தள்ளுபடிகளை இணைத்தல்

உங்களின் சில விளம்பரங்களுக்காக, வாடிக்கையாளர்களை வெவ்வேறு தள்ளுபடிகளுடன் சேர்த்து இணைக்க நீங்கள் அனுமதிக்கலாம். வாடிக்கையாளர்கள் தங்களின் கார்ட்டின் அடிப்படையில் சாத்தியமான சிறந்த மொத்தத் தள்ளுபடியைப் பெற அனுமதிக்கும் தகுதியான சேர்க்கைகளிலிருந்து நீங்கள் தேர்வுசெய்யலாம். ஒன்றிணைப்பதற்காக தானியங்கு தள்ளுபடிகளையும் தள்ளுபடிக் குறியீடுகளையும் நீங்கள் அமைக்கலாம்.

நீங்கள் உருவாக்கும் ஒவ்வொரு தள்ளுபடிக்கும், தள்ளுபடி எதற்குப் பொருந்தும் என்பதைப் பொறுத்து பின்வரும் வகுப்புகளில் ஒன்று இருக்கும்:

  • தயாரிப்புத் தள்ளுபடிகள்: குறிப்பிட்ட உருப்படிகள் அல்லது சேகரிப்புகளுக்குப் பொருந்தும்
  • ஆர்டர் தள்ளுபடிகள்: கார்ட் துணை மொத்தங்களுக்குப் பொருந்தும்
  • ஷிப்பிங் தள்ளுபடிகள்: ஷிப்பிங் செலவுகளை மாற்றியமைக்கும்

ஒரு தள்ளுபடியை மற்ற தள்ளுபடிகளுடன் இணைக்க நீங்கள் அனுமதிக்கும்போது, அது எந்தெந்த தள்ளுபடி வகுப்புகளுடன் இணைக்கப்படலாம் என்பதைத் தேர்ந்தெடுக்கிறீர்கள். எடுத்துக்காட்டாக, ஒரு ஆர்டரில் 10% சலுகைக்கான தள்ளுபடிக் குறியீட்டை நீங்கள் உருவாக்கினால், அந்தத் தள்ளுபடிக் குறியீட்டைத் தயாரிப்புக்கான தள்ளுபடிக் குறியீடுகளுடனும் இணைக்க நீங்கள் அனுமதிக்கலாம்.

ஒரே ஆர்டருக்கு பல ஆர்டர் தள்ளுபடிகள், தயாரிப்புத் தள்ளுபடிகள் மற்றும் ஷிப்பிங் தள்ளுபடிகள் அனைத்தையும் பயன்படுத்தலாம். வெவ்வேறு தள்ளுபடிகள் எவ்வாறு இணைகின்றன என்பது பற்றி மேலும் அறிக. சில சந்தர்ப்பங்களில் உங்கள் ஸ்டோரில் செயலில் உள்ள தானியங்கு தள்ளுபடிகள் இருந்து, அதோடு வாடிக்கையாளரும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட தள்ளுபடிக் குறியீடுகளைப் பயன்படுத்தினால், சிறந்த தள்ளுபடி அல்லது தள்ளுபடிகளின் சேர்க்கை வாடிக்கையாளரின் கார்ட்டுக்குத் தானாகவே பயன்படுத்தப்படும்.

செக்அவுட்டின்போது ஒருங்கிணைக்க முடியாத ஒன்றுக்கு மேற்பட்ட தள்ளுபடிக் குறியீடுகளை வாடிக்கையாளர் உள்ளிட்டால், பின்வரும் செய்தி காண்பிக்கப்படும்: தற்போதைய தள்ளுபடிகளுடன் இந்தத் தள்ளுபடியைப் பயன்படுத்த முடியவில்லை.

தள்ளுபடி சேர்க்கைகளின் வகைகள்

ஆறு வகையான தள்ளுபடி சேர்க்கைகள் உள்ளன:

  • ஆர்டர் தள்ளுபடிகளுடன் இலவச ஷிப்பிங் தள்ளுபடிகள்
  • தயாரிப்புத் தள்ளுபடிகளுடன் இலவச ஷிப்பிங் தள்ளுபடிகள்
  • தனித்தனி உருப்படிகளின் மீதான தயாரிப்புத் தள்ளுபடிகளுடன் பிற தயாரிப்புத் தள்ளுபடிகள்
  • ஆர்டர் தள்ளுபடிகளுடன் தயாரிப்புத் தள்ளுபடிகள் (தகுதியான வணிகர்களுக்கு மட்டுமே கிடைக்கும்)
  • பிற ஆர்டர் தள்ளுபடிகளுடன் ஆர்டர் தள்ளுபடிகள் (தகுதியான வணிகர்களுக்கு மட்டுமே கிடைக்கும்)
  • ஒரே உருப்படியில் பிற தயாரிப்புத் தள்ளுபடிகளுடன் ஒருங்கிணைந்த தயாரிப்புத் தள்ளுபடிகள் (Shopify Plusக்கு மட்டுமே)

தகுதித் தேவைகள்

அனைத்து வணிகர்களும் பின்வரும் தள்ளுபடிகளை ஒருங்கிணைக்கலாம்:

  • ஆர்டர் தள்ளுபடிகளுடன் இலவச ஷிப்பிங் தள்ளுபடிகள்
  • தயாரிப்புத் தள்ளுபடிகளுடன் இலவச ஷிப்பிங் தள்ளுபடிகள்
  • தனித்தனி உருப்படிகளின் மீதான தயாரிப்புத் தள்ளுபடிகளுடன் பிற தயாரிப்புத் தள்ளுபடிகள்

தயாரிப்புத் தள்ளுபடிகளை ஆர்டர் தள்ளுபடிகளுடன் ஒருங்கிணைக்க அல்லது ஆர்டர் தள்ளுபடிகளை பிற ஆர்டர் தள்ளுபடிகளுடன் ஒருங்கிணைக்க, பின்வரும் தகுதித் தேவைகளை நீங்கள் பூர்த்தி செய்ய வேண்டும்:

  • உங்கள் ஸ்டோரில் எந்தவொரு checkout.liquid தனிப்பயனாக்கங்களையும் அல்லது அம்சங்களையும் பயன்படுத்தக்கூடாது.
  • நீங்கள் Licensify செயலியைப் பயன்படுத்தவில்லை.

நீங்கள் தகுதித் தேவைகளைப் பூர்த்தி செய்திருந்தும் சேர்க்கைகளுடன் கூடிய தள்ளுபடிகளை உருவாக்க முடியவில்லை எனில், Shopify ஆதரவைத் தொடர்புகொள்ளவும்.

ஒரே வரிசை உருப்படியில் பல தயாரிப்புத் தள்ளுபடிகளை ஒருங்கிணைக்க, உங்கள் ஸ்டோர் Shopify Plus திட்டத்தில் இருக்க வேண்டும்.

தள்ளுபடி சேர்க்கைகளுக்கான பரிசீலனைகள்

தள்ளுபடி சேர்க்கைகளைச் செயல்படுத்தும் முன், பின்வரும் பரிசீலனைகளை மதிப்பாய்வு செய்யவும்.

ஒருங்கிணைக்கக் கூடிய தள்ளுபடிகளை உருவாக்கும்போதான பரிசீலனைகள்

ஒருங்கிணைக்கக் கூடிய தள்ளுபடிகளை நீங்கள் எவ்வாறு அமைக்கிறீர்கள் என்பதைப் பாதிக்கும் பின்வரும் காரணிகளை மதிப்பாய்வு செய்யவும்.

சேர்க்கை அமைப்புகள்

ஒவ்வொரு தள்ளுபடியின் அமைப்பும் சேர்க்கையை அனுமதிக்கும் போது மட்டுமே ஒரு ஆர்டருக்கு பல தள்ளுபடிகள் பயன்படுத்தப்படும்.

மற்றொரு புதிய தள்ளுபடியுடன் ஒருங்கிணைக்க நீங்கள் புதிய தள்ளுபடியை உருவாக்குகிறீர்கள் எனில், இரண்டையும் ஒரே நேரத்தில் அமைக்க வேண்டியதில்லை. முதலில் ஒரு தள்ளுபடியை அமைத்துச் சேமிக்கலாம், பின்னர் இரண்டாவது தள்ளுபடியை உருவாக்கலாம். ஒவ்வொரு தள்ளுபடியும் செயலில் இருந்து, ஒன்றுடன் ஒன்று இணையும் வகையில் அமைக்கப்பட்ட பிறகு, வாடிக்கையாளர் இரண்டு தள்ளுபடிகளையும் ஒரு ஆர்டருக்குப் பயன்படுத்தினால், அவை தானாகவே ஒருங்கிணைக்கப்படும்.

தள்ளுபடி வரம்புகள்

தள்ளுபடி சேர்க்கைகளுக்குப் பின்வரும் வரம்புகள் பொருந்தும்:

  • நீங்கள் அதிகபட்சமாக 25 செயலில் உள்ள தானியங்கு தள்ளுபடிகளைப் பெறலாம். இந்த மொத்த எண்ணிக்கையில் செயலி சார்ந்த தள்ளுபடிகளும் அடங்கும். அதாவது ஒரே ஆர்டரில் அதிகபட்சமாக 25 தானியங்கு தள்ளுபடிகளைப் பயன்படுத்த முடியும்.
  • வாடிக்கையாளர்கள் ஒரே ஆர்டரில் அதிகபட்சமாக 5 தயாரிப்பு அல்லது ஆர்டர் தள்ளுபடிக் குறியீடுகள் மற்றும் 1 ஷிப்பிங் தள்ளுபடிக் குறியீட்டைப் பயன்படுத்தலாம்.

ஆதரிக்கப்படும் விற்பனைச் சேனல்கள்

ஆன்லைன் ஸ்டோர், Storefront API மற்றும் Shopify POS மூலம் செய்யப்படும் ஆர்டர்களில் மட்டுமே தள்ளுபடிகளை ஒருங்கிணைக்க முடியும்.

சேர்க்கை அமைப்புகளைத் தவிர்க்கும் தள்ளுபடிகள்

ஒரு ஆர்டரில் உள்ள பிற தள்ளுபடிகளுக்கான இணைப்பு அமைப்புகள் எதுவாக இருந்தாலும், அந்த ஆர்டரில் கைமுறையாகப் பயன்படுத்தப்படும் பிரத்தியேகத் தள்ளுபடிகள் எப்போதும் பொருந்தும். POS கார்ட்டில் கைமுறையாகப் பயன்படுத்தப்படும் தள்ளுபடியும் வரைவு ஆர்டருக்கான தனித்துவமான தள்ளுபடியும் இதற்கான எடுத்துக்காட்டுகள்.

ஒருங்கிணைக்கக் கூடிய தள்ளுபடிகள் எப்படிக் கணக்கிடப்படுகின்றன என்பதற்கான பரிசீலனைகள்

ஒரு ஆர்டருக்குப் பல தள்ளுபடிகள் பயன்படுத்தப்படும்போது, தள்ளுபடி மதிப்புகள் கணக்கிடப்படும் முறையைப் பாதிக்கும் பின்வரும் காரணிகளை மதிப்பாய்வு செய்யவும்.

தள்ளுபடி பயன்படுத்தப்படும் வரிசை

பின்வரும் வரிசையில் தள்ளுபடிகள் பயன்படுத்தப்படும்:

  1. தனிப்பட்ட உருப்படிகளுக்கு முதலில் தயாரிப்புத் தள்ளுபடிகள் பயன்படுத்தப்படும்.
  2. தயாரிப்புத் தள்ளுபடிகளுக்குப் பிறகு திருத்தப்பட்ட துணை மொத்தத்திற்கு ஆர்டர் தள்ளுபடிகள் பயன்படுத்தப்படும்.
  3. கடைசியாக ஷிப்பிங் தள்ளுபடிகள் பயன்படுத்தப்படும்.

செக்அவுட்டில் ஆர்டர் துணை மொத்தம் கணக்கிடப்படுவதற்கு முன் தயாரிப்புத் தள்ளுபடிகள் பயன்படுத்தப்படும். அதாவது தயாரிப்புத் தள்ளுபடி பயன்படுத்தப்பட்ட பிறகு உள்ள துணை மொத்தத்தின் அடிப்படையில் ஆர்டர் தள்ளுபடிகள் கணக்கிடப்படுகின்றன.

ஒரே உருப்படியில் பல தள்ளுபடிகள்

தயாரிப்பு மற்றும் ஆர்டர் வகைத் தள்ளுபடிகள் ஒருங்கிணைக்கப்பட முடிந்தால், ஒரே வரிசை உருப்படிக்குப் பல தள்ளுபடிகள் பயன்படுத்தப்படலாம். எடுத்துக்காட்டாக, ஒரு வாடிக்கையாளரின் கார்ட்டில் உள்ள ஆர்டருக்குத் தானாகவே 10% தள்ளுபடி பெறத் தகுதிபெற்று, அவர்களின் கார்ட்டில் உள்ள ஒரு தயாரிப்புக்கு $5 USD தள்ளுபடி பெற ஒரு தள்ளுபடிக் குறியீட்டை உள்ளிட்டால், தகுதியான உருப்படிக்கு இரு தள்ளுபடிகளும் பயன்படுத்தப்படும்.

உங்கள் ஸ்டோர் Shopify Plus திட்டத்தில் இருந்தால், ஒரே வரிசை உருப்படியில் ஒருங்கிணைக்கப் பல தயாரிப்புத் தள்ளுபடிகளை உள்ளமைக்கலாம். எடுத்துக்காட்டாக, விசுவாசத் தள்ளுபடி மற்றும் சீசன் தள்ளுபடி ஆகிய இரண்டையும் ஒரே தயாரிப்புக்குப் பயன்படுத்தலாம்.

சிறந்த தள்ளுபடித் தேர்வு

இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட தள்ளுபடிகள் பயன்படுத்தப்பட்டிருந்தும், தள்ளுபடி சேர்க்கை அமைப்பு அல்லது கார்ட்டின் உள்ளடக்கத்தின் காரணமாக அவற்றை ஒருங்கிணைக்க முடியவில்லை எனில், வாடிக்கையாளரின் கார்ட்டிற்கான சிறந்த தள்ளுபடியே எப்போதும் பயன்படுத்தப்படும்.

எடுத்துக்காட்டாக, உங்கள் Socks சேகரிப்புக்கு ஒருங்கிணைக்க முடியாத 20% தள்ளுபடியும், உங்கள் Christmas Socks சேகரிப்புக்கு ஒருங்கிணைக்க முடியாத $30 USD தள்ளுபடியும் உங்களிடம் இருந்து, வாடிக்கையாளர் இரண்டையும் தங்கள் கார்ட்டில் பயன்படுத்தினால், அவருக்கு சிறந்த பலனளிக்கும் தள்ளுபடி பயன்படுத்தப்படும்.

சதவீத அளவிலான ஆர்டர் தள்ளுபடிகள் எவ்வாறு அடுக்கப்படுகின்றன

சதவீதக் கழிவை வழங்கும் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட ஆர்டர் தள்ளுபடிகள் ஒரே ஆர்டருக்குப் பயன்படுத்தப்பட்டால், இரண்டு சதவீதங்களும் அசல் துணை மொத்தத்திலேயே கணக்கிடப்படும்.

எடுத்துக்காட்டாக, ஒரு கார்ட்டானது ஆர்டருக்கு 10% தள்ளுபடி வழங்கும் ஒரு தள்ளுபடிக்கும், ஆர்டருக்கு 20% தள்ளுபடி வழங்கும் இரண்டாவது தள்ளுபடிக் குறியீட்டிற்கும் தகுதிபெற்றிருந்து, ஆர்டரின் துணை மொத்தம் $100 USD ஆக இருந்தால், தள்ளுபடிகளுக்குப் பின்னரான மொத்தம் $70 USD அல்லது அசல் துணை மொத்தத்தில் 30% தள்ளுபடியாக இருக்கும்.

தயாரிப்புத் தள்ளுபடிகள் பயன்படுத்தப்பட்ட பிறகு, எல்லா ஆர்டர் தள்ளுபடிகளும் ஆர்டர் துணை மொத்தத்தின் மீது பயன்படுத்தப்படும். எடுத்துக்காட்டாக, ஆர்டர் துணை மொத்தம் $100 USD ஆகவும், கார்ட்டானது WELCOME10 என்ற குறியீட்டைப் பயன்படுத்தி 10% தள்ளுபடியையும் INFLUENCER20 என்ற குறியீட்டைப் பயன்படுத்தி 20% தள்ளுபடியையும் பெறத் தகுதிபெற்றிருந்தால், ஆர்டர் மொத்தத்திலிருந்து $10 USD, $20 USD ஆகியவை கழிக்கப்பட்டு, மொத்தத் தள்ளுபடியாக $30 USD வழங்கப்படும்.

தள்ளுபடி அமைவு, இணக்கத்தன்மைக்கான கூடுதல் கருத்தில்கொள்ளல்கள்

உங்கள் தள்ளுபடிச் சேர்க்கைகள் செயல்படும் விதத்தைப் பாதிக்கக்கூடிய பின்வரும் தொழில்நுட்பக் கருத்தில்கொள்ளல்களைப் படித்துப் பார்க்கவும்:

  • தள்ளுபடி வகை மாற்றங்கள்: ஏற்கெனவே உள்ள தள்ளுபடிகளுக்கு தள்ளுபடி வகையையும் முறையையும் மாற்ற முடியாது. இந்த அமைப்புகளை நீங்கள் மாற்ற வேண்டுமானால், தள்ளுபடியை நீக்கிவிட்டு அதை மீண்டும் உருவாக்க வேண்டும்.
  • $0 USD, 0% தள்ளுபடிகள்: $0 USD அல்லது 0% மதிப்பைக் கொண்ட தள்ளுபடிகள் செக்அவுட்டில் சரியாகச் செயல்படாமல் போகலாம். நீங்கள் மிகக் குறைந்த மதிப்பிலான தள்ளுபடியை உருவாக்க வேண்டுமானால், குறைந்தபட்சம் $0.01 USD அல்லது 1% மதிப்பைப் பயன்படுத்தவும்.
  • வெளிப்புற செக்அவுட்கள்: Facebook, Instagram, Google அல்லது பிற வெளிப்புற செக்அவுட் பிளாட்ஃபார்ம்களில் செய்யப்படும் செக்அவுட்களுக்கு தள்ளுபடிச் சேர்க்கைகள் கிடைக்காது.

தள்ளுபடிச் சேர்க்கைகளுக்கான வரம்புகள்

தள்ளுபடிகளைச் சேர்க்கும்போது பொருந்தும் பின்வரும் வரம்புகளைப் படித்துப் பார்க்கவும்:

  • நீங்கள் அதிகபட்சமாக 25 செயலில் உள்ள தானியங்கு தள்ளுபடிகளை வைத்திருக்க முடியும். இந்த மொத்த எண்ணிக்கையில் செயலியை அடிப்படையாகக் கொண்ட தள்ளுபடிகளும் அடங்கும்.
  • ஒரே ஆர்டரில் வாடிக்கையாளர்கள் அதிகபட்சமாக 5 தயாரிப்பு அல்லது ஆர்டர் தள்ளுபடிக் குறியீடுகளையும் ஒரு ஷிப்பிங் தள்ளுபடிக் குறியீட்டையும் பயன்படுத்தலாம்.
  • ஆன்லைன் ஸ்டோர், Storefront API மற்றும் Shopify POS மூலம் செய்யப்படும் ஆர்டர்களில் மட்டுமே தள்ளுபடிகளை ஒருங்கிணைக்க முடியும்.
  • ஒரு X-ஐ வாங்கினால் Y-ஐப் பெறலாம் தள்ளுபடியின் ஒரு பகுதியாக உள்ள தயாரிப்புகளுக்கு, உங்கள் ஸ்டோரில் உள்ள Shopify சந்தாத் திட்டத்தைப் பொறுத்து பின்வரும் சூழல்கள் பொருந்தும்:
    • Shopify Plus தவிர்த்து பிற எல்லாத் திட்டங்களுக்கும்: X-ஐ வாங்கினால் Y-ஐப் பெறலாம் தள்ளுபடியின் ஒரு பகுதியாக உள்ள எல்லாத் தயாரிப்புகளுக்கும் மேலும் தயாரிப்புத் தள்ளுபடிகள் எதுவும் வழங்கப்படாது. X-ஐ வாங்கினால் Y-ஐப் பெறலாம் தள்ளுபடியிலுள்ள ஏதேனும் தயாரிப்புகளுக்குப் பொருந்தும் தள்ளுபடிக் குறியீட்டை வாடிக்கையாளர் உள்ளிடுகிறார் எனில், ஒட்டுமொத்தமாகச் சிறந்த மதிப்பைக் கொண்ட தள்ளுபடியே வாடிக்கையாளருக்குப் பயன்படுத்தப்படும்.
    • Shopify Plus திட்டத்திற்கு: X-ஐ வாங்கினால் Y-ஐப் பெறலாம் தள்ளுபடியில் வாடிக்கையாளர்-பெறும்-தயாரிப்பானது, ஒரே வரிசை உருப்படியில் தயாரிப்புத் தள்ளுபடிகளைச் சேர்க்கத் தகுதிபெறும். X-ஐ வாங்கினால் Y-ஐப் பெறலாம் தள்ளுபடியில் வாடிக்கையாளர்-வாங்கும்-தயாரிப்புக்கான தள்ளுபடிக் குறியீட்டை வாடிக்கையாளர் உள்ளிடுகிறார் எனில், ஒட்டுமொத்தமாகச் சிறந்த மதிப்பைக் கொண்ட தள்ளுபடியே வாடிக்கையாளருக்குப் பயன்படுத்தப்படும்.
  • ஒரு ஆர்டரில் உள்ள பிற தள்ளுபடிகளுக்கான இணைப்பு அமைப்புகள் எதுவாக இருந்தாலும், அந்த ஆர்டரில் கைமுறையாகப் பயன்படுத்தப்படும் பிரத்தியேகத் தள்ளுபடிகள் எப்போதும் பொருந்தும். POS கார்ட்டில் பயன்படுத்தப்படும் பிரத்தியேகத் தள்ளுபடியும் வரைவு ஆர்டரில் உள்ள பிரத்தியேகத் தள்ளுபடியும் இதற்கான எடுத்துக்காட்டுகள்.
  • தள்ளுபடிகளை இணைப்பதற்கான அமைப்புகள், ரோல்அவுட்டின் ஒரு பகுதியாக உள்ள தள்ளுபடிக்கும் தொடர்ந்து பொருந்தும். பரிசோதனையின்போது, பரிசோதனை முறைக்கு ஒதுக்கப்பட்ட வாடிக்கையாளர்களும் கட்டுப்பாட்டுக் குழுவில் உள்ள வாடிக்கையாளர்களும் வெவ்வேறு தள்ளுபடித் தொகுப்புகளுக்குத் தகுதி பெறலாம். எனவே, ஒரு குழுவிற்குப் பொருந்தும் தள்ளுபடி இணைப்பு மற்றொரு குழுவிற்குப் பொருந்தாமல் போகலாம்.

ஆதரிக்கப்படும் சேர்க்கைகள்

சாத்தியமான தள்ளுபடிச் சேர்க்கைகளுக்கான சில எடுத்துக்காட்டுகளைப் பின்வரும் அட்டவணை விளக்குகிறது, மேலும் எந்தெந்தச் சேர்க்கைகள் ஆதரிக்கப்படுகின்றன என்பதையும் காண்பிக்கிறது.

தள்ளுபடிச் சேர்க்கைகளின் எடுத்துக்காட்டுகள், விளக்கங்கள் மற்றும் அவை ஆதரிக்கப்படுகின்றனவா என்பதற்கான விவரங்கள்
சேர்க்கைச் சூழல்ஆதரிக்கப்படும் சேர்க்கைஎடுத்துக்காட்டுத் தள்ளுபடிவிளக்கம்
தயாரிப்புத் தள்ளுபடி(கள்)
+
ஆர்டர் தள்ளுபடி
✔20offPants + 10offShirts + Welcome10துணை மொத்தம் கணக்கிடப்படுவதற்கு முன் தயாரிப்புத் தள்ளுபடிகள் பயன்படுத்தப்படும், அதன்பிறகு துணை மொத்தத்திற்கு ஆர்டர் தள்ளுபடிகள் பயன்படுத்தப்படும்.
தயாரிப்புத் தள்ளுபடி
+
தயாரிப்புத் தள்ளுபடி (வெவ்வேறு தயாரிப்புகளுக்குப் பயன்படுத்தப்பட்டது)
✔20offPants + 10offShirtsஒரே கார்ட்டிலுள்ள வெவ்வேறு உருப்படிகளுக்கு 20offPants, 10offShirts ஆகியவை தள்ளுபடியை வழங்குகின்றன.
ஆர்டர் தள்ளுபடி
+
ஆர்டர் தள்ளுபடி
✔Welcome10 + Spend200Get5offஒரே ஆர்டருக்குப் பல ஆர்டர் தள்ளுபடிகளும் பயன்படுத்தப்படலாம்.
தயாரிப்புத் தள்ளுபடி(கள்)
+
இலவச ஷிப்பிங் தள்ளுபடி
✔20offPants + 10offShirts + FreeShipஒரே ஆர்டருக்குத் தயாரிப்புத் தள்ளுபடிகளும் ஷிப்பிங் தள்ளுபடிகளும் பயன்படுத்தப்படலாம்.
ஆர்டர் தள்ளுபடி
+
ஷிப்பிங் தள்ளுபடி
✔Welcome10 + FreeShipஒரே ஆர்டருக்கு ஆர்டர் தள்ளுபடிகளும் ஷிப்பிங் தள்ளுபடிகளும் பயன்படுத்தப்படலாம்.
தயாரிப்புத் தள்ளுபடி
+
தயாரிப்புத் தள்ளுபடி (ஒரே தயாரிப்புக்குப் பயன்படுத்தப்பட்டது)
✔
(Shopify Plus-இல் மட்டும்)
LoyaltyDiscount + SeasonalDiscountஒரே வரிசை உருப்படியில் பல தயாரிப்புத் தள்ளுபடிகளைச் சேர்க்கலாம்.
ஷிப்பிங் தள்ளுபடி
+
ஷிப்பிங் தள்ளுபடி
✘5offShipping + 10offShippingஒரே ஆர்டருக்குப் பல ஷிப்பிங் தள்ளுபடியைப் பயன்படுத்த முடியாது.

பல வகைகளைக் கொண்ட தள்ளுபடிகளுக்கான சேர்க்கை விதிகள்

ஒன்றுக்கும் மேற்பட்ட தள்ளுபடிச் சேமிப்பை உள்ளடக்கிய ஒற்றைத் தள்ளுபடியை உருவாக்க நீங்கள் செயலியைப் பயன்படுத்தினால், அந்தத் தள்ளுபடியில் தயாரிப்பு, ஆர்டர் அல்லது ஷிப்பிங் தள்ளுபடி வகைகள் கலந்திருக்கலாம். ஒரு தள்ளுபடியில் பல வகைகள் உள்ளடங்கியிருக்கும்போது, அந்த எல்லா வகைகளையும் சேர்க்க அனுமதிக்கும் பிற தள்ளுபடிகளுடன் மட்டுமே அதையும் சேர்க்க முடியும்.

பல வகைகளைக் கொண்ட தள்ளுபடிகளைச் சேர்ப்பதற்கான பின்வரும் எடுத்துக்காட்டுச் சூழல்களைப் படித்துப் பார்க்கவும்:

  • தயாரிப்பு, ஆர்டர், ஷிப்பிங் வகைகளுக்கான சேமிப்புகளை உள்ளடக்கிய ஒற்றைத் தள்ளுபடியை நீங்கள் வைத்திருக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். தயாரிப்பு மற்றும் ஆர்டர் தள்ளுபடிகளுடன் சேர்க்க அனுமதித்து, ஷிப்பிங் தள்ளுபடிகளுடன் சேர்க்க அனுமதிக்காத வேறொரு தள்ளுபடியை நீங்கள் வைத்திருந்தால் அந்த இரண்டு தள்ளுபடிகளையும் சேர்க்க முடியாது.
  • தயாரிப்பு, ஆர்டர் வகைகளுக்கான சேமிப்புகளை உள்ளடக்கிய ஒற்றைத் தள்ளுபடியை நீங்கள் வைத்திருக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். ஆர்டர் தள்ளுபடிகளுடன் சேர்க்க அனுமதித்து, தயாரிப்புத் தள்ளுபடிகளுடன் சேர்க்க அனுமதிக்காத வேறொரு தள்ளுபடியை நீங்கள் வைத்திருந்தால் அந்த இரண்டு தள்ளுபடிகளையும் சேர்க்க முடியாது.

பல சேமிப்புகளைக் கொண்ட தள்ளுபடியில் எந்தெந்தத் தள்ளுபடி வகைகள் சேர்க்கப்பட்டுள்ளன என்பதைப் பார்க்க, தள்ளுபடி வகைகளைப் பார்த்தல் என்பதைப் பார்க்கவும்.

தள்ளுபடிச் சேர்க்கைகளை நிர்வகித்தல்

உங்கள் தள்ளுபடிச் சேர்க்கைகளை நிர்வகிக்கும்போது பின்வரும் நடைமுறைகளைக் கருத்தில்கொள்ளவும்:

செயலில் உள்ள தள்ளுபடியைச் சேர்க்க முடியுமா எனப் பார்க்கவும்

சேர்க்கைகள் செயல்படுத்தப்பட்ட அனைத்துத் தள்ளுபடிகளையும் பட்டியலாகப் பார்க்க விரும்பினால், உங்கள் Shopify நிர்வாகியில் உள்ள தள்ளுபடிகள் பக்கத்திற்குச் செல்லவும். ஒவ்வொரு தள்ளுபடிக்கான அனுமதிக்கப்பட்ட சேர்க்கைகள் சேர்க்கைகள் நெடுவரிசையில் கருப்பு நிற வெளிப்புறக் கோட்டுடன் காட்டப்படும் தயாரிப்பு, ஆர்டர் அல்லது ஷிப்பிங் ஐகான்களால் குறிக்கப்படும். சேர்க்கைகளின் பட்டியலைப் பார்க்க தள்ளுபடிகள் பக்கத்தை நீங்கள் ஃபில்டரும் செய்யலாம்.

படிகள்:

  1. உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, தள்ளுபடிகள் என்பதற்குச் செல்லவும்.

  2. தேடல் ஃபில்டர் பொத்தானைக் கிளிக் செய்யவும்.

  3. Add filter என்பதைக் கிளிக் செய்து, Combines with என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

  4. நீங்கள் சேர்க்கைகளைப் பார்க்க விரும்பும் அனைத்துத் தள்ளுபடி வகைகளையும் தேர்ந்தெடுக்கவும்.

ஏற்கனவே உள்ள தள்ளுபடியைச் சேர்க்கக்கூடிய வகையில் திருத்தவும்

ஏற்கனவே உள்ள தள்ளுபடியைச் சேர்க்கக்கூடிய வகையில் அதை நீங்கள் திருத்தலாம். தள்ளுபடியைச் சேர்க்க அனுமதிக்க அதைத் திருத்துவது, முன்பு அந்தத் தள்ளுபடி பயன்படுத்தப்பட்ட ஆர்டர்களைப் பாதிக்காது.

படிகள்:

டெஸ்க்டாப்
  1. உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, தள்ளுபடிகள் என்பதற்குச் செல்லவும்.

  2. நீங்கள் சேர்க்கக்கூடியதாக மாற்ற விரும்பும் தள்ளுபடியைக் கிளிக் செய்யவும்.

  3. சேர்க்கைகள் பிரிவில், நீங்கள் இந்தத் தள்ளுபடியுடன் சேர்க்க விரும்பும் தள்ளுபடி வகைகளைத் தேர்ந்தெடுக்கவும்.

  4. சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.

மொபைல்
  1. Shopify செயலியிலிருந்து, மெனு ஐகானைத் தட்டவும்.

  2. தள்ளுபடிகள் என்பதைத் தட்டவும்.

  3. நீங்கள் சேர்க்கக்கூடியதாக மாற்ற விரும்பும் தள்ளுபடியைத் தட்டவும்.

  4. சேர்க்கைகள் பிரிவில், நீங்கள் இந்தத் தள்ளுபடியுடன் சேர்க்க விரும்பும் தள்ளுபடி வகைகளைத் தேர்ந்தெடுக்கவும்.

  5. சேமி அல்லது ✓ என்பதைத் தட்டவும்.

உங்கள் தள்ளுபடி சேர்க்கைகளைச் சோதிக்கவும்

உங்கள் ஸ்டோரில் ஒரு சோதனை ஆர்டரை வழங்குவதன் மூலம் உங்கள் தள்ளுபடி சேர்க்கைகளைச் சோதிக்கலாம். நீங்கள் செக்அவுட் செயல்முறைக்குச் சென்று தள்ளுபடிக் குறியீடுகளைச் சேர்த்துப் பார்த்து அவற்றின் சேர்க்கைகளைச் சரிபார்க்கலாம், பேமெண்ட் செய்வதற்கு முன்பு ஆர்டர் செயல்முறையை நிறுத்திவிடலாம்.

கொள்முதலை முடிக்காமல் தள்ளுபடிகளைச் சோதிக்க விரும்பினால், கார்ட்டில் தயாரிப்புகளைச் சேர்த்து, செக்அவுட்டிற்குச் சென்று, உங்கள் தள்ளுபடிக் குறியீடுகளை உள்ளிட்டு, செக்அவுட் பக்கத்தை மூடுவதற்கு முன்பு தள்ளுபடிகள் சரியாகக் காட்டப்படுவதைச் சரிபார்க்கலாம்.

உங்களின் தள்ளுபடி சேர்க்கைகளைச் சோதிக்கும்போது, தள்ளுபடி கட்டுப்பாடுகள் எவையேனும் உள்ளதா என்பதையும் சேர்த்துச் சோதிக்கவும். எடுத்துக்காட்டாக, தள்ளுபடி சேர்க்கைகள் எதிர்பார்த்தபடி செயல்படுவதை உறுதிசெய்ய, உங்கள் தள்ளுபடிக் குறியீடுகள் பொருந்தக்கூடிய தயாரிப்புகளுடன் தள்ளுபடியிலிருந்து விலக்கப்பட்ட தயாரிப்புகளையும் சேர்த்துப் பார்க்கவும். உங்கள் தள்ளுபடியில் உள்ள பிராந்தியக் கட்டுப்பாடுகளின் அடிப்படையில் வாடிக்கையாளர்களுக்கு வெவ்வேறு முகவரிகளையும் நீங்கள் பயன்படுத்தலாம்.

ஒரே வரிசை உருப்படியில் தயாரிப்புத் தள்ளுபடிகளை உள்ளமைக்கவும்

செக்அவுட் செய்யும்போது ஒரே வரிசை உருப்படியில் ஒன்றுக்கும் மேற்பட்ட தயாரிப்புத் தள்ளுபடிகளைச் செயல்படுத்த நீங்கள் உள்ளமைக்கலாம். தள்ளுபடிகளில் loyalty அல்லது seasonal போன்ற குறிச்சொற்களைச் சேர்ப்பதன் மூலம், ஒரே தயாரிப்பில் எந்தெந்த தயாரிப்புத் தள்ளுபடிகளைப் பயன்படுத்தலாம் என்பதை அடையாளம் காண நீங்கள் பயன்படுத்தலாம். அதன் பிறகு, செக்அவுட்டின்போது பொருந்தக்கூடிய குறிச்சொற்கள் உள்ள தள்ளுபடிகள் ஒரே வரிசை உருப்படியில் சேர்க்கப்படும்.

படிகள்:

  1. உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, தள்ளுபடிகள் என்பதற்குச் செல்லவும்.

  2. புதிய தள்ளுபடியை உருவாக்கவும் அல்லது ஏற்கனவே உள்ள தள்ளுபடியைக் கிளிக் செய்யவும்.

  3. குறிச்சொற்கள் பிரிவில், பிளஸ் வட்டம் குறிச்சொற்களைச் சேர் என்பதைக் கிளிக் செய்து, உங்கள் தள்ளுபடியில் சேர்க்க ஒரு குறிச்சொல்லைத் தேடவும் அல்லது உள்ளிடவும்.

  4. சேர்க்கைகள் பிரிவில், + ஐகானைக் கிளிக் செய்து, தயாரிப்புத் தள்ளுபடிகள் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

  5. ஒரு தயாரிப்புக்கு ஒன்று என்பதைக் கிளிக் செய்து, ஒரு தயாரிப்புக்கு ஒன்றுக்கும் மேற்பட்டவை என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

  6. குறிச்சொல்லிடப்பட்ட தள்ளுபடிகளுடன் ஒரே தயாரிப்பில் சேர் என்பதில் குறிச்சொற்களைத் தேர்ந்தெடு என்பதைக் கிளிக் செய்து, உங்கள் தயாரிப்புத் தள்ளுபடியுடன் சேர்க்க விரும்பும் பிற தயாரிப்புத் தள்ளுபடிகளிலிருந்து குறிச்சொற்களைத் தேர்ந்தெடுக்கவும்.

  7. சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.

  8. விருப்பத்தேர்வு: ஒரே தயாரிப்பில் நீங்கள் சேர்க்க விரும்பும் ஒவ்வொரு தயாரிப்புத் தள்ளுபடிக்கும் இதே படிகளைத் திரும்பச் செய்யவும்.

ஒரே வரிசை உருப்படியில் இரண்டு தயாரிப்புத் தள்ளுபடிகளைச் சேர்க்க, அவற்றின் குறிச்சொல் அமைவு ஒன்றுக்கொன்று தொடர்புடையதாக இருக்க வேண்டும். எடுத்துக்காட்டாக, தள்ளுபடி A என்பது promo எனக் குறிச்சொல்லிடப்பட்டு, clearance எனக் குறிச்சொல்லிடப்பட்ட தள்ளுபடிகளுடன் சேர்க்கப்படும். தள்ளுபடி B என்பது clearance எனக் குறிச்சொல்லிடப்பட்டு, promo எனக் குறிச்சொல்லிடப்பட்ட தள்ளுபடிகளுடன் சேர்க்கப்படும். இந்த அமைவின் மூலம், தள்ளுபடி A மற்றும் தள்ளுபடி B ஆகியவற்றை கார்ட்டில் ஒரே வரிசை உருப்படியில் சேர்க்கலாம்.

GraphQL Admin API மூலம் ஒரே வரிசை உருப்படியில் தயாரிப்புத் தள்ளுபடிகளைச் சேர்க்கும் வகையில் டெவெலப்பர்கள் உள்ளமைக்கலாம். எந்தெந்தத் தயாரிப்புத் தள்ளுபடிக் குறிச்சொற்களைச் சேர்க்க முடியும் என்பதைக் குறிப்பிட, discountCodeBasicCreate mutation போன்ற தள்ளுபடி மியூடேஷன்களையும், productDiscountsWithTagsOnSameCartLine புலத்தையும் பயன்படுத்தவும்.

தள்ளுபடி சேர்க்கைகளில் உள்ள சிக்கலைத் தீர்த்தல்

தள்ளுபடி சேர்க்கைகளில் உங்களுக்கு ஏதேனும் சிக்கல்கள் இருந்தால், பின்வரும் பொதுவான சிக்கல்களையும் தீர்வுகளையும் மதிப்பாய்வு செய்யவும்.

"உங்களின் தற்போதைய தள்ளுபடிகளுடன் தள்ளுபடியைப் பயன்படுத்த முடியவில்லை" என்ற பிழையின் சிக்கலைத் தீர்க்கவும்

வேறு எந்தத் தள்ளுபடியும் பயன்படுத்தப்படாதது போலத் தோன்றினாலும், செக்அவுட் செய்யும்போது வாடிக்கையாளருக்கு இந்தப் பிழை ஏற்பட்டால், பின்வரும் படிகளை முயன்று பார்க்கவும்:

  1. இரண்டு தள்ளுபடிகளும் சேர்க்கப்படும் வகையில் அமைக்கப்பட்டுள்ளதைச் சரிபார்க்கவும்: உங்கள் Shopify நிர்வாகியில் தள்ளுபடிகள் என்பதற்குச் சென்று, ஒவ்வொரு தள்ளுபடியையும் திறந்து, சேர்க்கைகள் பிரிவு மற்ற தள்ளுபடி வகையுடன் தள்ளுபடியைச் சேர்க்க அனுமதிக்கிறதா என்பதை உறுதிசெய்யவும்.
  2. செயலில் உள்ள தானியங்கு தள்ளுபடிகள் உள்ளதா எனச் சரிபார்க்கவும்: கார்ட்டில் தானியங்கு தள்ளுபடி பயன்பாட்டில் இருந்து அது தள்ளுபடிக் குறியீட்டுடன் முரண்படலாம். கார்ட்டில் உள்ள தயாரிப்புகளுக்கு ஏதேனும் தள்ளுபடி பொருந்துகிறதா என்பதைப் பார்க்க, உங்களின் செயலில் உள்ள தானியங்கு தள்ளுபடிகள மதிப்பாய்வு செய்யவும்.
  3. மூன்றாம் தரப்புச் செயலிகள் உள்ளனவா எனச் சரிபார்க்கவும்: செக்அவுட் செயல்பாட்டை மாற்றும் சில செயலிகள் தள்ளுபடி முரண்பாடுகளை ஏற்படுத்தலாம். தள்ளுபடி அல்லது செக்அவுட் தொடர்பான செயலிகளைத் தற்காலிகமாக நிறுவல் நீக்கி, சிக்கல் தீர்ந்துவிட்டதா எனச் சரிபார்க்கவும். தேவைப்பட்டால் பின்னர் செயலியை மீண்டும் நிறுவலாம். Functions மூலம் தள்ளுபடிகளை வழங்கும் செயலிகளும் தள்ளுபடிக் குறியீடுகளை நிராகரிக்கலாம். ஒரு செயலி குறியீட்டை நிராகரிக்கும்போது, செக்அவுட்டில் அந்தச் செயலியின் செய்தி வாடிக்கையாளருக்குக் காட்டப்படும்.
தள்ளுபடி சேர்க்கை விருப்பம் கிடைக்காததற்கான சிக்கலைத் தீர்க்கவும்

உங்கள் தள்ளுபடி அமைப்புகளில் உள்ள சேர்க்கைகள் பிரிவில், தயாரிப்புத் தள்ளுபடிகளுடன் ஆர்டர் தள்ளுபடிகளையோ பிற ஆர்டர் தள்ளுபடிகளுடன் ஆர்டர் தள்ளுபடிகளையோ சேர்க்கும் விருப்பங்கள் காட்டப்படவில்லை எனில், உங்கள் ஸ்டோர் பின்வரும் தேவைகளைப் பூர்த்திசெய்கிறதா எனச் சரிபார்க்கவும்:

  1. உங்கள் செக்அவுட் அமைவைச் சரிபார்க்கவும்: தயாரிப்புத் தள்ளுபடிகளுடன் ஆர்டர் தள்ளுபடிகளையோ பிற ஆர்டர் தள்ளுபடிகளுடன் ஆர்டர் தள்ளுபடிகளையோ சேர்க்க, உங்கள் ஸ்டோர் Checkout Extensibility என்பதைப் பயன்படுத்த வேண்டும், அதோடு அதில் எந்தவொரு checkout.liquid தனிப்பயனாக்கங்களும் இருக்கக் கூடாது. உங்கள் செக்அவுட் அமைப்புகளை மதிப்பாய்வு செய்யவும்.
  2. செயலி இணக்கத்தன்மையைச் சரிபார்: சில செயலிகள் தள்ளுபடி சேர்க்கைகளுடன் இணக்கமாக இருக்காது. நீங்கள் Licensify செயலியையோ செக்அவுட் நடத்தையை மாற்றியமைக்கும் வேறு ஏதேனும் செயலிகளையோ பயன்படுத்துகிறீர்களா என்பதைச் சரிபார்க்கவும்.
  3. தள்ளுபடி வகையை உறுதிப்படுத்து: எல்லா தள்ளுபடி வகைகளும் எல்லா சேர்க்கைகளையும் ஆதரிப்பதில்லை. எடுத்துக்காட்டாக, பிற தயாரிப்புத் தள்ளுபடிகளுடன் சேர்க்கப்படும்போது X-ஐ வாங்கி Y-ஐப் பெறுவதற்கான தள்ளுபடிகளுக்குக் கூடுதல் வரம்புகள் உள்ளன.

நீங்கள் எல்லா தேவைகளையும் பூர்த்தி செய்தும் சேர்க்கை விருப்பங்களை அணுக முடியவில்லை என்றால், Shopify ஆதரவைத் தொடர்புகொள்ளவும்.

தள்ளுபடியானது வேறு தள்ளுபடியால் மாற்றப்பட்டதைச் சரிசெய்

வாடிக்கையாளரின் தள்ளுபடிக் குறியீடு தானாகவே வேறு தள்ளுபடியாக மாற்றப்பட்டிருந்தால், பின்வரும் காரணங்களில் ஒன்று பொருந்தக்கூடும்:

  • சிறந்த தள்ளுபடி பயன்படுத்தப்பட்டது: ஒரே உருப்படிகளுக்குப் பல தள்ளுபடிகள் பொருந்தி அவற்றைச் சேர்க்க முடியாமல் போகும்போது, வாடிக்கையாளருக்கான சிறந்த தள்ளுபடியை Shopify தானாகவே பயன்படுத்தும். வாடிக்கையாளர்கள் அதிகபட்ச சேமிப்பைப் பெறுவதை உறுதிசெய்வதற்கு இது எதிர்பார்க்கப்படும் செயலாகும்.
  • ஒன்றிணைக்க முடியாத தள்ளுபடிகள்: தள்ளுபடிகள் ஒன்றோடொன்று சேர்க்கப்படும்படி அமைக்கப்படவில்லை என்றால், ஒன்றை மட்டுமே பயன்படுத்த முடியும். இரு தள்ளுபடிகளையும் பயன்படுத்த அனுமதிக்க, தகுந்த தள்ளுபடி வகுப்புகளுடன் சேர்க்கைகளை அனுமதிப்பதற்கு ஒவ்வொரு தள்ளுபடியையும் திருத்தவும்.
  • ஒரே மதிப்புள்ள தள்ளுபடிகள்: இரு தயாரிப்புத் தள்ளுபடிகள் ஒரே மதிப்பைக் கொண்டு, அவை இரண்டும் ஒரே உருப்படிகளுக்குப் பொருந்தினால், செக்அவுட் செயல்திறனுக்காக சிஸ்டம் ஒன்றை விட மற்றொன்றைத் தேர்ந்தெடுக்கக்கூடும். இது எதிர்பார்க்கப்படும் செயலாகும்.
தள்ளுபடிக் குறியீட்டுடன் தானியங்கு தள்ளுபடி பொருந்தாததைச் சரிசெய்

வாடிக்கையாளரின் தள்ளுபடிக் குறியீட்டுடன் தானியங்கு தள்ளுபடி பொருந்தவில்லை என்றால், பின்வரும் அமைப்புகளையும் வரம்புகளையும் சரிபார்க்கவும்:

  1. சேர்க்கை அமைப்புகளைச் சரிபார்: சேர்க்கைகள் அமைப்புகளில் தானியங்கு தள்ளுபடியும் தள்ளுபடிக் குறியீடும் ஒன்றோடொன்று சேரும்படி அமைக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதிசெய்யவும்.
  2. தள்ளுபடித் தகுதியைச் சரிபார்: கார்ட்டில் உள்ள எல்லா தயாரிப்புகளும் இரு தள்ளுபடிகளுக்குமான தேவைகளைப் பூர்த்தி செய்கிறதா என்பதை உறுதிப்படுத்தவும். ஒரு தயாரிப்பு தள்ளுபடிகளில் ஒன்றுக்குத் தகுதிபெறவில்லை என்றால், சேர்க்கை எதிர்பார்த்தபடி செயல்படாமல் போகலாம்.
  3. தள்ளுபடி வரம்புகளைச் சரிபார்: நீங்கள் அதிகபட்சமாக 25 செயலில் உள்ள தானியங்கு தள்ளுபடிகளையே வைத்திருக்க முடியும். நீங்கள் இந்த வரம்பை அடைந்துவிட்டால், சில தானியங்கு தள்ளுபடிகள் பொருந்தாமல் போகலாம். உங்களின் செயலில் உள்ள தானியங்கு தள்ளுபடிகளைச் சரிபார்த்து, இனி தேவையில்லாதவற்றை முடக்கவும்.
  4. தள்ளுபடிக் குறியீட்டு வரம்பைச் சரிபார்: வாடிக்கையாளர்கள் ஒரு ஆர்டருக்கு அதிகபட்சமாக 5 தயாரிப்பு அல்லது ஆர்டர் தள்ளுபடிக் குறியீடுகளையும் 1 ஷிப்பிங் தள்ளுபடிக் குறியீட்டையும் பயன்படுத்தலாம். இந்த வரம்பை அடைந்துவிட்டால், கூடுதல் குறியீடுகள் பொருந்தாது.
தயாரிப்புத் தள்ளுபடியை ஷிப்பிங் தள்ளுபடி மேலெழுதாததைச் சரிசெய்

கார்ட்டில் ஏற்கெனவே ஒரு தயாரிப்பு அல்லது ஆர்டர் தள்ளுபடி இருக்கும்போது ஷிப்பிங் தள்ளுபடியைப் பயன்படுத்த முடியாமல், வாடிக்கையாளர் "உங்களிடம் ஏற்கெனவே சிறந்த சேர்க்கை உள்ளது" என்பது போன்ற மெசேஜைப் பெற்றால், இது எதிர்பார்க்கப்படும் செயலாகும்.

தயாரிப்பு மற்றும் ஆர்டர் தள்ளுபடிகளையும் ஷிப்பிங் தள்ளுபடிகளையும் சேர்க்க முடியாதபோது, தயாரிப்பு, ஆர்டர் தள்ளுபடிகளுக்கே முன்னுரிமை அளிக்கப்படும். ஏனெனில், தள்ளுபடி செய்யப்பட்ட கார்ட் மதிப்பானது ஷிப்பிங் விருப்பங்களைக் கணக்கிடப் பயன்படுத்தப்படுகிறது, மேலும் ஷிப்பிங் தள்ளுபடியைப் பயன்படுத்த தயாரிப்புத் தள்ளுபடியை அகற்றுவது கிடைக்கும் ஷிப்பிங் கட்டணங்களைப் பாதிக்கலாம்.

இந்தச் சிக்கலைத் தீர்க்க, பின்வரும் விருப்பங்களில் ஏதேனும் ஒன்றை முயன்று பார்க்கவும்:

  1. சேர்க்க வேண்டிய தள்ளுபடிகளை அமை: தயாரிப்பு அல்லது ஆர்டர் தள்ளுபடியையும் ஷிப்பிங் தள்ளுபடியையும் ஒன்றிணைக்க அவற்றை அனுமதிக்க, திருத்தவும். தள்ளுபடிகள் என்பதற்குச் சென்று ஒவ்வொரு தள்ளுபடியையும் திறந்து, சேர்க்கைகள் பிரிவில் பொருத்தமான தள்ளுபடி வகுப்புகளைத் தேர்ந்தெடுக்கவும்.
  2. ஒருங்கிணைந்த தள்ளுபடியை உருவாக்கு: வாடிக்கையாளர்கள் எப்போதும் இரண்டு தள்ளுபடிகளையும் பெற வேண்டும் என நீங்கள் விரும்பினால், பல சேமிப்புகளுடன் ஒற்றைத் தள்ளுபடியை உருவாக்க ஒரு செயலியைப் பயன்படுத்துவதைக் கருத்தில் கொள்ளவும்.
X-ஐ வாங்கி Y-ஐப் பெறும் தள்ளுபடியில் உள்ள தயாரிப்புகள் கூடுதல் தள்ளுபடிகளைப் பெறாததைச் சரிசெய்

X-ஐ வாங்கி Y-ஐப் பெறுவதற்கான தள்ளுபடியின் ஒரு பகுதியாக உள்ள தயாரிப்புகளுக்குக் கூடுதல் தயாரிப்புத் தள்ளுபடிகள் கிடைக்காது. ஒரே உருப்படிகளின் மீது தள்ளுபடிகள் எதிர்பாராதவிதமாகக் குவிவதைத் தடுக்கவே இவ்வாறு செய்யப்படுகிறது.

வாடிக்கையாளர் பயன்படுத்தும் தள்ளுபடிக் குறியீடு, செயலில் உள்ள “X வாங்கினால் Y கிடைக்கும்” தள்ளுபடியில் அடங்கும் தயாரிப்புகளுக்குப் பொருந்தினால், கார்ட்டில் அவருக்கு ஒட்டுமொத்தமாக அதிகப் பலன் அளிக்கும் தள்ளுபடி அல்லது தள்ளுபடிகளின் சேர்க்கை பயன்படுத்தப்படும்.

இந்த வரம்பைச் சரிசெய்ய, பின்வரும் அணுகுமுறைகளைக் கவனத்தில் கொள்ளவும்:

  • உங்கள் X-ஐ வாங்கி Y-ஐப் பெறுவதற்கான தள்ளுபடியும் பிற தயாரிப்புத் தள்ளுபடிகளும் வெவ்வேறு தயாரிப்புகள் அல்லது சேகரிப்புகளுக்குப் பொருந்துவதை உறுதிசெய்யவும்.
  • X-ஐ வாங்கி Y-ஐப் பெறுவதற்கான விளம்பரத்தின் ஒரு பகுதியாக எந்தெந்தத் தயாரிப்புகள் உள்ளன என்பதை வாடிக்கையாளர்களுக்குத் தெளிவாகத் தெரிவிக்கவும்.
  • தயாரிப்புத் தள்ளுபடிகளுக்குப் பதிலாக ஆர்டர் தள்ளுபடிகளைப் பயன்படுத்துவதைக் கருத்தில் கொள்ளவும், தகுதிபெறும் ஸ்டோர்களில் இவை X-ஐ வாங்கி Y-ஐப் பெறுவதற்கான தள்ளுபடிகளுடன் இணையலாம்.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

தள்ளுபடி சேர்க்கைகள் தொடர்பான பின்வரும் பொதுவான கேள்விகளைச் சரிபார்க்கவும்.

ஒரே கார்ட்டில் தானியங்கு தள்ளுபடியையும் தள்ளுபடிக் குறியீட்டையும் நான் பயன்படுத்த முடியுமா?

ஆம், ஒவ்வொரு தள்ளுபடியும் மற்ற தள்ளுபடியின் வகுப்புடன் சேரும்படி அமைக்கப்பட்டிருக்கும் வரை, நீங்கள் ஒரே கார்ட்டில் தானியங்கு தள்ளுபடிகளையும் தள்ளுபடிக் குறியீடுகளையும் பயன்படுத்தலாம். இருப்பினும், தள்ளுபடிகள் வெவ்வேறு வகுப்புகளில் இருந்தாலன்றி ஒரே உருப்படிக்குப் பல தள்ளுபடிகளை உங்களால் பயன்படுத்த முடியாது. எடுத்துக்காட்டாக, ஒரு தயாரிப்பைக் கொண்ட ஒரு ஆர்டருக்கு, தயாரிப்புத் தள்ளுபடியையும் ஆர்டர் தள்ளுபடியையும் நீங்கள் பயன்படுத்தலாம்.

செக்அவுட்டில் பல தள்ளுபடிகள் பொருந்தும்போது என்ன நடக்கும்?

பல தள்ளுபடிகள் பொருந்தும்போது, அவை பின்வரும் வரிசையில் கணக்கிடப்படும்:

  1. தயாரிப்புத் தள்ளுபடிகள் முதலில் தனிப்பட்ட உருப்படிகளுக்குப் பொருந்தும்.
  2. திருத்தப்பட்ட துணை மொத்தத்திற்கு ஆர்டர் தள்ளுபடிகள் பொருந்தும் (தயாரிப்புத் தள்ளுபடிகளுக்குப் பிறகு).
  3. ஷிப்பிங் தள்ளுபடிகள் கடைசியாகப் பொருந்தும்.

தள்ளுபடிகள் சேர முடியுமெனில், தகுதிபெறும் தள்ளுபடிகள் அனைத்தும் பொருந்தும். தள்ளுபடிகளைச் சேர்க்க முடியாவிட்டால், வாடிக்கையாளருக்கான சிறந்த தள்ளுபடி அல்லது தள்ளுபடிகளின் சேர்க்கை தானாகவே தேர்ந்தெடுக்கப்படும். சேர்க்கக்கூடிய தள்ளுபடிகள் எப்படிக் கணக்கிடப்படுகின்றன என்பது குறித்து மேலும் அறிக.

தயாரிப்புத் தள்ளுபடிகளை ஆர்டர் தள்ளுபடிகளுடன் சேர்க்கும் விருப்பம் எனக்கு ஏன் இல்லை?

தயாரிப்புத் தள்ளுபடிகளை ஆர்டர் தள்ளுபடிகளுடன் சேர்ப்பது அல்லது ஆர்டர் தள்ளுபடிகளைப் பிற ஆர்டர் தள்ளுபடிகளுடன் சேர்ப்பது ஆகிய வசதிகள், குறிப்பிட்ட தகுதித் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வணிகர்களுக்கு மட்டுமே கிடைக்கும். இந்தத் தள்ளுபடி சேர்க்கைகளுக்கு உங்கள் ஸ்டோர் தகுதிபெற்றுள்ளதா என்பதை உறுதிப்படுத்த, தகுதித் தேவைகளைச் சரிபார்க்கவும்.

நான் உருவாக்கும் தள்ளுபடிகள் தானாகவே சேர்க்கப்படுமா?

இல்லை, தள்ளுபடிகள் தானாகவே சேர்க்கப்படுவதில்லை. ஒவ்வொரு தள்ளுபடியின் சேர்க்கை அமைப்புகளையும் நீங்கள் மேனுவலாகமைக்க வேண்டும். நீங்கள் தள்ளுபடியை உருவாக்கும்போது அல்லது திருத்தும்போது, அந்தத் தள்ளுபடியை எந்தெந்தத் தள்ளுபடி வகுப்புகளுடன் சேர்க்கலாம் என்பதைத் தேர்ந்தெடுக்க சேர்க்கைகள் பிரிவைப் பயன்படுத்தவும்.

மூன்றாம் தரப்புச் செயலிகள் மூலம் உருவாக்கப்பட்ட தள்ளுபடிகளை என்னால் சேர்க்க முடியுமா?

இது தள்ளுபடி சேர்க்கைகளை ஆதரிக்கும் வகையில் செயலியை உருவாக்குபவர் தமது செயலியைப் புதுப்பித்துள்ளாரா என்பதைப் பொறுத்தது. தள்ளுபடி சேர்க்கைகள் API உடன் இணைந்து செயல்பட, செயலியை உருவாக்குபவர்கள் தமது செயலிகளைப் புதுப்பிக்க வேண்டும். செயலியில் உருவாக்கப்பட்ட தள்ளுபடிகளைச் சேர்ப்பதில் நீங்கள் சிக்கல்களைச் சந்தித்தால், ஆதரவுக்காகச் செயலியை உருவாக்குபவரைத் தொடர்புகொள்ளவும்.

சந்தா ஆர்டர்களுக்கு என்னால் தள்ளுபடிகளைப் பயன்படுத்த முடியுமா?

ஆம், சந்தாக் கொள்முதல்களுக்கு உங்களால் தள்ளுபடிகளைப் பயன்படுத்த முடியும். ஒரு ஆர்டரில் சந்தாத் தயாரிப்புகளும் ஒரு முறை வாங்கும் தயாரிப்புகளும் இருந்தால், அவற்றை நீங்கள் தனித்தனி வரிசை உருப்படிகளாகக் கருதுவதால், ஒவ்வொன்றுக்கும் வெவ்வேறு தள்ளுபடிகளைப் பயன்படுத்தலாம். சந்தாத் தள்ளுபடிகள் குறித்து மேலும் அறிக.

ஷிப்பிங் தள்ளுபடிகளைப் பிற ஷிப்பிங் தள்ளுபடிகளுடன் ஏன் என்னால் சேர்க்க முடியாது?

ஷிப்பிங் தள்ளுபடிகளை ஒன்றோடொன்று சேர்க்க முடியாது, ஏனெனில் Shopify-இன் ஷிப்பிங் தள்ளுபடிகள் முழு ஷிப்பிங் கட்டணத்திற்கும் பொருந்தும். ஒரே கட்டணத்தில் பல ஷிப்பிங் தள்ளுபடிகயைக் குவிப்பது ஆதரிக்கப்படுவதில்லை. நீங்கள் ஷிப்பிங் தள்ளுபடிகளைத் தயாரிப்பு அல்லது ஆர்டர் தள்ளுபடிகளுடன் சேர்க்கலாம், ஆனால் ஒரு ஆர்டருக்கு ஒரு ஷிப்பிங் தள்ளுபடி மட்டுமே பொருந்தும்.

ஒருங்கிணைந்த தள்ளுபடிகளுக்கான எடுத்துக்காட்டுகள்

செக்அவுட்டில் தள்ளுபடி வகைகளின் வெவ்வேறு சேர்க்கைகள் எவ்வாறு சேரும் என்பதற்கான எடுத்துக்காட்டுகள் பின்வருமாறு:

பல நிலையான தொகைத் தயாரிப்புத் தள்ளுபடிகள் மற்றும் இலவச ஷிப்பிங் தள்ளுபடி

ஒரு வணிகரிடம் பேண்ட்களுக்கு $20 USD தள்ளுபடியை வழங்கும் 20offPants தயாரிப்புத் தள்ளுபடிக் குறியீடும், ஷர்ட்டுகளுக்கு $10 USD தள்ளுபடியை வழங்கும் 10offShirts தயாரிப்புத் தள்ளுபடியும் உள்ளது. $100 USD-க்கு மேலான அனைத்துக் கொள்முதல்களுக்கும் தானாகவே இலவச ஷிப்பிங்கை வழங்கும் Freeship100 என்ற தானியங்கு இலவச ஷிப்பிங் தள்ளுபடியும் அவர்களிடம் உள்ளது.

வாடிக்கையாளரின் முகவரிக்கு வழக்கமான ஷிப்பிங் கட்டணம் $20 USD ஆகும், ஆனால் $100 USD-க்கு மேலான கார்ட்களுக்கு தானியங்கு இலவசத் தள்ளுபடி செயல்பாட்டில் உள்ளதால் ஷிப்பிங் இலவசம்.

வாடிக்கையாளரின் கார்டில் பின்வரும் விவரங்கள் இருக்கும்.

பல தயாரிப்புத் தள்ளுபடிகள் மற்றும் இலவச ஷிப்பிங் தள்ளுபடி உள்ள கார்ட் உள்ளடக்கங்களுக்கான எடுத்துக்காட்டு.
தள்ளுபடிகளுக்கு முன் கார்ட்தள்ளுபடிகள்தள்ளுபடிகளுக்குப் பின் கார்ட்
பேண்ட்கள்: $100 USD
ஷர்ட்டுகள்: $50 USD
பூட்ஸ்: $200 USD
20offPants: எந்தவொரு பேண்டுக்கும் $20 USD தள்ளுபடி
10offShirts: எந்தவொரு ஷர்ட்டுக்கும் $10 USD தள்ளுபடி
பேண்ட்கள்: $80 USD
ஷர்ட்டுகள்: $40 USD
பூட்ஸ்: $200 USD
துணை மொத்தம்: $350 USD துணை மொத்தம்: $320 USD
ஷிப்பிங்: $20 USDFreeship100: $100 USD-க்கு மேலான எந்தவொரு ஆர்டருக்கும் இலவச ஷிப்பிங்ஷிப்பிங்: இலவசம்
மொத்தம்: $370 USD மொத்தம்: $320 USD

நிலையான தொகைத் தயாரிப்புத் தள்ளுபடி மற்றும் சதவீத ஆர்டர் தள்ளுபடி

வணிகர் ஒருவரிடம் பேண்ட்களுக்கு நிலையான $20 USD தள்ளுபடியை வழங்கும் 20offPants தயாரிப்புத் தள்ளுபடிக் குறியீடும், ஆர்டருக்கு 10% தள்ளுபடியை வழங்கும் 10offOrder ஆர்டர் தள்ளுபடிக் குறியீடும் உள்ளது.

வாடிக்கையாளரின் முகவரிக்கு ஷிப்பிங் கட்டணம் $20 USD ஆகும்.

வாடிக்கையாளரின் கார்டில் பின்வரும் விவரங்கள் இருக்கும்.

நிலையான தொகைத் தயாரிப்புத் தள்ளுபடி மற்றும் சதவீத ஆர்டர் தள்ளுபடி ஆகியவற்றைக் கொண்ட கார்ட்டுக்கான எடுத்துக்காட்டு.
தள்ளுபடிகளுக்கு முன் கார்ட்தள்ளுபடிகள்தள்ளுபடிகளுக்குப் பின் கார்ட்
பேண்ட்கள்: $100 USD
ஷர்ட்டுகள்: $50 USD
பூட்ஸ்: $200 USD
20offPants: எந்தவொரு பேண்டுக்கும் $20 USD தள்ளுபடிபேண்ட்கள்: $80 USD
ஷர்ட்டுகள்: $50 USD
பூட்ஸ்: $200 USD
துணை மொத்தம்: $350 USD10offOrder: ஆர்டருக்கு 10% தள்ளுபடிதுணை மொத்தம்: $297 USD
ஷிப்பிங்: $20 USD ஷிப்பிங்: $20 USD
மொத்தம்: $370 USD மொத்தம்: $317 USD

பல்வேறு சதவீத ஆர்டர் தள்ளுபடிகள்

வாடிக்கையாளர்களின் முதல் ஆர்டருக்கு 10% தள்ளுபடியை வழங்கும் 10offOrder தள்ளுபடிக் குறியீடும், $200 USD-க்கு மேல் துணை மொத்தத்தைக் கொண்டுள்ள ஆர்டருக்கு 15% தள்ளுபடியை வழங்கும் 15offOver200 தானியங்கு தள்ளுபடியும் வணிகர் ஒருவரிடம் உள்ளது.

ஒவ்வொன்றும் சதவீதத் தள்ளுபடியை வழங்கக்கூடிய இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட ஆர்டர் தள்ளுபடிகள் ஒரே ஆர்டருக்குப் பயன்படுத்தப்பட்டால், ஒவ்வொரு சதவீதத் தள்ளுபடியும் அசல் துணை மொத்தத்தின் அடிப்படையில் கணக்கிடப்படும். பின்வரும் எடுத்துக்காட்டில், 15% தள்ளுபடி மற்றும் 10% தள்ளுபடி ஆகிய இரண்டும் $350 USD துணை மொத்தத்திற்குப் பயன்படுத்தப்பட்டுள்ளன.

வாடிக்கையாளரின் முகவரிக்கு ஷிப்பிங் கட்டணம் $20 USD ஆகும்.

வாடிக்கையாளரின் கார்டில் பின்வரும் விவரங்கள் இருக்கும்.

பல சதவீத ஆர்டர் தள்ளுபடிகளைக் கொண்ட கார்ட் உள்ளடக்கங்களுக்கான எடுத்துக்காட்டு.
தள்ளுபடிகளுக்கு முன் கார்ட்தள்ளுபடிகள்தள்ளுபடிகளுக்குப் பின் கார்ட்
பேண்ட்கள்: $100 USD
ஷர்ட்டுகள்: $50 USD
பூட்ஸ்: $200 USD
பேண்ட்கள்: $100 USD
ஷர்ட்டுகள்: $50 USD
பூட்ஸ்: $200 USD
துணை மொத்தம்: $350 USD10offOrder: ஆர்டருக்கு 10% தள்ளுபடி
15offOver200: $200 USD-க்கு மேலான ஆர்டர்களுக்கு 15% தள்ளுபடி
துணை மொத்தம்: $262.50 USD
ஷிப்பிங்: $20 USD ஷிப்பிங்: $20 USD
மொத்தம்: $370 USD மொத்தம்: $282.50 USD

சதவீத ஆர்டர் தள்ளுபடி மற்றும் நிலையான தொகை ஆர்டர் தள்ளுபடி

வாடிக்கையாளரின் முதல் ஆர்டருக்கு 10% தள்ளுபடியை வழங்கும் 10offOrder தள்ளுபடிக் குறியீடும், $200 USD-க்கு மேல் துணை மொத்தத்தைக் கொண்டுள்ள ஆர்டருக்கு $20 USD தள்ளுபடியை வழங்கும் 20offOrder தானியங்கு தள்ளுபடியும் வணிகர் ஒருவரிடம் உள்ளது.

சதவீதத் தள்ளுபடியை வழங்கும் ஆர்டர் தள்ளுபடி மற்றும் நிலையான தொகைத் தள்ளுபடியை வழங்கும் ஆர்டர் தள்ளுபடி ஆகியவை ஒரே ஆர்டருக்குப் பயன்படுத்தப்பட்டால், சதவீத ஆர்டர் தள்ளுபடி முதலில் பயன்படுத்தப்படும், அதனைத் தொடர்ந்து நிலையான தொகை ஆர்டர் தள்ளுபடி பயன்படுத்தப்படும்.

இந்தக் கார்ட்டுக்கு, $350 USD துணை மொத்தத்திற்கு 10% ஆர்டர் தள்ளுபடி பயன்படுத்தப்படுகிறது, அதன்பிறகு புதிய துணை மொத்தத்திற்கு நிலையான $20 USD ஆர்டர் தள்ளுபடி பயன்படுத்தப்படுகிறது.

வாடிக்கையாளரின் முகவரிக்கு ஷிப்பிங் கட்டணம் $20 USD ஆகும்.

வாடிக்கையாளரின் கார்டில் பின்வரும் விவரங்கள் இருக்கும்.

சதவீத ஆர்டர் தள்ளுபடி மற்றும் நிலையான தொகை ஆர்டர் தள்ளுபடியைக் கொண்ட கார்ட் உள்ளடக்கங்களுக்கான எடுத்துக்காட்டு.
தள்ளுபடிகளுக்கு முன் கார்ட்தள்ளுபடிகள்தள்ளுபடிகளுக்குப் பின் கார்ட்
பேண்ட்கள்: $100 USD
ஷர்ட்டுகள்: $50 USD
பூட்ஸ்: $200 USD
பேண்ட்கள்: $100 USD
ஷர்ட்டுகள்: $50 USD
பூட்ஸ்: $200 USD
துணை மொத்தம்: $350 USD10offOrder: ஆர்டருக்கு 10% தள்ளுபடி
20offOver200: $200 USD-க்கு மேலான ஆர்டர்களுக்கு $20 USD தள்ளுபடி
துணை மொத்தம்: $295 USD
ஷிப்பிங்: $20 USD ஷிப்பிங்: $20 USD
மொத்தம்: $370 USD மொத்தம்: $315 USD

பல ஆர்டர் தள்ளுபடிகள், பல தயாரிப்புத் தள்ளுபடிகள் மற்றும் ஒரு இலவச ஷிப்பிங் தள்ளுபடி

ஒரு வணிகர் பின்வரும் தள்ளுபடிகளைக் கொண்டுள்ளார்:

  • வாடிக்கையாளரின் முதல் ஆர்டருக்கு 10% தள்ளுபடியை வழங்கும் 10offOrder தள்ளுபடிக் குறியீடு
  • $200 USD-க்கு மேல் துணை மொத்தத்தைக் கொண்டுள்ள ஆர்டருக்கு 15% தள்ளுபடியை வழங்கும் 15offOver200 தானியங்கு தள்ளுபடி
  • பேண்ட்களுக்கு நிலையான $20 USD தள்ளுபடியை வழங்கும் 20offPants தயாரிப்புத் தள்ளுபடிக் குறியீடு
  • பூட்ஸுக்கு 10% தள்ளுபடியை வழங்கும் 10offBoots தள்ளுபடிக் குறியீடு
  • $100 USD-க்கு மேலான அனைத்துக் கொள்முதல்களுக்கும் இலவச ஷிப்பிங்கை வழங்கும் Freeship100 தானியங்கு இலவச ஷிப்பிங் தள்ளுபடி

தயாரிப்புத் தள்ளுபடிக் குறியீடுகள் முதலில் பயன்படுத்தப்படுகின்றன, பின்னர் ஆர்டர் தள்ளுபடிக் குறியீடுகள் துணை மொத்தத்திற்குப் பயன்படுத்தப்படுகின்றன.

வாடிக்கையாளரின் முகவரிக்கு வழக்கமான ஷிப்பிங் கட்டணம் $20 USD ஆகும், ஆனால் $100 USD-க்கு மேலான கார்ட்களுக்கு தானியங்கு இலவசத் தள்ளுபடி செயல்பாட்டில் உள்ளதால் ஷிப்பிங் இலவசம்.

வாடிக்கையாளரின் கார்டில் பின்வரும் விவரங்கள் இருக்கும்.

பல ஆர்டர் தள்ளுபடிகள், பல தயாரிப்புத் தள்ளுபடிகள் மற்றும் இலவச ஷிப்பிங் தள்ளுபடியைக் கொண்ட கார்ட் உள்ளடக்கங்களுக்கான எடுத்துக்காட்டு.
தள்ளுபடிகளுக்கு முன் கார்ட்தள்ளுபடிகள்தள்ளுபடிகளுக்குப் பின் கார்ட்
பேண்ட்கள்: $100 USD
ஷர்ட்டுகள்: $50 USD
பூட்ஸ்: $200 USD
20offPants: எந்தவொரு பேண்டுக்கும் $20 USD தள்ளுபடி
10offBoots: எந்தவொரு பூட்ஸுக்கும் 10% தள்ளுபடி
பேண்ட்கள்: $80 USD
ஷர்ட்டுகள்: $50 USD
பூட்ஸ்: $180 USD
துணை மொத்தம்: $350 USD10offOrder: ஆர்டருக்கு 10% தள்ளுபடி
15offOver200: $200 USD-க்கு மேலான ஆர்டர்களுக்கு 15% தள்ளுபடி
துணை மொத்தம்: $232.50 USD
ஷிப்பிங்: $20 USDFreeship100: $100 USD-க்கு மேலான எந்தவொரு ஆர்டருக்கும் இலவச ஷிப்பிங்ஷிப்பிங்: இலவசம்
மொத்தம்: $370 USD மொத்தம்: $232.50 USD

நிலையான தொகைத் தயாரிப்புத் தள்ளுபடி மற்றும் சதவீதத் தயாரிப்புத் தள்ளுபடி (Shopify Plus மட்டும், ஒரே வரிசை உருப்படியில் தயாரிப்புத் தள்ளுபடிகளை இணைப்பது)

பேண்ட்களுக்கு நிலையான $20 USD தள்ளுபடியை வழங்கும் 20offPants தயாரிப்புத் தள்ளுபடிக் குறியீடும், அனைத்து ஆடை வகைகளுக்கும் 10% தள்ளுபடியை வழங்கும் 10offClothing தயாரிப்புத் தள்ளுபடிக் குறியீடும் வணிகர் ஒருவரிடம் உள்ளது. வாடிக்கையாளருக்குச் சிறந்த சலுகையை வழங்குவதற்காக, நிலையான தொகைத் தள்ளுபடிகளுக்கு முன்பாக சதவீதத் தள்ளுபடிகள் பயன்படுத்தப்படுகின்றன.

வாடிக்கையாளரின் முகவரிக்கு ஷிப்பிங் கட்டணம் $20 USD ஆகும்.

வாடிக்கையாளரின் கார்டில் பின்வரும் விவரங்கள் இருக்கும்.

ஒரே வரிசை உருப்படிக்குப் பயன்படுத்தப்பட்ட சதவீதத் தயாரிப்புத் தள்ளுபடி மற்றும் நிலையான தொகைத் தயாரிப்புத் தள்ளுபடியைக் கொண்ட கார்ட் உள்ளடக்கங்களுக்கான எடுத்துக்காட்டு.
தள்ளுபடிகளுக்கு முன் கார்ட்தள்ளுபடிகள்தள்ளுபடிகளுக்குப் பின் கார்ட்
பேண்ட்கள்: $100 USD
ஷர்ட்டுகள்: $50 USD
பூட்ஸ்: $200 USD
10offClothing: அனைத்து ஆடை வகைகளுக்கும் 10% தள்ளுபடிபேண்ட்: $90 USD
சட்டைகள்: $45 USD
பூட்ஸ்: $200 USD
20offPants: பேண்ட்டுகளுக்கு $20 USD தள்ளுபடி (ஏற்கனவே தள்ளுபடி செய்யப்பட்ட $90 USD இல் பயன்படுத்தப்பட்டது)பேண்ட்: $70 USD
சட்டைகள்: $45 USD
பூட்ஸ்: $200 USD
துணை மொத்தம்: $350 USD துணை மொத்தம்: $315 USD
ஷிப்பிங்: $20 USD ஷிப்பிங்: $20 USD
மொத்தம்: $370 USD மொத்தம்: $335 USD

தள்ளுபடி சேர்க்கைகள் குறித்து Shopify ஆதரவைத் தொடர்புகொள்ளும் முன்

Shopify ஆதரவைத் தொடர்புகொள்ளும் முன், உங்கள் சிக்கலை விரைவாகத் தீர்க்க பின்வரும் தகவல்களைச் சேகரித்து வைத்திருக்கவும்:

  • பயன்படுத்தப்படும் தள்ளுபடிக் குறியீடுகள் அல்லது தானியங்கு தள்ளுபடிகளுக்கான பெயர்கள்
  • ஒவ்வொரு தள்ளுபடிக்கான சேர்க்கைகள் அமைப்புகளின் திரைப்பிடிப்புகள்
  • பொருந்தினால், செக்அவுட்டில் காட்டப்படும் குறிப்பிட்ட பிழைச் செய்தி
  • கிடைத்தால், சிக்கல் ஏற்பட்ட ஒரு குறிப்பிட்ட ஆர்டர் எண்ணின் உதாரணம்
  • தள்ளுபடிகளால் பாதிக்கப்படும் தயாரிப்புகள் அல்லது சேகரிப்புகள்
  • இந்தச் சிக்கல் குறிப்பிட்ட வாடிக்கையாளர்களுக்கு ஏற்படுகிறதா அல்லது அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் ஏற்படுகிறதா என்ற விவரம்
  • உங்கள் தள்ளுபடிகள் அல்லது செக்அவுட் அமைப்புகளில் செய்த ஏதேனும் சமீபத்திய மாற்றங்கள்
  • சிக்கல் தீர்த்தல் பகுதியைப் பார்த்து நீங்கள் ஏற்கனவே முயன்ற படிகள்