளிக் செய்யவும்.
  6. உங்கள் வாடிக்கையாளர் வரி அமைப்புகளைத் திருத்த, பின்வரும் படிகளைச் செய்யவும்:

    1. வாடிக்கையாளர் பிரிவில், Horizontal menu என்பதைக் கிளிக் செய்து, பின்னர் வரி அமைப்புகளை நிர்வகி என்பதைக் கிளிக் செய்யவும்.
    2. இந்த வரி அமைப்பு கீழ்தோன்றும் மெனுவில், வரி வசூலிப்பதா என்பதைத் தேர்ந்தெடுக்கவும்:
      • வாடிக்கையாளரின் VAT எண்ணைச் சேர்க்க, VAT எண் புலத்தில் அந்த எண்ணை உள்ளிடவும். இந்த எண் தானாகவே சரிபார்க்கப்படும்.
      • வரியை வசூலிக்க, வரியை வசூலி என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
      • வரியை வசூலிக்கக் கூடாது எனில், வரி வசூலிக்க வேண்டாம் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
      • பொருந்தக்கூடிய விலக்குகளைத் தவிர்த்து வரியை வசூலிக்க, விலக்குகள் பொருந்தினால் தவிர வரியை வசூலி என்பதைத் தேர்ந்தெடுத்து, விலக்குகளைத் தேர்ந்தெடு கீழ்தோன்றும் மெனுவில் வரி விலக்குகளைத் தேர்ந்தெடுக்கவும்.
    3. சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.
  7. வாடிக்கையாளர் மின்னஞ்சல், SMS அல்லது WhatsApp சந்தைப்படுத்தலைப் பெறுகிறாரா என்பதை மாற்ற, வாடிக்கையாளர் மேலோட்டம் பிரிவில், நிர்வகி > சந்தைப்படுத்தல் அமைப்புகளைத் திருத்து என்பதைக் கிளிக் செய்யவும்.

  8. வாடிக்கையாளர் சுயவிவரத்தில் டேக்குகளைப் பயன்படுத்த, டேக்குகள் பிரிவில், பின்வருவனவற்றில் ஏதேனும் ஒன்றைச் செய்யவும்:

    • ஒரு டேக்கைச் சேர்க்க, புலத்தைக் கிளிக் செய்து, டேக்கைத் தேர்ந்தெடுக்கவும்.
    • ஒரு டேக்கை அகற்ற, டேக்கிற்கு அடுத்துள்ள X என்பதைக் கிளிக் செய்யவும்.
மொபைல்
  1. Shopify செயலியிலிருந்து, Menu ஐகானைத் தட்டவும்.

  2. வாடிக்கையாளர்கள் என்பதைத் தட்டவும்.

  3. வாடிக்கையாளர் பெயரைத் தட்டவும்.

  4. வாடிக்கையாளர் சுயவிவரத்தில் ஒரு குறிப்பைச் சேர்க்க, குறிப்பு பிரிவில், திருத்து புலத்தைத் தட்டி, வாடிக்கையாளரைப் பற்றிய பொருத்தமான தகவலை உள்ளிட்டு, சேமி அல்லது ✓ என்பதைத் தட்டவும்.

  5. வாடிக்கையாளர் பற்றிய தகவலை மாற்ற, தொடர்புத் தகவல் பிரிவில், Horizontal menu அல்லது Vertical menu என்பதைத் தட்டி, பின்வரும் செயல்களில் ஏதேனும் ஒன்றைச் செய்யவும்:

    • முகவரியைத் திருத்த, முகவரிகளைத் திருத்து என்பதைத் தட்டி, நீங்கள் திருத்த விரும்பும் முகவரியைத் தட்டவும். முதல் பெயர், கடைசி பெயர் அல்லது தொலைபேசி எண்ணை மாற்றி, சேமி அல்லது ✓ என்பதைத் தட்டவும்.
    • சுயவிவரத்தில் புதிய முகவரியைச் சேர்க்க, முகவரிகளைத் திருத்து என்பதைத் தட்டி, பின்னர் + என்பதைத் தட்டவும். புதிய முகவரியைச் சேர்த்து, சேமி அல்லது ✓ என்பதைத் தட்டவும்.
    • தொடர்புத் தகவலைத் திருத்த, தொடர்புத் தகவலைத் திருத்து என்பதைத் தட்டவும். முதல் பெயர், கடைசி பெயர், மின்னஞ்சல் முகவரி அல்லது தொலைபேசி எண்ணை மாற்றி, சேமி அல்லது ✓ என்பதைத் தட்டவும்.
  6. வரி வசூலிப்பதைத் திருத்த, வரி விலக்குகள் என்பதைத் தட்டி, நீங்கள் திருத்த விரும்பும் சந்தைக்கு அடுத்துள்ள திருத்து என்பதைத் தட்டவும். நீங்கள் விரும்பும் ஏதேனும் விலக்குகளைத் தேர்ந்தெடுக்கத் தட்டி, பின்னர் சேமி அல்லது ✓ என்பதைத் தட்டவும்.

  7. வாடிக்கையாளர் மின்னஞ்சல், SMS அல்லது WhatsApp மார்க்கெட்டிங் தகவல்களைப் பெறுவதா என்பதை மாற்ற, மார்க்கெட்டிங் சந்தாக்கள் என்பதைத் தட்டி, வாடிக்கையாளருக்கு நீங்கள் பயன்படுத்த விரும்பும் மார்க்கெட்டிங் விருப்பங்களை ஆன் செய்யத் தட்டவும். சேமி அல்லது ✓ என்பதைத் தட்டவும்.

  8. வாடிக்கையாளர் சுயவிவரத்தில் டேக்களைத் திருத்த, டேக்குகள் என்பதைத் தட்டி, தேடல் புலத்தைத் தட்டி, பின்வரும் செயல்களில் ஏதேனும் ஒன்றைச் செய்யவும்:

    • புதிய டேக் பெயரை உள்ளிட்டு, <tag name> என்பதைச் சேர் என்பதைத் தட்டவும். சேமி அல்லது ✓ என்பதைத் தட்டவும்.
    • ஒரு டேக்கைத் தேடவும் அல்லது தேர்வுப்பெட்டியைப் பயன்படுத்தி ஒரு டேக்கைத் தேர்ந்தெடுக்கவும். சேமி அல்லது ✓ என்பதைத் தட்டவும்.

வாடிக்கையாளரின் சந்தாக் கட்டணத் தகவலைத் திருத்து

நீங்கள் சந்தா தயாரிப்புகளை விற்பனை செய்து, பேமெண்ட் தோல்வியடைந்ததால் வாடிக்கையாளர் தங்களது கட்டணத் தகவலைப் புதுப்பிக்க வேண்டியிருந்தால், உங்கள் Shopify நிர்வாகியில் அந்த வாடிக்கையாளரின் சுயவிவரத்தைப் புதுப்பிக்கலாம்.

  1. உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, வாடிக்கையாளர்கள் பகுதிக்குச் செல்லவும்.

  2. எந்த வாடிக்கையாளரின் கட்டணத் தகவலை நீங்கள் பார்க்க விரும்புகிறீர்களோ, அந்த வாடிக்கையாளரைக் கிளிக் செய்யவும்.

  3. கட்டண முறைகள் பிரிவில், பென்சில் ஐகானைக் கிளிக் செய்யவும்.

  4. விருப்பத்தேர்வு: உங்கள் வாடிக்கையாளர் தங்களது கட்டணத் தகவலைத் தாங்களாகவே புதுப்பிக்க வேண்டுமென நீங்கள் விரும்பினால், பின்வருவனவற்றைச் செய்யவும்:

    1. தொடர்புடைய சேமித்த கார்டுக்கு, Horizontal menu > கார்டைப் புதுப்பிப்பதற்கான இணைப்பை அனுப்பு என்பதைக் கிளிக் செய்யவும்.
    2. உரையாடல் பெட்டியில், விவரங்களைச் சரிபார்த்துவிட்டு, மின்னஞ்சலை அனுப்பு என்பதைக் கிளிக் செய்யவும்.
  5. விருப்பத்தேர்வு: உங்கள் வாடிக்கையாளரின் கட்டண முறையை நீங்களே நேரடியாகப் புதுப்பிக்க விரும்பினால், பின்வருவனவற்றைச் செய்யவும்:

    1. தொடர்புடைய சேமித்த கார்டுக்கு, Horizontal menu > கார்டை மாற்று என்பதைக் கிளிக் செய்யவும்.
    2. உரையாடல் பெட்டியில், தொடர்புடைய விவரங்களைப் பூர்த்தி செய்து, உறுதிப்படுத்து என்பதைக் கிளிக் செய்யவும்.

சந்தாக்கள் குறித்து மேலும் அறிக.

வாடிக்கையாளர் சுயவிவரங்களை மொத்தமாகத் திருத்து

உங்கள் Shopify நிர்வாகியில், ஒரே நேரத்தில் பல வாடிக்கையாளர் சுயவிவரங்களுக்கான பின்வரும் தகவல்களைத் திருத்த, மொத்தத் திருத்தத்தைப் பயன்படுத்தலாம்:

  • முதல் பெயர்
  • கடைசி பெயர்
  • டேக்குகள்
  • மின்னஞ்சல் சந்தைப்படுத்தலை ஏற்கும்
  • SMS மார்க்கெட்டிங்கை ஏற்கும்
  • WhatsApp மார்க்கெட்டிங்கை ஏற்கிறார்
  • உங்கள் ஸ்டோரில் உள்ள ஏதேனும் மெட்டாஃபீல்டுகளின் மதிப்புகள்

முகவரி வரிகள், தொலைபேசி எண் அல்லது வரிவிலக்கு நிலை போன்ற வாடிக்கையாளர் சுயவிவரத்தில் உள்ள பிற புலங்களைத் திருத்த, நீங்கள் ஒவ்வொரு வாடிக்கையாளர் சுயவிவரத்தையும் தனித்தனியாகத் திருத்த வேண்டும் அல்லது ஒரு CSV கோப்பைப் பயன்படுத்த வேண்டும்.

படிகள்:

டெஸ்க்டாப்
  1. உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, வாடிக்கையாளர்கள் பகுதிக்குச் செல்லவும்.

  2. பின்வருவனவற்றில் ஏதேனும் ஒன்றைச் செய்வதன் மூலம் நீங்கள் திருத்த விரும்பும் வாடிக்கையாளர் சுயவிவரங்களைத் தேர்ந்தெடுக்கவும்:

    • பல வாடிக்கையாளர் சுயவிவரங்களைத் திருத்த, நீங்கள் திருத்த விரும்பும் ஒவ்வொரு வாடிக்கையாளர் சுயவிவரத்தையும் தேர்ந்தெடுக்கவும்.
    • ஒரு பிரிவுக்காக அல்லது தேடலின் அடிப்படையில் பக்கத்தில் பட்டியலிடப்பட்டுள்ள அனைத்து வாடிக்கையாளர் சுயவிவரங்களையும் திருத்த, வாடிக்கையாளர் பெயர் தேர்வுப்பெட்டியைத் தேர்ந்தெடுக்கவும். ஒரு பக்கத்திற்கு அதிகபட்சமாக 50 வாடிக்கையாளர்கள் பட்டியலிடப்படுவார்கள்.
    • உங்கள் ஸ்டோரில் உள்ள அனைத்து வாடிக்கையாளர் சுயவிவரங்களையும் திருத்த, அனைத்து வாடிக்கையாளர்களும் என்ற பிரிவு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதா என்பதைச் சரிபார்க்கவும். வாடிக்கையாளர் பெயர் தேர்வுப்பெட்டியைத் தேர்ந்தெடுத்து, உங்கள் ஸ்டோரில் உள்ள அனைத்து 50+ வாடிக்கையாளர்களையும் தேர்ந்தெடுக்கவும் என்பதைக் கிளிக் செய்யவும்.
    • ஒரு பிரிவு, வினவல் அல்லது தேடலில் உள்ள அனைத்து வாடிக்கையாளர் சுயவிவரங்களையும் திருத்த, வாடிக்கையாளர் பெயர் தேர்வுப்பெட்டியைத் தேர்ந்தெடுத்து, இந்தப் பிரிவிலுள்ள 50+ வாடிக்கையாளர்கள் அனைவரையும் தேர்ந்தெடு என்பதைக் கிளிக் செய்யவும்.
  3. தேர்ந்தெடுக்கப்பட்ட வாடிக்கையாளர் சுயவிவரங்களில் டேக்குகளைச் சேர்க்க அல்லது அவற்றில் இருந்து டேக்குகளை அகற்ற, பின்வருவனவற்றைச் செய்யவும்:

    1. வாடிக்கையாளர்களைத் திருத்து பொத்தானுக்கு அடுத்துள்ள Horizontal menu ஐகானைக் கிளிக் செய்யவும்.
    2. டேக்குகளைச் சேர் அல்லது டேக்குகளை அகற்று என்பதைக் கிளிக் செய்யவும்.
    3. டேக்குகளைச் சேர்க்கவும் அல்லது அகற்றவும்.
    4. சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.
  4. டேக்குகள் உட்பட பல தகவல்களை ஒரே நேரத்தில் திருத்த, வாடிக்கையாளர்களைத் திருத்து என்பதைக் கிளிக் செய்து, பின்வருவனவற்றைச் செய்யவும்:

    1. நெடுவரிசைகள் என்பதைக் கிளிக் செய்து, நீங்கள் திருத்த விரும்பும் ஒவ்வொரு புலத்தையும் தேர்ந்தெடுக்கவும்.
    2. பொருத்தமான திருத்தங்களைச் செய்யவும்.
    3. சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.
மொபைல்
  1. Shopify செயலியிலிருந்து, Menu ஐகானைத் தட்டவும்.

  2. வாடிக்கையாளர்கள் என்பதைத் தட்டவும்.

  3. Horizontal menu அல்லது Vertical menu > வாடிக்கையாளர்களைத் தேர்ந்தெடு என்பதைத் தட்டவும்.

  4. நீங்கள் திருத்த விரும்பும் வாடிக்கையாளர்களைத் தேர்ந்தெடுத்து, Horizontal menu அல்லது Vertical menu என்பதைத் தட்டி, பின்வரும் படிகளில் ஏதேனும் ஒன்றை நிறைவுசெய்யவும்:

    • டேக்குகளைச் சேர் என்பதைத் தட்டி, டேக்குகளைச் சேர்த்துவிட்டு, சேமி அல்லது ✓ என்பதைத் தட்டவும்.
    • டேக்குகளை அகற்று என்பதைத் தட்டி, டேக்குகளை அகற்றிவிட்டு, சேமி அல்லது ✓ என்பதைத் தட்டவும்.

வாடிக்கையாளர் சுயவிவரங்களை ஒன்றிணைத்தல்

ஒரு வாடிக்கையாளரைக் குறிக்கும் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட வாடிக்கையாளர் சுயவிவரங்களை நீங்கள் கொண்டிருக்கலாம். இந்நிலையில், இரண்டு சுயவிவரங்களை ஒன்றாக இணைத்து ஒரே சுயவிவரமாக மாற்றலாம். இந்த ஒன்றிணைப்பை முடிப்பதற்கு முன், ஒன்றிணைக்கப்பட்ட சுயவிவரத்தில் என்னென்ன தகவல்கள் இருக்க வேண்டும் என்பதை மதிப்பாய்வு செய்து தேர்ந்தெடுக்க உங்களுக்கு வாய்ப்பு உள்ளது.

ஒன்றிணைத்த பிறகு மீதமிருக்கும் சுயவிவரம் என்பது, ஒன்றிணைக்கப்பட்ட சுயவிவரத்தில் வைக்கப்பட்டுள்ள தொடர்புத் தகவலைப் பொறுத்தது. ஒரு சுயவிவரத்தில் மட்டுமே மின்னஞ்சல் முகவரி இருந்தால், அந்தச் சுயவிவரம் அப்படியே இருக்கும். இரண்டு சுயவிவரங்களிலும் மின்னஞ்சல் முகவரிகள் இருந்தால், ஒன்றிணைக்கப்பட்ட சுயவிவரத்தில் வைக்கப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரியுடன் தொடர்புடைய சுயவிவரம் அப்படியே இருக்கும். எந்தச் சுயவிவரத்திலும் மின்னஞ்சல் முகவரி இல்லை என்றால், ஒன்றிணைப்பதற்கான வாடிக்கையாளரைக் கண்டுபிடி என்பதன் கீழ் நீங்கள் தேர்ந்தெடுக்கும் சுயவிவரம் அப்படியே இருக்கும்.

உதாரணமாக, உங்கள் ஸ்டோரில் ஒரு வாடிக்கையாளருக்கு 2 சுயவிவரங்கள் உள்ளன, ஒன்று customer-old@example.com என்ற மின்னஞ்சல் முகவரியுடனும் மற்றொன்று customer-new@example.com என்ற மின்னஞ்சல் முகவரியுடனும் உள்ளது. நீங்கள் customer-old@example.com என்பதற்கான சுயவிவரத்தைத் திறந்து, வாடிக்கையாளரை ஒன்றிணை என்பதைக் கிளிக் செய்து, பிறகு ஒன்றிணைப்பதற்கான வாடிக்கையாளரைக் கண்டுபிடி என்பதன் கீழ் customer-new@example.com என்பதைத் தேர்ந்தெடுக்கவும். நீங்கள் ஒன்றிணைப்பை உறுதிப்படுத்துவதற்கு முன், ஒன்றிணைக்கப்பட்ட வாடிக்கையாளர் பிரிவை மதிப்பாய்வு செய்து, எந்தத் தொடர்பு விவரங்களை வைத்திருக்க வேண்டும் என்பதைத் தேர்வுசெய்யவும். ஒன்றிணைக்கப்பட்ட சுயவிவரமானது customer-new@example.com என்பதை வைத்திருந்தால், customer-new@example.com உடன் தொடர்புடைய சுயவிவரம் அப்படியே இருக்கும்.

பின்வரும் தகவல்கள் ஒரே சுயவிவரத்தில் ஒன்றிணைக்கப்படும்:

  • ஆர்டர்கள்
  • வரைவு ஆர்டர்கள்
  • முகவரிகள்
  • மின்னஞ்சல் முகவரி
  • தொலைபேசி எண்
  • பெயர்
  • குறிப்புகள்
  • டேக்குகள்
  • வரி அமைப்புகள்
  • காலவரிசை நிகழ்வுகள்
  • கிரெடிட் கார்டுகள்
  • வாடிக்கையாளர் கணக்குகள்
  • பரிசு கார்டுகள்
  • தள்ளுபடிகள்

இரு சுயவிவரங்களில் உள்ள தகவல்களும் முரண்பட்டால், ஒன்றிணைக்கும் செயல்முறையை நீங்கள் ரத்துசெய்யலாம். மேலும் ஒன்றிணைப்பைத் தொடர்வதற்கு முன் வாடிக்கையாளர் சுயவிவரப் பக்கங்களில் உள்ள ஒவ்வொரு பதிவிலும் உள்ள தகவலைச் சரிசெய்யலாம்.

வாடிக்கையாளர் சுயவிவரங்களை ஒன்றிணைப்பதற்கான வரம்புகள்

வாடிக்கையாளர் சுயவிவரங்களை ஒன்றிணைப்பதற்கு முன், பின்வரும் விஷயங்களை மதிப்பாய்வு செய்யவும்:

  • சுயவிவரங்கள் ஒன்றிணைக்கப்பட்ட பிறகு, அந்தச் செயல்முறையை உங்களால் மீட்டமைக்க முடியாது.
  • சுயவிவரங்களில் குறிப்புகள் சேர்க்கப்பட்டிருந்தால், இணைக்கப்பட்ட குறிப்புகள் இடைவெளிகள் உட்பட 5,000 எழுத்துகளுக்குக் குறைவாகவோ அல்லது சமமாகவோ இருக்க வேண்டும்.
  • சுயவிவரங்களில் டேக்குகள் இருந்தால், ஒன்றிணைக்கப்பட்ட டேக்குகள் 250 டேக்குகளுக்குக் குறைவாகவோ அல்லது சமமாகவோ இருக்க வேண்டும்.
  • வாடிக்கையாளர் ஒரு சுயவிவரத்தில் மின்னஞ்சல் மற்றும் SMS உரை மார்க்கெட்டிங்கிற்குச் சந்தா பெற்றிருந்து, மற்றொன்றில் பெறவில்லை என்றால், ஒன்றிணைக்கப்பட்ட சுயவிவரத்தில் சந்தா பெறப்பட்டிருக்கும்.
  • அவர்களின் வாடிக்கையாளர் சுயவிவரங்களை நீங்கள் ஒன்றிணைக்கும்போது, வாடிக்கையாளருக்கு அறிவிக்கப்படாது.
  • பின்வரும் சூழ்நிலைகளில் சுயவிவரங்களை ஒன்றிணைக்க முடியாது:
    • இரண்டு வாடிக்கையாளர் சுயவிவரங்களில் ஏதேனும் ஒன்று சந்தா ஒப்பந்தத்தைக் கொண்டிருக்கிறது அல்லது எப்போதாவது கொண்டிருந்தது.
    • இரண்டு வாடிக்கையாளர் சுயவிவரங்களில் ஏதேனும் ஒன்று நிறுவனத்துடன் செயலில் இணைக்கப்பட்டுள்ள B2B வாடிக்கையாளராகும் அல்லது முந்தைய B2B ஆர்டர்களுடன் இன்னும் இணைக்கப்பட்டுள்ளது.
    • இரண்டு வாடிக்கையாளர் சுயவிவரங்களில் ஏதேனும் ஒன்றில் வால்ட் செய்யப்பட்ட கிரெடிட் கார்டு உள்ளது.
    • இரண்டு வாடிக்கையாளர் சுயவிவரங்களில் ஏதேனும் ஒன்றில் ஸ்டோர் கிரெடிட் கணக்கு உள்ளது.
    • இரண்டு வாடிக்கையாளர் சுயவிவரங்களில் ஏதேனும் ஒன்றில் மல்டிபாஸ் உள்நுழைவு உள்ளது.
    • இரண்டு வாடிக்கையாளர் சுயவிவரங்களில் ஏதேனும் ஒன்று நீக்கப்பட்டுவிட்டது.
    • இரண்டு வாடிக்கையாளர் சுயவிவரங்களில் ஏதேனும் ஒன்றிலிருந்து தரவு நீக்கப்பட்டுவிட்டது அல்லது தரவு நீக்கக் கோரிக்கை செயல்பாட்டில் உள்ளது.
    • வாடிக்கையாளர் சுயவிவரங்களை ஒன்றிணைக்கும் செயல்முறை செயல்பாட்டில் உள்ளது.
    • வாடிக்கையாளர் தரவுக் கோரிக்கை செயல்பாட்டில் உள்ளது.

வாடிக்கையாளர் சுயவிவரங்களை ஒன்றிணைக்கவும்

  1. உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, வாடிக்கையாளர்கள் பகுதிக்குச் செல்லவும்.

  2. வாடிக்கையாளர் பட்டியலில் இருந்து, ஒரு வாடிக்கையாளர் சுயவிவரத்தைக் கிளிக் செய்யவும்.

  3. மேலும் செயல்கள் > வாடிக்கையாளரை ஒன்றிணை என்பதைக் கிளிக் செய்யவும்.

  4. ஒன்றிணைப்பதற்கான வாடிக்கையாளரைக் கண்டறிக பிரிவில், வேறொரு வாடிக்கையாளர் சுயவிவரத்தைத் தேட பின்வரும் தகவல்களில் ஏதேனும் ஒன்றை உள்ளிடவும்:

    • முதல் பெயர்
    • கடைசி பெயர்
    • மின்னஞ்சல் முகவரி
    • தொலைபேசி எண்
    • கிரெடிட் கார்டு எண்
  5. பொருத்தமான வாடிக்கையாளர் சுயவிவரத்தைத் தேர்ந்தெடுக்கவும்.

  6. ஒன்றிணைக்கப்பட்ட வாடிக்கையாளர் பிரிவில், எந்தத் தகவல் ஒன்றிணைக்கப்படுகிறது, எந்தத் தகவல் நிராகரிக்கப்படுகிறது என்பதை மதிப்பாய்வு செய்யவும்.

  7. விருப்பத்திற்குரியது: இணையத்தில் தொடர்புத் தகவலை மாற்று என்பதையோ மொபைலில் திருத்து என்பதையோ கிளிக் செய்து, ஒன்றிணைப்பதற்கு முன் தேர்ந்தெடுக்கப்பட்ட வாடிக்கையாளர் தகவலை மாற்றலாம்.

  8. விருப்பத்திற்குரியது: ஒன்றிணைப்பு விவரங்களைக் காட்டு என்பதைக் கிளிக் செய்து, ஒன்றிணைப்பு விவரங்களை மதிப்பாய்வு செய்து, அதன் பிறகு மூடு என்பதைக் கிளிக் செய்யவும்.

  9. ஒன்றிணை என்பதைக் கிளிக் செய்து, உறுதிப்படுத்து என்பதைக் கிளிக் செய்யவும்.

வாடிக்கையாளர் பட்டியலில் இருந்து ஒன்றிணை

டெஸ்க்டாப்
  1. உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, வாடிக்கையாளர்கள் பகுதிக்குச் செல்லவும்.

  2. நீங்கள் ஒன்றிணைக்க விரும்பும் இரண்டு வாடிக்கையாளர்களைத் தேர்ந்தெடுக்கவும். குறியீட்டில் போலி சுயவிவரங்களில் ஒன்று மட்டுமே காட்டப்பட்டால், அடுத்த படியில் மற்ற சுயவிவரத்தை நீங்கள் தேடலாம்.

  3. வாடிக்கையாளர்களைத் திருத்து பொத்தானுக்கு அடுத்துள்ள Horizontal menu என்பதைக் கிளிக் செய்யவும்.

  4. வாடிக்கையாளர்களை ஒன்றிணை என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

    • பட்டியலில் இரண்டு வாடிக்கையாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தால், படி 7-க்குச் செல்லவும்.
  5. பட்டியலில் இருந்து ஒரு வாடிக்கையாளர் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தால், ஒன்றிணைப்பதற்கான வாடிக்கையாளரைக் கண்டறிக என்பதன் கீழ் அந்த வாடிக்கையாளரைத் தேடவும். தேட, பின்வரும் தகவல்களில் ஏதேனும் ஒன்றைப் பயன்படுத்தவும்:

    • முதல் பெயர்
    • கடைசி பெயர்
    • மின்னஞ்சல் முகவரி
    • தொலைபேசி எண்
    • கிரெடிட் கார்டு எண்
  6. போலி வாடிக்கையாளர் சுயவிவரத்தைத் தேர்ந்தெடுக்கவும்.

  7. ஒன்றிணைக்கப்பட்ட வாடிக்கையாளர் பிரிவில், எந்தத் தகவல் ஒன்றிணைக்கப்படுகிறது, எந்தத் தகவல் நிராகரிக்கப்படுகிறது என்பதை மதிப்பாய்வு செய்யவும்.

  8. விருப்பத்திற்குரியது: இணையத்தில் தொடர்புத் தகவலை மாற்று என்பதையோ மொபைலில் திருத்து என்பதையோ கிளிக் செய்து, ஒன்றிணைப்பதற்கு முன் தேர்ந்தெடுக்கப்பட்ட வாடிக்கையாளர் தகவலை மாற்றலாம்.

  9. விருப்பத்திற்குரியது: ஒன்றிணைப்பு விவரங்களைக் காட்டு என்பதைக் கிளிக் செய்து, ஒன்றிணைப்பு விவரங்களை மதிப்பாய்வு செய்து, அதன் பிறகு மூடு என்பதைக் கிளிக் செய்யவும்.

  10. ஒன்றிணை என்பதைக் கிளிக் செய்து, உறுதிப்படுத்து என்பதைக் கிளிக் செய்யவும்.

மொபைல்
  1. Shopify செயலியிலிருந்து, Menu ஐகானைத் தட்டவும்.

  2. வாடிக்கையாளர்கள் என்பதைத் தட்டவும்.

  3. Horizontal menu அல்லது Vertical menu > வாடிக்கையாளர்களைத் தேர்ந்தெடு என்பதைத் தட்டவும்.

  4. நீங்கள் திருத்த விரும்பும் வாடிக்கையாளர்களைத் தேர்ந்தெடுத்து, Horizontal menu அல்லது Vertical menu > உள்ளீடுகளை ஒருங்கிணை என்பதைத் தட்டவும்.

  5. ஒன்றிணைக்கப்பட்ட வாடிக்கையாளர் பிரிவில், எந்தத் தகவல் ஒன்றிணைக்கப்படுகிறது, எந்தத் தகவல் நிராகரிக்கப்படுகிறது என்பதை மதிப்பாய்வு செய்யவும்.

  6. விருப்பத்திற்குரியது: ஒன்றிணைப்பதற்கு முன் தேர்ந்தெடுக்கப்பட்ட வாடிக்கையாளர் தகவலை மாற்ற, திருத்து என்பதைத் தட்டவும்.

  7. சேமிக்க, சேமி அல்லது ✓ என்பதைத் தட்டி, உறுதிப்படுத்த ஒன்றிணை என்பதைத் தட்டவும்.

2-க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களை ஒன்றாக ஒருங்கிணைக்க, கூடுதலான ஒவ்வொரு சுயவிவரத்திற்கும் இதே செயல்முறையைத் திரும்பச் செய்யவும்.

வாடிக்கையாளரின் தனிப்பட்ட தரவை அழித்தல்

ஒரு வாடிக்கையாளர் அவர்களின் தனிப்பட்ட தரவை அழிக்குமாறு உங்களிடம் கேட்டால், தரவை அழிப்பதற்கான கோரிக்கையை நீங்கள் சமர்ப்பிக்கலாம். வாடிக்கையாளரின் பெயர், மின்னஞ்சல், ஃபோன் எண் மற்றும் முகவரி போன்ற தனிப்பட்ட விவரங்கள் Shopify பதிவுகளிலிருந்து அகற்றப்படும், மேலும் நீங்கள் நிறுவியுள்ள செயலிகள் மற்றும் விற்பனைச் சேனல்கள் அனைத்திற்கும் இதே கோரிக்கை அனுப்பப்படும். தனிப்பட்ட தரவை அழிப்பது என்பது வாடிக்கையாளர் சுயவிவரத்தை நீக்குவதிலிருந்து வேறுபட்டது. தனிப்பட்ட தரவை அழிக்குமாறு நீங்கள் கோரும்போது, வாடிக்கையாளரின் பெயர் மற்றும் முகவரி போன்ற தகவல்களை Shopify மறைக்கும், ஆனால் சுயவிவரமும் ஆர்டர் வரலாறும் உங்கள் Shopify நிர்வாகியிலேயே இருக்கும். விரிவான படிகளுக்கு, வாடிக்கையாளர் தரவுக் கோரிக்கைகளைச் செயலாக்குதல் என்பதைப் பார்க்கவும்.

வாடிக்கையாளர் சுயவிவரங்களை நீக்குதல்

தனிப்பட்ட வாடிக்கையாளர் சுயவிவரங்களை நீங்கள் நீக்கலாம். மாற்றாக, பல வாடிக்கையாளர் சுயவிவரங்களை மொத்தமாக நீக்கலாம்.

ஒரு வாடிக்கையாளர் சுயவிவரத்தை நீக்கும்போது, வாடிக்கையாளரின் பெயர், முகவரி போன்ற தனிப்பட்ட தரவும் Shopify-இன் பதிவுகளில் இருந்து மறைக்கப்படும்.

வாடிக்கையாளர் சுயவிவரங்களை நீக்குவதற்கான வரம்புகள்

பின்வரும் நிகழ்வுகளில் வாடிக்கையாளர் சுயவிவரங்களை நீக்க முடியாது:

  • GDPR அழித்தல் கோரிக்கை காரணமாக, வாடிக்கையாளருக்கு மறைத்தல் நிலுவையில் உள்ளது.
  • வாடிக்கையாளர், திட்டமிடப்பட்ட கிஃப்ட் கார்டைப் பெறுபவர் ஆவர், ஆனால் அது இன்னும் வழங்கப்படவில்லை.
  • வாடிக்கையாளருக்கு எப்போதாவது ஒரு சந்தா இருந்திருக்கிறது.
  • வாடிக்கையாளர் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட ஆர்டர்களுடன் தொடர்புடையவர்.

தனிப்பட்ட வாடிக்கையாளர் சுயவிவரங்களை நீக்குதல்

டெஸ்க்டாப்
  1. உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, வாடிக்கையாளர்கள் பகுதிக்குச் செல்லவும்.

  2. நீங்கள் எந்த வாடிக்கையாளரின் சுயவிவரத்தை நீக்க விரும்புகிறீர்களோ அவரது பெயரைக் கிளிக் செய்யவும்.

  3. மேலும் செயல்கள் > வாடிக்கையாளரை நீக்கு என்பதைக் கிளிக் செய்யவும்.

  4. வாடிக்கையாளர் சுயவிவரத்தை நீக்குவதை உறுதிப்படுத்த, வாடிக்கையாளரை நீக்கு என்பதைக் கிளிக் செய்யவும்.

மொபைல்
  1. Shopify செயலியிலிருந்து, Menu ஐகானைத் தட்டவும்.

  2. வாடிக்கையாளர்கள் என்பதைத் தட்டவும்.

  3. Horizontal menu அல்லது Vertical menu > வாடிக்கையாளர்களைத் தேர்ந்தெடு என்பதைத் தட்டி, நீங்கள் நீக்க விரும்பும் வாடிக்கையாளர் சுயவிவரத்தைத் தேர்ந்தெடுக்கத் தேர்வுப்பெட்டியைத் தட்டவும்.

  4. நீக்கு என்பதைத் தட்டவும்.

  5. வாடிக்கையாளர் சுயவிவரத்தை நீக்குவதை உறுதிப்படுத்த, நீக்கு என்பதைத் தட்டவும்.

வாடிக்கையாளர் சுயவிவரங்களை மொத்தமாக நீக்குதல்

பல வாடிக்கையாளர் சுயவிவரங்களை மொத்தமாக நீக்க முயற்சித்தால், நீக்கக்கூடிய சுயவிவரங்கள் மட்டுமே நீக்கப்படும். நீக்க முடியாத வாடிக்கையாளர் சுயவிவரங்கள் உங்கள் வாடிக்கையாளர் பட்டியலில் அப்படியே இருக்கும்.

படிகள்:

டெஸ்க்டாப்
  1. உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, வாடிக்கையாளர்கள் பகுதிக்குச் செல்லவும்.

  2. நீங்கள் நீக்க விரும்பும் ஒவ்வொரு வாடிக்கையாளர் சுயவிவரத்தையும் தேர்ந்தெடுக்கவும்.

  3. மொத்தமாகத் திருத்து பொத்தானுக்கு அடுத்துள்ள Horizontal menu ஐகானைக் கிளிக் செய்து, பிறகு வாடிக்கையாளர்களை நீக்கு என்பதைக் கிளிக் செய்யவும்.

  4. தேர்ந்தெடுக்கப்பட்ட வாடிக்கையாளர் சுயவிவரங்களை நீக்குவதை உறுதிப்படுத்த, நீக்கு என்பதைக் கிளிக் செய்யவும்.

மொபைல்
  1. Shopify செயலியிலிருந்து, Menu ஐகானைத் தட்டவும்.

  2. வாடிக்கையாளர்கள் என்பதைத் தட்டவும்.

  3. Vertical menu > வாடிக்கையாளர்களைத் தேர்ந்தெடு என்பதைத் தட்டி, நீங்கள் நீக்க விரும்பும் வாடிக்கையாளர் சுயவிவரங்களைத் தேர்ந்தெடுக்கத் தேர்வுப்பெட்டிகளைத் தட்டவும்.

  4. நீக்கு என்பதைத் தட்டவும்.

  5. வாடிக்கையாளர் சுயவிவரத்தை நீக்குவதை உறுதிப்படுத்த, நீக்கு என்பதைத் தட்டவும்.

அமெரிக்க ராணுவ ஷிப்பிங் முகவரிகளுக்கான தேவைகள்

அமெரிக்காவில் உள்ள ராணுவ அஞ்சல் முகவரிகள் தனித்துவமான வடிவமைப்பைக் கொண்டுள்ளன, அவை ஒரு குறிப்பிட்ட வழியில் உள்ளிடப்பட வேண்டும். முகவரி தவறாக உள்ளிடப்பட்டால், உத்தேசிக்கப்பட்டுள்ள பெறுநருக்கு ஆர்டர் சென்றடையாமல் போகலாம். மூன்று வெவ்வேறு வகையான அமெரிக்க ராணுவ முகவரிகள் உள்ளன:

  • ராணுவ/விமானப்படை அஞ்சலகம் (APO)
  • கடற்படை அஞ்சலகம் (FPO)
  • தூதரக அஞ்சலகம் (DPO)

அமெரிக்க ராணுவ ஷிப்பிங் முகவரியைக் கொண்ட ஆர்டரைப் பெற்றால், ஆர்டரை அனுப்புவதற்கு முன் முகவரி சரியாக உள்ளிடப்பட்டுள்ளதா என்பதை உறுதிசெய்யவும். வாடிக்கையாளர் ஷிப்பிங் முகவரியைச் சரியாக உள்ளிடவில்லை எனில், பின்வரும் வழிகாட்டுதல்களைப் பயன்படுத்தி வாடிக்கையாளர் முகவரியைத் திருத்தவும்:

  • பெறுநரின் பெயர் பெயர் பெட்டிகளில் உள்ளிடப்பட வேண்டும், ஆனால் அவர்களின் ரேங்க் விருப்பத்திற்குரியது.
  • APO முகவரிகளுக்கு, PSC மற்றும் BOX எண்கள் இரண்டும் முகவரி புலத்தில் இருக்க வேண்டும்.
  • FPO மற்றும் DPO முகவரிகளுக்கு, UNIT மற்றும் BOX எண்கள் இரண்டும் முகவரி புலத்தில் இருக்க வேண்டும்.
  • நகரம் புலத்தில் APO, FPO அல்லது DPO மட்டுமே இருக்க வேண்டும். நகரத்தின் பெயரை உள்ளிட வேண்டாம்.
  • நாடு/பிராந்தியம் புலத்தில் அமெரிக்கா தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.
  • State புலத்தில் Armed Forces Americas, Armed Forces Europe அல்லது Armed Forces Pacific ஆகியவற்றைத் தேர்ந்தெடுக்க வேண்டும். உங்கள் வாடிக்கையாளர் இந்த இடங்களைச் சுருக்கமாக AA (Armed Forces America), AE (Armed Forces Europe) அல்லது AP (Armed Forces Pacific) என்று உள்ளிட்டிருக்கலாம்.

முகவரித் தகவலில் உங்களுக்குச் சந்தேகம் இருந்தால், கூடுதல் விளக்கத்திற்கு ஆர்டர் செய்த வாடிக்கையாளரைத் தொடர்புகொள்ளவும்.