தானியங்கு தள்ளுபடிகள்
தானியங்கு தள்ளுபடிகள் என்பவை, தகுதிக்கான நிபந்தனைகள் பூர்த்தியாகும்போது கார்ட்டிலும் செக்அவுட்டிலும் தானாகவே பயன்படுத்தப்படும் தள்ளுபடிகளாகும். அவை பொதுவாக பின்வரும் வழிகளில் பயன்படுத்தப்படுகின்றன:
- தளம் முழுவதுமான விற்பனைக்கு
- குறிப்பிட்ட சேகரிப்புகளின் புரொமோஷன்களுக்கு
- மொத்தக் கொள்முதல்களுக்கு
உங்கள் செக்அவுட் செயல்முறையை எளிதாக்கவும் அதிக மாற்று வீதங்கள் மற்றும் ஆர்டர் மதிப்புகளை ஊக்குவிக்கவும் தானியங்கு தள்ளுபடிகள் உதவக்கூடும்.
நீங்கள் தொகைக் குறைப்பு, இலவச ஷிப்பிங், Xஐ வாங்கி Yஐப் பெறுதல் போன்ற தள்ளுபடிகளையோ ஆப்ஸ் அடிப்படையிலான தானியங்கு தள்ளுபடிகளையோ உருவாக்கலாம். அதிகபட்சமாக 25 செயலில் உள்ள தானியங்கு தள்ளுபடிகளை உங்களால் கொண்டிருக்க முடியும். ஆப்ஸ் அடிப்படையிலான தள்ளுபடிகளும் இந்த மொத்த எண்ணிக்கையில் அடங்கும்.
தானியங்கு தள்ளுபடி சரியாகப் பயன்படுத்தப்பட, உங்கள் வாடிக்கையாளர்கள் தகுதியான அனைத்து உருப்படிகளையும் தங்கள் கார்ட்டில் சேர்க்க வேண்டும். தள்ளுபடிக்குத் தகுதிபெற அவர்கள் வாங்க வேண்டிய உருப்படிகள், மற்றும் புரொமோஷனின் ஒரு பகுதியாக அவர்கள் பெறும் ஏதேனும் உருப்படிகள் ஆகியவை இதில் அடங்கும். உங்கள் வாடிக்கையாளர்களும் தானியங்கு தள்ளுபடிக்குத் தகுதிபெற்றிருக்க வேண்டும்.
இந்தப் பக்கத்தில்
தானியங்கு தள்ளுபடிகளும் விலைகளை மாற்றும் செயலிகளும்
தொகுப்புச் செயலி போன்ற, Functions மூலம் கார்ட்டில் உள்ள உருப்படிகளின் விலைகளை மாற்றும் செயலியைப் பயன்படுத்தினால், செயலி விலைகளை மாற்றிய பிறகே தானியங்கு தள்ளுபடிகள் கணக்கிடப்படும். அதாவது, தானியங்கு தள்ளுபடிகள் அசல் தயாரிப்பு விலைகளின் அடிப்படையில் அல்லாமல், மாற்றப்பட்ட விலைகளின் அடிப்படையில் கணக்கிடப்படும்.