தள்ளுபடிக் குறியீடுகள் FAQ

தள்ளுபடிக் குறியீடுகள் தொடர்பான பொதுவான கேள்விகளுக்கான பதில்களைக் கண்டறியவும்.

இந்தப் பக்கத்தில்

தயாரிப்புப் பக்கங்களில் தள்ளுபடிக் குறியீடுகளையும் தொகைகளையும் காட்ட முடியுமா?

தள்ளுபடிகள் என்பவை, வாடிக்கையாளரின் கார்ட்டிலும் செக்அவுட்டிலும், தானாகவோ அல்லது வாடிக்கையாளர் தள்ளுபடிக் குறியீட்டை உள்ளிடும்போதோ பயன்படுத்தப்படும் விலைக்குறைப்புகளாகும். ஒப்பீட்டு விலைகளுடன் கூடிய விற்பனை விலை நிர்ணயம் என்பதிலிருந்து தள்ளுபடிகள் வேறுபட்டவை.

தயாரிப்புப் பக்கங்கள் மற்றும் சேகரிப்புப் பக்கங்களில் அடிக்கப்பட்ட (குறுக்குக்கோடிடப்பட்ட) விலைகளுடன் தள்ளுபடிச் சேமிப்பைக் காட்ட, நீங்கள் மூன்றாம் தரப்புத் தள்ளுபடிச் செயலியைப் பயன்படுத்த வேண்டும் அல்லது உங்களுக்கான தனிப்பயன் தீர்வை உருவாக்க ஒரு Shopify பார்ட்னரைப் பணியமர்த்த வேண்டும்.

தள்ளுபடி அமைப்புகளைத் திருத்த முடியுமா?

தள்ளுபடி வகை அமைப்பைத் தவிர மற்ற தள்ளுபடி அமைப்புகளை உங்களால் திருத்த முடியும்; ஒருமுறை தள்ளுபடியை உருவாக்கிய பிறகு தள்ளுபடி வகையைத் திருத்த முடியாது.

வாடிக்கையாளர்கள் ஒரே ஆர்டரில் பல தள்ளுபடிக் குறியீடுகளைப் பயன்படுத்த முடியுமா?

உங்கள் வாடிக்கையாளர்களின் கார்ட் நீங்கள் அமைத்துள்ள நிபந்தனைகளைப் பூர்த்தி செய்யும்போது, அவர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட தள்ளுபடிகளில் இருந்து பயனடைவதற்காகப் பல தள்ளுபடிகளை ஒன்றிணைக்கும் வகையில் நீங்கள் அமைத்துக்கொள்ளலாம். தள்ளுபடிகளை இணைப்பது குறித்து மேலும் அறிக.

தள்ளுபடிக் குறியீட்டுப் பயன்பாட்டைக் கட்டுப்படுத்த முடியுமா?

ஆம், தள்ளுபடியை உருவாக்கு பக்கத்திலுள்ள அதிகபட்ச தள்ளுபடிப் பயன்பாடுகள் பிரிவில் தள்ளுபடிக் குறியீடுகளின் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தலாம். பின்வரும் விருப்பங்களின் எந்தவொரு கலவையையும் உங்களால் தேர்ந்தெடுக்க முடியும்:

  • தள்ளுபடியை ஒட்டுமொத்தமாகப் பயன்படுத்தக்கூடிய முறைகளின் எண்ணிக்கையை வரம்பிடுக
  • ஒரு வாடிக்கையாளருக்கு ஒரு பயன்பாடு என வரம்பிடுக

வாடிக்கையாளர் ஒரு ஆர்டரை நிறைவுசெய்யாத போதும் தள்ளுபடிக் குறியீடு ஏற்கனவே பயன்படுத்தப்பட்டதாக ஏன் குறிக்கப்பட்டுள்ளது?

ஒரு வாடிக்கையாளரால் தள்ளுபடிக் குறியீட்டை மீண்டும் பயன்படுத்த முடியாதபோது, செக்அவுட்டில் பின்வரும் செய்தி காட்டப்படும்: _DISCOUNT_CODE_ தள்ளுபடிக் குறியீடு ஏற்கனவே பயன்படுத்தப்பட்டுள்ளது. அந்த வாடிக்கையாளருக்குப் பொருந்தக்கூடிய எந்த ஆர்டரும் இல்லை எனில், முடிவுபெறாத ஒரு செக்அவுட் இன்னும் அந்தக் குறியீட்டைப் பிடித்து வைத்துள்ளது.

வாடிக்கையாளர் தங்கள் ஆர்டரைச் சமர்ப்பிக்கும்போது, பேமெண்ட் நிறைவடையும் அல்லது தோல்வியடையும் வரை தள்ளுபடிக் குறியீடு அதன் பயன்பாட்டு வரம்பிற்கு எதிராகப் பிடித்துவைக்கப்படுகிறது. பேமெண்ட் நிராகரிக்கப்படும் போது இந்தக் கட்டுப்பாடு விடுவிக்கப்படுகிறது, வாடிக்கையாளர் குறியீட்டை மீண்டும் பயன்படுத்தலாம். செக்அவுட் நிறைவுபெறாதபோது மட்டுமே இந்தத் தடையானது அப்படியே இருக்கும், கட்டண வழங்குநர் தோல்வியடைந்த பேமெண்ட் பற்றிச் சரியாகத் தெரிவிக்காதபோது இது நிகழலாம். இது தொடர்ந்து நடந்தால், கட்டண வழங்குநரையோ செயலியை உருவாக்குபவரையோ தொடர்புகொள்ளவும், ஏனெனில் பிழை அவர்களின் ஒருங்கிணைப்பில்தான் உள்ளது. செயலிக்கான ஆதரவைப் பெறுவது குறித்து அறியவும்.

வாடிக்கையாளருக்குச் சிக்கலைத் தீர்க்க, பின்வரும் விருப்பங்களைச் சரிபார்க்கவும்:

  • ஏற்கனவே உள்ள ஆர்டரைச் சரிபார்க்கவும்: ஆர்டர்கள் பகுதிக்குச் சென்று, வாடிக்கையாளர் ஏற்கனவே குறியீட்டைப் பயன்படுத்தியுள்ளாரா என்பதை உறுதிப்படுத்த அவரைத் தேடவும். ஒரு குறியீட்டைச் செயலற்றதாக்கி மீண்டும் செயல்படுத்துவதோ, அல்லது அதன் பெயரை மாற்றுவதோ, அதன் பயன்பாட்டு வரலாற்றை மீட்டமைக்காது.
  • மாற்றுக் குறியீட்டை வழங்கவும்: அதே நிபந்தனைகளுடன் புதிய தள்ளுபடிக் குறியீட்டை உருவாக்கி, பாதிக்கப்பட்ட வாடிக்கையாளருக்கு அனுப்பவும். புதிய குறியீடு அதற்கெனத் தனியான பயன்பாட்டு வரலாற்றைக் கொண்டுள்ளது.

தள்ளுபடிக் குறியீடுகளுக்கான காலாவதித் தேதிகள் எவ்வாறு செயல்படுகின்றன?

நீங்கள் தள்ளுபடிக்கான காலாவதித் தேதியை அமைத்தால், நிர்வாகியில் காட்டப்படும் நேர மண்டலத்தின் அடிப்படையில், நீங்கள் அமைத்துள்ள முடிவுத் தேதியில், முடிவு நேரத்தில் அந்தத் தள்ளுபடி காலாவதியாகிவிடும்.

ரோல்அவுட் காரணமாக ஏன் என் தள்ளுபடி செயலில் உள்ளது அல்லது செயலற்றதாக உள்ளது?

ஒரு ரோல்அவுட் அதில் உள்ள வாடிக்கையாளர்களுக்குத் தள்ளுபடியைச் செயல்படுத்தலாம் அல்லது செயலற்றதாக்கலாம். தள்ளுபடியின் சொந்தச் செயலாக்கத் தேதிகள் பொருந்தும்போது அல்லது, தள்ளுபடியைச் செயல்படுத்தும் செயலில் உள்ள ரோல்அவுட் அந்த வாடிக்கையாளருக்குப் பொருந்தும்போது ஒரு வாடிக்கையாளருக்குத் தள்ளுபடி செயல்படும். செயலில் உள்ள ரோல்அவுட் ஒரு வாடிக்கையாளருக்குத் தள்ளுபடியைச் செயலற்றதாக்கினால், அந்தத் தள்ளுபடியின் சொந்தச் செயலாக்கத் தேதிகள் பொருந்தினாலும் கூட, அந்த வாடிக்கையாளருக்கு அது செயல்படாது. தள்ளுபடியின் விவரப் பக்கம் ரோல்அவுட்டையும் தள்ளுபடியின் செயலாக்க நிலையையும் காட்டும். ரோல்அவுட்டில் உள்ள தள்ளுபடிகள் பற்றி மேலும் அறிக.

செயலில் உள்ள தேதிகளுடன் தள்ளுபடி ரோல்அவுட்கள் எவ்வாறு செயல்படுகின்றன?

ரோல்அவுட்டின் பகுதியாக இருக்கும் தள்ளுபடி தனக்கெனச் செயலில் உள்ள தேதிகளை வைத்துள்ளது, மேலும் அந்தத் தேதிகள் ரோல்அவுட்டைச் சாராமல் தொடர்ந்து பொருந்தும். ரோல்அவுட் நிரந்தரமாகப் பயன்படுத்தப்பட்டால், அந்த ரோல்அவுட் செயல்படுத்தும் தள்ளுபடி அதன் முடிவுத் தேதியை இழந்துவிடும், அந்தத் தேதி எதிர்காலத்தில் இருந்தால் தவிர, அதன் தொடக்கத் தேதியை அது தக்கவைத்துக்கொள்ளும். எதிர்காலத் தொடக்கத் தேதியைக் கொண்ட தள்ளுபடியானது நீங்கள் ரோல்அவுட்டைப் பயன்படுத்தும் போது தொடங்கும். ரோல்அவுட் செயலற்றதாக்கும் தள்ளுபடியானது காலாவதியாகிவிடும்.

செக்அவுட்டின் போது என் வாடிக்கையாளர்களால் ஏன் தள்ளுபடிக் குறியீட்டு உள்ளீட்டுக் புலத்தைப் பார்க்க முடியவில்லை?

செக்அவுட்டின் போது தள்ளுபடிக் குறியீட்டு உள்ளீட்டுப் புலம் வாடிக்கையாளர்களுக்குக் காட்டப்படுகிறதா இல்லையா என்பதைப் பாதிக்கும் பல காரணிகள் உள்ளன:

  • உங்கள் வாடிக்கையாளர்களுக்குக் கிடைக்குமாறு, செயலில் உள்ள தள்ளுபடிக் குறியீடு குறைந்தது 1 ஆவது உங்களிடம் இருக்க வேண்டும்.
  • வரைவு ஆர்டர் இன்வாய்ஸ் அல்லது இணைப்பிலிருந்து செக்அவுட் வந்திருந்தால், வாடிக்கையாளர்கள் தள்ளுபடிக் குறியீடுகளைத் தாங்களாகவே பயன்படுத்தும் விருப்பம் இயல்பாகவே கிடைக்காது. வரைவு ஆர்டர்களுக்கான தள்ளுபடிகள் பற்றி மேலும் அறிக.
  • செக்அவுட்டின் போது வாடிக்கையாளர் Shop Pay என்பதைப் பயன்படுத்தினால், தள்ளுபடிக் குறியீட்டு உள்ளீட்டுப் புலம் காட்டப்படுவதற்கு முன்பு, அவர்கள் தங்கள் Shop Pay கணக்கில் உள்நுழைய வேண்டும்.
  • உங்கள் ஸ்டோரில் நிறுவப்பட்டிருக்கும் ஒரு மூன்றாம் தரப்புச் செயலியானது தயாரிப்பு விலையைப் பாதித்தால் அல்லது செக்அவுட் நடத்தையை மாற்றியமைத்தால், அந்தச் செயலி எவ்வாறு செயல்படுகிறது என்பதைப் பொறுத்து, தள்ளுபடிக் குறியீட்டுப் புலம் காட்டப்படாமல் போகலாம்.

தேர்ந்தெடுக்கப்பட்ட வாடிக்கையாளர் குழுவிற்குத் தள்ளுபடிக் குறியீடுகளை அனுப்ப முடியுமா?

பொதுவான பண்புகளைக் கொண்டுள்ள வாடிக்கையாளர்களின் குழுவிற்குத் தள்ளுபடிக் குறியீட்டை அனுப்ப, முதலில் நீங்கள் ஒரு வாடிக்கையாளர் பிரிவை உருவாக்க வேண்டும். தேர்ந்தெடுக்கப்பட்ட வாடிக்கையாளர்கள் குழுவிற்குத் தள்ளுபடிக் குறியீடுகளை அனுப்ப, வாடிக்கையாளர் பிரிவைப் பயன்படுத்தலாம். எடுத்துக்காட்டாக, உங்கள் மின்னஞ்சல் சந்தைப்படுத்தலுக்குப் பதிவுசெய்துள்ள வாடிக்கையாளர்களின் பிரிவை உருவாக்கி, பின்னர் அந்த வாடிக்கையாளர்களுக்குத் தள்ளுபடிக் குறியீட்டை அனுப்ப, ஒரு மின்னஞ்சல் கேம்பெயினை உருவாக்கலாம்.

தயாரிப்புச் சேகரிப்புகளுக்குத் தள்ளுபடிகளைப் பயன்படுத்தலாமா?

சேகரிப்புத் தள்ளுபடிகளை இரண்டு வழிகளில் பயன்படுத்தலாம்: கார்ட்டில் பொருந்தக்கூடிய ஒவ்வொரு உருப்படிக்கும் ஒரு ஆர்டருக்கு ஒரு முறை பயன்படுத்தப்படும் நிலையான பணத் தொகையாக அல்லது முழுச் சேகரிப்புக்கும் பயன்படுத்தப்படும் சதவீதத் தள்ளுபடியாக. தள்ளுபடியைச் சேர் பக்கத்திலுள்ள பொருந்தும் இடம் பிரிவில், நீங்கள் விரும்பும் முறையைத் தேர்வுசெய்யவும்.

சேகரிப்பில் உள்ள தனிப்பட்ட தயாரிப்பு மாறுபாட்டிற்குத் தள்ளுபடி வழங்க முடியுமா?

ஆம், நீங்கள் தள்ளுபடி வழங்கும் சேகரிப்பில் தனிப்பட்ட தயாரிப்பு மாறுபாடுகளைச் சேர்க்கலாம்.

செக்அவுட் கார்ட்டில் தயாரிப்பு சார்ந்த தள்ளுபடிக் குறியீடுகள் எத்தனை முறை பொருந்தும்?

வாடிக்கையாளர் தள்ளுபடிக் குறியீட்டைப் பயன்படுத்தும்போது, தயாரிப்பு சார்ந்த தள்ளுபடிக் குறியீடுகள் ஒரு தயாரிப்பின் அனைத்து அளவுகளுக்கும் பொருந்தும். உதாரணமாக, ஒரு வாடிக்கையாளர் ஒரே தயாரிப்பில் 10ஐச் சேர்த்தால், தயாரிப்பு சார்ந்த குறியீடு அனைத்து 10 உருப்படிகளுக்கும் தள்ளுபடியை வழங்குகிறது. தள்ளுபடி அமைப்புகளில் ஒரு ஆர்டருக்கு ஒரு முறை மட்டுமே தள்ளுபடியைப் பயன்படுத்தும்படியும் நீங்கள் தேர்வுசெய்யலாம்.

ஒரு குறிப்பிட்ட தயாரிப்பு மாறுபாட்டிற்குத் தள்ளுபடிக் குறியீட்டைப் பயன்படுத்தலாமா?

தயாரிப்பின் குறிப்பிட்ட மாறுபாடுகளுக்கு நீங்கள் தள்ளுபடிக் குறியீடுகளைப் பயன்படுத்தலாம். இந்தக் குறியீடுகள் கார்ட்டிலுள்ள தள்ளுபடி செய்யப்பட்ட மாறுபாட்டின் அனைத்து அளவுகளுக்கும் பொருந்தும்.

கிஃப்ட் கார்டு வாங்குவதற்குத் தள்ளுபடியைப் பயன்படுத்த முடியுமா?

இது சூழ்நிலையைப் பொறுத்தது. பெரும்பாலான தள்ளுபடிகளைக் கிஃப்ட் கார்டுகளுக்குப் பயன்படுத்த முடியாது. தயாரிப்பு ஒரு கிஃப்ட் கார்டாக இருக்கும் போது, தயாரிப்பு சார்ந்த தள்ளுபடியை வழங்குவது இதற்கு விதிவிலக்காகும். கிஃப்ட் கார்டு தயாரிப்பிற்குத் தள்ளுபடியைச் சேர்ப்பது எப்படி என அறிக.

ஒரே நேரத்தில் பல தள்ளுபடிகளை முடக்க முடியுமா?

ஒரே நேரத்தில் பல தள்ளுபடிக் குறியீடுகளை முடக்குவதற்கு நீங்கள் மொத்தச் செயல்களைச் செய்ய முடியும்.

எந்தெந்தத் தள்ளுபடிக் குறியீடுகள் அதிகமாகப் பயன்படுத்தப்படுகின்றன என்பதை நான் எப்படி அறிவது?

உங்கள் தள்ளுபடிக் குறியீடுகள் எவ்வளவு அடிக்கடி பயன்படுத்தப்படுகின்றன என்பதை அறிய, தள்ளுபடி வாரியான விற்பனை அறிக்கையைப் பயன்படுத்தலாம். அறிக்கை குறித்த விவரங்களுக்கு, தள்ளுபடி வாரியான விற்பனை என்பதைப் பார்க்கவும்.

ஒரு வாடிக்கையாளர் செல்லாத தள்ளுபடிக் குறியீடு அல்லது கலவையை உள்ளிட்டால் என்ன நடக்கும்?

செக்அவுட்டின் போது, இல்லாத அல்லது தற்போது செயலில் இல்லாத தள்ளுபடிக் குறியீட்டை வாடிக்கையாளர் உள்ளிட்டால், பின்வரும் செய்தி காட்டப்படும்: செல்லுபடியாகும் தள்ளுபடிக் குறியீட்டை உள்ளிடவும்.

செக்அவுட்டின் போது, இருக்கும் ஆனால் அவர்களின் கார்ட்டிலுள்ள தயாரிப்புகளுக்குப் பொருந்தாத தள்ளுபடிக் குறியீட்டை வாடிக்கையாளர் உள்ளிட்டால், பின்வரும் பிழை காட்டப்படும்: _DISCOUNT_CODE_ என்ற தள்ளுபடிக் குறியீடு உங்கள் கார்ட்டிலுள்ள உருப்படிகளுக்குச் செல்லுபடியாகாது.

செக்அவுட்டின் போது, வாடிக்கையாளர் ஒன்றுக்கும் மேற்பட்ட தள்ளுபடிக் குறியீடுகளை உள்ளிட்டு, அவை ஒன்றாகப் பயன்படுத்த முடியாதவையாக இருந்தால், பின்வரும் செய்தி காட்டப்படும்: சில தள்ளுபடிக் குறியீடுகளை ஒன்றாகப் பயன்படுத்த முடியாது. நாங்கள் சிறந்த கலவையைப் பயன்படுத்தியுள்ளோம்.

விற்பனைச் சேனல்களில் தள்ளுபடிகள் எவ்வாறு செயல்படுகின்றன?

நீங்கள் உருவாக்கும் தள்ளுபடிகளை உங்கள் விற்பனைச் சேனல்களிலும் ஆன்லைன் ஸ்டோரிலும் வாடிக்கையாளர்கள் பயன்படுத்தலாம், வாடிக்கையாளர்கள் தள்ளுபடிகளை மீட்டுக்கொள்வதைக் கட்டுப்படுத்தும் உங்கள் திறன் பின்வரும் சூழ்நிலைகளில் மட்டுமே சாத்தியமாகும்:

  • உங்கள் ஸ்டோருக்காக நீங்கள் அமைத்துள்ள அனைத்து விற்பனைச் சேனல்களிலும் வாடிக்கையாளர்கள் தள்ளுபடிக் குறியீடுகளை மீட்டுக்கொள்ளலாம். குறிப்பிட்ட விற்பனைச் சேனல்களில் வாடிக்கையாளர்கள் தள்ளுபடிக் குறியீடுகளை மீட்டுக்கொள்வதை உங்களால் கட்டுப்படுத்த முடியாது.
  • உங்கள் ஸ்டோருக்காக நீங்கள் அமைத்துள்ள அனைத்து விற்பனைச் சேனல்களிலும் தானியங்கு தள்ளுபடிகள் பயன்படுத்தப்படும். விற்பனைப் புள்ளி (POS) பொறுத்தவரை, POS Pro இடங்களுக்கு மட்டுமே தானியங்கு தள்ளுபடியை நீங்கள் செயல்படுத்த முடியும். தள்ளுபடியின் தகுதி அனைத்து வாடிக்கையாளர்களும் என அமைக்கப்படும்போது POS Pro இடங்களில் பயன்படுத்து என்பதைத் தேர்ந்தெடுத்தால் அல்லது தள்ளுபடியின் தகுதி சந்தைகள் என அமைக்கப்படும்போது, செல்லுபடியாகும் சில்லறை விற்பனைச் சந்தையை நீங்கள் ஒதுக்கினால், தானியங்கு தள்ளுபடிகள் செயல்படுத்தப்படும்.

சமூக ஊடகப் பதிவுகள், விளம்பரங்கள், POS டைல்கள் மற்றும் பிற சேனல் சார்ந்த விளம்பர உள்ளடக்கங்களில் உங்கள் தள்ளுபடிகளைச் சிறப்பிக்க அவற்றுக்கான விற்பனைச் சேனல்களை நீங்கள் செயல்படுத்தலாம். விற்பனைச் சேனல்களிலுள்ள தள்ளுபடிகள் பற்றி மேலும் அறிக.

செக்அவுட்டின் போது வாங்குதலுக்குப் பிந்தைய பக்கத்திற்குத் தள்ளுபடிகள் பொருந்துமா?

Shopify நிர்வாகியில் உருவாக்கப்படும் தள்ளுபடிகள், செக்அவுட்டில் உள்ள வாங்குதலுக்குப் பிந்தைய பக்கத்துடன் இணங்காது. நீங்கள் நிறுவிய செயலியானது வாங்குதலுக்குப் பிந்தைய சலுகைகளில் பிரத்தியேகத் தள்ளுபடியை ஆதரித்தால், தனிப்பயனாக்கத்தை அமைக்க அதன் வழிமுறைகளைப் பின்பற்றவும்.

வாடிக்கையாளரின் செக்அவுட்டிலிருந்து தள்ளுபடிக் குறியீட்டை நான் நிராகரிக்க முடியுமா?

செக்அவுட்டில் ஒரு வாடிக்கையாளர் குறிப்பிட்ட தள்ளுபடிக் குறியீட்டை உள்ளிடும்போது, வாடிக்கையாளரின் ஆர்டர் விவரங்களின் அடிப்படையில் அந்தத் தள்ளுபடிக் குறியீட்டை நீங்கள் நிராகரிக்க வேண்டியிருந்தால், தள்ளுபடிக் குறியீட்டை அகற்றி வாடிக்கையாளருக்குப் பிரத்தியேகச் செய்தியைக் காட்ட, மூன்றாம் தரப்புச் செயலி அல்லது தனிப்பயன் செயலியைப் பயன்படுத்தலாம். பிரத்தியேகச் செய்தி அனுப்புதல் மூலம் தள்ளுபடிக் குறியீடுகளை நிராகரிக்கத் தள்ளுபடி செயல்பாட்டை உருவாக்குவது எப்படி என அறிக.