X-ஐ வாங்கி Y-ஐப் பெறும் தள்ளுபடிகள்

புதிய வாடிக்கையாளர்கள் உங்கள் தயாரிப்புகளை வாங்க ஊக்கப்படுத்தவும், விசுவாசமான வாடிக்கையாளர்களுக்குப் பரிசளிக்கவும் X-ஐ வாங்கி Y-ஐப் பெறும் விளம்பரங்கள் பிரபலமான ஒரு வழியாகும். உங்கள் விற்பனை மற்றும் லாபத்தை அதிகரிக்கவும், மெதுவாக விற்பனையாகும் சரக்கு இருப்புகளை விற்கவும் இவற்றைப் பயன்படுத்தலாம். நீங்கள் உருவாக்கும் தள்ளுபடிகள் உங்கள் Shopify நிர்வாகியின் தள்ளுபடிகள் பக்கத்தில் தோன்றும்.

எடுத்துக்காட்டாக, வாடிக்கையாளர்கள் எந்தவொரு டீ-ஷர்ட்டை வாங்கினாலும் அவர்களுக்கு இலவசமாக ஒரு தொப்பியை வழங்கும் விளம்பரம் உங்களிடம் உள்ளது. X-ஐ வாங்கி Y-ஐப் பெறும் விளம்பரங்கள் மூலம், முழு ஆர்டருக்கும் வாடிக்கையாளர்களுக்கு நீங்கள் ஒரு தொப்பியை இலவசமாக வழங்கலாம் அல்லது அவர்களின் ஆர்டரில் சேர்க்கப்படும் ஒவ்வொரு டீ-ஷர்ட்டுக்கும் ஒரு தொப்பியை இலவசமாக வழங்கலாம். வாடிக்கையாளரின் கார்ட் மொத்தம் ஒரு குறிப்பிட்ட மதிப்பைத் தாண்டும்போது தொப்பியின் விலையை இலவசமாக அமைக்கும் ஒரு தள்ளுபடிக் குறியீட்டையும் நீங்கள் உருவாக்கலாம்.

X-ஐ வாங்கி Y-ஐப் பெறும் விளம்பரங்களுக்கு நீங்கள் தள்ளுபடிக் குறியீடுகளை அல்லது தானியங்கு தள்ளுபடிகளை உருவாக்கலாம். Shopify POS-இல் தள்ளுபடி மேலாண்மை குறித்து மேலும் அறிக.

X-ஐ வாங்கி Y-ஐப் பெறும் தள்ளுபடிகளுக்கானப் பரிசீலனைகள்

  • தங்கள் சில்லறை விற்பனை இருப்பிடங்களுக்கு POS Lite சந்தாத் திட்டத்தைப் பயன்படுத்தும் ஸ்டோர்களுக்கு, உங்களின் ஆன்லைன் ஸ்டோர் செக்அவுட்டில் மட்டுமே X-ஐ வாங்கி Y-ஐப் பெறும் தள்ளுபடிகளைப் பயன்படுத்த முடியும். சில்லறை விற்பனை இருப்பிடங்களின் செக்அவுட்டுகளில் இந்தத் தள்ளுபடிகளைப் பயன்படுத்த முடியாது.
  • POS Pro சந்தாத் திட்டத்திலுள்ள ஏதேனும் ஒரு சில்லறை விற்பனை இருப்பிடத்திற்கு, உங்கள் ஆன்லைன் ஸ்டோர் மற்றும் POS செக்அவுட்டுகள் ஆகிய இரண்டிலுமே X-ஐ வாங்கி Y-ஐப் பெறும் தள்ளுபடிகள் கிடைக்கின்றன.
  • வாடிக்கையாளர்கள் அனைத்து உருப்படிகளையும் தங்கள் கார்ட்டில் மனித முயற்சியால் சேர்க்க வேண்டும். இலவச அல்லது தள்ளுபடி பெற்ற 'பெறும்' உருப்படியானது கார்ட்டில் தானாகவே சேர்க்கப்படாது.
  • தள்ளுபடிக் குறியீடுகளுக்கு, வாடிக்கையாளர்கள் பொருந்தக்கூடிய அனைத்துத் தயாரிப்புகளையும் தங்கள் கார்ட்டில் சேர்த்து, செக்அவுட்டில் தள்ளுபடிக் குறியீட்டை உள்ளிட வேண்டும்.
  • தானியங்கு தள்ளுபடிகளுக்கு, வாடிக்கையாளர்கள் பொருந்தக்கூடிய அனைத்துத் தயாரிப்புகளையும் தங்கள் கார்ட்டில் சேர்க்க வேண்டும், பின்னர் அந்தத் தள்ளுபடி தானாகவே பயன்படுத்தப்படும்.
  • Shopify நிர்வாகியில் உருவாக்கப்பட்ட X-ஐ வாங்கி Y-ஐப் பெறும் தள்ளுபடிகள், செக்அவுட்டின் வாங்குதலுக்குப் பிந்தைய பக்கத்திற்குப் பொருந்தாது.
  • தள்ளுபடி தொடங்கி முடியும் நேரமானது உங்கள் Shopify நிர்வாகியில் நீங்கள் தேர்ந்தெடுத்த நேர மண்டலத்தைப் பொறுத்தது. எடுத்துக்காட்டாக, உங்கள் ஸ்டோரின் நேர மண்டலம் கிழக்கு நிலையான நேரம் (EST) ஆக இருந்து, நீங்கள் தொடக்கத் தேதியாக நவம்பர் 26-ஐத் தேர்ந்தெடுத்தால், உங்கள் தள்ளுபடியானது நவம்பர் 26 அன்று அதிகாலை 12:00 மணி EST-க்குத் தொடங்கும்.

குறைந்தபட்சக் கொள்முதல் தேவைகளைப் புரிந்துகொள்ளுதல்

ஒரு X-ஐ வாங்கி Y-ஐப் பெறும் தள்ளுபடியை உருவாக்கும்போது, நீங்கள் ஒரு குறைந்தபட்சக் கொள்முதல் தொகையை அமைக்கலாம். குறைந்தபட்சக் கொள்முதல் தொகையானது தயாரிப்பு விலைகளை மட்டுமே கணக்கிடுகிறது, இந்தத் தொகையில் ஷிப்பிங் செலவுகளும் வரிகளும் சேர்க்கப்படுவதில்லை.

உங்கள் தள்ளுபடியின் பின்வரும் பிற அம்சங்களுடன் சேர்த்து, X-ஐ வாங்கி Y-ஐப் பெறும் தள்ளுபடியின் வாடிக்கையாளர் வாங்குபவை என்ற பிரிவில் சேர்க்கப்பட்டுள்ள தயாரிப்புகள் மட்டுமே குறைந்தபட்சக் கொள்முதல் தொகைக்குக் கணக்கிடப்படுகின்றன:

  • குறிப்பிட்ட தயாரிப்புகள் அல்லது சேகரிப்புகளுக்குத் தள்ளுபடி பொருந்தினால், அந்தத் தயாரிப்புகள் மட்டுமே குறைந்தபட்சக் கொள்முதல் தொகைக்குக் கணக்கிடப்படும்.
  • தள்ளுபடியானது ஒரு முறை வாங்குதல்களுக்கு மட்டுமே அல்லது சந்தாக்களுக்கு மட்டுமே பொருந்தினால், அந்த வகையான தயாரிப்புகள் மட்டுமே குறைந்தபட்சக் கொள்முதல் தொகைக்குக் கணக்கிடப்படும்.
  • மற்றச் சூழல்களில், கார்ட்டில் உள்ள அனைத்து வாடிக்கையாளர் வாங்குபவை தயாரிப்புகளுமே குறைந்தபட்சக் கொள்முதல் தொகைக்குக் கணக்கிடப்படும்.

வேறெந்தத் தள்ளுபடியும் பயன்படுத்தப்படுவதற்கு முன்னதாகவே தயாரிப்புகளின் முழு விலை குறைந்தபட்சக் கொள்முதல் தொகைக்குக் கணக்கிடப்படுகிறது. ஏதேனும் ஒரு உருப்படிக்கு வேறொரு தள்ளுபடி ஏற்கனவே பயன்படுத்தப்பட்டிருந்தால், அந்த உருப்படி குறைந்தபட்சக் கொள்முதல் தொகைக்குக் கணக்கிடப்படாது. இணைக்கப்படக்கூடியத் தள்ளுபடிகளில் மட்டுமே இவ்வாறு நடக்கும். உங்களின் X-ஐ வாங்கி Y-ஐப் பெறும் தள்ளுபடியுடன் இணைக்க முடியாதத் தள்ளுபடியானது ஒருபோதும் ஒரே நேரத்தில் பொருந்தாது என்பதால், அது குறைந்தபட்சக் கொள்முதல் தொகையையும் ஒருபோதும் மாற்றாது. தள்ளுபடிகளை இணைப்பது குறித்து மேலும் அறிக.

ஒரு வாடிக்கையாளர் வாங்கும் கிஃப்ட் கார்டுகள், தள்ளுபடிக்காக நீங்கள் தேர்ந்தெடுக்கும் தயாரிப்புகள் அல்லது சேகரிப்புகளில் சேர்க்கப்படும்போது, ​​வாடிக்கையாளர் வாங்குபவை தொகையில் கணக்கிடப்படும். பேமெண்ட்டாகப் பயன்படுத்தப்படும் கிஃப்ட் கார்டுகளும் ஸ்டோர் கிரெடிட்டும் தொகையைப் பாதிக்காது, ஏனெனில் தள்ளுபடிகள் கணக்கிடப்பட்ட பிறகு அவை ஆர்டர் மொத்தத்திற்குப் பயன்படுத்தப்படும்.

Buy X get Y தள்ளுபடிக் குறியீட்டை உருவாக்கு

விளம்பரத்தைப் பயன்படுத்த, உங்கள் வாடிக்கையாளர்கள் ஆன்லைன் ஸ்டோர் செக்அவுட்டில் Buy X get Y தள்ளுபடிக் குறியீட்டைப் பயன்படுத்தலாம்.

படிகள்:

டெஸ்க்டாப்
  1. உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, தள்ளுபடிகள் என்பதற்குச் செல்லவும்.

  2. தள்ளுபடியை உருவாக்கு என்பதைக் கிளிக் செய்யவும்.

  3. தள்ளுபடி வகையைத் தேர்ந்தெடு மெனுவில், Buy X get Y என்பதைக் கிளிக் செய்யவும்.

  4. முறை பிரிவில், தள்ளுபடிக் குறியீடு என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

  5. தள்ளுபடிக் குறியீடு புலத்தில், உங்கள் தள்ளுபடிக் குறியீட்டிற்கு ஒரு பெயரை (எடுத்துக்காட்டாக, buyonegetonefree) உள்ளிடவும். சீரற்ற தள்ளுபடிக் குறியீட்டை உருவாக்க, சீரற்ற குறியீட்டை உருவாக்கு என்பதைக் கிளிக் செய்யவும்.

  6. விருப்பத்தேர்வு: POS Pro சந்தாவைக் கொண்டுள்ள உங்கள் சில்லறை விற்பனை இருப்பிடங்களில் தள்ளுபடியை வழங்க, விற்பனைச் சேனல்கள் பிரிவில் விற்பனைப் புள்ளி என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

  7. வாடிக்கையாளர் வாங்குபவை பிரிவில், பின்வரும் அமைப்புகளை உள்ளமைக்கவும்:

    1. உருப்படிகளின் குறைந்தபட்ச அளவு அல்லது குறைந்தபட்ச கொள்முதல் தொகை என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
    2. தள்ளுபடியைப் பெற, வாடிக்கையாளர் வாங்க வேண்டிய உருப்படிகளின் எண்ணிக்கை அல்லது செலவழிக்க வேண்டிய தொகையை அமைக்கவும்.
    3. இவற்றிலுள்ள ஏதேனும் உருப்படிகள் பிரிவில், குறிப்பிட்ட தயாரிப்புகள் அல்லது குறிப்பிட்ட சேகரிப்புகள் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
    4. விளம்பரத்தில் தயாரிப்புகள் அல்லது சேகரிப்புகளைச் சேர்க்க, தேடல் புலத்தைப் பயன்படுத்தவும் அல்லது உலாவு என்பதைக் கிளிக் செய்யவும். தள்ளுபடியிலிருந்து ஒரு தயாரிப்பு அல்லது சேகரிப்பை அகற்ற விரும்பினால், X என்பதைக் கிளிக் செய்யவும்.
  8. வாடிக்கையாளர் பெறுபவை பிரிவில், பின்வரும் அமைப்புகளை உள்ளமைக்கவும்:

    1. வாடிக்கையாளர் தள்ளுபடி பெறும் உருப்படிகளின் அளவை அமைக்கவும்.
    2. இவற்றிலுள்ள ஏதேனும் உருப்படிகள் பிரிவில், குறிப்பிட்ட தயாரிப்புகள் அல்லது குறிப்பிட்ட சேகரிப்புகள் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
    3. தள்ளுபடிக்குத் தகுதியான தயாரிப்புகள் அல்லது சேகரிப்புகளைச் சேர்க்க, தேடல் புலத்தைப் பயன்படுத்தவும் அல்லது உலாவு என்பதைக் கிளிக் செய்யவும். ஒரு தயாரிப்பு அல்லது சேகரிப்பை அகற்ற விரும்பினால், அதைத் தனிப்பட்டியலில் இருந்து நீக்க X என்பதைக் கிளிக் செய்யவும்.
    4. தள்ளுபடி செய்யப்பட்ட மதிப்பில் பிரிவில், சதவீதம், ஒவ்வொன்றிலும் தள்ளுபடித் தொகை அல்லது இலவசம் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
    5. ஒரு ஆர்டருக்கான அதிகபட்சப் பயன்பாடுகளின் எண்ணிக்கையை அமைக்க, ஒரு ஆர்டருக்கான அதிகபட்சப் பயன்பாடுகளின் எண்ணிக்கையை அமை என்பதைத் தேர்வுசெய்து, ஒவ்வொரு ஆர்டருக்கும் இந்த விளம்பரத்தைப் பயன்படுத்தக்கூடிய அதிகபட்ச முறைகளை உள்ளிடவும்.
  9. தகுதி பிரிவில், உங்கள் தள்ளுபடியை எந்தெந்த வாடிக்கையாளர்கள் பயன்படுத்தலாம் என்பதைத் தேர்வுசெய்யவும்:

    • அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் உங்கள் தள்ளுபடி கிடைக்கச் செய்ய, அனைத்து வாடிக்கையாளர்கள் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
    • குறிப்பிட்ட வாடிக்கையாளர்களுக்கு உங்கள் தள்ளுபடியைக் கிடைக்கச் செய்ய, குறிப்பிட்ட வாடிக்கையாளர்கள் என்பதைத் தேர்ந்தெடுத்து, தள்ளுபடியை ஒதுக்க வேண்டிய வாடிக்கையாளர்களைத் தேர்ந்தெடுத்து, பின்னர் சேர் என்பதைக் கிளிக் செய்யவும்.
    • குறிப்பிட்ட வாடிக்கையாளர் பிரிவுகளுக்கு உங்கள் தள்ளுபடி கிடைக்கச் செய்ய, வாடிக்கையாளர் பிரிவுகள் என்பதைத் தேர்ந்தெடுத்து, நீங்கள் தள்ளுபடியை ஒதுக்க விரும்பும் வாடிக்கையாளர் பிரிவுகளைத் தேர்ந்தெடுத்து, பின்னர் சேர் என்பதைக் கிளிக் செய்யவும்.
    • குறிப்பிட்ட சந்தைகளில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு மட்டும் உங்கள் தள்ளுபடியைக் கிடைக்கச் செய்ய, சந்தைகள் என்பதைத் தேர்ந்தெடுத்து, தள்ளுபடியை ஒதுக்க வேண்டிய சந்தைகளைத் தேர்ந்தெடுத்து, பின்னர் சேர் என்பதைக் கிளிக் செய்யவும்.
  10. தள்ளுபடிப் பயன்பாட்டைக் கட்டுப்படுத்த விரும்பினால், அதிகபட்ச தள்ளுபடிப் பயன்பாடுகள் பிரிவில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட விருப்பத்தேர்வுகளைத் தேர்வுசெய்யவும்:

    • உங்கள் ஸ்டோரில் தள்ளுபடியைப் பயன்படுத்தக்கூடிய அதிகபட்ச முறைகளை அமைக்க, இந்தத் தள்ளுபடியை மொத்தமாகப் பயன்படுத்தக்கூடிய முறைகளை வரம்பிடவும் என்பது அனுமதிக்கிறது. எடுத்துக்காட்டாக, 200 என வரம்பை அமைத்தால், அனைத்து வாடிக்கையாளர்களிடையேயும் 200 முறை தள்ளுபடிக் குறியீட்டைப் பயன்படுத்தலாம். இந்த அமைப்பை நீங்கள் தேர்வுசெய்தால், ஒவ்வொரு வாடிக்கையாளரும் பல முறை தள்ளுபடியைப் பயன்படுத்த முடியும்.
    • வாடிக்கையாளரின் மின்னஞ்சல் முகவரி அல்லது மொபைல் எண்ணை ஒரு தள்ளுபடிக் குறியீட்டுப் பயன்பாட்டிற்கு மட்டுமே கட்டுப்படுத்த, ஒரு வாடிக்கையாளருக்கு ஒன்று என வரம்பிடவும் என்பது உங்களை அனுமதிக்கிறது.
  11. இந்தத் தள்ளுபடிக் குறியீட்டை பிற தள்ளுபடிக் குறியீடுகளுடன் சேர்த்துப் பயன்படுத்த வாடிக்கையாளர்களை அனுமதிக்க, சேர்க்கைகள் பிரிவில், இந்தத் தள்ளுபடியுடன் சேர்ப்பதற்குத் தகுதியான தள்ளுபடிக் குறியீடுகளின் வகைகளைத் தேர்வுசெய்யவும்.

  12. செயலில் உள்ள தேதிகள் பிரிவில், பின்வரும் அமைப்புகளை உள்ளமைக்கவும்:

    • தள்ளுபடிக்கான தொடக்கத் தேதியை அமைக்க நாள்காட்டியைப் பயன்படுத்தவும்.
    • தள்ளுபடிக்கான முடிவுத் தேதியை நீங்கள் அமைக்க விரும்பினால், முடிவுத் தேதியை அமை என்பதைக் கிளிக் செய்து, தள்ளுபடி எப்போது முடிவடையும் என்பதைத் தேர்வுசெய்ய நாள்காட்டியைப் பயன்படுத்தவும். உங்கள் தள்ளுபடிக்கான முடிவுத் தேதியை நீங்கள் தேர்வுசெய்யவில்லை என்றால், அது காலாவதியாகாது. தள்ளுபடி ஒரு நாளுக்கு மட்டுமே செல்லுபடியாக வேண்டுமென விரும்பினால், தொடக்கத் தேதி மற்றும் முடிவுத் தேதி ஆகிய இரண்டிற்கும் ஒரே நாள்காட்டி நாளைத் தேர்ந்தெடுக்கவும்.
  13. விருப்பத்தேர்வு: உங்கள் தள்ளுபடிகள் பட்டியலை வடிகட்ட உதவ, உங்கள் தள்ளுபடிகளில் குழுவாக்கும் குறிச்சொற்களைச் சேர்க்கவும். குறிச்சொற்கள் பிரிவில், Plus circle குறிச்சொற்களைச் சேர் என்பதைக் கிளிக் செய்து, உங்கள் தள்ளுபடியில் சேர்க்க ஒரு குறிச்சொல்லைத் தேடவும் அல்லது உள்ளிடவும்.

  14. தள்ளுபடியை உருவாக்க, சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.

மொபைல்
  1. Shopify செயலியிலிருந்து, Menu ஐகானைத் தட்டவும்.

  2. தள்ளுபடிகள் என்பதைத் தட்டவும்.

  3. Plus circle ஐகானைத் தட்டவும்.

  4. தள்ளுபடி வகையைத் தேர்ந்தெடு மெனுவிலிருந்து, Buy X get Y என்பதைத் தட்டவும்.

  5. முறை பிரிவில், தள்ளுபடிக் குறியீடு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதிசெய்யவும். இதுவே இயல்புநிலை விருப்பத்தேர்வாகும்.

  6. தள்ளுபடிக் குறியீடு புலத்தில், புதிய தள்ளுபடிக் குறியீட்டிற்கு ஒரு பெயரை (எடுத்துக்காட்டாக, buyonegetonefree) உள்ளிடவும். சீரற்ற தள்ளுபடிக் குறியீட்டை உருவாக்க, Refresh ஐகானைத் தட்டவும்.

  7. வாடிக்கையாளர் வாங்குபவை பிரிவில், பின்வரும் அமைப்புகளை உள்ளமைக்கவும்:

    1. உருப்படிகளின் குறைந்தபட்ச அளவு அல்லது குறைபட்ச கொள்முதல் தொகை என்பதைத் தட்டவும்.
    2. தள்ளுபடியைப் பெற, வாடிக்கையாளர் வாங்க வேண்டிய உருப்படிகளின் எண்ணிக்கை அல்லது செலவழிக்க வேண்டிய தொகையை அமைக்கவும்.
    3. இவற்றிலுள்ள ஏதேனும் உருப்படிகள் பிரிவில், தகுதிபெறும் உருப்படிகளாகத் தயாரிப்புகளை அல்லது சேகரிப்புகளைச் சேர்க்க வேண்டுமா என்பதைத் தேர்வுசெய்யவும்.
    4. கொள்முதல் வகை என்பதைத் தேர்ந்தெடுக்கவும். உங்கள் ஸ்டோரில் சந்தாக்களைச் செயலாக்கியிருந்தால், தயாரிப்பை ஒரு முறை வாங்குதல், சந்தா அல்லது இரண்டாகவும் அமைக்கலாம்.
    5. சேர் Plus circle என்பதைத் தட்டி, விளம்பரத்தில் சேர்க்க வேண்டிய தயாரிப்புகள் அல்லது சேகரிப்புகளைத் தேர்ந்தெடுக்கவும். ஒரு தயாரிப்பு அல்லது சேகரிப்பை அகற்ற விரும்பினால், அதைத் தனிப்பட்டியலிலிருந்து நீக்குவதற்குத் தேர்வை நீக்கவும்.
  8. வாடிக்கையாளர் பெறுபவை பிரிவில், பின்வரும் அமைப்புகளை உள்ளமைக்கவும்:

    1. தள்ளுபடியைப் பெற வாடிக்கையாளர் தங்கள் கார்ட்டில் சேர்க்க வேண்டிய உருப்படிகளின் அளவை அமைக்கவும்.
    2. இவற்றிலிருந்து ஏதேனும் உருப்படிகள் பிரிவில், தள்ளுபடி செய்யப்பட்ட உருப்படிகளாகத் தயாரிப்புகளைச் சேர்க்க வேண்டுமா அல்லது சேகரிப்புகளைச் சேர்க்க வேண்டுமா என்பதைத் தேர்வுசெய்யவும்.
    3. Plus circle சேர் என்பதைத் தட்டி, தள்ளுபடியைப் பெற வாடிக்கையாளர் தங்கள் கார்ட்டில் சேர்க்க வேண்டிய தயாரிப்புகள் அல்லது சேகரிப்புகளைத் தேர்ந்தெடுக்கவும். நீங்கள் ஒரு தயாரிப்பு அல்லது சேகரிப்பை அகற்ற விரும்பினால், பட்டியலில் இருந்து அதை நீக்க அதற்கான தேர்வை நீக்கவும்.
    4. தள்ளுபடி மதிப்பில் பிரிவில், குறிப்பிட்ட எண்ணிக்கை உருப்படிகளை வாடிக்கையாளர்கள் வாங்கும் போது அவர்கள் பெறும் தள்ளுபடி மதிப்பைத் தேர்வுசெய்யவும். நீங்கள் சதவீதத் தள்ளுபடியை வழங்க விரும்பினால், சதவீதம் என்பதைத் தட்டவும். நீங்கள் ஒவ்வொரு உருப்படியிலும் தொகையைத் தள்ளுபடி செய்ய விரும்பினால், ஒவ்வொன்றிற்கும் தள்ளுபடித் தொகை என்பதைத் தட்டவும். நீங்கள் உருப்படிகளை இலவசமாக வழங்க விரும்பினால், இலவசம் என்பதைத் தட்டவும்.
    5. நீங்கள் சதவீதத் தள்ளுபடியை வழங்கினால், ஒரு மதிப்பை உள்ளிடவும்.
    6. தள்ளுபடியின் பயன்பாட்டுக்கு இயல்பாக எந்த வரம்பும் இல்லை. பயன்பாடுகளின் வரம்பைச் சேர்க்க, ஒரு ஆர்டருக்கான பயன்பாடுகள் என்பதைத் தட்டி, ஒரு ஆர்டருக்குப் பயன்படுத்தக்கூடிய அதிகபட்ச எண்ணிக்கையை அமைக்கவும் என்பதைத் தேர்வுசெய்யவும். பிறகு அளவு என்பதன் கீழ் ஒரு எண்ணைச் சேர்க்கவும்.
  9. தகுதி பிரிவில், உங்கள் தள்ளுபடியை எந்தெந்த வாடிக்கையாளர்கள் பயன்படுத்தலாம் என்பதைத் தேர்வுசெய்யவும்:

    • அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் உங்கள் தள்ளுபடி கிடைக்கச் செய்ய, அனைத்து வாடிக்கையாளர்கள் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
    • குறிப்பிட்ட வாடிக்கையாளர்களுக்கு உங்கள் தள்ளுபடியைக் கிடைக்கச் செய்ய, குறிப்பிட்ட வாடிக்கையாளர்கள் என்பதைத் தேர்ந்தெடுத்து, தள்ளுபடியை ஒதுக்க வேண்டிய வாடிக்கையாளர்களைத் தேர்ந்தெடுத்து, பின்னர் சேர் என்பதைக் கிளிக் செய்யவும்.
    • குறிப்பிட்ட வாடிக்கையாளர் பிரிவுகளுக்கு உங்கள் தள்ளுபடி கிடைக்கச் செய்ய, வாடிக்கையாளர் பிரிவுகள் என்பதைத் தேர்ந்தெடுத்து, நீங்கள் தள்ளுபடியை ஒதுக்க விரும்பும் வாடிக்கையாளர் பிரிவுகளைத் தேர்ந்தெடுத்து, பின்னர் சேர் என்பதைக் கிளிக் செய்யவும்.
    • குறிப்பிட்ட சந்தைகளில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு மட்டும் உங்கள் தள்ளுபடியைக் கிடைக்கச் செய்ய, சந்தைகள் என்பதைத் தேர்ந்தெடுத்து, தள்ளுபடியை ஒதுக்க வேண்டிய சந்தைகளைத் தேர்ந்தெடுத்து, பின்னர் சேர் என்பதைக் கிளிக் செய்யவும்.
  10. அதிகபட்சத் தள்ளுபடிப் பயன்பாட்டு வரம்பை அமைக்க, அதிகபட்சத் தள்ளுபடிப் பயன்பாடுகள் பிரிவில், பின்வரும் விருப்பங்களில் ஏதேனும் ஒன்றையோ ஒன்றுக்கு மேற்பட்டவற்றையோ தட்டித் தேர்வுசெய்யவும்:

    • ஒரு தள்ளுபடியைப் பயன்படுத்தக்கூடிய மொத்த முறைகளின் எண்ணிக்கையை அமைக்க இந்தத் தள்ளுபடியை மொத்தமாகப் பயன்படுத்தக்கூடிய முறைகளின் எண்ணிக்கையை வரம்பிடவும் என்பது உங்களை அனுமதிக்கிறது. எடுத்துக்காட்டாக, வரம்பை 200 என அமைத்தால், தள்ளுபடிக் குறியீட்டை உங்கள் வாடிக்கையாளர் தளத்தில் 200 முறைகள் பயன்படுத்த அனுமதிக்கப்படும். இந்த அமைப்பை நீங்கள் தேர்வுசெய்தால், வாடிக்கையாளர்கள் தள்ளுபடியைப் பலமுறை பயன்படுத்தலாம்.
    • ஒரு வாடிக்கையாளருக்கு ஒன்று என வரம்பிடவும் என்பது ஒரு வாடிக்கையாளருக்கு ஒரு பயன்பாடு எனத் தள்ளுபடியை வரம்பிட, வாடிக்கையாளரின் மின்னஞ்சல் முகவரி அல்லது தொலைபேசி எண்ணைத் தடமறிகிறது. இது நிலையான மதிப்புள்ள தள்ளுபடிகளுக்கு மட்டுமே பொருந்தும்.
  11. இந்தத் தள்ளுபடிக் குறியீட்டை பிற தள்ளுபடிக் குறியீடுகளுடன் சேர்த்துப் பயன்படுத்த வாடிக்கையாளர்களை அனுமதிக்க, சேர்க்கைகள் பிரிவில், இந்தத் தள்ளுபடியுடன் சேர்ப்பதற்குத் தகுதியான தள்ளுபடிக் குறியீடுகளின் வகைகளைத் தேர்வுசெய்யவும்.

  12. தள்ளுபடிக்கான தொடக்கத் தேதியை அமைக்க, செயலில் உள்ள தேதிகள் என்பதைத் தட்டவும். தள்ளுபடிக்கான முடிவுத் தேதியை அமைக்க நீங்கள் விரும்பினால், முடிவுத் தேதியை அமை என்பதைத் தட்டி, முடிவுத் தேதி நாள்காட்டியின் மூலம் தள்ளுபடி எப்போது முடிவடையும் என்பதைத் தேர்வுசெய்யவும். தள்ளுபடிக்கான முடிவுத் தேதியை நீங்கள் தேர்வுசெய்யவில்லை என்றால், அது காலாவதியாகாது. தள்ளுபடி ஒரு நாளுக்கு மட்டுமே செல்லுபடியாக வேண்டுமென நீங்கள் விரும்பினால், தொடக்கத் தேதி, முடிவுத் தேதி ஆகிய இரண்டிற்கும் ஒரே நாள்காட்டி நாளைத் தேர்ந்தெடுக்கவும்.

  13. விருப்பத்தேர்வு: POS Pro சந்தா உள்ள உங்கள் சில்லறை விற்பனை இருப்பிடங்களில் தள்ளுபடியை வழங்க, விற்பனைச் சேனல்கள் அணுகல் பிரிவில், விற்பனைப் புள்ளி என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

  14. விருப்பத்தேர்வு: உங்கள் தள்ளுபடிகளின் பட்டியலை வடிகட்ட உதவுவதற்காக உங்கள் தள்ளுபடிகளுக்குக் குழுவாக்கல் டேக்குகளைச் சேர்க்கவும். டேக்குகள் பிரிவில், Plus circle டேக்குகளைச் சேர் என்பதைத் தட்டவும், பின்னர் உங்கள் தள்ளுபடியில் சேர்க்க ஒரு டேக்கைத் தேடவும் அல்லது உள்ளிடவும்.

  15. சேமி அல்லது ✓ என்பதைத் தட்டவும்.

X-ஐ வாங்கி Y-ஐப் பெறுங்கள் என்ற தானியங்கு தள்ளுபடியை உருவாக்குங்கள்

X-ஐ வாங்கி Y-ஐப் பெறுங்கள் தள்ளுபடிகளில் இரண்டு மாறுபாடுகள் உள்ளன. ஒன்றில் தள்ளுபடியைப் பெற வாடிக்கையாளர் குறிப்பிட்ட அளவிலான தயாரிப்புகளை வாங்க வேண்டும், மற்றொன்றில் தள்ளுபடியைப் பெற அவர்கள் குறிப்பிட்ட தொகையைச் செலவிட வேண்டும்.

தள்ளுபடியானது இலவசத் தயாரிப்புகளாகவோ, விலையிலிருந்து குறிப்பிட்ட சதவீதமாகவோ அல்லது விலையிலிருந்து குறிப்பிட்ட தொகையாகவோ இருக்கலாம். நீங்கள் இலவசத் தயாரிப்புகளை வழங்கினால், உங்களிடம் போதுமான சரக்கு இருப்பு இருப்பது முக்கியமாகும். இலவசத் தயாரிப்புகளின் சரக்கு இருப்பு பூஜ்ஜியமாகக் குறைந்தால், தயாரிப்புகள் விற்றுத் தீர்ந்துவிட்டதாகக் காட்டப்படும், மேலும் வாடிக்கையாளர்களால் தள்ளுபடியைப் பயன்படுத்திக் கொள்ள முடியாது. நீங்கள் தொகையைத் தள்ளுபடியாக வழங்கினால், ஒவ்வொரு உருப்படியிலிருந்தும் அந்தத் தொகை கழிக்கப்படும்.

படிகள்:

டெஸ்க்டாப்
  1. உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, தள்ளுபடிகள் என்பதற்குச் செல்லவும்.

  2. தள்ளுபடிகள் பக்கத்தில், தள்ளுபடியை உருவாக்கு என்பதைக் கிளிக் செய்யவும்.

  3. தள்ளுபடி வகையைத் தேர்ந்தெடு மெனுவில், X-ஐ வாங்கி Y-ஐப் பெறுங்கள் என்பதைக் கிளிக் செய்யவும்.

  4. முறை என்பதன் கீழ், தானியங்கு தள்ளுபடி என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

  5. தலைப்பு பிரிவில், தானியங்கு தள்ளுபடிக்கான பெயரை உள்ளிடவும் (எடுத்துக்காட்டாக, buyonegetonefree).

  6. விருப்பத்தேர்வு: POS Pro சந்தாவைக் கொண்டுள்ள உங்கள் சில்லறை விற்பனை இருப்பிடங்களில் தள்ளுபடியை வழங்க, POS Pro இருப்பிடங்களில் பயன்படுத்துக என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

  7. வாடிக்கையாளர் வாங்குபவை பிரிவில், பின்வரும் அமைப்புகளை உள்ளமைக்கவும்:

    • உருப்படிகளின் குறைந்தபட்ச அளவு அல்லது குறைந்தபட்சக் கொள்முதல் தொகை என்பதைத் தேர்வுசெய்யவும்.
    • தள்ளுபடியைப் பெற, வாடிக்கையாளர் வாங்க வேண்டிய உருப்படிகளின் எண்ணிக்கை அல்லது செலவழிக்க வேண்டிய தொகையை அமைக்கவும்.
    • இவற்றிலுள்ள ஏதேனும் உருப்படிகள் பிரிவில், தகுதிபெறும் உருப்படிகளாகத் தயாரிப்புகளை அல்லது சேகரிப்புகளைச் சேர்க்க வேண்டுமா என்பதைத் தேர்வுசெய்யவும்.
    • சலுகையில் தயாரிப்புகள் அல்லது சேகரிப்புகளைச் சேர்க்க, தேடல் புலம் அல்லது உலாவு பொத்தானைப் பயன்படுத்தவும். தள்ளுபடியிலிருந்து தயாரிப்பு அல்லது சேகரிப்பை அகற்ற விரும்பினால், அதை பட்டியலில் இருந்து நீக்குவதற்கு X என்பதைக் கிளிக் செய்யவும்.
  8. வாடிக்கையாளர் பெறுபவை பிரிவில், பின்வரும் அமைப்புகளை உள்ளமைக்கவும்:

    • தள்ளுபடியைப் பெறுவதற்கு வாடிக்கையாளர் தங்கள் கார்ட்டில் சேர்க்க வேண்டிய உருப்படிகளின் அளவை அமைக்கவும்.
    • இவற்றிலிருந்து ஏதேனும் உருப்படிகள் பிரிவில், தள்ளுபடி செய்யப்பட்ட உருப்படிகளாகத் தயாரிப்புகளைச் சேர்க்க வேண்டுமா அல்லது சேகரிப்புகளைச் சேர்க்க வேண்டுமா என்பதைத் தேர்வுசெய்யவும். தயாரிப்பு அல்லது சேகரிப்பு என்பது வாடிக்கையாளர் வாங்குபவை பிரிவில் அமைக்கப்பட்டுள்ளதைப் போன்றதே என்றால், வாடிக்கையாளர் தேர்ந்தெடுக்கும் குறைந்த விலையுள்ள உருப்படியையே அவர்கள் தள்ளுபடியில் பெறுவார்கள்.
    • தயாரிப்புகள் அல்லது சேகரிப்புகளைச் சேர்க்க, தேடல் புலம் அல்லது உலாவு பொத்தானைப் பயன்படுத்தவும். தயாரிப்பு அல்லது சேகரிப்பை அகற்ற விரும்பினால், அதை பட்டியலில் இருந்து நீக்குவதற்கு X என்பதைக் கிளிக் செய்யவும்.
    • தள்ளுபடி மதிப்பில் பிரிவில், குறிப்பிட்ட எண்ணிக்கை உருப்படிகளை வாடிக்கையாளர்கள் வாங்கும் போது அவர்கள் பெறும் தள்ளுபடி மதிப்பைத் தேர்வுசெய்யவும். நீங்கள் சதவீதத் தள்ளுபடியை வழங்க விரும்பினால், சதவீதம் என்பதைத் தேர்ந்தெடுத்து, ஒரு விகிதத்தை உள்ளிடவும். ஒவ்வொரு உருப்படியிலும் தொகையைத் தள்ளுபடி செய்ய விரும்பினால், ஒவ்வொன்றிற்கும் தள்ளுபடித் தொகை என்பதைத் தேர்ந்தெடுக்கவும். உருப்படிகளை இலவசமாக வழங்க விரும்பினால், இலவசம் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
    • விருப்பத்தேர்வு: ஒரு ஆர்டருக்குப் பயன்படுத்தக்கூடிய அதிகபட்ச எண்ணிக்கையை அமைக்கவும் என்பதைத் தேர்வுசெய்து, ஒரு ஆர்டருக்கு இந்தச் சலுகையைப் பயன்படுத்தக்கூடிய அதிகபட்ச முறைகளின் எண்ணிக்கையை உள்ளிடவும்.
  9. தகுதி பிரிவில், உங்கள் தள்ளுபடியை எந்தெந்த வாடிக்கையாளர்கள் பயன்படுத்தலாம் என்பதைத் தேர்வுசெய்யவும்:

    • அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் உங்கள் தள்ளுபடி கிடைக்கச் செய்ய, அனைத்து வாடிக்கையாளர்கள் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
    • குறிப்பிட்ட வாடிக்கையாளர்களுக்கு உங்கள் தள்ளுபடியைக் கிடைக்கச் செய்ய, குறிப்பிட்ட வாடிக்கையாளர்கள் என்பதைத் தேர்ந்தெடுத்து, தள்ளுபடியை ஒதுக்க வேண்டிய வாடிக்கையாளர்களைத் தேர்ந்தெடுத்து, பின்னர் சேர் என்பதைக் கிளிக் செய்யவும்.
    • குறிப்பிட்ட வாடிக்கையாளர் பிரிவுகளுக்கு உங்கள் தள்ளுபடி கிடைக்கச் செய்ய, வாடிக்கையாளர் பிரிவுகள் என்பதைத் தேர்ந்தெடுத்து, நீங்கள் தள்ளுபடியை ஒதுக்க விரும்பும் வாடிக்கையாளர் பிரிவுகளைத் தேர்ந்தெடுத்து, பின்னர் சேர் என்பதைக் கிளிக் செய்யவும்.
    • குறிப்பிட்ட சந்தைகளில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு மட்டும் உங்கள் தள்ளுபடியைக் கிடைக்கச் செய்ய, சந்தைகள் என்பதைத் தேர்ந்தெடுத்து, தள்ளுபடியை ஒதுக்க வேண்டிய சந்தைகளைத் தேர்ந்தெடுத்து, பின்னர் சேர் என்பதைக் கிளிக் செய்யவும்.
  10. இந்தத் தள்ளுபடிக் குறியீட்டை பிற தள்ளுபடிக் குறியீடுகளுடன் சேர்த்துப் பயன்படுத்த வாடிக்கையாளர்களை அனுமதிக்க, சேர்க்கைகள் பிரிவில், இந்தத் தள்ளுபடியுடன் சேர்ப்பதற்குத் தகுதியான தள்ளுபடிக் குறியீடுகளின் வகைகளைத் தேர்வுசெய்யவும்.

  11. செயலில் உள்ள தேதிகள் பிரிவில், பின்வரும் அமைப்புகளை உள்ளமைக்கவும்:

    • தள்ளுபடிக்கான தொடக்கத் தேதியை அமைக்க நாள்காட்டியைப் பயன்படுத்தவும்.
    • தள்ளுபடிக்கான முடிவுத் தேதியை அமைக்க நீங்கள் விரும்பினால், முடிவுத் தேதியை அமை என்பதைக் கிளிக் செய்து, நாள்காட்டியின் மூலம் தள்ளுபடி எப்போது முடிவடையும் என்பதைத் தேர்வுசெய்யவும். தள்ளுபடிக்கான முடிவுத் தேதியை நீங்கள் தேர்வுசெய்யவில்லை என்றால், அதற்கு எந்தக் காலாவதியும் இருக்காது. தள்ளுபடி ஒரு நாளுக்கு மட்டுமே செல்லுபடியாக வேண்டுமென நீங்கள் விரும்பினால், தொடக்கத் தேதி, முடிவுத் தேதி ஆகிய இரண்டிற்கும் ஒரே நாள்காட்டி நாளைத் தேர்ந்தெடுக்கவும்.
  12. விருப்பத்தேர்வு: உங்கள் தள்ளுபடிகள் பட்டியலை வடிகட்ட உதவ, உங்கள் தள்ளுபடிகளில் குழுவாக்கும் குறிச்சொற்களைச் சேர்க்கவும். குறிச்சொற்கள் பிரிவில், Plus circle குறிச்சொற்களைச் சேர் என்பதைக் கிளிக் செய்து, உங்கள் தள்ளுபடியில் சேர்க்க ஒரு குறிச்சொல்லைத் தேடவும் அல்லது உள்ளிடவும்.

  13. சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.

மொபைல்
  1. Shopify செயலியிலிருந்து, Menu ஐகானைத் தட்டவும்.

  2. தள்ளுபடிகள் என்பதைத் தட்டவும்.

  3. தள்ளுபடிகள் பக்கத்தில், + பொத்தானைத் தட்டவும்.

  4. தள்ளுபடி வகையைத் தேர்ந்தெடு மெனுவிலிருந்து, Buy X get Y என்பதைத் தட்டவும்.

  5. முறை என்பதைத் தட்டி, தானியங்கு என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

  6. தலைப்பு பிரிவில், தானியங்கு தள்ளுபடிக்கான பெயரை உள்ளிடவும் (எடுத்துக்காட்டாக, buyonegetonefree).

  7. வாடிக்கையாளர் வாங்குபவை பிரிவில், பின்வரும் அமைப்புகளை உள்ளமைக்கவும்:

    • உருப்படிகளின் குறைந்தபட்ச அளவு அல்லது குறைபட்ச கொள்முதல் தொகை என்பதைத் தட்டவும்.
    • தள்ளுபடியைப் பெற, வாடிக்கையாளர் வாங்க வேண்டிய உருப்படிகளின் எண்ணிக்கை அல்லது செலவழிக்க வேண்டிய தொகையை அமைக்கவும்.
    • இவற்றிலுள்ள ஏதேனும் உருப்படிகள் பிரிவில், தகுதிபெறும் உருப்படிகளாகத் தயாரிப்புகளை அல்லது சேகரிப்புகளைச் சேர்க்க வேண்டுமா என்பதைத் தேர்வுசெய்யவும்.
    • சேர் என்பதைத் தட்டி, தள்ளுபடியில் சேர்ப்பதற்கான தயாரிப்புகள் அல்லது சேகரிப்புகளைத் தேர்ந்தெடுக்கவும். நீங்கள் ஒரு தயாரிப்பு அல்லது சேகரிப்பை அகற்ற விரும்பினால், பட்டியலில் இருந்து அதை நீக்க அதற்கான தேர்வை நீக்கவும்.
    • முடிந்தது என்பதைத் தட்டவும்.
  8. வாடிக்கையாளர் பெறுபவை பிரிவில், பின்வரும் அமைப்புகளை உள்ளமைக்கவும்:

    • தள்ளுபடியைப் பெற வாடிக்கையாளர் தங்கள் கார்ட்டில் சேர்க்க வேண்டிய உருப்படிகளின் அளவை அமைக்கவும்.
    • இவற்றிலிருந்து ஏதேனும் உருப்படிகள் பிரிவில், தள்ளுபடி செய்யப்பட்ட உருப்படிகளாகத் தயாரிப்புகளைச் சேர்க்க வேண்டுமா அல்லது சேகரிப்புகளைச் சேர்க்க வேண்டுமா என்பதைத் தேர்வுசெய்யவும்.
    • சேர் என்பதைத் தட்டி, தள்ளுபடியைப் பெற வாடிக்கையாளர் தங்கள் கார்ட்டில் சேர்க்க வேண்டிய தயாரிப்புகள் அல்லது சேகரிப்புகளைத் தேர்ந்தெடுக்கவும். நீங்கள் ஒரு தயாரிப்பு அல்லது சேகரிப்பை அகற்ற விரும்பினால், பட்டியலில் இருந்து அதை நீக்க அதற்கான தேர்வை நீக்கவும்.
    • தள்ளுபடி மதிப்பில் பிரிவில், நீங்கள் சதவீதத் தள்ளுபடியை வழங்க விரும்பினால், சதவீதம் என்பதைத் தட்டவும், ஒவ்வொரு உருப்படியிலும் தொகையைத் தள்ளுபடி செய்ய விரும்பினால், ஒவ்வொன்றிற்கும் தள்ளுபடித் தொகை என்பதைத் தட்டவும் அல்லது உருப்படிகளை இலவசமாக வழங்க விரும்பினால், இலவசம் என்பதைத் தட்டவும்.
    • நீங்கள் சதவீதத் தள்ளுபடியை வழங்கினால், ஒரு மதிப்பை உள்ளிடவும்.
    • பின்செல்க என்பதைத் தட்டவும்.
  9. தகுதி பிரிவில், உங்கள் தள்ளுபடியை எந்தெந்த வாடிக்கையாளர்கள் பயன்படுத்தலாம் என்பதைத் தேர்வுசெய்யவும்:

    • அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் உங்கள் தள்ளுபடி கிடைக்கச் செய்ய, அனைத்து வாடிக்கையாளர்கள் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
    • குறிப்பிட்ட வாடிக்கையாளர்களுக்கு உங்கள் தள்ளுபடியைக் கிடைக்கச் செய்ய, குறிப்பிட்ட வாடிக்கையாளர்கள் என்பதைத் தேர்ந்தெடுத்து, தள்ளுபடியை ஒதுக்க வேண்டிய வாடிக்கையாளர்களைத் தேர்ந்தெடுத்து, பின்னர் சேர் என்பதைக் கிளிக் செய்யவும்.
    • குறிப்பிட்ட வாடிக்கையாளர் பிரிவுகளுக்கு உங்கள் தள்ளுபடி கிடைக்கச் செய்ய, வாடிக்கையாளர் பிரிவுகள் என்பதைத் தேர்ந்தெடுத்து, நீங்கள் தள்ளுபடியை ஒதுக்க விரும்பும் வாடிக்கையாளர் பிரிவுகளைத் தேர்ந்தெடுத்து, பின்னர் சேர் என்பதைக் கிளிக் செய்யவும்.
    • குறிப்பிட்ட சந்தைகளில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு மட்டும் உங்கள் தள்ளுபடியைக் கிடைக்கச் செய்ய, சந்தைகள் என்பதைத் தேர்ந்தெடுத்து, தள்ளுபடியை ஒதுக்க வேண்டிய சந்தைகளைத் தேர்ந்தெடுத்து, பின்னர் சேர் என்பதைக் கிளிக் செய்யவும்.
  10. விருப்பத்தேர்வு: ஒரு ஆர்டருக்கான பயன்பாடுகள் என்பதைத் தட்டி, ஒரு ஆர்டருக்கு இந்தச் சலுகையைப் பயன்படுத்தக்கூடிய அதிகபட்ச முறைகளின் எண்ணிக்கையை உள்ளிடவும்.

  11. வாடிக்கையாளர்கள் இந்தத் தள்ளுபடிக் குறியீட்டை மற்ற தள்ளுபடிக் குறியீடுகளுடன் இணைத்துப் பயன்படுத்த அனுமதிக்க, இதனுடன் இணைகிறது என்பதைத் தட்டி, இந்தத் தள்ளுபடியை எந்தத் தள்ளுபடிக் குறியீடுகளின் வகுப்புகளோடு இணைக்கத் தகுதிபெற விரும்புகிறீர்களோ அவற்றைத் தேர்வுசெய்யவும்.

  12. தள்ளுபடிக்கான தொடக்கத் தேதியை அமைக்க Active dates என்பதைத் தட்டவும். தள்ளுபடிக்கான முடிவுத் தேதியை அமைக்க விரும்பினால், Set end date என்பதைத் தட்டி, தள்ளுபடி எப்போது முடிவடையும் என்பதைத் தேர்வுசெய்ய முடிவுத் தேதிக்கான நாள்காட்டியைப் பயன்படுத்தவும். தள்ளுபடிக்கான முடிவுத் தேதியை நீங்கள் தேர்வுசெய்யவில்லை எனில், அது காலாவதி ஆகாது. தள்ளுபடி ஒரு நாளுக்கு மட்டுமே செல்லுபடியாக வேண்டுமென நீங்கள் விரும்பினால், தொடக்கத் தேதி மற்றும் முடிவுத் தேதி ஆகிய இரண்டிற்கும் ஒரே நாள்காட்டி நாளைத் தேர்ந்தெடுக்கவும்.

  13. விருப்பத்தேர்வு: உங்கள் தள்ளுபடிகளின் பட்டியலை வடிகட்ட உதவுவதற்காக உங்கள் தள்ளுபடிகளுக்குக் குழுவாக்கல் டேக்குகளைச் சேர்க்கவும். டேக்குகள் பிரிவில், Plus circle டேக்குகளைச் சேர் என்பதைத் தட்டவும், பின்னர் உங்கள் தள்ளுபடியில் சேர்க்க ஒரு டேக்கைத் தேடவும் அல்லது உள்ளிடவும்.

  14. சேமி அல்லது ✓ என்பதைத் தட்டவும்.