உங்கள் தள்ளுபடிகளை நிர்வகித்தல் மற்றும் திருத்துதல்
ஏற்கனவே உள்ள உங்கள் தள்ளுபடிக் குறியீடுகள் மற்றும் தானியங்கு தள்ளுபடிகளைப் பல்வேறு வழிகளில் நிர்வகிக்கலாம். உங்கள் தள்ளுபடிகளைத் திருத்தலாம், நகலெடுக்கலாம், பகிரலாம், முடக்கலாம் மற்றும் நீக்கலாம்.
இந்தப் பக்கத்தில்
- ஒரு தள்ளுபடியைத் திருத்துதல்
- தள்ளுபடிகளுக்கான வாடிக்கையாளர் மற்றும் சந்தைத் தகுதியை நிர்வகித்தல்
- ஒரு தள்ளுபடியை நகலெடுத்தல்
- தள்ளுபடிக் காலவரிசையைப் பயன்படுத்துதல்
- பகிரக்கூடிய இணைப்பு அல்லது QR குறியீட்டைப் பயன்படுத்தி தள்ளுபடியை விளம்பரப்படுத்துதல்
- தள்ளுபடிகளை வடிகட்டுதல்
- ரோல்அவுட்டிலுள்ள தள்ளுபடிகள்
- ஒரு தள்ளுபடியை முடக்குதல்
- முடக்கப்பட்ட தள்ளுபடியை மீண்டும் செயல்படுத்துதல்
- தள்ளுபடிகளை அழித்தல்
ஒரு தள்ளுபடியைத் திருத்துதல்
டெஸ்க்டாப்
உங்கள் Shopify நிர்வாகியில் இருந்து, தள்ளுபடிகள் என்பதற்குச் செல்லவும்.
நீங்கள் திருத்த விரும்பும் தள்ளுபடியைக் கிளிக் செய்யவும்.
தள்ளுபடியின் அமைப்புகளைத் திருத்தவும்.
சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.
மொபைல்
Shopify செயலியில் இருந்து,
ஐகானைத் தட்டவும்.
தள்ளுபடிகள் என்பதைத் தட்டவும்.
நீங்கள் திருத்த விரும்பும் தள்ளுபடியைத் தட்டவும்.
தள்ளுபடியின் அமைப்புகளைத் திருத்தவும்.
சேமி அல்லது ✓ என்பதைத் தட்டவும்.
தள்ளுபடிகளுக்கான வாடிக்கையாளர் மற்றும் சந்தைத் தகுதியை நிர்வகித்தல்
நீங்கள் அமைக்கும் நிபந்தனைகளின் அடிப்படையில் எந்த வாடிக்கையாளர்கள் தள்ளுபடிகளைப் பெறுகிறார்கள் என்பதைக் கட்டுப்படுத்தலாம். பின்வரும் வழிகளில் தள்ளுபடிக் குறியீடுகள் மற்றும் தானியங்கு தள்ளுபடிகளுக்கான வாடிக்கையாளர் மற்றும் சந்தைத் தகுதியை நீங்கள் குறிப்பிடலாம்:
- அனைத்து வாடிக்கையாளர்களும்: உங்கள் தள்ளுபடிகளை உங்கள் வாடிக்கையாளர்கள் அனைவரும் பயன்படுத்தலாம்.
- சந்தைகள்: எந்தக் B2B நிறுவனத்தின் இருப்பிடச் சந்தைகள், பிராந்தியச் சந்தைகள் அல்லது சில்லறை விற்பனை இருப்பிடச் சந்தைகளுக்கு உங்கள் தள்ளுபடி கிடைக்கும் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
- வாடிக்கையாளர் பிரிவுகள்: வாடிக்கையாளர் பிரிவுகள் ஒத்த குணாதிசயங்களைக் கொண்ட வாடிக்கையாளர்களின் குழுக்களுக்குத் தள்ளுபடிகளை வழங்க உங்களை அனுமதிக்கின்றன. எடுத்துக்காட்டாக, இதைக்கொண்டு வாடிக்கையாளர் பிரிவை உருவாக்குவதன் மூலம் இதற்கு முன்பு வாங்காத வாடிக்கையாளர்களை நீங்கள் இலக்காகக் கொள்ளலாம்:
number_of_orders = 0. இந்த வாடிக்கையாளர்கள் சரியான மின்னஞ்சல் முகவரி அல்லது மொபைல் எண்ணைப் பயன்படுத்திச் செக்அவுட் செய்யும்போது அவர்களை அடையாளம் காண முடியும்.- தானியங்கு தள்ளுபடிகளுக்கு, ஒற்றைத் தள்ளுபடிக்கு அதிகபட்சம் 5 வாடிக்கையாளர் பிரிவுகளை நீங்கள் கொண்டிருக்கலாம்.
- தள்ளுபடிக் குறியீடுகளுக்கு, ஒற்றைத் தள்ளுபடிக்கு அதிகபட்சம் 100 வாடிக்கையாளர் பிரிவுகளை நீங்கள் கொண்டிருக்கலாம்.
- குறிப்பிட்ட வாடிக்கையாளர்கள்: உங்கள் தள்ளுபடியைப் பயன்படுத்தக்கூடிய குறிப்பிட்ட வாடிக்கையாளர்களைத் தேர்ந்தெடுக்கவும்.
படிகள்:
டெஸ்க்டாப்
உங்கள் Shopify நிர்வாகியில் இருந்து, தள்ளுபடிகள் என்பதற்குச் செல்லவும்.
நீங்கள் திருத்த விரும்பும் தள்ளுபடியைக் கிளிக் செய்யவும்.
தகுதி பிரிவில், எந்த வாடிக்கையாளர்கள் உங்கள் தள்ளுபடியைப் பயன்படுத்தலாம் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்:
- அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் உங்கள் தள்ளுபடி கிடைக்கச் செய்ய, அனைத்து வாடிக்கையாளர்களும் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
- குறிப்பிட்ட வாடிக்கையாளர்களுக்கு உங்கள் தள்ளுபடி கிடைக்கச் செய்ய, குறிப்பிட்ட வாடிக்கையாளர்கள் என்பதைத் தேர்ந்தெடுத்து, நீங்கள் தள்ளுபடியை ஒதுக்க விரும்பும் வாடிக்கையாளர்களைத் தேர்ந்தெடுத்து, சேர் என்பதைக் கிளிக் செய்யவும்.
- குறிப்பிட்ட வாடிக்கையாளர் பிரிவுகளுக்கு உங்கள் தள்ளுபடி கிடைக்கச் செய்ய, வாடிக்கையாளர் பிரிவுகள் என்பதைத் தேர்ந்தெடுத்து, நீங்கள் தள்ளுபடியை ஒதுக்க விரும்பும் வாடிக்கையாளர் பிரிவுகளைத் தேர்ந்தெடுத்து, சேர் என்பதைக் கிளிக் செய்யவும்.
- குறிப்பிட்ட சந்தைகளில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு மட்டும் உங்கள் தள்ளுபடி கிடைக்கச் செய்ய, சந்தைகள் என்பதைத் தேர்ந்தெடுத்து, நீங்கள் தள்ளுபடியை ஒதுக்க விரும்பும் சந்தைகளைத் தேர்ந்தெடுத்து, சேர் என்பதைக் கிளிக் செய்யவும்.
விருப்பத்திற்குரியது: தள்ளுபடிக்கான தகுதியிலிருந்து ஒரு தனிநபர் வாடிக்கையாளரையோ வாடிக்கையாளர்களின் குழுவையோ அகற்ற, திருத்து என்பதைக் கிளிக் செய்து, பின்னர் வாடிக்கையாளர் அல்லது வாடிக்கையாளர்களின் குழுவின் தேர்வை நீக்கவும்.
சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.
மொபைல்
Shopify செயலியில் இருந்து,
ஐகானைத் தட்டவும்.
தள்ளுபடிகள் என்பதைத் தட்டவும்.
நீங்கள் திருத்த விரும்பும் தள்ளுபடியைத் தட்டவும்.
தகுதி பிரிவில், எந்த வாடிக்கையாளர்கள் உங்கள் தள்ளுபடியைப் பயன்படுத்தலாம் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்:
- அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் உங்கள் தள்ளுபடி கிடைக்கச் செய்ய, அனைத்து வாடிக்கையாளர்களும் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
- குறிப்பிட்ட வாடிக்கையாளர்களுக்கு உங்கள் தள்ளுபடி கிடைக்கச் செய்ய, குறிப்பிட்ட வாடிக்கையாளர்கள் என்பதைத் தேர்ந்தெடுத்து, நீங்கள் தள்ளுபடியை ஒதுக்க விரும்பும் வாடிக்கையாளர்களைத் தேர்ந்தெடுத்து, சேர் என்பதைத் தட்டவும்.
- குறிப்பிட்ட வாடிக்கையாளர் பிரிவுகளுக்கு உங்கள் தள்ளுபடி கிடைக்கச் செய்ய, வாடிக்கையாளர் பிரிவுகள் என்பதைத் தேர்ந்தெடுத்து, நீங்கள் தள்ளுபடியை ஒதுக்க விரும்பும் வாடிக்கையாளர் பிரிவுகளைத் தேர்ந்தெடுத்து, சேர் என்பதைத் தட்டவும்.
- குறிப்பிட்ட சந்தைகளில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு மட்டும் உங்கள் தள்ளுபடி கிடைக்கச் செய்ய, சந்தைகள் என்பதைத் தேர்ந்தெடுத்து, நீங்கள் தள்ளுபடியை ஒதுக்க விரும்பும் சந்தைகளைத் தேர்ந்தெடுத்து, சேர் என்பதைத் தட்டவும்.
விருப்பத்திற்குரியது: தள்ளுபடிக்கான தகுதியிலிருந்து ஒரு தனிநபர் வாடிக்கையாளரையோ வாடிக்கையாளர்களின் குழுவையோ அகற்ற, திருத்து என்பதைத் தட்டி, பின்னர் வாடிக்கையாளர் அல்லது வாடிக்கையாளர்களின் குழுவின் தேர்வை நீக்கவும்.
சேமி அல்லது ✓ என்பதைத் தட்டவும்.
தள்ளுபடியை நகலெடுத்தல்
உங்கள் Shopify நிர்வாகியிலிருந்து ஏற்கனவே உள்ள தள்ளுபடியை நீங்கள் நகலெடுக்கலாம்.
படிகள்:
டெஸ்க்டாப்
உங்கள் Shopify நிர்வாகியில் இருந்து, தள்ளுபடிகள் என்பதற்குச் செல்லவும்.
நீங்கள் நகலெடுக்க விரும்பும் தள்ளுபடியைக் கிளிக் செய்யவும்.
நகலெடு என்பதைக் கிளிக் செய்யவும்.
நகலெடுக்கப்பட்ட தள்ளுபடியில் ஏதேனும் மாற்றங்களைச் செய்யுங்கள்.
சேமி என்பதைக் கிளிக் செய்யவும்.
மொபைல்
Shopify செயலியில் இருந்து,
ஐகானைத் தட்டவும்.
தள்ளுபடிகள் என்பதைத் தட்டவும்.
நீங்கள் நகலெடுக்க விரும்பும் தள்ளுபடியைத் தட்டவும்.
அல்லது
என்பதைத் தட்டி, பின்னர் நகலெடு என்பதைத் தட்டவும்.
நகலெடுக்கப்பட்ட தள்ளுபடியில் ஏதேனும் மாற்றங்களைச் செய்யுங்கள்.
சேமி அல்லது ✓ என்பதைத் தட்டவும்.
தள்ளுபடிக் காலவரிசையைப் பயன்படுத்துதல்
நீங்கள் ஒரு தள்ளுபடியை உருவாக்கிய பிறகு, அதன் செயல்பாட்டு வரலாற்றைக் கோடிட்டுக் காட்டும் காலவரிசை தள்ளுபடியின் அமைப்புகள் பக்கத்தில் காட்டப்படும்.
தள்ளுபடி உருவாக்கப்பட்ட தேதி மற்றும் நேரத்தையும், தள்ளுபடி எப்போது செயலில் உள்ளது அல்லது காலாவதியாகிறது என்பதையும் காலவரிசை காட்டுகிறது. தள்ளுபடியில் செய்யப்படும் திருத்தங்கள் சேமிக்கப்பட்ட தேதி மற்றும் நேரத்தையும் இது காட்டுகிறது, ஆனால் அது செய்யப்பட்ட குறிப்பிட்ட திருத்தத்தை விவரிக்காது.
ஒரு தள்ளுபடியின் உருவாக்கம் மற்றும் திருத்தங்களைக் கண்காணிப்பதற்கு கூடுதலாக, தள்ளுபடி தொடர்பான செயல்பாட்டைப் பற்றிய கூடுதல் விவரங்களை வழங்க நீங்களும் உங்கள் பணியாளர்களும் கருத்துகளைத் தெரிவிக்கக் காலவரிசை அனுமதிக்கிறது.
படிகள்:
உங்கள் Shopify நிர்வாகியில் இருந்து, தள்ளுபடிகள் என்பதற்குச் செல்லவும்.
நீங்கள் எந்தத் தள்ளுபடிக்கான காலவரிசையைப் பார்க்க விரும்புகிறீர்களோ, அதன் பெயரைக் கிளிக் செய்யவும்.
தள்ளுபடியின் அமைப்புகள் பக்கத்தின் காலவரிசை பிரிவுக்கு ஸ்க்ரோல் செய்யவும்.
உரைப் பெட்டியில் கருத்தை உள்ளிடவும்.
விருப்பத்திற்குரியது: பின்வரும் விவரங்களில் ஏதேனும் ஒன்றைச் சேர்க்கவும்:
- உங்கள் கருத்தில் எமோஜியைச் சேர்க்க, எமோஜி முகத்தைக் கிளிக் செய்யவும்.
- உங்கள் கருத்தில் குறிப்பிட்ட பணியாளர்களைக் குறிப்பிட, உங்கள் ஸ்டோரின் பணியாளர்களின் பட்டியலுக்கு
@குறியீட்டைக் கிளிக் செய்யவும். - உங்கள் கருத்தில் குறிப்பிட்ட ஆர்டர்கள், வரைவு ஆர்டர்கள், வாடிக்கையாளர்கள், தயாரிப்புகள், மாறுபாடுகள் அல்லது இடமாற்றங்களைக் குறிப்பிட
#குறியீட்டைக் கிளிக் செய்யவும். - உங்கள் கருத்தில் கோப்பை இணைக்க பேப்பர்கிளிப் ஐகானைக் கிளிக் செய்யவும்.
காலவரிசையில் உங்கள் கருத்தைச் சேர்க்க பதிவிடு என்பதைக் கிளிக் செய்யவும்.
தள்ளுபடியின் காலவரிசையிலிருந்து ஒரு கருத்தை நீக்க விரும்பினால், கருத்துப் பெட்டியில் உள்ள X என்பதைக் கிளிக் செய்யவும்.
பகிரக்கூடிய இணைப்பு அல்லது QR குறியீட்டைப் பயன்படுத்தி தள்ளுபடியை விளம்பரப்படுத்துதல்
சமூக ஊடகங்கள், மின்னஞ்சல்கள் மற்றும் லேண்டிங் பக்கங்களில் தள்ளுபடியை விளம்பரப்படுத்த, பகிரக்கூடிய இணைப்பு அல்லது QR குறியீட்டை நீங்கள் பயன்படுத்தலாம். ஆன்லைனில் பகிர்வதற்கு இணைப்பை நீங்கள் நகலெடுக்கலாம் அல்லது உங்கள் ரசீதுகள், டிஸ்ப்ளேக்களில் சேர்ப்பதற்கு அல்லது சில்லறை விற்பனை இருப்பிடத்தில் உள்ள பதிவேட்டில் ஸ்கேன் செய்வதற்கு QR குறியீட்டைப் பதிவிறக்கலாம்.
உங்கள் ஆன்லைன் ஸ்டோருக்கு, இயல்பான பகிரக்கூடிய இணைப்பு வாடிக்கையாளர்களை உங்கள் ஸ்டோரின் முகப்புப் பக்கத்திற்கு, ஒரு குறிப்பிட்ட சேகரிப்புக்கு அல்லது ஒரு குறிப்பிட்ட தயாரிப்புப் பக்கத்திற்கு வழிநடத்தலாம். இணைப்பு அல்லது QR குறியீட்டுடன் தொடர்புடைய தள்ளுபடியானது உங்கள் வாடிக்கையாளரின் அடுத்த செக்அவுட் கார்ட்டுக்கு அல்லது அவர்கள் திறந்துள்ள ஏதேனும் செயலில் உள்ள கார்ட்டுகளுக்குத் தானாகவே பயன்படுத்தப்படும். ஒரு வாடிக்கையாளர் தங்களின் ஃபோனைக் கொண்டு QR குறியீட்டை ஸ்கேன் செய்யும்போது, அது அவர்களை உங்கள் ஆன்லைன் ஸ்டோருக்கு வழிநடத்தும், அங்கு அவர்கள் தகுதியான தயாரிப்புகளைத் தங்கள் கார்ட்டில் சேர்க்கலாம் மற்றும் தள்ளுபடி தானாகவே பயன்படுத்தப்படும்.
உங்கள் சில்லறை விற்பனை இருப்பிடங்களில், கார்ட்டுக்குத் தள்ளுபடியைப் பயன்படுத்தப் பணியாளர்கள் அதே QR குறியீட்டை Shopify POS இல் ஸ்கேன் செய்யலாம். Shopify POS இல் QR குறியீட்டைப் பயன்படுத்தி தள்ளுபடிகளைப் பயன்படுத்துவது குறித்து மேலும் அறிக.
உங்களின் பகிரக்கூடிய இணைப்பு அல்லது QR குறியீட்டிற்கு ஒரேயொரு தள்ளுபடியை மட்டுமே பயன்படுத்த முடியும். பகிரக்கூடிய தள்ளுபடி இணைப்புகளும் QR குறியீடுகளும் செயலில் உள்ள தள்ளுபடிகளுக்கு மட்டுமே செயல்படும். மூன்றாம் தரப்புச் செயலி மூலம் நீங்கள் ஒரு தள்ளுபடியை உருவாக்கினால், அந்தத் தள்ளுபடிக்கு உங்கள் Shopify நிர்வாகியில் உள்ள விளம்பரப்படுத்து > பகிரக்கூடிய தள்ளுபடிக் குறியீட்டைப் பெறு விருப்பம் கிடைக்காது. பகிரக்கூடிய தள்ளுபடி இணைப்பு அல்லது QR குறியீட்டை உருவாக்குவதற்கு முன், நீங்கள் இணைக்க விரும்பும் தயாரிப்புகள் அல்லது சேகரிப்புகளைக் கொண்ட ஒரு தள்ளுபடிக் குறியீட்டை உருவாக்கிச் சேமிக்க வேண்டும்.
ஒரு தயாரிப்பில் பல தள்ளுபடிகளை நீங்கள் வழங்கினால், உங்களுடைய பகிரக்கூடிய தள்ளுபடி இணைப்புகள் மற்றும் QR குறியீடுகளுக்கு மிகச் சமீபத்திய தள்ளுபடி பொருந்தும்.
படிகள்:
டெஸ்க்டாப்
உங்கள் Shopify நிர்வாகியில் இருந்து, தள்ளுபடிகள் என்பதற்குச் செல்லவும்.
நீங்கள் விளம்பரப்படுத்த விரும்பும் தள்ளுபடியின் பெயரைக் கிளிக் செய்யவும்.
விளம்பரப்படுத்து என்பதைக் கிளிக் செய்து, பகிரக்கூடிய தள்ளுபடிக் குறியீட்டைப் பெறு என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
இணைப்பு எந்தப் பக்கம், தயாரிப்பு அல்லது சேகரிப்பைத் திறக்க வேண்டுமோ அதைத் தேர்ந்தெடுக்கவும்.
- இணைப்பை வழங்குவதற்கு உங்களுக்குக் கிடைக்கும் விருப்பங்கள் உங்கள் செயலில் உள்ள தள்ளுபடிகளில் சேர்க்கப்பட்டுள்ள குறிப்பிட்ட தயாரிப்புகள் அல்லது சேகரிப்புகளைப் பொறுத்தது.
விருப்பத்திற்குரியது: இணைப்பில் கண்காணிப்புப் அளவுருக்களைச் சேர்க்க, ஏற்கனவே உள்ள ஒரு சந்தைப்படுத்தல் பிரச்சாரத்தைத் தேர்ந்தெடுக்கவும். பிரச்சாரத்தின் UTM அடையாளங்காட்டி மற்றும் மூலமானது பகிரக்கூடிய இணைப்பில் தானாகவே சேர்க்கப்படும், எனவே உங்கள் சந்தைப்படுத்தல் பிரச்சார அறிக்கைகளில் தள்ளுபடியின் செயல்திறனைக் கண்காணிக்கலாம்.
பகிரக்கூடிய இணைப்பை நகலெடுக்க அல்லது QR குறியீட்டைப் பதிவிறக்க, பின்வரும் செயல்களில் ஏதேனும் ஒன்றைச் செய்யவும்:
- பகிரக்கூடிய இணைப்பை உங்கள் கிளிப்போர்டுக்கு நகலெடுக்க, இணைப்பை நகலெடு என்பதைக் கிளிக் செய்யவும்.
- QR குறியீட்டைப் பதிவிறக்க,
ஐகானைக் கிளிக் செய்யவும்.
மூடு என்பதைக் கிளிக் செய்யவும்.
மொபைல்
Shopify செயலியில் இருந்து,
ஐகானைத் தட்டவும்.
தள்ளுபடிகள் என்பதைத் தட்டவும்.
நீங்கள் விளம்பரப்படுத்த விரும்பும் தள்ளுபடியைத் தட்டவும்.
அல்லது
என்பதைத் தட்டி, பின்னர் பகிரக்கூடிய தள்ளுபடிக் குறியீட்டைப் பெறு என்பதைத் தட்டவும்.
பகிரக்கூடிய இணைப்பை நகலெடுக்க அல்லது QR குறியீட்டைப் பதிவிறக்க, பின்வரும் செயல்களில் ஏதேனும் ஒன்றைச் செய்யவும்:
- பகிரக்கூடிய இணைப்பை உங்கள் கிளிப்போர்டுக்கு நகலெடுக்க,
ஐகானைத் தட்டவும்.
- QR குறியீட்டைப் பதிவிறக்க,
ஐகானைத் தட்டவும்.
- பகிரக்கூடிய இணைப்பை உங்கள் கிளிப்போர்டுக்கு நகலெடுக்க,
ஆன்லைன் ஆர்டருக்கு QR குறியீட்டைப் பயன்படுத்தித் தள்ளுபடியைப் பயன்படுத்துதல்
வாடிக்கையாளர் ஆன்லைன் ஆர்டரில் தள்ளுபடியைப் பயன்படுத்த விரும்பினால், அவர் தனது ஃபோன் மூலம் QR குறியீட்டை ஸ்கேன் செய்து, உலாவியில் உங்கள் ஆன்லைன் ஸ்டோரைத் திறக்கலாம். QR குறியீடு செல்லுபடியாகும் பட்சத்திலும், தள்ளுபடிக்கான நிபந்தனைகளைப் பூர்த்தி செய்யும் தயாரிப்புகளை வாடிக்கையாளர் கார்ட்டில் சேர்க்கும்போதும், தள்ளுபடியானது தானாகவே கார்ட்டில் பயன்படுத்தப்படும்.
உங்கள் ஸ்டோரின் முகப்புப் பக்கத்திலிருந்து பகிரக்கூடிய இணைப்பைத் திசைதிருப்புதல்
உங்கள் ஸ்டோரின் முகப்புப் பக்கத்தைத் தவிர வேறு ஒரு பக்கத்திற்கு வாடிக்கையாளர்களைப் பகிரக்கூடிய இணைப்பு அழைத்துச் செல்ல வேண்டுமெனில், URL-இல் ஒரு திசைதிருப்பலை நீங்கள் மேனுவலாகச் சேர்க்கலாம்.
படிகள்:
உங்கள் Shopify நிர்வாகியில் இருந்து, தள்ளுபடிகள் என்பதற்குச் செல்லவும்.
நீங்கள் விளம்பரப்படுத்த விரும்பும் தள்ளுபடியின் பெயரைக் கிளிக் செய்யவும்.
விளம்பரப்படுத்து என்பதைக் கிளிக் செய்து, பகிரக்கூடிய இணைப்பைப் பெறு என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
இணைப்பை நகலெடு என்பதைக் கிளிக் செய்து, இணைப்பை ஒரு டெக்ஸ்ட் எடிட்டரில் ஒட்டவும்.
URL நீட்டிப்பை
/discount/codeஎன்பதிலிருந்து/discount/code?redirect=/new-pathஎன மாற்றவும்.நீங்கள் இணைக்க விரும்பும் பக்கத்தின் URL நீட்டிப்புடன் பொருந்தும் வகையில்
new-pathஎன்பதை மாற்றவும். எடுத்துக்காட்டாக:/discount/code?redirect=/collections/fresh-finds.
இணைப்பின் URL நீட்டிப்பை மாற்றிய பிறகு, உங்கள் தள்ளுபடியை எங்கு விளம்பரப்படுத்த விரும்புகிறீர்களோ அங்கு அதனை நீங்கள் போஸ்ட் செய்யலாம் அல்லது உட்பொதிக்கலாம்.
பகிரக்கூடிய இணைப்புகளுடன் தள்ளுபடிக் குறியீடுகள் செயல்படும் விதம்
வாடிக்கையாளர் ஒரு பகிரக்கூடிய தள்ளுபடிக் குறியீடு இணைப்பைப் பயன்படுத்தும்போது, தள்ளுபடி சேர்க்கை அமைப்புகளின்படி ஏற்கனவே கார்ட்டில் உள்ள தகுதிபெறும் பிற தள்ளுபடிகளுடன் இந்தத் தள்ளுபடியும் இணைகிறது.
பகிரக்கூடிய இணைப்புகளில் தள்ளுபடி சேர்க்கை நடத்தை குறித்த பின்வரும் விவரங்களை மதிப்பாய்வு செய்யவும்:
- தள்ளுபடிகளைச் சேர்த்தல்: உங்கள் தள்ளுபடி சேர்க்கை விதிகள் அனுமதிக்கும்போது பகிரக்கூடிய இணைப்புகளிலிருந்து வரும் தள்ளுபடிக் குறியீடுகள் கார்ட்டில் உள்ள தற்போதைய தள்ளுபடிகளுடன் சேரும்.
- தள்ளுபடிக் குறியீட்டு வரம்புகள்: பகிரக்கூடிய இணைப்புகளிலிருந்து வருபவை உட்பட, தள்ளுபடிகளின் மொத்த எண்ணிக்கைக்கு ஒரு ஆர்டருக்கு 5 தள்ளுபடிக் குறியீடுகள் என்ற வரம்பு தொடர்ந்து பொருந்தும்.
பகிரக்கூடிய இணைப்பால் பயன்படுத்தப்பட்ட தள்ளுபடியை அகற்றுதல்
தள்ளுபடியானது வாடிக்கையாளரின் கார்ட்டிலும் அவர்களின் பிரவுசரிலும் சேமிக்கப்படுவதால், அகற்றப்படும் வரை அது பயன்படுத்தப்பட்டபடியே இருக்கும். வாடிக்கையாளர் தள்ளுபடி இல்லாமல் செக்அவுட் செய்ய விரும்பினால், பின்வரும் விருப்பங்களில் ஏதேனும் ஒன்றைச் செய்யுமாறு அவர்களிடம் கூறவும்:
- செக்அவுட்டில் பயன்படுத்தப்பட்ட குறியீட்டிற்குப் பக்கத்தில் உள்ள தள்ளுபடியை அகற்று என்பதைக் கிளிக் செய்யவும்.
- உங்கள் ஸ்டோருக்கான அவர்களின் பிரவுசரின் குக்கீகள் மற்றும் கேச் செய்யப்பட்ட தரவை அழித்துவிட்டு, பகிரக்கூடிய இணைப்பைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக நேரடியாக உங்கள் ஸ்டோருக்குச் செல்லவும். இது சேமிக்கப்பட்ட தள்ளுபடியை அழித்து புதிய கார்ட்டைத் தொடங்கும்.
பகிரக்கூடிய இணைப்பை மீண்டும் திறப்பது தள்ளுபடியை மீண்டும் பயன்படுத்தும், எனவே தள்ளுபடி இல்லாமல் ஷாப்பிங் செய்ய விரும்பும் வாடிக்கையாளர் நேரடியாக உங்கள் ஸ்டோருக்குச் செல்ல வேண்டும்.
தள்ளுபடிகளை ஃபில்டர் செய்தல்
உங்களின் தள்ளுபடிப் பட்டியலில் பின்வரும் ஃபில்டர்களை நீங்கள் பயன்படுத்தலாம்:
- நிலை
- முறை
- வகை
- இதனுடன் இணைகிறது
- தொடங்கும் தேதி
- பயன்படுத்தப்பட்ட தடவைகள்
- தகுதி
- சந்தைத் தகுதி
- வாடிக்கையாளர் பிரிவுத் தகுதி
- குறிப்பிட்ட வாடிக்கையாளர் தகுதி
- டேக்
நீங்கள் ஒரு தகுதி ஃபில்டரைப் பயன்படுத்தினால், உங்கள் தள்ளுபடிப் பட்டியலில் வேறு எந்தத் தகுதி ஃபில்டர்களையும் பயன்படுத்த முடியாது, ஏனெனில் ஒரு தள்ளுபடிக்கு பல தகுதி வகைகளை ஒதுக்க முடியாது.
அனைத்து ஃபில்டர்களும் தேடல் பட்டியில் இன்லைனில் காண்பிக்கப்படும், எனவே உங்கள் தேடல் முடிவுகளைப் பாதிக்கும் அளவுகோல்களின் முழுமையான பார்வையை நீங்கள் பெறுவீர்கள். குறிப்பிட்ட ஃபில்டர் அளவுகோல்களுடன் மேம்பட்ட பார்வைகளை உருவாக்க, is/is not மற்றும் or/and தர்க்கரீதியான ஆப்பரேட்டர்களையும் நீங்கள் பயன்படுத்தலாம்.
பார்வைகளைப் பயன்படுத்தி உங்கள் பட்டியல்களைத் தேடுதல் மற்றும் ஃபில்டர் செய்தல் பற்றி மேலும் அறிக.
படிகள்:
உங்கள் Shopify நிர்வாகியில் இருந்து, தள்ளுபடிகள் என்பதற்குச் செல்லவும்.
விருப்பத்திற்குரியது: காட்சி மெனுவைத் திறக்க, அனைத்தும் என்பதைக் கிளிக் செய்து, பின்னர் நீங்கள் ஃபில்டர் செய்ய விரும்பும் காட்சியைத் தேர்ந்தெடுக்கவும்.
உங்கள் ஃபில்டருக்கான ஆப்பரேட்டர் மற்றும் மதிப்பினைத் தேர்ந்தெடுக்கவும். நீங்கள் தேர்ந்தெடுக்கும் ஃபில்டரைப் பொறுத்துக் கிடைக்கும் மதிப்புகள் வேறுபடும்.
விருப்பத்திற்குரியது: உங்கள் தேடலைச் செம்மைப்படுத்த, வெவ்வேறு ஃபில்டர்கள் மற்றும் மதிப்புகளைத் தொடர்ந்து சேர்க்க, முக்கியச் சொற்களைத் தொடர்ந்து டைப் செய்யவும்:
- உங்கள் தேடலில்
andஆப்பரேட்டருடன் கூடுதலான ஒரு ஃபில்டரைச் சேர்க்க,என்பதைக் கிளிக் செய்யவும் அல்லது ஸ்பேஸ் விடவும், பின்னர் நீங்கள் சேர்க்க விரும்பும் கூடுதல் ஃபில்டரின் பெயரை டைப் செய்யத் தொடங்கவும்.
- ஒரு ஃபில்டரில்
orஆப்பரேட்டருடன் கூடுதலான ஒரு மதிப்பைச் சேர்க்க, ஒரு காற்புள்ளியைச் சேர்க்கவும், பின்னர் நீங்கள் சேர்க்க விரும்பும் கூடுதல் மதிப்பின் பெயரை டைப் செய்யத் தொடங்கவும்.
- உங்கள் தேடலில்
விருப்பத்திற்குரியது: ஃபில்டரைத் திருத்துவதற்கு, தேடல் பட்டியில் உள்ள ஏதேனும் ஃபில்டரின் ஃபில்டர் டேக்குகளைக் கிளிக் செய்யவும்.
விருப்பத்திற்குரியது: உங்களின் தற்போதைய ஃபில்டர்களின் வரிசையைப் புதிய பார்வையாகச் சேமிக்க, சேமி என்பதைக் கிளிக் செய்து, புதிய பார்வைக்கு ஒரு பெயரைக் கொடுக்கவும்.
ஒரு ரோல்அவுட்டில் உள்ள தள்ளுபடிகள்
தள்ளுபடியை எப்போது செயல்படுத்த வேண்டும் அல்லது முடக்க வேண்டும் எனத் திட்டமிட அல்லது உங்கள் ஸ்டோரில் ஏற்கனவே வழங்கப்படும் தள்ளுபடிகளுடன் ஒப்பிட்டு ஒரு தள்ளுபடியைச் சோதிக்க, ரோல்அவுட்டில் ஒரு தள்ளுபடியைச் சேர்க்கலாம். ரோல்அவுட்டில் உள்ள வாடிக்கையாளர்களுக்கான தள்ளுபடிகளை ரோல்அவுட் செயல்படுத்துகிறது அல்லது முடக்குகிறது.
தள்ளுபடியின் விவரங்கள் பக்கத்திலிருந்து ரோல்அவுட்டில் ஒரு தள்ளுபடியைச் சேர்க்க, ரோல்அவுட்டில் சேர் என்பதைக் கிளிக் செய்யவும். நீங்கள் ரோல்அவுட்டை உருவாக்கும்போதும் தள்ளுபடிகளைச் சேர்க்கலாம்.
ஒரு தள்ளுபடி ரோல்அவுட்டின் ஒரு பகுதியாக இருந்தால், தள்ளுபடியின் விவரங்கள் பக்கம் ரோல்அவுட், ரோல்அவுட்டில் தள்ளுபடியின் பங்கு, ரோல்அவுட்டின் திட்டமிடல் மற்றும் தள்ளுபடியின் பயனுள்ள நிலை ஆகியவற்றைக் காண்பிக்கும். தள்ளுபடி மாற்றத்தை உள்ளடக்கிய ரோல்அவுட்டை நீங்கள் முதன்முறையாக உருவாக்கிய பிறகு, தள்ளுபடிகள் பக்கத்தின் இயல்புநிலைக் காட்சியானது ரோல்அவுட் நெடுவரிசையைக் காண்பிக்கும்.
ஒரு ரோல்அவுட் அது உள்ளடக்கியுள்ள தள்ளுபடிகளைப் பூட்டாது என்பதால், நீங்கள் அவற்றைத் தொடர்ந்து திருத்தலாம். ஒரு திருத்தமானது ரோல்அவுட்டின் திட்டமிடல் அல்லது ஒரு பரிசோதனையின் முடிவுகளைப் பாதிக்கலாம் எனும்போது ஓர் எச்சரிக்கை காட்டப்படும். ஒரு தள்ளுபடி தனக்கெனச் சொந்தமான செயல்படும் தேதிகளை வைத்திருக்கும், மேலும் அந்தத் தேதிகள் ரோல்அவுட்டைச் சாராமல் தொடர்ந்து பயன்படுத்தப்படும். ரோல்அவுட்டில் ஒரு தள்ளுபடியைச் சேர்ப்பதற்கு முன் தள்ளுபடி மாற்றங்களுக்கான பரிசீலனைகளை மதிப்பாய்வு செய்யவும்.
தள்ளுபடியை முடக்கு
காலாவதியாகாத ஒரு தள்ளுபடியை நீங்கள் தற்காலிகமாக முடக்கலாம். விளம்பரப் பிரச்சாரத்தின் முடிவிலோ நீங்கள் வேறொரு சந்தைப்படுத்தல் உத்தியைச் சோதிக்கத் திட்டமிடும்போதோ, நீங்கள் தள்ளுபடியை முடக்க விரும்பலாம்.
ஒரு வாடிக்கையாளர் முடக்கப்பட்ட தள்ளுபடிக் குறியீட்டைத் தங்கள் கார்ட்டில் பயன்படுத்தினால், உங்கள் ஸ்டோர் உள்ளிடப்பட்ட குறியீட்டுடன் பொருந்தும் செல்லுபடியாகும் தள்ளுபடியைக் கண்டறிய முடியவில்லை என்று குறிப்பிடும் ஒரு பிழையைப் பெறுவார்கள்.
படிகள்:
டெஸ்க்டாப்
உங்கள் Shopify நிர்வாகியில் இருந்து, தள்ளுபடிகள் என்பதற்குச் செல்லவும்.
தள்ளுபடிகள் பக்கத்தில், நீங்கள் முடக்க விரும்பும் காலாவதியாகாத தள்ளுபடியைக் கண்டறிந்து, தள்ளுபடியின் பெயரைக் கிளிக் செய்யவும்.
தள்ளுபடியின் பெயருக்குக் கீழே, முடக்கு என்பதைக் கிளிக் செய்யவும்.
உறுதிப்படுத்த முடக்கு என்பதைக் கிளிக் செய்யவும்.
மொபைல்
Shopify செயலியில் இருந்து,
ஐகானைத் தட்டவும்.
தள்ளுபடிகள் என்பதைத் தட்டவும்.
தள்ளுபடிகள் பக்கத்தில், நீங்கள் முடக்க விரும்பும் காலாவதியாகாத தள்ளுபடியைத் தட்டவும்.
அல்லது
> முடக்கு > முடக்கு என்பதைத் தட்டவும்.
பல தள்ளுபடிகளை முடக்கு
மொத்தச் செயலின் மூலம் நீங்கள் காலாவதியாகாத பல தள்ளுபடிகளைத் தற்காலிகமாக முடக்கலாம். விளம்பரப் பிரச்சாரத்தின் முடிவிலோ நீங்கள் வேறொரு சந்தைப்படுத்தல் உத்தியைச் சோதிக்கத் திட்டமிடும்போதோ, நீங்கள் பல தள்ளுபடிகளை முடக்க விரும்பலாம்.
ஒரு வாடிக்கையாளர் முடக்கப்பட்ட தள்ளுபடிக் குறியீட்டைத் தங்கள் கார்ட்டில் பயன்படுத்தினால், உங்கள் ஸ்டோர் உள்ளிடப்பட்ட குறியீட்டுடன் பொருந்தும் செல்லுபடியாகும் தள்ளுபடியைக் கண்டறிய முடியவில்லை என்று குறிப்பிடும் ஒரு பிழையைப் பெறுவார்கள்.
படிகள்:
உங்கள் Shopify நிர்வாகியில் இருந்து, தள்ளுபடிகள் என்பதற்குச் செல்லவும்.
தள்ளுபடிகள் பக்கத்தில், நீங்கள் முடக்க விரும்பும் காலாவதியாகாத தள்ளுபடிகளைத் தேர்வுசெய்யவும்.
தள்ளுபடிகளை முடக்கு என்பதைக் கிளிக் செய்யவும்.
உறுதிப்படுத்த முடக்கு என்பதைக் கிளிக் செய்யவும்.
முடக்கப்பட்ட தள்ளுபடியை மீண்டும் செயல்படுத்து
காலாவதியான எந்தவொரு தள்ளுபடியையும் நீங்கள் மீண்டும் செயல்படுத்தலாம். காலாவதியான தள்ளுபடியை நீங்கள் மீண்டும் செயல்படுத்தும்போது, தள்ளுபடியின் நிலை செயலில் உள்ளது என மாறும், மேலும் அதற்கு அமைக்கப்பட்ட முடிவுத் தேதி எதுவும் இருக்காது.
படிகள்:
டெஸ்க்டாப்
உங்கள் Shopify நிர்வாகியில் இருந்து, தள்ளுபடிகள் என்பதற்குச் செல்லவும்.
தள்ளுபடிகள் பக்கத்தில், நீங்கள் மீண்டும் செயல்படுத்த விரும்பும் காலாவதியான தள்ளுபடியைக் கிளிக் செய்யவும்.
செயல்படுத்து என்பதைக் கிளிக் செய்யவும்.
உறுதிப்படுத்த மீண்டும் செயல்படுத்து என்பதைக் கிளிக் செய்யவும்.
மொபைல்
Shopify செயலியில் இருந்து,
ஐகானைத் தட்டவும்.
தள்ளுபடிகள் என்பதைத் தட்டவும்.
தள்ளுபடிகள் பக்கத்தில், நீங்கள் மீண்டும் செயல்படுத்த விரும்பும் காலாவதியான தள்ளுபடியைத் தட்டவும்.
அல்லது
> செயல்படுத்து > செயல்படுத்து என்பதைத் தட்டவும்.
காலாவதியான பல தள்ளுபடிகளை மீண்டும் செயல்படுத்து
மொத்தச் செயலின் மூலம் காலாவதியான பல தள்ளுபடிகளை நீங்கள் மீண்டும் செயல்படுத்தலாம். காலாவதியான தள்ளுபடிகளை நீங்கள் மொத்தமாக மீண்டும் செயல்படுத்தும்போது, தள்ளுபடிகளின் நிலை செயலில் உள்ளது என மாறும், மேலும் அதற்கு அமைக்கப்பட்ட முடிவுத் தேதி எதுவும் இருக்காது.
படிகள்:
உங்கள் Shopify நிர்வாகியில் இருந்து, தள்ளுபடிகள் என்பதற்குச் செல்லவும்.
தள்ளுபடிகள் பக்கத்தில், நீங்கள் மீண்டும் செயல்படுத்த விரும்பும் காலாவதியான தள்ளுபடிகளைத் தேர்வுசெய்யவும்.
தள்ளுபடிகளைச் செயல்படுத்து என்பதைக் கிளிக் செய்யவும்.
உறுதிப்படுத்த செயல்படுத்து என்பதைக் கிளிக் செய்யவும்.
தள்ளுபடிகளை அழி
உங்கள் Shopify நிர்வாகியில் உள்ள தள்ளுபடிகள் பட்டியலிலிருந்து ஒரு தள்ளுபடியை நீக்க, அதை நிரந்தரமாக நீங்கள் அழிக்கலாம்.
படிகள்:
டெஸ்க்டாப்
உங்கள் Shopify நிர்வாகியில் இருந்து, தள்ளுபடிகள் என்பதற்குச் செல்லவும்.
தள்ளுபடிகள் பக்கத்தில், நீங்கள் அழிக்க விரும்பும் தள்ளுபடிகளைத் தேர்வுசெய்யவும்.
> தள்ளுபடிகளை அழி என்பதைக் கிளிக் செய்யவும்.
உறுதிப்படுத்த அழி என்பதைக் கிளிக் செய்யவும்.
மொபைல்
Shopify செயலியில் இருந்து,
ஐகானைத் தட்டவும்.
தள்ளுபடிகள் என்பதைத் தட்டவும்.
தள்ளுபடிகள் பக்கத்தில், நீங்கள் அழிக்க விரும்பும் தள்ளுபடியைத் தட்டவும்.
அல்லது
> அழி > தள்ளுபடியை அழி என்பதைத் தட்டவும்.
பல தள்ளுபடிகளை அழி
மொத்தச் செயலின் மூலம் நீங்கள் பல தள்ளுபடிகளை நிரந்தரமாக அழிக்கலாம்.
படிகள்:
உங்கள் Shopify நிர்வாகியில் இருந்து, தள்ளுபடிகள் என்பதற்குச் செல்லவும்.
தள்ளுபடிகள் பக்கத்தில், நீங்கள் அழிக்க விரும்பும் தள்ளுபடிகளைத் தேர்வுசெய்யவும்.
> தள்ளுபடிகளை அழி என்பதைக் கிளிக் செய்யவும்.
உறுதிப்படுத்த அழி என்பதைக் கிளிக் செய்யவும்.