தள்ளுபடிக் குறியீடுகள்
தள்ளுபடிக் குறியீடுகள், மிகவும் பொதுவான தள்ளுபடி முறையாகும். தள்ளுபடியைப் பெற, வாடிக்கையாளர்கள் செக்அவுட்டில் ஒரு குறிப்பிட்ட குறியீட்டை உள்ளிடுவார்கள். மின்னஞ்சல் கேம்பெயின்கள் அல்லது கூட்டாண்மைகள் போன்ற குறிப்பிட்ட சந்தைப்படுத்தல் உத்திகளுக்கு இவை பொதுவாகப் பயன்படுத்தப்படுகின்றன. தள்ளுபடிக் குறியீடுகள் மூலம் வாடிக்கையாளரின் ஈடுபாடு, பிரத்தியேகமாக உணரும் எண்ணம் மற்றும் அவசர உணர்வு ஆகியவை அதிகரிக்கும். ஆனால் தள்ளுபடிக் குறியீடுகளை மறந்துவிடுவதால், கார்ட்டைக் கைவிடும் சூழலும் ஏற்படலாம்.
நீங்கள் புதிய தள்ளுபடிக் குறியீட்டை உருவாக்கும்போது, அது உங்கள் Shopify நிர்வாகியின் தள்ளுபடிகள் பிரிவில் காட்டப்படும். இந்தத் தள்ளுபடிக் குறியீட்டை விநியோகிக்க, மின்னஞ்சல் மூலமாக வாடிக்கையாளர்களுக்கு இந்தக் குறியீட்டை அனுப்பலாம் அல்லது உங்கள் ஆன்லைன் ஸ்டோரில் காட்டலாம். தள்ளுபடியைப் பெற, செக்அவுட்டின் போது உங்கள் வாடிக்கையாளர்கள் இந்தக் குறியீட்டை உள்ளிட வேண்டும்.
தள்ளுபடிக் குறியீட்டை உருவாக்கும்போது, பின்வரும் விவரங்களை உங்களால் உள்ளமைக்க முடியும்:
- குறியீடு செல்லுபடியாகும் தேதிகள்
- ஒரு குறியீட்டைப் பயன்படுத்தக்கூடிய முறைகளின் எண்ணிக்கை
- குறியீட்டைப் பயன்படுத்துவதற்கு முன்பு இருக்க வேண்டிய குறைந்தபட்ச ஆர்டர் தொகை
- தள்ளுபடியைப் பயன்படுத்தக்கூடிய தயாரிப்புகள், சேகரிப்புகள் அல்லது மாறுபாடுகள்
- தள்ளுபடியானது மற்ற தள்ளுபடி வகுப்புகளுடன் சேர்ந்துகொள்ளுமா என்ற விவரம்
நீங்கள் Shopify POSஐப் பயன்படுத்தினால், உங்கள் வாடிக்கையாளர்கள் உங்கள் ஆன்லைன் ஸ்டோரிலும் நேரில் வரும்போதும் தள்ளுபடிக் குறியீடுகளை மீட்டுக்கொள்ளலாம்.
உங்கள் தள்ளுபடிக் குறியீடுகள் அமைக்கப்பட்ட பிறகு, தள்ளுபடிக் குறியீடுகள் எவ்வளவு அடிக்கடி பயன்படுத்தப்படுகின்றன என்பதைக் கண்டறிய தள்ளுபடி வாரியான விற்பனை அறிக்கையை நீங்கள் பயன்படுத்தலாம்.
இந்தப் பக்கத்தில்
தள்ளுபடிக் குறியீடுகளை உருவாக்குவதற்கான பரிசீலனைகள்
தள்ளுபடிக் குறியீட்டை உருவாக்கும் முன், பின்வரும் பரிசீலனைகளைச் சரிபார்க்கவும்:
- ஒரு தள்ளுபடிக் குறியீட்டை 100 குறிப்பிட்ட வாடிக்கையாளர்கள், தயாரிப்புகள் மற்றும் மாறுபாடுகள் வரை பயன்படுத்தலாம். நீங்கள் அதைத் தாண்டினால், ஒரு பிழைச் செய்தி தோன்றும்:
There is 1 error with this discount code: Item entitlements exceeded max number. - ஒவ்வொரு ஸ்டோருக்கும் ஒட்டுமொத்தமாக 2,00,00,000 தனித்துவமான தள்ளுபடிக் குறியீடுகள் என்ற வரம்பு உள்ளது. உங்கள் ஸ்டோர் இந்த வரம்பை அடைந்ததும், புதிய தள்ளுபடிக் குறியீடுகளை உருவாக்க நீங்கள் தள்ளுபடிக் குறியீடுகளை அழிக்கலாம். மூன்றாம் தரப்புச் செயலிகள் மற்றும் பிரத்தியேகத் தீர்வுகளால் இந்த வரம்பைத் தவிர்க்கவோ அதிகரிக்கவோ முடியாது.
- தள்ளுபடிக் குறியீடுகளின் பெயர்கள் உங்கள் ஸ்டோரின் செக்அவுட் URL-இல் சரியாகச் சேர்க்கப்படுவதை உறுதிசெய்ய, தள்ளுபடிக் குறியீட்டின் பெயரில் சிறப்பு எழுத்துகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்.
- தொடக்கம் மற்றும் முடிவு நேரத்தைக் கொண்ட ஒரு தள்ளுபடியை நீங்கள் உருவாக்கினால், அந்த நேரமானது உங்கள் Shopify நிர்வாகியில் நீங்கள் தேர்ந்தெடுத்த நேர மண்டலத்தை அடிப்படையாகக் கொண்டதாகும். எடுத்துக்காட்டாக, உங்கள் ஸ்டோரின் நேர மண்டலம் கிழக்கு நிலையான நேரம் (EST) ஆக இருந்து, நீங்கள் தொடக்கத் தேதியாக நவம்பர் 26-ஐத் தேர்ந்தெடுத்தால், உங்கள் தள்ளுபடியானது நவம்பர் 26 அன்று அதிகாலை 12:00 மணி EST-க்குத் தொடங்கும்.
- ஒரு வாடிக்கையாளருக்கு ஒன்று என்ற அதிகபட்சப் பயன்பாட்டுடன் உள்ள ஒரு தள்ளுபடி, குறிப்பிட்ட அந்தத் தள்ளுபடிக்கு மட்டுமே பொருந்தும். நீங்கள் அந்தத் தள்ளுபடியை அழித்துவிட்டு, அதே அதிகபட்சப் பயன்பாட்டுக் கட்டுப்பாட்டுடன் ஒரு நகலைச் சேர்த்தால், முந்தைய தள்ளுபடியைப் பயன்படுத்திய வாடிக்கையாளர்களும் இந்தப் புதிய தள்ளுபடியை ஒருமுறை பயன்படுத்தலாம்.
- செக்அவுட்டில் வாடிக்கையாளர் ஒரு தள்ளுபடிக் குறியீட்டைப் பயன்படுத்தினால், அது அவரின் வாங்குதலுக்குப் பிந்தையச் சலுகைகளுக்கு பொருந்தாது.
- தள்ளுபடிக் குறியீடுகளை செக்அவுட்டின் வாங்குதலுக்குப் பிந்தைய பக்கத்தில் பயன்படுத்த முடியாது.