செயலிகள் மூலம் தள்ளுபடிகளை உருவாக்குதல்

Shopify இல் கிடைக்கும் இயல்புநிலைத் தள்ளுபடி வகைகளுக்கு கூடுதலாக, செயலி மூலம் நீங்கள் பிற தள்ளுபடி வகைகளையும் உருவாக்கலாம்.

மூன்றாம் தரப்புச் செயலி அல்லது தனிப்பயன் செயலி மூலம் நீங்கள் உருவாக்கக்கூடிய தள்ளுபடிகளுக்கான பின்வரும் எடுத்துக்காட்டுகளைச் சரிபார்க்கவும்:

  • வாங்கப்படும் தயாரிப்புகளின் மொத்தச் செலவின் அடிப்படையில், ஆர்டருக்கான ஷிப்பிங் செலவில் ஒரு குறிப்பிட்ட தொகையைக் குறைக்கும் தள்ளுபடி.
  • ஒரே நேரத்தில் ஆர்டருக்கு 10% தள்ளுபடி மற்றும் இலவச ஷிப்பிங்கை வழங்குவது போன்ற ஒன்றுக்கும் மேற்பட்ட தள்ளுபடிச் சேமிப்புகளை உள்ளடக்கிய ஒற்றைத் தள்ளுபடி.

செயலி மூலம் உங்களுக்கான தள்ளுபடியை உருவாக்குதல்

செயலி மூலம் உங்கள் Shopify நிர்வாகியில் நீங்கள் பிற தள்ளுபடி வகைகளையும் உருவாக்கலாம். சில மூன்றாம் தரப்புச் செயலிகள் எனில், செயலியின் அமைப்புகளில் உங்கள் தள்ளுபடிகளை உருவாக்க வேண்டியிருக்கலாம்.

படிகள்:

  1. உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து, தள்ளுபடிகள் பகுதிக்குச் செல்லவும்.

  2. தள்ளுபடியை உருவாக்கு என்பதைக் கிளிக் செய்யவும்.

  3. தள்ளுபடி வகையைத் தேர்ந்தெடு உரையாடலில், நீங்கள் பயன்படுத்தும் செயலியிலிருந்து உங்களுக்குத் தேவையான தள்ளுபடி வகையைத் தேர்ந்தெடுக்கவும்.

  4. உங்கள் தள்ளுபடியை அமைத்து, பின்னர் தள்ளுபடியைச் சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.

செயலி மூலம் நீங்கள் எந்தெந்தத் தள்ளுபடிகளை உருவாக்கியுள்ளீர்கள் என்பதைச் சரிபார்க்க, உங்கள் Shopify நிர்வாகியின் தள்ளுபடிகள் பிரிவில் உள்ள தள்ளுபடியின் மீது கர்சரை வைக்கலாம். இப்போது ஒரு செயலிப் பேட்ஜ் மற்றும் உதவிக்குறிப்பு உரை காண்பிக்கப்படும்.

பல சேமிப்புகளுடன் கூடிய ஒற்றைத் தள்ளுபடிகள்

இணக்கமான மூன்றாம் தரப்புத் தள்ளுபடிச் செயலி அல்லது சொந்தமாகத் தனிப்பயன் செயலி மூலம் பல சேமிப்புகளுடன் கூடிய ஒற்றைத் தள்ளுபடியை நீங்கள் உருவாக்கலாம். கார்ட் அல்லது செக்அவுட்டில் காண்பிக்கப்படும்போது ஒன்றுக்கும் மேற்பட்ட தள்ளுபடிச் சேமிப்புகளை உள்ளடக்கிய ஒற்றைத் தானியங்கு தள்ளுபடி அல்லது ஒற்றைத் தள்ளுபடிக் குறியீட்டை வாடிக்கையாளர்களுக்கு நீங்கள் வழங்கலாம்.

இணக்கமான மூன்றாம் தரப்புச் செயலி அல்லது தனிப்பயன் செயலி மூலம் நீங்கள் உருவாக்கக்கூடிய பல சேமிப்புகளைக் கொண்ட ஒற்றைத் தள்ளுபடிகளுக்கான பின்வரும் எடுத்துக்காட்டுகளைச் சரிபார்க்கவும்:

  • ஆர்டருக்கு 10% தள்ளுபடி மற்றும் இலவச ஷிப்பிங் தள்ளுபடியை வழங்கும் WELCOME10 எனும் தள்ளுபடிக் குறியீடு.
  • ஒரே சேகரிப்பிலிருந்து குறிப்பிட்ட எண்ணிக்கையிலான தயாரிப்புகள் வாங்கப்படும்போது ஒவ்வொரு தயாரிப்பு விலைக்கும் 10% தள்ளுபடி வழங்குவதோடு விசுவாச போனஸாக மொத்த ஆர்டர் செலவிலிருந்து கூடுதலாக $10 USD தள்ளுபடியும் வழங்கும் தானியங்கு தள்ளுபடி.

பல சேமிப்புகளைக் கொண்ட ஒற்றைத் தள்ளுபடிக்கான எடுத்துக்காட்டைக் காட்டும் செக்அவுட் திரைப்பிடிப்பு

பல சேமிப்புகளுடன் கூடிய ஒற்றைத் தள்ளுபடிக் குறியீட்டை வரைவு ஆர்டருக்கும் நீங்கள் பயன்படுத்தலாம்.

தள்ளுபடி வகைகளைப் பார்த்தல்

பல சேமிப்புகளைக் கொண்ட ஒற்றைத் தள்ளுபடியை நீங்கள் உருவாக்கினால், அந்தத் தள்ளுபடிக்குப் பொருந்தக்கூடிய தள்ளுபடி வகைகளை நீங்கள் சரிபார்க்கலாம். தயாரிப்புத் தள்ளுபடி வகை, ஆர்டர் தள்ளுபடி வகை, ஷிப்பிங் தள்ளுபடி வகை என வாடிக்கையாளர் செக்அவுட்டில் தள்ளுபடியைப் பயன்படுத்தக்கூடிய பல கூறுகள் தள்ளுபடி வகைகளாகும்.

உங்கள் Shopify நிர்வாகியில் உள்ள தள்ளுபடிகள் பிரிவில், தள்ளுபடியின் அட்டவணையில் உள்ள Type நெடுவரிசையில் உரையுடன் சேர்த்துப் பல்வேறு ஐகான்களும் காண்பிக்கப்படும். உள்ளே எண்ணைக் கொண்ட தள்ளுபடி ஐகான் காண்பிக்கப்பட்டால், அந்தத் தள்ளுபடியில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட தள்ளுபடி வகைகள் உள்ளடக்கப்பட்டுள்ளன என்பதை அது குறிக்கிறது.

Type நெடுவரிசையில் உள்ள ஒரு தள்ளுபடியின் மீது கர்சரை வைக்கும்போது, எண்ணைக் கொண்ட தள்ளுபடி ஐகானுக்குப் பதிலாகப் பின்வரும் ஐகான்களின் கலவை காட்டப்படும்:

  • தயாரிப்பு - தள்ளுபடியில் தயாரிப்புத் தள்ளுபடி வகை உள்ளடக்கப்பட்டுள்ளது என்பதைக் குறிக்கிறது
  • ஆர்டர் - தள்ளுபடியில் ஆர்டர் தள்ளுபடி வகை உள்ளடக்கப்பட்டுள்ளது என்பதைக் குறிக்கிறது
  • ஷிப்பிங் - தள்ளுபடியில் ஷிப்பிங் தள்ளுபடி வகை உள்ளடக்கப்பட்டுள்ளது என்பதைக் குறிக்கிறது

உங்கள் தள்ளுபடியின் அட்டவணையில் உள்ள Combinations நெடுவரிசையில் தயாரிப்பு, ஆர்டர் மற்றும் ஷிப்பிங் ஐகான்களில் ஏதேனும் கறுப்பு நிற அவுட்லைனில் காண்பிக்கப்பட்டால், உங்கள் தள்ளுபடியைப் பிற தள்ளுபடிகளுடன் இணைக்க முடியும் என்பதை அது குறிக்கிறது. அந்த ஐகான்களின் மீது கர்சரை வைக்கும்போது, உங்கள் தள்ளுபடியை இணைக்கக்கூடிய பிற தள்ளுபடிகளின் குறிப்பிட்ட விவரங்களைக் கொண்ட ஓர் உரையாடல் காண்பிக்கப்படும்.

ஒன்றுக்கும் மேற்பட்ட தள்ளுபடிச் சேமிப்புகளை உள்ளடக்கிய ஒற்றைத் தள்ளுபடியை உருவாக்க நீங்கள் ஒரு செயலியைப் பயன்படுத்தினால், உள்ளடக்கப்பட்ட அனைத்துத் தள்ளுபடி வகைகளுடன் இணைவதை அனுமதிக்கும் பிற தள்ளுபடிகளுடன் மட்டுமே அதனை இணைக்க முடியும்.