தள்ளுபடி முறைகள்

ஈர்க்கக்கூடிய விளம்பரங்களை உருவாக்க நீங்கள் தள்ளுபடிக் குறியீடுகள் மற்றும் தானியங்கு தள்ளுபடிகள் ஆகிய இரண்டையுமே பயன்படுத்தலாம். தள்ளுபடிக் குறியீடுகள் மற்றும் தானியங்கு தள்ளுபடிகளின் பலன்கள் மற்றும் அபாயங்களைப் புரிந்துகொள்வது, உங்கள் வணிக இலக்குகளுக்கான சரியான தள்ளுபடி முறையைத் தேர்ந்தெடுக்க உதவும்.

தகுதி நிபந்தனைகள் பூர்த்தியாகும்போது கார்ட்டிலும் செக்அவுட்டிலும் தானாகவே பயன்படுத்தப்படும் தள்ளுபடிகளே தானியங்கு தள்ளுபடிகள் ஆகும். தளம் முழுவதுமான விற்பனைகள், குறிப்பிட்ட சேகரிப்புகளுக்கான விளம்பரங்கள் அல்லது மொத்தக் கொள்முதல்களுக்கு இவை பொதுவாகப் பயன்படுத்தப்படும். தானியங்கு தள்ளுபடிகள் உங்கள் செக்அவுட்டை எளிமையாக்கவும் அதிக மாற்று வீதங்கள் மற்றும் ஆர்டர் மதிப்புகளை ஊக்குவிக்கவும் உதவலாம், ஆனால் வாடிக்கையாளர்களுக்குத் தங்களுக்கு ஒரு தள்ளுபடி கிடைக்கிறது என்பது தெரியாமல் போகலாம் அல்லது மிக அதிகத் தள்ளுபடியைப் பெறலாம்.

தள்ளுபடி முறைகளில் மிகவும் பொதுவான வகை தள்ளுபடிக் குறியீடுகள் ஆகும். தள்ளுபடியைப் பெற, வாடிக்கையாளர்கள் செக்அவுட்டில் ஒரு குறிப்பிட்ட குறியீட்டை உள்ளிடுவார்கள். மின்னஞ்சல் கேம்பெயின்கள் அல்லது கூட்டாண்மைகள் போன்ற குறிப்பிட்ட சந்தைப்படுத்தல் உத்திகளுக்கு இவை பொதுவாகப் பயன்படுத்தப்படும். தள்ளுபடிக் குறியீடுகள் ஈடுபாட்டை அதிகரிக்கவும், பிரத்தியேகமான உணர்வையும், அவசர உணர்வையும் தூண்டக்கூடும், அதே நேரத்தில், மறந்துபோன தள்ளுபடிக் குறியீடுகளால் கார்ட்டைக் கைவிடும் சூழலும் ஏற்படலாம்.

இந்த இரண்டு முறைகளும் தள்ளுபடிகளைப் பல்வேறு வழிகளில் வழங்க உங்களை அனுமதிக்கின்றன:

  • உங்களின் தற்போதைய வாடிக்கையாளர்களில் ஒரு குறிப்பிட்ட தரப்பினருக்கு நீங்கள் ஒரு மின்னஞ்சல் கேம்பெயினை அனுப்ப விரும்பினால், அவர்கள் செக்அவுட்டில் உள்ளிடுவதற்கான ஒரு தள்ளுபடிக் குறியீட்டை அதில் சேர்க்கலாம்.
  • ஒரு குறிப்பிட்ட பண்டிகைக் காலத்தில் ஒவ்வொரு ஆர்டருக்கும் இலவச ஷிப்பிங் விளம்பரத்தை நீங்கள் இயக்க விரும்பினால், தடையற்ற தள்ளுபடி அனுபவத்தை வழங்க அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் ஒரு தானியங்கு தள்ளுபடியைச் சேர்க்கலாம்.

தள்ளுபடி முறைகள் அனைத்துத் தள்ளுபடி வகைகளுக்கும் பொருந்தும். தள்ளுபடி வகைகள் குறித்து மேலும் அறிக.

இந்தப் பிரிவில் இருப்பவை