கிஃப்ட் கார்டில் தள்ளுபடியைச் சேர்த்தல்
கிஃப்ட் கார்டு தயாரிப்புகளுக்கான தள்ளுபடிக் குறியீடுகளை நீங்கள் உருவாக்கலாம் அல்லது தானியங்கு தள்ளுபடிகளையும் பயன்படுத்தலாம்.
குறிப்பிட்ட தொகை அல்லது சதவீதத்தின் அடிப்படையில் கிஃப்ட் கார்டு தயாரிப்பின் விலையைக் குறைக்க அல்லது Xஐ வாங்கினால் Yஐப் பெறலாம் (buy X get Y) என்ற தள்ளுபடியைக் கொண்டு வாங்கும் பொருளுடன் சேர்த்து இலவச கிஃப்ட் கார்டு தயாரிப்பையும் வழங்க ஒரு தள்ளுபடியைப் பயன்படுத்துங்கள்.
இந்தப் பக்கத்தில்
கிஃப்ட் கார்டுகளுக்குத் தள்ளுபடியளிப்பதற்கான பரிசீலனைகள்
கிஃப்ட் கார்டு தள்ளுபடியைச் சேர்க்கும் முன், பின்வரும் பரிசீலனைகளைச் சரிபார்க்கவும்:
- குறிப்பிட்ட கிஃப்ட் கார்டு தயாரிப்புகளுக்கு அல்லது கிஃப்ட் கார்டு தயாரிப்பு மாறுபாடுகளுக்குப் பொருந்தும் வகையில் தள்ளுபடிக் குறியீடுகளையோ தானியங்கு தள்ளுபடிகளையோ நீங்கள் உருவாக்கலாம்.
- கிஃப்ட் கார்டு தயாரிப்பு அல்லது மாறுபாட்டின் மதிப்பானது, எதிர்காலக் கொள்முதலுக்குப் பயன்படுத்தக்கூடிய தொகையாகும். எடுத்துக்காட்டாக, நீங்கள்
$100 மதிப்புள்ள கிஃப்ட் கார்டை $80-க்குப் பெறுங்கள்"என்ற தள்ளுபடியை உருவாக்குகிறீர்கள். இதன் மூலம் $100 USD மதிப்புள்ள கிஃப்ட் கார்டு தயாரிப்பின் விலையில் $20 USD தள்ளுபடி கிடைக்கிறது. உங்கள் வாடிக்கையாளர் கிஃப்ட் கார்டுக்கு $80 USD செலுத்துகிறார். இருப்பினும் அந்த கிஃப்ட் கார்டை அவர் $100 USD மதிப்புக்கு மீட்டுக்கொள்ளலாம். - குறிப்பிட்ட சேகரிப்புகளுக்குப் பொருந்தும் தள்ளுபடிகள், அந்தச் சேகரிப்பிற்குள் உள்ள கிஃப்ட் கார்டு தயாரிப்புகளுக்குப் பொருந்தாது.
தள்ளுபடிகளை உருவாக்குவது குறித்து மேலும் அறிக.